லிபர்ஆஃபிஸ்4. தொடர்-6

    இந்த லிபர் ஆஃபிஸ் சாளரம் ஒன்றிற்கு மேல் திரையில் தோன்றினால் அவை ஒன்றுக்கொன்று கட்டப்பட்டு விளிம்பின் ஒரம் புள்ளிகளுடன் பொத்தான் ஒன்று இருப்பதை காணலாம் அந்த ஓரவிளிம்பில் உள்ள புள்ளிகளைகொண்ட பொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மறைந்திருக்கும் சாளரம் திரையில் தோன்றிடும் திரும்பவும் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் பழையவாறு சாளரம் மறைவாகிவிடும். அதற்குபதிலாக விளிம்பு ஓரத்தை மட்டும் இடம் சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குல் செய்து தோன்றசெய்திடவும் மறைய செய்திடவும் முடியும்

6.1

6.1

நாம் பெரியதொரு ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது கட்டளைபட்டி கருவிபட்டி போன்றவைகளை தேடிபிடிக்கமுடியவில்லை ஆயினும் உடனடியாக ஒருசில செயல்களை செயற்படுத்திடவேண்டும் என விரும்பிடும்போது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியை பயன்படுத்தி தேவையான செயல்களை விரைவாக செயற்படுத்திகொள்க. அதே பெரிய ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது அந்த ஆவணத்தின் இடதுபுறமும் மேல்புறமும் ரூலர் என்பது ஒருபக்கஅமைவை கட்டுபடுத்துகின்றது அதனால் அது திரையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என விரும்பிடும்போது முதலில் மேலே கட்டளை பட்டியில் Tools => Options => LibreOffice Writer => View => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின்னர் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு இயலுமை செய்து அமைத்து கொள்க அதன்பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள View => Ruler => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றசெய்யலாம் அல்லது இது தேவையில்லையெனில் மறையசெய்யலாம்.

6.2

6.2

இந்த லிபர்ஆஃபிஸ் ரைட்டர் எனும் பயன்பாடானது நாம் இதனுடைய ஆவணத்தில் பணிபுரிவதற்காக Print Layout, Web Layout, Full Screen ஆகிய மூன்றுவகையான காட்சிநிலைகளில் தோன்றசெய்து பணிபுரிய அனுமதிக்கின்றது இந்த வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்வதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ளView எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் View எனும் பட்டியலில் நாம் விரும்பிடும் காட்சிநிலைகளுக்கான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றசெய்திடுக

6.3

6.3

பொதுவாக லிபர் ஆஃபிஸின் ஒருபக்ககாட்சியானது Print Layout எனும் காட்சியாகமட்டுமே தோன்றிடும் . இரண்டாவது வாய்ப்பில் ஜூம் எனும் நகர்வியை மட்டுமே பயன்படுத்தி மாற்றியமைத்துகொள்ளமுடியும். மூன்றாவது வாய்ப்பினை Ctrl+Shift+J ஆகிய மூன்று விசைகளின் பொத்தான்களை விசைப்பலகையில் அழுத்தியும் தோன்றசெய்திடவும் மறையச்செய்திடவும் முடியும்

இந்த லிபர்ஆஃபிஸில் புதிய ஆவணத்தை திரையில் நாம் பணிபுரிவுதற்காக தோன்றிடசெய்திட விசைப்பலகையில் Ctrl+N ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது மேலே கட்டளைபட்டையில் File => New => Text Document=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் அல்லது மேலேசெந்தர கருவிபட்டையில் New என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது ஆகிய மூன்றுவழிகளில் செயல்படுத்திடமுடியும்

ஏற்கனவே ஒரு ஆவணத்திற்கான மாதிரிபடிமம் இருந்தால் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => New => Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தி திரையில் தோன்ற செய்திடுக

6.4

6.4

ஏற்கனவே இருக்கும் ஆவணத்தில் பணிபுரிவதற்காகஅந்த ஆவணத்தினை திறந்திட விசைப்பலகையில் Ctrl+O ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது மேலே கட்டளைபட்டையில் File => Open=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் அல்லது மேலேசெந்தர கருவிபட்டையில் Open என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது அல்லது மேலே கட்டளைபட்டையில் File => Recent Documents=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் அல்லது விரைவு தொடக்க பகுதியில் Open Document or Recent Documents எனும் வாய்ப்பை பயன்படுத்தி சொடுக்குதல் செய்வது ஆகிய ஐந்துவகையான வாய்ப்புகளில் அந்தஆவணத்தை திறக்க முயற்சிக்கும்போது உடன் Open எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் முதலில் Text documents  என்றவாறு ஆவணத்தின் வகையை அதற்கான பெட்டியில் தெரிவுசெய்துகொண்டபின் (including .odt, .doc, .txt) என்றவாறு விரியும்ஆவணங்களின் பட்டியலில் நாம் பணிபுரியவிரும்பும் ஆவணத்தினை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க.

இவ்வாறு நாம் ஒரு ஆவணத்தை உருவாக்கி பணிபுரிந்த பின்னர் அதனை சேமித்திட விசைப்பலகையில் Ctrl+S. ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது மேலே கட்டளைபட்டையில் File => Save=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் அல்லது மேலேசெந்தர கருவிபட்டையில் Save என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது ஆகிய மூன்றுவகையான வாய்ப்புகளில் நாம் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆவணத்தை சேமித்திட முயற்சிக்கும்போது உடன் Save எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் முதலில் Text documents  என்றவாறு ஆவணத்தின் வகையை அதற்கான பெட்டியில் தெரிவுசெய்துகொண்டபின் Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க.

அல்லது அதற்கு பதிலாக ஆவணத்தினை வேறுவகை ஆவணமாக சேமித்திட மேலே கட்டளைபட்டையில் File => Save As=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Save Asஎனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் முதலில் .odt, .doc, .txt ஆகியவற்றில் எந்தவகையில் இந்த ஆவணத்தை நாம் சேமித்திட விரும்புகின்றோம் என தெரிவுசெய்துகொண்டபின் Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க.

நாம் இவ்வாறு ஒரு ஆவணத்தில் அந்த ஆவணத்தை அவ்வப்போது சேமித்து வைப்பது குறித்து கவலைப்படாமல் ஆழ்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கும்போது இடையில் திடீரென மின்சாரம் நின்றுவிடுதல் போன்ற பாதிப்பினால் கணினியின் இயக்கம் நின்றுவிடும் அதனால் நாம் பணிசெய்த ஆவணம் அனைத்தும் வீணாகிவிடும் அதனைதொடர்ந்து நாம் ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்த பணியையே செய்திடவேண்டும்

இதனை தவிர்ப்பதற்காக அவ்வப்போது நாம் மறந்தாலும் தானாகவே கணினியானது நாம் பணிபுரிந்துகொண்டிருக்கம் ஆவணத்தினை சேமித்திடுமாறு செய்திட மேலே கட்டளைபட்டையில் Tools => Options => Load/Save => General=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Options எனும் உரையாடல் பெட்டியில் Save AutoRecovery information every என்பதில் எவ்வளவு நேரம் என அமைத்துகொள்க மேலும் இதே உரையாடல் பெட்டியின் Default file formatand ODF settings எனும் பகுதியில் under Document type என்பதன் கீழ் Text document என்பதையும் பின் Always save as என்பதற்கருகில் (எச்சரிக்கை (DOCX) என்ற வகையை அன்று ) DOC என்றவகையை மட்டும் தெரிவுசெய்துகொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்துகொள்க

6.5

6.5

இவ்வாறு பணிபுரிந்தபின் ஒரு ஆவணத்தை மூடிவெளியேறுவதற்காக மேலே கட்டளைபட்டையில் File => Close=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது சாளரத்தின் மேல்பகுதியில் வலதுபுறமூலையில் உள்ள X என்ற குறியீடுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த ஆவணம் சேமிக்கபட்டிருந்தால் உடன் மூடப்பட்டுவிடும் சேமிக்கபடவில்லையெனில் இந்த ஆவணத்தை சேமிக்கவா என கேட்டு உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் நம்முடைய விரும்பத்திற்கேற்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து மூடிவிடுக

நாம் இந்த ஆவணத்தில் பணிபுரிந்துகொணடிருக்கம்போது நாம் செய்த குறிப்பிட்ட முந்தைய செயல் சரியில்லை என எண்ணி அதனை நீக்கிவிட்டால் பரவாயில்லை என எண்ணிடும்போது   விசைப்பலகையில் Ctrl+Z ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது மேலே கட்டளைபட்டையில் Edit => Undo=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் அல்லது மேலேசெந்தர கருவிபட்டையில் Undo என்றவாறு இடதுபுறம் வளைந்த அம்புக்குறி உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது ஆகிய மூன்றுவகையான வாய்ப்புகளில் ஒன்றினை செயற்படுத்தி முன்செய்தசெயலை நீக்கம் செய்துகொள்க

இவ்வாறு தவறானதை நீக்கம் செய்து விட்டோமே என தவிக்கும்போது அல்லது முன்பு செய்த செயலையே மீண்டும் செயற்படுத்திட விழைந்திடும்போது விசைப்பலகையில் Ctrl+Y ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது மேலே கட்டளைபட்டையில் Edit => Redo=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் அல்லது மேலேசெந்தர கருவிபட்டையில் Redo என்றவாறு வலதுபுறம் வளைந்த அம்புக்குறி உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது ஆகிய மூன்றுவகையான வாய்ப்புகளில் ஒன்றினை செயற்படுத்தி செய்தசெயலை மீண்டும் செயற்படுத்திகொள்க.

குறிப்பு லிபர் ஆஃபிஸ் தொடர்பாக மேலும் விவரம் தேவையெனில்

  1. http://www.libreoffice.org/get-help/ , 2.http://en.libreofficeforum.org/ ,3 http://ask.libreoffice.org/en/questions/ஆகிய இணைய தளங்கள் உதவுகின்றன.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: