எந்த கணினியை வாங்குவது எனத்தயங்கும் புதியவர்களுக்காக

பிரபலமான நிறுவனத்தின் (Branded )கணினியா அல்லது  தொகுப்பு (Assembled) கணினியா எதை வாங்குவது என பலருக்கு குழப்பமாக இருக்கும். தொகுப்பு கணினி மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது பிரபலமான நிறுவனத்தின் கணினியை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியும் எழும். இவ்வாறான சூழ்நிலையில் பின்வரும் கருத்துகளை கவணத்தில் கொள்க,

நிறுவனத்தின் Brand கணினிகளால் என்னென்ன நன்மைகள்கிடைக்கும்?

1.            கணினியில் அனுமதி பெற்ற இயக்க முறைமை( Operating system)கள் நிறுவப்பட்டு கிடைக்கும். இதற்கென தனியாக செலவிடத்தேவையில்லை.

2.            சந்தைக்கு  வருமுன் அனைத்து உள்ளுறுப்புகளும் இயக்க முறைமைகளும் முழுவதும் பரிசோதித்து பார்த்த பின்னரே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

3.            விற்பனைக்கு பிந்தைய சேவைகள் தடங்களில்லாமல் வழங்கப்படுகின்றன.

4.            நச்சுநிரலை எதிர்த்து தடுக்க கூடிய எதிர்நச்சுநிரல் மென்பொருள் (antivirus software) பாதுகாப்பு வளையங்கள்(Firewall) மற்ற ஏதேனும் இழப்பு ஏற்படும்போது மீட்கும் வசதியுடைய நிரல்தொட ர்ஆகியவற்றுடன் கிடைக்கின்றன.

இதன் தீமைகள் :

1.            தொகுப்பு கணினியை விட விலை மிகஅதிகமாக உள்ளன.

2.            இதனுடைய உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட முகவர்கள் மூலமாக மட்டுமே மேம்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் இவ்வாறு செயற்படுத்தபட்டு விட்டால் உத்தரவாதம் ஏதும் கிடைக்காது.

3.            வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட வரன்முறைக்குள் மட்டும் மாற்றி கொள்ள இயலும்.

தொகுப்பு கணினியில் (assemble computer)என்னென்ன நன்மைகள் உள்ளன?

1.            ஒவ்வொரு உள்ளுறுப்பும் வாடிக்கையாளர் விரும்பும் நிறுவனத்தின் உற்பத்தி பொருளாக தெரிவு செய்து சிறந்த கணினியாக உருவாக்க முடியும்.

2.            நிறுவனத்தின் கணினியை விட மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

3.            ஒவ்வொரு உள்ளுறுப்புகளும் தனித்தனியாக மேம்படுத்தி கொள்ள முடியும்.

தொகுப்பு கணினியின்(assemble computer) தீமைகள்

1.            விற்பனைக்கு பிந்தைய சேவை கிடைக்காது.

2.            கணினி இயங்குவதற்கு தேவையான இயக்க முறைமை (மென்பொருள்) தனியாக செலவிட்டு வாங்கிதான் நிறுவி இயக்க வேண்டியுள்ளது.

3.            ஒவ்வொரு உள்ளுறுப்பையும் தலைச்சிறந்ததாக தேடித்தேடி சேகரித்து ஒருங்கிணைத்து உருவாக்கும் தொகுப்பு கணினியின் உள்ளுறுப்புகளின் இயக்கத்தில் இவை ஒன்றுக்கொன்று முரண்பட வாய்ப்புள்ளது.

 

இரண்டிற்கும் உள்ள நன்மை தீமைகளை பற்றி தெரிந்து கொண்டோம். இப்போது ஒவ்வொரு உறுப்பாக எதனை வாங்குவது என காண்போம்.

1. கணித்திரை ( Monitor ) :             மேல் நாடுகளில் கணித்திரையின் முக்கிய பாகமான CRT tubesகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பயன்படுத்தி முடிந்தவுடன் புதியதாக மாற்றி பொருத்திவிடுவார்கள்.கயலான் கடைகளில் போடப்பட்ட  பழைய படக்குழாய்  (CRT Tube)களை நம்மை (இந்தியா)போன்ற ஏமாளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவார்கள். அழகிய வெளிப்புறத் தோற்றத்துடன் இந்த பழைய  படக்குழாய்  (CRT Tube)களை வைத்து புதிய கணினித்திரையென குறைந்த விலைக்கு  நம்முடைய தலையில் கட்டி விற்பனை செய்திடுவார்கள். இவைகள் அதிக கதிர்வீச்சு தன்மையும் உடலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால் பிரபல நிறுவனத்தின் கணினி திரையை மட்டும் கேட்டு வாங்குவது நல்லது. அதனுடன் Energy Star  மற்றும்  MPRIT  ஆகிய சான்றிதழ்களை சேர்த்து பெறுவது நம்முடைய குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை காக்கும் வழியாகும். படக்குழாயின் பின்புறம் உள்ள முகவரி தகட்டில் இந்த சான்றுகள் உள்ளதாவென சரிபாருங்கள்.தற்போது எல்சிடி கணினிதிரை கிடைப்பதால் அதனையே கொள்முதல் செய்திடுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

2. இயக்க முறைமைகள் (Operating System) : கணினியில் இருப்பது அனுமதி பெற்ற மென்பொருள்தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அவ்வாறில்லையெனில் கணினி இயக்கம் தடைபட்டு மீட்கப்படும்போது தரவுகளை மீட்டாக்கம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். விண்டோ இயக்க முறைமை யெனில்  <http://www.microsoft.com/genius/&gt; என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு நாம் பயன்படுத்தும்  மென்பொருள் அனுமதி பெறப்பட்டது என உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. நிலை வட்டு இயக்கி  (Hand disk drive) :பயன்படுத்தப்பட்ட / பழுதுப்பட்ட நிலை வட்டு இயக்ககத்தில்(Hand disk drive)¢ உள்ள தரவுகளை அனைத்தும் அழித்து நீக்கி புதியது போன்று வடிவமைத்து (format)  குறைந்த விலைக்கு தருவதாக நம்மிடம் விலை பேசுவார்கள். எச்சரிக்கையாக இருங்கள். உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட  / பழுதுப்பட்டதை சரி செய்து வெளியிடும் போது  repaired or republished  என்ற சான்றுடன் இருக்கிறதாவென சரிபார்த்து கொள்க.

4. மின் விநியோகம் (power supply): மின்விநியோக அமைபபே ஒரு கணினியின் உயிர் நாடியாகும்.அதனால் தரமற்ற மின்விநியோக அமைப்பை கொள்முதல் செய்ய வேண்டாம். மிக கவனமாக, சிறந்த தரமான , ERLT/EQDL ஆகிய சான்றளிக்கப்பட்டவைகளா என சரிபார்த்துதெரிவு செய்திடுக..

5. நினைவகம் (Memory) :பெயர் தெரியாத நிறுவனத்தின் நினைவகத்தை (Chips) பயன்படுத்தினால் அடிக்கடி கணினி தொங்கலாக நிற்பதற்கும,தரவுகள் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பிரபல நிறுவனமான  Kingstone, Transcard, Corasin, Samsung  போன்றவைகளின்  chipகள் தான் இது என சரிபார்த்து கொள்க.

6. விசைப்பலகை (Keyboard): பொறியியல் விசைப்பலகை (mechanical key board) மறறும் ஜவ்வு விசைப்பலகை(membarance key board) என இரண்டு வகையில் கிடைக்கின்றன. முதலாவாது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான விசையுடைய அதிக வாழ்நாள் உடையது ஆனால் விலை அதிகமானது. இரண்டாவது வகை மிகவும் விலைமலிவானது. பிளாஸ்டிக் உறைகளுக்கு இடையே உலோகத்தகடை வைத்து இயக்கப்படுகிறது. குறைந்த வாழ்நாள் உடையது. விசைப்பலகைகளில் ஒவ்வொன்றும் தனித்தனி விசையாக அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொள்க.

7. விற்பனைக்கு பிந்தைய சேவை  (After sales services): விற்பனைக்கு பிந்தைய சேவையாக மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு குறைந்த கட்டணத்தில் கணினியின் ஆண்டு பராமரிப்பு பணி செய்வதாக வாக்களிப்பார்கள். ஆனால் இவர்கள் நல்ல கல்வியறிவு பெற்ற  திறமை வாய்ந்த தொழில்நுட்ப பொறியாளர்களை வைத்திருக்க மாட்டார்கள். அதனால்  திறமையற்ற அனுபவமற்ற பொறியாளர்கள் பராமரிப்பு பணியின்போது  நம்முடைய தரமான CPU, HDD, Monitor  போன்றவைகளை எடுத்து கொண்டு தரமற்ற உறுப்புகளை மாற்றியமைத்திட வாய்ப்புள்ளது. அதனால் நம்பகமான நல்ல நிறுவனத்தில் மட்டும்  ஆண்டு பராமரிப்பு பணியினை(Annual Maintenance Contract)யை கொடுத்திடுக.

மேலே கூறிய ஒரு சில கருத்துகளை கணினி வாங்கும்போது  கவனத்தில் கொண்டு பண இழப்பை தவிர்த்திடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: