விண்டோ-7 இயக்கமுறைமை தொடர்-4

 கோப்புகளை  பரிமாற்றம்செய்தல்

இவ்வாறு கணினியில் சாளரம்7 ஐ நிறுவிடும்போது ஏற்க னவே செயல்பட்டு கொண்டிருக்கும் கணினியெனில் அதிலிருக்கும் தரவுகளை மிகபாதுகாப்பாக புதியசூழலுக்கு மாற்றம் செய்யவேண்டும்.

       அதற்காக முதலில் பழைய கணினியில் இருக்கும் தரவுகளை ஈஸி ட்ரான்ஸ்ஃபர் கேபிள் அல்லது நெட்வொர்க் அல்லது வெளிப்புற ஹார்டுடிஸ்க் ஆகியவற்றின் வாயிலாக பிற்காப்பு  செய்து எடுத்துகொள்க பின்னர் அதிலிருந்து இந்த தரவுகளை புதிய சூழலுக்கு இந்த ஈஸி ட்ரான்ஸ்ஃபர் துனையுடன் கொண்டுவந்து சேர்த்திடுக.

 சாளரம் 7 ஐ இயக்குதல்

ஓரு வழியாக சாளரம்7 ஐ நம்முடைய கணினியில் நிறுவிவிட்டோம் இப்போது முதன்முதலில் இயக்கப்போகின்றோம்

  1. கணினியை ஆன் செய்க உடன் சாளரம் 7 இன் வரவேற்பு திரை தோன்றும். உங்களுடைய கணினியை ஒருவர் மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் கடவுச்சொல்லை கோராது
  2. ஓன்றுக்கு மேற்பட்ட பயனாளர்களெனில் இயக்கபோகும் பயனாளரின் பெயருள்ள உருவபொத்தானை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே அவருக்கான கடவுச்சொல்லை உள்ளீடு செய்து .Go எனும் அம்புக்குறியைஅல்லது Enterவிசையை அழுத்துக.

  1. சாளரம் 7  முதன்மை திரையின் கீழ்பகுதி யிலிருப்பது செயல்பட்டையாகும். இந்த செயல் பட்டையின் இடதுபுறம் ஓரமாக இருப்பது நாம் விரும்பும் பயன்பாட்டை இயக்க உதவும்Start என்ற பட்டனாகும் இதே செயல் பட்டையின் வலதுபுறம் ஓரமாக இருப்பது இன்றைய நாளையும் நேரத்தையும் குறிப்பிடுகின்றது .இதற்கடுத்ததாக இருப்பது Notification area ஆகும் இது தற்போது கணினியில் என்னென்ன செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனக்குறிப்பிடும் சிறுசிறு உருவபொத்தான்களை கொண்டது
  2. ஏதேனும் பயன்பாட்டினை இயக்கவேண்டுமெனில் திரையில் உள்ள அதற்குறிய உருவபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லதுசெயல் பட்டையின் வலதுபுறம் ஓரமாக இருக்கும் Start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் Start என்றபட்டியலில் தேவையான பயன் பாட்டினை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக.

5.  திரையில் உள்ள ஏதேனும் உருவபொத்தானின்மீது அல்லது காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக உடன் சுருக்குவழி பட்டியல் திரையில் விரியும்.

6.  திரையில் உள்ள ஏதேனும் உருவபொத்தானை வேறொரு இடத்திற்கு நகர்த்திடு வதற்காக குறிப்பிட்ட உருவபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை அழுத்தி அப்படியே பிடித்து இடம்சுட்டியை இழுத்து செல்க அப்போது நாம் தெரிவு செய்த உருவபொத்தானும் இடம்சுட்டியுடன் சேர்ந்துவரும் .தேவையான இடத்தில் இடம்சுட்டியைவைத்து அழுத்தி பிடித்திருந்த பொத்தானை விடுவித்திடுக. இப்போது அந்த உருவபொத்தானானது புதியஇடத்தில் வீற்றி ருப்பதை கணாலாம்.

7. சாளரம்7-ல் ஏதேனும் உதவிதேவையெனில் Start=>Help and Support =>   என்றவாற கட்டளைகளை செயற்படுத்தியவுடன் Help and Support என்ற சாளரம் திரையில்தோன்றும் அதில் Browse help என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும்திரையில் தேவையான வகையை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக.

8. செயல் பட்டையின் வலதுபுறம் ஓரமாக இருக்கும் Start என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் Start என்றபட்டியலில் Computerஎன்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் சுருக்குவழி பட்டியல் விலிருந்து Properties என்ற கட்டளையை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் Properties என்ற உரையாடல் பெட்டியில் Activate windows now என்ற இணைப்பை  தெரிவுசெய்து சொடுக்குக. இதன் பின்னர் தோன்றும் Windows activation என்ற உரையாடல் பெட்டியில் Activate windows online now என்பதை  தெரிவுசெய்து சொடுக்குக.

9 பின்னர் Windows activation என்ற செயல் நடைபெற்று முடிவடைந்ததும் இதனை உறுதிசெய்துகொண்டு Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்தபணியை முடிவுக்குகொண்டுவருக.

கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்தல்முதலில் செயல்பாட்டிலுள்ள அனைத்து பயன்பாடுகளையும் மூடிவிடுக. பின்னர் செயல் பட்டையின் வலதுபுறம் ஓரமாக இருக்கும் Start என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் Start என்றபட்டியலில் உள்ள Shutdown என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக.உடன் சாளரம்7 மூடப்பட்டு கணினியின் இயக்கமும் நிறுத்தப்பட்டுவிடும்

இவ்வாறு நிறுத்துவதற்கு பதிலாக கணினியின் இயக்கத்தை தற்காலிகமாக மட்டும் நிறுத்தம் செய்ய இதே Shutdown என்ற பட்டனிலுள்ள அம்புக்குறியை  தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் துனைபட்டியல்விலுள்ள Sleep அல்லது Hibernate ஆகியவற்றில் நமக்குதேவையான கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக.

இவ்வாறு கணினியின் இயக்கத்தை நிறுத்தும்போது மனம்மாறி தொடர்ந்து கணினியை இயக்கலாமே என எண்ணிடும்போது இதே Shutdown என்ற பட்டனிலுள்ள அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் துனைபட்டியல்விலுள்ள Restart என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கணினியின் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும்.

சாளரம் 7 -ல் பயன்பாடுகளை நிறுவுதலும் நீக்குதலும்

சாளரம்7 ஓஎஸ்ஸை ஒரு கணினியில நிறுவினாலேயே எம்எஸ் ஆஃபிஸ்2010 போன்ற பயன்பாடுகளை உடன் பயன்படுத்திடமுடியாது அதனால் இவ்வாறான பயன்பாட்டிற்கான புரோகிராமுள்ள குறுவட்டு அல்லது  நெகிழ்வட்டினை  கணினியில் அதற்கான  வாயிலில் பொருத்தி இந்த பயன்பாடுகளை நிறுவுதல் செய்தால் மட்டுமே நம்மால் அவைகளை பயன்படுத்திடமுடியும். அதற்காக

பயன்பாடுகளை நிறுவுதல்

  1. இவ்வாறான பயன்பாட்டு குறுவட்டு அல்லது  நெகிழ்வட்டினை  கணினியில் அதற்கான  வாயிலில் பொருத்துக. உடன் Auto play என்ற பட்டியல் ஒன்று திரையில் தோன்றும் அதிலுள்ள Run Setup.exeஎன்பதை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக. உடன் செட்அப்வழிகாட்டி ஒன்று திரையில் தோன்றி நமக்கு வழிகாட்டும் அதன்படி செயல்பட்டு நாம் விரும்பும் பயன்பாட்டை நிறுவிகொள்க

இவ்வாறு பயன்பாடுகளை நிறுவியபிறகு கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்கிகொள்வதுதான் நல்லது. இதன்பின்னர் ஏதேனும் பயன்பாட்டினை இயக்கி பயன் படுத்திடவேண்டுமெனில் திரையில் உள்ள அதற்கான உருவபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது செயல் பட்டையின் வலதுபுறம் ஓரமாக இருக்கும் Start என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் Start என்றபட்டியலில் தேவையான பயன்பாட்டினை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக

பயன்பாடுகளை நீக்குதல்.

நம்முடைய கணினியில் இவ்வாறு நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளை நீக்கம்செய்திட அல்லது மாறுதல்செய்திட செயல் பட்டையின் வலதுபுறம் ஓரமாக இருக்கும் Start என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் Start என்றபட்டியலில் Control panel என்பதை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் திரையில் விரியும் Control panelஎன்ற சாளரம்த்தின் பட்டியலிலிருந்து program featuresஎன்பதை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் program features என்ற திரையில் நீக்கம்செய்திட அல்லது மாறுதல் செய்திட விரும்பும் பயன்பாட்டை தெரிவு செய்து கொண்டு Remove/change என்ற பொத்தானை தெரிவு செய்து  சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் நீக்கம் செய்வதை உறுதிசெய்து கொள்ளும் சிறுபெட்டியில்   yes என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நம்மால் தெரிவுசெய்த பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டுவிடும்

இதே நீக்கம்செய்திடும் செயலை வேறுவகையில் செயற்படுத்திட Start என்றபட்டியலில் உள்ளAll program என்பதை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் கணினியில் நிறுவப் பட்டுள்ள பயன்பாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கம்செய்ய விரும்பும் பயன்பாட்டினை  தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சிறுபட்டியலில்இருக்கும் Uninstallஎன்பதை  தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றிடும் நீக்கம் செய்வதை உறுதி செய்து கொள்ளும் சிறுபெட்டியில்   yes என்ற பொத்தானை தெரிவு செய்து தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நம்மால் தெரிவுசெய்த பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டுவிடும்

நாம் அடிக்கடி பயன்படுத்தும் படன்பாட்டினை இயக்குவதற்காக ஒவ்வொரு முறையும் Start என்றபட்டியல்விற்கு சென்று இயக்குவதைவிட இதனை  திரையில் ஒரு உருவ பொத்தானாக வைத்துகொள்வது நல்லது அதற்காக

பயன்பாடுகளை  உருவபொத்தான்களாக மாற்றுதல்

Start என்றபட்டியலில் உள்ளAll program என்பதை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் கணினியில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் பட்டியலிலிருந்து தேவையான பயன்பாட்டின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் சுருக்குவழி பட்டியலில் உள்ள Send toஎன்ற கட்டளையை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் சிறுபட்டியலில்Desktop (Create shortcut)என்பதை(படம்-2-8.5) தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த பயன்பாடானது ஒரு உருவபொத்தானாக  திரையில் சென்றமர்ந்துவிடும்.இதே சுருக்குவழி பட்டியலில் உள்ள Pin to Task bar என்ற கட்டளையை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த பயன்பாடானது ஒரு உருவபொத்தானானாக செயல்பட்டையில் சென்றமர்ந்துவிடும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: