விண்டோ-7 தொடர்-3

மெய்நிகர் கணினி(virtual machine)க்குள் விண்டோ7 ஐ நிறுவுதல்

ஏற்கனவே இருக்கும் இயக்கமுறைமையுடன் விண்டோ7 ஐயும் ஒரே கணினியில் இணையாக நிறுவி இயக்கும்போது நமக்கு தேவையான இயக்கமுறைமையின் இயக்கம் வேண்டுமெனில் ஒவ்வொருமுறையும் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்யவேண்டியுள்ளது இது அதிக சிரமமான செயலாகும்.

அதற்கு பதிலாக ஏற்கனவே நிறுவியுள்ள இயக்கமுறைமையுடன் விண்டோ7 உம் ஒரே சமயத்தில் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்யாமல் இணையாக இயக்க உதவுவதுதான் இந்த மெய்நிகர் கணினி(virtual machine) வசதியாகும் அதாவது இந்த அமைவானது நடப்பில் இருக்கும் ஹார்டுவேரை பயன்படுத்தி ஒரு இயக்கமுறைமைக்குள் மற்றொரு இயக்கமுறைமையை இயங்க செய்கின்றது. இதற்காக முதலில் ஒரு மெய்நிகர் பெட்டியை(vertual box)கணினியில் நிறுவிடவேண்டும்

மெய்நிகர் பெட்டியை(vertual box) கணினியில் நிறுவுதல்

 1. முதலில் http://www.virtualbox.org/ என்ற வலைதளத்திற்கு சென்று இதற்கான கோப்பினை பதிவிறக்கம் செய்துகொள்க.
 2. பின்னர் Custom setup   வாயிலாக VirtualBox Applicationஎன்பதன்கீழுள்ள VirtualBox USB Support, VirtualBoxNetworking, VirtualBoxpython Support என்பன போன்ற(படம்-3.1). அனைத்து வாய்ப்புகளும் தெரிவுசெய்யப் பட்டுள்ளதாவென உறுதிசெய்துகொண்டு இந்த மெய்நிகர் பெட்டியை(vertual box) உங்களுடைய கணினியில் நிறுவிடுக.

 2.6.10

படம்-3.1

 1. இந்நிலையில் கணினியுடன் இணைந்துள்ள சாதணங்களை இயக்குவதற்கான இயக்கிகளையும் நிறுவிடவேண்டுமாவென கோரும்(would you like to install this device software?) அதில் (படம்-3.2)அத்தியாவசியமாக தேவையான சாதணங்களை இயக்குவதற்கான இயக்கிகளை மட்டும் நிறுவிடுவதற்காக Installஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஆமோதித்திடுக.

2.6.11

படம்-3.2

 1. இதன்பின்னர் நாம்நிறுவிய மெய்நிகர் பெட்டியை(vertual box) திறந்து அதில் New(படம்-3.3) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.12

படம்-3.3

 1. உடன் தோன்றிடும் Welcome to New Virtual machine wizard இல் (படம்-3.4)Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.13

படம்-3.4

 1. இந்த Virtual machine இற்கு Window7 என்றவாறு ஒருபெயரிட்டு Os Type என்பதன் கீழுள்ள(படம்-3.5)version என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து Window7 என்பதை தெரிவு செய்க.

2.6.14

படம்-3.5

 1. இதன்பின்னர் தோன்றும் திரையில் இந்த Virtual machine இற்குள் இயங்கப்போகின்ற Window7 இயக்கமுறைமைக்கு தற்போது நடப்பிலிருக்கும் ரேமின் நிணைவக கொள்ளளவில் பாதியை ஒதுக்கீடு செய்து கொண்டுNext என்ற (படம்-3.6) பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

   2.6.15

படம்-3.6

 1. பின்னர் தோன்றிடும் Virtual Hard Disk என்ற திரையில் Create New hard disk என்பதை(படம்-3.7) தெரிவு செய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

2.6.15.1

படம்-3.7

 1. அதன் பின்னர் தோன்றிடும் Hard Disk storage Type என்ற திரையில் storage Type என்பதன் கீழுள்ள Dynamically expanding storage என்பதை (படம்-3.8) தெரிவு செய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.16

படம்-3.8

 1. பின்னர் தோன்றிடும் திரையில் நம்மால் மெய்நிகராக உருவாக்கப்படும் Virtual machineஇனுடைய தரவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பதற்கான ஒரு இடத்தை தெரிவுசெய்துகொண்டு Next என்ற(படம்-3.9) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.17

படம்-3.9

 1. இறுதியாக Finish என்ற(படம்-3.10) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்தVirtual Machine(vm) ஐ உருவாக்கும் பணியை முடிவிற்கு கொண்டுவருக.

 

 2.6.18

படம்-3.10

விண்டோ7 ஐ மெய்நிகர் கணினி(virtual machine)க்குள் நிறுவிட

சரி நம்முடைய விண்டோ7 ஐ இதில் நிறுவிடவேண்டும் அதற்காக

 1. முதலில் இந்த திரையில் Virtual box என்பதை திறந்து கொண்டு அதில் window7 என்று நம்மால் பெயரிடப்பட்ட Virtual machine(vm) என்பதை தெரிவுசெய்து Startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. பின்னர் தோன்றிடும் Welcome to the first Run wizardஎன்ற (படம்-3.11) திரையில் ஓன்றும் செய்யவேண்டாம் அப்படியே Next என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.19

படம்-3.11

3. அதன்பின்னர் தோன்றிடும் Select installation mediaஎன்றதிரையில் media type என்பதன்கீழ் உள்ளCd/Dvd-Rom deviceஎன்பது இயல்பு நிலையில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் (படம்-3.12) அதனை ஏற்று விண்டோ7 நெகிழ்வட்டாக இருந்தால் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.20

படம்-3.12

 1. பின்னர்ISO Image ஐ பயன்படுத்துவதாக இருந்தால் Media Sourceஎன்பதன் கீழுள்ள Image file என்பதை தெரிவுசெய்து கொண்டு ISO Imageஇற்கு கீழுள்ள கீழிறங்கு பட்டியின் வாயிலாக தேடிப்பிடித்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் Virtual machine என்ற திரையில் Actions என்பதன் கீழுள்ள Add என்பதை (படம்-3.13) தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.21

படம்-3.13

 1. பின்னர் இந்த ISO Image ஐ தெரிவுசெய்து Select என்ற (படம்-3.14) பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

2.6.22

படம்-3.14

6. அதன்பின்னர் Finish என்ற (படம்-3.15) பொத்தானை அழுத்தி இந்த ISO Imageக்கான பணியை முடிவிற்கு கொண்டுவருக.

2.6.23

படம்-3.15

 1. உடன் விண்டோ7 இயக்கமுறைமையை இந்த மெய்நிகர் கணினி(virtual machine)க்குள் நிறுவிடும் பணி செயல்படுத்தப்பட்டு (படம்-3.16) விண்டோ7 இயக்கமுறைமையில் கணினியின் இயக்கம் மறுதொடக்கம் ஆகும்

2.6.24

படம்-3.16

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: