ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொருவகையான கணக்குபதிவியலுக்கான மென்பொருளை பயன்படுத்தி வருவார்கள் அதனால் நிறுமவிவகாரத்துறை அமைச்சகத்தில்(Ministry of Corporate Affairs(MCA)) தத்தமது ஆண்டிறுதி கணக்குகளையும் அறிக்கைகளையும் இந்நிறுவனங்களை மின்ஆவணமாக சமர்ப்பிக்குமாறு ஆணையிடும்போது இவர்கள் வெவ்வேறுவகையில் சமர்ப்பித்துவிடுவார்கள் அதனால் இந்த நிறுவனங்களின் ஆயிரகணக்கான மின் ஆவணங்களை இந்த அமைச்சகத்தால் ஆய்வுசெய்வதில் சிரமம் ஏற்படும் இதனைதவிர்த்து அனைத்து நிறுவனங்களும் ஒரேமாதிரியான ஆவணமாக சமர்ப்பிப்பதற்காக ஏற்படுத்தபட்டதுதான இந்த எக்ஸ்பிஆர்எல் என சுருக்கமாக அழைக்கபடும் நீட்டிக்கபட்ட வியாபாரஅறிக்கை மொழிeXtensible Business Reporting Language (XBRL) யாகும்
ஒரு ஆண்டிற்கு ரூபாய் நூறு கோடி விற்பனை வருமானம் அல்லது ரூபாய் ஐந்து கோடி முதலீடு உடைய அனைத்து நிறுவனங்களும் 31.03.2011 முடிய உள்ள ஆண்டிறுதி கணக்குகளையும் அறிக்கைகளையும் 30.09.2011க்குள்ளும் அதன்பின் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த ஆறுமாதத்திற்குள்ளும் இந்த எக்ஸ்பிஆர்எல் ஆவணமாக மட்டுமே இணையத்தின் மூலம் சமர்ப்பிக்கவேண்டும் என இந்திய அரசின் நிறுமவிவகாரத்துறை அமைச்சகம்(Ministry of Corporate Affairs(MCA)) உத்திரவிட்டுள்ளது
இந்த எக்ஸ்பிஆர்எல் ஆவணங்களை இணையத்தின்மூலம் சமர்ப்பித்த லுக்கான படிமுறைகள் பின்வருமாறு
படிமுறை1.எக்ஸ்பிஆர்எல் சான்றாவணங்களை உருவாக்குதல்
படிமுறை2 எக்ஸ்பிஆர்எல் ஏற்புடையதாகஆக்குதல் கருவியை பதிவிறக்கம் செய்தல்
படிமுறை3 ஏற்புடையதாகஆக்குதல் கருவிக்குள் சான்றாவணங்களை மேலேற்றுதல்
படிமுறை4 சான்றாவணங்களைஏற்புடையதாகஆக்குதல்
படிமுறை5சான்றாவணங்களை சமர்ப்பித்தலுக்கு முந்தைய ஆய்வுசெய்தல்
படிமுறை6 சான்றாவணங்களின் உள்ளடக்கங்கள் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கையடக்க ஆவணமாக உருமாற்றுதல் (pdf)
படிமுறை7 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களுடன் சான்றாவணங்களை இணைத்தல்
படிமுறை8சான்றாவணங்களுடன் இணைக்கபட்ட 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களை நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் சமர்ப்பித்தல்
படிமுறை1.எக்ஸ்பிஆர்எல் சான்றாவணங்களை உருவாக்குதல்
1.நிதிநிலைஅறிக்கைகளின் உறுப்புகளுக்கு சமமான ஒருங்குகுறி பெயர்களுக்கு(Taxonomy) பொருத்தமாக ஒதுக்கீடுசெய்தல்
ஒவ்வொருநிறுவனமும் தம்முடைய எக்ஸ்பிஆர்எல் ஆவணங்களை தாமேமுயன்று உருவாக்கி கொள்ளலாம் அல்லது தம்முடைய நிறுவனத்தின் நிதியறிக்கைகளை எக்ஸ்பிஆர்எல் ஆவணங்களாக உருமாற்றம் செய்வதற்காக வேறுஒருநபரை பயன்படுத்தி கொள்ளலாம்
சான்றாவனமாக செய்வதற்காக முதலில் நிறுவனத்தின் பராமரிக்கபடும் பல்வேறு தலைப்பிலுள்ள கணக்கின் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் சமமான நிறுமவிவகாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடபட்ட ஒருங்குகுறி பெயர்களுக்கு ஒதுக்கீடுசெய்து உருமாற்றுவதற்கான குறியீடாக்குதல் இவ்வாறாக கணக்குதகவலை ஒருங்குகுறி பெயருக்கு(Taxonomy) சமமாக ஒதுக்கீடுசெய்து உருமாற்றம் செய்வதால் ஒருநிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை எளிதாக எக்ஸ்பிஆர்எல் படிவமாக உருமாற்றமுடியும்
பின்னர் நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்க உறுப்புகளின் பெயர்கள் ஒருங்குகுறி பெயருக்கு(Taxonomy) மிகச்சரியாக பொருத்தமாகஇருப்பதை ஒதுக்கீடுசெய்க அவ்வாறு ஒப்பீடுசெய்யும்போது ஏதேனும் உறுப்புகள் பொருத்தமாக இல்லையெனில் ஏறத்தாழ பொருத்தமாக இருக்கின்றதாவென சரிபார்த்து அதற்கேற்றவாறு ஒதுக்கீடுசெய்க அல்லது இதர இனங்களின் கீழ் ஒதுக்கீடுசெய்து ஒரு அடிக்குறிப்பில் விவரத்தை இதற்காக குறிப்பிட்டுவிடுக. இதனை ஒருங்குகுறிபெயரிலும்(Taxonomy) விவரமாக குறியீடாக்கிவிடுக.
2.நிறுவனத்தின் இருப்புநிலைகுறிப்பிற்கும் இலாபநட்ட கணக்கிற்குமான சான்றாவனத்தை உருவாக்குதல்
நிறுமவிவகாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடபட்ட ஒருங்குகுறிபெயராக(Taxonomy) நிதிநிலை அறிக்கையின் உறுப்பு பெயர்களை பொருத்தமாக ஒதுக்கீடு செய்யபட்டபின்னர் அதிலிருந்து நிதிநிலை வியாபார அறிக்கைகளடங்கியஎக்ஸ்எம்எல் கோப்பில் சானறாவணமாக உருவாக்க வேண்டும் இந்நிலையில் ஒருங்குகுறி பெயருக்கு(Taxonomy) விரிவாக்கம் எதுவும் அனுமதிக்கபடமாட்டாது என்பதை கவணத்தில் கொள்க
3.பின்வரும் தனித்தனியான சான்றாவணங்கள் உருவாக்கபடவேண்டும்
1.ஒவ்வொரு நிறுவனத்தின் தனிப்பட்ட இருப்புநிலை குறிப்பு
2.ஒவ்வொரு நிறுவனத்தின் தனிப்பட்ட இலாபநட்டகணக்கு
3.அந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இருப்புநிலை குறிப்பு
4.அந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இலாபநட்டகணக்கு
ஒருசான்றாவனத்தின் நிதிநிலைதகவல்கள் நடப்பாண்டையும் முந்தைய ஆண்டையும குறிப்பிடுமாறு உருவாக்கபடவேண்டும் ஒருநிறுவனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட துனைநிறுவனங்கள் இருந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த அறிக்கைகள் உருவாக்கபடவேண்டும் பின்னர் சான்றாவணங்கள் பொருத்தாமாக உள்ளதாவென உறுதிசெய்துகொள்க
4.சான்றாவணத்திற்கான விளக்ககுறிப்பு வழங்குதல்
தொழில்நுட்ப விளக்ககுறிப்புகள்
http://www.mca.gov.in/XBRL/2011/08/27/Taxonomy/CnI/ci/in-gaap-ci-2011-03-31.xsd.
ஆகிய இரு இணைய தளங்களில் உள்ளவாறு தொழில்நுட்ப விளக்ககுறிப்புகளை பின்பற்றுக
எக்ஸ்பிஆர்எல் உள்ளடக்கத்தில் கண்டுள்ளவாறு சான்றாவண உரைவிவர தகவல்களை வழங்கிடுக
வியாபார விளக்ககுறிப்புகள்
www.mca.gov.in/XBRL என்ற நிறுமவிவகாரத்துறைஅமைச்சக இணையதளத்தில் குறிப்பிடபட்டுள்ள விவரங்கள் தவறாமல் சரியாக வழங்கபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொள்க
படிமுறை2 எக்ஸ்பிஆர்எல் ஏற்புடையதாகஆக்குதல் கருவியை பதிவிறக்கம் செய்தல்
இதன்பின்னர் நாம் உருவாக்கிய ஒருநிறுவனத்தின் இலாபநட்ட கணக்கு இருப்பு நிலைகுறிப்பு ஆகிய சான்றாவனங்கள் சரியாக உள்ளதாவென பரிசோதிப்பதற்காக www.mca.gov.in/XBRL என்ற நிறுமவிவகாரத்துறைஅமைச்சக இணையதளத்திலிருந்து XBRL validation tool என்ற கருவியை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்க
படிமுறை3 ஏற்புடையதாகஆக்குதல் கருவிக்குள் சான்றாவணங்களை மேலேற்றுதல்
பிறகு கணினியில் நிறுவபட்ட இந்த XBRL validation tool என்ற கருவியைஇயங்கசெய்து அதன் கட்டளைபட்டியில் open என்ற கட்டளை செயற்படுத்தி நாம் உருவாக்கிய சான்றாவணத்தை கணினித்திரையில் திறந்திடுக
படிமுறை4 சான்றாவணங்களைஏற்புடையதாகஆக்குதல்
1.அடுத்ததாக சமீபத்திய மிகச்சரியான நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட ஒருங்குகுறிபெயர்களுக்கு(taxonomy) ஏற்புடையதாக(validation) நாம் உருவாக்கிய சான்றாவணம் உள்ளதாவென சரிபார்த்திடுக
2.ஒரு ஆவணத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டிய நிதிநிலஅறிக்கையின் தகவல்உறுப்புகள் அனைத்தும் நம்முடைய சான்றாவணத்தில் உள்ளதாவென சரபார்த்திடுக
3.நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட மற்ற வியார விதிகள் பின்பற்றுட்டுள்ளதாவென சரிபார்த்திடுக
4.மற்ற ஏற்புத்தகுதிகள்(Validation) ஒருங்குகுறிபெயர்களுக்கு(Taxonomy0 ஏற்றவாறு உள்ளதாவென சரிபார்த்திடுக
இந்த கருவியை கொண்டு மேற்கண்ட ஆய்வைசெய்திடும்போது ஏற்படும் பிழைகளை அவ்வப்போது சரிசெய்துவிடுக
படிமுறை5சான்றாவணங்களை சமர்ப்பித்தலுக்கு முந்தைய ஆய்வுசெய்தல்
XBRL validation tool என்ற இந்த கருவியை கொண்டு மீண்டும் மற்றொருமுறை மேற்கண்ட ஏற்புடையதாக்குதல் ஆய்வை இணைய இணைப்பில் நேரடியாக நிறுமவிவகாரத்துறை அமைச்சக இணையதளத்துடன் இணைத்து செய்திடுக
படிமுறை6 சான்றாவணங்களின் உள்ளடக்கங்கள் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கையடக்க ஆவணமாக(pdf) உருமாற்றுதல்
(இந்த படிமுறை சான்றாவணத்தில் உள்ளீடு செய்யபட்ட உரை தகவல்கள் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்திட உதவுகின்றது)
இதன்பின்னர் XBRL validation tool என்ற கருவியிலுள்ளExport to pdf என்ற கட்டளையை பயன்படுத்தி இந்த ஏற்புடையதாக்கபட்ட சானறாவணத்தை எங்கும் எடுத்துசென்று கையாளதக்கவகையில் கையடக்கஆவணமாக (pdf) உருமாற்றம் செய்துகொள்க
இதன்மூலம் நாம்உருவாக்கிய சான்றாவணம் ,உரைத்தகவல்கள் சரியானதுதானா என நம்முடைய நிறுவனத்தின் நிதிநிலைஅறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்திட வசதியாக இருக்கும்
படிமுறை7 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களுடன் சான்றாவணங்களை இணைத்தல்
பின்னர் நிறுவனத்தின் இருப்புநிலைகுறிப்பிற்கு நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட 23AC-XBRL என்ற படிவத்தையும் இலாப நட்ட கணக்கிற்கு நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட 23ACA-XBRL என்ற படிவத்தையும் இந்த அமைச்சகத்தின் www.mca.gov.in/XBRL என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து சரியாக பூர்த்திசெய்துகொள்க தனித்தனிசான்றாவணம் எனில் இந்த படிவங்கள் தனித்தனியாகவும் பின்னர் ஒருங்கிணைந்ததையும் பூர்த்தி செய்தபின்னர் ஏற்புடையதாக்கிய சான்றாவணத்துடன் இதில் கையொப்பம் சேர்த்து இதனை இணைத்துகொள்க
படிமுறை8சான்றாவணங்களுடன் இணைக்கபட்ட 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களை நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் சமர்ப்பித்தல்
சான்றாவணங்களுடன் இணைக்கபட்ட 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய படிவங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதென உறுதிசெய்துகொண்டு www.mca.gov.in/XBRL என்ற நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் இதனை பதிவேற்றம் செய்திடுக
இதன்பின்னர் நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA) சான்றளிக்கபட்ட நகல்கள் நாம் படிக்கும் வகையில் உருமாற்றம் செய்யபட்டு www.mca.gov.in/XBRL என்ற நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் பிரதிபலிக்கும்தயாராக இருக்கும்