இணையம் ஒரு அறிமுகம்

 

  இன்று இணையம் என்பது ஒருவர் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகமெலாம் ஒருநொடியில் உலாவருவதற்கான மிகமுக்கிய காரணியாக விளங்குகின்றது இவ்வாறான இணையஉலாவிற்கான முகவரியானது www ஆகிய எழுத்துகளில் தொடங்குவதை கண்டிருப்பீர்கள் world wide web( உலகளாவிய இணையம்)என்ற சொற்களின் முதலெழுத்தே இவையாகும். ஒரு கணினியில் இயக்கப்படும் இந்த இணையத்தில் நாம் எந்தளவிற்கு உலாவந்து தேடுகின்றோமோ அந்தளவிற்கு நம்முடைய கல்வி, கேள்வியறிவு ,செல்வம், வணிகம் போன்றவை பெருகிடும் என்பது திண்ணம்.

 n1

படம்-1

   உங்களுக்கு எழும் எந்தவொரு சந்தேகத்தையும் www.ask.com என்ற இணையத்திற்கு சென்று கேள்வி எழுப்பினால் உடன் அந்த கேள்விக்கான தீர்வொன்று கிடைக்கும்.சொற்களுக்கான விளக்கம் காண வேண்டுமெனில் www.dictionary.com என்ற இணையதளம் உதவுகின்றது

 n3

படம்-2

அதுபோன்றே www.dailythanthi.com www.dinamalar.com www.dinamani.com என்பனபோன்ற தளங்களில் இருந்து அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட அன்றாட தினசரி செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.இதில் தம்முடைய தளத்தின் செய்தியை படிப்பதற்கு தேவையான எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் அனுமதிக்கின்றன. ஏதேனுமொருநாட்களின் நிகழ்வுகளையும் இந்த தளங்களிலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.

 n2

படம்-3

மின்னஞ்சல்களை அனுப்புவது , பெறுவது ,உலகில் எங்கிருந்தும் எந்தவொரு கணினியிலிருந்தும் எப்போது வேண்டுமாணாலும் தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்வது,படங்கள் பாடல்கள் இசை ஆகியவற்றை பார்த்து கேட்டு மகிழ்வது, சந்தை நிலவரங்களை தெரிந்து கொண்டு தேவையான பொருட்களை வாங்குவது, விற்பது ,கருத்துகணிப்புகளில் கலந்து கொள்வது, பயணச் சீட்டுகளை முன்பதிவுசெய்துகொள்வது ,நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக விண்ணப்பிப்பது, நமக்கு வருகின்ற ஏதாவது பிரச்சிணை குறித்து நிபுணர்களின் கருத்துகளை ஆலோசணைகளை கேட்டறிவது என்பன போன்ற எண்ணற்ற பயன்கள் இந்த இணையத்தின் வாயிலாக கிடைக்கின்றன

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: