அக்சஸ்-2007 – 33- காலண்டர்கட்டுப்பாட்டில் வீச்செல்லையின் தேதியியை பிரிதிபலிக்கச்செய்தல்

33.1

படம்-33-1

அக்சஸ்-2007 இல் வீச்செல்லையின் தேதியை ( அதாவது ஆரம்ப தேதியையும்   முடிவு தேதியையும் கண்டுபிடிப்பது) தேர்ந்தெடுப்பதை Calendar Active X control என்பது ஆதரிக்காது. ஆயினும் ஒருசில வரி விபியின் குறிமுறைகளைகொண்டு இதனை செயல்படுத்திடலாம்.நாம் உருவாக்கிடும் நம்முடைய சொந்த படிவத்தில் வீச்செல்லையின் தேதியை ( அதாவது ஆரம்ப தேதியையும் முடிவு தேதியையும் கண்டுபிடிப்பது) காலண்டர்கட்டுப்பாட்டிலிருந்து பிரிதிபலிக்கும்படி செய்யமுடியும். அதற்காக பின்வரும் வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

 1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
 2. உடன் தோன்றிடும் Ms Access2007என்ற சாளர திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
 3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து கொள்க.
 4. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள insert ActiveX Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 5. உடன் insert ActiveX Control என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் படம்-33-1 இல் உள்ளவாறு தோன்றும்.அதில் Select an ActiveX Control என்பதன் கீழ்உள்ள Calendar Control-12.0 என்பதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 6. உடன் Detail என்ற சூன் 2009 மாதத்திய காலண்டர்நம்முடைய படிவத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
 7. பின்னர்இதே வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 8. அதன் பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல்செய்து ஒரு உரைபெட்டியை உருவாக்குக.
 9. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு Range என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்து கொள்க.
 10. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் இந்த உரைப்பெட்டிக்கு txtRange என்றவாறு Name என்ற பகுதியில் இதனுடைய பெயரை தட்டச்சுசெய்க.
 11. பின்னர்இதே வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text BoxControl என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 12. அதன் பின்னர்இடம்சுட்டியை படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் Range என்ற பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிக்கு கீழ்பகுதியில் வைத்து சொடுக்குதல்செய்து மேலும் மற்றொரு உரைபெட்டியை உருவாக்குக.
 13. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு start Date என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 14. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த உரைப் பெட்டிக்கு txtStartDate என்றவாறு பெயரிடுக.
 15. பின்னர்வடிவமைப்பு (Designe) எனும்தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 16. அதன் பின்னர்இடம்சுட்டியை படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் start Date என்ற பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிக்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மேலும் மற்றொரு உரைபெட்டியை உருவாக்குக.
 17. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு   End Date என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 18. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த உரைப் பெட்டிக்கு txtEndDate என்றவாறு பெயரிடுக.
 19. பின்னர்வடிவமைப்பு (Designe)எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Button Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 20. அதன் பின்னர்படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் start Date ,End Date ஆகிய பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிகளுக்கு அருகில் வலதுபுறப் பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கட்டளை பொத்தான் ஒன்றினை உருவாக்குக.
 21. உடன் இந்த கட்டளை பொத்தானை உருவாக்குவதற்கான பட்டன் விஸார்டு என்ற வழிகாட்டிஉரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்.அதில் Cancel என்ற பொத்தானை சொடுக்கி இதனை மூடிவிடுக.
 22. பின்னர்இந்த கட்டளை பொத்தானில் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இந்த கட்டைளை பொத்தானிற்கு   Get Range என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 23. அதன் பின்னர்இதே கட்டளை பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
 24. உடன் தோன்றும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு bttnRange என்றவாறு பெயரிடுக.

24.;பின்னர்இந்த பண்பியல்பு பெட்டியின் மேல்பகுதியில் உள்ள Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர்இந்த Event தாவியில் உள்ள Ellipse என்ற முப்பள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக.

 1. உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

Program-33-1

Private Sub GetRange_Click()

Dim dt As Date

Dim intRange As Integer

dt = Me!Calendar0.Value

intRange = Me!txtRange.Value

Me!txtEndDate = DateAdd(“d”, intRange, dt)

End Sub

 1. பின்னர்இந்த காலண்டர் கட்டுப்பாட்டுடன் உள்ள படிவத்தை படிவகாட்சி நிலையில் படம் 33-2 இல் உள்ளவாறு திறந்து கொள்க.அதில் ஏதேனும் ஒருதேதியை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்Range என்ற பகுதியில் +2 அல்லது -2 என்றவாறு நேர்மறை எண் அல்லது எதிர்மறை எண்களை வீச்சிற்கு பிறகுஉள்ளதேதி தேவையா அல்லது முன்பு உள்ளதேதிதேவையா என்ற நம்முடைய தேவைக்கெற்ப உள்ளீடு செய்க.
 3. உடன் Start Date என்ற பகுதியில் நாம் தெரிவுசெய்த தேதியும் End Date என்றபகுதியில் வீச்செல்லையின் தேதி அதாவது கூட்டல்குறியுடன் எனில் கூடிமுடிவுதேதியும் கழித்தல் குறியெனில் தேதியை கழித்து முந்தியதேதியும் பிரிதிபலிக்கசெய்யும்(படம்-33-2).

33.2

படம்-33-2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: