கணினியில் பணிபுரியும்போது கவணிக்கவேண்டிய குறிப்புகள்

 

1.தொடர்ச்சியாக கணினிமுன் அமர்ந்த பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது குறைந்த பட்சம் மணிக்கு ஒருமுறையாவது நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டெழுந்து காலாற அலுவலகத்தை சுற்றி நடந்து வந்தபின் தத்தமது பணியை தொடர்ந்து செய்திடுக

2.நாளொன்றிற்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குறையாமல் தண்ணீர் குடித்திடுக

3. தொடர்ந்து நாள்முழுவதும் பணிசெய்வதற்காக கணினியின் திரையை கண்களால் பார்த்து கொண்டே இருப்பதால் கண்ணிற்கு சோர்வும் கண்ணின் ஈரப்பசை காய்ந்தும் இருக்கும் அதனால் அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கண்களை பத்துமுறை சிமிட்டுதல் செய்து அதாவதுகண்களை பத்துமுறை மூடிதிறந்திடுக

4. நாம் பணிபுரியும் கணினியும் நாம் அமரும் நாற்காலியும் சரியான கோணஅமைவில் நம்முடைய உடல் அமர்ந்து பணிபுரிந்திடுமாறு பார்த்துகொள்க இல்லையெனில் முதுகுவலியும் கழுத்துவலியும் நமக்கு கணினியில் பணிபுரிவதால்இலவசமாக வந்துசேரும்

5. கணினியில் தொடர்ந்து பணிபுரிவதை தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடைவேளை விடுவதாக கூறிக்கொண்டு ஏராளமான எண்ணிக்கையில் காஃபி அருந்தவேண்டாம் காஃபியை அவ்வப்போது நாம் அருந்துவதால் நம்முடைய உடலிற்குள் காஃபின் அதிகஅளவு சேர்ந்து நம்முடைய உடல்நிலையை பாதிப்படைய செய்கின்றன

6. பணிஇடைவேளையில் சமோசா போன்றவைகளை உண்பதும் ,கோக்கோகோலா போன்றவைகளை அருந்துவதையும் தவிர்த்து பழங்களை உண்ணும் பழக்கத்தை பின்பற்றிடுக.

7. வெப்பமிகுந்த அறைகளிலிருந்து ஈரப்பதம் அதிகமாகஉள்ள கணினிவைத்துள்ள அறைக்குள் அடிக்கடி சென்றிடும்போது சிறிதுநேரம் நம்முடைய உடல் அம்மாற்றங்களை ஏற்குமாறு நின்று நிதானித்து செல்க

8. நம்முடைய உடல்நிலை சரியில்லாதபோதும் அலுவலகம் வந்து கணினிமுன் அமர்ந்து பணிபுரிவதை தவிர்த்து ஓய்வுஎடுத்து உடல்நிலை சரியானபின் அலுவலகம் செல்க

9. கூடியவரை இயற்கையான சூரியஒளி காற்றோட்டம் போன்றவை அலுவலக அறைக்கு கிடைக்குமாறு அமைத்திடுக.

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. சேக்காளி
    மே 27, 2014 @ 06:48:44

    //தொடர்ந்து நாள்முழுவதும் பணிசெய்வதற்காக கணினியின் திரையை கண்களால் பார்த்து கொண்டே இருப்பதால் கண்ணிற்கு சோர்வும் கண்ணின் ஈரப்பசை காய்ந்தும் இருக்கும் அதனால் அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கண்களை பத்துமுறை சிமிட்டுதல் செய்து அதாவதுகண்களை பத்துமுறை மூடிதிறந்திடுக//
    “eyedefender” என்று ஒரு இலவச செயலி(application)இருக்கிறது. அதனை கணிணியில் நிறுவி விட்டு தேவையான நேர இடைவெளியையும் வரையறுத்து விட்டால் தானாகவே கணிணி திரை மாறி திரும்ப பழைய நிலைக்கு வரும்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: