இணையத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் தொடர்-3.

கூகிள் ஒரு அறிமுகம்

கூகிள் என்பது இணையத்தில் தேடஉதவும் ஒரு தேடு பொறு ஆகும் .இதில்உள்ள முகவரிபட்டையில் நாம்தேடவிரும்பும் செய்தியை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்தினால் உடன் நாம் கோரிய விவரங்களை தேடிபிடித்து பட்டியலாக திரையில் காண்பிக்கும். இந்த கூகிளின் கருவிபட்டை நாம் இணையத்தில் உலாவருவதற்கு பெரிதும் உதவுகின்றது toolbar.google.com என்று முகவரிபட்டையில் தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை தட்டினால் நம்முடைய கணினியில் இது பதிவிறக்கம் ஆகிவிடும்

. இந்த கூகிள் தேடு பொறி ஆனது மிகவும் திறன் வாய்ந்ததுஆகும். எவ்வாறெனில் நாம் தேடவிரும்பும் தகவலின் ஒரு பகுதியை மட்டும் தட்டச்சுசெய்தால் கூடமிகுதியை தானாகவே பூர்த்தி செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகளை திரையில் காண்பிக்கும அவற்றுள் சரியானதை தெரிவு செய்து சொடுக்குதல்செய்தால் உடன் தொடர்புடைய அனைத்து இணைய தளங்களின் முகவரியையும் பட்டிய லிட்டுவிடும் அவற்றுள் நமக்கு தேவையான இணையதளத்தின் முகவரியை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வதன் மூலம் திறந்து கொள்ளமுடியும்

மெஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் ஒரு அறிமுகம்

மெஸில்லா ஃபயர் ஃபாக்ஸானது . இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட திறன்மிக்கதும் வேகமாக செயல்படக்கூடியதும் மிகவும் பாதுகாப்பானதும் ஆக உள்ளது அதனால் இணையத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலாணவர்கள் இதனையே தங்களுடைய இணைய உலாவலுக்கு உபயோகபடுத்துகின்றனர். இதற்காகwww.getfirefox.com     என்று முகவரிபட்டையில் தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை தட்டினால் இது பதிவிறக்கம் ஆகிவிடும் இதில் பொத்தான்பட்டை,முகவரிபட்டை கூகிள்கருவிபட்டை ஆகிய அனைத்துமே ஒரேவரிசையில இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும் இதனுடைய முகவரிபட்டையில் www.arugusarugu.blogspot.com என்ற இணைய முகவரியை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் இதனுடைய முகப்பு பக்கம் திரையில் தோன்றிடும்.பின்னர் மேல் பகுதியின் பட்டியலின் பட்டையில் file=> new tab=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் புதிய தாவி பட்டை திரையில் தோன்றும் அதில் ஏற்கனவே திறந்த இணையதளத்தின் முகப்பு பக்கமும் புதியகாலியான பகுதியும் சேர்ந்து இருக்கும் காலியான தாவிப்பகுதியில் www.vikupficwa.wordpress.com என்ற இணைய முகவரியை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் இதனுடைய முகப்பு பக்கம் காலியான தாவியின் திரையில் தோன்றிடும். இதன்பின்னர் மீண்டும் விண்டோவின் மேல்பகுதியின் பட்டியலின் பட்டையில் file=> new tab=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் புதிய தாவி பட்டையொன்ரு திரையில் தோன்றிடும் அதில் www.icwai.org என்ற இணைய முகவரியை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் இதனுடைய முகப்பு பக்கம் புதிய தாவியின் திரையில் தோன்றிடும்

4.1.1

4.1.1

 

 மின்னஞ்சலை பயன்படுத்துவது

இணையம் வழியாக தகவல் தொடர்பிற்கு பயன்படுவதுதான மின்னஞ்சல் எனப்படும் இ-மெயில் ஆகும். இதனை 1.நம்முடைய கணினியின் அடிப்படை யாலானது 2.இணையத்தின் அடிப்படையாலானது என இரண்டு வகையாக பிரிக்கலாம்

ஆரம்பத்தில் கணினியின் அடிப்படையாலான மின்னஞ்சலே இருந்தது. இதனை பயன்படுத்தி கொள்வதற்கு இதற்கான மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திருக்க வேண்டும் இந்த மென்பொருளை மின்னஞ்சலின் வாடிக்கையாளர் என அழைப்பார்கள். Outlook express mozilla thunderbird போன்றவை மிகபிரபலமான   மின்னஞ்சலின் வாடிக்கையாளர்களாகும். இவற்றை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துபின்னர் வடிவமைவு செய்தபிறகே நம்முடைய மின்னஞ்சலை இதன்வாயிலாக அனுப்பிட முடியும்.

இணையஅடிப்படையிலான மின்னஞ்சலை பயன்படுத்திடுவதற்கு தொடர்புடைய இணையதளத்தில் நமக்காக ஒரு கணக்கினை முதலில் தொடங்கடவேண்டும் அதன் பின்னரே நம்மால் மின்னஞ்சலை பெறவோ அனுப்பிடவோ முடியும் இதற்காக ஒரு புதிய கணக்கினை எவ்வாறு ஆரம்பிப்பது என இப்போது காண்போம்.

ஜிமெயிலில் ஒரு புதிய கணக்கினை துவங்குவது

கூகிளின் இணைய உலாவியை திறந்து கொள்க அதில் உள்ள முகவரிபட்டையில் mail..google.com என்று தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. அல்லது கூகிளின் இணைய உலாவியின் முகப்பு பக்கத் திரையின் மேல்பகுதியிலுள்ள gmail.என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஜிமெயிலின் முகப்பு பக்கம் திரையில் தோன்றும் முதன்முதலாக ஜிமெயில் கணக்கினை தொடங்க இருப்பதால் sign up for Gmail அல்லதுCreate an account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

4.1.2

4.1.2

   ஏற்கனவே ஜிமெயில் கணக்கு இருந்தால் இத்திரையில் உள்ள user name என்ற பெட்டியில் பயனாளரின் பெயரையும் கடவுச்சொல்லை pass word என்ற பெட்டியிலும் தட்டச்சுசெய்து Sign in என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய ஜிமெயில் பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும்.

முதன்முதல் ஜிமெயில் கணக்கினை தொடங்குபவதாயிருந்தால் ஒருகாலியான படிவம் திரையில் தோன்றும். அதில்First name என்பதில் vasanth என்றும் last name என்பதில் nayagan என்றும் desired login name என்பதில் vasanth7101993என்றும்தட்டச்சுசெய்த பின் check availability என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த பயனாளரின் பெயர் யாரும் பயன்படுத்தியுள்ளனரா என சரிபார்க்கும் .வேறுயாராவதுஇந்த பெயரை பயன்படுத்தி கொண்டிருந்தால் வேறுபெயரை தட்டச்சுசெய்யுமாறு கோரும். இவ்வாறு சரிபார்த்தபின்னர் vasanth7101993 is available என்ற தகவல் திரையில் தோன்றும் இந்த பெயர்தான் இவருடைய மின்னஞ்சல் கணக்கிற்குள் உள்நுழைவதற்கான உள்நுழைவு பெயராகும் இந்த உள்நுழைவு பெயரானது எழுத்து ,எண்கள் ,குறிகள் ஆகியவை சேர்ந்து எளிதில் நினைவு கூறத் தக்கவகையில் இருந்திடவேண்டும்.

4.1.3

4.1.3

   பின்னர் கடவுச்சொற்கள் பகுதியில் நாம் விரும்பியவாறு எழுத்துகளை தட்டச்சுசெய்க. இது பெரிய அல்லது சிறிய எழுத்துகள்,எண்கள்,குறிகள் ஆகியன சேர்ந்து குறைந்தது எட்டெழுத்து களுடனும் எளிதில் நினைவு கூறத்தக்க வகையிலும் இருந்திட வேண்டும் இது நம்முடைய பிறந்த தேதியாகவோ நம்முடைய அல்லது நம்உறவினர்களின் பெயராகவோ இருக்ககூடாது ஏனெனில் இவைகளை வேறுஎவரும் மிகஎளிதாக கண்டுபிடித்துவிடுவர்.

தேவையெனில் password strength என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் கடவுச்சொற்கள் தொடர்பான மேலும் தகவல்களை பெறலாம். இந்த கடவுச்சொல்லை நாம் தட்டச்சுசெய்திடும்போது நட்சத்திர குறியாகத்தான் திரையில் தோன்றும்

   ஏனெனில் நாம் கடவுச்சொல்லை தட்டச்சு செய்திடும்போது அருகிலிருக்கும் ஒருவர் அதனை படித்து தெரிந்து கொள்ள முடியாதவாறு தவிர்ப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Re enter password என்ற பகுதியிலும் அதே கடவுச்சொல்லை மீண்டும் தட்டச்சுசெய்க. பின்னர் remember me on this computer enable web history என்ற தேர்வுசெய்பெட்டியில் உள்ள தெரிவுசெய்த அடையாளகுறியீட்டை நீக்கிவிடுக. ஏனெனில் நாம் இல்லாதபோது நம்முடைய கணினி வழியாக நம்முடைய மின்னஞ்சல் பகுதிக்குள் இதன்மூலம் சென்றுவிட முடியம்

அதன் பின்னர் security question என்ற கீழிறங்கு பட்டயிலின் பெட்டியில் வரிசையாக பலகேள்விகள் இருக்கும் அல்லது write my own question என்பதில் நாமேபுதிய எளிதான கேள்வி ஒன்றை உருவாக்கி கொள்ளலாம் இந்த கேள்விகளில் ஒன்றை தெரிவு செய்து அதற்கான பதிலை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. பிற்காலத்தில் நம்முடைய கடவுச்சொல்லை மறந்துவிட்டால் இந்த கேள்வி பதிலின்மூலம் நம்முடைய கடவுச்சொல்லை மீட்டு கொள்வதற்காகத்தான் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

பின்னர் secondary email என்ற பகுதியில் நமக்கு வேறுஏதாவது மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதனை தட்டச்சுசெய்க எதுவுமில்லையெனில் காலியாக விட்டிடுக.

அதன்பின்ன்ர்Location என்ற பகுதியில் நம்முடைய நாட்டின்பெயர் India என்றவாறு இயல்புநிலையில்தோன்றிடும் word verification என்ற பகுதியில் தோன்றிடும் எழுத்துகளின் வித்தியாசமான தோற்றத்திலிருந்து சரியாக பார்த்து படித்து அதனை மிகச்சரியாக தட்டச்சுசெய்க கிரிமினல் புத்தியுள்ளவர்கள் எவராவது இந்த பகுதியில்லை எனில் தானாகவே ஒரு மின்னஞ்சல் கணக்கினை உருவாக்கிடுமாறு நிரல்தொடர் ஒன்றை எழுதி ஆயிரகணக்கான மின்னஞ்சலை உருவாக்கிவிடுவார்கள் அதனை தடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாகும் இதிலுள்ள எழுத்துகள் ஒரு நிரல்தொடரால் தானாக படிக்க முடியாது.என்ற செய்தியை மனதில் கொள்க.

பின்னர்terms of service என்பதில் உள்ள அனைத்து நிபந்தனைகளியும் படித்து ஏற்றுகொள்வதாயின் I accept create my account என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் புதிய மின்னஞ்சல் கணக்கொன்று நமக்காக ஆரம்பிக்க பட்டுள்ளதாக வாழ்த்து செய்தியுடன் திரைத்தோற்றம் அமையும்.அதில் Iam read show my account என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் ஆரம்பித்த நம்முடைய மின்னஞ்சல் கணக்கின் முகப்பு பக்கத்திற்கு நம்மை அழைத்துசெல்லும்

   அதில் inbox என்பதை சொடுக்குதல்செய்தால் நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களின் பட்டியலை திரையில் காண்பிக்கும். இந்த பட்டியலில் இருக்கும்எழுத்துகள் தடிமனான எழுத்தில் இருக்கும் அதாவது இவைகளை நாம் இன்னும் திறந்து படிக்கவில்லை என்பதுதான் இதன்பொருளாகும்.gmail team என்றிருப்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் இந்த மின்னஞ்சல் திறந்துகொள்ளும் படித்தபின்னர் மூடிவிட்டால் இந்த மின்னஞ்சலின் எழுத்துகள் சாதாரணமாக தோன்றும் signout என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் மின்னஞ்சலை மூடிவிடுக.

ஜிமெயிலை பயன்படுத்துதல்

கூகிளின் இணைய உலாவியை திறந்து அதில் உள்ள முகவரிபட்டையில் mail..google.com என்று தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவது. அல்லது கூகிளின் இணைய உலாவியின் முகப்பு பக்கத் திரையின் மேல்பகுதியிலுள்ள gmail.என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வது ஆகிய ஏதேனுமொன்றின் வாயிலாக ஜிமெயிலின் முகப்புதிரைக்கு செல்க அங்குள்ள user name என்பதில் பயனாளரின் பெயரையும் password என்பதில் கடவுச்சொல்லையும் மிகச்சரியாக தட்டச்சுசெய்து sign in என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நம்முடைய மின்னஞ்சல் கணக்கின் திரைதோன்றும் நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்கள் இதன் உள்வருகைபெட்டியில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்தபட்டியலின் இடதுபுறம் இருப்பது மின்னஞ்சல் அனுப்பியவரின் பெயராகும் மையபகுதி இந்த மின்னஞ்சல் எதைபற்றியது என்ற சுருக்கமான விவரமாகும் அதற்கடுத்ததாக சிறிது சாய்வாக தோன்றுவதைபார்த்து இந்த மின்னஞ்சலுடன் இணைப்பாக கோப்பு ஒன்று அனுப்ப பட்டுள்ளதாக அறிந்து கொள்ளலாம்.அதனைதெரிவுசெய்து download என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் நம்முடைய கணினியில் இந்த இணைப்புகோப்பு பதிவிறக்கம் ஆவதற்கான பெட்டியொன்று தோன்றும் இதனை பிறகு படித்து கொள்ளலாமெனில் saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இதனை சேமிப்பதற்கான உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் நாம் இதனை சேமிக்க விரும்பும் கோப்பகத்தை தெரிவு செய்து கொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இதனை பதிவிறக்கம் செய்து நாம் குறிப்பிட்ட இடத்தில் சேமித்துவிடும்.

4.1.5

4.1.5

மின்னஞ்சலை உருவாக்கி அனுப்புதல்

நாம் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பிடவிரும்புகிறோமெனில் உள்வருகை பெட்டிக்கு மேலே இருக்கும் compose mail என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர்தோன்றிடும் திரையில் to என்பதில் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியை தவறில்லாமல் தட்டச்சுசெய்க நாம் ஏற்கனவே மின்னஞ்சல் யாருக்காவது அனுப்பியிருந்தால் முதலெழுத்தினை தட்டச்சுசெய்தவுடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி மேல்மீட்பாக தோன்றும் சரியாக இருந்தால் அதனை தெரிவுசெய்து சொடுக்குக .இல்லையெனில் தொடர்ந்து மின்னஞ்சல் முகவரியை தட்டச்சுசெய்க.

அதன்பின்னர் subject என்ற பகுதியில் இந்த மின்னஞ்சலைபற்றிய சுருக்கமான குறிப்பை தட்டச்சுசெய்க. ஒன்றுக்கு மேற்பட்ட வர்களுக்கு இதே மின்னஞ்சலை அனுப்பிடும்போது Add BCC-யிலும் (இதில் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியாளர் ஒருவர் இந்த மின்னஞ்சல் தமக்குமட்டுமே அனுப்ப பட்டுள்ளதாக அறிந்து கொள்வார்) அல்லது AddCC யிலும் (இதில் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியாளர் ஒருவர் மின்னஞ்சலானது தமக்கு நகல் அனுப்ப பட்டுள்ளதாக அறிந்துகொள்வார்) அவர்களுக்கான மின்னஞ்சல் முகவரியை தட்டச்சுசெய்க.

பின்னர் attach file என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் open என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் இணைத்து அனுப்பிட விரும்பும் கோப்பு இருக்கும் இடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் குறிப்பிட்ட கோப்பானது இந்த மின்னஞ்சலுடன் இணைக்கபட்டுவிடும்

பின்னர் மையத்தில் உள்ள காலி இடத்தில் தேவையான தகவலை தட்டச்சுசெய்து save now என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் தற்போது இந்த மின்னஞ்சலை சேமித்து வைத்திடும் உடன் அனுப்பிட send என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் இந்த மின்னஞ்சலை நாம் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திடும் discard என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் இந்த மின்னஞ்சல் தயார்செய்திடும் பணியை கைவிட்டிடும்.

4.1.6

4.1.6

வேறு வழியில் மின்னஞ்சலை உருவாக்கி அனுப்புதல்

எம்எஸ்ஆஃபிஸ் பயன்பாட்டில் நம்மால் தயார்செய்யப்பட்ட ஆவணங்களையும் நேரடியாக மின்னஞ்சலில் அனு்ப்பிடமுடியும். அதற்காக

ஒரு ஆவணத்தை உருவாக்கி கொண்டு விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் பட்டியலின் பட்டையில் file=> save & send => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் விரியும் file என்ற தாவியின் திரையில் மையபலகத்தில் உள்ள send using email என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் வலதுபுற பலகத்தின் send as attachment என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும்திரையில் to என்பதில் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியை தவறில்லாமல் தட்டச்சுசெய்க

அதன்பின்னர் subject என்ற பகுதியில் இந்த மின்னஞ்சலைபற்றிய சுருக்கமான குறிப்பை தட்டச்சுசெய்க. ஒன்றுக்கு மேற்பட்ட வர்களுக்கு இதே மின்னஞ்சலை அனுப்பிடும்போது Add BCC-யிலும் (இதில் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியாளர் ஒருவர் இந்த மின்னஞ்சல் தமக்குமட்டுமே அனுப்ப பட்டுள்ளதாக அறிந்து கொள்வார்) அல்லது AddCC யிலும் (இதில் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியாளர் ஒருவர் மின்னஞ்சலானது தமக்கு நகல் அனுப்ப பட்டுள்ளதாக அறிந்துகொள்வார்) அவர்களுக்கான மின்னஞ்சல் முகவரியை தட்டச்சுசெய்க.

பின்னர் send என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் இந்த மின்னஞ்சலை நாம் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திடும்

4.1.7

4.1.7

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: