தொகுப்புக்காக வன்பொருள் செயல்முறை(hardware)

மிககுறைந்தசெலவில் உங்கள்ளுடைய செயலியை(CPU) மேம்படுத்தி கொள்ளமுடியும்

பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றினால் இது சாத்தியமே.  முதலில் உங்களுடைய கணினியின் தாய்ப்பலகையானது(mother board) எந்தவகையான செயலியை(CPU)  ஆதரிக்கின்றது என இலவச இன்டல் சிப்செட் அடையாளம்காட்டி பயன்பாட்டினை பயன்படுத்தி கண்டுபிடிக்கவும்.  இதன் முகவரி    <http://www.intel.com/support/chipsets/inf/sp/cs-0092b.htm>

சாதரண ஒற்றை செயலகத்திலிருந்து (Single core processor) சமீபத்தில் வெளிவந்துள்ள இரட்டைசெயலிகளுக்கு ( dual core chips) மாறுவது கணினியின் செயல்திறனை உயர்த்துவது மட்டுமல்லாது குறைந்த மின்சாரநுகர்வு, வெப்பத்தை குறைப்பது போன்ற பயன்கள் கூடுதலாக கிடைக்கின்றன.

உங்களுடையசெயலி(CPU) ஆனது AMD யின் AM2 தளமாக இருந்தால் அதலான் 64 3000+ அல்லது அதலான் 64 3200+ ஆகிறவற்றிற்கு மாற்றாக திறன்வாய்ந்த அதலான் 64×2 4400+என்பதற்கு ரூபாய் 4300 செலவில் மேம்படுத்தி (up gradation) கொள்ளுங்கள்

CPUவின் வகை இன்டல் LGA 775 தளமாக இருந்தால் 2Duo E4400க்கு மாறிக்கொள்வது நல்லது இதற்காக ரூ.200 மட்டுமே கூடுதலாக செலவாகும் இந்த விலை நிலவரமானது அந்தந்த நகரத்திற்கு ஏற்றவாறு மாறக்கூடியது.

இவ்வாறு தனிப்பட்ட செயலியை(CPU)  மேம்படுத்துவதை உங்கள் கணினியினுடைய தாய்ப்பலகை ஆதாரிக்கவில்லை எனில் தாய்ப்பலகையுடன் செயலியை(CPU)யும் ஒன்றினைத்து புதியதளத்திற்கு ஏற்றவாறு இதே போன்று குறைந்தவிலையில் வழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு மாறும்போது பயாலையும் மேம்படுத்த வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.  அந்தந்த தாய்ப்பலகை உற்பத்தியாளரின் இணைய பக்கத்திற்கு சென்று தகுந்த ஆலோசனைகளைபெற்று செயல்படுங்கள்.

கணினியின் செயல்பாட்டுதிறனில் தற்காலிக நினைவகம்(Ram)மிகமுக்கியமான இடம் வகிக்கிறது.  உங்களுடைய தற்காலிக நினைவகத்தின்(Ram) திறன் 512 MBஎனில் 1GBக்கு மேம்படுத்திக் கொள்வது(upgrade) நல்லது. இதற்காக ரூ,2300க்குள் கடைகளில் கிடைக்கும் 1GB திறனுள்ள DDR2 நினைவகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

செயலி(CPU) , குளிர்விப்பான்(cooler)

கடைகளில் சென்று இதனுடைய விலையை விசாரித்து அல்லது  தொடர்புடைய இணைய பக்கங்களுக்கு சென்று  தெரிந்துக்கொள்ளுங்கள். இதனை அமைதியான சூழலை ஏற்படுத்துவதாகவும் வெப்பத்தை குறைவாக வெளியிடும் தன்மையுடையதாகவும் உள்ளதை தேர்ந்தெடுங்கள்.  இது ரூ,400லிருந்து 3000 வரை விலையில் கிடைக்கின்றது.

வெப்பகுறைப்பான் உயவுப்பொருள் (thermal greese)

கடைகளில் புதிய குளிர்விப்பானின்(cooler)ன அடிப்பகுதியில் இந்த உயவுப்பொருளை (thermal greese) உட்பொதிந்துதான் உங்களுக்கு கொடுப்பார்கள்,  அல்லது இதனுடன் ஒரு கிரீஷ் டியூபை  உங்களுக்கு தனியே வழங்குவாரகள் இவ்வாறு கிடைக்கவில்லையெனில் தெர்மல் கிரீஷ் டியூப் ஒன்றை கடைகளில்  வாங்கிக்கொள்ளுங்கள்.

எச்சரிக்கை

கணினியின் உறுப்புகளானது மிகவும் sensitiveஆனது ஏதேனும் அவைகளினிடம் உங்களுடைய வீரத்தையும் ,தீரத்தையும், வலுவையும் காட்டினால் குறிப்பிட்ட உள்ளுறுப்பையே இழக்க நேரிடும்.

செயலியை(CPU)பொருத்தும் படிமுறைகள்

கணினி பெட்டியை திறப்பதற்குமுன்பு உங்கள் உடலில் உள்ள நிலைமின்சாரத்தை ஏதேனுமொரு எர்த்கம்பி அல்லது  தரையை தொட்டு கொண்டுள்ள உலோகத்தை பிடித்து இறக்கிவிடுங்கள், அதன்பின்னர் கணினியின்  மூடி  (Cover) யை நீக்குங்கள்.

உங்களுடைய பழைய செயலி(CPU)வினுடைய, ஹீட் சிங்க், கூலிங் ஃபேன் ஆகியவற்றை மிகமிருதுவாக கழற்றுங்கள் ,அதற்கு முன்புசெயலி(CPU) உற்பத்தி நிறுவனத்தின்Installation மற்றும் Removal க்கான கட்டளைகளை முழுவதும் படித்து அதன்படி செயல்படவும்.

இதில் உள்ள லிவரை பிலிப்பிங் செய்வதன் மூலம் (Socket 939, 940) அல்லது நின்றுகொண்டு இருக்கும் நான்கு கம்பிகளை பாதி திருப்புவதன் மூலம் (Intel Socket LGA775) செயலியின்(CPU)ன கூலரை கழற்றமுடியும்.

இதன் கிளாம்பை தளர்த்துவதன் மூலம் அருகில் இருக்கும் சாக்கெட்டில் உள்ள லிவரை மேலே துக்குக. அதன்பிறகு செயலகத்தை Processor மிக மிருதுவாக வெளியில் எடுத்துவிடுக.

பின்னர் புதிய செயலியின்(CPU), ஹீட் சிங்க், கூலிங் பேன் போன்றவைகளை அதனதன் இடத்தில் உள்ளிணைத்து அமைத்திடுக.

புதிய செயலியை(CPU) பொருத்தும்போது முனைகளை(edge) மட்டும் பிடித்து கையாளவும் தாய்ப்பலகையில் உள்ள பொருத்தும் இடத்துக்கு ஏற்றவாறு சிப்பின் சாக்கெட்டுகளை உள்ளிணைத்து லிவரை கிளாம்பிற்குள் பொருந்துமாறு சரிசெய்து பொருத்தி அமைத்திடுக, பின்னர் கூலிங் பேன் மற்றும் ஹீட் சிங்குகளை சரியாக பொருத்துக.

அதன்பின்னர் PCsetup கட்டளை தொடரை இயக்கி புதிய செயலியை(CPU) பயாஸானது இணங்கண்டு கொள்ளுமாறு செய்க, புதிய கடிகார அலைவரிசைகளை New clock frequency அமைத்திடுக புதிய சிபியுவின் கட்டளைவரிகளை மிகசரியாக பின்பற்றவும்.

மறுமொழி அளிக்கவும் »

வருங்காலத்தில் UEFI

ஒரு கணினியில்வன்பொருளையும், மென்பொருளையும் இணைக்கும் பாளமான பயாஸ் (bios) ஆனது தாயப்பலகையின்(mother bord) உள்ள ஒற்றை சில்லுக்குள் உள்ளிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

  இந்த பயாஸ் ஆனது முதலில் கணினியின் வன்பொருள் உறுப்புகளை சரிபார்த்து அங்கீகரிக்கிறது. இவைகள் சரியாக இருந்தால் மட்டுமே அதன்பிறகு இயக்கமுறைமையை(OS) இயங்க அனுமதிக்கிறது. இந்த பயாஸ் (bios) அறிமுகபடுத்தப்பட்ட 1970ஆம் ஆண்டிலிருந்து ஆயிரகணக்கான வன்பொருள் உள்ளுறுப்புகளின் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன.

ஆயினும் 1998ல் இன்டல் நிறுவனம் ஆனது IA-64 என்பதை மாற்றி Intel – Hp Itanium என்ற கட்டமைவின் மூலம் கணினியின் தொடக்க இயக்கத்திற்(Booting) ஆணைத்தொடரை பயாஸிற்கு(bios) மாற்றாக Extensible firmware interface என்பதை சுருக்கமாக அழைக்கபடும் EFI என்பதை அறிமுகபடுத்தி நடைமுறைபடுத்தியது.

 

பிறகு 2005ல் பயாஸ் மற்றும் வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இந்த Biosக்கான மாற்று ஏற்பாட்டை ஏற்று தங்களின் உற்பத்திபொருட்களில் EFI என்பதை UEFIஎன்ற பெயர்மாற்றத்துடன் செயல்படுத்திவருகின்றனர்.

அதெல்லாம் சரிதான் இந்த EFI என்றால் என்ன?

இது கணினியின் தொடக்க இயக்கத்தின்போது வன்பொருளையும், மென்பொருளையும் இணைக்ககூடிய பயாஸின் அடுத்ததலைமுறை Firmware ஆகும். இந்த இடைமுகத்தில் இயக்கமுறைமை (OS) மற்றும் வன்பொருள் குறித்த அனைத்து தகவல்களும் இதில் ஒருதரவு அட்டவணையாக தேக்கி வைக்கப் பட்டிருக்கும். இதனுடன் இயக்கமுறைமை (OS) மற்றும் இயக்கமுறைமையை (OS) நினைவகத்தில் ஏற்றுவதற்கு முன்பு தேவையான ஆரம்ப பணிகளின் கட்டளை தகவல்கள் இதன் உள்ளே பொதியபட்டிருக்கும்.

இந்த EFI ஆனது கணினியை இயக்குவதற்கு முன்பு பயாஸைவிட ஒருபடி கூடுதலாக வன்பொருளை அங்கீகரிப்பது, இயக்கமுறைமையை (OS)சரிபார்த்து அமைவுசெய்வது, ஆய்வுசெய்வது, இயக்கமுறைமையை (OS) நி¢னைவகத்தில் ஏற்றுவது, நச்சுநிரல் (virus)ஏதேனும் கணினியின் நினைவகத்தில் வைரஸ் இருக்கிறதா எனவருடி (Scan)பரிசோதிப்பது, என்பன போன்ற பலபணிகளை செய்கிறது.

மேலும் இந்த EFI ஆனது பயாஸை போன்று தேவையான வன்பொருள்கள் இருக்கிறதா என சரிபார்ப்பது. தேவையான இயக்ககத்திற்குள் இயக்கிகளை(drivers) கணினி இயக்கத்தை விரைவாக தொடங்கசெய்வது ஆகிய பணிகளையும் செய்கிறது.

EFI ஆனது இயக்கமுறைமை(OS)க்கும் வன்பொருள் உறுப்புகளின் Firmwareக்கு இடையில் பாளமாக இருக்கிறது

பயாஸ் ஆனது 16பிட் அளவுடைய தொகுப்பு (assembly) மொழியில் எழுதப்பட்டது. இது உரையை (Text) மட்டுமே இடைமுகமாக ஏற்றுக்கொள்ளும்.

ஆனால் இந்த EFI ஆனது 32பிட்அளவில் வரைகலையை( GUI )பயன்படுத்தி C மொழியில் இதன் குறிமுறைகள் எழுதப்பட்டது. தேவையானால் பின்னர் இதனை பயன்படுத்தி மறுபடியும் மேம்படுத்திக்கொள்ள (upgrade), நிகழ்நிலைபடுத்தி(update) கொள்ளமுடியும்.

சுதந்திரமான கணினிகளை இயக்க உதவும் சூழல் உள்ளஇந்த EFI தளமானது இயக்கமுறைமையை (OS) நினைவகத்தில் ஏற்றும்வரை வரைகலை மற்றும் இணைய இணைப்பை ஆதரிக்கின்றது. இவ்வாறாக இந்த EFIஆனது மூன்றாவது நிறுவனத்தின் வரைகலையை உங்கள் இயக்ககத்தில் உள்ள உருவப்படங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றது (ஆதரிக்கின்றது). அதுமட்டுமல்லாமல் காலையில் விழித்தெழுவதற்கான அலாரத்தின் நேரத்தை அமைப்பது, தானாகவே கணினியின் இயக்கத்தை ஆரம்ப்பிப்பதற்கான அமைவு செய்தல் என்பன போன்ற வசதிகளையும் கூடுதலாக வழங்குகிறது.

கணினியின் தொடக்க இயக்கத்தின்போது ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கமுறைமை(OS)களிலிருந்து ஏதேனும் ஒன்றை தெரிவு செய்வதற்காக தொடுக்கமேலாளர் (booting manger) என்ற கூடுதலான ஒரு பயன்பாட்டையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.

ஒருகால் ஏதேனுமொரு இயக்கமுறைமை (OS)ஆனது கணினியின் தொடக்கஇயக்கத்தின் போது முடக்கடிசெய்தால் ஆரம்பத்தின் முந்தைய நிலைக்குசென்று மீண்டும் இயக்கமுறைமை (OS)களை நினைவகத்தில் ஏற்றி தகராறுசெய்யும் இயக்ககத்தை தவிர்த்து கணினியானது சரியாக தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கும்படி செய்கிறது. இது திறமூலமாக(open source) ஆக இருப்பதால் இயக்கமுறைமை (OS) இயங்காமலேயே உங்கள் கணினியில் பல்லூடக (Multi media)த்தை இயங்குமாறு செய்யமுடியும் இதன்பயனாக கணினியை இயக்க ஆரம்பிக்காமலேயே திரைப்படங்களை சாதாரண தொலைக்காட்சி பெட்டியில் காண்பதை போன்று உங்கள் கணினியில் இதன்மூலம் காணமுடியும், ஆனால் தற்போது இன்டல் நிறுவனமானது EFI உற்பத்திசெய்வதை அறவே நிறுத்திவிட்டது. அதற்கு பதில் unified Extensible firmware interface என்பதை சுருக்கமாக அழைக்கபடும் UEFIஎன்பதை மட்டும் இப்போது புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த UEFI மட்டுமே வருங்காலத்தில் EFIயின் செயல்களான இயக்கமுறைமை (OS)களை தொடங்க செய்தல், பிழைகளை ஆய்ந்து களைதல் போன்றசெயல்களை கையாளும்திறன் உடையதாக இருக்கும்.

  ஆயினும் கணினி உற்பத்தி நிறுவனங்கள் இந்த UEFIயை தங்களின் உறுப்புகளில் உள்பொதிந்து உருவாக்குவதற்கு சிறிதுகால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த UEFI firmware இன் உருவமானது தற்போதைய பயாஸைவிட (32பிட் மற்றும் 62பிட்) அளவிற்கு மிகபெரியதாக இருக்கும்.

இதனால் கணினி உற்பத்தியாளர்களுக்கு தற்காலிக நினைவகத்திற்(Rom)குள் உட்பொதிவதற்கான மூலப்பொருட்களை ஏற்புடையதாக்குதல் போன்ற செலவுகளை கூடுதலாக்கும் இப்போது வெளியிடப்பட்டுள்ள வின்டோ பண்பியல்பை UEFI ஆதரிக்குமாறு செய்யப்படவில்லை, ஆனால் வருங்காலத்தில் வழங்கப்படும் Service Packing இல் UEFI ஆதரிக்கும்படி செய்யப்படுமென உறுதி அளித்துள்ளனர். வின்டோவின் லாங்கார்ஸ் சேவையாளர் பதிப்பானது UEFIயை ஆதரிக்கிறது. இன்டலின் புதியதான Mac’s அனைத்தும் EFI அடிப்படையை மேம்படுத்தும் செயற்கூறுகளுடன் இருக்கின்றன.

வருங்காலத்தில் பயாஸிற்கு மாற்றாக UEFI தான் கோலோச்சும் அதுவரை மட்டும் தற்போதைய பயாஸை பயன்படுத்துவோம்.

மறுமொழி அளிக்கவும் »

சிலநேரங்களில் கணினியில் I have high CPU usage என்று தோன்றிடும் பிழைசெய்தியை எவ்வாறு தடுப்பது

 கணினியின் மத்திய செயலகம்(Central Processing Unit (CPU)) என்பது நம்முடைய மூளையை போன்று கணினிக்கு  அனைத்தை செயல்களையும் செயல்படுத்தி கட்டுபடுத்தகூடிய பகுதியாகும்  அதனால் அங்கு ஒரே நேரத்தில் எண்ணற்ற செயல் நடைபெறும்போது இம்மத்தியசெயலகத்தின் திறனைவிட அச்செயல்களுக்கு தேவையான திறன் அதிகமாயின் மேற்கண்ட பிழைச்செய்தி திரையில் தோன்றிடும் அல்லது கணினியின் செயல் தொங்கலாக நின்றுவிடும்

பொதுவாக ஏதாவது நச்சுநிரல் நம்முடைய கணினியில் தொற்றிகொண்டு செயல்படுவதே இதற்கான அடிப்படை காரணமாகும் இதனை தவிர்ப்பதற்கு நல்ல திறனுள்ள அவ்வப்போது மேம்படு்ததி கொண்டேயுள்ள நிறுவனத்தின் எதிர்நச்சுநிரல் மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவிகெண்டு கணினியின் நினைவகம் முழுவதையும் ஆய்வுசெய்து தேவையற்ற நிரல்தொடர்களை நச்சுநிரல் மென்பொருட்களை நீக்கம் செய்து கொள்க

 அடுத்ததாக நம்முடைய கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களை பற்றிய தகவல்கள் இணைய இணைப்பு பற்றிய தகவல்கள் கணினியுடன் இணைக்கபட்டுள்ள துனைக்கருவிகளை இயக்குவதற்கான இயக்கமென்பொருட்கள் பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் கணினியின் பதிவேட்டில் பதிவுசெய்யபபபட்டிருக்கும் இதுவே ஒரு புத்தகத்தின் உள்ளடக்கவிவரங்களை கூறும் அட்டவணைபோன்ற கணினியில் நிறுவபட்டுள்ள அனைத்து மென்பொருட்டகளை பட்டிய தகவல் தொகுப்பு பகுதியாகும்  இந்த பதிவேட்டையும் அதற்கென உள்ள CCleaner  போன்ற சிறப்பு மென்பொருட்களை கொண்டு தேவையற்ற நிரல்தொடர்களை நச்சுநிரல் மென்பொருட்களை நீக்கம் செய்து கொள்க

 

மறுமொழி அளிக்கவும் »

கணிணியினுடைய செயலி ஒன்று எவ்வாறு உருவாகின்றது

ஒரு சிறிய இண்டெல் கோர் 2 டியூ கணினி சில்லுக்குள் இலட்சக்கணக்கான மின்மபெருக்கிகள்(transistors) இருக்கின்றன என்றாலும் இவை ஒன்றுக்கொன்று மோதலும் குழப்பமும் இல்லாமல் இயங்குவதற்குஏற்ப எவ்வாறு இணைக்கப்பட்டு நன்கு பணிசெய்கின்றன என ஆச்சரிய படவைக்கின்றன, விரல்நகம் அளவேயுள்ள இந்த சின்னஞ்சிறிய கணினி சில்லுக்குள் எவ்வாறு இலட்சக்கணக்கான மின்மபெருக்கிகள்(transistors) உருவாக்கப்பட்டு அமைக்கப்படுவது சாத்தியமாகிறது என இப்போது காண்போம்,

இவ்வாறு உருவாக்க நான்கு படிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

படிமுறை -1 –பலகையை வடிவமைப்பு செய்தல் வடிவமைப்புக்கு செல்லுமுன் இவை எவ்வாறு பணிபுரிகின்றன என அறிந்து கொள்வோம், கையடக்கமுள்ள செல்லிடத்து பேசிமூலம் தொலைபேசி போன்று பேசுகின்றோம் பேசுவதை கேட்கின்றோம்,அதற்கேற்ப இதனுடைய சில்லுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என கொள்வோம் இதில் எஃப் எம் வானொலியின் பாடல்களையும், தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்வதாக கொள்வோம் இந்த பயன்பாடுகளுக்கு ஒவ்வொன்றின் பணிக்கும் தனித்தனி சில்லுகள் உருவாக்கி அமைப்பது எனில் அது கையடக்க செல்பேசியாக இருக்கமுடியாது,மிகப்பெரிய கருவியாகவே ஆகிவிடும் இதனை தவிர்க்க இவைகளின் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நிரல்தொடர் என உருவாக்கி அதனதன் மின்மபெருக்கி(transistor)யுடன் ஒதுக்கீடுசெய்து ஒரே கணினி சில்லுக்குள் இவைகளை உள்பொதிந்து அமைத்துவிட்டால் இத சாத்தியமாகும் அல்லவா!

இவ்வாறு ,இந்த கணினி சில்லுகளை உருவாக்குவதற்கு முதலில் வன்பொருளை வடிவமைத்து உருவாக்கியபின் அதனை இயக்குவதற்காக இயக்கியின் மென்பொருள் எழுதப்பட்டு இறுதியாக இவைகள் உள்பொதியப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன இதற்கு முதல்படியாக என்னென்ன செயல்கள் செயற்படுத்தப்போகின்றோமோ அதனதன் இயக்கியினுடைய மென்பொருள் எழுதப்பட்டு தனித்தனி மின்மபெருக்கி(transistor)யுடன் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றன அதன்பின்னர் இவை ஒருங்கிணைக்கப்படுகின்றன,

படிமுறை-2:மின்மபெருக்கி(transistor) என்பவை தருக்கமுறை வாயில்கள் என்பதை மனதில் கொள்க மிகவும் சிறியதான இவைகளை ஒன்றுக்கொன்று இணைத்து ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலான பணிதான் ஆயினும் இதனை எளிமைபடுத்த Hardware Descriptive Language என்பதை சுருக்குமாக குறிப்பிடும் HDL என்ற சிறப்புக் குறிமுறைகளால் எழுதப்படுகின்றது,இது நாம் வடிவமைக்கும் கணினியினுடைய சில்லுகள் ஒவ்வொன்றின் செயலும் எவ்வாறு இருக்கவேண்டுமென வரையறுக்கின்றது,மேலும் ஒவ்வொரு கடிகார சுற்றுகளிலும் எவ்வாறு இந்த சில்லுகள் செயல்படவேண்டும் என கட்டுபடுத்துகிறது,இந்த குறிமுறைகள் பின்னர் தருக்கமுறைவாயிலிற்கேற்ப தருக்கமுறை ஒத்திசைவாளராக மொழிமாற்றம் (interpretation) செய்யப்படுகிறது, அதன்பிறகு மின்சுற்று வரிப்படமாக ஒருங்கிணைக்கப்பட்டு எவ்வாறு செயல்படும் என அறியப்படுகிறது, தேவையானால் இவைகள் மேலும் மெருகேற்றப்படுகின்றன பின்னர் இந்த தருக்கமுறை ஒத்திசைவாளராக மொழிமாற்றம் செய்வதற்கான வடிவமைப்பு போதுமான அளவிற்கு இருக்கின்றதாவென சரிபார்க்கப் படுகின்றது,இறுதியாக இவை உண்மைநிலையில் எவ்வாறு செயல்படும் என உருவகப்படுத்துதல்கள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றது,

படிமுறை-3:ஒரு சிறிய தூசுஅளவேயுள்ள சிலிகான்களை கொண்டு ஆயிரக்கணக்கான மின்மபெருக்கிகள்(transistors) உருவாக்கவாய்ப்புள்ளதால் இந்த சிப்புகளை உருவாக்கும் பகுதி மிகமிக சுத்தமாக(Clean Room) பராமரிக்கப் படுகிறது மேலும் தனிச்சிறப்பு உபகரணங்களை கொண்டு சிறப்பு வழிமுறையில் சிலிகான் தூய்மைபடுத்தப்படுகிறது,

பரிசுத்தமான சிலிக்கானின் சிறுதுனுக்கி(wafer) லிருந்து மின்மபெருக்கிகளை(transistors) உருவாக்கும் பணி ஆரம்பிக்கின்றது முதலில் இந்த சிறுதுனுக்கை(wafer ) மிகவும் சுத்தமான தண்ணீர் மற்றும் தனிச்சிறப்பு தூய்மை படுத்தம் திரவத்தில் மூழ்கச்செய்து சுத்தமாக கழுவப்படுகின்றது,

அதன்பிறகு அதன்மேல் ஒரு வெப்பத்தடுப்ப பொருள் (Insulation material)கொண்டு ஒருசுற்று தடுப்புசுவர் அமைக்கப்படுகிறது, பின்னர் வெப்பப்படுத்தப்பட்டு ஆக்ஜிஸனுடன் சேர்ந்த சிலிக்கன்டை ஆக்ஸைடு என்ற அடுக்கால்(layer) மூடப்படுகின்றது பின்னர் ஒளியை தடுப்பதற்காக இதன்மீது மற்றொரு ஒளித்தடுப்பு போர்வையால் பூசப்பட்டு புறஊதாகதிர்களால் சுடப்பட்டு கட்டப்படுகிறது,

பின்னர் ஒரு முகமூடி (masking)கொண்டு இந்த மின்சுற்றுவரிப்படத்தின் வெளிப்புறம் மூடப்படுகிறது, அதன்பின்னர் இந்த சிலிக்கானின் சிறுதுனுக்கானது திரவத்திற்குள் மூழ்கும்படி செய்யப்பட்டு மீதிஅரைகுறையாக இருக்கும் தேவையற்ற சிலிக்கன்டை ஆக்ஸைடை கரைத்து கழுவிவிடப்படுகிறது,இந்த செயலையே உலோகஉருவம்செதுக்குதல் (etching)என்கின்றனர்,

அதன் பிறகு இரும்பைபிடுங்குதல் என்ற செயலின்மூலம் சில்லுகளில் உள்ள இரும்புதுனுக்குகள் உறிஞ்சியெடுக்கப்படுகின்றன இவ்வாறாக ஒரு சிறுதுனுக்கானது ஒரு மின்மபெருக்கி(transistor)யாக உருமாற்றப்படுகின்றது

படிமுறை-4

இவ்வாறு தனித்தனியாக உருவாக்கப்பட்ட மின்மபெருக்கிகள்(transistors) பின்னர் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும் இதனைகம்பியுடன் இணைத்தல் (wiring) என்பர், முகமூடி (masking)அணிவித்தல் , உலோகஉருவம்செதுக்குதல் (etching) ஆகிய இரு பணிகளை மாற்றி மாற்றி தொடர்ந்து சிலிக்கன்டை ஆக்ஸைடுடன் மூடப்படவேண்டும், இந்த சமயத்தில் ஒரு சிறு சாளரம் போன்ற பகுதி மட்டும் மூடப்படாமல் இந்த மின்மபெருக்கி(transistors) களின் முனைமங்களாக மற்றவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்காக விட்டுவிடவேண்டும் இந்த முனைம பகுதியில் ஒரு அடுக்கு உலோகம் பூசப்பட்டு மிகுதி இணைப்புஏற்படுத்தவும் வெப்பத்தடுப்பு, முகமூடியிடுதல் உருவம்செயதுக்குதல் பின்னர் உலோகம்பூசுதல் என மாற்றி மாற்றி சுமார் இருபது அடுக்கு அளவிற்கு செய்யப்படுகிறது,இவ்வாறான பணிமுடிந்த பிறகு இவை ஒன்றுடன் மற்றொன்று இணைக்கப்படுகிறது,

இந்த மின்மபெருக்கி(transistors)யின் நீளம் சுமார் 90 நேனோமீட்டராக இருந்தது பின்னர் 60 நேனோமீட்டராகி இப்போது 45 நேனோமீட்டராக குறைந்துள்ளது,

இவ்வாறாக சின்னஞ்சிறு மின்மபெருக்கிகள்(transistors) உருவாக்கப்பட்டு அதில் சிக்கலான செயல்களுக்கான தனித்தனியான HDL நிரல்தொடர் எழுதி இணைக்கப்படுகிறது,பின்னர் விரல்நகத்தின் அளவேயுள்ள சில்லுக்குள் லட்சகணக்கான மின்மபெருக்கிகள்(transistors) உள்பொதியப்படுகின்றன, ஒருசில்லுக்குள் fusion முறையில் இவ்வாறு மின்மபெருக்கிகள்(transistors) ஒருங்கிணைக்கப்படுகின்றன,

 

மறுமொழி அளிக்கவும் »

பயாஸின் கடவுசொற்கள்மறந்துவிட்டதை எவ்வாறு தீர்வுசெய்வது

பயாஸ்தான் ஒவ்வொரு கணினியினுடைய அடிப்படை கட்டமைவாகும் இதனை மாறுதல் செய்து மிகச்சரியாக அமைவு செய்வதற்காக இதில் உள்நுழைவதற்கான கடவுச்சொற்கள் மிகவும் அவசியமாகும்  நம்மை தவிர வேறுயாறும் இந்த பயாஸிற்குள் உள்நுழைவுசெய்வதை இந்த கடவுச்சொற்கள் தவிர்க்கின்றன

பொதுவாக பயாஸின் திரையானது  ஏறத்தாழ மேலே படத்திலுள்ளவாறு தான் இருக்கும் ஆனாலும் இதில் கணினிஉற்பத்தியாளர்களுக்கு தக்கவாறு ஒருசில  மாறுதல்களுடனும் இருக்கும். கணினியை இயக்கதொடங்கும் நிலையில் F2 என்ற செயலிவிசையை திரும்ப திரும்ப அழுத்தும்போது முதலில் Loading BIOS Options என்ற செய்தியும் பின்னர் படத்திலுள்ளவாறு பயாஸினுடைய திரையின் தோற்றமும் அமையும்  மற்றவர்கள் யாரும் நம்முடைய கணினியினுடைய பயாஸிற்குள் நமக்கு தெரியாமல் நுழைந்து மாறுதல் எதுவும் செய்ய மாட்டார்கள்  என உறுதியுடன் நம்பினால் பயாஸிற்குள் நுழைவதற்கான கடவுச்சொற்களை அமைத்திடவேண்டாம் என பரிந்துரைக்கப் படுகின்றது  அவ்வாறு  பயாஸிற்கான கடவுச்சொல் அமைத்திட்டால் கணினியை இயக்கத்தொடங்கும்போது பயாஸின் கடவுச்சொல்லை உள்ளீடுசெய்தால் மட்டுமே அடுத்த படிநிலையான வழக்கமான பயனாளரின் பெயரையும் கடவுச்சொல்லையும் கோரும்திரைதோன்றும்  இந்த பயாஸின் கடவுச்சொற்களை தனியாக எழுதி மிகபதுகாப்பாக வைத்துகொள்க.

இந்த பயாஸின் கடவுச்சொற்கள் மறந்து போனால் வன்பொருள் மென்பொருள் ஆகிய இரண்டின் வழியாக உள்நுழைவு செய்வதற்கு  கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்துகின்றது முதலில் வன்பொருள் வழியில் தாய்ப்பலகையை அனுகி பயாஸின் மின்கலத்தை கழற்றி புதிய மின் கலனை பொருத்தி பயாஸ் அமைப்பை புதியதாக அமைத்துகொள்க

Easeus அல்லது Password Recovery Magic ஆகிய கருவிகளின் மூலம் மென்பொருள் வாயிலாக பயாஸ் கடவுச்சொற்களை  மாற்றியமைத்துகொள்க இந்நிலையில் கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி மாற்று வழியெதுவும் தேடவேண்டாம் அதற்குபதிலாக  cnet.com அல்லது downloads.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தி கடவுச்சொற்களை  மாற்றியமைத்து மென்பொருள் வழியாக பயாஸ் கடவுச்சொற்கள் மறந்துபோனாலும் கணினியை அனுகமுடியும்

மறுமொழி அளிக்கவும் »

வன்தட்டில்(Harddisk) இல் ஏற்படும் பிழைச்செய்திகளை சரிசெய்ய

எந்த வொரு கணினியிலும் தொடர்ந்து அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் அவ்வப்போது திரையில் தோன்றி கொண்டேயிருக்கும். பொதுவாக விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் ஏராளமான அளவில் கிடைக்கபெறும். வழக்கமாக ஒரு வன்தட்டில்தான் அனைத்து மென்பொருள்களையும் நிறுவி செயற்படுத்தி பயன்படுத்துவோம்

குறிப்பிட்ட மென்பொருள் தேவை இல்லையெனில் அம்மென்பொருள்ளை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். அவ்வாறு கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில கோப்புகள்  நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த கோப்புகளால் நம்முடைய கணினியில் அடிக்கடி பிழைச் செய்தி காட்டும்.  ஒரு வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது தனித்தனி செக்டர் பகுதிகளாகவே இவை சேமிக்கப்படும். இம்மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் தேவைபடும்போது மட்டும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் முழுமையாக இல்லாமல் பதியபடும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் பிழைச்செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் நத்தையை போன்று மந்தமாகும். இதுபோன்ற பிழைச்  செய்திகளை சரிசெய்ய  CheckDiskGUI என்ற மென்பொருள் உதவி செய்கிறது.இம் மென்பொருளை தரவிறக்க  http://www.wieldraaijer.nl/download/CheckDiskGUI/CheckDiskGUI.exe
என்றதளத்திற்கு செல்க.
 இந்த மென்பொருளை மேற்படி இணையத்திலிருந்து பதிவிறக்கி நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க. பின் இந்த பயன்பாட்டினை செயற்படுத்துக உடன் தோன்றும் திரையில் தேவையான இயக்ககத்தை (drive) தெரிவு செய்து, Read only என்ற பொத்தானை சொடுக்கி சோதனை செய்து கொண்டு, பிழைச்செய்தி இருப்பின் அதனை தெரிந்துகொள்ளFix என்ற பொத்தானையும். அப்பிழைச்செய்திகளை நீக்கம் செய்ய  Fix and Recover என்ற பொத்தானையும்  சொடுக்கி அந்த பகுதிகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்க. இது ஒரு  இலவச மென்பொருள் ஆகும். இதனை விண்டோஸ் 7 இயக்கமுறைமையிலும் பயன்படுத்தலாம்  வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

மறுமொழிகள் (1) »

துகள் கணினி(quantum computer)

ஒருகணினியென்பது 0,1 ஆகிய பைனரி எனப்படும் இருநிலைகுறிமொழியால் கட்டமைக்கபட்டதாகும்  அதனால்  தரவுகளனைத்தும் இந்த 0,1 ஆகிய இருநிலை குறிகளின் அடிப்படையிலேயே  எந்தவொரு கணினியிலும் தேக்கிவைக்க படுகின்றன இதனுடைய செயல்களும் இந்த இருநிலை குறிகளையே கட்டளையாக கொண்டு அமைகின்றன ஆனால் இந்த இருநிலைகுறியீட்டு கட்டளைகள் எந்தவொரு சமயத்திலும்  0 அல்லது 1 ஆகிய ஒன்றில் ஏதேனும் ஒருநிலைமட்டுமே  செயலில் இருக்கும்   ஆனால் துகள் கணினியில் துகள்நிலைபிட்களை அதாவது quantum bitsஅல்லது  qubits உருவாக்கபடுகின்றன  இந்த  qubits  ஆனது  சாதாரன கணினிபோன்றில்லாமல்  ஒரேசமயத்தில்  0,1 ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்குமாறு செயல்படுகின்றன

 படம்-1

 இந்த qubits அடிப்படையில் மிக சிக்கலான செயல்களும் எளிதாக தற்போதைய கணினியைவிட மிகவேகமாக தீர்வுசெய்யமுடியும் மேலும் அவ்வாறான சிக்கலான பிரச்சினைகளுக்குமான பல்வேறுவகை திர்வுகளை ஒரே சமயத்தில் ஓரிரு வினாடிகளின் கிடக்கின்றனஅமெரிக்க ஐக்கிநாடுகள் முழுமைக்கும் இவ்வாறான ஆறு கணினியே போதுமானதாகும்

மூர் விதி.யின்படி ஒவ்வொரு 18 மாதத்திலும் மைக்கரோப்ராஸஸரில் உள்ள ட்ராண்ஸிஸ்டரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதன்அடிப்படையில் கணக்கிடும் 2020 அல்லது 2030 ல் ப்ராஸஸருக்குள் ட்ரான்ஸிஸ்டர்களை உல்ளினைத்தடி இடமே இல்லையெனும் நிலைஎற்படும் அப்போது கணினியின் திறனை மேலும் அதிகபடுத்திட இந்த துகள்கணினிஎனும் கருத்தமைவுதான கைகொடுக்கபோகின்றது

 படம்-2

ñ Ion traps .

ñ Optical traps .

ñ Quantum dots .

ñ Semiconductor impurities .

ñ Superconducting circuits

ஆகிய சாதனங்கள் Qubit Control அடிப்படையில் இந்த துகள் கணினி(quantum computer) யைபோன்று இயங்கவுள்ளனஇந்த ஒரேசமயத்தில்  0,1 ஆகிய இரண்டு சேர்ந்த நிலையை   qubits  ன் மேல்நிலையில் superposition செயல்படுவதால் மில்லியந் கணினிகள் ஒருசமயத்தில் இணையாக parallelism இயங்கமுடியும்  தற்போதைய கணினியானது  gigaflops பில்லியன் செயல் ஒருநொடிக்கு என்பது  துகள் கணினி(quantum computer)யில் 10 teraflops டிரில்லியன் செயல் ஒரு நொடிக்கு செயல்படுத்தகூடியதாகும்

அதனால் வருங்காலத்தில் சிலக்கனின் அடிப்பைடில் உருவாக்கபடும் கணினியானது துகள்கணினியின் அடிப்படையில் உருமாறுவிருக்கின்றது என்பது தின்னம்

மறுமொழி அளிக்கவும் »

சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க

தற்போது நாம் பயன்படுத்திடும் பெரும்பாலான  கணினிகளில் PHOTOSHOP,  AFTER EFFECTS போன்ற GRAPHICS தொடர்பான பயன்பாடுகளை இயக்கும்போது கணினியின் இயக்கம் சிரமப்படுவதை காணலாம். .

அது போன்ற சிரமமான நேரங்களில் கணணியின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி கணினியின் இயக்கம் சிரமமற்ற இயக்கமாக அமைந்திட WINDOWS 7ல் அதற்கான வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த start=>Control Panel=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Control Panel ன் திரையில் Power options என்பதை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் தோன்றும்திரையில் Show Additional Planல் உள்ளஅம்பு குறியை தெரிவுசெய்து சொடுக்குக.
பின்னர் விரியும் Additional Planல் உள்ள வாய்ப்புகளில் High performance என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு இந்த Control Panel திரையை மூடிவிடுக இனி நாம்
நம்முடைய கணினியில்  PHOTOSHOP,  AFTER EFFECTS போன்ற GRAPHICS தொடர்பான பயன்பாடுகளை  இயக்கும் போது முன்பை விட கணணியானது வேகமாக செயல்படுவதை காணலாம்.
ஆனால் இதற்காக கணினியானது  வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை செலவு செய்யும்.
சாதாரண பயன்பாடுகளை இயக்குகையில் மேற்கூறிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவையில்லை

மறுமொழி அளிக்கவும் »

ஃப்ளாப்பி வாயில் அல்லது யூஎஸ்பி வாயில் வழியாகவோ மற்றவர்கள் நம்முடைய கணினிக்குள் நுழைவதை தடுக்கலாம்

ஃப்ளாப்பி வாயில் அல்லது யூஎஸ்பி வாயில் வழியாகவோ மற்றவர்கள் நம்முடைய கணினிக்குள் நுழையாமல் தடுத்திட அவைகளை பூட்டிவிடமுடியும்  ஆனால் அவ்வாறான செயலின்போது விசைப்பலகை ,சுட்டி,வருடி போன்ற சாதனங்களும் சேர்ந்து செயல்படாமல் ஆகின்ற நிலை ஏற்பட்டுவிடும் இதனை தவிர்த்து நாம்விரும்பும் வாயிலை மட்டும்  பூட்டிட சாதாரணமான பதிவேட்டின் திருத்தமட்டும் மேற்கொண்டால் போதும்

start=> regedit=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன்விரியும்  regedit திரையில்  HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Servic es\UsbStorageஎன்பதை தேடிபிடித்திடுக  அதில் ‘Start என்பதன் மதிப்பு எவ்வளவாக உள்ளது என சரிபார்த்திடுக அதன்மதிப்பு 3 என இருந்தால்  யூஎஸ்பி சாதனங்களை இயக்க அனுமதிக்கும்   அதன்மதிப்பு 4 என இருந்தால்  யூஎஸ்பி சாதனங்களின் இயக்கத்தை முடக்கிவடும் அதனால்  அதன்மதிப்பு 4  என அமைத்து இதனை சேமித்துவெளியேறுக

மறுமொழி அளிக்கவும் »

தட்டச்சு இயந்திரத்தையும் கணினியின் விசைப்பலகையாக பயன்படுத்தலாம்

கணினியின் வருகையால் தட்டச்சுஇயந்திரத்தின் பயன்பாடு காணாமல் போய்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் தட்டச்சுஇயந்திர உற்பத்தி செய்யும் தொழிலகங்களும் மூடபட்டுவிட்டன. இந்நிலையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடிவமைப்பாளர் திரு ஜேக்ஜெல்கின்  என்பவர் இந்த தட்டச்சு இயந்திரத்தை கணினியின் யூஎஸ்பி வகை விசைப்பலகையாக செயல்படுமாறு உருமாற்றம் செய்து வடிவமைத்துள்ளார் அதனால் இந்த யூஎஸ்பி வகை தட்டச்சு இயந்திர விசைப்பலகையை மேஜைக்கணினியிலும் மடிக்கணினியிலும் ஐபேடிலும் யூஎஸ்பி வாயிலின்மூலம் சென்ஸார்போர்டு வாயிலாக இணைத்து பயன்படுத்தமுடியும் .இதன்மூலம் வழக்கொழிந்துபோன தட்டச்சு இயந்திரத்தையும் தற்போதைய நவீண கண்டுபிடிப்பான கணினியுடன் இணைத்து பயன்படுத்தமுடியும் என்றநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இதனுடைய விலை 699 முதல் 899 டாலர்வரை மாடலுக்கு கேற்ற வகையில் www.Etsy.com. என்ற இணையத்தின்மூலம் விற்பனை செய்யப்படுகின்றது . இதனை நிறுவுவதற்கான வழிகாட்டி கையேட்டினை www.usbtypewriter.com என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை இணைப்பதற்காக நீண்ட கம்பி இணைப்போ கணினியின் தோற்றம் மாறுதலோ ஆகாது

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.