இணையத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் -தொடர் -2

இணையம் தோன்றியவரலாறு

முதன்முதல் இந்த இணையச் சேவையானது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஒரே கட்டிடத்திலுள்ள கணினிகளை இணைக்க பயன்படும் வளாக பிணையத்தையும்(LAN ) வெவ்வேறு நகரங்களுக்கிடையேயுள்ள கணினிகளை இணைக்க பயன்படும் இணையத்தையும்
(WAN) ஒன்றிணைக்ககூடிய அமைப்பு எதுவுமில்லாமல் இவைகளை தனித்தனியாகவே பயன்படுத்தி அல்லல் பட்டுவந்தனர் .பின்னர் பாதுகாப்பு துறையின் Advanced Research Projects Agency (ARPA) என்ற முகவருடைய ARPANET என்பதின் வாயிலாக Transmission Control Protocol (TCP) / Internet Protocol (IP) என்ற கருதுகோளின் அடிப்படையில் 1.1.1983 இல் இந்த LAN ஐயும் WAN ஐயும் ஒன்றிணைத்து செயல்பட செய்து பயன்படுத்த தொடங்கினர்

தேடுபொறிகளின் வகை

இன்று இண்டெர்நெட் எக்ஸப்ளோரர்,மொஸில்லா ஃபயர்-ஃபாக்ஸ், கூகிள், எபிக் போன்றவை இணையத்தில் உலாவருவதற்கு பயன்படும் மிகமுக்கிய பிரபலமான இணைய உலாவிகள் ஆகும்.இவற்றுள் மொஸில்லா ஃபயர்-ஃபாக்ஸ், கூகிள், ஆகிய இரண்டை மட்டும் இன்று பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது எபிக் என்பது இந்திய மொழிகளுக்காக இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மட்டுமான சிறப்புத்தன்மையுடன் கூகிளின் நீட்சியாக அறிமுகபடுத்த பட்டுள்ளது.

இண்டெர்நெட் எக்ஸப்ளோரரை இயக்க தொடங்குதல்

முதலில் ஒரு கணினியானதுமோடம் வாயிலாக இணையத்தில் இணைக்கப் பட்டுள்ளதா என உறுதிசெய்துகொண்டு கணினியின் திரையில் இருக்கும் இண்டெர்நெட் எக்ஸப்ளோரரின் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் மைக்ரோ சாப்ட் வலைபின்னலின் (MSN) என்ற முகப்பு பக்கம் திரையில் தோன்றும் இதன் முகவரிபட்டையில் பின்வரும் முகவரி இருப்பதை காணலாம்.http://www.msn.com/ இதுதான் ஒரு இணையபக்கத்தின் Uniform Resources Location (URL) முகவரியாகும்.இந்த URL முகவரியின்மூலம்ஒரு குறிப்பிட்ட இணையபக்கத்தை அடையாளம் காணமுடியும்

16.n.1

.இதில்httpஎன்பது hypertext Transfer Protocol என்பதை குறிக்கின்றது,www என்பது ஒரு இணைய சேவையாளரை குறிக்கின்றது. மூன்றாவதாக இருப்பதுதான் ஒருஇணைய பக்கத்தினை சுட்டிகாட்டிட உதவுகின்றது. கடைசியாக com என்றுஇருப்பது இது என்னவகையான நிறுவனம் என அறிந்து கொள்ள பயன்படுகின்றது

இந்த பின்னொட்டில் பல்வேறு வகையுள்ளன அவை 1.com எனில் வியாபார நிறுவனம் என்றும் 2.gov எனில் இது ஒரு அரசின் துறை என்றும் 3.net எனில் இணையவலைபின்னல் என்றும் 4.mil எனில் இராணுவத்தை குறிப்பது என்றும் 5.edu எனில் ஒரு கல்வி நிறுவனம் என்றும் 6.org எனில் ஒரு அமைப்பு என்றும் அறிந்துகொள்க

முகப்பு பக்கம் ஒரு அறிமுகம்

ஒரு இணையதளத்தின் முதன்மை பக்கத்தையே முகப்பு பக்கம் என அழைப்பர்.www.vikupficwa.wordpress.com என முகவரிபட்டையில் தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் vikupficwa.wordpress.com என்ற இணைய தளத்தின் முகப்பு பக்கம் திரையில் தோன்றிடும் இது இந்த இணையதளத்தின் மற்ற பகுதிக்கு அழைத்துசெல்லக்கூடிய இணைப்பைகொண்டுள்ளது முகவரிபட்டையில்www.vikupficwa.wordpress.com எனதட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தினால் இதில் முன்பகுதியில் http என்பதை தானாகவே சேர்த்து தேடஆரம்பித்துவிடும்.

16.n.2

புதிய முகப்பு பக்கத்தை உருவாக்குதல்

இவ்வாறான ஒரு இணையதளத்தின் முதன்மை பக்கமான முகப்பு பக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம். இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் Tools=>Internet options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் Internet Options என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் General என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும் General என்ற தாவியின் திரையில் home page என்ற குழுவான பெட்டிக்கு கீழேஇருக்கின்ற use current என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் திறந்துள்ள பக்கம் முகப்பு பக்கம்ஆக மாறிவிடும்

16.n.4

   அவ்வாறு தேவையில்லை நாம் குறிப்பிடும் முகவரியில் முகப்பு பக்கம்அமையவேண்டுமெனில் address என்ற பெட்டியில் நாம் விரும்பும் www.vikupficwa.wordpress.com என்றஇணைய முகவரியை தட்டச்சுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பிறகு இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை இயக்கதொடங்கினால் நம்மால் அமைக்கப்பட்ட இணையதளத்தின் முகப்பு பக்கம் தானாகவே திறந்துகொள்ளும்

இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின் பொத்தானின்பட்டை அமைப்பு .

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் button bar ஆனது நாம் இணையதளங்களில் உலாவருவதற்கு உதவுகின்றது நாம் பார்த்துகொண்டிருக்கின்ற இணைய பக்கத்தின் முந்தைய பக்கத்திற்கசெல்வதற்கு back என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் பழையபடி நாம் பார்த்து கொண்டிருந்த பக்கத்திற்கு செல்வதற்கு forward என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஒரு முகப்பு பக்கம் திறந்து கொண்டிருக்கும் செயலை நிறுத்தம் செய்வதற்கு stopஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஒரு முகப்பு பக்கம் திறந்து கொள்வதற்கு home என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இணையத்தில் எதையாவது தேடுவதற்கு search என்றபகுதியில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு இதனுடைய பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அடிக்கடி நம்மால் பார்க்கப்படுகின்ற இணைய பக்கத்தை favorites என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் பட்டியலில் சேர்த்துகொள்க.

n5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: