இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட

ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை ஜிமெயிலில் அறிமுக படுத்துவதால் நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.  நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என்றும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் என்றும் விரும்பும்  நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது பயனித்து கொண்டிருப்போம் நம்முடைய மடிக்கணினியிலும் இணைய இணைப்பு இருக்காது ஆயினும் உடனடியாக  மின்னஞ்சலை கையாளவேண்டும் என எண்ணிடுவோம்  அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்காக இணைய இணைப்பில்லாத போதும் மின்னஞ்சலை கையாளுவதற்கான கூகுள் ஒரு அருமையான வசதியை வைத்துள்ளது.
இதற்காக நம்முடைய கணினியில்  கூகுள் குரோம் உலாவியை  பயன்படுத்திடுக.  அடுத்து https://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk என்ற தளத்திற்கு சென்று  Offline Google Mail என்ற நீட்சியை அந்த  உலாவியில் நிறுவுகை செய்திடுக.

1.

உடன் உலாவியில் ஒரு புதிய தாவி(tab) உருவாகும் அல்லது  முயற்சிசெய்து புதிய தாவி (New tab) ஒன்றை உருவாக்கிடுக.

பின்னர் தற்பொழுது நாம் இணைத்த Offline Google Mail என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக.

உடன்தோன்றிடும் திரையில் Allow Offline Mail என்ற வாய்ப்பை தேர்வு செய்திடுக.

2.

 இதே திரையின் கீழ் பகுதியில் நம்முடைய மின்னஞ்சலின் பெயரை சுட்டிகாட்டிடும் அதனை தேர்வு செய்து கொண்டு Continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியானது திரையில் தோன்றி நமக்கு இதுவரையிலும்   வந்த அனைத்து மின்னஞ்சல்களையும் பட்டியலாக  காட்டும்.

3

இதில் வழக்கமாக மின்னஞ்சல்களை கையாளுவதுபோன்று அனைத்து பணிகளையும் செயல்படுத்தலாம் மேலும் இதிலுள்ள Menu என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் பின்வரும் படத்திலுள்ளவாறு இணைய இணைப்பில்லாதபோது கூட  மேலும் ஏராளமான பணிகளை ஆற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது.

4

இவ்வாறு எண்ணற்ற வசதிகளையும்  இணைய இணைப்பு இல்லாமேலேயே நம்முடைய ஜிமெயில் கணக்கை நம்முடைய கணினியை பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும்.

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. க‌.அசோக்குமார்
  அக் 23, 2011 @ 19:28:56

  நல்லதொரு பதிவு. அவசியமான பதிவு. வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. Trackback: இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல் « தமிழ் இணைய நண்பன்
 3. abdus samadh
  அக் 25, 2011 @ 01:48:28

  thanks for d info

  மறுமொழி

 4. surendra
  அக் 30, 2011 @ 04:08:07

  migavum payanilla padhivu vaazhththukkal nandri

  மறுமொழி

 5. sumah
  ஜன 21, 2012 @ 20:10:40

  5.கண்டிப்பா இது போன்ற தகவல்களை எமக்கு என்னும் தரவேண்டும் என்று கூறி வாழ்த்தும் sumah,,,,,,,,,,,,,,,

  மறுமொழி

 6. sumah
  ஜன 21, 2012 @ 20:11:23

  கண்டிப்பா இது போன்ற தகவல்களை எமக்கு என்னும் தரவேண்டும் என்று கூறி வாழ்த்தும் sumah,,,,,,,,,,,,,,,

  மறுமொழி

 7. sundar.c
  நவ் 04, 2012 @ 05:00:41

  Useful msg..ya..thank u….

  மறுமொழி

 8. செ சதிஷ் குமார்
  ஆக 11, 2018 @ 03:10:43

  ஐயா எனக்கு
  Adobe premier pro புத்தகம் PDF ல் இருந்தால் அனுப்பி வையுங்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: