லிபர் ஆஃபிஸ் 4. தொடர்-7

இந்த லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => Load/Save => VBA Properties=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Options எனும் உரையாடல் பெட்டியின் VBA Properties எனும் (படம்-1) திரையில் Load Basic code எனும் வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் தேவையெனில் நாம் மேக்ரோவில் மாறுதல் செய்துகொள்ளலாம் ஆனால் மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் வடிவமைப்பில் சேமிக்கமுடியாது. ஆயினும் Save original Basic code எனும் வாய்ப்பு லிபர் ஆஃபிஸில் திருத்தம் செய்தாலும் மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் வடிவமைப்பில் சேமிக்க அனுமதிக்கின்றது .பொதுவாக மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து பணிபுரிவதாயின் Executable code எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க

படம்-1

இதே Options -Load/Save – Microsoft Office எனும் (படம்-2) உரையாடல் பெட்டியின் திரையில் எம்ஸ் ஆஃபிஸ் ஆவணங்களை பதிவிறக்கம் (“L” for “load”) அல்லது பதிவேற்றம் (“S” for “save”) செய்திடும்போது ஆவணத்தோடு இணைந்துள்ள அல்லது உட்பொதிந்துள்ள OLE objects பொருட்கள் எவ்வாறு இருக்க என்பதற்காக “L” “S” ஆகிய பெட்டிகளின் தேவையானவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்துகொள்க.

படம்-2

இந்த Options – Load/Save – HTML Compatibility எனும் உரையாடல் பெட்டியின் திரையில் ஆவணமானது – HTML ஆவணங்களுடன் ஒத்தியங்குமாறு செய்திட பயன்படுகின்றது.

இந்த லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice Writer => General =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Options எனும் உரையாடல் பெட்டியின் LibreOffice Writer – General எனும் திரையில் Update links when loading என்பதற்கு கீழே உள்ள வாய்ப்பானது இணைப்பு ஆவணத்தின் திருத்தம் ஏதேனும் செய்யபட்டிருந்தால் அவ்வப்போது அதற்கேற்றவாறு தானாகவே சரிசெய்துகொள்ளவேண்டுமா என தெரிவுசெய்துகொள்க.

   இதே Options – LibreOffice Writer – Basic Fonts (Western) எனும் உரையாடல் பெட்டியின் திரையில் இயல்புநிலையில் எந்தவகையான எழுத்துரு இருக்கவேண்டும் என தெரிவுசெய்து கொள்க. புதியதாக அட்டவணையை உருவாக்கிடும்போது அதனுடைய நெடுவரிசை கிடைவரிகளின் எண்ணிக்கை தோவைனவாறு அமைத்துகொள்ள Options – LibreOffice Writer – Table எனும் திரையிலுள்ள வாய்ப்புகள் பயன்படுகின்றன. பல்வேறு நபருக்கு மின்னஞ்சலின் மூலம் ஆவணங்களை அனுப்பிட Options – LibreOffice Writer – Mail Merge E-mailஎனும் திரையிலுள்ள வாய்ப்புகள் பயன்படுகின்றன.

இந்த லிபர் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தில் நாம் திருத்தம் செய்து எழுத்துருவானது எவ்வாறு தோன்றிடவேண்டுமென குறிப்பிடுவதற்கு Options – LibreOffice Writer – Change tracking optionsஎனும் திரையிலுள்ள வாய்ப்புகள் பயன்படுகின்றன.

படம்-3

இந்த லிபர் ஆஃபிஸின் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => Language Settings => Languages =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Options எனும் உரையாடல் பெட்டியின் Language Settings – Languages எனும் (படம்-3)திரையில் வலதுபுறம் Language of என்பதற்கு கீழே உள்ள local settings எனும்வாய்ப்பின் கீழிறங்கு பட்டியலிலிருந்து Tamil என்றவாறும் CTL எனும்வாய்ப்பின் கீழிறங்கு பட்டியலிலிருந்து Tamil என்றவாறும் Enabled for Asian Language எனும் வாய்யப்பினையும தெரிவுசெய்துகொள்க

படம்-4

   நாம் ஒரு ஆவணத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தானியங்கியாக ஒரு சில திருத்தங்கள் ஆகவேண்டும் அல்லது தேவைபட்டால் மட்டும் நாமே திருத்தம் செய்யவேண்டும் என விரும்பிடும்போது லிபர் ஆஃபிஸின் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => AutoCorrect Options => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் AutoCorrect Options எனும் (படம்-3)உரையாடல் பெட்டியில் அந்தந்த வசதிகளுக்கு நேராக உள்ள M அல்லது T ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: