இயக்கமுறைமையை சரியாக வழிநடத்தி செல்வதற்கான முக்கிய கருவிகள்

 தற்போது கணினியின் இயக்கமுறைமையின் அமைவை மிகச்சரியாக பராமரித்திட ஏராளமான கருவிகள் உள்ளன அதிலும் திறமூலகருவிகள்கூட ஏராளமான அளவில் கிடைக்கின்றன அவைகளுள் சிறந்த கருவிகள் எவை எந்தெந்த செயலிற்கு எந்தெந்த கருவியை பயன்படுத்தி கொள்வது என குழப்பமில்லாது தொடர்ந்து செயற்படுத்திட பின்வரும் கருவிகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

1,1 Nmonஎனும் கருவியானது கணினியினுடைய இயக்கமுறைமையின் அமைவை நிருவகிக்கும் கருவிகளுள் முதன்மை இடத்தை வகிக்கின்றது இது sar(system activity report) எனும் அறிக்கையை ஒவ்வொரு இருநொடிக்கு ஒருமுறை மேம்படுத்தி திரையில் அளிக்கின்றது அல்லது சிஎஸ்வி வடிவமைப்பில் பின்னர் ஆய்வு செய்து வரைபடமாக காட்சிபடுத்துவதற்காக ஏற்றுமதி செய்கின்றது இது சிபியூ, நினைவகம் என்பன போன்ற கணினியினுடைய இயக்கமுறைமையின் அமைவைபற்றிய விவரங்களிற்காக ஒவ்வொன்றிற்கும் தனித்தனி கட்டளைஎன இல்லாமல் ஒரேயொரு கட்டளைவாயிலாக நமக்கு தேவையான அனைத்துவகை. அறிக்கைகளையும் வழங்கிடும் திறன் கொண்டது

1,2 Rsyslog இது ஒரு திறமூலகருவியாகும் .இது ஒன்றிற்கு மேற்பட்ட முனைமங்களை கொண்ட கணினிகளுக்கான ஒரு மைய உள்நுழைவு சேவையாளராகவும் பெரும்பாலான தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் பாதுகாப்பிற்கான அடிப்படை கட்டமைவாகவும் அனைத்து வகையான லினக்ஸ் வெளியீடுகளின் உள்நுழைவு சேவையாளராகவும் விளங்குகின்றது

1,3 Logstash இது ஒரு திறமூலகருவியாகும் இது ஒவ்வொரு நிகழ்வையும் உள்நுழைவையும் மிகமுக்கியமாக உற்பத்தி சேவையாளர்களை ஆய்வுசெய்து அதன் பின்புலத்தையும் அதனால்ஏற்படும் விளைவுகளையும் மேலேகூறிய Rsyslog , syslog போன்றவற்றின் வாயிலான அறிக்கையாக கணினியின் நிருவாகிக்கு சமர்ப்பிக்கும் திறன்மிக்கதாகும்

1,4 Git இது ஒரு திறமூலகருவியாகும் இது சிறியசெயல்திட்டங்கள் முதல் பெரியசெயல்திட்டங்கள் வரை அச்செயல்திட்டங்களின் வெளியீட்டு பதிப்பெண்களை கட்டுபடுத்திடும் திறன்வாய்ந்தது. இது கணினியினை நிருவகிப்பவருக்கும் மென்பொருட்களை மேம்படுத்துபவருக்கும் தலைசிறந்த கருவியாக விளங்குகின்றது

1,5 Puppet இது கணினியினுடைய கட்டமைவை நிருவகிக்கும் ஒரு திறமூலகருவியாகும் பெரும்பாலான கணினியினுடைய நிருவாகியின் பணியானது செய்த செயலையே திரும்ப திரும்ப செய்யும் சுவராசியமற்ற ஏதேனும் தவறுகள் ஏற்படவாய்ப்புள்ள பணியாக இருப்பதால் அச்செயல்களை இது தானியங்கியாக செயல்படுத்தி மிகவிரைவாகவும் எளிதானசெயலாகவும் ஆக்குகின்றது இது தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மேககணினி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு கணினியினுடைய கட்டமைவை நிருவகிக்கும் மிகச்சிறந்த கருவியாக விளங்குகின்றது

1,6 Ntopng வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்தி கண்காணித்தல் என்பதே ஒரு நிருவாகியின் வழக்கமான மிகமுக்கியமான செயலாகும் அவ்வாறான வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்தி கண்காணித்தல் செயலை இந்த கருவி செய்கின்றது. இது தகவல் தொழில்நுட்பத்தின் வெவ்வேறு மரபொழுங்குமுறைக்கேற்றவாறு தரவுகளின் போக்குவரத்தை வரிசைபடுத்தி வலைபின்னலின் தகவல் போக்குவரத்தில்மிகசிறந்த திறமூல கருவியாக விளங்குகின்றது

1,7 Clonezilla இது கணினியினுடைய நினைவகத்தின் தரவுகளை பிற்காப்பு செய்வதிலும் மீட்டெடுப்பதிலும் மிகச்சரியாக பிரதிஎடுத்தல் எனும் செயலின்மூலம் அந்த செயலை மிகஎளிதான செயலாக்குகின்றது ஒற்றையான கணினிஎனில் Clonezilla Live என்ற பதிப்பும் ஒன்றிற்கு மேற்பட்டதுஎனில் ClonezillaSE(Server Edition) என்ற பதிப்பும் தரவுகளை பிற்காப்பு செய்வது ,மீட்டெடுப்பது ஆகிய பணிகளை விரைவாக எளிதாக செயல்படுத்துகின்றது இது லினக்ஸ் மட்டுமல்லாது அனைத்து வகை இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்த கருவியாக விளங்குகின்றது

1,8 SystemRescueCD கணினியினுடைய இயக்கம் தொங்கலாக அல்லது இயங்காது முடங்கிய நிலையில் குறுவட்டு நெகிழ்வட்டு யூஎஸ்பி ஆகியவற்றின் வாயிலாக அவ்வாறான கணினியை செயல்படசெய்து அவற்றை பழையநிலைக்கு கொண்டு சென்று செயல்படுமாறு செய்திட இந்த கருவி ஆபத்துகாலத்தில் உதவிடும் நண்பனாக விளங்குகின்றது

1,9 RackTables பொதுவாக கணினியில் தரவுகளை நிருவாகியானவர் அல்லது நிருவாக குழுவானது விரிதாளில் பராமரிக்கின்றது பின்னர் அவ்விரிதாளில் பராமரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு வகையான அறிக்கைகள் நம்முடைய தேவைக்கேற்ப உருவாக்கபடுகின்றன. இது மையபடுத்தபட்ட Rack அமைவாக தரவுகளை பராமரிப்பு செய்வதால் வலைபின்னல் சாதனங்களின் வாயிலாக சேவையாளரின் வாயிலாக நாம் கோரும் மிகசிக்கலான அறிக்கைகளைகூட அந்த தரவுகளிலிருந்து மிகஎளிதாக நமக்கு வழங்குகி்ன்றது ஐபி முகவரியையும் அதற்கான காலி நினைவகத்தையும் ஏதேனும் அறி்க்கை வெளியிட்டபின்னர் அறிவிப்பது மட்டுமல்லாது மேலும் உள்ள காலி நினைவகத்தையும் நமக்கு அறிவிப்பு செய்கின்றது .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: