ஒரே கணினியில் உபுண்டு லினக்ஸையும் விண்டோ எக்ஸ்பியையும் சேர்ந்தாற்போன்று எவ்வாறு பயன்படுத்தி கொள்ளமுடியும்

ஒரே கணினியில் உபுண்டு லினக்ஸையும் விண்டோ எக்ஸ்பியையும் சேர்ந்தாற்போன்று எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என ஐயப்படவேண்டாம் இதற்காக முதலில்   கணினியின் கீழ்பகுதியில் இடதுபுறமூலையில் இருக்கம் Start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Start எனும் பட்டியலை திரையில் விரியச்செய்திடுக அதில் Control Panel என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

3.1

பின்னர் தோன்றிடும் Control Panel எனும் திரையில் Network Connections எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.

3.2

உடன் விரியும் Network Connections எனும் திரையில் நம்முடைய கணினியில் பொதுவாக பயன்படுத்தபடும் தயார்நிலையில் உள்ள Ethernet connection , wireless adapter போன்ற ஒவ்வொன்றையும் தனித்தனியாக தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீட்பு பட்டியில்   Disable.என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி அதனுடைய செயலை முடக்கம் செய்திடுக

3.3

இதன்பின் இவைகளை தெரிவுசெய்து சூழ்நிலை பட்டியை விரியசெய்து enable எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடும்வரை இவைகளின் செயல் விண்டோ எக்ஸ்பியில் முடக்கபட்டிருக்கும் என்பதை கவணத்தில் கொள்க   இதன்பின்னர் விண்டோ எக்ஸ்பிக்கு பதிலாக விண்டோ 7 அல்லது விண்டோ8 ஆகியவற்றிற்கு மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்தை தவிர்த்து உபுண்டு எனும் இயக்கமுறைமையை இரட்டை தொடக்கம் என்றவாறு செயல்படுத்துவதற்கு தயாராகிவிடுக

இந்நிலையில் விண்டோ இயக்கம முறைமை சிறந்ததா லினக்ஸ் சிறந்தததா என்ற வாதவிவாதத்திற்கு செல்லாமல்   ஏப்ரல்8 2014 இற்கு பிறகு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஆதரவு விலக்கி கொள்ளும் நிலையில் அதற்கு மாற்றாக செலவில்லாத உபுண்டு லினக்ஸிற்கு மாறுவதற்கு முன்பு இரட்டை இயக்கமுறைமைக்கு மாறியபின் முழுவதுமாக மாறுவதுபற்றி முடிவுசெய்யலாம்

3.4

இந்நிலையில்விண்டோ 7 அல்லது 8 இற்கு மாற்றாக விண்டோ எக்ஸ்பியை உபுண்டு லினக்ஸ் எனும் கட்டணமற்ற இயக்கமுறைமையை தெரிவுசெய்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

3.5

இந்த உபுண்டு லினக்ஸின் சிறப்புதன்மைகள் பின்வருமாறு

பாதுகாப்பு இதுவரையில் இந்தஉபுண்டுவை பயன்படுத்து பவர்களிடமிருந்து வைரஸ் தாக்குதல் தங்களுடைய கணினியில் ஏற்பட்டதாகவோ அதனால் கணினியின் இயக்கம் மெதுவாக ஆகிவிட்டதாகவோ புகார் ஏதும் கிடைக்கபெறவில்லை தொடர்ந்து விண்டோ எக்ஸ்பியை பயன்படுத்தி இணையத்துடன் இணைத்து செயல்படுத்தினால் எப்போதுவேண்டுமானாலும் மால்வேர் ,வைரஸ் அகியவற்றின் தாக்குதல் நம்முடைய கணினியில் ஏற்பட வாய்புகள் ஏராளமாக உள்ளன

செயல்படும்வேகம் இதனைதொடர்ந்து நம்முடைய கணினியின் இயக்கம் மெதுவாக செயல்படவும் வாய்ப்புகள் உள்ளன ஏனெனில் விண்டோ எக்ஸ்பியானது நினைவக்த்தில் ஏராளமான இடத்தை தான் இயங்குவதற்காக எடுத்துகொள்கின்றது அதனால் கணினியின் இயக்கம் மெதுவாக செயல்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது ஆனால் உபுண்டு மிக்குறைந்த அளவே நினைவகத்தை தான்இயங்குவதற்கு எடுத்துகொள்வதால் கணினியின் இயக்கம் மெதுவாக உள்ளதுஎன எந்த புகாரும் வரவேவயில்லை

கட்டணம் விண்டோ இயக்கமுறைமையை நூறு டாலர் செலவிட்டுதான் கொள்முதல் செய்து செயல்படுத்திடவேண்டும் ஆனால் லினக்ஸிற்காக ஒருரூபாய்கூட செலவழிக்கதேவையில்லை கட்டணமேயில்லாமல் இதனை செயல்டபடுத்துவதுமட்டுமல்லாத   இதற்காக product key போன்ற திறவுகோல் எதுவும் தேவையில்லை .

3.6

காலி நினைவகம் எக்ஸ்பியை விட மிககுறைந்த காலி நினைவகம் இருந்தாலே உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமைக்கு போதுமானதாகும்

இயக்க மென்பொருள் கணினியுடன் இணைக்கபடும் audio, video , graphics போன்ற துனைச்சாதனங்களை இயக்குவதற்கென தனியான தொரு driver எனும் மென்பொருள் எக்ஸ்பியை போன்ற நிறுவதேவையில்லை அனைத்து துனை சாதனங்களையும் உபுண்டு இயக்கமுறைமைசெயல்படும் கணினியில் இயல்புநிலையில் தானியங்கியாக செயல்படத்தேவையான சமீபத்திய மென்பொருளாக இதனுடைய இயக்கமுறைமையுடன் கூடவே இணைப்பாக சேர்ந்து வருகின்றன

பயன்பாட்டு மென்பொருள் விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையை நிறுவியபின் அலுவலகபயன்பாட்டிற்கென எம்எஸ் ஆஃபிஸ் இணைய உலாவலுக்கென இண்டெர்நெட் எக்ஸ்பளோரர் என ஒவ்வொன்றாக தேடிபிடித்து அப்பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகை செய்தபின்னரே அவைகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆனால் இந்த உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமையுடன் Firefox, Chrome, Libre Office, Open Office ஆகிய பயன்பாட்டுமென்பொருட்கள் சேர்ந்தே கிடைக்கின்றன மேலும் விண்டோவில் இயங்கிடும் மென்பொருளை Wine என்பதை பயன்படுத்தி சிரமமேயில்லாமல் உபுண்டு இயக்கமுறைமையில் செயல்படுத்திடமுடியும் 3.7

வாடிக்கையாளர் விரும்பியவாறு desktop colors, task bar sizes, side bars  ஆகியவற்றை மாற்றியமைத்து கொள்ளமுடியும்   மேற்கூறிய பயன்களை கருத்தில் கொண்டு விண்டோ எக்ஸ்பியை பயன்படுத்தும் பயனாளர்கள் கட்டணத்துடன் கூடிய விண்டோ 7அல்லது 8 இற்கு மாறுவதற்கு பதிலாக கட்டணமேயில்லாத உபுண்டு லினக்ஸிற்கு மாறிடுக என பரிந்துரைக்கபடுகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: