அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-20-புதியவர்கள்கூட அக்சஸில் குறுமங்களை(Macros) உருவாக்கலாம்

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-20-புதியவர்கள்கூட அக்சஸில் குறுமங்களை(Macros) உருவாக்கலாம் 

அறிந்துகொள்வோம் அக்சஸ்-2003 என்ற கடந்த இருபது தொடர்களில் தரவுகளை கணினியின் நினைவகத்தில் தேக்கிவைக்கும் அட்டவணையை எவ்வாறு(படம்-1) உருவாக்குவது?

படம்-1

 அந்த தரவுகளை ஒரு அட்டவணையில் உள்ளீடு செய்ய பயன்படும் படிவங்களை எவ்வாறு(படம்-2) உருவாக்குவது?

படம்-2

 அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒருஅட்டவணையில் உள்ளிருத்திவைக்கபட்ட தரவுகளை நாம்விரும்பியவாறு காண்பதற்கு உதவிடும் ஒரு வினாவை எவ்வாறு(படம்-3) உருவாக்குவது?

படம்-3

  பின்னர் அவ்வாறு  ஒருஅட்டவணையில் உள்ளிருத்திவைக்கபட்ட தரவுகளை பருநிலையில் பார்வையிட்டு அச்சிடபயன்படும் ஒரு அறிக்கையை எவ்வாறு(படம்-4) உருவாக்குவது? என அறிந்துகொண்டோம்

படம்-4

 மேலும் பயிற்சியற்ற புதியவர்கள்கூட இதிலுள்ள வழிகாட்டியினுடைய உதவியுடன் இவைகளை எவ்வாறு உருவாக்குவது? என தெரிந்துகொண்டோம் இதனை தொடர்ந்து அக்சஸில் குறுமங்களை எவ்வாறு உருவாக்குவது? என இந்த தொடரில் அறிந்துகொள்வோம்

ஒருநிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்குமேற்பட்ட ஊழியர்களின் விவரங்களை அக்சஸினுடைய அட்டவணையொன்றில் உள்ளீடு செய்து கணினியின் நினைவ கத்தில் தேக்கிவைத்திருப்பதாக கொள்வோம் மூன்று மாதத்திற்கொருமுறை விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு பஞ்சபடி உயர்வை இவ்வூழியர்களுக்கு அளித்திடும்போது  ஒவ்வொருவருக்கும் இந்த பஞ்சபடிஉயர்வு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆவணங்களிலுள்ள ஒவ்வொருவருடைய தரவுகளுக்கும் சென்று திருத்தம் செய்வதுஎன்பது செய்தசெயலையே திரும்பதிரும்ப  செய்யும் இயந்திரத்தனமான ஒரு சலிப்படையசெய்யும் செயலாகும்

அதற்குபதிலாக இதனை செயற்படுத்திடுவதற்காக ஒரு சிறிய நிரல்தொடரை எழுதி தேக்கி வைத்துகொண்டு தேவைப்படும்போது மட்டும் ஒருசில விசைகளை அழுத்துவதன்  மூலம் இவ்வூழியர்களின் அனைவருடைய பஞ்சபடிஉயர்வுக்கான தரவுகளை மட்டும் மாறுதல்செய்தால் மிகபயனுள்ளதாக இருக்குமல்லவா இதனால் மனிதஉழைப்பும் காலவிரையமும் தவிர்க்கபடுகின்றது

இதற்காக பயன்படுவதுதான் குறுமங்கள் எனஅழைக்கபடும் மேக்ரோக்கள் ஆகும் இது திரும்பதிரும்ப செய்யபடும் செயல்களை ஒருசிலவிசைகளை அழுத்துவதன் மூலம் செயற்படுத்திகொள்ள பயன்படுகின்றது

ஆரம்பநிலை அக்சஸின் பயனாளர்கள்கூட இந்த குறுமங்களை மிக எளிதாக பயன்படுத்தி தம்முடைய தேவையை நிறைவுசெய்து கொள்ளமுடியும் இது படிவங்கள் அறிக்கைகள்ஆகியவற்றின் உடனிணைந்த நிகழ்வுகளின் உதவியால் தரவுகளை அனுகிட பயன்படுகின்றது இந்த குறுமங்கள் மிகவலுவானதாக இருந்தாலும் ஒருசிலவரண்முறைகளுக்குமேல் இதனை பயன்படுத்தி செயல்படுத்த முடியாது

அக்சஸில் உள்ள மேக்ரோவின் வகைகள்

அக்சஸில் செயல்படுத்தபடும் மேக்ரோவை 1.தானியங்கி திறவு குறுமம் , 2.தானியங்கி இயக்க குறுமம் என இரண்டுவகையாக பிரிக்கலாம்

1.தானியங்கி திறவு குறுமம் இந்த வகையில் ஒரு விசைப்பலகையிலுள்ள குறிப்பிட்ட விசையை அழுத்துவதன் மூலம் அதனுடன் இணைந்துள்ள செயல்களை செய்துமுடிக்கமுடியும் படம்-6-ல் உள்ளவாறு குறுமத்திற்கு பெயரிட்டு அதை செயல்படுத்துவதால் ஏற்படும் இறுதிவிளைவு என்னவாக இருக்கும் என ஒவ்வொரு நெடுவரிசையிலும் உள்ளீடுசெய்து செயல்படுத்திகொள்க

2.தானியங்கி இயக்க குறுமம்இந்தவகையில் ஒரு தரவுதளத்தை திறந்தவுடன் குறிப்பிட்ட கோப்பினை திறத்தல்,கட்டளைசட்டத்திலுள்ள பட்டியலை திறத்தல் என்பன போன்ற செயல்களை செயற்படுத்த முடியும் இவ்வாறான தானியங்கி செயல்களை விபிஏசெயல்முறை குறிமுறைகளை எழுதுவதன் மூலமும் செயற்படுத்திட முடியும்

அனுபவம் பெற்றவர்கள் மட்டுமேஇந்த குறிமுறைகளை எழுதமுடியும் நம்மைபோன்ற அனுபவமற்ற புதியவர்களால் அவ்வாறு முடியாது என ஐயமும் பயமும் கொள்ளவேண்டாம்  நம்மைபோன்ற அனுபவமற்ற புதியவர்களால்கூட இந்த குறுமங்களை விபிஏவாக அக்சஸ்-2003-ல் உருமாற்றம் செய்யமுடியும் என்ற செய்தியை மனதில் இருத்தி அச்சத்தை தவிர்த்திடுக    

இந்நிலையில் அக்சஸில் எப்போது குறுமங்களை பயன்படுத்திகொள்வது எப்போது விபிஏவை பயன்படுத்துவது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பாகும்

படிவங்களை திறத்தல் ,மூடுதல்,கோப்பினை திறத்தல்,மூடுதல் என்பன போன்ற சிறுசிறு செயல்களுக்கு இந்த குறுமங்களை பயன்படுத்தலாம் இந்த செயல்கள் குறிப்பிட்ட வரண்முறைகளுக்கமேல் செல்லும்போது குறுமங்களை செயல்படுத்த முடியாது அந்நிலையில் விபிஏவை பயன்படுத்தலாம்

ஒரு கோப்பிலுள்ள ஆவணங்களை ஒவ்வொன்றாக மாறுதல் செய்வதற்கு குறுமங்களை பயன்படுத்தி கொள்க.அதேசெயலை ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட செயலிமூலம் செயல்படுத்திட விபிஏவை பயன் படுத்திகொள்க.

மேலும் குறுமங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் பிழைகளை திருத்தம்செய்து மீண்டும் குறுமங்களை செயல்படுத்திடமுடியாது ஆனால் விபிஏவில் குறிமுறைகளை பயன்படுத்தும்போது ஏற்படும் பிழைகளை அவ்வப்போது உடனுக்குடன் சரிசெய்து செயல்படுத்திகொள்ளமுடியும்

அதுமட்டுமல்லாது குறுமங்களைவிட விபிஏவை மிக விரைவாக  செயல்படுத்திட முடியும்

புதியவர்கள் மேக்ரோவை உருவாக்கிடும் வழிமுறை

1.முதலில் தேவையான தரவுதளத்தினை திறந்து கொள்க

படம்-5

 2.உடன் தோன்றும் தரவுதள சாளரத்தின் (படம்-5) இடதுபுறமுள்ளபொருட்களில்(object) குறுமம் (macro)என்பதை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள புதியது(new) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.பின்னர் தோன்றிடும் மேக்ரோ எனும் சாளரத்தில் முதல் செயல்கிடைவரிசையை தெரிவு செய்து சொடுக்கி அதில் Msg  என உள்ளீடுசெய்து தாவல்(Tab) விசையை அழுத்துக பிறகு தோன்றிடும் Msg என்ற செய்திபெட்டியை தெரிவுசெய்துகொள்க

4அதன் பின்னர் F6  என்ற செயலி விசையை அழுத்தியபின் open the table contacnts என தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக.

5. பின்னர் இரண்டாவது செயல்கிடைவரிசையை தெரிவு செய்து சொடுக்குக

6.அதன்பின்னர் மேலே கட்டளைசட்டத்திலுள்ள Window என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Window என்ற பட்டியில் Tile Horizontally என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்6-ல் உள்ளவாறு இரண்டு சாளரங்கள் ஒன்றன்கீழ்ஒன்றாக தோன்றும் அவற்றை தேவையான அளவிற்கு சரிசெய்து கொள்க

7. பின்னர் தரவுதள சாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் அட்டவணை என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

 படம்-6

8. பின்னர்பட்டியலாகவுள்ள அட்டவணைகளின் வரிசையில் tblcontactsஎன்ற அட்டவணையை தெரிவுசெய்து இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து இரண்டாவது வரிசை மேக்ரோவில் விடுக.உடன் Action என்ற பகுதியில் OpenTableஎன்ற கட்டளை தானாகவே உருவாகிவிடும்

9. பிறகு மேலே கட்டளைசட்டத்திலுள்ள Window=>Cascade=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தரவுதள சாளரத்தை தேவையான அளவிற்கு சரிசெய்து கொள்க

படம்-7

10. அதன்பின்னர் படம்-7-ல் உள்ளவாறுsave as  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் உருவாக்கிய மேக்ரோவிற்கு ஒரு பெயரிட்டு சேமித்துகொள்க

 படம்-8

11.பின்னர் தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில்  படிவம்(form) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் வாடிக்கையாளர் tblcontacts என்ற அட்டவணையை தெரிவுசெய்துகொண்டு கருவிகளின்பெட்டியில் design என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக

12 இந்த கருவிகளின்பெட்டி திரையில் இல்லையெனில் மேலே கட்டளைபட்டையில் உள்ள view => toolbar=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி திரையில் தோன்றிடுமாரு செய்துகொள்க

13.இதிலுள்ள controlwizard என்பது தெரிவுசெய்யபடவில்லை என்பதை உறுதிசெய்து கொள்க. பின்னர் இந்த கருவிகளின் பட்டையில் commandbutton என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் +என்றவாறு குறியும் ஒருசதுரமும் இடம்சுட்டி இருக்கும் இடத்தில் பிரதிபலிக்கும்

14. பின்னர் இதனைகொண்டுtblcontactid என்ற உரைபெட்டிக்கு வலதுபுறம் அதே அளவிற்கு செவ்வக பொத்தான் ஒன்றை வரைந்து கொள்க.

15. அதன்பின்னர் இதற்கு Open tblcontacts என்ற பெயரை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

16பிறகு இதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் குறுக்குவழிபட்டியில் Propeties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-9-ல் உள்ளவாறு Propeties என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்

17. அதில் other என்பதை தெரிவுசெய்து சொடுக்கி  cmd open tblcontact என்ற பெயராக இந்த பண்பியல்பிற்கு ஒரு பெயரினை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

18.பின்னர் இதேஉரையாடல் பெட்டியில் Event என்ற தாவியின் திரையை தோன்றசெய்து அதில் On Click என்ற செயலை தெரிவுசெய்துகொள்க

19. அதன் பின்னர் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை தோன்றசெய்து அதில் Mac open tbl contact என்பதை தெரிவுசெய்து கொள்க

படம்-9

20. பின்னர் இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை மூடி இந்த படிவத்தை சேமித்துகொள்க

21 அதன்பின்னர் நாம் உருவாக்கிய Opentblcontact என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது

தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள  பொருட்களில் Macro என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Macro என்ற திரையில் Macroopentbl என்பதை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளைசட்டத்திலுள்ள run என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கி இந்த படிவத்தை திறப்பதற்கான குறுமத்தை செயல்படுத்துக

படம்-10

22. உடன் படம்-11-ல் உள்ளவாறு Open tbl contactஎன்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-11

 ஒரு மேக்கரோவை எவ்வாறு விபிஏவாக உருமாற்றுவது மேலேகூறியவாறு ஒருமேக்ரோவை உருவாக்கியபின் அதனை எவ்வாறு ஒருவிபிஏவாக உருமாற்றம் செய்வது என இப்போது காண்போம்

படம்-12

1.படம்-12-ல் உள்ளவாறு தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் Macro என்பதை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள tools=>Macro=> convert Macro  to Visual basic =>என்றவாரு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக

2. உடன் convert macro: macro open cont…என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதிலுள்ள convert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.உடன் படம்-13-ல் உள்ளவாறு convert macros to visual basic என்ற சிறுசெய்திபெட்டியுடன் விபிஏ சாளரம் ஒன்று நிரல் தொடருடன் திரையில் தோன்றிடும்

4.பின்னர் இதில் தோன்றிடும் பிழைகையாளும் பகுதியையும், குறுமங்களின் குறிப்புரைகளையும் ஏற்றுகொள்க உடன் நாம் முன்பு உருவாக்கிய மேக்ரோவானது விபிஏகுறிமுறையாக உருமாற்றம் செய்யபட்டு படம்-13-ல் உள்ளவாறுமாறிஇருக்கும்

படம்-13

நடப்பு ஆவணத்தை அச்சிடுவதற்கான மேக்ரோஒன்றை எவ்வாறு உருவாக்குவது  1.முதலில் தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் Macro என்பதை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள  New என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

2.உடன் படம்-14-ல் விரியும் Macro என்ற திரையில் கீழிறங்கு பட்டியை விரியசெய்து அதில் Run command என்ற முதல்கிடைவரிசையை தெரிவு செய்து கொள்க இந்த கட்டளை சொல்லை மிகவிரைவாக தேடுவதற்கு r என்ற எழுத்தை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் மூலமும் தேடலாம்

3.பின்னர் F6என்ற விசையை அழுத்தி Actionargument என்ற பகுதியிலுள்ள Run Command என்ற செயலி உள்ள பகுதிக்கு செல்க அதிலுள்ள கீழிறங்கு கட்டளை கூற்றுகளின் பட்டியலை விரியச்செய்து அதில் Select Record என்ற கட்டளை கூற்றை தெரிவுசெய்துகொள்க

4. பின்னர் இரண்டாவது கிடைவரிசைக்கு வந்து அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரிய செய்துஅதில் P என்ற எழுத்தை உள்ளீடுசெய்க உடன் தோன்றிடும் திரையில் Print out என்பதை தெரிவுசெய்துகொள்க

5. .பின்னர் F6என்ற விசையை அழுத்தி Actionargument என்ற பகுதியிலுள்ள printoutaction என்ற செயலிஉள்ள பகுதிக்கு செல்க அங்கு என்ற printrangeargument கட்டளைகூற்றிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்துஅதில் SelectionAll என்பதில் ஒன்றை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள  file=>save as=.>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இந்த மேக்ரோவிற்கு macprint recordஎன்றவாறுஒருபெயரிட்டு சேமித்துகொள்க

படம்-14

6. பின்னர் படம்-15-ல்உள்ளவாறு tblcontactsஎன்ற படிவத்தை படிவவடிவமைப்பு காட்சிதிரையில்திறந்துகொள்க அதில் opentblcontacts என்ற பொத்தானிற்கு கீழே மற்றொரு பொத்தானை உருவாக்குக  அதற்கு print recordஎன்று பெயரிடுக 7.இதனுடைய பண்பியல்பு உரையாடல்  பெட்டியை அனுகிடுவதற்கு விசை பலகையிலுள்ள  F4என்ற செயலிவிசையை அழுத்துக

8.பின்னர் தோன்றிடும் பண்பியல்பு சாளரத்தில் Other என்பதை தெரிவுசெய்து இந்த கட்டளைக்கு mac print out என்ற பெயரை உள்ளீடு செய்க

9.பின்னர் Event என்ற தாவியின் திரையை தோன்றசெய்து அதில் On click என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

10.உடன் விரியும் கீழிறங்கு பட்டியில் mac print recordஎன்பதை தெரிவுசெய்துகொள்க

படம்-15

11.பின்னர் இந்த பண்பியல்பு பெட்டியை மூடிஇந்த படிவத்தை சேமித்துகொள்க 12.மீண்டும் இந்த படிவத்தைதிறந்து Print என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நாம் உருவாக்கிய மேக்ரோவானது இந்த படிவத்தை  அச்சிட்டுவிடும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: