தொகுப்புக்காக விண்டோ(window)

விண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக

இப்போது கணினியை பயன்படுத்தும் எவரும் விண்டோ7, விண்டோ 7 என்றே முனுமுனுக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புதிய இயக்க அமைவான இந்த விண்டோ 7ஐ அவ்வளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டுமா? இப்போது தேவையா? என்றவாறு கேட்கின்றனர், அவர்களுக்காக புதிய வசதிகள் பல இந்த விண்டோ7-ல் இருந்தாலும் பணம் மேலும் செலவிடாமல் தற்போது இருக்கின்ற விண்டோ எக்ஸ்பி என்ற இயக்கமுறையை(Operating System ) இளமைத்துடிப்புடன் எவ்வாறு வைத்து கொள்வது என இப்போது காண்போம்.

 Auto Upgrade ஐ தவிர்ப்பதற்காக: எந்த ஒரு பயன்பாட்டு மென் பொருளையும் தொடர்ந்து அவ்வப்போது தானாகவே நிகழ்நிலைபடுத்தி (upgrage latest version ) கொள்ளும்படி வைத்திடுமாறு நமக்கு கூறுவார்கள் இவ்வாறு மென்பொருள் மட்டும் நிகழ்நிலைபடுத்தி(upgrade) கொண்டே இருந்து வன்பொருளை அப்படியே மாறாமல் வைத்து கொண்டு இருந்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தியியங்காமல் ஒரு நிலையில் மாற்றப்படாமல் உள்ள வன்பொருட்கள் இயங்காமல் முடக்கடி செய்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக மென்பொருட்கள் தானாகவே அவ்வபோது நிகழ்நிலை படுத்துதலை உடனடியாக முடக்கம் (disable) செய்யுங்கள். உதாரணமாக Adobe reader என்பதை தானாக update செய்வதை முடக்கம் செய்ய இதனுடைய சாளரத்தின் கட்டளைப்பட்டியில் உள்ள Edit என்ற கட்டளையை தெரிவு செய்க. உடன் தோன்றும் பட்டியில் preference என்பதையும் பின்னர் தோன்றும் சிறு பட்டியில் upadte என்பதையும் தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் check for critical update என்பதன் கீழுள்ள don’t download or install automatically update என்பதை தெரிவு செய்க

  நாம் இந்த பயன்பாடுகளை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட பிரச்சனை ஏதாவது எதிர்கொண்டால் மட்டும் இவைகளை upgrade செய்தால் போதும். அல்லது நமக்கு தேவையான போது மட்டும் இந்த பயன்பாட்டில் உள்ளபுதிய வசதிகளை upgrade செய்தால் போதும். இவ்வாறான முடிவற்ற upgrade ஐ முடக்குவதற்காக start up control panel என்ற இலவச கருவிகள் பயன்படுகின்றன. (www.mlin.net/StartupCPL.shtml )

Swap செய்வதற்காக : சாளர இயக்க அமைவானது வன்தட்டில் ஒரு பகுதி நினைவகத்தை மெய்நிகர் நினைவகமாக (virtual memory) ( இந்த பகுதியை swap file அல்லது page file என அழைப்பர்) அதாவது ரேமி(RAM) ன் மற்றொரு துணை நினைவகம்போன்று பயன்படுத்தி கொள்கிறது.ஆனால் இயக்கமுறைமையா(OS)னது ஏற்கனவே மெய்நிகர் நினைவகத்தை அனைத்து செயல்களுக்கான ரேமாக பயன்படுத்தி கொண்டிருந்தாலும் இதனை கூடுதலான துணை ரேம் போன்று ஒதுக்கீடு செய்துகொள்கிறது.

இதனால் வன்தட்டை அணுகும் பணி மெதுவாகிறது. விண்டோவிற்கு இவ்வாறான page file ஐ தேவையில்லாதபோது பயன்படுத்த வேண்டாம் என இந்த மெய்நிகர் நினைவகத்தின் அளவை சரி செய்து குறைக்க வேண்டும். குறைந்த பட்சம் 1ஜிபி அளவிற்கு இந்த ரேம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இந்த நினைவக அளவை பதிவேட்டில் (Registery) தான் சரி செய்ய முடியும். அதற்கு முன்பு இந்த பதிவேட்டினை (Registery)காப்பு நகல் செய்து கொள்ள வேண்டும்.அதற்காக Start => run=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றும் கட்டளை வரியில் regedit என தட்டச்சு செய்து உள்ளீட்டு(Enter)) விசையை தட்டுக. பின்னர் இடதுபுறம் தோன்றும் மரம்போன்ற பலகத்தில் (Treepane) HKEY_LOCAL_MACHINE\ SYSTEM\ Currentcontrolset\ control\sessionmanager\ memory management, என்பதை தெரிவு செய்க. உடன் தோன்றும் சாளரத்தில் உள்ள Disable paging executive என்ற உருவ பொத்தானை (icon) இருமுறை சொடுக்குக. உடன்தோன்றும் தரவு பெட்டியில் 0 விற்கு பதிலாக 1 என மாற்றியமைத்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் மீண்டும் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.

NTFS ஆக மாறுதல் செய்தல் : வன்தட்டின் வடிவமைப்பை FAT32க்கு பதிலாக NTFS க்கு மாறுதல் செய்யுங்கள். அதனால் encryption, folder, disk compression என்பன போன்ற பல சிறப்பு பணிகளை வேகமாகவும் பாதுகாப்புடனும் செய்ய முடிகிறது. இந்த FAT32 வடிவமைப்பு DOS, Win98 ஆகிய இயக்க அமைவு வரைதான் ஆதரிக்கிறது. மேலும் இது விண்டோ 7 ஐ கண்டிப்பாக ஆதரிக்காது. இதற்காக நம்மிடம் FAT32 தான் உள்ளதே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வன்தட்டை மறு வடிவமைப்பு செய்யாமலேயே NTFS ஆக மாற்ற முடியும்.அதற்காக Start => Run=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிய பின்னர் தோன்றும் கட்டளை வரியில் cmd.exe என தட்டச்சு செய்து உள்ளீட்டு(Enter) விசையை தட்டுக. உடன் தோன்றும் கட்டளை வரியில் convert என தட்டச்சு செய்து சிறிது இடவெளி விட்டு இயக்கக எழுத்தான c என தட்டச்சு செய்த பின்னர் : என்ற முக்கால் புள்ளி இட்டு /FS:ntfs என தட்டச்சு செய்க. ( convert NTFS)

அமைவு மீட்டாக்க புள்ளி( System restore point) : இதற்காக எப்போதும் கணினியின் வன்தட்டில் சிறிது இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்காக my computer என்ற உருவ பொத்தானை (icon) தெரிவுசெய்து சொடுக்குக.உடன் தோன்றும் பட்டியில் properties என்பதை தெரிவு செய்க. பின்னர்தோன்றும் பெட்டியில் System restore என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . பின்னர் எந்த இயக்ககத்தின்(drive) இவ்வாறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவு செய்து கொண்டு Setting என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் இதிலுள்ள Slides ஐ தேவையான அளவு இழுத்து சரி செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.

அமைவு மிட்டாக்க புள்ளியை இடமாற்றுதல் (Relocate system shuffle): இதர பல கோப்புகள், வன்தட்டுகள், பிரிப்பகங்கள் ஆகியவை விண்டோ இயக்கத்தின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டு தேக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒரே இயக்ககத்தில் அனைத்து அமைவு கோப்புகளையும் வைத்திருக்காமல் வெவ்வேறு இடங்களில் வைத்து விண்டோ இயங்குவதற்கு தாராளமான இடவசதி செய்து கொடுப்பது நல்லது.

அறிதுயில் (Hybernation) என்ற வசதியை கைவிடுவது: பொதுவாக புதிய இயக்கமுறைமையா(OS)னது விண்டோவை அறிதுயில்(hybernation) செய்வதற்காக தேவையான அனைத்துவிவரங்களையும் RAM hiberfile.sys என்ற ஒற்றையான மறைக்கப்பட்ட கோப்பாக வன்தட்டில் உருவாக்கி வைத்து காத்திருக்கிறது. இந்தகோப்பு வன்தட்டில 512 எம்பி அளவு நினைவகத்தை எடுத்து கொள்கிறது. அமைவு மீட்டாக்க புள்ளி(System restore point)க்கான கோப்பினை வைத்துள்ள அதே இயக்ககத்தில்(drive) அறிதுயிலிற்(hibernation)கான கோப்பையும் வைத்திருப்பதால் அதிகஅளவு நினைவகம் இவைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பெற்று விண்டோ இயக்கமுறைமையின் செயல் மெதுவாகிறது. இதனை தவிர்க்க Start => Run=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கிய பின்னர் powerfg.cpl என தட்டச்சு செய்து உள்ளீட்டு(Enter) விசையை தட்டுக. உடன் தோன்றும் சாளரத்தில் hibernate என்னும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. Enable hibernation என்று தேர்வு செய்திருந்தால் அதனை நீக்கி விடுக. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

Clutter -ஐ குறைப்பதற்காக விண்டோஸ் Disk cleanup என்ற கருவியை பயன்படுத்தி இணையத்தில் உலாவும்போது உருவாகும் கோப்புகளையும் மற்றும் தேவையற்ற கோப்புகளையும் நீக்கம்செய்வதற்கான பணியின்போது தவறுதலாக முக்கிய கோப்புகள் ஏதேனும் நீக்கம் செய்யாமல் இருப்பதற்கு ஒரு batch கோப்பை உருவாக்கி பயன்படுத்துங்கள். இதற்காக Notepad அல்லது வேறு ஏதேனமொருtext editor ஐ பயன்படுத்தி “del/s/q”C:\Documents and settings\username\local settings\Temp\*.*” என தட்டச்சு செய்யுங்கள். இங்கு username என்பதற்கு ஏற்கனவே கணினிக்குள்நுழைவு செய்வதற்கு என்ன பெயர் நாம் கொடுத்துள்ளோமோ அதனை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த batch கோப்பிற்கு deltemp.bat என்றவாறு பெயரிட்டு சேமித்திடுக. கண்டிப்பாக புள்ளிக்கு பிறகு . bat என்ற மூன்று எழுத்து வர வேண்டும். சுலபமாக அணுகுகின்ற பகுதியில் இதனை தேக்கி வைத்து Startup மடிப்பகத்தில் இதனை கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக Start=> all program => startup=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக. மேலும் இந்த clean up என்ற கருவி மேம்பட்ட வாய்ப்பாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதற்காக more option என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்தோன்றும் திரையில் System restore என்பதில் cleanup என தெரிவு செய்க. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  இயக்கமுறைமையின்(OS)இயக்கத்தை வேகப்படுத்த: சில சமயத்தில் ஒரு சில பயன்பாடுகள் நிறைய தேவையற்ற பயன்பாட்டு மென்பொருட்களின் குவியலில் சிக்கிக்கொண்டு இயங்குவதற்கு போதிய இடவசதி இல்லாமல் நத்தை போன்று மிக மெதுவாக ஊர்ந்து நகருகின்றன. அதனால் முக்கியமான பயன்பாடுகளை முதன்மைபடுத்த வேண்டும். இதற்காக காலியான Task bar ல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக.உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியலில் task manager என்பதை தெரிவு செய்க. பின்னர் தோன்றும் task manager என்ற சாளரத்தில் processes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் பட்டியலிடப்பட்டிருக்கும் செயலில் முதன்மைபடுத்த விரும்பும் கோப்பினை இடம்சுட்டியை வைத்து தெரிவு செய்துகொண்டு சுட்டியின்வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றும் பட்டியில் Set priority என்பதை சொடுக்குக. உடன் தோன்றும் சிறு பெட்டியில் முதன்மை அளவை above normal அல்லது high ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும்எச்சரிக்கை செய்திபெட்டியில் yes என்பதைதெரிவுசெய்து சொடுக்குக. இவ்வாறு மாறுதல் செய்வதால் மற்ற இயக்கம் பின்தங்கி விடும்.

எச்சரிக்கை,இந்த வாய்ப்பில் real time என்பதை தெரிவு செய்தால் மிக முதன்மை இடத்தில் நம்மால் தெரிவுசெய்யபட்ட பயன்பாடு மட்டும் தெரிவு செய்யபட்டு மற்றவைகளை மிகவும் பின்னுக்கு தள்ளிவிடும் .

ஒவ்வொரு இயக்ககத்திலும் உள்ள கோப்பிற்கும் சென்று முதன்மை இடத்தை மாற்றுவதற்கு பதிலாக task manager ல் உள்ள கட்டளை பட்டியின் view என்ற கட்டளையை தெரிவு செய்க.உடன் தோன்றும் பட்டியில் column என்பதை தெரிவு செய்க.பின்னர்தோன்றும் சிறுபெட்டியில் base priority என்பதை தெரிவு செய்க. பின்னர் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பயன்படுத்தாத உருவபொத்தானை (Icon)ஐ நீக்குவதற்காக:சில சமயங்களில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத உருவபொத்தான்கள் திரையில் இருப்பதாக மேல்மீட்பு செய்திபெட்டி அடிக்கடி திரையில் தோன்றி எச்சரிக்கை செய்யும் இவ்வாறு நீண்ட நாட்களாக பயன்படுத்தாத பயன்பாடுகள் வேறு எப்போதாவது தேவைப்படும் அதனால் அவைகளை வேறு இடத்தில் கொண்டு சென்று விடுவதுநல்லது. நமக்கு எப்போதுமே தேவையில்லை எனில் அவற்றின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியபின் தோன்றம் குறுக்கு வழிபட்டியில் delete என்ற கட்டளையை தெரிவு செய்து நீக்கி விடுக. அல்லது திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் குறுக்கு வழிபட்டியில் properties என்பதை தெரிவு செய்க. பின்னர் தோன்றும் திரையில் desktop என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றும் உரையாடல் பெட்டியின் அடிப்பகுதியில் run desktop cleanup wizard every 60 day என்பது தெரிவு செய்யபட்டிருந்தால் அதனை நீக்கி விட்டு. ok என்ற பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.

Musical duplicate ஐ தவிர்ப்பதற்காக: நமக்கு விருப்பமான பாடல்களை கணினியில் சேமித்திடுவதற்காக Advance audio coding வடிவமைப்பாக உருமாற்றம் செய்யும்போது duplicate கோப்புகள் தானகவே உருவாகி வன்தட்டின் இடத்தை ஆக்கிரமித்து கொள்ளும். இதனை தவிர்க்க window media player என்ற சாளரத்தில் Tools=> option=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியபின் தோன்றும் பெட்டியில் Rip Music என்ற தாவி (Tab) யின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் Format என்ற கீழிறங்கு பட்டியலில் தேவையானதை தெரிவு செய்க. பிறகு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மேலேஇது வரை கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் உங்களுடைய விண்டோ இயக்கமுறைமைய (OS) ஐ இளமைத்துடிப்புடன் இயங்கி கொண்டிருக்கசெய்யமுடியும்

மறுமொழி அளிக்கவும் »

ஒரே கணினியில் விண்டோவும் லினக்ஸும் இணைந்த இயக்கம்

ஆரம்பத்தில் விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும் அனைத்து பயனாளர்களுக்கும் கணினிகளில் பயன்பாட்டு மென்பொருட்களின் மூலம் எல்லா வகையான வசதி வாய்ப்புகளையும்  குறைந்த கட்டணத்தில் வழங்கி வந்தனர், அதன்பின்னர் நாளடைவில்இந்த மென்பொருள் நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மேலும் பெருக்குவதற்காக அதே மென்பொருளை ஒரு சில சிறிய மாற்றங்களை மட்டும் செய்து விட்டு மேம்படுத்தப் பட்ட தங்களின் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்தும்படி ஆசை வலையை விரித்து மக்களை வளைத்து போடுகின்றனர் அதனால் பாமரமக்களும் இதற்காக மேலும் மேலும் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். அதனால் தனி நபர்கள், சிறு குறு நிறுவனங்கள் இவைகளுக்கு இணையான இதேயளவு வசதிகள் நிறைந்த இலவச மென்பொருளை (open source) நோக்கி தாவி செல்கின்றனர். இவ்வாறு open sources ஆக கிடைக்கக் கூடிய லினக்ஸ் OSகளில் இயங்கும் பயன்பாடுகளில் Writerஆனது விண்டோவின் wordக்கும், Calc என்பது Excelக்கும், Impress என்பது Power point க்கும் மாற்றாக உள்ளன. ஆனால் விண்டோவின் பயன்பாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளில் இவைகளில் சிறிது குறைவாகவே உள்ளன.

அதனால் விண்டோ பயன்பாடுகளுக்கு மாற்றாக அதே வசதி வாய்ப்புகள் உடைய மென்பொருளில் செலவில்லாமல் பயன்படுத்துவது பற்றி கூற வந்து அவைகளின் குறைபாட்டை மட்டும் கூறிக்கொண்டு வருகின்றீர்களே  இது சரியா இது நியாயமா இதற்கு மாற்று ஏதும் இல்லையா என்ற உங்களின் ஆதங்கம் புரிகின்றது. இப்போது அந்த செய்திக்கும் வருகின்றேன் செலவை குறைக்க கூடிய Cross Over : www.codeweaver.com  <http://www.codeweaver.com>,  மற்றும் Wine : www.winehg.com  <http://www.winehg.com>  ஆகியவை லினக்ஸ்Os க்குள் விண்டோ பயன்பாடுகளை நட்புறவு சூழலுடன் இயங்குமாறு செய்கின்றன. இதில் இரண்டு Osகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒருங்கிணைந்து இயங்கும்படி செய்து விடுகின்றது. இதற்காக சிறிதளவு மட்டும் பணம் கொடுத்து பயன்படுத்துமாறு இருந்தாலும் இவைகள் நிறைய கூடுதல் பலன்களுடன் பயன்படுத்த எளிமையாக உள்ளன.

இது எவ்வாறு பணி செய்கின்றது?

வரைகலை அட்டைகளின் (graphic card) பயன்பாட்டு மென்பொருளனது (Application software) திரையில் விண்டோவை காண்பிக்கும்படி வன்பொருள் அமைவிற்கு (Hardware system) தகவலை அனுப்புகின்றது எனக்கொள்வோம். இதனை Application Programming Interface (API) என்ற ஒரு குழுவான செயல்களின் மூலம் செயல்படும்படி செய்கின்றது. இந்த API ஆனது பயன்பாடு எந்த மென்பொருளின்மீது இயங்குகின்றது என்ற செய்தியை மட்டும் மறைத்துவிட்டு (ஏதோ ஒன்று இயங்குகின்றது) என்ற செய்தியை மட்டும் வன்பொருளிற்கு கிடைக்குமாறு செய்கின்றது.  இதே அடிப்படையில்தான் அனைத்து கணினியிலும் எந்தவொரு பயன்பாட்டு நிரல் தொடர்களும் இயங்குகின்றது.

இவ்வாறே விண்டோ பயன்பாடுகளும் விண்டோவின் APIயான விண்டோ SDKவை இயங்கச்செய்து ஏதேனுமொரு மென்பொருள் இயங்கும் செய்தியை மட்டும் வன்பொருள் பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றது.இங்கு API ஆனது  இடைமுகமாக இயங்கி கொண்டிருக்கும்வரை வன்பொருளிற்கு விண்டோ பற்றிய செய்தி தேவையற்றதாகும். இந்த நிலையில்தான் Wine செயல் திட்டமானது விண்டோவின் APIயை தான்பயணம் செய்யும் வாகனமாக எடுத்து கொண்டு செயல்படுகின்றது. அதனால் விண்டோ பயன்பாடுகளும்  தங்களின் APIயைதான் தங்களுடன் உள்ளது எனக் கருதி கொண்டு எந்த சுனக்கமும் இல்லாமல் அவை இயங்குகின்றன.

இதனை ஒரு எடுத்துகாட்டுடன் பார்ப்போம். விண்டோவின் எம்எஸ் வேர்டில் ஒரு கோப்பினை சேமிக்கும்  கட்டளையை செயல்படுத்த விண்டோ API க்கு ”Save This File” என்ற செயலியை(Funtion) அழைக்கின்றது. எனில்

இதே செயலுக்கு லினக்ஸ் தளத்தில்  ”Save file” என்ற செயலியை அழைக்கின்றது எனக்கொள்வோம்.

இந்நிலையில் எம்எஸ் வேர்டு Save this file என லினக்ஸ் தளத்தினை அழைத்தால் அந்த தளம் இந்த கட்டளையை புரிந்து கொள்ளாது. அதேபோன்று லினக்ஸ் ஆனது save file என விண்டோவை அழைத்தாலும் புரிந்து கொள்ளாது. இங்குதான் Wine தன்னுடைய பணியை துவங்குகின்றது. விண்டோ பயன்பாடு Save this file என்பதை இந்த wine ஆனது save file என உருமாற்றம் செய்து நாம் விரும்பும் பணியினை செய்து முடிக்கின்றது.ஆனால் Wine ஆனது ஒரு போலியான செயல்பாடு அன்று, இது ஒரு விண்டோவின் மூலச்செயலில் இயங்கும் ஒரு சிறந்த திறமூலச்செயல்(Open source)திட்டமாகும்.லினக்ஸில் உபுண்டு சுசி போன்ற OSகளில் ஒரு சில சொடுக்குகளில் வலைதளத்திலிருந்து இதனை பயன்படுத்துவதற்காக பதிவிறக்கம் செய்து கணினியில் இதனை நிறுவி கொண்டு ஒரு சில நொடிகளில் இந்த wine உதவியுடன் எந்தவொரு பயன்பாட்டினையும் நாம் பயன்படுத்த தயாராக முடியும்.

இதில் Cd/application/folder wineapp.exe என்றவாறு உள்ளவை உங்களுக்கு வழிகாட்டிடும் கட்டளை வரிகளாகும். இந்த wine ஆனது இலவசமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்த கூடிய open source என்பதால் இதனை எத்தனை கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனுடைய இயக்க திறன் நம்முடைய தலையீடு இல்லாமலேயே மிக நன்றாகவும் சிறப்பாகவும் செயல்படுகின்றது.

ஏதாவது பிரச்சினை என்று வந்தால் மட்டும் trouble shooting wine என்பது உங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த cross over ஆனது Ms office பயன்பாட்டை லினக்ஸ் OSத்தின் மீது இயங்கும் பணியை சுலபமாக்குகின்றது. இதனை நிறுவுவதற்கு என தனியாக பயிற்சி ஏதும் தேவையில்லை Cross Overயை நிறுவ ஆரம்பித்தவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியில்next, next, finish போன்ற பொத்தான்களை அடுத்தடுத்து தெரிவுசெய்து சொடுக்கினாலே போதுமானது .நம்முடைய கணினியில்  உள்ள சாதாரண வரைகலை அமைப்பே(GUI) remove programme, plugin, fonts, change cross over setting ஆகிய பணிகள் அனைத்தையும் மிக சுலபமாக செய்துவிடுகின்றது.

இந்த cross over ஆனது Ms office 2000, office 2003 ஆகிய பயன்பாடுகளை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் எளிதாக லினக்ஸ் மீது இயங்கசெய்கின்றது. இதனுடைய standard version மட்டுமே தனித்தனி கணினிகளில் தயாராக நிறுவ வேண்டியுள்ளது. ஆனால் இது நம்பதகுந்ததாக உள்ளது. wine அல்லது cross over ஏதேனுமொன்றை பன்படுத்துவதாக இருந்தாலும் 30 நாட்களுக்கு மட்டும்  trial ஆக www.codeweavers.com/products/downloads  <http://www.codeweavers.com/products/downloads>  இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். லினக்ஸ் தளத்திற்கு  செல்வதா விண்டோற்கு செல்வதா என மதில்மேல் பூனையாக அலைபாயாமல் இந்த wine/crossover ஆகியவற்றில் ஒன்றை  கணினியில் நிறுவி விண்டோ பயன்பாடுகளை லினக்ஸ் OSத்தின் மீது இயங்க செய்து உங்களுடைய  பணியை முடித்து கொள்க

.

மறுமொழி அளிக்கவும் »

மெய்நிகர் கணினியில் விண்டோ 8 இயக்கமுறைமையை நிறுவுதல்

 

தற்போது விண்டோ 7 இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் செயலில் இருக்கும் இயக்கமுறைமையை மாற்றிடாமல் விண்டோ 8 இயக்கமுறைமை எவ்வாறு இயங்கும் என செயல்படுத்தி பார்த்தபின்  மாறுவதா வேண்டாமா என அதன் திறனறிந்து முடிவுசெய்யலாம் என எண்ணுபவர்கள்  VMware என்ற மென்பொருளை நிறுவி அதில்  தேவையான விண்டோ 8 இயக்கமுறைமையை  நிறுவி இயக்கி  செயல்படுத்தலாம்  இந்த மென்பொருளை அதன் திறவுகோளுடன்  பெற்று நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்துக உடன் இந்தமெய்நிகர் கணினியை இயக்குவதற்கான  குறுக்குவழி கட்டளையானது Start என்ற பட்டியிலில் சேர்ந்துவிடும் அதனை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றிடும் திரையில்Create a new Virtual Machine  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் new Virtual Machine என்ற வழிகாட்டியின் திரையில் I will install the operating system later என்ற வாய்ப்பை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் விண்டோ 7 என்ற இயக்கமுறைமையை தெரியவுசெய்து கொண்டு பின்னர் தோன்றிடும்  திரைகளில் பொருத்தமான வாய்ப்புகளை அல்லது இயல்புநிலையில் உள்ள வாய்ப்புகளை தெரிவுசெய்து new Virtual Machine என்ற வழிகாட்டி திரையின் செயலை  முடிவுக்கு கொண்டுவருக  உடன் காலியான மெய்நிகர் கணினியின் திரை தோன்றிடும் அதில் Power on this virtual machine என்ற வாய்ப்பிற்கான  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த மெய்நிகர் கணினி  தொடக்க இயக்கம் ஆரம்பிக்க முயன்று தோல்வியடையும் ஏனெனில் இந்த மெய்நிகர் கணினியில் நாம் எந்தவொரு இயக்கமுறைமையையும் நிறுவுகை  செய்யவில்லை

அதனால் Removable Devices” à “CD/DVD (IDE)” à “Settings”. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

பின்னர் தோன்றிடும்  திரையில்  இடதுபுறம்CD/DVD (IDE  என்ற வாய்ப்பையும் வலதுபுறம் Use ISO image file என்றவாய்ப்பையும்  அதன்பின்னர் விண்டோ 8 நிறுவுகை கப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக   பின்னர் “Restart VM என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இப்போது நம்முடைய மெய்நிகர் கணினியானது விண்டோ8 என்ற இயக்கமுறையுடன் செயல்படதுவங்கும்

மறுமொழி அளிக்கவும் »

விண்டோ 8 மெட்ரோ பயன்பாடு

விண்டோ8 என்ற இயக்க முறைமையில் மேற்கண்ட விண்டோ 8 மெட்ரோ என்ற பயன்பாட்டினை செயல்படுத்துவதற்காக Visual Studio 11 Express என்பது அடிப்படைத் தேவையாகும்  இது Windows 8 Dev Preview x64 என்ற பதிப்பில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டுதான் இருக்கின்றது இதனை மைக்ரோசாப்ட நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க

முதலில் இந்த பயன்பாட்டினை விண்டோ8 இயக்கமுறைமையில் செயல்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் JavaScript, VB, C# ,C++ ஆகிய மொழிகளில் ஒன்றையும் blank “Application”, rich “Grid”, master-child “Split” ஆகிய வார்ப்புருக்களில் நமக்கு தேவையான ஒன்றையும் தெரிவுசெய்து கொள்க இவை புதிய திட்டத்தை(New Project) உருவாக்க பயன்படுகின்றன.இதன்பின்னர் மேலேகூறிய மொழிகளை பின்புலமாக கொண்ட விண்டோ 8 மெட்ரோ பயன்பாட்டிற்கேயுரிய Metro-XAML என்ற மொழியில் நம்முடைய குறிமுறையை எழுத ஆரம்பிக்கவும் இதிலுள்ள Grid ,Split ஆகிய வார்ப்புருக்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்கட்டமைக்கபட்டுள்ளன அவற்றுள் நமக்குத்தேவையானவாறு தெரிவுசெய்து அமைத்துகொள்க.இதற்காக பின்வருவனவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்க

 

Application Icons என்பது , 150×150 என்ற சிறிய அளவுகுறும்படம் முதல்  Live Tile என்ற பெயருடைய 310×150 என்ற பெரியஅளவுகுறும்படம் வரை கொண்டதாகும் இதன்மூலம் பயனாளர் ஒருவர் இந்த பயன்பாட்டினை இயக்காமலேயே தாம் கூறவிரும்பும் செய்திகளை ட்விட்டர் ஃபேஸ்புக் ஆகிய சமூகதளங்களில் உள்ள தம்முடைய நண்பர்கள் நேரடியாக பெறுமாறு செய்யமுடியும் மேலும் ஒரு பயனாளர் இந்த குறும்பட வகைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு உடனடியாக மாறிகொள்ளும் வசதியுள்ளது

Splash Screen முதன்முதலில் தோன்றிடும் போது திரையின் உருவபடங்கள் விட்டுவிட்டு மின்னுவதற்கு இந்த வார்ப்புரு வசதி பயன்படுகின்றது

 Data: இந்த வார்ப்புரு உள்ளூர் மற்றும் தூரத்திலிருக்கும் தரவுகளை கையாளத்தக்க வகையில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டுள்ளன அவற்றுள்  வாடிக்கையாளர் விரும்பியவாறு தெரிவுசெய்து கொண்டு கட்டமைக்கமுடியும்

Application Bar என்ற புதிய வகை கட்டளைபட்டை,  தகவல்களை வெட்டி ஒட்டும் தொல்லைக்கு பதிலாக தகவல்களை தேவைப்படும் மற்றவர்களுக்கு சுலபமாக வழங்குதல் பெறுதல் ஆகிய செயலை செய்வதற்கு உதவுகின்ற Contracts  ஆகிய வசதிகள் இதில் உள்ளன  அதுமட்டு மல்லாது இந்த பயன்பாட்டிலிருந்தே தேவைப்படும் உலாவிக்கு செல்லாமல் தேடிடும் வசதியும் இந்த பயன்பாட்டில் உள்ளத.எந்த இயக்கமுறைமையிலும் எந்த சூழலிலும் இந்த பயன்பாடு இயங்குவதற்கேற்ப தகவமைக்கபட்டுள்ளதாவென அவ்வப்போது பரிசோதித்திடும் வசதியும் இதில்உள்ளது மேலும் தற்போதைய டேப்லெட் பிஸியிலும் இது  இயங்கிடுமாறு அமைக்கபட்டுள்ளது எனபதே இதன் சிறப்பம்சமாகும்

மறுமொழி அளிக்கவும் »

விண்டோ 7

விண்டோ 7 இயக்கமுறைமையின் startஎன்ற பட்டியில் உள்ள ஏராளமான பயன்பாடுகளில் தேவையற்றதை எளிதாக நீக்கம் செய்யலாம் அதற்காக சாளரத்தின் கீழே இடதுபுற மூலையிலிருக்கும் startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் startஎன்ற  பட்டியில் தேவையற்ற பயன்பாடுகளின் பெயரை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக

உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் remove from this listஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த பயன்பாட்டின் பெயர் இந்தstartஎன்ற பட்டியலில் இருந்து நீக்கம் செய்யபட்டு விடும் இவ்வாறு தேவையற்றவைகளை  ஒவ்வொன்றாக தெரிவுசெய்து நீக்கம் செய்தபின் விண்டோ 7 இயக்க முறைமையை மறுதொடக்கம் செய்து இயக்கினால் மிகவிரைவாக தொடங்குவதை காணலாம்

அவ்வாறே வேறு ஏதேனும் பயன்பாட்டினை இந்த startஎன்ற பட்டியிலில் சேர்ப்பதற்கு  தேவையான பயன்பாட்டின் பெயரை விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையில் தேடி தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் pin to start menuஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த படன்பாட்டின் பெயர் இந்தstartஎன்ற பட்டியில்  சேர்க்கப்பட்டுவிடும்

மறுமொழி அளிக்கவும் »

அறிந்தகொள்வோம் பென்ஃபிளிக்ஸை பற்றி

விண்டோ இயக்கமுறைமையில் தொடுதிரை வசதியை அளிப்பதற்காக Pen flicks.என்ற இந்த வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக மேஜைத்திரையின் கீழேஇடதுபுற மூலையிலிருக்கும்Start =>Control Panel=>classic view => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Control Panel -இன் classic view  திரையில்  Pen and Input Devices.என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் விரியும் Pen and Input Devices  என்றஉரையாடல் பெட்டியில்  Flicks என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி Flicks என்ற தாவியின் திரையை தோன்றசெய்க அதில் Use flicks to perform common actions quickly and easily என்ற வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க

பின்னர்அதற்கு கீழேயுள்ள the navigation flicksthe navigational flicks with editing. ஆகிய இரு வாய்ப்புகளில் the navigational flicks with editing என்ற  இரண்டாவது வாய்ப்பின் வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு Customize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Customize flicks  என்றஉரையாடல் பெட்டியில் add என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொள்க Nameஎன்பதில் close programeஎன உள்ளீடு செய்து keys என்பதில் சுருக்கு வழி விசையாக Alt+F4. என்று தெரிவுசெய்து கொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் Pen and Input Devices  என்றஉரையாடல் பெட்டியில்  நகர்த்தும் பொத்தானை   precise என்பதற்கருகில் நகர்த்தி அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   இதன் பிறகு தொடுதிரைவசதியில் கணினியை இயக்கலாம்

மறுமொழி அளிக்கவும் »

விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையில் தமிழை எவ்வாறு உள்ளீடுசெய்வது

விண்டோ எக்ஸ்பி நிறுவுகையின் குறுவட்டை (CD)அதற்கான வாயிலில் (Cd drive)செருகி தயாராக வைத்துகொண்டபின் start=>control panel=>Date, time and Regional options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Date, time and Regional options என்ற உரையாடல் பெட்டியில் install files for complex script and right to left languages including thai என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்தவுடன் நாம் தயாராக செருகி வைத்துள்ள விண்டோ எக்ஸ்பி நிறுவுகை குறுவட்டிலிருந்து தேவையான கோப்புகள் கணினியில் நிறுவப்படும்

பின்னர் கூறியவாறு Date, time and Regional options என்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்து அதில் Language என்ற தாவியின் பொத்தானை சொடுக்கி Language என்ற தாவியின் திரையை தோன்ற செய்க அதன்பின் அந்ததிரையில் detailsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் Text services and input languagesஎன்ற உரையாடல் பெட்டியில் settings என்ற தாவியின் பொத்தானை சொடுக்கி settings என்ற தாவியின் திரையை தோன்றசெய்க அதில் add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் விரியும் மொழிகளின் பட்டியிலிலிருந்து tamil என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படத்திலுள்ளவாறுkey boardஎன்பதன்கீழ் TA =tamil =keyboard =Tamilஎன்றவாறு தோன்றும்

பின்னர்ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Date, time and Regional options என்ற உரையாடல் பெட்டியில் applyஎன்ற பொத்தானையும் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பின்னர் வழக்கமான விசைப்பலகையின்மூலம் யுனிகோடு தமிழில் உள்ளீடுசெய்யலாம் நமக்கு இந்த விசைப்பலகையில் எந்தெந்த விசையில் எந்தெந்த யுனிகோடு தமிழ் எழுத்து இருக்கின்றது என தெரிவேண்டுமல்லவா

அதற்காக start=> all program=> Accessories= ease of access=> onscreen board என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் கணினியின் திரையில் onscreen board விசைப்பலகையின் பெட்டிஒன்று தோன்றும் அவ்விசைப்பலகையினுடைய இடதுபுறம் உள்ள alt +shift ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் விசைப்பலகையில் தமிழ்எழுத்து தோன்றும் shift விசையை அழுத்தினால் அதே விசைகளிலுள்ள இரண்டாவதாக உள்ள தமிழ்எழுத்துகள் தோன்றும் மீண்டும் alt +shift ஆகிய விசைகளை அழுத்தினால் விசைப்பலகையில் ஆங்கிலஎழுத்து தோன்றும்

அவ்வப்போது எழுத்துகள் எங்கேயுள்ளதுஎன தெரிந்துகொள்வதற்காக இவையிரண்டையும் அச்சிட்டு கொள்க

மறுமொழி அளிக்கவும் »

விண்டோ இயக்கமுறைமை யின் இயக்க வேகத்தை அதிகரி்த்தல்

விண்டோ இயக்கமுறைமை மிகநன்றாக உள்ளது என பெரும்பாலானவர்கள்    இவற்றை பயன்படுத்தி வந்தாலும் அவற்றுள் ஏராளமான அசௌரியங்களும் பின்னடைவுகளும் உள்ளன இதனை புதியதாக நிறுவிய சமயத்தில் இருக்கும் அவைகளின் இயக்கவேகம் நாளடைவில் குறைந்துகொண்டேவருகின்றது என்பதும் மற்ற பயன்பாடுகள் இயங்குவதற்கு போதுமான காலிநினைவகம் இதில் கிடைக்காது என்பதும்தான் பயனாளர்களினுடைய மிகமுக்கியமான பிரச்சினையாகும் அதிலும் C என்ற இயக்ககத்தில் நமக்கு தேவையான புதிய பயன்பாட்டை நிறுவிஇயக்குவதற்கு போதிய காலிநினைவகம் இல்லையென்பதே மிகப்பெரிய பின்னடைவாகும்  இந்த பிரச்சினையை எவ்வாறு சமாளித்து வெற்றிகொள்வது என இப்போது காண்போம்

விண்டோ இயக்கமுறைமையின் திறனை போதுமான அளவிற்கு பராமரிப்பதில் pagefile. என்பதுமுக்கிய பங்குவகிக்கின்றது அதனால் இது C இயக்ககத்தில் அமர்ந்து கொள்வதற்கு ஏராளமான காலிநினைவகத்தை ஆக்கிரமித்து கொள்கின்றது இதனால் மற்ற பயன்பாடுகளை நிறுவுகை செய்து இயக்குவதற்கு போதிய நினைவகம் இல்லாமல் தவிக்கவேண்டியுள்ளது இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்காக

படிமுறை1:விண்டோவினுடைய திரையின் கீழேஇடதுபுறமூலையிலுள்ள start என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் start என்ற பட்டியில் My Computer என்பதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் படம்-1 சூழ்நிலை பட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக

படம்-1

படிமுறை2:உடன் படம்-2-ல்உள்ளவாறு விரியும் திரையின் இடதுபுறத்தில் உள்ள Advanced system settings என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2

படிமுறை3: பின்னர் படம்-3-ல்உள்ளவாறு விரியும் system properties  என்ற உரையாடல் பெட்டியின் Advanced என்ற தாவியன் திரையில்மூன்றுபகுதிகளில் performance section என்ற பகுதியிலுள்ள Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-3

படிமுறை4: அதன்பின்னர் படம்-4-ல்உள்ளவாறு தோன்றிடும் Performance options என்ற உரையாடல் பெட்டியில் Advanced என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4

படிமுறை5: பின்னர் தோன்றிடும் Performance options என்ற உரையாடல் பெட்டியின் Advanced என்ற தாவியின் திரையில்  Virtual Memoryஎன்ற பகுதியிலுள்ளChange என்ற பொத்தானை (படம்-5)தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-5

படிமுறை6: அதன்பின்னர் விரியும் virtual memory என்ற உரையாடல் பெட்டியில் Automatically manage paging file size என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் (படம்-6) செய்திடுக.

படம்-6

 பின்னர் இதே virtual memory என்ற உரையாடல் பெட்டியில்  C என்ற இயக்ககத்தை தெரிவுசெய்துகொண்டு no paging என்ற வாய்ப்பையும் தெரிவு செய்து கொண்டு இதற்கருகிலுள்ள Setஎன்ற(படம்-7)  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-7

அதன்பின்னர் தோன்றிடும் எச்சரிக்கை பெட்டியில்Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலை தொடரும்படி ஆமோதித்திடுக

படிமுறை7: பின்னர் மீண்டும் virtual memory என்ற உரையாடல் பெட்டியில் System managed என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு இதற்கருகிலுள்ள Setஎன்ற(படம்-8)   பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.இதன் பின்னர் OK என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

படம்-8

இறுதியாக நம்முடைய கணினியின் இயக்கத்தை நிறுத்தி மறுதொடக்கம் செய்திடுக இப்போது C இயக்ககத்தில்  கூடுதலான காலி நினைவகம் இருப்பதாக காண்பிக்கும் இதன்பிறகு தேவையான பயன்பாட்டினை நிறுவி பயன் படுத்திகொள்க.

மறுமொழி அளிக்கவும் »

விண்டோ இயக்கமுறைமையில் நினைவகத்தை அதிகரித்தல்

விண்டோ இயக்கமுறைமை மிகநன்றாக உள்ளது என பெரும்பாலானவர்கள்    இவற்றை பயன்படுத்தி வந்தாலும் அவற்றுள் ஏராளமான அசௌரியங்களும் பின்னடைவுகளும் உள்ளன இதனை புதியதாக நிறுவிய சமயத்தில் இருக்கும் அவைகளின் இயக்கவேகம் நாளடைவில் குறைந்துகொண்டேவருகின்றது என்பதும் மற்ற பயன்பாடுகள் இயங்குவதற்கு போதுமான காலிநினைவகம் இதில் கிடைக்காது என்பதும்தான் பயனாளர்களினுடைய மிகமுக்கியமான பிரச்சினையாகும் அதிலும் C என்ற இயக்ககத்தில் நமக்கு தேவையான புதிய பயன்பாட்டை நிறுவிஇயக்குவதற்கு போதிய காலிநினைவகம் இல்லையென்பதே மிகப்பெரிய பின்னடைவாகும்  இந்த பிரச்சினையை எவ்வாறு சமாளித்து வெற்றிகொள்வது என இப்போது காண்போம்

விண்டோ இயக்கமுறைமையின் திறனை போதுமான அளவிற்கு பராமரிப்பதில் pagefile. என்பதுமுக்கிய பங்குவகிக்கின்றது அதனால் இது C இயக்ககத்தில் அமர்ந்து கொள்வதற்கு ஏராளமான காலிநினைவகத்தை ஆக்கிரமித்து கொள்கின்றது இதனால் மற்ற பயன்பாடுகளை நிறுவுகை செய்து இயக்குவதற்கு போதிய நினைவகம் இல்லாமல் தவிக்கவேண்டியுள்ளது இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்காக

படிமுறை1:விண்டோவினுடைய திரையின் கீழேஇடதுபுறமூலையிலுள்ள start என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் start என்ற பட்டியில் My Computer என்பதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் படம்-1 சூழ்நிலை பட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக

படம்-1

படிமுறை2:உடன் படம்-2-ல்உள்ளவாறு விரியும் திரையின் இடதுபுறத்தில் உள்ள Advanced system settings என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-2

படிமுறை3: பின்னர் படம்-3-ல்உள்ளவாறு விரியும் system properties  என்ற உரையாடல் பெட்டியின் Advanced என்ற தாவியன் திரையில்மூன்றுபகுதிகளில் performance section என்ற பகுதியிலுள்ள Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-3

படிமுறை4: அதன்பின்னர் படம்-4-ல்உள்ளவாறு தோன்றிடும் Performance options என்ற உரையாடல் பெட்டியில் Advanced என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4

படிமுறை5: பின்னர் தோன்றிடும் Performance options என்ற உரையாடல் பெட்டியின் Advanced என்ற தாவியின் திரையில்  Virtual Memoryஎன்ற பகுதியிலுள்ளChange என்ற பொத்தானை (படம்-5)தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-5

படிமுறை6: அதன்பின்னர் விரியும் virtual memory என்ற உரையாடல் பெட்டியில் Automatically manage paging file size என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் (படம்-6) செய்திடுக.

படம்-6

 பின்னர் இதே virtual memory என்ற உரையாடல் பெட்டியில்  C என்ற இயக்ககத்தை தெரிவுசெய்துகொண்டு no paging என்ற வாய்ப்பையும் தெரிவு செய்து கொண்டு இதற்கருகிலுள்ள Setஎன்ற(படம்-7)  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-7

அதன்பின்னர் தோன்றிடும் எச்சரிக்கை பெட்டியில்Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலை தொடரும்படி ஆமோதித்திடுக

படிமுறை7: பின்னர் மீண்டும் virtual memory என்ற உரையாடல் பெட்டியில் System managed என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு இதற்கருகிலுள்ள Setஎன்ற(படம்-8)   பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.இதன் பின்னர் OK என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

   படம்-8

இறுதியாக நம்முடைய கணினியின் இயக்கத்தை நிறுத்தி மறுதொடக்கம் செய்திடுக இப்போது C இயக்ககத்தில்  கூடுதலான காலி நினைவகம் இருப்பதாக காண்பிக்கும் இதன்பிறகு தேவையான பயன்பாட்டினை நிறுவி பயன் படுத்திகொள்க.

மறுமொழி அளிக்கவும் »

மைக்ரோசாப்டின் விண்டோ 8 சோதனை பதிப்பு செயல்படுத்திடுவதற்காக

கணினி உலகில் மிகுந்த வரவேற்பை பெற்ற விண்டோ 7 இயக்கமுறைமையை அடுத்து தற்போது மிகமுக்கிய செய்தியாக விவாதிக்கபட்டு வரும் விண்டோ8என்ற இயக்க முறைமையை சோதனை பதிப்பாக Developer Preview 64 பிட் ,32பிட் ஆகிய இருவகை கணினிகளிலும் ஒத்தியங்ககூடிய வகையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது   இதிலும் விண்டோ7 போன்று ஏராளமான வசதிகள் உள்ளன. ஆயினும் இது சோதனை பதிப்பு என்பதால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரவாய்ப்புள்ளது.

இந்த விண்டோ8 ஐ இயங்குவதற்கு தேவையான கணினியின் அமைவுகள் பின்வருமாறு

1. 1 ஜிகாஹெர்ட்ஸ் திறன்கொண்ட செயலி

2. 64 பிட் கணினியெனில் 2ஜிபி ரேம்   ,32பிட்கணினியெனில் 1 ஜிபி ரேம்

3. 64 பிட் கணினியெனில் 32 ஜிபி கொள்ளவு நினைவக வன்தட்டு,32பிட்கணினியெனில் 16 ஜிபி கொள்ளவு நினைவக வன்தட்டும்

4.டைரக்ட்எக்ஸ்9 வரைகலை சாதனமும் அதனுடைய இயக்கியும்

5.தொடுதிரை வசதிகொண்ட கணினியின் திரை

இந்த விண்டோ8 ஐ பின்வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் http://wdp.dlws.microsoft.com/WDPDL/9B8DFDFF736C5B1DBF956B89D8A9D4FD925DACD2/WindowsDeveloperPreview-64bit-English-Developer.iso

மேற்கண்ட இணைய முகவரியில் இந்த இயக்கமுறைமையின்.iso வகை கோப்பினை பதிவிறக்கம் செய்து அதனை  dvd யில் பதிவுசெய்தபிறகு நிறுவுகை செய்ய வேண்டும்.

அதற்காக விண்டோ 7 இயக்கமுறைமையை உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக Windows disk image burner  என்ற வசதியை பயன்படுத்தி இதனுடைய .iso வகை கோப்பினை மிகஎளிதாக dvd யில் பதிவுசெய்யலாம்.

விஸ்டா அல்லது எக்ஸ்பி இயக்கமுறைமையாக இருந்தால் dvd யில் பதிவு செய்வதற்கான ஏராளமான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன அவைகளுள் விருப்பமானதை மட்டும் பயன்படுத்திகொள்க.

இதன்பின்னர் dvd யிலிருந்து விண்டோ 8 ஐ வழக்கம் போன்று நிறுவுகை செய்துகொள்க.

 இந்த இயக்கமுறைமையை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://msdn.microsoft.com/en-us/windows/apps/br229516 என்ற வலைதளத்திற்கு செல்க

எச்சரிக்கை:  சட்டபூர்வமான விண்டோஇயக்கமுறைமையை  பயன்படுத்தினால் மட்டுமே இதனை உபயோக்கவும். இது ஒரு சோதனை பதிப்பாகத்தான்(Developer Preview) வெளி யிட்டுள்ளது. அதனால் பொது பயன்பாட்டிற்கு வந்தபின்னர் உபயோகிப்பது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.