எம்எஸ் ஆஃபிஸ் -2010 -தொடர்-3

விண்டோ உதவி சாளரம்.

ஒரு ஆவணம் எந்த நிலையிலிருந்தாலும் விண்டோவின் மேல் பகுதியிலுள்ள ?என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் உதவி சாளரம் ஒன்று திரையில் தோன்றும் அதில் Search என்ற பகுதியில் உதவி தேவைப்படும் சொற்களை தட்டச்சு செய்து Enter என்ற விசையை அழுத்துக. உடன் அந்த சொல்தொடர்பான உதவி குறிப்பின் இணைப்பு ஒன்று திரையில் தோன்றிடும். இந்த இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அந்த சொல் தொடர்பான உதவி குறிப்பின் விவரம் திரையில் விரியும். இந்த திரையிலுள்ள Back என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் முந்தைய பகுதிக்கும் forward என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் அடுத்த பகுதிக்கும்Home என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் உதவிகுறிப்பு அட்டவணை யிருக்கும் முதல் பக்கத்திற்கும் நம்மை அழைத்து செல்லும். print என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் இந்த உதவிகுறிப்பை அச்சிட்டு பெறலாம். X என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் இந்த உதவித் திரை மூடப்பட்டுவிடும்.

3.1.1

3.1.1

புதிய கோப்பினை உருவாக்குவதற்காக

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் New என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் எந்த வகை கோப்பு அல்லது கைவசமிருக்கும் மாதிரிபடிமங்களில் ஒன்றை அல்லது Blank என்பதை தெரிவுசெய்து கொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய ஆவணமொன்று திரையில் நாம் பணிபுரிவதற்கு ஏதுவாக தோன்றும்.அதற்கு பதிலாக Ctrl + N என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக. உடன் புதிய ஆவணமொன்று திரையில் நாம் பணிபுரிவதற்கு ஏதுவாக தோன்றும்.

3.1.2

3.1.2

   1.கோப்பினை சேமித்திடுவதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் save என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. அதற்கு பதிலாக Ctrl +s என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக.உடன்இப்போதுதான் முதன் முதலில் சேமிப்ப தாயின் Save as என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில் இதனை எந்த கோப்பகத்தில் சேமிக்க போகின்றோம் என குறிப்பிட்டும் File name என்பதில் இந்த ஆவணத்திற்கொரு பெயரிட்டும் save as Type என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து இது எந்தவகையை சேர்ந்தது எனத்தெரிவு செய்தும் save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கோப்பு ஆனது சேமிக்கப்பட்டுவிடும்.

  1. கோப்பினை திறப்பதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் Recent Documents என்பதன் கீழ் சமீபத்தில் பணிபுரிந்த கோப்புகளினுடைய பெயர்களின் பட்டியல் தோன்றும் அதிலிருந்து தேவையானதை மட்டும் தெரிவு செய்து கொள்க அல்லது open என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குகஅதற்கு பதிலாக Ctrl +o என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக. உடன்விரியும் open என்ற உரையாடல் பெட்டியில் நாம் திறக்கவிரும்பும் கோப்பு எந்த கோப்பகத்தில் உள்ளது என தேடிபிடித்து தெரிவுசெய்க.பின்னர் open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கோப்பு ஆனது நாம் பணிபுரிவதற்காக திறந்து கொள்ளும்

3.1.3

3.1.3

  1. கோப்பினை மூடுவதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில்close என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே இடதுபுற மூலையிலிருக்கும் X close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் இந்த கோப்பு ஆனது மூடப்பட்டுவிடும்.

பயன்பாட்டினை மூடிவிட்டு வெளியேருவதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில்Exit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த பயன்பாடு ஆனது மூடப் பட்டுவிடும்

ஆவணத்தை அச்சிட்டு பெறுவதற்கு.

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில்print என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதற்கு பதிலாக Ctrl +p என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக. பின்னர் விரியும் திரையில் இந்த ஆவணம் முழுவதுமா அல்லது குறிப்பிட்ட பக்கமா என்பதற்கான settings என்பதிலிருந்தும் எத்தனை நகல் வேண்டுமென copies என்பதிலிருந்தும் அச்சுப் பொறியின் பெயரை printer என்பதன் கீழிறங்கு பட்டியலிலிருந்தும் தெரிவு செய்து அமைத்து கொள்க. மேலும் சரிசெய்ய வேண்டுமெனில் settings என்ற பகுதியி லிருந்து தெரிவுசெய்து அமைத்துகொள்க. அவ்வாறு அமைத்திடும் போது இந்த ஆவணம் அச்சிட்டால் எவ்வாறு இருக்கும் என வலதுபுற முன்காட்சி பலக்த்தில் பார்த்து திருப்தியாக இருந்தால் print என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த ஆவணமானது அச்சிடப்படும்.

மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே இயல்பு நிலையில் இருக்கும் அமைவை ஏற்று அச்சிட விரும்பினால் விரைவு அனுகுதல் கருவி பட்டையில் quick print என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த ஆவணமானது அச்சிடப்படும் இந்த கருவிகளின் பட்டையில் இந்த quick print என்ற உரவபொத்தான் இல்லை யெனில் அதற்காக இந்த கருவிகளின் பட்டையில் அம்புக்குறி போன்றுள்ள customize quickaccess toolbar என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் customize quickaccess toolbar பட்டியலில் நாம் விரும்பும் quick print என்றகட்டளையை தெரிவு செய்து சொடுக்குகஉடன் நாம் தெரிவு செய்த quick print என்ற கட்டளையானது விரைவு அனுகுதல் கருவி பட்டையில் மேலும் ஒரு கருவியாக அமர்ந்திருக்கும்.

ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்திட

நம்முடைய நண்பர்களுக்கு இந்த ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்திட விரும்புவோம் அதற்காக விண்டோவின் மேல்பகுதி யிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற தாவியின் திரையில் save &send என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகபின்னர் விரியும் மையத்திலுள்ள save &send என்ற பலகத்தில் send using email என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன் பின்னர் விரியும் வலதுபுற send using email என்ற பலகத்தில் send as attachment என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் outlook new message window திரையில் தோன்றும் அதில் to என்ற பகுதியில் நண்பரின் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சுசெய்து sendஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

   பெறுபவரிடம் இந்த பயன்பாடு இல்லையென்றாலும் நாம் அனுப்பிடும்ஆவணத்தை படித்தறிந்து கொள்வதற்கு send using email என்ற பலகத்தில் send as pdf என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

ஆவணத்தை தொலைநகலாக அனுப்பி வைத்திட

பெறுபவருக்கு தொலைநகலாக இந்த ஆவணத்தை அனுப்பிடுவதற்காக File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற தாவியின் திரையில் save &send என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகபின்னர் விரியும் மையத்திலுள்ள save &send என்ற பலகத்தில் send using email என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன் பின்னர் விரியும் வலதுபுற send using email என்ற பலகத்தில்Send as internet fax என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.ஆவணத்தின் ஒருசில தகவல்களை மறைத்தல்

நம்முடைய ஆவணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவோம் அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் ஆவணத்தில் நம்முடைய சொந்த தகவல்கள் நம்முடைய நிறுவனத்தை பற்றிய மிகமுக்கிய தகவல்கள் போன்றவை இல்லாமல் இருந்தால் நல்லது என எண்ணிடுவோம். அந்நிலையில்விண்டோவின் மேல் பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் info என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகபின்னர் விரியும் மையத்திலுள்ள information என்ற பலகத்தில் check for issues   ,Inspect document ஆகிய கட்டளைகளை தெரிவு செய்து தெரிவுசெய்து சொடுக்குக.

3.1.4

3.1.4

பின்னர் விரியும் Document inspectorஎன்ற உரையாடல் பெட்டியில் அனைத்துவகை உள்ளடக் கத்தையும் சரிபார்ப்பதற்கு தேவையான தேர்வுசெய்பெட்டி அனைத்தும் தெரிவு செய்யப்பட்டு உள்ளதாவென உறுதி செய்து கொண்டு inspect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் முக்கிய தகவல்களை Xகுறியிட்டுவிடும் remove all என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்து close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

3.1.5

3.1.5

எச்சரிக்கை இந்த செயலை undo என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மீண்டும் பெற முடியாது இந்நிலையில் முந்தைய நிலையை பெறுவதற்கு இந்த ஆவணத்தை சேமிக்காது வெளியேறுவதுதான் சரியான தீர்வாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: