தொகுப்புக்காக வலைபதிவு(bloggs)

இன்ட்லியின் புதிய Follower Widgetஐவலைபூவில் இணைக்க

தமிழ் திரட்டிகளில் முக்கிமானதும் வலைபூக்களுக்கு அதிக வாசகர்களை அளிப்பதும் ஆன இன்ட்லி எனும் திரட்டிமூலம் நம்மை தொடர்வதால் நம்முடைய இடுகைகளை வாசகர்கள் முகப்பு பக்கத்தில் பெறமுடியும். இதனால் Followers எண்ணிக்கை கணிசமாக உயர்கின்றது. இந்த இன்ட்லி தளம் சமீப காலமாக புதிய ஏராளமான மாற்றங்களை செய்து வருகிறது.  இந்த வரிசையில் தற்போது புதிய Indli Follower என்ற விட்ஜெட்டை அறிமுகம் செய்து உள்ளது.  இந்த விட்ஜெட்டை நம்முடைய வலைபூவில் இணைப்பதால் நம்முடைய Followers மேலும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. வாசகர்களும் இந்த விட்ஜெட்டில் உள்ள தொடர்க என்ற பட்டனை அழுத்தி சுலபமாக நம்மை பின்தொடரலாம். இதற்காக இன்ட்லி தளம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த விட்ஜெட்டை நம்முடைய வலைபூவில் இணைப்பதற்காக முதலில் http://ta.indli.com/ என்ற  தளத்திற்கு செல்க அந்ததளத்தில் உள்ள பக்கபட்டையில் புதியதாக Follower Widget என்பது இருக்கும்.

படம்-1

 இதில் பயனர் பெயர் என்ற இடத்தில் நம்முடைய இன்ட்லியின் பயனர் பெயரை vikupficwa  என்றவாறு நம்முடைய பெயர் இருக்கும்

அகலம்- 250 என இருக்கும். தேவையெனில் மாற்றி கொள்க.

படவரிசை- 4 என இருக்கும். தேவையெனில் மாற்றி கொள்க

தலைப்பு- வேண்டாமென்றால் தேர்வுசெய்திருப்பதை நீக்கி விடுக.

இந்த மாற்றங்களை செய்தவுடன் கீழே விட்ஜெட் இற்க்கான நிரல் தொடர் தோன்றிடும்  அதனை நகலெடுத்துகொள்க

படம்-2

பின்னர்  நம்முடைய www.skopenoffice.blogspot.com  என்ற வலைபூ பக்கத்திற்கு சென்று அங்கு  Design என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் வலைபூவின் வடிவமைப்பு திரையில் Add a Gadget என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றும் Blogger: Add a Gadgetஎன்ற திரையில் HTML/Java script  என்பதை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில்  ஏற்கனவே நகல் எடுத்த நிரல்தொடரை ஒட்டி சேமித்துகொள்க

படம்-3

அதற்கு பதிலாக நிரல்தொடருக்கு கீழ்பகுதியில் உள்ள Add to Blogger என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் Add page Element  என்ற திரையில்  Add Wedget என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பிறகு வாசகர்கள் இன்ட்லி தளத்திற்கு செல்லாமலேயே நேரடியாக இந்த விட்ஜெட்டின் மூலம் நம்முடைய வலைபூவை பின்தொடரலாம்.

மறுமொழி அளிக்கவும் »

எம்.எஸ்.ஆஃபிஸ்-வேர்டு-2007-ன்உதவியுடன் ஒரு வலைபூவை எவ்வாறு உருவாக்குவது

ஒரு வலைபூவை எவ்வாறு உருவாக்குவது என்று விவரம் தெரியாத ஒரு சாதாரண நபரும் எம்.எஸ்.ஆஃபிஸ்-வேர்டு-2007 என்ற பயன்பாட்டை பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் மிக எளிதாக சிறந்த தொழில்முறை வலைபூ எழுதுபவரை போன்று இணையத்தில் வலைபூஒன்றை உருவாக்கிடமுடியும்  இதற்கான படிமுறை பின்வருமாறு

படிமுறை1 எம்.எஸ்.ஆஃபிஸ்-வேர்டு-2007 என்ற பயன்பாட்டின் திரையின் மேலே இடதுபுறமூலையிலிருக்கும் எம்எஸ்ஆஃபிஸ் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில் new என்பதையும் அதன்பின் தோன்றிடும் திரையில்newblogpost என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்கியபின் create என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்  Enter post title here.doc என்ற வேர்டு-2007 சாளரம் blogpostஎன்ற ரிப்பனின் திரையுடன் தோன்றும் அதன்பின்னர் [Enter Post Title Here] என்ற பகுதியில் உங்களுடைய வலைபூவிற்கு ஒருதலைப்பை உள்ளீடு செய்க

 படிமுறை2. பின்னர் நாம் கூறவிரும்பும் செய்தியை காலியான அதன் உள்ளடக்க பகுதியில் உள்ளீடுசெய்க இந்த உரையை மேலும் மெருகுகூட்டிடவிரும்பினால் திரையின் மேல்புறம் இருக்கும் தேவையான ரிப்பனை பயன்படுத்தி வடிவமைத்து கொள்க..

  படிமுறை3.இந்த பதிவில் படங்களையும் ஒலிஒளிகாட்சிகளையும் உள்ளிணைத்து கொள்க மேலும்தேவையானால் ஒலிஒளிகாட்சி சேவைத்தளத்திலிருந்துகூட நேரடி இணைப்பை ஏற்படுத்திகொள்க

படம்-1

  அதன்பின்னர் மேலேBlogpostஎன்ற ரிப்பனின்  Blogஎன்ற குழுவிலுள்ள  publish என்ற கீழிறங்கு பட்டியல் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பட்டியில் publishஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் தோன்றிடும்  register a blog accountஎன்ற உரையாடல் பெட்டியில் register an  accountஎன்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பின்னர் விரியும் new blog accountஎன்ற உரையாடல் பெட்டியில் choose your blog provider என்றகீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் word press என்றவாறு நம்முடைய வலைபூவழங்குநரின் பெயரை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும்  new word press account என்பதில் நமக்கு ஏற்கனவே வலைபூகணக்கிருந்தால் அதன் விவரங்களை உள்ளீடு செய்து அல்லது புதியதாக இருந்தாலும் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நம்முடைய கணினி இணைய இணைப்புடன் இருந்தால் நம்முடைய வலைபூவின் புதியபதிவு இணையத்தில் வெற்றிகரமாக வெளியிடபட்டதாக அறிவிக்கும் சிறு உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில்   ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலைமுடிவிற்கு கொண்டு வருக.

இதன்பிறகு Open existing அல்லது  home page ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நம்முடைய வலைபூவை நேரடியாக எம்எஸ்வேர்டு-2007- இலிருந்து திறந்து பார்வையிடமுடியும்

 படம்-2

 

மறுமொழி அளிக்கவும் »

ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது போது அதனை செயல்படாது வைத்திருப்பதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவதா

ஒருசில நேரங்களில் நமக்கு ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது அப்போது அதனை செயல்படாது வைத்திருப்பது நல்லதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவது நல்லதா என குழப்பம் ஏற்படும்

இந்த ஃபேஸ்புக் கணக்கு நமக்கு தேவைப்படாதபோது செயல்படாமல் வைத்திட்டால் நம்முடைய நண்பர்கள் நம்மைபறறிய விவரங்களையும் நம்முடைய உருவபடங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. புதியவர்கள் நம்மைபற்றிய விவரத்தை தேடி அறிந்து கொள்ளவே முடியாது

ஆனால் ஃபேஸ்புக்  தளமானது இந்த விவரங்களை தன்னுடைய நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் இது ஒருதற்காலிகமான ஏற்பாடாகும் தேவைபடும்போது மீண்டும் செயல் படுமாறு செய்து  நம்மை பற்றிய விவரங்களில் பழையநிலையை பராமரிக்கமுடியும்

இவ்வாறு செய்வதற்காக இந்த தளத்தின் மேலே கட்டளைபட்டியில் Account=> Account Settings=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

உடன் தோன்றும் திரையின் இடதுபுறத்தில்  உள்ள Security என்ற தாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

பின்னர் விரியும் Security என்ற தாவியின் திரையில் Deactivate my account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அவ்வாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் நம்முடைய கணக்கினை செயல்படாது வைத்திருப்பதற்கான காரணங்களை பட்டியலாக காண்பிக்கும் அவற்றுள் ஒன்றை தெரிவுசெய்து Confirm என்ற பொத்தானை சொடுக்கி நம்முடைய ஃபேஸ்புக் கணக்கின் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

உடன் நம்முடைய கணக்கு செயல்படாததாக மாறிவிடும் மீண்டும் செயல்படுத்திட இந்த தளத்தில் நம்முடைய  மின்னஞ்சல்முகவரியையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

ஆனால் நம்முடைய ஃபேஸ்புக் கணக்கை நீக்கம்செய்தால் நம்மைபற்றிய விவரமுழுவதும் நிரந்தரமாக நீக்கம்செய்துவிடும்  நமக்கு ஃபேஸ்புக் கணக்கே தேவையில்லை எனும் போது மட்டும் நீக்கம் செய்வதற்கு என தனியான தொரு  delete என்ற பொத்தான் எதுவும் இந்த தளத்தில் இல்லை ஆயினும் பின்வரும் இணைய முகவரியை இதற்காக பயன்படுத்தி கொள்ளலாம் https://www.facebook.com/help/contact.php?show_form=delete_account  அல்லது “delete my account என்ற கட்டளையை செயற்படுத்துவதன்மூலம் இந்த தளத்திற்கு செல்லமுடியும்  நீக்கம் செய்வதற்கான  இணைப்பு முகவரியை சொடுக்கியவுடன் இந்த தளமானது this action is permanent and that you cannot reactivate.என்ற ஒரு எச்சரிக்கை செய்தியை நமக்கு தெரிவிக்கும்  தொடர்ந்து கண்டிப்பாக நீக்கம் செய்யவிரும்பினால் Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய கடவுச்சொல்லையும் கேப்ஷா எழுத்துகளையும் உள்ளீடுசெய்து  Okay. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் நம்முடைய கணக்கை நீக்கம் செய்யாமல் பராமரித்திட மீண்டும் ஒரு வாய்ப்பாக மேலும் 14 நாட்களுக்கு மட்டில் நம்கணக்கு பற்றிய விவரங்களை நீக்கம் செய்திடாமல் பராமரிப்பதாகவும் தேவையெனில் இந்த காலக்கெடுவிற்குள் நம்முடைய கணக்கை மீட்டு கொள்ளலாம் என்றும் எச்சரிக்கும்

அவ்வாறு அளிக்கபட்ட 14நாட்கள் கொடுமுடிந்தவுடன் பின்வருமாறு செய்தி உறுதி செய்து கொள்வதற்காக தோன்றிடும்

அதில் Confirm Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் முழுவதுமாக நம்முடைய ஃபேஸ் தளத்தின் கணக்கு  நீக்கம் செய்யபட்டுவிடும் அல்லது  மனம்மாறி Cancel Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் நம்டைய கணக்கு நீக்கம் செய்யாமல் பராமரிக்கபடும்

 

மறுமொழி அளிக்கவும் »

செல்லிடத்து பேசியிலும் நம்முடைய வலைபூவை காணும்படி செய்யலாம்

புதியதாக வலைபூ ஒன்றை உருவாக்கி அதை பல்வேறு வழிகளில் மேம்படுத்தி கணினி மட்டுமல்லாது செல்லிடத்து பேசியிலும் பார்த்து மகிழும்படி செய்யமுடியும் இவ்வாறு செல்லிடத்து பேசியில் நம்முடைய வலைபூவை காண்பதற்கான வழிமுறை பின்வருமாறு

முதலில்  நம்முடைய வலைபூவை திறந்து கொள்க பின்னர் அந்த திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள dashboard=> அமைப்புகள் (settings) => மின்னஞ்சல் மொபைல் (email& mobile)=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் திரையில்  mobile template  என்ற தலைப்பின் கீழ் show mobile template என்பதற்கருகே உள்ள 1.Yes. Show mobile template on mobile devices, 2.No. Show desktop template on mobile devices. ஆகிய இரு வாய்ப்புகளில்  No. Show desktop template on mobile devices. என்ற வாய்ப்பை மட்டும் தெரிவு செய்து கொண்டு  அமைப்புகளை சேமி (save settings) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மாற்றுவதால் நம்முடைய வலைபூவானது கணினியில் திறந்து பார்ப்பதை போன்று செல்லிடத்து பேசியிலும் திறந்து பார்க்கமுடியும்.

 கருத்துரைபெட்டியின் (comment box) மேல்மீட்பு சாளரம் (popup window)

நம்முடைய வலைபூவின் பதிவுகளுக்கு வாசகர்களின் கருத்துகளை கூறுவதற்காக அதற்கான கருத்துரைபெட்டியை (comment box)  பதிவுக்கு கீழே வைத்திருப்போம்  இதனால்  செல்லிடத்து பேசியிலிருந்து  கருத்துரைகள் உள்ளீடுசெய்வது சற்று சிரமமான செயலாகும்.

எவ்வாறெனில் பதிவை திறப்பதற்கு ஒரு முறையும்  அப்புறம் கருத்துரைபெட்டியை சொடுக்கினால்  இரண்டாவது முறையும்  அதன்பிறகு நம்முடைய கருத்துகளை தட்டச்சு செய்து  apply என்ற பொத்தானை சொடுக்குவதால் மூன்றாவதொரு முறையும் . மறுபடியும் apply என்ற பொத்தானை சொடுக்கியபின்னர்  நான்காவதுமுறையும் பதிவேற்றம் ஆகியபின் பதிவிற்கு கீழே வாசகர்களினுடைய கருத்துகள் திரையில் காண்பிக்கும்.

ஆக, செல்லிடத்து பேசியிலிருந்து  ஒரு வலைபூ பதிவிற்கு கருத்துகளை உள்ளீடு செய்வதற்கு ஏறத்தாழ நான்கு முறை அந்த பதிவு முழுமைக்கும் பதிவேற்றமாகிறது. இதனால் நம்முடைய பதிவிற்கு செல்பேசியில் காண்பவர்களிடமிருந்து  கருத்துரைகள் வருவது குறைய வாய்ப்பு ஏற்படுகின்றது. செல்லிடத்து பேசி வைத்திருப்பவர்களும் எளிதாக நம்முடைய வலைபூவை பார்வையிட்டு தங்களின் கருத்துரைகளை உள்ளீடு செய்வதற்கு ஏதுவாக அதனை popup window ஆக வைத்திடுவது மிகநன்று அதற்காக

Dash board=>  அமைப்புகள் (settings) =>  கருத்துரைகள் (comments)  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  திரையில் கருத்துரைபடிவஇடம்(comment form placement)  என்பதற்கருகில் உள்ள வாய்ப்புகளில் மேல்தோன்றும் சாளரம் (popup window ) என்ற வாய்யப்பை தெரிவுசெய்து அமைப்புகளை சேமி (save settings) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இதனால் கணினிமூலம் கருத்துரை உள்ளீடு செய்பவர்களுக்கும் எளிது. பதிவு அப்படியே இருக்கும். கருத்துரை பெட்டி புதியசாளரமாக  திறக்கபட்டு செயல்படுத்தபடும்

வலைபூவின் மாதிரிபடிமம் (template) செல்லிடத்து பேசிக்கு ஏற்புடையதாகஉள்ளதா?

ஒருசில வலைபூக்கள் செல்லிடத்து பேசியில் திறக்கமுடியும் , ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. இதனால் அந்த வலைபூவை செல்லிடத்து பேசியில் படிக்க இயலாது. எனவே இவ்வாறான நிலையில். புதிய மாதிரி படிமத்தை (template) நம்முடைய வலைபூக்களுக்கு தெரிவுசெய்யும் போது செல்லிடத்து பேசிமூலம் அனுகுபவர்களுக்கும் பிரச்சனை இல்லாத சரியான மாதிரி படிமத்தை (template) கவனமாக தேர்ந்தெடுத்திடுக.

மறுமொழி அளிக்கவும் »

இப்போது தினமும் மற்றவர்களுக்கு நம்முடைய வலைபூபற்றிய செய்திகடிதத்தை (NewsLetter) அனுப்பலாம்

1

வலைப்பூ வைத்துள்ள நாம் நம்முடைய புதியபதிவுகளைபற்றியவிவரத்தை நம்மை பின் தொடர்பவர்களுக்கு  தெரிவிப்பதற்காக பல வழிகளை பயன்படுத்திவருகின்றோம். ஆயினும் அவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனைகளை கொண்டுள்ளன.

பொதுவாக  நாம் Friend Connect மூலமாகவே நம்முடைய புதியபதிவைபற்றிய தகவலை அனுப்புவோம். ஆனால் வாரம் முழுக்க  இவ்வாறான தகவலை அனுப்ப முடியாது அதற்கு பதிலாக வாரத்தில் நான்கு நாட்கள்  மட்டுமே அனுப்ப முடியும்.

மேலும் தொழில்நுட்ப வலைப்பூ பதிவாளர்கள் Feedburner மூலம் எளிதாக இந்த செயலை செய்து வருகின்றனர்  ஆனால் புதியவர்களுக்கு இது மிக சிக்கலான பணியாகும்

இப்பிரச்சினையை தவிர்த்திட கூகிள் ஒரு பழைய  எளிய வழியை நமக்கு வழங்குகின்றது .

  படம்-1

  இதற்காக முதலில் இந்தgroups.google.com/  என்ற இணைய முகவரிக்கு சென்று நம்முடைய வலைப்பூ பெயரில் ஒரு குழுவை பதிவு செய்வதற்காக create a group என்ற (படம்-1) பொத்தானை சொடுக்குக

படம்-2

பின்னர் தோன்றிடும்  திரையில் கேப்சா எனும் சாய்வான எழுத்துகளை படித்து அதற்கான சரியான எழுத்தை உரைபெட்டியில் தட்டச்சு செய்துகொள்க அதற்கடுத்தபடியாக தோன்றும்  Add Members  என்ற திரையில் Skip என்ற பொத்தானை சொடுக்குக. பின்னர் தோன்றிடும்  create a group  (படம்-2)என்ற திரையில் குழுவின் பெயர் அருகுசருகு வலைபூ என்றவாறும் மற்றவிவரங்களை படத்தில் உள்ளவாறு உள்ளீடுசெய்து Announcement only என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டுcreate my group  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இப்போது அருகுசருகு வலைபூ என்ற நம்முடைய குழுவின்முகப்பு பக்கம் திரையில் தோன்றிடும். இதில் Tune your group’s settings என்ற(படம்-3) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-3

பின்னர் தோன்றிடும் திரையில் Public website என்பதில்Promotion Box என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-4

  இப்போது அடுத்த group settings என்ற generalஎன்ற (படம்-4)தாவியின் திரையில்  Subscribe to அருசருகு வலைபூ  என்பதற்குகீழுள்ள e-mail என்ற உரைபெட்டியில் யாரும் Subscribe செய்ய வேண்டாம். இதேபோல் இதற்கு கீழே HTML குறிமுறைஇருக்கும். அதனை நகலெடுத்து கொள்ளவும். இதை ஒரு புதிய ” HTML/Java Script”  பகுதியில் ஒட்டிடுக.

பின்னர் settings பகுதியில் Access என்ற தாவியின் திரையில் கீழே படம்-5-ல் உள்ளவாறு தெரிவுசெய்து கொள்க.

   படம்-5

அவ்வாறே  settings பகுதியில்e-mail delivery என்ற தாவியின் திரையில் கீழே படம்-6-ல் உள்ளவாறு தெரிவுசெய்து கொள்க.

படம்-6

இதிலுள்ள message footer  என்பதற்க நம்விருப்பபடி தெரிவுசெய்துகொள்க. ஆனால் Replies to message  என்பதில் கட்டாயம் படம்-6-ல் உள்ளவாறுஅமைத்து கொள்க.

இப்போதுஅடுத்தபடியாக Discussion => New [post=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் நம்முடைய வலைபூ பதிவின் தலைப்பின் (URL) இணைப்பைசெய்து, அனுப்பி விடவும்.

படம்-7

 இதனை தொடர்ந்து இதன்பிறகு Feedburner வேலை செய்தால் தமிழ்மணம் வேலை செய்யவில்லை, தமிழ்மணம் வேலை செய்தால் feedburner வேலை செய்யவில்லை  என்ற பிரச்சினை எதுவும் எழாது .மறக்காமல் நம்முடைய வாசகர்களை இதில் Subscribe செய்து கொள்ளசெய்க.

மறுமொழி அளிக்கவும் »

டம்ளர் தளத்தில் எளிதாக வலைபூஉருவாக்கலாம்

டம்ளர் தளத்தில் எளிதாக வலைபூஉருவாக்கலாம்
கொஞ்சம் இணைய வடிவமைப்பும் இணைய மேம்படுத்துதலும் தெரிந்த நபர்கள்  சொந்த வலைப்பூக்களையும் அல்லது நம்முடைய கோப்புகளை சேமித்து வைப்பதற்கான இணையகாலி இடத்தையும் உருவாக்கிட விழைபவர்களுக்கு http://www.tumblr.com/ என்ற இணைய தளமுகவரியில்இயங்கும் Tumblr என்ற வலைபூஉருவாக்கஉதவும் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது இது மிகசாதாரணமானதாகவும் இலவசமானதாகவும் மிகஎளிதான அமைவை செய்வதற்கானதாகவும் ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே நம்முடைய புதிய பதிவை வலையேற்றி அனுமதிப்தாகவும் உள்ளது இது WordPress.org, என்பன போன்ற வலைபூஉருவாக்க உதவும்  மற்ற கோப்புகளையும் தரவு தளங்களையும் படங்களையும்  பராமரித்தல் செய்யும் படியும் நம்மிடம் கோராது இதில்  Tumblr Blog என்ற வலைபூவை உருவாக்குவதாக கொள்வோம் இதனுடைய பெயரானது 1.kuppansarkarai.comஎன்றவாறு களப்பெயருடன் அல்லது 2.kuppansarkarai.tumblr.com என்றவாறு tumblr என்ற துனைகளப்பெயருடன்  இருப்பதாக கொள்வோம் இரண்டுவகையும் இலவசமானதுதான் பெரும்பாலானவர்கள் முதல்வகையையே அதாவது எந்த பின்னொட்டுமில்லாமல் தம்முடைய சொந்த பெயரிலேயே வலைபூஅமைப்பதை  விரும்புவார்கள். அதற்காக

1. http://www.tumblr.com/ என்ற இணையதளத்திற்கு செல்க அங்கு நம்முடைய மின்னஞ்சல்முகவரி கடவுச்சொல் ,விரும்பும் இணையமுகவரி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து Start Posting என்ற பொத்தானை சொடுக்குக இவ்விடத்தில் நாம் கொடுத்த இணையமுகவரியை தேவையானால் பின்னர் மாற்றிகொள்ளமுடியும்

படம்-1

2.பின்னர் தோன்றிடும் கேப்சா திரையில் எழுத்துகளைசரியாக உள்ளிடுசெய்து    I am human என்ற பொத்தானை சொடுக்குக.

படம்-2

3. உடன் தகவல் சரிபார்ப்பு மின்னஞ்சல்ஒன்று நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கு வந்தசேரும் அதனை திறந்து அதிலுள்ள இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக

படம்-3

4. உடன் Tumblr –னுடைய நம்மை வரவேற்கும் டேஷ்போர்டு திரையில் தோன்றும்

படம்-4

5. பின்னர் create your first post! என்ற தலைப்புடன் Appearance options என்ற பக்கத்தின் சிறு x பெருக்கல் குறியை சொடுக்கி மூடிவிட்டு now customize your blog! என்ற தலைப்புடன் Tumblr avatar என்பதை பயன்படுத்தி நம்முடைய சொந்தபெயரைஉள்ளீடு செய்து இதரவிவரங்களையும் படங்களையும் பதிவேற்றம்  செய்து கொண்டு Show all appearance options என்ற பொத்தானை சொடுக்குக

படம்-5

6. பின்னர் தோன்றும் நம்முடைய வலைபூவிற்காக ஆயிரகணக்கான முகப்பு தோற்றங்களின் HTML இடஅமைவுகள் (layout) உள்ளன அவற்றுள் ஒன்றை தெரிவுசெய்து Save and close என்ற பொத்தானை சொடுக்கி சேமித்துகொள்க

படம்-6

7. பிறகு நம்மைபோன்று மற்றவர்களால்  உருவாக்கபட்ட வலைபூக்கள் பட்டியலாக திரையில் தோன்றும் இதனை தவிர்த்து அடுத்த படிநிலைக்கு செல்க

8. அதன்பின்னர தோன்றும் திரையில் உரை ,படம், ஒலிஒளிபடம், உரையாடல் ஆகிய ஒவ்வொன்றிற்குமான அதனதன் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி உள்ளீடு செய்யலாம்

படம்-7

9. பின்னர் நாம் தெரிவுசெய்ததற்கேற்ப உரை பதிப்புத்திரையில் உரையை சேர்த்தல் add text  ,படத்தை சேரத்தல் add photos,, தேவையான பொத்தான்களை சொடுக்கி நம்முடைய முதல் வலைபூவை உருவாக்கிகொள்ளலாம்

படம்8

10. தேவையான தகவல்களை உள்ளீடு செய்து முடித்தபின்னர் create post என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய வலைபூ வெளியிடப்பட்டுவிடும்

மறுமொழிகள் (1) »

கூகுள் பார்வையில் வலை பதிவுகள்

எப்போதாவது முன்பின் தெரியாத ஊரில் முகவரியில்லாமல் யாரையாவது தேடியது  போன்று நம்முடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் ஏதேனுமொரு செய்திக்காக நாம் அதனை தேடித்தேடியே தொலைந்து போயிருப்போம். அது போன்று இணையத்தில் தேடிடும் சந்தர்ப்பங்களில் நமக்குக் கைகொடுப்பது தான் குறிச்சொற்கள். ஆகும். அதாவது சிவப்பாக  ஒட்டடைகுச்சிபோல உயரமா, டிவிஎஸ்50யில் எப்போதும் பயனிப்பவர் என்றவாறு தேடும் நபரைபற்றிய ஒருசில அடையாளத்தை நாம் சொல்லி தேடுவதற்கு முயற்சிப்போம். இவற்றுள் “சிவப்பாக  ஒட்டடைகுச்சி, உயரமா, டிவிஎஸ்50″ ஆகியவை தான் குறிச்சொற்கள்.

இணையம் என்பது கிட்டத்தட்ட மேல்திருப்பதி போன்றதாகும். அங்கு நாம் தேடும் மொட்டைத்தலையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிக கடினமான செயலாகும் அவ்வாறான கடினமான பணியை செய்வதற்காக நமக்கு தோள் கொடுக்கும் தோழன் தான் இந்த தேடுபொறிகள் (search engines)ஆகும்.  இவை தத்தமக்கென தனித்தனி அட்டவணையைப் பராமரித்து வருகின்றன. அந்த அட்டவணையில் இணையத்தளங்களின் யூஆர்எல்முகவரிகளும், அவற்றின் குறிச்சொற்களும் பொதுத்தகவல்களும் சேமிக்கப்பட்டிருக்கும். நாம் தேடுபொறிகளில் குறிச்சொற்களை உள்ளீடுசெய்து தேடும் போது இந்தசொற்கள் எந்தெந்த இணையத்தளத்தின் குறிச்சொற்களுடன் ஒத்துப்போகிறதோ அவற்றை மட்டும் நம்முடைய தேடலின் முடிவுகளாகக் கணினியின் திரையில் காண்கிறோம்.

ஒரு இணையத்தளத்தின் சராசரி வருகையாளர் எண்ணிக்கை, பக்கங்களின் கட்டமைப்பு, குறிச்சொற்களுக்கும் பக்கங்களின் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற தளங்களில் இருந்து தொடர்புக்கு கொடுக்கப்படும் யூஆர்எல்முகவரிகள் ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு இணையத்தளத்தையும் தேடுபொறிகள் மதிப்பீடு (site rank) செய்து வரிசைப்படுத்துகின்றன. அதனடிப்படையிலேயே தேடல் முடிவுகள்  ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் நமக்கு திரையில் அளி்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் வருகையாளர்கள் மிகமுக்கியமாகும். இன்றைய இணையப்பயன்பாட்டில் பெரும்பாலான வருகைகள் தேடுபொறிகள் மூலமாகவே கிடைப்பதனால் இணையத்தில் குறிச்சொற்கள் மிகமுக்கிய இடத்தைப் பெறுகின்றன.

பொதுவாக தேடுபொறிகளின் பார்வையில் ஒரு இணையத்தளம்  யூஆர்எல்முகவரிகளும், குறிச்சொற்களும் சேர்ந்த ஒரு கலவையாக மட்டுமே தோன்றும். அதனால் தான் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் குறிச்சொற்கள் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக பொருட்களைச் சந்தைப்படுத்தும் இணையத்தளங்களுக்கு இவைதான் உயிர்நாடியாகும். இணையத்தளத்திற்கு சரியான குறிச்சொற்களைத் தேர்ந்தெடுத்தல், இணையத்தளபக்கங்களின் தொடர் கட்டமைப்பு (sitemap)  தேடுபொறிகளின் முடிவுகளில் முதல் இடத்தை அல்லது குறைந்த பட்சம் முதல் பக்கத்திலாவது இடம்பிடிப்பது போன்ற வேலையைச் செய்வதற்கென்றே search engine optimization என்ற ஒரு துறை இருக்கின்றது

இங்கு இணையத்தளங்கள் என்பது வலைபூ(blog) பதிவுகளும் அடங்கும்.  இன்றைய காலகட்டத்தில் தேடுபொறி என்றால் முதலிடத்தில் கூகுள்  வந்து நிற்பது தவிர்க்கமுடியாத ஒன்று. இந்த கூகுள் இணையத்தளம் ஒரு நாள் முடக்கப்பட்டால் இணைய உலகம் முழுவதுமே செயலிழந்து போய்விடும் அளவுக்கு இணையத்தில் இதன் வீச்சு காணப்படுகின்றது.

அதனால் கூகுள் தேடுபொறியில் நம்முடைய வலைபூவானது முதலிடம் பிடிப்பதற்கு முதலில் இதனுடைய ப்ளாக்கர் இணையத்தளத்தில் நம்முடைய வலைபூ பதிவைத் துவங்குக.இதன் மூலம் நம்முடைய பதிவின் பெயர் தேடுபொறியில் குறிச்சொல்லாக சேர்க்கப்பட்டு விடுகிறது. மேலும் நாம் இணைத்து கொள்ளும் திரட்டிகளின் வாயிலாகவும் நம்முடைய பதிவின் தலைப்புகளையும்  லேபிள்களையும் குறிச்சொற்களாக சேர்க்கப்படுகின்றன. இருந்தாலும் தேடுபொறிகள் மூலம் பெறப்படும் வருகையாளர்களுக்கு நம்முடைய பதிவுகளுடன் திரட்டிகளின் மூலமாகவோ அல்லது ப்ளாக்கர் தளத்தின் மூலமாகவோ சேர்க்கப்படும் குறிச்சொற்கள் நாம் எழுதும் தகவல்களை எந்த அளவுக்கு சம்பந்தப்படுத்திக் காட்டும் என்பது நிச்சயமில்லை. தரமான குறிச்சொற்களின் அடிப்படையில் தேடுபொறிகளின் மூலம் நம்முடைய பதிவுகளைத் தேவையான பயனாளர்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கலாம்.

தேடுபொறிகள் ஒரு வலைபூ பதிவைத் தரப்படுத்துவதற்காக ஆராயும் போது எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை நாம் புரிந்து கொண்டாலே மற்ற வேலைகள் நமக்கு மிக மிக எளிதாகிவிடும். நம்முடைய வலைபூவின் தலைப்பு அருசருகு அல்லது ஓப்பன் ஆஃபிஸ் என்றவாறும், ஓவ்வொரு இடுகைக்கும் அளிக்கும் தலைப்பு 2012ல் உலகம் அழியுமா அல்லது  கணக்கு புதிர் என்றவாறும், இடுகைகளில் வழங்கும் படங்கள், எத்தனை பேர் நம்முடைய பதிவுக்கு வருகை தருகிறார்கள், எத்தனை பேர் நம்முடைய பதிவினை தொடர்கிறார்கள், நாம் எத்தனை பேரைத் தொடர்கிறோம், பெறும் பின்னூட்டங்கள், எவ்வளவு  சீரான கால இடைவெளியில் புதுப்புது பதிவுகள் நம்முடைய வலைபூவில் வெளியிடப்படுகின்றனவா அதன் தனித்தன்மை, நம்முடைய  பதிவுக்கு மற்ற தளங்களில் இருந்து யூஆர்எல் முகவரி மூலம் உள்ள தொடர்பு, உங்கள் பதிவின் meta tags மூலம் நாம் வழங்கியிருக்கும் குறிச்சொற்கள் ஆகிய அனைத்தும் தேடுபொறிகள் நம்முடைய பதிவைத் தரப்படுத்துவதற்கு மிகமுக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய வலைபூவின் தலைப்பைப் (blog title) பெரும்பாலும் தாங்கள் எழுதும் செய்திகளுடன் தொடர்புப்படுத்தி வைப்பதில்லை, உதாரணம் அருகுசருகு  பொதுவாக  தத்தமது சொந்த எண்ணங்கள், கிறுக்கல், பிதற்றல், உளறல்,  போன்ற தலைப்புகளை இவற்றில் காணப்பெறலாம். ஆகவே முதலில் செய்ய வேண்டியது நம்முடைய வலைபூவின் தலைப்பானது நாம் எழுதும் செய்திகளோடு தொடர்பு உள்ளதாக வைத்துக் கொள்வதே  அதே போன்று ஓவ்வொரு இடுகைக்கும் நாம் வைக்கும் தலைப்பும் (post title) மிக முக்கியமாகும் சிறுகதை, கவிதை எழுதும் பதிவர்கள் தம்முடைய தலைப்பின் இறுதியில் சிறுகதை அல்லது கவிதை என்பன போன்ற சொற்களைச் சேர்த்தால் தேடுபொறிகளில் சிறுகதை, கவிதை போன்ற குறிச்சொற்களைத் கொண்டு தேடும் அன்பர்களுக்கு நம்முடைய வலைபூவின் தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும் பாக்கியம் பெறுவார்கள்.

பின்னூட்டங்கள், பதிவினைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை  நாம் தொடரும் எண்ணிக்கை, மற்ற பதிவுகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ நம்முடைய பதிவிற்கு தொடர்பு யூஆர்எல் முகவரிகள் ஆகியவை நம்முடைய பதிவின் நம்பகத்தன்மையினை அதிகரிக்கும் கூடுதலான காரணிகள் ஆகும்.

இங்கு பின்னூட்டங்கள் என்பது தனிப்பட்டமுறையில் எத்தனை பதிவர்கள் பின்னூட்டங்கள் வழங்குகிறார்கள் என்பதாகும்.. ஒரே நபரோ அல்லது குழுவோ செய்யும் பின்னூட்டக் கும்மிக்கு எந்த பயனும் இல்லை. மேலும் ஒருவலைபூவானது  கிட்டத்தட்ட ஆர்குட் போல ஒரு சமூக வலைதளம் ஆகும் என்பதையும் நினைவில் கொள்க. நம்முடைய பதிவு எத்தனை மற்ற பதிவுகளைத் தொடர்கின்றது  எத்தனைப் பதிவுகள் நம்முடைய பதிவைத் தொடர்கின்றன, அவ்வாறு தொடர்புகளை இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் உள்ளடக்கம் (content) எவ்வாறு நம்முடைய பதிவின் உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது போன்ற இன்னபிற செய்திகளின் அடிப்படையிலும் நம்முடைய பதிவின் தரம் எடை போடப்படுகின்றன. இதில்தான் தேடுபொறிகளின் பார்வையில் சாதரண இணையத்தளங்களிலிருந்து வலைபூக்களின் பதிவுகள் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு நாம் கவிதை எழுதும் பதிவு வைத்திருந்தால், மற்ற கவிதைகள் எழுதும் பதிவுகளோடு தொடர்பு படுத்தப் பட்டிருப்பின் சிறப்பு ஆகும். அவ்வாறு தொடர்புப் படுத்தப்பட்டிருக்கும் பதிவுகள் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் நம்முடைய பதிவினை விட சிறப்பானதாக இருந்தால் மிகமிகச்சிறப்பு. ஆகும்

அடுத்து ஒரு பதிவராக நம்முடைய செயல்பாடு எப்படி இருக்கிறது (active blogger) . எத்தனை நாளைக்கு ஒரு முறை நம்முடைய பதிவில் புதுப்புது இடுகைகள் பதிவேற்றப்படுகின்றன, எத்தனை பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பன போன்ற செய்திகளும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. தரப்படுத்துதலில் மிகவும் சக்திவாய்ந்த காரணியாகக் கருதப்படுவது மற்ற தளங்கள் அல்லது பதிவுகளில் இருந்து நம்முடைய பதிவிற்கு கொடுக்கப்படும் சுட்டிகள்தான். சில தொழில்முறைப் பதிவர்கள் தேடுபொறியின் தரப்பட்டியலில் முன்னேறும் பொருட்டு நட்பு முறையில் அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சுட்டிகள் கொடுத்துக் கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு விஷயத்திற்கு மதிப்பதிகம் என்று அறிந்தால் அன்றே அதைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது தான் கண்ணுக்கும், பணப்பைக்கும் அழகென்பதால்,  வருடச் சந்தா செலுத்தினால் உங்களின் சுட்டியை தங்கள் தளத்தில் வெளியிடும் தளங்கள் ஏராளமாக உள்ளன.

பொதுவாக தேடுபொறிகள் நம்முடைய பதிவினை ஆய்வு செய்யும் போது படங்களை அவற்றின் கோப்புப் பெயர்  அவற்றுடன் இணைக்கப்பட்ட குறிச்சொற்களையுமே எடுத்துக் கொள்ளும். எனவே படங்களை இணைக்கும் பொழுது கோப்பின் பெயர் படம் விளக்கும் செய்தியை ஒத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படங்களை இணைத்த பிறகு EDIT HTML பகுதிக்கு சென்று கீழ்காணும் முறையில் அப்படத்திற்கானக் குறிச்சொற்களை வழங்கலாம்.

< src=”test.gif” width=”25″ height=”25″ alt=”Place your keyword list here”>

அதே போன்று meta tag மூலம் நம்முடைய பதிவிற்கு பொதுவாக என்னென்ன குறிச்சொற்கள் கொடுக்க விரும்புகிறோமோ அதனை வழங்கலாம். meta tag மூலம் கொடுக்கப்படும் குறிச்சொற்களுக்கு முக்கியத்துவம் கொஞ்சம் குறைவு என்றாலும், அவற்றையும் தேடுபொறிகள் அலசுவதால் கீழ்காணும் முறையில் dashboard -> layout -> edit html சென்று < /head >முன்பாக குறிச்சொற்களை வழங்குக.

< equiv=”Content-Type” content=”text/html; charset=utf-8″>

< name=”DESCRIPTION” content=”meta description goes here which appears in search results “>
< name=”KEYWORDS” content=”your keywords,go here,separated by a comma,but not a space”>

இவ்வளவும் செய்தாலும்  நம்முடைய  வலைபூவின் பதிவு தேடுபொறிகளின் தரப்பட்டியலில் முதன்மை பக்கத்தில் எப்போது வரும் என்பது தேவரகசியம் ஆகும். சிலவாரங்கள், மாதங்கள், சமயத்தில் வருடங்கள் கூட ஆகலாம். சிறிதுசிறிதாக நம்முடைய வலைபூவிற்கு மெருகேற்றும் வேலையைச் செய்து கொண்டே பொறுமையாக காத்திருக்க வேண்டியது தான் நம்முடைய பணியாகும் .  தேடுபொறிகள் வலைபூக்களின் பதிவுகளை விட இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரியாக மேம்படுத்துதலாலும்  நம்முடைய தகவல்களின் தனித்துவத்தாலும் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் இணையதளங்களைத் தாண்டி நம்முடைய பதிவுகள் முன்னெறுவது மிக எளிதான செயலாகும்

ஓவ்வொரு தேடுபொறிக்கும் crawler என்ற நிரல் ஒன்று இருக்கும். இந்த நிரல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் அட்டவணையில் இருக்கும் தளங்களுக்கு வருகை தந்து தரப்படுத்தத் தேவையான தகவல்களைத் திரட்டிச் செல்லும்.

இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும், பதிவுகளும் கிட்டத்தட்ட கண்ணாடி அறை போன்றதாகும். வருகையாளர்கள் நம்முடைய படைப்புகளைப் பார்க்க முடியுமே தவிர உள்ளிருக்கும் நம்மை அன்று.  வருகையாளர்கள் எவற்றைக் கவனிக்கிறார்கள், எந்தப் படைப்புகள் பெரும்பாலோனோரை ஈர்க்கிறது, எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு நம்முடைய தளமோ/பதிவோ குறித்து எப்படி தெரிந்து கொண்டார்கள் ஆகியவிவரங்களை நம்முடைய இருப்பைக் காட்டிக் கொள்ளாமலேயே கண்டுகொள்ளலாம். இதன் மூலம் நம்முடைய பதிவினைப் பார்ப்பவர்களின் பார்வையினை அலசிக்  நாமே நம்முடைய பதிவினை சுயப்பரிசோதனை செய்து  கொள்ள முடியும்.

இப்படி நம்முடைய வலைபூ பதிவைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்றான, நம்முடைய பதிவிற்கு தங்களுடைய தளங்கள்/பதிவுகளில் யூஆர்எல்முகவரி கொடுத்துள்ள நல்ல உள்ளங்கள் யார், யார் என்பதை  அறிந்துகொள்ள கூகுளுக்குச் சென்று “link: yourblogname. blogspot.com” என்று மனு போட்டால் மறுகணம் தேவையான தகவல்களைப் பெறலாம்.

நம்முடைய தளத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது, நம்முடைய வலைபூவினுடைய பதிவிற்கு வந்து போன விவரம் ஆகியவைக் குறித்து அறிந்து கொள்ள google webmasters , வருகையாளர்கள் குறித்தான அலசலுக்கு google analytics .ஆகிய இரண்டு சேவைகளும் கூகுளின் crawler நிரல் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன

இந்த Google webmaster சேவையினைப் பயன்படுத்த உங்கள் வலைபூவின் மேலிருக்கும் dashboard => tools and resources => webmaster tools => enable webmaster tools => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில்   நம்முடைய பதிவை இணைத்துக் கொள்ளலாம். அல்லது http://www.google.com/webmasters/ என்ற யூஆர்எல்முகவரிக்குச் சென்று adding a site => verfiy through meta tags=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலமும் நம்முடைய பதிவினை இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அதிலுள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து பார்த்து  செயல்படுத்தினால் ஓரளவு அனைத்து விவரங்களும் நமக்கு கைவரப்பெறலாம்.

google analytics சேவையினைப் பயன்படுத்த http://www.google.com/analytics/ என்ற யூஆர்எல்முகவரிக்குச் சென்று add new website profile என்பதைத் தெரிவுசெய்து நம்முடைய வலைபூவின் யூஆர்எல்முகவரியை உள்ளீடு செய்க. உடன் நம்முடைய பதிவுக்கான நிரல் ஒன்று வழங்கப்படும். இந்தநிரலுக்கு அருகில் ‘one domain with multiple subdomains’ என்பதைத் தேர்வு செய்தபின் நிரலை பிரதியெடுத்து நம்முடைய வலைபூவின் மேலிருக்கும் dashboard => layout => edit html=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில்  < / body > என்ற இடத்திற்கு முன்பாக ஒட்டி சேமித்தபின்  24 மணி நேரம் கழித்து google analytics சென்று பார்த்தால் நம்முடைய புருவம் உயரும் வண்ணம் விவரங்களை காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சேவைகளுமே இலவசம்ஆகும்  இதனை நம்முடைய ஜிமெயில் கணக்கின் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.ஆகும்

இறுதியாகgoogle sandbox effect குறித்து தெரிந்து கொள்வதுநல்லது தேடுபொறிகள் தரப்படுத்தப் பயன்படுத்தும் நிரல்களே அவர்களின் தொழில்ரகசியம் ஆகும். அவற்றைப் பற்றி எப்போதும் வெளிப்படையானத் தகவல்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் பல தளங்களை நடத்தி வருகிறார். மேலும் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிய தளத்தினை தேடுபொறிகளின் தரப்பட்டியலில் குபீரென்று மேலே கொண்டு செல்ல புதிய தளத்தின் யூஆர்எல்முகவரிகளைத் தன் வசமுள்ள தளங்கள் அனைத்திலும் இடுகிறார். இவ்வாறு திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மாபெரும் வெற்றி என சுயவிளம்பரங்கள் வருவதைப் போல குறுகிய கால இடைவெளியில் தரப்பட்டியலில் அசாதரணமாக முன்னேறும் தளங்களை கூகுள் வேண்டுமென்றே 3 முதல் 6 மாதங்கள் வரை அடக்கி வைக்கின்றது என்ற கருத்து பொதுவாக பரவலாக நிலவுகின்றது, இதைத்தான் sandbox effect எனகூறுகின்றார்கள். இதில் இருந்து தப்பிக்க பொறுமையாக 6 மாதம் பார்க், பீச் என்று ஊர்சுற்றி விட்டு வந்தால் தவிர வேறு வழியில்லை. எல்லா தளங்களுக்கும் இது போன்று நிகழ்வதில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கூகுள் ‘எங்களின் நிரல்களின் செயல்பாட்டில் சில குறிப்பிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இவ்வாறு நேர வாய்ப்பிருக்கலாம், இது குறித்து தலைமை நிருவாகிக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்’ என்று பட்டும் படமாலும், தொட்டும் தொடாமலும் பொறுப்பாகப் பதில் சொல்கின்றது.

மறுமொழிகள் (2) »

விண்டோவின் நேரடிவலைபூ எழுதி (windows-live-writer)

விண்டோவின் நேரடிவலைபூ எழுதி (windows-live-writer)எனும் வசதியானது பெரியபெரிய ஜாம்பாவன்க ளினுடைய  அழகிய வலைபூக்களை போன்று சாதாரணமானவர்கள் கூட தம்முடைய எண்ணத்தில் உருவாகிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் விண்டோவில் உருவாக்கி Blogger,Word press  போன்ற எந்தவொரு வலைபூவழங்குபவரின் இணையத்திற்குள் வலையேற்றமுடியும்

இதனை விண்டோ எக்ஸ்பி எனில் http://explore.live.com/windows-live-writer-xp விண்டோ விஸ்டா அல்லது 7 எனில் http://explore.live.com/windows-live-writer?os=winxp என்ற இணைய பக்கத்திற்கு சென்று   பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இந்த windows-live-writer என்ற கோப்பினை தெரிவுசெய்து செயற்படுத்தி கணினியில் நிறுவுகை செய்க. உடன் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் writer check-box என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறிது நேரம் காத்திருக்கவும்  பின்னர் தோன்றிடும் திரையில் Other blog service என்பதை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் தோன்றிடும் Add a blog account என்ற தலைப்புடன் உள்ள உரையாடல்பெட்டியில்  நம்முடைய வலைபூவழங்கநரின் முகவரி பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

இந்த நிறுவுகை பணி முடியும் வரை காத்திருக்கவும் இந்த செயலின்போது நாம்குறிப்பிட்ட வலைபூவழங்குநரின்இணையதளத்திலிருந்து நம்முடைய வலைபூ தெடர்புடைய அனைத்து அமைவுகளும் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்

இறுதியாக நம்முடைய வலைபூவிற்கு ஒரு பெயரிட்டு Finish.என்ற பொத்தானை சொடுக்குக. இதன்பின்னர் நம்முடைய கட்டுரைகள் படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் தெரிவுசெய்து இழுத்துசென்று விடுதல் வாயிலாக வெளியீடு செய்யமுடியும்  இரண்டாவது வழியாக கருவிபட்டையிலுள்ள அதனதன் கருவி வாயிலாக நம்முடைய கட்டுரைகள் படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் நம்முடைய வலைபூவில் கொண்டு சேர்க்கலாம்.

Windows Live Writer வாயிலாக முதன்முதலில் நம்முடைய வலைபூவில் வெளியிடும்போது நம்முடைய கணக்கின் பயனாளர் பெயர்  கடவுச்ற்கள் போன்றவற்றை உள்ளீடு செய்யுமாறு கோரும் அப்போது Remember my password என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்வது நல்லது

வலைபூவைபோன்றே நம்முடைய கட்டுரையை வெளியிடுமுன் preview  என்ற பொத்தானை அழுத்தி முன்காட்சியாக பார்வையிடும் வசதிகூட இதில் உள்ளது

View in browser after publishing.என்ற பெத்தானை அழுத்தி வெளியிட்டபின்னர் நம்முடைய வலைபூவை பார்வையிடலாம்

மறுமொழி அளிக்கவும் »

சமூக வலைதளத்தில் உள்ள நம்முடைய நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

Facebook, Twitter, Flickr, MySpace  போன்ற  பலசமூக வலைதளத்தில் இணைந்திருக்கும்  நம்முடைய நண்பர்களை அவர்களின் பெயரை உள்ளீடு செய்து  ஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளத்திலும் தேடலாம

நண்பர்கள் மட்டுமல்ல நமக்கு தெரிந்தவர்கள் பெயர் மட்டும் தான் நமக்கு தெரியும்நிலையில் நாம். ஒவ்வொரு சமூக வலைதளமாக சென்று இனி தேடத்தேவையில்லை அதற்கு பதிலாக
ஒரே இடத்தில் இருந்து கொண்டு நாம் அனைத்து சமூக வலைதளத்திலும் தேடலாம் இதற்காக ஒருஇணையதளம் உள்ளது. அதன் முகவரி : http://snitch.name ஆகும்.

இந்தத்தளத்திற்கு சென்று  இதிலிருக்கும் உரைபெட்டியில் யாரைத் தேடுகின்ரோமோ அவருடைய பெயரின் விவரத்தை First name , Last Name என்றவாறு உள்ளீடு செய்து எந்தெந்த சமூக வலைதளத்திற்கு  சென்று தேடவேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுக்கவும் அதன் பின் Search என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து வரும் திரையில் நாம் உள்ளீடு செய்து பெயருடன் உள்ள அனைவரின் தகவல்களும் திரையில் காண்பிக்கும் . ஒவ்வொரு சமூக வலைதளத்திலும் பயனாளரின் பெயர் ஒவ்வொரு வகையில் வைத்திருந்தாலும் நம்மால்  அவற்றை  தேடிபிடிக்கமுடியும்  இதன் சிறப்பம்சமாகும்
கூடுதலாக First Name மற்றும் Last Name வைத்து தேடுவதால் பல பிரபலங்களின் சமூக வலைதளத்தின் முகவரியும் நமக்கு கிடைக்கும்.

மறுமொழி அளிக்கவும் »

நம்முடைய மூளைப்பகுதி எவ்வாறு செயல்படுகிறது

நம்முடைய மூளைப்பகுதி எவ்வாறு செயல்படுகிறது என நமக்கு இதுவரையில் எதுவும் தெரியவில்லை என அழுத்தம் திருத்தமாக பேராசிரியர் பீட்டர் ப்ரம்ஹர்ஸ் தெளிவுபடுத்துகிறார்.

மூளையின் சாம்பல் நிறப்பகுதியின் அடிப்படை நிகழ்வுகளின் சமிக்சைகளைகூட decoding மூலம் நம்மால் இனங்கான முடியவில்லை என்று மேலும் வலியுறுத்துகிறார்.

இவர் Munich-ல் உள்ள Max blank  உயிரியல் வேதியில கழகத்தின இயக்குநராக இருந்து வருகிறார், நம்முடைய மூளைப்பகுதியில் உள்ள சாம்பல் நிற செல்கள் துல்லியமாக எவ்வாறு பணியாற்றுகின்றன என அறிந்துகொள்வதே நமக்கு மிகப்பெரிய வெற்றியாகும் என அறிவிக்கிறார்,

இன்றைய சூழலில் இது சாத்தியமாக உள்ளதா எனில் அதுதான் இல்லை எங்கு ஆரம்பித்தாலும் முட்டுச்சந்து போன்று பாதை முடிவு பெற்றுவிடுகிறதேயொழிய தெளிவு ஏதும் கிடைக்கவில்லை. விஞ்ஞானிகள் தற்பொழுது இந்த ஆரம்ப தடைகளையெல்லாம் கடநது மூளையின் எண்ண அலைகளைப்(Sheer thought) பயன்படுத்தி கணினியில் அடிப்படை செயற்பாடுகளை கட்டுப்படுத்தி இடம் சுட்டியை திரைமுழுவதும நகர்த்தும் செயல் மூலம்  தம்முடைய திறமைகளை நிரூபித்துள்ளனர்

நம்முடைய மூளையில் எந்த பகுதி இதனை செய்கிறது என மனித மூளையும் இலக்க உலகும் ஒத்திசைவு செய்யப்பட்டு அளவிட்டு மின்னனு அமைவிற்கு பதிலீடு செய்து முடிவை அடைந்துள்ளனர்,

இதற்காக பெர்லினில் உள்ள Fraunhoer Computer Architecture and Software Technology  கழகத்தில் 128 சென்சார்கள் பொருத்தப்பட்ட குளிக்கும்போது தலையில் அணியும் தொப்பியை(Bathing cap) போன்ற சாதணத்தை பயன்படுத்தினர். மூளையானது ஒரு கணினியுடன் இடைமுகம் செய்யப்பட்டு(Brain Computer Interface ) மனித எண்ண அலைகளை கணினியை கட்டுப்படுத்தும் கட்டளையாக உருமாற்றுகின்றனர். இதனை 100 மணிநேர கடுமையான பயிற்சிக்கு பிறகு பரிசோதனையின் மூலம் கணினியின் இடம்சுட்டியை இடம்விட்டு சிறிதளவு நகர்த்தினர். இந்த துறையில் இன்றைய கால கட்டத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்து இந்த அமைவை மறு ஆக்கம் (Calibrating) செய்துள்ளனர். மிக முக்கிய அடிப்படை கட்டமைவுசெய்த பிறகு கணித்திரையினை  மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு பராமரித்து  எண்ண அலைகளை(Sheer thought) பயன்படுத்தி இடம்சுட்டியை அங்கும் இங்கும் மிகச்சுலபமாக நகர்த்துகின்றனர். ஏன் Shower cap போன்ற ஒளிப்பட விளையாட்டுகளை கூட எண்ண அலைகள் மூலம் இடம்சுட்டியை நகர்த்தி விளையாடுகின்றனர்.

தற்போது ஆரம்ப மின்சமிக்சைகளை மாற்றும் அளவு இவ்வாறானஅமைவால் பத்துமடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. படித்தறியும் செயலை இயக்கத்திற்கு மாற்றியமைக்கும் வழியை காண்பதுதான் அடுத்த தடையாகும். இப்போது கணினி புரிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட வழியில் நாம் சிந்திக்க வேண்டும் என்பது  தேவையில்லாததாகிறது. அல்கரிதம்களை உருவாக்கி இதன் மூலம் பல்வேறு வகையான எண்ண அலைகளின் அமைப்பின் அர்த்தம் என்னவென்று கணினி தெரிந்து கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.

இந்தShowercap சாதனம்  நொடிக்கு 1000 மடங்கு வேகத்தில் மூளை பகுதியிலிருந்து மின்னழுத்த எலக்ட்ரான்கள் வழியாக சமிக்சைகள் பெறப்படுகிறது. இந்த மின்னழுத்தம் கணினிக்கு கடத்தப்பட்டு ஒரு சில நொடிகளில் மிகச்சிறு சமிக்சையாகத்தான் திரும்பப் பெறப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில் இடம்சுட்டியை நகர்த்துவதற்கு மட்டுமல்லாமல் கண்சிமிட்டுதல், சுவாசித்தல், தசைகளின் பிற இயக்கங்கள் போன்ற தானாகவே நடைபெறும் உயிர்ச்செயல்களை மூளை எவ்வாறு செயல்படுத்துகிறது என புரிந்து கொள்வதற்காக நூற்றுக்கு மேற்பட்ட சென்சார்களின் வழியாக விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

நரம்பியல் ஆய்வாளர்கள் செயற்கை அறிவு தேற்றத்தை நடைமுறைப் படுத்தும்போது கிடைக்கும் சமிக்கைகளை புரிந்துக்கொள்வதற்கு நரம்பின் இயற்கை வலைப்பின்னல் அடிப்படையில் செயல்படுத்துகின்றனர் உதாரணமாக இந்த சாதனங்களின் மூலம் வலதுகை, இடதுகை இயக்கங்களுக்கான நகர்வு சமிக்சைகளை ஒருங்கிணைக்க முடியும். அதன் பிறகு  இரண்டு கைகளை பயன்படுத்தி விசைப்பலகையில் 20 நிமிடத்திற்கு தட்டச்சு செய்வதை EEG  என்ற தரவு அடுக்கும் சாதனத்திலிருந்து செயலியை பயன்படுத்தி இடதுகை வலதுகை சமிக்சைக்கு ஏற்றவாறு இந்த தகவல்கள்சேகரிக்கப்பட்டு மேலும் செயல்பட பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. இந்த அளவிடுகள் மூலம் எவ்வாறு தசைகள்அடிப்படை சமிக்சைக்கு எற்றவாறு  செயல்படுகிறது என தெரிந்து கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் மூளையானது எந்த ஒரு தசையின் இயக்கத்திற்கும் 1/2 நொடி முன்பாகவே இயற்கையாக சமிக்கையை உற்பத்தி செய்வதன் மூலம் இடதுகையால் அல்லது வலதுகையால் எதனை இயக்குவது என முடிவு செய்து செயல்படுத்த முற்படுகிறது என அறிந்து கொண்டனர். இந்த வரைப்படங்களிலிருந்து அனைத்து சமிக்கைகளும் செரிபரல் கார்டக்ஸ் பகுதி வழியாக தான் கடத்துப்படுகிறது என்றும் இவைகளே நம் எண்ண அலைகளின் அடிப்படையாகும் எனவும் அறிந்து கொண்டனர். எண்ண அலைகளுக்குள் செல்வதற்கும் வரையரை உள்ளன. உதாரணமாக  தொலைபேசி எண்களை எண்ணுவதாக கொள்வோம். இந்த செயலுக்காக முளையில் ஒரு சமிக்சைகூட நம்மால் காண முடியவில்லை. இதனை மறறொரு செயல்முறை மூலம் வெற்றிகொள்ளப்பட்டதுபல இசைக்குறியீடுகள். தொழில்முறை இசைக்கலைஞர்கள் மற்றும் மற்றசாதாரணமானவர்கள் முன்பும் இசைக்கப்பட்டன. எதிர்பார்த்தவாறு தொழிற்முறை இசைக்கலைஞர்கள் தங்களின் பயிற்சியாலும், அனுபவத்தாலும்  இந்த இசைக்குறியீடுகள் பெரிய அல்லது சிறிய அளவீடு என அங்கீகரித்தனர். நன்றாக செய்தனர். இருந்தபோதிலும் மூளையில உள்ள எண்ண அலைகள் வேறு ஒரு முடிவை அளித்தன. தொழில்முறை இசைக்கலைஞர்களைவிட சாதாரணமானவர்கள் இசைக்குறியீடுகளை மிகச்சிறப்பாக புரிந்துக்கொண்டு செயல்பட்டனர், இதனடிப்படையில் பார்க்கும்போது மூளையை பற்றியும் எண்ண அலைகள் பற்றியும் மேலும் அறிய வேண்டியது நிறைய உள்ளன.

மனிதனையும் கணினியும் ஊடாடும் தன்மையில் உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து மூளையின் மின் அசைவுகளின் தன்மையை மிகவேகமாக அறிந்துக் கொண்டனர், Mug shot என்பது பழைய முறையைவிட கணினி உருவ அங்ககீரித்தலில் பத்து மடங்கு கூடுதலாக பதிவாகிறது. இந்த பயன்பாட்டை பயன்படுத்தி விமான நிலையத்தில X-கதிர் மூலம் பொருட்கள் பரிசோதிக்கும் பணியை செய்ய முடியும். ஏதேனும் வித்தியாசமாக மனிதமூளை தெரிந்து கொண்டவுடன் மின்அசைவை தூண்டுகிறது.உடன் பெட்டியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனசரிபார்க்கமுடியும் , இது கணினி இடைமுக செயல் திட்டத்தின் கணினி விளையாட்டுகளில மிகசிறப்பாக செயல்படுகிறது. சிலின் பள்ளத்தாக்கில் இதற்கான தொடர்புடைய சாதனங்களை உருவாக்கி ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதே அடிப்படையில் EEG புரிந்து கொள்ளும் தலைக்கவசத்தை குழந்தைகளுக¢கு மருத்துவர்கள் கவன சிதறல் மற்றும் மற்ற நரம்பியல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். பேராசிரியர் முல்லர் இந்த ஙிசிமி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வியாபார கணினி விளையாட்டிற்காக பயன்படுத்துவதால் கணினியுடன் மனித மூளை ஊடாடுவது பற்றிய ஒன்றும் அறிந்து கொள்ள இயலாது அரைகுறையாக முடிந்துவிடும் என அறிவுறுத்துகிறார்.

மற்றொரு வகையில் திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக செய்யப்படும் செயல்களுக்கு ரோபாட்டை கட்டுப்படுத்தும் செயல் திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஙிசிமி-யில் எண்ண அலைகள் கையை இயக்குகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட ரோபாட்டும் அப்படியே பின்பற்றி செயல்படுகிறது. இந்த அமைவில் எண்ண அலைகள் ரோபோட்டின் கட்டளைகளை கட்டுப்படுத்துகிறதுமுந்தைய குழாய் அமைவின் எலக்ட்ரான் மூலம் மூளையின் செயல்களை சார்ந்த புல உருவ அமைவை பயன்படுத்தி வருடும் இயந்திரத்தின் மூலம் நோயாளியின் மூளையை வருடுவது போன்று இங்கு நரம்பு இயக்கங்கள் அளவிடுவதற்கு பதிலாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டங்கள் கண்காணிக்கப்படுகிறது. எப்படியாயினும் இந்த அமைவு கையாளத்தக்க அளவிற்கு சிறியதாக உள்ளது.

முளையின் சமிக்சையின்படி கை நகர்ந்த இரண்டு நொடிகளுக்கு பிறகே ரோபாட்டின் கை நகருவதாக அனுபவம் காட்டுகிறது.இந்த அசிமோவை பயன்படுத்தி அடுத்த 10 ஆண்டுகளில் தானியங்கி உற்பத்திகளில் அதிகளவு செயல்களை கட்டுப்படுத்த முடியும் என பிஷீஸீபீணீ நிறுவனம் நம்புகிறது. ஆம் உண்மையில் நம்முடைய மனதில் உள்ள எண்ண அலைகளை வைத்தே நாம் பயனம் செய்யும் வாகனத்தை இயக்குவதற்கான செயலை செய்ய முடியும். இது மட்டுமல்லாது  இயக்க நேரத்தில் ஓட்டுபவர் சோர்வடைந்தால் இதன் மூலம் வாகனத்தை கைகளால் இயக்குவதற்கு பதிலாக எண்ண அலைகள் மூலம் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியும்.

நடப்பில் இருக்கும் Bathing cap  ஆனது ஒவ்வொரு முறையும் ஆய்வுசெய்யும்முன் தலைமுடியிலிருந்து Conductivity gel  முழுவதையும் சுத்தமாக்கியபிறகே பயன்படுத்த முடிகிறது. ஆனால் base ball cap-ல் இவ்வாறு செய்ய தேவையில்லை. இந்த shower Cap லிருந்து அடுத்த மாற்றுவழியாக நரம்பியல் துறையில் இப்போது மைக்ரோ சிப்பை மூளைப்பகுதியில் பதியன் செய்து அதன் மூலம் இந்த ஆய்வை செய்கின்றனர்.

25 வயது மாத்யூ நாகலே என்பவர் ஒரு நாற்காலி மீது அமைதியாக உட்கார வைக்கப்பட்டார். அவருடைய தலையின் மேல் தோலுடன் விரல் போன்ற துளைஅமைப்பின் கம்பி வழியாக இணைக்கப்பட்டது. அவருக்கு பக்கத்தில் ரோபாட் கை வைக்கப்பட்டிருந்தது. நான்கு சதுர மில்லிமீட்டர் சிப்புடன் 100க்கு மேற்பட்ட கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பானது இவருடைய மூளையின் கார்டக்ஸ் பகுதியுடன் கிரேனியத்தின் சிறிய துளை வழியாக இணைக்கப்பட்டு பத்திரமாக உட்காரும்படி அமைக்கப்பட்டது. மூளையின் நுழைவாயில் Brain gate  எனப்படும் இந்த கார்டக்ஸ் பகுதியில் சிறிய மோட்டார் வைத்து இயக்குவது போன்ற வன்பொருள் அமைப்பு குழுவான விரல் நகர்த்தும் செயல்பாடுகளுக்கு பதிலாக தடையற்ற மின்னியல் பரவும் தொடர்பு வழிமுறைபயன்படுத்தப்படுகிறது இவர் தன்னுடைய எண்ண அலைகளின் வலிமையால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரோபாட் கையை நகர்த்த முயன்று வெற்றிபெற்றுள்ளார். மூளை செயல்கள் ணிணிநி அடிப்படையில் இடைமுகம் செய்வதால் எந்த ஒரு பயனும் கிடைக்காததுடன் மூளைப்பகுதியும்பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அல்லது எந்த ஒரு பயனும் இல்லாத மூளைப்பகுதி பாதிக்கப்படும். மூளை சமிக்கைகளை படம் உருவம் தொழில்நுட்பத்தைவிட பேராசிரியர் பீட்டர் பிரம்ஹர்ஸ் மனித மூளைக்கும் கணினி இயக்க முறையை இணைக்கும் அடிப்படை இணைப்பை செல்தடமாக ஏற்படுத்தியுள்ளார்.இது ஙிசிமி-ன் நடைமுறை விளைவை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய சவாலாக உள்ளதுமூளையின் சிறிய பகுதியின் சராசரி மதிப்பை சேகரிக்கும்போது உண்மையில் கண்ணுக்கு புலப்படாத சமிக்சைகளை கடத்தப்படுகிறது. மூளையின் செயல்பாடுகளுக்கு இணையான செயல்பாடுகளை ஒரு எலியினுடைய மூளையின் ஹிப்போ காம்பஸ் பகுதியில் சிறிய அடுக்கு எவ்வாறு செயற்படுகிது என்பதை செயல்முறை பயற்சியின்போது அறியப்பட்டது. அப்போது ஒருசெயலுக்கான தகவல் நிரந்தரமாக மூளையின் பகுதியில் பாதுகாப்பதற்கு முன்பு தற்காலிகமாக இந்த பகுதியில் தேக்கப்படுகிறதுதரவுகளின் செயல்முறைகள் இந்த ஹிப்போகாம்பஸ் பகுதியில் தான் நடைபெறுகிறது என நம்பப்படுகிறது. இதுவே மனித மூளையின் செயலை அறிந்து கொள்ள உதவும் அடிப்படை திறவு கோளாகும்.

உருவப்படங்கள் மிக மெதுவான இயக்கத்தில் திரையில் மில்லி நொடிக்குள் என்ன நடைபெறுகிறது என காட்டுகின்றன. இவைகளை மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மின் சமிக்சையின் அறிகுறியாகும். பயன்படுத்தப்பட்ட எலியின் மூளை பகுதியில் நரம்பு செல்ஒன்றின் ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் 16000க்கும் மேற்பட்ட டிரான்ஸிட்டர்கள் கோவையாக செல்லுக்குள் கட்டமைக்கப்பட்டது. இது அருகில் ஏற்படும் சமிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவுகிறது. செல்களின் சமிக்சைகளை அளவிட மட்டுமல்லாது தெரிவு செய்யப்பட்ட செயல்களை தூண்டும் அமைப்பாகவும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியின் திசுவை இக்கட்டளை வழிப்புள்ளியில் தனியாகஇயக்க முயலும்போது இருவேறு அமைவுகளை அடைவதற்கு சிலிகானின் எல்க்டரான் மின் சுமையை எடுத்து செல்லும் அமைப்பாகிறது. உயிருள்ள திரவு செல்களின் உள்பகுதியில் அயான் மின் சுமையை கடத்தும் பணியை செய்கிறது,இவ்வாறாக  நரம்பு செல்லுடன் சிப்பினை தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி கொண்டனர். இதே வேளையில் இருபுறமும் சமிக்கைகளை கடத்துகின்ற infineonஆல் நரம்புசிப்பு(neurochip) செயலை தூண்டுகின்ற உயிரிய இயற்பியல் தன்மையின் அடிப்படையில் அடுத்த படிநிலையாக உருவாக்கப்படுகிறது.,இப்போது மூளை அடுக்குகள் மற்றும் தொடர்புடைய உயிருள்ள திரவு செல் ஆகியவை பற்றிய ஆய்வு மிகத்தீவிரமாக இருந்தாலும் ஒரு ஆச்சரிய தகுந்த நடைமுறையை தெரிவிக்கின்றனர்.அதுதான் தகவல்களின் செயல்பாடுகள் மூளைப்பகுதியில் தனிப்பட்ட செல் அல்லது குழுவிற்குள் ஏற்படுகிறதா? என்ற கேள்வியாகும்,

அருகிலிருக்கும் திசுக்கள் உடனிணைந்து செயல்படுகிறதா அல்லது அதுவும் தன்னுடைய தனிப்பட்ட செயலை மட்டும் செய்கிறதா போன்ற பல கேள்விகளுக்கு விடைகான வேண்டிய சவால்கள் பல நம்முன் உள்ளன. இதற்கான பரிசோதனை நிகழ்ச்சிகள் சோர்வடைய செய்ய கூடியவை ஆனால் திட்டமிட்டவாறு தொடர்ந்து ஆய்வு செய்வதற்கான சாதனங்கள் நமக்கு இப்போது கிடைக்கின்றன என்பதே இப்போது ஒரு நல்ல செய்தியாகும்.

கணினியுடன் கம்பி வழியாக மூளை பகுதியை இணைப்பதால் உயிரியலின் அடிப்படை செயல்களை காண்பதற்கான இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை பயன்படுத்தி ஆய்வாளர்கள் வெவ்வேறு பகுதிகளின் பதில் செயல் என்னவாக இருக்கிறது என அறிந்து கொள்ள நரம்புசிப்பு(neuro chip) தூண்டிவிடுகின்றனர். மேலும் அதன் விளைவு என்னவாக இருக்கும் என அறிந்து கொண்டுள்ளார்கள். உதாரணமாக சந்தையில் வியாபார நிமித்தமாக ஒரு மருந்தை வெளியிடுவதற்கு முன்பு அந்த மருந்தின் தன்மை மூளையில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என நிரூபிக்க முயலும் ஆய்வாகும். ஆனால் இதில் சவால்கள் பல இருந்த போதும் செயற்கை கைகளால் இயக்கத்தை கட்டுப்படுத்த இந்த நியூரோசிப்பால் முடியும் என நிரூபித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் கண்ணால் காணும் காட்சிகளை மூளைக்கு  ரெடினா பகுதியை தூண்டிவிடப்பட்டு மின் சமிக்கைகளை எவ்வாறு ஒளி காட்சிகளாக கடத்துகிறது என அறிந்து கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இதன் முதற்படியாக செயற்கையாக ரெடினா உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒளிப்பட காட்சிகளின் சமிக்சைகளை இலக்க முறை கணினிக்கு பதிலாக நியூரோ கணினிக்கு மனித மூளை செயல்படுவதை போன்று உருவாக்கப்பட்டு வருகிறது, இது க்வாண்டம் கணினியை விட மிக வேகமானது. இந்த ஆய்வுகளில் மனித மூளைக்கு இணையாக கணினியை மாற்றும் யோசனை ஏதும் இல்லை ஆயினும் தொழில்நுட்ப அளவில் அதனை ஒத்த Imitation  அளவில் உருவாக்கப்படுகிறது. இது இன்னும் அடுத்த 50 ஆண்டுகளில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கணினியின் அடுத்த தலைமுறை நியூரோ கணினி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.