விண்டோ-7 தொடர்-2

 விண்டோ 7 -ன் வகைகள்

இந்த விண்டோ 7 ஐ அங்கிகரிக்கப்பட்ட விற்பனையாளர் அல்லது இணையத்தின் வாயிலாக பின்வரும் மூன்று வகைகளில் மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி வெளியிடப்பட்டுள்ளன.

 1விண்டோ7 ஹோம்பிரிமியம்:- இது பொதுவாக வீடுகளில் பயன்படுத்தபடும் கணினிக்கான வெளியீடாகும்.(படம்-1)

  16.o1

படம்-1

 1. விண்டோ7 புரோஃபஸனல்:- இது சிறுவியாபார நிறுவனங்களுக்கு பொருத்தமாக அமையும்

(படம்-2)

16.o2

படம்-2

3. விண்டோ7 அல்ட்டிமேட்:- இது பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவருக்கும் பயன்படுமாறான வசதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. (படம்-3)

16.o3

படம்-3

 விண்டோ 7 ஐ நிறுவுவதற்கான குறைந்தபட்ச வன்பொருட்கள்

 1. 1கிகாஹெர்ட்ஸ் (Gigaherts) அல்லது அதைவிட விரைவான செயல்வேகமுடைய 32பிட் (x86) அல்லது 64பிட்(x64) செயலி(processor).
 2. 32பிட் செயலி(processor). எனில் 1 கிகாபைட் (ஜிபி) ரேம் 64பிட்  (processor). எனில் 2கிகாபைட் (ஜிபி) ரேம்.

 3. 32பிட் செயலி(processor). எனில் 16 ஜிபி காலி நிணைவகம் கொண்ட வன்தட்டு, 64பிட் செயலி(processor). எனில் 20 ஜிபி காலிநிணைவகம் கொண்ட வன்தட்டு.

 1. WDDM 1.0அல்லது இதைவிட விரைவானதுடன் இணைந்த டைரக்ட் எக்ஸ்9 கிராபிக் சாதணம்.

விண்டோ 7 ஐ நிறுவுதல்

விண்டோ விஸ்டாவிலிருந்து விண்டோ 7 ஆக மேம்படுத்துதல்

ஏற்கனவே விண்டோ விஸ்டாவாக இயங்கிகொண்டிருக்கும் கணினியில் விண்டோ 7 ஆக மேம்படுத்துதல் மிகசுலபமான செயலாகும். ஆயினும் இதற்காக கூடுதலாக காலவிரையம் ஏற்படும்.

1.விண்டோ7 இயக்கமுறைமையுடன் உள்ள நெகிழ்வட்டினை அதற்கான வாயிலில் பொருத்துக.

2. உடன் திரையில் தோன்றும் Auto play என்ற பட்டியலிலிருந்து Run Setup.exe (படம்-4) என்பதை தெரிவுசெய்து சொடுக்கி இயங்கச்செய்க.

16.o4படம்-4

3. பின்னர் விரியும் விண்டோ7இன் நிறுவுகை திரையிலுள்ள Install now என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 1. உடன் விண்டோ7இன் நிறுவுகை செயல் நடைபெறத்துவங்கி தேவையான கோப்புகளெல்லாம் கணினிக்கு நகலெடுக்கபடும் (படம்-5).

16.o5

படம்-5

5.அதன் பின்னர் விண்டோ7 ஆனது இணையத்தின் வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு நிகழ்நிலைபடுத்திகொள்ளும்.   பிறகு தோன்றும் திரையில் அனுமதி நிபந்தனை களை ஏற்றுக் கொள்வதாக ஆமோதித்து next என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6.பின்னர் தோன்றும் திரையில் upgrade என்ற பொத்தானை(படம்-6). தெரிவுசெய்து சொடுக்குக.பிறகு ஒத்திசைவு அறிக்கையொன்று திரையில் கிடைக்கப்பெறும் அவ்வறிக்கை யானது என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என அறிவுரை கூறும் அதற்கேற்ப செயல்படுக.

                                       16.o6

படம்-6

     விண்டோ7 ஐ புதியதாக நிறுவுதல்

 1. கணினியின் இயக்கத்தை தொடங்கசெய்து விண்டோ7 மென்பொருள் உள்ள நெகிழ்வட்டினை அதற்கான வாயிலில் பொருத்தி மீண்டும் கணினியின் இயக்கத்தை தொடங்க செய்க.
 2. பின்னர் தோன்றிடும் திரையில் வழக்கமாக Esc/F12 ஆகிய விசைகளில் ஒன்றை அழுத்திய பின்னர் விரியும் திரையில் நெகிழ்வட்டின் வழியாக இயங்கத்தொடங்கும் வாய்ப்பை தெரிவுசெய்க

 16.o7

படம்-7

 1. உடன் விண்டோவானது நிறுவுகை கோப்புகளை (படம்-7).நினைவகத்திற்கு மேலேற்றும்.

16.o8

படம்-8

 1. பின்னர்தோன்றிடும் திரையில் Install nowஎன்பதை (படம்-8). தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன்பின்னர் விரியும் திரையில் Get Important update for Installation என்பதை     (படம்-9). தெரிவுசெய்து சொடுக்குக.ஏனெனில் வின்டோ7 வெளியிட்ட பிறகு இன்றைய நாள்வரை ஏராளமான வசதிகளை மேம்படுத்தியிருப்பார்கள்

16.o9

படம்-9

 1. பிறகு தோன்றிடும்Please read the license terms என்ற(படம்-10). திரையில் I accept the license terms என்பதை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

16.o10

படம்-10

7. பின்னர் விரியும் which type of installation do you want? என்ற திரையின் வாய்ப்புகளில் Custom(advanced) என்பதை தெரிவுசெய்து கொண்டுnextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 1. இதன்பின்னர் தோன்றிடும் where do you want to install window7? என்ற திரையின் வாய்ப்புகளில் இயல்புநிலையில் இருப்பதை ஏற்றுக்கொண்டு அல்லது வன்தட்டின் ஜிபார்ட்டெடு என்பதன் உதவியுடன் நினைவகத்தை பாகப்பிரிவினை செய்து வைத்திருந்தால் அதனைதெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

16.o11

படம்-11

 1. உடன் விண்டோ7 ஐ நிறுவிடும் பணிதொடங்கி செயல்படும் (படம்-11). இதற்காக சிறிது கூடுதலாக நேரம் எடுத்துகொள்ளும் அதுவரை பொறுமையாக காத்திருக் கவும். பின்னர் விண்டோ7 ஐ வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என்ற(படம்-12). செய்தி திரையில் தோன்றும் உடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் தொடங்கவும்.

                      16.o12

படம்-12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: