விண்டோ 7 தொடர்-

விண்டோ 7 என்பது என்ன?

விண்டோ 7 என்பது ஒரு இயக்கமுறைமை ஆகும். இது ஒரு பயனாளர் அளிக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படுத்துவதற்கான பயன்பாட்டு மென்பொருளை பயனாளரால் கோரும் பணியை செய்யும்படி ஏவுவதற்கும் அதனை தொடர்ந்து அப்பயன்பாட்டு மென்பொருள் செயல்படு வதற்கான சூழலை அதாவாது கணினியின் வளங்களை ஒதுக்கிட்டு பணிபுரிய செய்து அதன் விளைவை பயனாளர் வெளியிட விரும்பும் வழியில் வெளியிட செய்கின்ற ஒரு இடை மேலாளராக பணிபுரியும் சிறப்புவகை மென்பொருள் ஆகும். இது ஒரு கட்டிடம் கட்டும் இடத்தில் பணிபுரியும் கட்டி மேற்பார்வையாளர் போன்றே கணினியில் செயல்படுகின்றது.

விண்டோ பதிப்புகளின் வரலாறு

ஆரம்பத்தில் கருப்புவெள்ளையான (படம்-1) எம்.எஸ்.டாஸ் என்பதுதான் கணினியை இயக்கவல்ல திறன்கொண்ட இயக்கமுறைமை ஆகஇருந்தது.

 w1

படம்-1

பிறகு வண்ணங்களை அடிப்படையாக கொண்ட விண்டோ-1 எனும் முதல்பதிப்பை 1985 இல் மைக்ரோசாப்ட் என்ற நிறுவனம் முதன்முதலில் வெளியிட்டது இந்த வெளியீடு வியாபார உலகில் வரவேற்பில்லாததால் வெற்றிபெறவில்லை.

அதன்பிறகு இந்நிறுவனம் இதே வண்ணங்களை அடிப்படையாக கொண்ட விண்டோ-2 எனும் இரண்டாம் பதிப்பை 1987 இல் வெளியிட்டது இந்த வெளியீடும் வியாபார உலகில் அவ்வளவாக வரவேற்பில்லாததால் வெற்றிபெறவில்லை.

பின்னர் இந்நிறுவனம் கட்டளைதொடரை நிருவகிக்கும் மேலாளர்(program manager), அறிமுகபடுத்துதல், நினைவகத்திறனை அதிகரித்தல், ஒரே சமயத்தில் பல்வேறு பணிகளை செயற்படுத்தும் திறன் என்பன போன்ற பல்வேறு வசதிகளுடன் 1990 ஆம் ஆண்டில் வெளியிட்ட விண்டோ-3 எனும் மூன்றாம் பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றது

இதன் பின்னர் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் உட்பொதிந்த எழுத்துரு (Embedded true type fonts), பல்லூடகம் (Multi media), பொருட்களை இணைக்கும் பொதுவான உரையாடல் பெட்டி (object link common diaglog box) என்பன போன்ற பயனாளர்களை கவரும் வண்ணம் மேலும் புதிய பல்வேறு வசதிகளை உடனிணைத்து 1992 ஆம் ஆண்டில் விண்டோ-3.1 என்ற புதியபதிப்பை வெளியிட்டது

பின்னர் இந்நிறுவனம் இணையஇணைப்பு வசதியுடன் விண்டோ என்ட்டி எனும் பதிப்பை 1993 ஆம் ஆண்டில் வெளியிட்டது

அதன்பின்னர் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்கின்டோஸ் கணினிக்கு இணையான வரகலைபயனாளர் இடைமுகம்(graphic user interfac(GUI)) அடிப்படையில் இயங்கும் திறன்கொண்ட இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோ-95 என்ற புதிய பதிப்பு மிகப்பெரும் வெற்றி படைப்பாக அமைந்தது. நம்மில் ஒருசிலரை தவிர பெரும்பாலானவர்கள் இந்த விண்டோ-1995 இயக்கமுறைமையை பயன்படுத்து பவர்களாக இது மாற்றியமைத்தது

பின்னர் 1996 ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை ஒருங்கிணைத்து செயற்படும் திறன்கொண்ட . விண்டோ என்ட்டி-4.0 எனும் பதிப்பை இந்நிறுவனம் வெளியிட்டது

இதன்பின்னர் விண்டோ-95 என்ற பதிப்பில் இருந்த ஒருசிலகுறைகளை சரிசெய்து விண்டோ-98 என்ற பதிப்பை 1998 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளி யிட்டது இது வணிகநிறுவனங்களுக்கும் வீடுகளில் பயன்படுத்தபடும் தனியாள் கணினிகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்தது

பின்னர் விண்டோ-98 ,விண்டோ என்ட்டி-4.0 ஆகிய இயக்க முறைகளில் இல்லாத புதிய வசதிகளுடன் விண்டோ-2000 எனும் புதிய பதிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது வணிக நிறுவனங்களுக்கும் வீடுகளில் பயன்படுத்தபடும் தனியாள் கணினிகளுக்கும் பொருத்தமாக அமையவில்லை. அதனால் இந்த வசதிகுறைவை கருத்தில் கொண்டு அதேஆண்டில் விண்டோ மில்லேனியம் எனும் புதியதொரு பதிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம்   பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியிட்டது.

அதன்பின்னர் பயனாளர்கள் அனைவரையும் கடந்த பத்தாண்டுகளாக தன்பிடியில் வைத்திருக்கும் விண்டோ எக்ஸ்பி எனும் புத்தம்புதிய பதிப்பை 2001 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம்   பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியிட்டது. இந்த பதிப்பு தான் இயக்கமுறைமையில் தலைசிறந்ததாகவும் வேறுஎந்த இயக்கமுறைமையும் வெற்றி கொள்ள முடியாத தனித்தன்மை வாய்ந்ததாகவும் இன்றளவும் விளங்குகின்றது.

பின்னர் இணைய இணைப்பிற்கென விண்டோ-2003 சேவையாளர் என்ற தனித்தன்மை வாய்ந்த பதிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம்   பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியிட்டது.

இதன்தொடர்ச்சியாக இணையஇணைப்பின் பதிப்பாக விண்டோஸ்மார்ட் பிஸ்னெஸ் செர்வர்-2006 என்ற வியாபார நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் தனித்தன்மை வாய்ந்த புதியதொரு பதிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம்   வெளியிட்டது.

அதன்பின்னர் 2007 ஆம்ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோ எக்ஸ்பியை விட மேம்பட்ட பல்வேறு புதிய திறனுடன்கூடிய விண்டோ விஸ்டா எனும் பதிப்பை வெளியிட்டது இது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை

அதனால் விஸ்டாவில் உள்ள குறைகளை சரிசெய்து அதே வசதி வாய்ப்புகளுடனும் மேலும் கூடுதலான பற்பல புதிய அம்சங்களுடனும் இந்த விண்டோ7 எனும் புதிய பதிப்பை 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. இந்த விண்டோ7 இயக்கமுறைமையை பற்றி மிகவிரிவாகவும் இதனுடைய அடிப்படையான செயல்பாடுகளை பற்றியும் இப்போது காண்போம்

விண்டோ 7 -ன் சிறப்பம்சம் என்னென்ன ஒரு பார்வை
   மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வெளியீடுகளுக்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. அதுவும் சில நேரங்களில் பல்வேறு மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனங் களுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் இவ்வாறான நிறுவனங்களின் பயன்பாடு களுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி விடுவார்கள். உதாரணம் விண்டோ விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் – விஎம்வேர் மென்பொருள்களுக்கு பதிலாக   விண்டோ சிஸ்டம் சென்டர் என்பதாகும்

இதற்கு முந்தைய பதிப்பான விஸ்டாவிற்கும் இந்த விண்டோ7இற்கும் அதிகப்பட்ச வேறுபாடு யாதெனில் இது கணினியில் மிக குறைவான நினைவகத்தை பயன்படுத்துவதுதான்.

சரி இன்னமும் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இந்த விண்டோ 7-ல் உள்ளன.
புதிய சக்தி:- விண்டோ 7 இயக்கமுறைமையினுடைய வெளியீட்டின் தாரகமந்திரமே புதிய சக்தி என்பதுதான். அதாவது ஆரம்ப கால மின்சார குண்டுவிளக்குகள் அதிக மின்சாரத்தை எடுத்து கொண்டன. ஆனால் இப்போதுள்ள மின்சாரசிஎல்அப் விளக்குகள் மிக குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன   அதுபோன்று பழைய இயக்க முறைமைகளை விட இந்த விண்டோ 7 ஆனது மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன் பணியை எளிதில் முடித்து விடும் தன்மை கொண்டதாகும்.

மேம்பட்ட அனுகிடும் வசதி அதாவது இணைப்பு(bin) எனும் வசதி -:-நாம்விரும்பிய அல்லது அடிக்கடி நம்மால் பயன்படுத்தப்படும் பயன் பாடுகளை உடனடியாக இயக்குவதற்கு வசதியாக அதனை செயல்பட்டையில்(Task bar) உருவ பொத்தான்களாக (Icons) start எனும் பொத்தானிற்கு அருகில் இணைத்து வைத்து நம்விருப்பபடி வரிசைபடுத்தி கொள்ளும் வசதி இதில்உள்ளது இந்த இணைப்பு(bin) என்ற முறையின் வழியே பயன்பாடுகளை வரிசையாக செயல்பட்டையில்(Task bar) (படம்-2)அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

w2 

படம்-2

நேரடியாக தாவும் பட்டி (Jump list):-நம்மால் தினமும் அடிக்கடி பயன்படுத்தபடும் கோப்புகள் மடிப்பகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றிற்கு நாம் நேரடியாக செல்வ தற்கான வசதி இதில் உள்ளது அதாவது செயல்பட்டையின்(Task bar)start எனும் பொத்தானிற்கு அருகில் இருக்கும் நாம் பயன்படுத்திட விரும்பும் குறிப்பிட்ட உருவபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் சமீபத்தில் குறிப்பிட்ட பயன்பாட்டின் வழியாக நம்மால் பயன்படுத்தப் பட்ட கோப்புகளின் பட்டியல் (படம்-3) திரையில் காட்சி யளிக்கும் .அவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்கினால் போதும்.

 w3

                                 படம்-3

 

விண்டோவை நிருவகித்தல்(snap):- திறந்திருக்கும் எந்தவொரு விண்டோவின் ஓரப்பகுதியையும் கிடைமட்ட மாகவோ அல்லது நெடுக்கிலோ பிடித்து இழுத்துசென்ற விடுவதன் வாயிலாக நாம் விரும்பியவாறு அவ்விண்டோவினுடைய உருவத்தை மாற்றியமைக் கலாம் இந்த வசதி மூலம் இரண்டு விண்டோவை அருகருகே திறந்துகொண்டும்(படம்-4) ஒப்பீடு செய்யலாம்

w4

படம்-4

மேம்படுத்தப்பட்ட தேடல் :-உண்மையில் இந்த தேடல் நல்ல அருமையான வசதியாகும். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால் குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இதில் அப்படியன்று.. இணையத்தில் நாம் எப்படி தேடு வோமோ அதுபோன்றது. அதாவது add hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி நன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது தேடிபிடித்த விடையை உயர்த்தி காட்டப்பட்ட திறவுசொற்கள்,அதன் வகை ஆகியவற்றிற்கேற்ப குழுவாக பட்டியலிடும் வசதி இதில் உள்ளது.

கோப்பு அச்சுபொறி போன்ற சாதணங்களை பங்கிட்டு கொள்ளுதல்-வீட்டுகுழுமம்:-நம்முடைய விட்டில் உள்ள விண்டோ7 இயக்கமுறைமை நிறுவப்பட்ட கணினிகளை ஒன்றாகசேர்த்து வீட்டுகுழுமமாக பயன் படுத்தலாம் இதற்காகவென பயனாளர் பெயர், கடவுச்சொற்கள் போன்ற விபரங்கள் எதுவும் தரத்தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்த எந்த வகையான கோப்புகளையும் பங்கீடு செய்தால் மட்டும் போதும். அதனை தொடர்ந்து மற்றவர்கள் இதனை படிக்கமட்டும் செய்யலாம்.
அதோடு தனித்தனி அச்சுபொறிகள்,ஒவ்வொரு கணினிக்கும் என்றில்லாமல் வீட்டு குழுமம் அனைத்திற்கும் ஒரேயொரு அச்சுப்பொறியை மட்டும் நிறுவி இதனை அனைவரும் உபயோகித்து கொள்ளுமாறு அமைத்துவிடலாம் இதனால் வீட்டு குழும கணினிகள் இதே அச்சுப்பொறியை தானாகவே தன்னியல்பாக தம்முடைய அச்சிடும் பணிக்காக எடுத்து கொள்ளும்

குழுக்கொள்கை (Group policy):-இது கணினி மேலாண்மைக்கான கருவியாக பயன்படுகின்றது.

விண்டோ பல்லூடகம் மையம்(media center) பொழுதுபோக்கு வசதி:- விருப்பட்ட திரைப்படபாடல்கள், உருவப்படங்களை கூடுதல் முயற்சி எதுவுமில்லாமல் கேட்டல் பார்த்தல் தேக்கி வைத்தல் ஆகிய செயல்களை மிக எளிதாக இதில் செய்யலாம் இணையத்தின் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இதற்கென தனியாக தொலைக்காட்சி ஒத்திசைப்பான்(TV Tuner) எதுவு மில்லாமலேயே காண்பதற்கான வசதி இதிலுள்ளது அதனுடன் அவ்வாறு நாம் தற்போது பார்த்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவுசெய்து கொண்டு பின்னர் தேவைப்படும்போது இயக்கி மகிழலாம். இசை, படம் ஆகியவை எந்தவகையான வடிவமைப்பில் இருந்தாலும் விண்டோ7 இல் இயக்கமுடியும். உருவப்படங்களைகொண்டு படவில்லை காட்சிகளைகூட இதில் எளிதாக உருவாக்கலாம்.

வரைகலை :-விண்டோ விஸ்டாவின் முழு பயனையும் அனுபவிக்க வேண்டு மென்றால் கணினிக்குள் வரைகலைக்கான செயலிகள் (கிராபிக்ஸ் பிராசசர்கள்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோ 7-இல் அப்படியான நிபந்தனை எதுவும் இல்லை. இப்படி எல்லாமே வண்ணமயமாக விண்டோ7 இல் இருக்கின்றது.

ஸ்ட்ரீமிங் வீடியோ:-இது ஒரு படி மேல். அதாவது நமது மடிக்கணினியில் ஒலிபொருக்கி வசதி (ஸ்பீக்கர்) இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில் ஒலிஒளிபடத்தை தரவிறக்காமல் நேரடியாக மடிக்கணினியில் இருந்து வீட்டு கணினியில் இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள்.

திரைப்படங்களை உருவாக்குதல் பகிர்ந்துகொள்ளுதல்:-இந்நிறு வனத்தின் இணையதளத்திலிருந்து மைக்ரோசாப்ட் திரைபடம் உருவாக்கிடும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து நாமே திரைப்படங்களை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

வளாகஇணைப்பு பிணைய இணைப்புகணினிகள் , மின்னணு சாதணங்கள் ஆகியவற்றின் இடையே கம்பியில்லாத, கம்பியுடைய, ப்ளூடூத் போன்று எந்தவகை இணைப்பையும் மிகஎளிதாக விண்டோ7இல் ஏற்படுத்திடமுடியும்

மிகவேகமான தூங்கும் ,மீண்டுஎழும் வசதி:- பயன்படுத்தாத போது உடனடியாக கணினியை தூங்க வைத்தல் அவ்வாறு கணினி தூங்கி கொண்டிருக்கும் நிலையில் தேவைப்படும்போது விரைவாக தட்டி எழுப்புதல் செய்து செயலிற்கு கொண்டுவருதல் வலைபின்னல் இணைப்பை மிக விரைவாக்குதல் என்பன போன்றசெயல்கள் விண்டோ7 குறைந்த அளவே நிணைவகத்தை எடுத்துகொள்வதால் கணினியானது மிகவும் விரைவாக செயல்படுகின்றது

தொடுதிரைவசதி:- விண்டோ7 ஆனது சுட்டியின் உதவியில்லாமலேயே பயனாளர் கணினியை உபயோகபடுத்திகொள்வதற்கான தொடுதிரை  போன்று இந்ததொடுதிரை வசதி பயன்படுகின்றது மிகமுக்கியமாக திரையில் திறந்திருக்கும் எந்தவொரு விண்டோவின் அளவையும் இரண்டுவிரல்களை மட்டுமே பயன்படுத்தி திரையை தொட்டு நகர்த்துவதன் வாயிலாக அவ்விண்டோவை விரிவுபடுத்தவோ சுருக்கவோமுடியும்

கணினியுடன் இணைக்கப்பட்ட சாதணங்களை நிருவகித்தல்:- அச்சுப்பொறி ,படபிடிப்பான் இசைஇயக்கி என்பனபோன்ற எண்ணற்ற சாதணங்களை கணினியுடன் இணைத்து பயன்படுத்திட 1.சாதணங்களின் நிலை 2. சாதணங்களின் அச்சுபொறி ஆகியவைகளுக்கான கோப்பகம் ஆகிய இரண்டு வழிமுறைகளில் விண்டோ7 இல் உள்ளது.

1.சாதணங்களின் நிலை இது வன்பொருளின் முகப்புபக்கம் போன்று திரைதோற்றம் அமைந்துள்ளது ஏதேனும் சாதணங்களை கணினியுடன் இணைத்தவுடன் பொதுவாக ஏற்கனவே இருப்பதுடன் இதனையும் பட்டியலா காண்பிக்கும் உதாரணமாக பலபணிசெய்திடும் அச்சுபொறியானது அச்சுபொறிக்கான கோப்பகத்திலும் வருடி கோப்பகத்திலும் இதனை ஒரு பட்டியலாக காண்பிக்கும்

2. சாதனங்களின்அச்சுபொறிக்கான கோப்பகம் இதில் கணினியுடன் இணைக்கப்பட்ட பல்வேறு சாதணங்களின் உருவ பொத்தான்கள் முதல் வரிசையிலும் அச்சுபொறிகளின் உருவ பொத்தான்கள் அதற்கடுத்த வரிசையிலும் காட்சியளிக்கும்.

பிற்காப்பு வசதி:-இதுவும் ஒரு நல்ல பயன்பாடு எப்படி? அதாவது நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த கோப்பின் மேல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்து பழையநிலைக்கு சென்று பார்த்தால் 5 நிமிடத்துக்கு முந்தைய -கோப்பு, 10 நிமிடத்துக்கு முந்தைய கோப்பு,அரை மணி நேரத்துக்கு முந்தைய கோப்பு, என்று பல்வேறு வகைகளில் தரவுகளை விண்டோ 7 ஆனது தானாகவே பிற்காப்பு செய்து சேமித்து வைத்து இருக்கும். எனவே இவற்றிலிருந்து எப்போது வேண்டு மானாலும் நாம் அவற்றை மீள எடுத்துக் கொள்ளலாம் இந்த வசதி குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புகளுக்கும் உண்டு.

அதேபோல் கோஸ்ட் பேக்அப் போன்றுவிண்டோ 7 இலும் பிற்காப்பு செய்திடும்முறை உண்டு. இந்த வகையில்அமைப்பு கோப்புகளை மட்டுமே உருவக்கோப்பாக பிற்காப்பு செய்து எடுக்கலாம், அல்லது தேவையான கோப்பு களையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால் போதுமானது .பிரச்னையான நேரத்தின்போது நாமே கணினியை முந்தை. நிலைக்கு திரும்ப செயல்படும்படி செய்துகொள்ளலாம்.
பாதுகாப்பிற்கான- பிட்லாக்கர் எனும் வசதி:-மேலும் வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் எனும் மென்பொருளை உள்ளிணைத் திருக்கிறார்கள். தகவல் பாது காப்பிற்காக இதனை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பிற்கான- ஆப்ஸ்லாக்கர்எனும் வசதி : எந்தெந்த மென்பொருட்கள் மட்டும் எந்தெந்த நேரத்தில் இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்நேரத்தில் குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்குமாறு பார்த்து கொள்ளும்..

பொதுவானவை நேரடியாக செயல்பட்டையில் செயல்படுதல்:- மேலும் நம்முடைய கணினியில் இயங்க துவங்கியுள்ள பயன் பாடுகளை செயல்பட்டையில் நேரடியாக செயல்படுதலை பார்வையிடல்(படம்-5) என்ற முறையின் வழியே சிறிய அளவி்ல் முன் பார்வை பார்க்கும் வசதியும் விண்டோ7இல் அளித்திருக்கிறார்கள்.

 w5

படம்-.5

பொருட்கள் அமைவிடம்:-விண்டோவிஸ்டா போன்று பொருட்களை பக்கபட்டையில்மட்டுமே வைக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவு மில்லாமல் கணினியின் பின் திரையில் எங்கு வேண்டு மானாலும் நாம்விரும்பிய இடத்தில் வைத்து கொள்ளலாம்

பகிர்ந்தளிக்கும் கருவி :-இதன்மூலம்ஒரே நேரத்தில் வெகு எளிதாக பல்வேறு கணினிகளில் விண்டோ 7 ஐ நிறுவிடலாம்.

மின்சார நிர்வாகம்:-நோட்புக் கம்யூட்டர் போன்றவற்றில் உள்ள மின்கலன்களின் வாழ்நாளை அதிகரித்திட இயல்புநிலையில் உள்ள மின்நுகர்வு திட்டத்தை நாம் விரும்பியவாறு விண்டோ7 இல் மாற்றியமைக்கலாம்.

விண்டோ ரெடிபூஸ்ட்:- விண்டோ 7 ஆனது பல்லடுக்கு பிரதிபலித்தல் இயக்ககங்களை ஆதரிப்பதால் ஒரு கணினியானது அதிகதிறனுடன் செயல்படுவதற்கு ஏதுவாக துனை நினைவகத்தை தேவைப்படும் அளவிற்கு இணைத்து பயன்படுத்திகொள்ளலாம்.

சிங்க் மையம்:- செல்பேசியை ஒரு கணினியுடன் இணைத்து பயன்படுத்து வதற்கான வசதி இதில் உள்ளது

எளிதான பரிமாறிறம்:-இந்த வசதிமூலம் பழைய கணினியிலிருந்து அதிலிருக்கும் கோப்புகளையும் செஅமைவுகளையும் மிகஎளிதாக புதிய கணினிக்கு இடமாற்றம் செய்யலாம்.

உரையாடலை புரிந்துகொள்ளுதல் (Speech Recognition):- ;சிறிய பேசி வாயிலாக நம்முடைய பேச்சொலியை உரையாகவும் உரையாக இருப்பதை பேச்சொலி யாகவும் இந்த வசதிமூலம் மாற்றியமைக்கலாம்

இயல்புநிலை இணைய உலாவி:-விண்டோ7 இல் இயல்புநிலை இணைய உலாவியாக விண்டோஎக்ஸ்ப்ளோர்ர -8 சேர்ந்திருப்பதால் இணையத்தில் உலாவரு பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது

தொலைநகல்(நிகரி)வசதி:- தொலைநகல்(நிகரி) கருவியில்லாமலேயே கணினி வாயிலாக ஏதேனும் ஆவணங்களை வருடச்செய்து தொலைதூரத்திற்கு தொலைநகலை அனுப்பலாம்.

கணினியின் பழுதுநீக்கம் மீளபெறுதல் சூழல்:-கணினி தொடக்க இயக்கத்தின் போது பிரச்சினைஏதேனும் எழுந்தால் இதனை நிறுவுகை செய்வதற்கான உண்மை நிறுவகை நெகிழ்வட்டு இல்லாமலேயே அந்த பிரச்சினையை சரிசெய்து கணினியை இயங்கசெய்துகொள்ளும் வசதி இதிலுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: