எம்எஸ் ஆஃபிஸ்-2010 -தொடர்-2

எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாட்டை மூடிட

நாம் பயன்படுத்துவதற்காக திறந்த இந்த எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாட்டினை பணிமுடிந்தபின்னர் மூடுவதற்கு திரையின் மேலே வலதுபுறமூலையிலிருக்கும் XClose என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் File என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் இடதுபுற பலகத்திலிருந்து இந்த கோப்பினை மட்டும் மூடுவதற்கு close என்ற கட்டளையையும் இந்த பயன்பாட்டிலிருந்தே வெளியேறுவதற்கு Exit என்ற கட்டளையையும்   தெரிவு செய்து சொடுக்குக

16.w1

 

   உடன் நாம் திறந்து பணிபுரிந்து முடிந்த திரையானது மூடுவதற்கு முன்பு Save என்ற உரையாடல் பெட்டியின் வாயிலாக இதனை சேமிக்க வேண்டுமா என நம்மிடம் கோரும் இதிலுள்ள Don’t save என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் இதனை சேமிக்காது வெளியேறி விடும்.Cancel என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் பயன்பாட்டு திரையிலேயே மீண்டும் இடம்சுட்டி சென்றிருக்கும். Save என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் இப்போதுதான் முதன் முதலில் சேமிப்பதாயின் இது ஒரு கோப்பாக சேமிக்கப்படுவதற் காக Save as என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்.

16.w2

அதில் இந்த கோப்பினை எந்த கோப்பகத்தில் சேமிக்கபோகின்றோம் என குறிப்பிட்டும் File name என்பதில் இதற்கான ஒரு பெயரினை தட்டச்சுசெய்தும் save as Type என்பதில் இதனை எந்த வகை கோப்பாக சேமிக்கவேண்டுமென இதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவு செய்து கொண்டும் saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

16.w3

  

எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாடுகளின் பொதுவான திரைத்தோற்றம்

அனைத்து எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாடுகளின் திரைத்தோற்றமும் பொதுவாக பின்வரும் உறுப்புகளுடன் ஒன்றாகவே இருக்கும்

1. திரையில் தலைப்பில் இருப்பது இந்த கோப்பின் பெயரை குறிப்பிடுகின்ற தலைப்பு பட்டையாகும்

2. இந்த தலைப்புபட்டையின் இடதுபுறம் இருப்பது அடிக்கடி நம்மால் பயன்படுத்த படும் save ,undo ,redo என்பன போன்ற கட்டளைகள் அடங்கிய விரைவு அனுகுதல் கருவி பட்டையாகும்..

3. இதன்வலதுபுறம்இருப்பது minimize, restore, close ஆகிய கட்டளைப் பொத்தான்கள் அடங்கிய தொகுப்பான கட்டுபாட்டு பொத்தான்களாகும்.

4. இதற்கடுத்தாக இருப்பது இந்த எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாட்டின் பல்வேறு பட்டிகளை திறப்பதற்கான தாவிபொத்தான்களின் பட்டியலாகும்.

5. அதற்கடுத்தாக இருப்பது நாம் தெரிவுசெய்யும் தாவிபொத்தானிற்கான பட்டியாகும் இந்த பட்டியில் பல்வேறு கட்டளைகள், கருவிகள் வகைபடுத்தபட்டு தனித்தனி குழுவாக அமைக்கப்பட்டுள்ளன.

6.அதற்கடுத்ததாக எக்செல் பயன்பாட்டில் மட்டும் ஃபார்முலா பட்டை உள்ளது இதில் கணக்கிடுவதற்கான ஃபார்முலாவை தட்டச்சுசெய்து செயற்படுத்தி கொள்ளலாம்.

6. மையத்திலிருப்பதுதான் நாம் பணிபுரியவிருக்கும் ஆவணத்தின் பகுதியாகும்

7. திரையின் கீழ்பகுதியில் இருப்பது நிலைபட்டையாகும். இதன் இடதுபுறம் மொத்தம் எத்தனை பக்கம் இந்த ஆவணத்திலுள்ளது? தற்போது இடம்சுட்டி இருக்கும் பக்கத்தின் எண் என்ன? இந்த ஆவணத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள மொத்த சொற்கள் எத்தனை? என்பன போன்ற விவரங்களை காண்பிக்கும் இதன்வலதுபுறம் திரையின் தோற்றத்தை மாற்றியமைக்கின்ற Zoom என்ற கட்டளை அமைந்துள்ளது இதன் இரு ஓரத்திலுமுள்ள – + ஆகிய குறிகள் அல்லது இதிலுள்ள நகர்வியை பயன்படுத்தி நாம்விரும்பியவாறு திரையின் தோற்ற அளவை நம்மால் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துகொள்ளமுடியும்.

8.ஒரு ஆவணமானது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்கள் அடங்கியதாகஇருந்தால் இடது புறத்திலும் பக்கஅகலம் அதிகமாக இருந்தால் திரையின் கீழ்பகுதியிலும் நிலைபட்டைக்கு மேல்பகுதியில் நகர்விபட்டை என்பது அமைந்திருக்கம் இதன் மீதுள்ள நகர்வி பெட்டியைபிடித்து நகர்த்துவது அல்லது இதில் இரு ஓரத்திலுமுள்ள அம்புக்குறியை சொடுக்குதல்செய்வதன் வாயிலாக இந்த ஆவணத்தில் தேவையான இடத்திற்கு இடம்சுட்டியை நகர்த்தி செல்லலாம்.

16.w4

பட்டிகளை பற்றியவிவரம்

     நாம் முதலில் இந்த பட்டிகளை பற்றி பார்ப்போம். பட்டிகளின் அடிப்படையாக அமைவது தாவிபொத்தான் ஆகும். இந்த தாவிபொத்தான் ஒவ்வொன்றையும் சொடுக்குதல்செய்தால் அதன்கீழ் உள்ள கருவிகளும் கட்டளைகளும் சேர்ந்த தொகுப்பான பட்டி திரையில் விரியும். இந்த பட்டியில் பல்வேறு கட்டளைகளை செயற்படுத்து வதற்கான கருவிகளின் பொத்தான்கள் உள்ளன இந்த பொத்தான்களின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்யும்போது இந்த பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என முன்கூட்டியே திரையில் காட்சியாக கண்டு அறிந்து கொள்ளலாம்.

16.w5

 இந்த பபொத்தான்களில் முக்கோணம் போன்ற அம்புக்குறி இருந்தால் இதில் மேலும் கட்டளைகள் அடங்கிய சிறுபட்டியல் ஒன்று அதற்குள் விரியும்என அறிந்து கொள்க. மேலும் இது பல்வேறு வாய்ப்புகளின் தொகுப்பாகவும் உள்ளது. இதில் பல்வேறு கருவிகளை குறிப்பிட்ட நோக்கத்திற்கானவையாக தொகுத்து சிறுசிறு தலைப்பின்கீழ் குழுவாக வகைபடுத்தப் பட்டுள்ளன. இந்த குழுவின் மூலையில் இருக்கும் சின்னஞ்சிறு பொத்தான் ஆனது இந்த குழுவிலுள்ள மேலும் கூடுதலான கட்டளைகளடங்கிய உரையாடல் பெட்டி திரையில் தோன்றுவதற்கு உதவுகின்றது.

16.w6

படம் ஒன்றை வரைதல் ,அட்டவணை ஒன்றை உருவாக்குதல் என்பன போன்ற ஒருசில கட்டளை களை செயற்படுத்திடும்போது பொதுவான தாவிபொத்தான் இல்லாது கூடுதலாக தற்காலிக சூழ்நிலை தாவிபொத்தான் (Contextual tab ஆன Design,format போன்ற தாவிபொத்தான்களின் பட்டிகள் ) மேலும் வடிவமைப்பு செய்வதற்காக இந்த ஆவணத்தில் உருவாகிவிடும்.

பட்டியை மறையச்செய்தலும் மீண்டும் தோன்றச்செய்தலும்

ஒரு ஆவணத்தில் பணிபுரிவதற்கு கூடுதலான இடம்தேவையெனும்போது திறந்திருக்கும் பட்டியின் தாவிபொத்தான்மீது இடம்சுட்டியை வைத்து இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பட்டி மறைந்து விடும்.மீண்டும் பட்டி தேவையெனில் அதற்கான தாவிபொத்தான்மீது இடம்சுட்டியை வைத்து இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் அதற்கான பட்டி திரையில் தோன்றிடும்.

16.w7

வேறுவழியில் திறந்திருக்கும் பட்டியினுடைய தாவிபொத்தான்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் விரியும் குறிக்குவழி பட்டியலில் உள்ள minimize the ribbon என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக. உடன் திறந்திருக்கும் பட்டி மறைந்து விடும். மீண்டும் பட்டி தேவையெனில் அதற்கான தாவிபொத்தான்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் விரியும் குறிக்குவழி பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ள minimize the ribbon என்ற கட்டளையில் தெரிவுக் செய்ததை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கி விடுக. உடன் பட்டி திரையில் தோன்றி விடும்..

விரைவு அனுகுதல் கருவி பட்டையை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்தல்

16.w8

விரைவு அனுகுதல் கருவி பட்டையில் மேலும் கூடுதலான கட்டளை களின் கருவிகளை நாம் விரும்பியவாறு சேர்த்து கொள்ளலாம் அதற்காக இதிலுள்ள அம்புக்குறி போன்றுள்ள customize quickaccess toolbar என்ற பொத்தானை சொடுக்குதல் செய்க. உடன் விரியும் customize quickaccess toolbar என்ற பட்டியலில் உள்ள நாம் விரும்பும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் நாம்தெரிவுசெய்த கட்டளையானது விரைவு அனுகுதல் கருவி பட்டையில் மேலும் ஒரு கருவியாக அமர்ந்திருக்கும்.

   மேலும் தேவையெனில் இதே customize quickaccess toolbar எனும் பட்டியலில் உள்ள more commands என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் options என்ற உரையாடல் பெட்டியில் choose commands from என்பதன் கீழிறங்கு பட்டியலை விரிய செய்து அதிலிருந்து தேவையான கட்டளையை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து கொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம்தெரிவுசெய்த கட்டளையானது விரைவு அனுகுதல் கருவி பட்டையில் மேலும் ஒரு கருவியாக அமர்ந்திருக்கும்.

16.w9

வேறொரு வழியாக பட்டியில் தேவையான பொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியலில் Add to Quick access toolbar என்றகட்டளையை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த கட்டளையானது விரைவு அனுகுதல் கருவி பட்டையில் மேலும் ஒரு கருவியாக அமர்ந்திருக்கும்.

விரைவு அனுகுதல் கருவி பட்டையிலுள்ள கட்டளையை நீக்கம் செய்தல்

இந்த விரைவு அனுகுதல் கருவி பட்டையிலுள்ள அம்புக்குறிபோன்றுள்ள customize quickaccess toolbar என்ற பொத்தானை சொடுக்குக. உடன் விரியும் customize quickaccess toolbar பட்டியலில் உள்ள more commandsஎன்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகஉடன் விரியும் optionsஎன்ற உரையாடல் பெட்டியில் நீக்கம் செய்ய விரும்பும் கட்டளையை தெரிவு செய்து கொண்டு Remove என்றபொத்தானை சொடுக்குக.பின்னர்Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம்தெரிவுசெய்த கட்டளையானது விரைவு அனுகுதல் கருவி பட்டையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டு விடும்

16.w10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: