இது ஒரு இங்க்ஸ்பேஸ் எனும் திறமூல மென்பொருள் கருவிக்கான விரைவு வழிகாட்டி

  ஏற்கனவே வெக்டார் வரைபட பயன்பாட்டினை பற்றி நன்கு தெரிந்திருக்கும் தொழில்முறை ஒவியம் வரைபவர்களுக்கும் அல்லது பொழுது போக்காக வரைபவர்களுக்கும் இந்த வழிகாட்டியானது இங்க்ஸ்பேஸ் எனும் திறமூல மென்பொருளை பயன்படுத்துவதற்கேற்றதாக இருக்கும் என நம்புகின்றோம் மேலும் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டியாக இது இருக்கும் என நம்புகின்றோம்

1

Pic-1

படத்தில் உள்ளவாறு இந்த இங்க்ஸ்பேஸ் எனும் பயன்பாட்டின் முகப்பு சாளர தோற்றம் அமைந்திருக்கும் இதில் நாம் தெரிவுசெய்திடும் கருவிகளுக்கு ஏற்ப அந்தந்த குறிப்பிட்ட கருவியிருக்கும் கட்டுபாட்டு பட்டையையும் அதிலிருக்கும் கருவிகளின் உருவபொத்தான்களையும் திரையில் பிரதிபலிக்கசெய்யும்

2.0

Pic-2

அடோப் இல்லெஸ்ட்ரேட்டரை பற்றி நன்கு அறிமுகமானவர்கள் அதற்கு சமமான இங்க்ஸ்பேஸில் உள்ள கருவிகளின் பெயர்கள் பட்டியலில் கொடுக்கபட்டுள்ளன

3.0

Pic-3

வரைகலை படத்திற்கென கிராபிக் டேப்ளெட் குறிப்பிடப்படாதவரை இரண்டு புள்ளிகளை இணைப்பதற்கான கோட்டினை பெஸ்ஸியர் எனும் கருவி (Bezier Tool (B)) அல்லது கைகளால் வரையும் கருவி (Freehand Tool (P)) ஆகிய இரண்டில் பெஸ்ஸியர்எனும் கருவியையே பொதுவாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை வழங்கபடுகின்றது

4

4

இந்த பெஸ்ஸியர் எனும் கருவியை பயன்படுத்தி இருபுள்ளிகளுக்கு இடையேயான கோடு அல்லது பாதையை வரைவதற்கு ஒவ்வொருபுள்ளியிலும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்கினால் போதும் அவை ஒவ்வொன்றும் ஒருமுனைமமாக மாறிவிடும். அவ்வாறு அந்தபுள்ளிகளில் ஒற்றையாக சொடுக்குதல் செய்தால் கூர்மையான முனைமும் அப்படியே இடம்சுட்டியை இழுத்து சென்றால் பிறை போன்ற முனைமும் உருவாகும்

ஒருபுள்ளியிலிருந்து வரையபடும் வளைவு கோடானது மற்றொரு கோட்டுடன் இணைந்திருந்தால் அந்தபகுதிவரை வளைந்த பச்சை வண்ணத்திலும் எதிலும் மற்றொருமுனை இணைக்கபடாமலிருந்தால் அந்த வளைவுகோடானது சிவப்பு வண்ணத்திலும் தோன்றிடும்

5

5

சுட்டியை இருமுறை சொடுக்குதல் (double-click) செய்வதன் மூலம் வளைவுகோட்டின வரைந்து முடித்துவிடலாம்

6

6

விசைபலகையில் உள்ளீட்டு விசையை அழுத்துதல் அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் (Enter or Right-clicking) செய்வதன்மூலமும்   வளைவுகோட்டினை வரைந்து முடித்துவிடலாம்

சிவப்பு வண்ணத்திலுள்ள முடிவுபெறாத வளைவுகோட்டின் முனையில் இடம் சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குதல்( double-click) செய்வதன் மூலம் வளைவுகோட்டினை வரைந்து முடித்துவிடலாம் அதற்கு பதிலாக விசைபலகையில் உள்ளீட்டு விசையை அழுத்துதல் அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் (Enter or Right-clicking) செய்வதன்மூலமும்   வளைவுகோட்டினை வரைந்து முடித்துவிடலாம்

தொடக்க முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து இடம்சுட்டியை இழுத்து செல்வது (Clicking or mouse-dragging )ஒரு மூடபட்ட கோட்டினை (closed path) உருவாக்கமுடியும்

ஏதேனும் கோடு ஒன்றினை வரைந்து கொண்டிருக்கும்போது அந்த கோடு தேவையில்லை என எண்ணினால் உடன் விசைப்பலகையிலுள்ள Escape எனும் ஒரு விசையை அல்லது Ctrl+Z ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் வரைந்த கோட்டினை நீக்கிவிடலாம்.

7

7

ஒரு வளைவுகோட்டில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்வது அல்லது விசைப்பலகையிலுள்ளCtrl+Alt+Click ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த வளைவுகோட்டில் ஒரு முனைமத்தை ஒருகுறிப்பிட்ட புள்ளியில் உருவாக்கிடமுடியும்

8

8

வளைவுகோட்டில் இடையில் உள்ள முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையிலுள்ள Delஎனும் ஒரு விசையை அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் ஆனால் அந்த கோட்டின் வளைவு உரு அப்படியே பாதுகாத்து தக்கவைத்துகொள்ளமுடியும்

9

9

அதற்கு பதிலாக அதே வளைவுகோட்டில் இடையில் உள்ள முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையிலுள்ள   Ctrl + Delete ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் ஆனால் அந்த கோட்டின் வளைவுஉரு மாறிவிடும்.

வேறுவகையில் விசைப்பலகையிலுள்ளCtrl+Alt+Click ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம்அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் அல்லது அதே வளைவுகோட்டில் இடையில் உள்ள முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையிலுள்ளDelete , Backspace.ஆகிய விசைகளில் ஒன்றினை அழுத்துவதன் மூலம் நீக்கம் செய்துவிடலாம் . இவைகளில் எந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தினாலும் இங்க்ஸ்பேஸானது மிகுதியாக இருக்கும்முனைமத்திற்கேற்ப வளைவை சரிசெய்து தக்கவைத்துகொள்ளும் . வளைவு எப்படியானாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள் விசைப்பலகையிலுள்ள Ctrl+Delete ஆகிய இருவிசைகளை அல்லது Ctrl+Backspaceஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் ஆனால் அந்த கோட்டின் வளைவு உரு மாறிவிடும் .

10

10

முனைமத்தை இரண்டு தனித்தனி முனைமமாக பிரித்திட தேவையான முனைமத்தை தெரிவுசெய்துகொண்டு விசைப்பலகையிலுள்ள Shift+Bஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் முனைம புள்ளிகளை தனித்தனியாக பிரிந்தோ அல்லது உடைந்தோ செல்லுமாறு உருவாகிவிடும்

11

11

இரண்டு அருகருகேயுள்ள முடிவுபுள்ளிகளாக இருக்கும் இரு முனைமங்களை முதலில் தெரிவுசெய்து கொண்டுவிசைப்பலகையிலுள்ள Shift+J ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளிகளை இணைத்துவிடலாம்

12

12

Pen Tool எனும் கருவியை கொண்டு தேவையான கோட்டின் முடிவு முனைமத்திலிருந்து கோடுவரைய ஆரம்பித்தால் அந்த வளைவு கோட்டினை தொடர்ச்சியாக வரைந்து செல்லலாம்

13

13

ஏதேனுமொரு வளைவு கோட்டினை தெரிவுசெய்து கொள்க அல்லது வளைவுகோடுகளுக்கு இடையேயுள்ள ஏதனும் ஒரு முனைத்தை தெரிவுசெய்து கொண்டு கருவிபட்டையிலுள்ள என்ற கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் அந்த இணைப்பு அல்லது வளைவு நீக்கபட்டுவிடும்

இரண்டு அருகருகே இருக்கும்   இரு முடிவு முனைமங்களை முதலில் தெரிவுசெய்து கொண்டு என்ற கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் அந்த முனைமங்களை இணைத்துவிடலாம் .

ஒரு பிறைவடிவ வளைவு முனைமகோடானது ஒரு சதுரத்தையும் வளைந்துநெளிந்து(cusp) உள்ள முனைம கோடானது வைரத்தையும் குறிப்பதற்கும் பயன்படும்

14

14

விசைப்பலகையிலுள்ள Shift+Cஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் வளைந்துநெளிந்து(cusp) உள்ள முனைம கோட்டினையும்

விசைப்பலகையிலுள்ள Shift+Sஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பிறைவடிவ வளைவு ( smooth node) முனைம கோட்டினையும்   உருவாக்கலாம். Ctrl+Delete ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பிறைவடிவ வளைவு ( smooth node) முனைம கோட்டினை செஞ்சீரான கைப்பிடியுடன் உருவாக்கமுடியும் அதற்கு பதிலாக விசைப்பலகையிலுள்ள Ctrl+Clickஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பிறைவடிவ வளைவு ( smooth node) முனைம கோட்டினை எந்த முனைமத்திற்கும் சென்றிடுமாறு உருவாக்கலாம்

பொதுவாக எந்தவொரு உருவபடத்திலும் உரையை எழுதுதல், கோட்டினை வரைதல் ஆகிய செயல்களை செய்திடமுடியும் . அடோப் இல்லெஸ்ட்ரேட் போன்ற மற்ற வரைகலை பயன்பாடு போன்று இந்த இங்க்ஸ்பேஸில் நாம் வரையும் உருவபடம்   காட்சியாக வரிசைபடுத்தி அடுக்கபட்டு தோன்றாது

15

15

அதனால் நாம் பார்வையிட விரும்புவதை நாமாகவே canvasஎனும் பகுதிக்குள் மட்டும் Selector எனும் தெரிவுசெய்திட்ட கருவியுடன் பார்வையிடலாம்

16

16

சிலநேரங்களில் இந்த உருவப்படங்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கியிருக்கும்போது கீழேஇருக்கும் உருவப்படத்தை நேரடியாக நாம் பணிபுரிவதற்காக தெரிவுசெய்வதற்கு தாவி (Tab) பொத்தானை அழுத்துக அல்லது Alt+Click ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் மேலிருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் என மேலேயும் கீழேயும என மாறி தோன்றிடசெய்து பின்னர் மேலேதோன்றிடும் தேவையானஉருவை தெரிவுசெய்துகொள்க

17

17

ஏதனுமொரு வரைபட உருவை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் transform handles எனும் கைப்பிடிகள் அந்த உருவுடன் சேர்ந்து தோன்றிடும் பின்னர் மீண்டும் இடம் சுட்டியை சொடுக்கியவுடன் rotation handles எனும் கைப்பிடிகள் நாம் விரும்பிய வண்ணம் சுழற்றி அமைப்பதற்கு ஏதுவாக தோன்றிடும்

அடுக்கி வைத்திருக்கும் வரைபொருட்களை விசைப்பலகையிலுள்ள Page Up or Page Down ஆகியவற்றில் ஒன்றினை அழுத்துவதன்மூலம் மேலிருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறியைந்திடுமாறு செய்திடமுடியும் மிக கீழாகவோ அல்லது மேலாகவோ சென்றிட விசைப்பலகையிலுள்ளHome or Endஆகியவற்றில் ஒன்றினை அழுத்துக.

18

18

ஒரு வரைபட உருவின் நகல் உருவை (duplicate )உருவாக்கிட Ctrl + D ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துக இது அலுவலக பயன்பாடுகளில் நகலெடுத்து ஒட்டுவதை போன்ற செயலாகும்

19

19

உண்மையான உருவத்துடன் நகலெடுத்து ஒட்டிய நகல்உருவும் இணைக்கபட்டிருந்தால் அது அசலுரு (Cloning) எனப்படும் அவ்வாறு உருவாக்கிட Alt + D ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துக.இந்நிலையில் உண்மை நகலில் திருத்தம் ஏதேனும் செய்தால் நகலிலும் உடன் பிரதிபலிக்கும்   Shift + D ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துவதன்மூலம் இரண்டினையும்   தோன்றிடுமாறு செய்யலாம் நகலினை தெரிவுசெய்து இருக்கும்போது Shift + Alt + D ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் இந்த இணைப்பை நீக்கிவிடலாம் .

ஒன்றிற்கு மேற்பட்ட வரைபொருளை ஒன்றிணைத்து குழுவாக பயன்படுத்திடமுடியும் அதற்காக,

20

20

தேவையான வரைபொருட்களை தெரிவுசெய்துகொண்டு Ctrl + G ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துவதன் மூலம் குழுவினை உருவாக்கிடமுடியும். தேவையான குழுவான வரைபொருட்களை தெரிவுசெய்துகொண்டு Ctrl + U ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துவதன் மூலம் குழுவினை விட்டு நீக்க முடியும்

21

21

குழுவிற்குள் உள்ள ஏதேனுமொரு வரைபொருளை தெரிவுசெய்திட Ctrl+Clickஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துக அதற்குபதிலாக Ctrl+Alt+Click என்றவாறும் விசைகளை சேர்த்து அழுத்தி தெரிவுசெய்யலாம் இந்த செயல் clips ,masks ஆகியவற்றிற்கும் பொருந்தும் இதற்கு மாற்றாக ஒரு குழுவிற்குள் Ctrl+Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது   சுட்டியின் விசையை இருமுறை சொடுக்குதல் செய்தபின் வழக்கமாக தெரிவுசெய்வதை போன்று தேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொள்க. double-clicking ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது   குழுவிற்கு வெளியே அந்த வரைபொருளை தெரிவுசெய்வது ஆகியஇருவழிகளில் ஒரு குழுவினை நீக்கம் செய்திடமுடியும்

22

22

Ctrl+Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது   சுட்டியின் விசையை இருமுறை சொடுக்குதல் செய்தபின் குழுவிற்குள் புதிய வரைபொருளை வரைவது அல்லது நகலெடுத்து வந்தும் ஒட்டிகொள்ளலாம்

கிளிப் அல்லது மாஸ்க் என்பது ஒருவரை பொருள் எந்தெந்த பகுதி பார்வைக்கு தோன்றவேண்டும் என கட்டுபடுத்துவதாகும்

23

23

எந்த பகுதி மறைந்திருக்க வேண்டும்எந்தபகுதி தோன்றவேண்டும் என வரையறுப்பது கிளிப் ஆகும்   அவ்வாறு மறைய செய்வது போன்றிருந்தாலும் ஒளியூடுவி செல்வது போன்று அந்த பகுதியும் பார்வையில் படுமாறு வரையறுப்பது மாஸ்க் ஆகும்

24

24

Object எனும் பட்டியலில்   Clip எனும் வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதி மறைந்தும் Mask எனும் வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதி அவ்வாறு மறைக்கபட்டாலும் பார்வையில் படுமாறு செய்திடுக

25

25

இவைகளை ஒன்றிற்கு மேற்பட்ட வரைபொருளில் பயன்படுத்தி கொள்ளமுடியும்

26

26

ஒரு கிளிப் அல்லது மாஸ்க்கை இடம்சுட்டியால் இருமுறை (Double-click ) தெரிவுசெய்து சொடுக்கியபின் தனிப்பட்ட வரைபொருளை இவைகளின் வயிலாக மாற்றியமைத்திடமுடியும்   குழுவான பொருள் எனில் Ctrl + Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக இந்த கிளிப் அல்லது மாஸ்க்கை கொண்டு மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும்

27

27

Double-click ஆகிய இருவிசைகளை அல்லது Ctrl + Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக முதலில் ஒருகுழுவிற்குள் சென்றபின் புதிய வரைபொருளை வரையலாம் அல்லது வேறு எந்த வரைபொருளிலிருந்தாவது வெட்டிகொண்டுவந்து ஒட்டுதல் செய்யலாம் . அதன்பின்னர் கிளிப் அல்லது மாஸ்க்கில் மாறுதல்கள் செய்யலாம்

28

28

மேலே கட்டளைபட்டையிலுள்ள Object => Clip or Mask= => Release=> என்றவாறு கட்டளைகளை   செயற்படுத்துவதன் வாயிலாக இந்த கிளிப் அல்லது மாஸ்க்கில் இருந்து ஒரு வரை பொருளை விடுவிக்கலாம்

நிலைபட்டையிலுள்ள (Status Bar)Layers palette அல்லது the Layer Information .

ஆகிய இரு வாய்ப்புகளை பயன்படத்தி வரைபடத்தினை குறிப்பிட்ட தளத்தில் பூட்டிவைக்கலாம் அல்லது அந்த தளத்திற்கு இடையே மாறிசென்று பணிபுரியலாம் அழ்வஆறு தளத்திற்கிடையே மாறி சென்றிட shift + Page Up அல்லது Shift + Page Down என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக

வரைபடத்தின் படித்தரத்தை(Gradient) வரையறுப்பது இந்த கிரேடியன்ட்ஆகும் ஒருவரைபொருளை தெரிவுசெய்துகொண்டு Gradient எனும் கருவியை நேரடியாக தெரிவுசெய்து சொடுக்கி புதியதை உருவாக்கியபின் Tool Control எனும் பட்டையிலுள்ள Gradient Editor என்பதை பயன்படுத்தி மாறுதல்கள் செய்துகொள்க

29

29

இங்க்ஸ்பேஸில் ஒன்றிற்குமேற்பட்ட வரைபொருளில் ஒரேவைகயான கிரேடியன்ட்ஸை பயன்படுத்தி கொள்ளமுடியும் வேறு ஒருவரைபொருளில் பயன்படுத்தபட்டதை மற்றொன்றில் பயன்படுத்தி கொள்வதற்கு தேவையான வரைபொருளையும் பின்னர்   கிரேடியன்ட் எனும் கருவியையும் தெரிவுசெய்துகொண்டு Tool Control எனும் பட்டையிலுள்ள Gradient Editor என்பதை பயன்படுத்தி மாறுதல்கள் செய்துகொள்க அதற்கு பதிலாக Ctrl + C ஆகிய விசைகளை அழுத்தி நகலெடுத்துவந்த பின்னர் தேவையானவரைபொருளில் Ctrl + Shift + Z) ஆகிய விசைகளை அழுத்தி கிரேடியன்ட்ஸை ஒட்டிகொள்க

30

30

Gradient , Node ஆகிய இரு கருவிகளில் ஒன்றினை கொண்டு வரைபொருளின் அமைவை கோடு ,சுழலும் அமைப்பை பிடித்து இழுத்து சென்று சரிசெய்து கொள்க ஆயினும் இந்த இங்க்ஸ்பேஸின் கேன்வாஸ் பகுதியில் கைப்பிடியை (handles) தெரிவுசெய்தும் வரைபொருளின் அமைவை சரிசெய்து கொள்ளமுடியும்

31

31

Shift + R ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்வாயிலாக கிரேடியன்ட்டின் பிந்தைய நிலையிலிருந்து முந்தைய நிலைக்கு கொண்டு செல்லமுடியம். இதனால்   வேறு ஒரு வரைபொருளில் இந்த கிரேடியன்ட் பயன்படுத்திட்டிருந்தாலும் அதில் இந்த பாதிப்பு ஏற்படாது.

32

32

Fill and Stroke paletteஎனும் பகுதியில் கீழிறங்கு பட்டியலிலருந்து repeat mode (reflected or direct) என்பதை மறுபடியும் செய்ததையே செய்திடலாம்

33

33

Shift எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு கைப்பிடியின் மையத்தை பிடித்து   சுற்றிவட்ட கிரேடியன்ட்டை மாறுதல்கள் செய்யலாம்

இந்த வரைபட மென்பொருள் பற்றி மேலும் முழுமையாக அறிந்து கொள்வதற்கு http://tavmjong.free.fr/INKSCAPE/என்ற தளத்திற்கு செல்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: