எம்எஸ் ஆஃபிஸ் 2010 தொடர்-4 -எம்எஸ் வேர்டு-2010-ல் பணிபுரிதல்

 

   உரையை உள்ளீடுசெய்தல்

வேர்டில் காலியான ஆவணமொன்றை உருவாக்கி கொண்டு அதில் நீங்கள் விரும்பும் உரையை தட்டச்சுசெய்க.இவ்வாறு நம்மால் தட்டச்சுசெய்யப்படும் உரையில் இடம்சுட்டி பிரிதிபலிக்கும் இடமே உள்ளீடுசெய்திடும் புள்ளியாகும். தொடர்ந்து உரையை தட்டச்சுசெய்து கொண்டிருந்தால் வரிமுடியும்போது தானாகவே இடம்சுட்டியானது அடுத்த வரிக்கு மடங்கிசெல்லும். அடுத்த பத்தியை ஆரம்பிக்க விரும்பும்போது மட்டும் உள்ளீட்டு விசையை அழுத்துக.உடன் புதிய பத்தியில் உரைஉள்ளீடாகும்.

உள்ளீட்டு விசையை இருமுறை அழுத்தினால் பத்திகளுக்கிடையே கூடுதலான காலிஇடம் ஏற்படும் தாவிபொத்தான் விசையை அழுத்தினால் பத்தியின் ஆரம்ப எழுத்து சிறிது தள்ளி ஆரம்பிக்கும்.

இவ்வாறு உரையை வேர்டின் ஆவணமொன்றில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது தவறாகஇருந்தால் Backspace என்ற விசையைஅழுத்தி நீக்கம் செய்துவிடலாம். அல்லது நீக்கம்செய்யவிரும்பும் எழுத்தின்மீது இடம்சுட்டியை வைத்து Delete என்ற விசையை அழுத்தி நீக்கம் செய்யலாம்.

குறிப்பு. Delete என்ற விசையை அழுத்துவது இடம்சுட்டிக்கு வலதுபுறத்தில் உள்ள எழுத்தையும் Backspace என்ற விசையை அழுத்துவது இடம்சுட்டிக்கு இடதுபுறத்தில் உள்ள எழுத்தையும் நீக்கம் செய்யும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

   உரையைதெரிவுசெய்தல்

தெரிவுசெய்யப்படவேண்டிய பகுதியில் இடம்சுட்டியை வைத்து Ctrl + shift + என்றவாறு அம்புக்குறியை(Ctrl + shift + ®, Ctrl + shift + ¬, Ctrl + shift +­, Ctrl + shift +¯)சேர்த்து அழுத்துவதன்வாயிலாக தெரிவுசெய்து கொள்ளலாம் . தெரிவுசெய்த பகுதியை விட்டு வேறொருஇடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்வதன்மூலம் இவ்வாறு தெரிவு செய்ததை விட்டிடலாம்.

அதற்கு பதிலாக சுட்டியை இருமுறை சொடுக்குதல்செய்தால் தற்போது இடம்சுட்டி இருக்கும் சொல் முழுவதும் தெரிவுசெய்யப்பட்டுவிடும் (Ctrl + shift + ®, Ctrl + shift + ¬) .சுட்டியை மும்முறை சொடுக்குதல் செய்தால் தற்போது இடம்சுட்டி இருக்கும் பத்தி (para)முழுவதும் தெரிவு செய்யப் பட்டுவிடும் (Ctrl + shift +­, Ctrl + shift +¯).

ஒருவரியின் இடதுபுற ஓரப் பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியை   சொடுக்குதல் செய்தால் தற்போது இடம்சுட்டி இருக்கும் வரி முழுவதும் தெரிவு செய்யப் பட்டுவிடும். சுட்டியை இருமுறை சொடுக்குதல் செய்தால் தற்போது இடம்சுட்டி இருக்கும் பத்தி முழுவதும் தெரிவு செய்யப் பட்டுவிடும். சுட்டியை மும்முறை சொடுக்குதல் செய்தால் தற்போது இடம்சுட்டி இருக்கும் ஆவணம்முழுவதும் தெரிவு செய்யப் பட்டுவிடும்.

Ctrl + shift + Homeஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போது இடம்சுட்டி இருக்கும் இடத்திற்கு முன்பகுதிமுழுவதும் தெரிவுசெய்யப்பட்டுவிடும்

Ctrl + shift+ End என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போது இடம்சுட்டி இருக்கும் இடத்திற்கு பின்பகுதி முழுவதும் தெரிவுசெய்யப்பட்டுவிடும்

Ctrl + A என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போது இடம்சுட்டி இருக்கும் ஆவணம் முழுவதும் தெரிவுசெய்யப்பட்டுவிடும்

     நகலெடுத்தல் வெட்டுதல் ஒட்டுதல்

இவ்வாறு தெரிவுசெய்ததை அப்படியே சுட்டியின் பொத்தானை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து பிடித்திருந்த சுட்டியின் பொத்தானை விட்டிடுக. உடன் பதிய இடத்தில் தெரிவு செய்யபட்ட உரை இருக்கும்

இதற்கு பதிலாக விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் homeஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் homeஎன்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் உள்ள cut(Ctrl + X )அல்லது copy (Ctrl + C) ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து இதே homeஎன்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் உள்ள paste (Ctrl + V)என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவு செய்த உரைப்பகுதி புதியஇடத்தில் இருக்கும்.

ஆவணத்தில் கோடுஒன்றினை உருவாக்குதல்

   *,   =, _என்பன போன்ற குறிகளை ஆவணத்தின் ஒரு இடத்தில் மூன்றுமுறை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்தினால் உடன் இந்த குறியீடுகளால் ஆன கோடுஒன்று உருவாகிவிடும்

உரையை Insert விசையுடன் தட்டச்சுசெய்தல்

Insert விசையை அழுத்திவிட்டு உரையை தட்டச்சுசெய்தால் ஏற்கனவே இருக்கும் உரையின்மீது புதிய எழுத்துகள் மேலெழுதிவிடும் மீண்டும். Insert விசையை அழுத்திவிட்டு உரையை தட்டச்சுசெய்தால் ஏற்கனவே இருக்கும் உரையை நகர்த்திவிட்டு புதிய எழுத்துகள் உள்ளிணைந்துவிடும்.

3.2.6.அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை உடன் தானாக கொண்டுவர

நாம் உருவாக்கும் கடிதத்திலும் கட்டுரையிலும் நம்முடைய நிறுவனத்தின் பெயரை அடிக்கடி பயன்படுத்துவோம் இவ்வாறான நிலையில் மீண்டும் மீண்டும் நம்முடைய நிறுவனத்தின் பெயரை தட்டச்சுசெய்வதற்கு பதிலாக நினைவகத்தில் வைத்துகொண்டு ஓரிரு விசைகளை தட்டுவதன்மூலம் நம்முடைய உரையில் இதனை உள்ளிணைத்து கொள்ளலாம் அதற்காக தேவையான உரையை தெரிவுசெய்துகொண்டு insert என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் insert என்ற தாவிபொத்தானின் பட்டியில் text என்ற குழுவில் உள்ள quick parts என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் quick parts என்ற பட்டியலில் save selection to quick part gallery என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக.

   உடன் தோன்றிடும் create new building block என்ற உரையாடல் பெட்டியில் இதற்கொரு பெயரிட்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.

விரும்பும் எழுத்துருவை(font) தெரிவுசெய்தலும் அமைத்தலும்

நாம் விரும்பும் எழுத்துருவை பயன்படுத்திட விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் Home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Home என்ற தாவியின் பட்டியில்font என்றகுழுவிலுள்ள font என்ற கீழிறங்கு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலுள்ள fontஇன் வகை களில் நாம் விரும்பிய ஒன்றை தெரிவு செய்து சொடுக்குக.

பின்னர் இந்த எழுத்துருவின் அளவை மாற்றியமைத்திட இதே fontஇற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டியலின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலுள்ள தேவையான அளவை தெரிவுசெய்து சொடுக்குக.

உருமாற்றம் செய்ய விரும்பும் உரையை தெரிவுசெய்து கொண்டு இந்த font என்றகுழுவிலுள்ள Bஎன்ற பொத்தானை சொடுக்குதல்செயதால் தடிமனாகவும் Iஎன்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் சாய்வாகவும் Uஎன்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் கீழ்கோடிட்டும் காண்பிக்கும்.

இதே font என்றகுழுவின் வலதுபுற மூலையிலுள்ள சிறு பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் font என்ற உரையாடல் பெட்டியின் திரையில் தோன்றும் அதில் font என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் font என்ற தாவியின் திரையில் மேலே கூறிய அனைத்து செயல் களையும் செய்து கொள்ளலாம்.

   இந்த வாய்ப்புகள் இயல்புநிலையில் அமைந்திட இதே font என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்பு களை தெரிவுசெய்து கொண்டு Set as default என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சிறு பெட்டியில் இந்த மாறுதல் இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்திலுமா என்பதை தெரிவு செய்து கொண்டு okஎன்ற பொத்தானையும் font என்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.

உரையை வடிவமைத்தல்

தேவையான உரைகளின் வரிகளை தெரிவுசெய்து கொண்டு விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் Home என்ற தாவிபொத்தான் பட்டியில் Paragraph என்ற குழுவிலுள்ள Align Leftஎன்பதை தெரிவுசெய்தால் உரையானது இடது புறம் தள்ளியும் Align Right என்பதை தெரிவு செய்தால் உரையானது வலதுபுறம் தள்ளியும் Align Center என்பதை தெரிவுசெய்தால் உரையானது மையத்திலும் Align justify என்பதை தெரிவுசெய்தால் உரையானது பொருத்தமான      இடத்திலும் அமையும்.

 Decrease Indent என்பதை தெரிவு செய்தால் உரையானது வலதுபுறம் உள்தள்ளியும் Increase Indent என்பதை தெரிவு செய்தால் உரையானது இடதுபுறம் வெளியில் தள்ளியும் அமையும்.

 பத்திகளுக்கிடையே காலிஇடம் உருவாக்குதலும் நீக்குதலும்

விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும்Home தாவிபொத்தான் பட்டியில் Paragraph என்ற குழுவிலுள்ள Line spacing   என்ற கீழிறங்கு பட்டியின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் தேவையான அளவை தெரிவுசெய்துகொள்க  Add space before paragraph என்பதை தெரிவு செய்தால் பத்திவிற்கிடைய கூடுதல் காலியிடம் ஏற்படும் . Remove space after paragraph என்பதை தெரிவுசெய்தால் பத்திவிற்கிடையே உள்ள காலிஇடம் நீக்கப்பட்டுவிடும்.

வரிகளுக்கிடையே காலிஇடத்தை அதிகபடுத்துதலும் நீக்குதலும்

   Line spacing optionsஎன்ற வாய்ப்பை சொடுக்குக அல்லது இந்த Paragraph என்ற குழுவின் மூலையிலுள்ள சிறு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் paragraphஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் .இதில் Indent and spacing என்ற தாவிபொத்தான் இயல்புநிலையில் திறந்திருக்கும். மேலேகூறிய அனைத்து வாய்ப்புகளையும் இதிலிருந்து தெரிவுசெய்துகொள்ளலாம்.

இயல்புநிலையில் பத்தியை வடிவமைப்பதற்கான உத்தி

paragraphஎன்ற உரையாடல் பெட்டி திரையில் Indent and spacing என்ற தாவிபொத்தான் திறந்திருக்கும். நிலையில் Tabsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும்Tabsஎன்ற சிறு உரையாடல் பெட்டியில் Tab stop position என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. அவ்வாறே leader என்பதிலும் தேவையானதை தெரிவுசெய்து அமைத்துகொண்டு set என்ற பொத்தானையும் paragraphஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.

பக்கத்தை வடிவமைப்பு செய்தல்

விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் Page layout என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Page layout என்ற தாவியின் பட்டியில் page setup என்றகுழுவிலுள்ள margins   என்ற கீழிறங்கு பட்டியலின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலுள்ள margins வகைகளில் நாம் விரும்பிய ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக.

இது போதுமானதாக இல்லையெனில் Customs marginsஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது page setup என்றகுழுவின் வலதுபுற மூலையிலுள்ள சிறு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

   உடன் page setupஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இயல்புநிலையில் margins என்ற தாவிபொத்தான் திறந்திருக்கும். அதில் ஆவணத்தினுடைய ஒரு பக்கத்தில் top, bottom, left ,right ஆகிய வற்றிற்கான காலிஇடம் எவ்வளவுஇருக்க வேண்டுமென அமைத்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

ஆவணத்தில் முக்கிய கருத்துகளை பட்டியலாக வழங்குதல்

ஆவணத்தில் முக்கிய கருத்துகளை பட்டியலாக வழங்கினால் படிப்பவர்களை எளிதில் கவரும் தன்மையில் இருக்கும் அதற்காக விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும்Home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Home என்ற தாவியின் பட்டியில் Paragraph என்ற குழுவிலுள்ள bullets என்ற பொத்தானைசொடுக்குதல்செய்தால் பட்டியலும் .numbering என்ற பொத்தானைசொடுக்குதல் செய்தால் எண்களுடன் பட்டியலும் . multilevel list என்ற பொத்தானைசொடுக்குதல் செய்தால் இரண்டும் கலந்த கலவையில் பட்டியலும் உருவாகும். இந்த பட்டியல் தொடர்ச்சியாக வரவேண்டுமெனில் வரியின் கடைசியில் இடம்சுட்டி இருக்கும் போது உள்ளீட்டு விசையை தட்டுக. பட்டியல் தொடரவேண்டாமெனில் வரியின் கடைசியில் இடம்சுட்டி இருக்கும் போது உள்ளீட்டு விசையை இருமுறை தட்டுக

   உரையாடல் பெட்டியின்வாயிலாக பட்டியலை உருவாக்குதல்

bullets numbering multilevel list ஆகிய பொத்தான்களுக்கு அருகிலிருக்கும் கீழிறங்கு பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியல்களில் முதல் வாய்ப்பில் Define new bullet என்பதை தெரிவுசெய்தால் Define new bulletஎன்ற உரையாடல் பெட்டியும், Define new number format என்பதை தெரிவுசெய்தால் Define new number format என்ற உரையாடல் பெட்டியும்,, Define new List style என்பதை தெரிவு செய்தால் Define new List style என்ற உரையாடல் பெட்டியும்,தோன்றிடும் இவை களிலிருந்து நாம் விரும்பியவாறு பட்டியலை தெரிவுசெய்து கொண்டுok என்ற பொத்தானை சொடுக்குதல் செய்வதன் வாயிலாக உருவாக்கிகொள்ளலாம்.

உரையை காலத்தின் பத்திகளுடன் உருவாக்குதல்

நாள், வார, மாதஇதழ்களில் உள்ளவாறு வேர்டு ஆவணத்தின் உரையையும் ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசையின் பத்திகளுடன் உருவாக்கலாம் அதற்காக விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் Page layout என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Page layout என்ற தாவியின் பட்டியில் page setup என்றகுழுவிலுள்ள columns   என்ற கீழிறங்குபட்டியலின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலுள்ள columns வகைகளில் நாம் விரும்பிய ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக.

இது போதுமானதாக இல்லையெனில் more columnsஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் columnsஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் ஆவணத்தினுடைய ஒரு பக்கத்தில் எத்தனை நெடுவரிசை இருக்கவேண்டும் எவ்வாறு இருக்கவேண்டுமென அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படத்தை சுற்றி உரைஇருக்குமாறு அமைத்தல்

பத்திரிகைகளில் படத்தை சுற்றி உரைஇருக்குமாறு வெளியிடுவார்கள் அவ்வாறே வேர்டின் ஆவணத்திலும் கொணடுவரலாம் அதற்காக தேவையான படத்தை தெரிவு செய்க உடன் திரையின் மேல்பகுதியில் Format என்ற சூழ்நிலை தாவிபொத்தான் தோன்றும் அதனை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Format என்ற தாவியின் பட்டி திரையில் விரியும் அதில் Arrangeஎன்ற குழுவிலுள்ள  text wrapping என்ற கீழிறங்கு பட்டியலின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலுள்ள வகைகளில் நாம் விரும்பிய ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. இது போது மானதாக இல்லையெனில் more layout options என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் advanced layout என்ற உரையாடல் பெட்டியின் திரையில் தோன்றும் அதில் இயல்பு நிலையில் text wrapping என்ற தாவிபொத்தான் திறந்திருக்கும் .அத்திரையில் நம்முடைய ஆவணம் எவ்வாறு அமைய வேண்டு மென அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அட்டவணையை உள்ளிணைத்தல்

ஆவணமொன்றில் ஒரு அட்டவணையை உள்ளிணைக்கலாம் அதற்காக.விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும்insertஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் insert என்றதாவியின் பட்டி திரையில் விரியும் அதில் Tables என்ற குழுவிலுள்ள table என்ற அம்புக்குறி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் பட்டியலில் எத்தனை நெடுவரிசை எத்தனை கிடைவரசை வேண்டுமோ அதற்கேற்ப கட்டங்களை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் நாம் தெரிவுசெய்ததற்கு ஏற்ற அட்டவணையொன்று திரையில் உருவாகி பிரிதிபலிக்கும்

       அல்லது table என்ற பட்டியலில் insert tableஎன்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் insert table உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் number of rows என்பதில் எத்தனை கிடைவரிசை தேவையோ அதனையும் number of columnsஎத்தனை நெடுவரிசை தேவையோ அதனையும் தெரிவுசெய்துகொண்டு அகலம் உயரம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதற்காக auto fit behavior என்பதன்கீழுள்ள வாய்ப்புகளி லொன்றை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவு செய்ததற்கு ஏற்ற அட்டவணையொன்று திரையில் உருவாகி பிரிதிபலிக்கும் .

அல்லதுtable என்ற பட்டியலில் quick table என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த தலைப்பின் கீழ் விரியும் தயார் நிலையிலுள்ள அட்டவணை களின் பட்டியலிருந்து ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக

அல்லது table என்ற பட்டியலில் draw table என்பதை சொடுக்குக. உடன் பென்சில் போன்று இடம்சுட்டியின் உருவம் மாறிவிடும் இதனைகொண்டு நாம்விரும்பியவாறு அட்டவணையொன்றை உருவாக்கிகொள்க.

அல்லது விரிதாளின்(ஸ்பிரட்சீட்டின்) அட்டவணை யொன்றை உருவாக்கி உள்ளிணைக்க விரும்பினால் table என்ற பட்டியலில் excel spread sheet என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் எக்செல்லின் அட்டவணை யொன்று உள்ளிணைந்துவிடும்.

இவ்வாறு உருவாக்கிய அட்டவணையை வடிவமைத்து அழகு படுத்திட இந்த அட்டவணையை தெரிவுசெய்க உடன் Design என்ற தாவியின் சூழ்நிலை பட்டி திரையில் தோன்றும். அதில் table styles என்பதில் நமக்குத்தேவையான வற்றை மட்டும் தெரிவுசெய்து கொள்க. மேலும் தேவையெனில் more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் வகைகளில் நமக்குத்தேவையான வற்றை மட்டும் தெரிவுசெய்து கொள்க. இந்தtable styles என்ற குழுவின் கட்டளைகளின் மூலம் நாம்விரும்பியவாறு,சுற்றெல்லை,தலைப்பு , வண்ணம் ,பின்புலம் போன்றவற்றை தெரிவு செய்து அழகுபடுத்திகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: