அக்சஸ் -2007 தொடர் -34 பிறந்த தேதியிலிருந்து வயதை கண்டுபிடித்தல்

 ஒருவருடைய பிறந்த தேதியை கொடுத்தால் அவருடைய த ற்போதைய மிகச்சரியான வயதை அக்சஸ்2007 இல் Age Function என்பதன் மூலம் காணலாம்.இந்த வயதை எழுத்தின் மூலம் விவர உரையுடன் கூட காணமுடியும். அதற்காக

 1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007 என்றவாறு செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
 2. உடன் தோன்றிடும் Ms Access2007என்ற சாளரத் திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
 3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து வைத்திடுக.
 4. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe)) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் ஏதெனும் ஒருஇடத்தில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

 1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு date of birth என்றவாறு ஒருபெயரை இந்த Lable இன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Caption என்றபகுதியில் தட்டச்சு செய்க.
 2. பின்னர்இதே உரைபெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் All என்ற தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பகுதியில் இந்தஉரைப்பெட்டிக்கான பெயரை txtDOB என்றவாறு தட்டச்சு செய்க.
 3. அதன் பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Formatஎன்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Format என்ற தாவிபட்டியின் திரையில் Input Mask என்பதில்உள்ள Ellipsesஎன்ற முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சிறு உரையாடல் பெட்டியின் பட்டியலில் உள்ள Short Date என்பதை தெரிவுசெய்து Finish என்ற பொத்தானை சொடுக்குக.
 4. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Format என்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Format என்ற தாவிபட்டியின் திரையில் text Align என்பதில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. உடன் விரியும் சிறு பட்டியலில் Left என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
 5. அதன் பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Check Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
 6. பின்னர்இடம்சுட்டியை நாம் உருவாக்கிய படிவத்தில் Date of Birth என்ற பெயரின் கீழ்பகுதியில் வைத்து கொடுக்கி   தேர்வு செய்பெட்டிஒன்றை உருவாக்குக.
 7. பின்னர்இந்த தேர்வுசெய்பெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த தேர்வுசெய்பெட்டிக்கு Include months? என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 8. அதன் பின்னர்இதே தேர்வுசெய்பெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த தேர்வுசெய்பெட்டிக்கு CkMonths என்றவாறு பெயரிடுக.
 9. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Data னும் தாவிபட்டியின்ன் கீழ்உள்ள Default Value என்ற பகுதியில் இந்த தேர்வுசெய்பெட்டியின் இயல்பு மதிப்பு 0 என இருந்திடுமாறு 0 வை உள்ளீடுசெய்க.
 10. அதன் பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Check Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
 11. பின்னர்இடம்சுட்டியை   include Months?என்ற பெயருடன் நாம் உருவாக்கிய தேர்வுசெய்பெட்டியில் அதற்கு கீழ்பகுதியில் வைத்து கொடுக்கி மற்றொரு தேர்வுசெய்பெட்டியை உருவாக்குக.
 12. பின்னர்இந்த தேர்வுசெய்பெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த தேர்வுசெய்பெட்டிக்கு display Age with Text? என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 13. அதன் பின்னர்இதே தேர்வுசெய்பெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த தேர்வுசெய்பெட்டிக்கு CkText என்றவாறு பெயரிடுக.
 14. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Data எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Default Value என்ற பகுதியில் இந்த தேர்வுசெய்பெட்டியின் இயல்பு மதிப்பு 0 என இருந்திடுமாறு 0 வை உள்ளீடுசெய்க.
 15. பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள   Button Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 16. அதன் பின்னர்இடம்சுட்டியை Include Months மற்றும் display Age With text? ஆகிய பெயருடன் நாம் உருவாக்கிய தேர்வுசெய்பெட்டிகளுக்கு கீழ்ப் பகுதியில் வைத்து கொடுக்கி கட்டளை பொத்தான் ஒன்றினை உருவாக்குக.
 17. உடன் இந்த கட்டளை பொத்தானை உருவாக்குவதற்கான பொத்தான் வழிகாட்டி என்ற வித்தகர்உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்.அதில் Cancel என்ற பொத்தானை சொடுக்கி இதனை மூடிவிடுக.
 18. பின்னர்இந்த கட்டளை பொத்தானில் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக..உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Caption என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு Get Your Age என்றவாறு பெயரிடுக.
 19. அதன்பின்னர்இதே பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு Get Your Age என்றவாறு பெயரிடுக.

25;பின்னர்Event என்ற தாவி பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர்இந்த Event எனும் தாவிபட்டியில் உள்ள On Click Event என்பதற்கருகில் உள்ளEllipse என்ற முப்புள்ளியை சொடுக்குக.

 1. உடன் தோன்றிடும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

நிரல் தொடர் 34-1

Dim varAge As Variant

   Dim dtDOB As Date

   Dim dtCurrentDate As Date

   Dim bolMonths As Boolean

   Dim bolText As Boolean

   dtCurrentDate = FormatDateTime(Now(), vbShortDate)

   Me![txtDOB].SetFocus

   dtDOB = Me![txtDOB].Value

   Me![ckMonths].SetFocus

   If Me![ckMonths].Value Then

       bolMonths = True

   Else

       bolMonths = False

   End If

   Me![cktext].SetFocus

   If Me![cktext].Value Then

       bolText = True

   Else

       bolText = False

   End If

   varAge = Age(dtDOB, dtCurrentDate, bolMonths, bolText)

   Me![txtAge].SetFocus

   Me![txtAge].Value = varAge

   இவ்வாறு பொருத்தமான மாறிகளையும் நடப்பு தேதிக்கான சரியான வழிமுறை வடிவமைப்புகளையும் FormateDateTimeஎன்ற செயலியை பயன்படுத்தி Short Date என்பதற்கு அமைத்தபிறகுஒருவருடைய பிறந்ததேதி என்னவென்றும் அவ்வாறே பிறந்ததேதி உள்ளீடு செய்யப்பட்டால் எவ்வாறு ஒருவருடைய வயதை கணக்கிடுவது என்றும் படிமுறை காணவேண்டும் அதற்காக

 1. அதே விபிஎடிட்டர் எனும் சாளரத்திரையில் உள்ளInsert என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்விரியும் Insert என்ற பட்டியலில் Moduleஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. உடன்தோன்றிடும் குறிமுறை சாளரத்தில் பின்வரும் குறிமுறையை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்துகொள்க.

நிரல் தொடர் 34-2

Public Function Age(DOB As Date, today As Date, Optional WithMonths As Boolean = False, _ Optional WithDays As Boolean = False, Optional DisplayWithWords As Boolean = False) As Variant

   On Error GoTo Age_ErrorHandler

   Dim iYears As Integer

   Dim iMonths As Integer

   Dim iDays As Integer

   Dim dTempDate As Date

   ‘ Check that the dates are valid

   If Not (IsDate(DOB)) Or Not (IsDate(today)) Then

     DoCmd.Beep

     MsgBox “Invalid date.”, vbOKOnly + vbInformation, “Invalid date”

     Exit Function

   End If

   ‘ Check that DOB < Today

   If DOB < today Then

     DoCmd.Beep

     MsgBox “Today must be greater than DOB.”, _

         vbOKOnly + vbInformation, “Invalid date position”

     GoTo Age_ErrorHandler

   End If

   iYears = lAge = Abs(DateDiff(“yyyy”, dteDate1, dteDate2) – _

     IIf(Format(dteDate1, “mmdd”) <= Format(dteDate2, “mmdd”), 0, 1))

   dTempDate = DateAdd(“yyyy”, iYears, DOB)

   If WithMonths Then

     iMonths = DateDiff(“m”, dTempDate, today) – _

         IIf(DateAdd(“m”, iMonths, DateAdd(“yyyy”, iYears, DOB)) > today, 1, 0)

     dTempDate = DateAdd(“m”, iMonths, dTempDate)

   End If

   If WithDays Then

     iDays = today – dTempDate

   End If

   ‘ Format the output

   If DisplayWithWords Then

     ‘ Display the output in words

     Age = IIf(iYears > 0, iYears & ” year” & IIf(iYears <> 1, “s”, “”), “”)

     Age = Age & IIf(WithMonths, iMonths & ” month” & IIf(iMonths <> 1, “s”, “”), “”)

     Age = Trim(Age & IIf(WithDays, iDays & ” day” & IIf(iDays <> 1, “s”, “”), “”))

   Else

     ‘ Display the output in the format yy.mm.dd

     Age = Trim(iYears & IIf(WithMonths, “.” & Format(iMonths, “00”), “”) _

     & IIf(WithDays, “.” & Format(iDays, “00”), “”))

   End If

Exit_Age:

     Exit Function

Age_ErrorHandler:

     Age = Null

End Function

34.1

படம்-34-1

 1. பின்னர்விபிஎடிட்டர் எனும் சாளரத்தை மூடிவிடுக.
 2. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் Get Your Age என்ற கட்டளை பொத்தானிற்கு கீழ்பகுதியில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

 1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு Age என்றவாறு ஒருபெயரை இந்த Lable இன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Caption என்றபகுதியில் தட்டச்சு செய்க.
 2. பின்னர்இதே உரைபெட்டியை இடம் சுட்டியால் தெரிவுசெய்து இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் All என்ற தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பகுதியில் இதனுடைய பெயரை txtAge என்றவாறு இந்த உரைப்பெட்டிக்கு தட்டச்சு செய்க.
 3. பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சியில் திறந்துகொள்க.அதில் Date of Birth என்ற பகுதியில் உங்களுடைய பிறந்த தேதியை தட்டச்சு செய்து Get Your Age என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Age என்ற பகுதியில் உங்களுடைய வயது எண்ணில் பிரிதிபலிக்கும்.
 4. அதன்பின்னர்Include Months? மற்றும் Display age with text? ஆகிய தெர்வுசெய்பெட்டிகளை தெரிவுசெய்து கொண்டுGet Your Age என்ற கட்டளை பொத்தானை சொடுக்குக. உடன் உங்களுடைய வயது Get Your Age என்றபகுதியில் உரைவிவரத்துடன் படம்-34-1 இல் உள்ளவாறு தோன்றிடும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: