லிபர் ஆஃபிஸ் 4. தொடர்-1

வணக்கம். வாசகர் அனைவரையும் இந்த லிபர் ஆஃபிஸ் .4 என்ற தொடரின் மூலம் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.   தற்போது கட்டணத்துடன் கூடிய விண்டோ எனும் இயக்கமுறைமைக்கு மாற்றாக லினக்ஸின் ஏராளாமான வகையின் வெளியீடுகள் மக்கள் மத்தியில் மிகபிரபலமாக விளங்குகின்றன .அவ்வாறே கட்டணத்துடன் கூடிய எம்எஸ் ஆஃபிஸ் எனும் பயன்பாட்டிற்கு மாற்றாக ஓப்பன் ஆஃபிஸ் என்றும் லிபர் ஆஃபிஸ் என்றும் பயன்பாடுகள் வெளியிடபட்டு அவைகளின் மேம்படுத்தபட்ட பதிப்புகள் அவ்வப்போது வெளியிடபட்டுகொண்டே இருந்தாலும் இன்னமும் மக்கள்மத்தியில் அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்காக இந்த திறமூல அலுவலக பயன்பாடுகளை உபயோகபடுத்தி கொள்வதற்கான தேவையை உருவாக்குவதற்காக இதனை பற்றிய செய்தி முழுவதுமாக சென்று சேரவில்லை அதனால் கடந்த பதிவுகளின் வாயிலாக ஓப்பன் ஆஃபிஸ் தொடரின் மூலம் அதனை பற்றிய பயன்களை கூறியதைபோன்று தற்போது இதே வலைபூவின் வாயிலாக லிபர் ஆஃபிஸ் 4. எனும் தொடரின் மூலம் இதன் பயன்பாடுகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் அதனால் பெரியோர்களே! தாய்மார்களே! தகப்பன்மார்களே ! சகோதர, சகோதரிகளே! அனைவரும் வாருங்கள். இதன் பயன்களைகண்டு தத்தமது தேவைக்கு ஏற்ப கட்டணம் ஏதுமில்லாத இதனை பயன்படுத்திகொள்ளுங்கள் என மிகபணிவுடன் கேட்டுகொண்டு இந்த தொடரை தொடங்குகின்றேன்.

இந்த லிபர் ஆஃபிஸ் என்பது ஒரு கட்டணமற்ற எம்எஸ் ஆஃபிஸின் அனைத்து பயன்களும் தன்னகத்தே கொண்டதொரு அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்கும்திறன்கொண்ட எந்தவகையான வடிவமைப்பு கோப்பாக இருந்தாலும் திறந்து பணிபுரிந்தபின் நாம் விரும்பும் வடிவமைப்பில் மிகமுக்கியமாக ப்பிடிஎஃப் வடிவமைப்பில் கூட சேமிக்கும் திறன்வாய்ந்தது ஆகும்   இந்த லிபர் ஆஃபிஸில் பின்வரும் பயன்பாடுகள் உள்ளன .

ரைட்டர்(சொற்செயலி):இந்த லிபர் ஆஃபிஸில் உரைவடிவமைப்பிற்கு ரைட்டர் எனும் பயன்பாடு உள்ளது   இந்த லிபர் ஆஃபிஸ்ரைட்டரின் மூலம் கடிதங்கள்,அறிக்கைகள், செய்திகடிதங்கள், விளக்க கடிதங்கள், புத்தகங்கள் போன்றவைகளை உருவாக்கமுடியும் இந்த லிபர் ஆஃபிஸ்ரைட்டரில் உருவாக்கபடும் ஆவணத்தில் வரைபடங்களையும் உருவபடங்களையும் உள்ளிணைத்து கொள்ளமுடியும் மேலும் இதன் வெளியீடுகள்   HTML, XHTML, XML, PDF ஆகிய வடிவமைப்புகளிலும் மிகமுக்கியமாக எம்எஸ் ஆஃபிஸ் வேர்டின் அனைத்து வகை பதிப்பு வடிவமைப்பிலும் வெளியிட முடியும் அதுமட்டுமின்றி இதனுடைய ஆவணத்தினை நம்முடைய மின்னஞ்சல் வாடிக்கையாளருடன் இணைத்திடமுடியும் என்பதையும் கவணத்தில் கொள்க.

கால்க் (விரிதாள்):அனைத்து வகை மேம்பட்ட கணித ஆய்வு, வரைபடம் ,முக்கிய வியாபார பிரச்சினைகளை தீர்வுசெய்தல் ஆகிய விரிதாள் செயல்களை இதனுடைய கால்க் எனும் பயன்பாட்டின் மூலம் செயல்படுத்தி கொள்ளமுடியும் நிதியியல்,புள்ளியியல்,கணிதவியல் ஆகியவற்றின் கணக்கீடுகளுக்கான முன்னூறுக்குமேலான செயலிகள் இதில் உள்ளன. குறிப்பிட்ட நிகழ்வு ஏற்பட்டால் என்ன நடைபெறும் என்பதற்கான what if எனும் ஆய்வும் ,இருபரிமாண முப்பரிமாண வரைபடங்களும், இதில் ஒருங்கிணைந்துள்ளன. மைக்ரோ சாப்ட்டின் எக்செல் பணித்தாளை இந்த லிபர்ஆஃபிஸ் கால்க்கின் மூலம் திறந்து பணிபுரிந்தபின் அதே எம்எஸ் எக்செல் வடிவமைப்பில் சேமிக்கமுடியும் அதுமட்டுமல்லாது    CSV, PDF , HTML ஆகிய வடிவமைப்புகளிலும் சேமிக்கமுடியும்

இம்ப்பிரஸ் (நிகழ்த்துதல்): இம்ப்பிரஸானது சிறப்பு நிகழ்வு,அசைவூட்டம் வரைபடகருவி போன்ற அனைத்து பல்லூடக காட்சி கருவிகளையும் நிகழ்த்துதலுக்காக வழங்குகின்றது.   லிபர்ஆபிஸின் வரகலையும் கணிதமும் சேர்ந்த மிகமுன்னேறிய. வரைகலை திறனை இதுஒருங்கிணைந்து பெற்றுள்ளது. இதில் உள்ள படவில்லை காட்சியானது எழுத்துருவின் மிகமேம்பட்ட தன்மையையும் உரையின் சிறப்பு தோற்றத்தையும் ஒலி, ஒலிஒளி அமைப்பையும் கொண்டு பார்வையாளர்களை கவரும் வண்ணம் சிறப்பானதாக அமைந்துள்ளது. இது மைக்ரோ சாப்ட்டின் பவர்பாயின்ட் கோப்பு வடிவமைப்புடன் ஒத்திசைவுசெய்வது மட்டுமல்லாது எண்ணற்ற வரைகலை வடிவமைப்புகளிலும் மேக்ரோமீடியாவின் SWF என்ற வடிவமைப்புகளிலும் இதனுடைய கோப்பினை சேமித்து கொள்ளமுடியும்

வரைபடம்(வெக்டார்வரைகலை) :வரைபடம் என்பது எந்தவொரு கோட்டுபடம் அல்லது ஓட்டவரைபடமும்(flowchart) முப்பரிமான கலைப்பணியாக(artwork)உருமாற்றுகின்ற தொரு வெக்டார் வரைபட கருவியாகும். இதனுடைய அருமையான இணைப்பான்கள் நம்முடைய சொந்த இணைப்பு புள்ளிகளை வரையறுப்பதற்கும் அனுமதிக்கின்றது மற்ற லிபர்ஆஃபிஸ் அலுவலக பயன்பாடுகளுக்கான வரைபடத்தையும் இந்த வரைபடத்தினை பயன்படுத்தி உருவாக்கமுடியும். அதுமட்டுமல்லாது நம்முடைய சொந்த வரைபடங்களையும் உருவாக்கி வரைபடகாட்சிநூலகத்தில்(gallery) சேர்த்து கொள்ளமுடியும். இந்த வரைபடமானது பொதுவானபல்வேறு வரைபடவடிவமைப்புகளையும் பதிவிறக்கம் செய்து திறந்து பணிபுரியவும் பின்னர் PNG, HTML, PDF, Flash. என்பன போன்ற இருபது வகையான வடிவமைப்புகளில் சேமித்திடவும் முடியும்

பேஸ் (தரவுதளம்) :பேஸானது சாதாரண இடைமுகத்துடனான அன்றாட தரவுதள பணிகளை செய்வதற்கான கருவிகளை வழங்குகின்றது. இதில் படிவங்கள்,அறிக்கைகள் , வினாக்கள், அட்டவணைகள் ஆகியவற்றை உருவாக்கிடவும் ,திருத்தம் செய்திடவும் ,காட்சி படுத்திடவும் ,அவைகளுக்கிடையேயான உறவை உருவாக்கவும்   முடியும். அதனால் மற்ற பிரபலமான தரவுதள பயன்பாடுகளை போன்றே உறவு தரவுதள செயலை இதன்மூலம் நிருவகிக்கமுடியும். அதுமட்டுமல்லாது வரைகலை காட்சிகேற்ப உறவுகளை ஆய்வுசெய்திடவும் திருத்துதல் செய்திடவும் ஆன மேம்பட்ட செயல்களையும் செயற்படுத்திடமுடியும்   HSQLDB என்பது இதனுடைய இயல்புநிலை தரவுதள பொறியாகும் இது   மைக்ரோ சாப்ட் அக்சஸ்,dBASE, MySQL, Oracle, ODBC , JDBC ஆகிய அனைத்து வகை வடிவமைப்புகளையும் ஆதரிப்பதோடுமட்டுமல்லாது ANSI-92 SQL எனும் சிறப்பு வடிவமைப்பையும் இது ஆதரிக்கின்றது

மேத் (ஃபார்முலா பதிப்பான்) :மேத் என்பது லிபர்ஆஃபிஸின் ஃபார்முலா அல்லது சமன்பாட்டு பதிப்பான்ஆகும். இதன்மூலம் குறியீடுகளையும் செந்தர எழுத்துருகளில் இல்லாத எழுத்துருக்களையும் கொண்ட மிகசிக்கலான சமன்பாடுகளை உருவாக்குவதற்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும். மற்ற லிபர் ஆஃபிஸின் பயன்பாடுகளில் ஃபார்முலாக்களை உருவாக்குவதற்கான தனித்தன்மைவாய்ந்த கருவியாகவும் இது செயல்படுகின்றது இந்த ஃபார்முலாவை இணைய பக்கத்தில் அல்லது லிபர் ஆஃபிஸால் உருவாக்கபடாத மற்ற பயன்பாடுகளில் Mathematical Markup Language (MathML) வடிவமைப்பிலும் சேமித்திடமுடியும்

இந்த லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டின் வசதிகளும் வாய்ப்புகளும் பின்வருமாறு

இந்த லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்துவதற்காக தனியாக எதுவும் அனுமதிகட்டணம் செலுத்ததேவையில்லை அவ்வாறே இதனுடன் கூடுதல் பயன்பாட்டிற்காக இணைப்புகளையும் கட்டணமின்றி பயன்படுத்தி கொள்ளலாம்.

இது ஒரு திறமூலபயன்பாடாகும் இதன் குறிமுறைகளையோ அல்லது இந்த பயன்பாடுகளையோ யாரும் பூட்டிவைத்து குறிப்பிட்ட திறவுகோளின்மூலமாக மட்டுமே இதனை முதன்முதலாக பயன்படுத்தமுடியும் என்ற கட்டுபாடுஎதுவுமில்லை அதனால்இதனுடைய மூலக்குறிமுறையை நகலெடுத்து நாம் விரும்பியவாறு மாறுதல் செய்து நாமும் பயன்படுத்தி கொள்ளலாம் மற்றவர்களுக்கும் வழங்கலாம்

இது குறிப்பிட்ட இயக்கமுறைமையில்தான இயங்கமுடியும் என்ற கட்டுபாடின்றி விண்டோ, லினக்ஸ், மேக்ஸ் என எந்தவொரு இயக்கமுறைமையிலும் செயல்படும் திறன்வாய்ந்ததாகும்

எழுபதிற்குமேற்பட்ட மொழிகளின் எழுத்துபிழை இலக்கணப்பிழை அருஞ்சொற்பொருள் இணைச்சொல் எதிர்ச்சொல் போன்றவைகளை திருத்துவதற்கும் நாற்பதிற்குமேற்பட்ட மொழிகளில் இதனை இடைமுகம் செய்திடவும் மிகமுக்கியமாக மிகசிக்கலான உரைவடிவமைப்பையும் வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக எழுதும் உருது அராபிக் ஹீப்ரு போன்ற மொழிகளையும் ஆதரிக்கின்றது

பார்ப்பதற்கு எளிமையானதோற்றத்துடன் பயனாளிகளின் இடைமுகம் ஒரேமாதிரியாக இருக்குமாறு பாவிக்கின்றது

மற்ற அலுவலக பயன்பாடுகளுடன் எளிதாக ஒத்திசைவு செய்கின்றது

இதனுடைய அனைத்து பயன்பாடுகளிலும் ஒரேமாதிரியான கருவிகளையே பயன்படுத்திகொள்ளுமாறு கட்டமைக்கபட்டுள்ளது அதாவது வரைபடபயன்பாட்டின் கருவிகளை ரைட்டரிலும் ,கால்க்கிலும் பயன்படுத்துமாறு அனுமதிக்கின்றது இதனுடைய பயன்பாடுகளுள் எந்த பயன்பாட்டிலிருந்தும் எந்தவொரு பயன்பாட்டினுடைய கோப்பினையும் திறக்கமுடியும் உதாரணமாக ரைட்டரில் இருந்துகொண்டு ட்ரா கோப்புகளை திறக்கமுடியும்

எந்தவொரு வடிவமைப்பு கோப்பினையும் திறக்கவும் அவ்வாறு திறந்தபின் இந்த லிபர்ஆஃபிஸில் பணிபுரியும் கோப்புகளை இறுதியாக PDF , Flash Microsoft Office, HTML, XML, WordPerfect, Lotus 1-2-3 போன்ற எந்தவொரு வடிவமைப்புகளிலும் சேமிக்கமுடியும்

நம்முடைய குரலை புரிந்துகொண்டு அதன்படி இந்த லிபர் ஆஃபிஸின் பயன்பாடுகள் செயல்படுமாறும் செயற்படுத்திடமுடியும் இதனை பற்றி மேலும் மூழுவதுமாக அறிந்தகொள்ள http://www.libreoffice.org/ , http://www.documentfoundation.org/. ஆகிய தளங்களுக்கு செல்க

இந்த லிபர்ஆஃபிஸ் 4.0 எனும் பதிப்பை நம்முடைய கணினியில் நிறுவி இயக்குவதற்காக பின்வருபவை மிககுறைந்த பட்ச அடிப்படை தேவையாகும்

மைக்ரோ சாப்ட்டின் விண்டோ எக்ஸ்பி,விஸ்டா,விண்டோ7,விண்டோ8 அல்லது ஜிஎன்யூ லினக்ல் கெர்னல் பதிப்பு 2.6.18 அதற்கு மேலும் அல்லது மேக்ஸ் பதிப்பு 10.4 அதற்குமேலும் உள்ள இயக்கமுறைமை தேவையாகும்

நிருவாகியின் உரிமை இதனை நிறுவுகை செய்திட தேவையாகும்

இதனுடைய தரவுதள பயனபாடு இயங்குவதற்கு Java Runtime Environment (JRE) எனும் சூழல் தேவையாகும்

மேலும் இந்த லிபர் ஆஃபிஸ் நிறுவுகை செய்திட அடிப்படையாக தேவையானவைகளை அறி்ந்துகொள்ள http://www.libreoffice.org/download/system-requirements/ என்ற தளத்திற்கு செல்க

இந்த லிபர் ஆஃபிஸ் எனும் பயன்பாட்டினை தரவிறக்கம் செய்துகொள்ளவிழைபவர்கள் http://www.libreoffice.org/ என்ற தளத்திற்கு செல்க

அதுமட்டுமல்லாது இதனை நிறுவுகை செய்திடவும் அல்லது வேறுஏதேனும் உதவிதேவையெனில் http://www.libreoffice.org/get-help/installation/. என்ற தளத்திற்கு செல்க

இந்த பயன்பாட்டினை விரிவாக்கம் செய்திடவும் கூடுதல் செயல்களை கருவிகளை இணைத்திடவும் http://extensions.libreoffice.org/. என்ற தளத்திற்கு செல்க

.

மேலே கூறிய இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து அதன்வழிகாட்டி கூறும் அறிவுரைகளை பின்பற்றி நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின் முதன்முதல் இதனை திரையில் கொண்டு வருவதற்கு   விண்டோவில் Start எனும் பட்டியலை இயக்குக பின்னர் விரியும் Startஎனும் பட்டியலில் LibreOffice என்பதை தெரிவுசெய்து சொடுக்கு உடன் படம் 1.1 இல் உள்ளவாறு லிபர் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளும் அடங்கிய தொகுதியான பெட்டிபோன்று ஒன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான பயன்பாட்டினை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படச்செய்க

1.1

 

படம் 1.1

லிபர் ஆஃபிஸின் கோப்பு ஏற்கனவே சேமித்து வைத்திருந்தால் அதனைதெரிவுசெய்து சொடுக்குக உடன் தெடர்புடைய லிபர்ஆஃபிஸின் பயன்பாடு திரையில் திறக்கபடும் அல்லது எம்எஸ் வேர்டின் *.doc or *.docx ஆகிய வடிவமைப்பு கோப்புகளை தெரிவுசெய்து சொடுக்கினால் லிபர் ஆஃபிஸின் ரைட்டர் எனும் பயன்பாடும்,

எம்எஸ் எக்செல்லின் *.xls or *.xlsx ஆகிய வடிவமைப்பு கோப்பகளை தெரிவுசெய்து சொடுக்கினால் லிபர் ஆஃபிஸின் கால்க் எனும் பயன்பாடும்,

எம்எஸ் பவர்பாயின்ட்டின் *.ppt or *.pptx ஆகிய வடிவமைப்பு கோப்பகளை தெரிவுசெய்து சொடுக்கினால் லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் எனும் பயன்பாடும் திரையில் தோன்றிடும்

விண்டோ இயக்கமுறைமையில் Quickstarter என்பது நிறுவுகை செய்யபட்டிருந்தால் இந்த லிபர் ஆஃபிஸை செயல் படுத்துவதற்கான *.DLL எனும் நூலககோப்புகள் கணினியின் இயக்கம் தொடங்கும்போதே மேலேற்றுதல் செய்து விரைவாக லிபர் ஆஃபிஸ் பயன்பாடுகள் திரையில் தோன்றி இயங்கிடும்   அதற்காக இந்த Quickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது   Quickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக உடன் படம் 1.2 இல் உள்ளவாறுமேல்மீட்பு பட்டியல் திரையில் தோன்றிடும் அதிலிருந்து தேவையான லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை தெரிவுசெய்து சொடுக்கி திறந்து கொள்க

1.2

படம் 1.2

இந்தQuickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது   Quickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக உடன் படம் 1.2 இல் உள்ளவாறுமேல்மீட்பு பட்டியல் திரையில் தோன்றிடும் அதிலிருந்து Exit Quickstarter எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் இந்த Quickstarter செயல்படுத்தபடாது இருந்துவிடும்

 

லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டின் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையிலிருந்து Tools => Options => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் விரியும் Options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் LibreOffice => Memory=>. என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் (படம் 1.3) வலதுபுற பலகத்தில்   libre office quickstrater என்பதன்கீழுள்ள load libre office quickstrater during system sart-up எனும் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Quickstarter எனும் உருவபொத்தான் நாம் பயன்படுத்துவதற்கு தயாராக வீற்றிருக்கும்

 1.3

படம் 1.3

பொதுவாக லிபர்ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் முக்கிய கட்டளைகளடங்கிய பட்டை (Main menu bar) திரையில் மேல் பகுதில் இருக்கும் அதில் கோப்பினை திறந்து பணிபுரிந்த பின் சேமிக்க பயன்படுத்துவதற்கான கட்டளைகளின் தொகுதிளடங்கிய File எனும் கட்டளையும்

 

கோப்புகளில் திருத்தம் செய்திடவும் தேடிபிடித்து மாற்றியமை்ததிடவும் வெட்டுதல் நகலெடுத்தல் ஒட்டுதல் ஆகிய செயல்களுக்கான Edit எனும் கட்டளையும்

கோப்புகளை திரையில் காட்சியாக காணுதல் அக்காட்சிகளை பெரியதாகவோ சிறியாதாக மாற்றியமைத்தல் சுற்றெல்லையை அமைத்தல் இணையபக்கதிரையமைப்பு   ஆகிய செயல்களுக்கான View எனும் கட்டளையும்

கோப்புகளில் தலைப்பையும் அடிப்பகுதியையும் படங்களையும் வேறு கோப்புகளையும் உள்ளிணைப்பு செய்வதற்கான Insert எனும் கட்டளையும்

கோப்புகளின் பாவணை தானியங்கியாக சரிசெய்தல் சுற்றெல்லையை வடிவமைப்பு செய்தல் ஆகிய செயல்களுக்கான Format எனும் கட்டளையும்

 

ஒரு உரை ஆவணத்தில் அட்டவணையை உருவாக்குதல் திருத்துதல் ஆகிய செயல்களுக்கான Table எனும் கட்டளையும்

 

கோப்பில் எழுத்துபிழை இலக்கணபிழை திருத்துதல் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் செய்தல் அதற்கான வாய்ப்புகள் ஆகிய செயல்களுக்கான Tools எனும் கட்டளையும்

கோபேபுகளை திரையில் எவ்வாறு பிரதிபலிப்பு செய்வது என்பதற்கான கட்டளைகளங்கிய Window எனும் கட்டளையும்

எந்த நேரத்திலும் இடத்திலும் எந்தவொரு உதவியும் தேவையெனில் அதனை பெறுவதற்கான Help எனும் கட்டளையும் இந்த முக்கியகட்டளைகளடங்கிய பட்டை (Main menu bar) யில் உள்ளன.

1.4

படம் 1.4

 

திரையின் மேலே கட்டளைகளடங்கிய பட்டை (Main menu bar)க்கு கீழே(படம் 1.4) கருவிபட்டை உள்ளது   இது மிதக்கும் கருவிகளின் பட்டையாகவோ அல்லது   கட்டளைபட்டைக்குகீழே நிலையாகவோ இது பல்வேறு கருவிகளின் தொகுதியாக விளங்குகின்றது கட்டளைபட்டையில் View => Toolbars=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி தேவையெனில் தோன்றசெய்யலாம் அல்லது இயல்புநிலையில் மேலே கட்டளைபட்டைக்கும் கீழ்பகுதியில் நிலையாக இருக்குமாறு செய்யலாம் இந்த கருவி பட்டையின் இடதுபுற அல்லது வலதுபுற ஓரம் உள்ள X என்பதை தெரிவுசெய்து மறையசெய்யலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: