தொகுப்புக்காக லினக்ஸ்(Linux)

லினக்ஸ் சான்றிதழ் கல்வி

மைக்ரோ சாப்டிற்கு மாற்றாக செலவில்லாத ஒப்பன்சோர்ஸ் புரோகிரமாக லினக்ஸ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதற்கு ஈடுகட்ட கூடிய அளவிற்கு இந்த ஒப்பன்சோர்ஸ் புரோகிராம்களை எழுதி இயக்க கூடிய அளவிற்கு தொழில் நுட்ப வல்லுநர்களின் தேவையும் வளர்ந்து கொண்டே வருகின்றது இந்த தளங்களின் பணிபுரியக்கூடிய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆக வளர்வதற்கு பின்வரும் கல்வியியல் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்,

இன்றைய நடைமுறையில் பல்வேறுவகையான லினக்ஸ் சான்றிதழ் படிப்பு கிடைக்கின்றன.  பொதுவாக இந்த லினக்ஸ் சார்ந்த படிப்பை ஆரம்பநிலை, இடைநிலை,உயர்நிலை என மூன்றுவகையாக பிரிக்கலாம்,

சாதாரனமாக  லினக்ஸ் பற்றி ஒன்றுமே தெரியாத பயிற்சி ஏதும் இல்லாதவர்கள் கூட லினக்ஸ் பற்றிய அடிப்படையான அறிவை மட்டும் வளர்த்து கொண்டு இதன் ஆரம்ப நிலை சான்றிதழை பெறமுடியும்.

ஒரு டெக்ஸ்டாப்பை அல்லது வொர்க்ஸ்டேஷன் ஒன்றை எவ்வாறு அமைவு செய்வது அல்லது அதில் உள்ள தவறுகளை எவ்வாறு களைவது என்பன போன்ற அறிவு பெற்றிருந்தால் இடை நிலை கல்வி சான்றுபெறமுடியும்.

சேவையாளர் (Server)கணிப்பொறியை எவ்வாறு அமைவு செய்வது அதனுடைய குறைகளை எவ்வாறு களைவது, சிறப்பு சேவையாளர்களை மற்றும் பயன்பாடுகளை எவ்வாறு நிருவகிப்பது எந்த பிரச்சிணை களையும் எவ்வாறு சமாளிப்பது என்ற மிகத்திறன் வாய்ந்த நிலையை உருவாக்க உதவுவது உயர்நிலை  சான்றிதழாகும்,.

உலகளாவிய அளவில் பல லினக்ஸில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு உள்ளன அவைகளை நன்கு கற்றுதேர்வு எழுதிவெற்றிபெற்றால் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலமும் கண்டிப்பாக மிக பிராகாசமாக அமையும்  எந்பது திண்ணம்

இந்த சான்றிதழ்கள் கல்வி பற்றி ஒவ்வொன்றாக இப்போது காண்போம்

Iஆரம்பநிலை சான்றிதழ் கல்வி தேர்வுகள்,. 

1. நாவல் CLP (Certified Linex Professional) இது லினக்ஸின் ஆரம்பநிலை  சான்றிதழ் தேர்வாகும், லினக்ஸ் கல்வியில் உங்கள் வாழ்க்கை பாதையை துவங்க இது உதவுகிறது.  ஆயினும் இது CLE(Certfied linex Engineer)யின்ஆரம்பதேர்வன்று.

  2,RHCT(Red Hat Certified Technician)  இது ரெட்ஹேட் தளத்தினை பயன்படுத்த உதவும் தொடக்கநிலை  தேர்வாகும், இதை தெரிவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு கட்டளை வரிகளைபற்றி முன் கூட்டியே தெரிந்திருக்கவேண்டிய  அவசியம் இல்லை, அடிப்படை நெட்வொர்க்கிங், பைல்சிஸ்டம், ரெட்ஹேட் பற்றியும், கணிப்பொறியின் ஹார்டுவேர் பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் மட்டும்போதும், பொதுவாக லினக்ஸை பற்றிய ஆரம்ப அறிவை பெற இந்த சான்றிதழ் வழங்குகிறது.

3,லினக்ஸ் புரோபஷனல் இன்ஸ்டிடியூட்டின் LPIC1,இதிலும் முன்கூடடியே லினக்ஸ் பற்றியும்,கட்டளை வரிகளை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பது பற்றியும் எதுவும்தெரியதேவையில்லை,, இந்ததேர்வு பெரிய ஸிஸ்டத்தை எவ்வாறு கையாளுவது, சாதாரனமான பராமரிப்பை எவ்வாறு செய்வது. காப்பு நகல் (Back Up) எவ்வாறு செய்வது,கோப்புகளை மீளஎவ்வாறுஅழைப்பது,வளாக இணைப்பை(LAN) எவ்வாறு ஏற்படுத்துவது .OS ஐ எவ்வாறு நிறுவுவதுஎன்பன  போன்ற அடிப்படை செயல்களை தெரிந்து கொள்ள செய்கிறது.

II.இடைநிலை சான்றிதழ் கல்வி தேர்கள்,. 

1,comp TVAலினக்ஸ் : ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தை பற்றிய ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளவும்,.  எவ்வாறு இதனை நிறுவுவது,அமைவுசெய்வது, நெட்வொர்க்கை நிர்வகிப்பது, அதில் ஏற்படும் தவறுகளை எவ்வாறு களைவது என்பனபோன்ற செயல்களை லினக்ஸ் அடிப்படையிலான சேவையாளர் டெக்ஸ்டாப்பில் செயல்படுத்துவதற்கான அறிவை வளர்த்து கொள்ள இந்த இடைநிலை தேர்வு உதவுகிறது.

2,LPIC2, LPIC1தேர்வை முடிப்பவர்களை மட்டும் இதனை எழுத அனுமதிக்கப்படுகிறது. இதில் OS ஐ பராமரிப்பது, குறைகளை களைவது,சிறிதான மற்றும் இடைநிலை அளவு லினக்ஸ் அல்லது மைக்ரோ சாப்டின் வின்டோ OS களை எவ்வாறு நிருவகிப்பது  எனத் தெளிந்த அறிவை வளர்த்து கொள்ள இந்த தேர்வு உதவுகிறது.

III.உயர்நிலை சான்றிதழ் கல்விதேர்வுகள்.

1, நாவல் CLE (Certified Linex Engineer) இது நாவல் லினக்ஸில் மிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கான தேர்வாகும்,இந்தேர்வு லினக்ஸ் OS ஐ நிறுவுதல், அமைவு செய்தல், பழுதுபார்த்தல், நாவல் தொடர்பான பிரச்சினைகளை சமாளித்து தீர்வுசெய்தல், லினக்ஸை மிக சிறப்பாகவும்  தனித்தன்மையுடனும் இயங்க செய்தல் ஆகியவை பற்றி மிகத்தௌ்ளத் தெளிவாக அறிந்துகொள்ள உதுவுகிறது, இந்ததேர்வின்  சான்று பெற்றஒருவர் மிக உயர்நிலையில் வினக்ஸ் சிஸ்டத்தை நிருவகிக்கும்திறனை பெற்றவர்ஆவார்.

2,RHCE(Read hot certificted Engineer) இதில் பொதுவாக நெட்வொர்க் சேவையை உருவாக்குதல்,பராமரிப்பு செய்தல் அதன் பாதுகாப்பை வளப்படுத்துதல், ஆய்வுசெய்தல், பிரச்சினை ஏதுமிருந்தால் சரிசெய்து பழுது பார்த்தல் போன்றஅறிவை வளப்படுத்தி மேம்படுத்தும் திறனை இதுவழங்குகிறது

2,LPIC3: இது முது நிலை சான்றிதழ் தேர்வாகும், சுதந்திரமான லினக்ஸ் அடிப்படையிலான உயர்நிலை அறிவை பெற உதவுகிறது.  மிகப்பெரிய நிறுவனத்தில் லினக்ஸ் சார்ந்த தளத்தை நிருவகிக்கும் திறனை இதுவழங்குகிறது,

இதுவரை பார்த்தவைகளில் ரெட் ஹேட்டை அடிப்படையாக கொண்ட RHCTமற்றும் RHCE ஆகிய இரண்டும் ஏட்டு கல்வியுடன் செய்முறை பயிற்சியையும்  பரிசோதிக்கும் தேர்வாக கட்டமைக்கபட்டுள்ளது.  இந்த தேர்வு  5 மணி நேரம் கொண்டதாகும்,இது பொதுவாக செக்சன் 1   செக்சன் 2   என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. செக்சன் 1 தேர்வில் 2 1./2 மணிநேரம் அனுமதிக்கப்படுகிறது.

இதில் தேர்வு எழுதுபவரிடம் கணிப்பொறி உதிரிபாகங்களை வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் கணிப்பொறியை மிகச்சரியாக பொறுத்தி அமைத்துவிட வேண்டும என கோரப்படுகிறது,

செக்சன் II இது மூன்று மனிநேர தேர்வாகும் இதில் செக்சன் I ல் பொறுத்தபட்ட  வெற்று கணிப்பொறியை தேர்வாளரிடம் வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயாஸ் மற்றும் சீமாஸ் செட்டிங்கை அமைத்து OS களை நிறுவி அமைவுசெய்து இதை இயக்கி காண்பிக்கவேண்டும், மேலும் எவ்வாறு நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சூழலில் இந்த OS கள் இணைந்து செயல்படுகிறது என்ற ஆழ்ந்த அறிவை பரிசோதிக்கிறது.  நிகழ்காலத்தை பற்றி அறிந்து கொள்ள வில்லையெனில் இந்த தேர்வில் வெற்றி பெற இயலாது.

இந்த RHCE யானது RH033, RH133 ஆகிய இரண்டு மாடூல்களை கொண்டது. இவையிரன்டையும் முடித்தால் மட்டுமே RHCT ரெட் ஹேட் தொழில் நுட்ப வல்லுனர் என்ற சான்றிதழ் பெறமுடியும். இதற்கு ரூபாய்10000/.= கோர்ஸ்பீஸாகவும, ரூபாய்7500/= தேர்வு கட்டணமாகவும் செலவாகும்,

இதன்பிறகு RH 253 என்றமாடூல்ஸை முடித்தால் RHCEஎன்ற தேர்வை முடித்ததாக சான்றிதழ் பெற முடியும்.

ஒவ்வொரு மாடூல்ஸையும் எழுதுவதற்கு. ரூபாய் 6000/= மற்றும் ரூபாய்7500/=தேர்வு கட்டணமாகவும் செலவாகும்.  இந்த ரெட் ஹேட் RHCTசான்றிதழ் பெற்று  ஓரிரு வருட அனுபவம் உடையவர்கள் ஆண்டிற்கு  ரூபாய் ஐந்துஇலட்சம் வரை வருமானம் ஈட்டமுடியும்.  RHCE சான்றிதழ் பெற்றவர்கள்  ஆண்டிற்கு  ரூபாய் எட்டு இலட்சம் வரை பொருளீட்ட முடியும்.  இந்த ரெட்ஹேட் பயற்சி மையம் எங்கெங்கு உள்ளது.எவ்வாறு இதில் பதிவு செய்து பயற்சிபெறுவது போன்றவிவரங்களை http://www.redhat.in/training/location.php3    என்ற வலை தளத்திற்கு சென்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

Novel linex Certification

உலகாளவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாக நாவல் லினக்ஸ் சான்றிதழ் உள்ளன.  இவையனைத்தும் SUSE லினக்ஸ் அடிப்படையாக கொண்டவையாகும.

ஆனால் இதன் அடிப்படை தியரியானது அனைத்து லினக்ஸிற்கும பொதுவானதுஆகும் செய்முறை பயிற்சி மட்டும் SUSE லினக்ஸ் பற்றியதாகும்

இதில் CCE,CLP ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும் இந்த தேர்வில்  இரண்டு மணிநேரம் மட்டுமேஅனுமதிக்கப் படுகிறது, இதுவும்ரெட் ஹேட்  போன்று,OS சிஸ்டத்தை நிறுவுதல், அமைவு செய்தல்,பிரிண்டரை அமைவுசெய்தல், நெட்மெயிலை நிறுவுதல், போன்ற செயல்களை செய்யுமாறும்  குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படியும் தேர்வாளர் கேட்டுக் கொள்ளப்படுவார்.

ஆயினும் இந்தியாவில் CLP மட்டுமே செயல் படுத்தபடுகிறது. CLP ஆனது இரண்டுமாடூல்கள் பல்வேறு லினக்ஸ் பதிப்பின் அடிப்படையில் உள்ளது.  முக்கியமான நகரங்களில் மட்டும் இரண்டுமாத்திற்கு ஒருமுறை மட்டும் இதனுடைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

Comp TIA’s லினக்ஸ் இது அடிப்படை கருத்துகள் மற்றும் செய்முறை பயிற்சி சேர்ந்த தொழில் சார்ந்த படிப்பாகும்.  இது பல்வாய்ப்பு  வினா விடை அமைப்பை கொண்டது இவைகளை 94 நிமிடங்களில்  முடிக்கவேண்டும். இதில் குறைந்தது ஆறுமாத பயிற்சியாவது பெற்றிருக்க வேண்டும்  இது ஒரு லினக்ஸின் ஆரம்பநிலை தேர்வாகும் லினக்ஸை நிறுவுதல், பாராமரித்தல்,அமைவு செய்தல்,குறைகளை களைதல் போன்றவற்றில் அடிப்படை அறிவை பரிசோதிப்பதாகும், செய்முறைபயிற்சி ஏதும் இதில் இருக்காது,.

Linex Professional Institue LPI

இந்த லினக்ஸ் கல்வி நிறுவனம் ஜூனியர், இடைநிலை,சீனியர் ஆகிய  மூன்று நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது,  இவை கடினமான தேர்வுகளல்ல, ஆயினும் லினக்ஸ் தளத்தை பற்றிய முழுமையான அறிவை இவை பரிசோதிக்கின்றன.  LPI தேர்வுகள் ஜூனியர்  முதல் சீனியர்வரை அனைத்து நிலைகளிலும் படிப்படியாகக் ஒரு தேர்வாளர் எவ்வாறு லினக்ஸை பற்றிய தெளிவான அறிவை பெற்றுள்ளார் என பரிசோதிக்கிறது.

LPICI இது ஒரு ஜூனியர் அளவு தேர்வுஆகும்,இது 101,102 என இரண்டு மாடூல்களைகொண்டது.  இது பல்வாய்ப்பு கேள்வி பதில் கொண்டது.  லினக்ஸின் பணிபுரிந்த  முந்தைய அனுபவம் எதுவும் இதற்கு தேவையில்லை ஆயினும் கணிப்பொறியை பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருந்தால் மட்டும் போதும்.

LPIC2 இதில் 201,202ஆகியஇரண்டு மாடூல்களால்  தேர்வு நடத்தப்படுகிறது.  இது ஒரு இடைநிலை அளவு தேர்வாகும்

LPIC3 இதில் 301,302 ஆகிய இரண்டு மாடூல்களில் தேர்வு நடத்தப்படுகின்றன இது சீனியர் நிலை தேர்வாகும் .

இவைகளில் உங்கள் பெருளாதார நிலைக்கு ஏற்ற அளவு தேர்வினை எழுதி வெற்றி பெறுங்கள். இந்த வாய்ப்பினை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  தகுதிக்கேற்றபணியினைபெற்று வாழ்வில்  கணிசமான பொருளை ஈட்டுங்கள்,

மறுமொழி அளிக்கவும் »

ஒரே கணினியில் விண்டோவும் லினக்ஸும் இணைந்த இயக்கம்

ஆரம்பத்தில் விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும் அனைத்து பயனாளர்களுக்கும் கணினிகளில் பயன்பாட்டு மென்பொருட்களின் மூலம் எல்லா வகையான வசதி வாய்ப்புகளையும்  குறைந்த கட்டணத்தில் வழங்கி வந்தனர், அதன்பின்னர் நாளடைவில்இந்த மென்பொருள் நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மேலும் பெருக்குவதற்காக அதே மென்பொருளை ஒரு சில சிறிய மாற்றங்களை மட்டும் செய்து விட்டு மேம்படுத்தப் பட்ட தங்களின் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்தும்படி ஆசை வலையை விரித்து மக்களை வளைத்து போடுகின்றனர் அதனால் பாமரமக்களும் இதற்காக மேலும் மேலும் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். அதனால் தனி நபர்கள், சிறு குறு நிறுவனங்கள் இவைகளுக்கு இணையான இதேயளவு வசதிகள் நிறைந்த இலவச மென்பொருளை (open source) நோக்கி தாவி செல்கின்றனர். இவ்வாறு open sources ஆக கிடைக்கக் கூடிய லினக்ஸ் OSகளில் இயங்கும் பயன்பாடுகளில் Writerஆனது விண்டோவின் wordக்கும், Calc என்பது Excelக்கும், Impress என்பது Power point க்கும் மாற்றாக உள்ளன. ஆனால் விண்டோவின் பயன்பாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளில் இவைகளில் சிறிது குறைவாகவே உள்ளன.

அதனால் விண்டோ பயன்பாடுகளுக்கு மாற்றாக அதே வசதி வாய்ப்புகள் உடைய மென்பொருளில் செலவில்லாமல் பயன்படுத்துவது பற்றி கூற வந்து அவைகளின் குறைபாட்டை மட்டும் கூறிக்கொண்டு வருகின்றீர்களே  இது சரியா இது நியாயமா இதற்கு மாற்று ஏதும் இல்லையா என்ற உங்களின் ஆதங்கம் புரிகின்றது. இப்போது அந்த செய்திக்கும் வருகின்றேன் செலவை குறைக்க கூடிய Cross Over : www.codeweaver.com  <http://www.codeweaver.com>,  மற்றும் Wine : www.winehg.com  <http://www.winehg.com>  ஆகியவை லினக்ஸ்Os க்குள் விண்டோ பயன்பாடுகளை நட்புறவு சூழலுடன் இயங்குமாறு செய்கின்றன. இதில் இரண்டு Osகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒருங்கிணைந்து இயங்கும்படி செய்து விடுகின்றது. இதற்காக சிறிதளவு மட்டும் பணம் கொடுத்து பயன்படுத்துமாறு இருந்தாலும் இவைகள் நிறைய கூடுதல் பலன்களுடன் பயன்படுத்த எளிமையாக உள்ளன.

இது எவ்வாறு பணி செய்கின்றது?

வரைகலை அட்டைகளின் (graphic card) பயன்பாட்டு மென்பொருளனது (Application software) திரையில் விண்டோவை காண்பிக்கும்படி வன்பொருள் அமைவிற்கு (Hardware system) தகவலை அனுப்புகின்றது எனக்கொள்வோம். இதனை Application Programming Interface (API) என்ற ஒரு குழுவான செயல்களின் மூலம் செயல்படும்படி செய்கின்றது. இந்த API ஆனது பயன்பாடு எந்த மென்பொருளின்மீது இயங்குகின்றது என்ற செய்தியை மட்டும் மறைத்துவிட்டு (ஏதோ ஒன்று இயங்குகின்றது) என்ற செய்தியை மட்டும் வன்பொருளிற்கு கிடைக்குமாறு செய்கின்றது.  இதே அடிப்படையில்தான் அனைத்து கணினியிலும் எந்தவொரு பயன்பாட்டு நிரல் தொடர்களும் இயங்குகின்றது.

இவ்வாறே விண்டோ பயன்பாடுகளும் விண்டோவின் APIயான விண்டோ SDKவை இயங்கச்செய்து ஏதேனுமொரு மென்பொருள் இயங்கும் செய்தியை மட்டும் வன்பொருள் பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றது.இங்கு API ஆனது  இடைமுகமாக இயங்கி கொண்டிருக்கும்வரை வன்பொருளிற்கு விண்டோ பற்றிய செய்தி தேவையற்றதாகும். இந்த நிலையில்தான் Wine செயல் திட்டமானது விண்டோவின் APIயை தான்பயணம் செய்யும் வாகனமாக எடுத்து கொண்டு செயல்படுகின்றது. அதனால் விண்டோ பயன்பாடுகளும்  தங்களின் APIயைதான் தங்களுடன் உள்ளது எனக் கருதி கொண்டு எந்த சுனக்கமும் இல்லாமல் அவை இயங்குகின்றன.

இதனை ஒரு எடுத்துகாட்டுடன் பார்ப்போம். விண்டோவின் எம்எஸ் வேர்டில் ஒரு கோப்பினை சேமிக்கும்  கட்டளையை செயல்படுத்த விண்டோ API க்கு ”Save This File” என்ற செயலியை(Funtion) அழைக்கின்றது. எனில்

இதே செயலுக்கு லினக்ஸ் தளத்தில்  ”Save file” என்ற செயலியை அழைக்கின்றது எனக்கொள்வோம்.

இந்நிலையில் எம்எஸ் வேர்டு Save this file என லினக்ஸ் தளத்தினை அழைத்தால் அந்த தளம் இந்த கட்டளையை புரிந்து கொள்ளாது. அதேபோன்று லினக்ஸ் ஆனது save file என விண்டோவை அழைத்தாலும் புரிந்து கொள்ளாது. இங்குதான் Wine தன்னுடைய பணியை துவங்குகின்றது. விண்டோ பயன்பாடு Save this file என்பதை இந்த wine ஆனது save file என உருமாற்றம் செய்து நாம் விரும்பும் பணியினை செய்து முடிக்கின்றது.ஆனால் Wine ஆனது ஒரு போலியான செயல்பாடு அன்று, இது ஒரு விண்டோவின் மூலச்செயலில் இயங்கும் ஒரு சிறந்த திறமூலச்செயல்(Open source)திட்டமாகும்.லினக்ஸில் உபுண்டு சுசி போன்ற OSகளில் ஒரு சில சொடுக்குகளில் வலைதளத்திலிருந்து இதனை பயன்படுத்துவதற்காக பதிவிறக்கம் செய்து கணினியில் இதனை நிறுவி கொண்டு ஒரு சில நொடிகளில் இந்த wine உதவியுடன் எந்தவொரு பயன்பாட்டினையும் நாம் பயன்படுத்த தயாராக முடியும்.

இதில் Cd/application/folder wineapp.exe என்றவாறு உள்ளவை உங்களுக்கு வழிகாட்டிடும் கட்டளை வரிகளாகும். இந்த wine ஆனது இலவசமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்த கூடிய open source என்பதால் இதனை எத்தனை கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனுடைய இயக்க திறன் நம்முடைய தலையீடு இல்லாமலேயே மிக நன்றாகவும் சிறப்பாகவும் செயல்படுகின்றது.

ஏதாவது பிரச்சினை என்று வந்தால் மட்டும் trouble shooting wine என்பது உங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த cross over ஆனது Ms office பயன்பாட்டை லினக்ஸ் OSத்தின் மீது இயங்கும் பணியை சுலபமாக்குகின்றது. இதனை நிறுவுவதற்கு என தனியாக பயிற்சி ஏதும் தேவையில்லை Cross Overயை நிறுவ ஆரம்பித்தவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியில்next, next, finish போன்ற பொத்தான்களை அடுத்தடுத்து தெரிவுசெய்து சொடுக்கினாலே போதுமானது .நம்முடைய கணினியில்  உள்ள சாதாரண வரைகலை அமைப்பே(GUI) remove programme, plugin, fonts, change cross over setting ஆகிய பணிகள் அனைத்தையும் மிக சுலபமாக செய்துவிடுகின்றது.

இந்த cross over ஆனது Ms office 2000, office 2003 ஆகிய பயன்பாடுகளை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் எளிதாக லினக்ஸ் மீது இயங்கசெய்கின்றது. இதனுடைய standard version மட்டுமே தனித்தனி கணினிகளில் தயாராக நிறுவ வேண்டியுள்ளது. ஆனால் இது நம்பதகுந்ததாக உள்ளது. wine அல்லது cross over ஏதேனுமொன்றை பன்படுத்துவதாக இருந்தாலும் 30 நாட்களுக்கு மட்டும்  trial ஆக www.codeweavers.com/products/downloads  <http://www.codeweavers.com/products/downloads>  இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். லினக்ஸ் தளத்திற்கு  செல்வதா விண்டோற்கு செல்வதா என மதில்மேல் பூனையாக அலைபாயாமல் இந்த wine/crossover ஆகியவற்றில் ஒன்றை  கணினியில் நிறுவி விண்டோ பயன்பாடுகளை லினக்ஸ் OSத்தின் மீது இயங்க செய்து உங்களுடைய  பணியை முடித்து கொள்க

.

மறுமொழி அளிக்கவும் »

திறமூலமென்பொருள் சூழலுக்கு மாறிடுவோம்

இன்றைய நவீனஉலகில் ஒருநிறுவனம் எளிதாகவும் விரைவாகவும்  செயல்படுவதற்காக  கணினியை அறிமுகபடுத்தியுள்ளஇன்றைய செயல் வரவேற்கதக்கதே ஆனாலும் ஒரு கணினியை மட்டும் வாங்கினால போதுமா அதனை செயல்பட செய்வதற்கு இயக்கமுறைமை வேண்டுமே அதற்காக விண்டோ(propertiy software)போன்ற பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற இயக்கமுறைமையை வாங்கினால்  அதுவும் அவ்வப்போது புதியபதிப்புஎன்றம் புதியதிறனுடையதுயென்றும்  மீண்டும் பணம் கொடுத்துதான்   இதனை புதிய பெயரில் வெளியிடும் இதனுடைய இயக்கமுறைமையை வாங்கி பயன்படுத்திட முடியும என்றநிலையிலும் தற்போது நாம் வாழ்ந்து வருகின்றோம்

இந்த இயக்க முறைமை மட்டும் போதாது அதற்குமேலும் நம்முடைய தேவையை நிறைவுசெய்வதற்கான அலுவலகபயன்பாடுஎன்றும் தரவுதளமேலாண்மை என்றும் மேலும் நம்முடைய தேவைக்கேற்ற பயன்பாட்டு மென்பொருளை பணம்கொடுத்து வாங்கவேண்டியுள்ளது

அதுமட்டமல்லாது நம்முடைய கணினியை நச்சுநிரல் தாக்குதலிலிருந்து பாதுகாத்திட எதிர்நச்சுநிரல் வேறு பணம்கொடுத்து வாங்கி பாதுகாப்பு பெறவேண்டியுள்ளது

இவ்வாறே ஒரு செயல் அதனைதொடர்ந்து மற்றொரு செயல்  என்று எதற்கெடுத்தாலும் பணம்கொடுத்தான் நாம் விரும்பியதை பெற்று பயன்படுத்த முடியும் என்ற நிலையில் கைகளால் வேலைசெய்தபோதாவது நிம்தியாகவும் குறைந்த செலவிலும் நிறுவனத்தை நடத்திவந்தோம் ஆனால்இன்று விரைவாக பணிமுடிக்க படுகின்றது என தொட்டதற்கெல்லாம் பணத்தை செலவழித்து நிருவகிக்கும் செலவு கூடுதலானதே தவிர நிருவாக செலவானது சிக்கனமாக கட்டுக்குள் இல்லையே என எண்ணவேண்டிய சூழ்நிலையில் நாமெல்லாம் தற்போது தள்ளபட்டுள்ளோம்

   அஞ்சற்க இவ்வாறான சூழலில் கைகொடுக்க வருவதுதான் திறமூல(open sources) பயன்பாடுகள்ஆகும்  அவ்வாறான ஒரு வெற்றிக்கதையை இப்போது காண்போம்

கேரளமாநிலத்தில்  பால்கூட்டுறவுத்துறையின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்குமேற்பட்ட பால்கூட்டுறவுசங்கங்கள் உள்ளன மேலும் ஒவ்வொரு  பால்கூட்டுறவுசங்கத்திலும் நாறுமுதல் ஆயிரம்வரை பால்வழங்கும் விவசாய உறுப்பினர்கள் உள்ளனர்

இவ்வுறுப்பினர்கள் அன்றாடம் வழங்கும் பாலினை அளந்து அதன்தரம் அதிலுள்ள கொழுப்புசத்தின் அளவு ஆகியவற்றை சரிபார்த்து  அவரவர்களின் தனிப்பேரேடுகளில் பதிவுசெய்து அதற்கான விலையை அன்றைய சாயுங்காலம் அல்லது ஒரிருநாட்களில் அறிவிப்பு செய்தபின்  அவரவர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை கணக்கிட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்குவதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளான பணியாக இருந்தது

இந்நிலையில் இதனை தானியங்கி செயலாக மாற்றலாமேஎன முடிவுசெய்து 2001 ஆம் ஆண்டுமுதல் National Information Centre (NIC) மூலம் செயல்படுத்திட முயற்சி செய்யபட்டது  இதற்காக நூற்றிற்கு மேற்பட்ட கணினிகளும் சேவையாளர் கணினியும் கொள்முதல் செய்து அவைகளில் லைசென்ஸ் கட்டணம் செலுத்தி விண்டோ 98  இயக்க முறைமையயயும் அதில் இயங்கும் விசுவல் பேசிக் மூலம் Lypsaa என்ற பயன்பாட்டு மென்பொருளையும்  உருவாக்கி ,பால் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பயிற்சியளித்து செயல்படுத்தபட்டது

ஆரம்பத்தில் இதன் பயன் மிகபிரமாதமாகத்தான இருந்தது   ஆனால் போகபோகத்தான் ஒவ்வொரு பிரச்சினையாக தோன்ற ஆரம்பித்தன ஒவ்வொரு மாதத்திற்கும் ஓரிரு கணினிகள் நச்சுநிரலால் பாதிக்கபட்டு கணினியின் இயக்கம் முடங்கிபோனது  அதனைசரிசெய்வதற்காக ஒவ்வொருமாதமும் குறிப்பிட்ட தொகை செலவிட வேண்டியருந்தது

அதன்பின்னர் விண்டோ 98 ஆனது விண்டோ மில்லேனியம் விண்டோ எக்ஸ்பி என்றவாறு புதிய இயக்கமுறைமைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம்  வெளியீடு செய்து கொண்டே இருந்ததால் இந்நிருவனம் பழைய இயக்கமுறைமைக்கு தன்னுடைய ஆதரவை குறிப்பிட்ட ஆண்டுகழித்து நிறுத்திகொண்டு வந்தது

அதனால் இலாபநோக்கமற்ற, கிடைக்கும் பயனானது அதன்  அனைத்து உறுப்பினர்களும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்  செயல்பட்டு வரும் இந்த பால்கூட்டுறவுசங்கமானது மைக்ரோசாப்ட் நிறுவனம்  புதியதாக வெளியிடும் ஒவ்வொரு  இயக்கமுறைமைக்கான லைசென்ஸ் கட்டணம் பின்னர் புதிய இயக்க முறைமையில் இயங்குவதற்கேற்ற புதிய பயன்பாட்டினை உருவாக்குவது மீண்டும் அதன் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி  புதிய நிலைக்கு கொண்டு செல்லவேண்டியதற்கு மீண்டும் ஏராளமாக செலவிடவேண்டிய நிலையானது

இவ்வாறான சூழலில் இதற்கு மாற்று வழியாகவும் இருக்கவேண்டும் செலவுகுறைவாகவும் இருக்கவேண்டும் அதேசமயத்தில் புதியதாக பெற்ற வசதியும குறையக்கூடாது என்ற நோக்கத்தில் 2007 ஆம்ஆண்டில்  குழுஒன்று அமைக்கபட்டது

அக்குழுவானது கட்டணமில்லாத திறமூல இயக்கமுறைமையான உபுண்டு இயக்க முறைமையையும் LAMP தளத்தில் இயங்கும் OpenLypsaa என்ற புதிய பயன்பாட்டு மென்பொருளையும் உருவாக்கி செயல்படுத்துமாறு பரிந்துரை செய்தது

அதனடிப்படையில் பால்வழங்கும் விவசாய உறுப்பினர்கள் அன்றாடம் வழங்கும் பாலினை அளந்து அதன்தரம் அதிலுள்ள கொழுப்புசத்தின் அளவு ஆகியவற்றை சரிபார்த்து  அவர்வர்களின் பால்விலையை அறிவித்து அதனை பேரேடுகளில் பதிவுசெய்து அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை   கணக்கிட்டு அதிலிருந்து மாட்டுதீவணம் வழங்கியதற்கான தொகை, முன்பணம் வழங்கியருந்தால் அதனையும் கணக்கில் கொணடு நிகரமாக ஒவ்வொருவருக்கும் வழங்கவேண்டிய தொகையை பட்டியலாக தயார் செய்யமுடிந்தது

அதுமட்டுமல்லாமல் இந்த தரவுகளிலருந்து Business Intelligence and Reporting Tool என்ற கருவியின் மூலம் ஒருசில அறிக்கைகளையும் Highcharts என்ற கருவியன்மூலம் , MIS அறி்க்கையும் மிகஎளிதாக பெறமுடிகின்றது  இது  PHP ,Java ஆகிய இரண்டும் சேர்த்து ஒருங்கிணைந்த உருவாக்கபட்டதாகும் அதாவது இந்த அறிக்கைகளுக்காவென்று ஆயிரக்கணக்கான கட்டளைவரிகளை எழுததேவையில்லை இதனை திறமூலத்தில் இருந்து கட்டணமில்லாமல் எளிதாக பெறமுடிகினறது

தற்போது இந்த குழுவானது  System for Automation Milk Procurement (SAMP)என்ற புதிய வகை பயன்பாட்டு மென்பொருளை இதேதிறமூலமெனபொருட்களின் வழியாக கட்டணமில்லாது உருவாக்கியுள்ளனர்  இக்கூட்டுறவுசங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது அதற்காக தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலத்திற்கு பால் வழங்கும் விவசாயியை வாக்களிக்க தகுதியுள்ளவர்ளின் பட்டியலையும் அவ்வாறே தொடரச்சியாக இரண்டுமாதங்களுக்கும் பால் வழங்கியவர்களுக்கு பரிசு வழங்குவதற்கான உறுப்பினர்களின் பெயர்பட்டியலையும் இந்த (SAMP)என்ற புதிய வகை பயன்பாட்டு மென்பொருள் மூலம்  தயார்செய்யமுடிகின்றது  ஒரு உறுப்பினர் தம்முடையபாலின் விலை எவ்வளவு மாதாந்திர பட்டுவாடாஆகும் தொகை எவ்வளவு என அிறிந்துகொள்ள Milk rate ,Monthly payment என தட்டச்சு செய்து தம்முடைய உறுப்பினர் எண்ணையும் உள்ளீடுசெய்தால் அவ்விவரங்களை உடன்குறுஞ்செய்தியாக.அவருடைய செல்லிடத்து பேசியில் பெறும் வசதியும் இதில் உள்ளது மொத்தத்தில் இந்த பயன்பாடு உருவாக்குவதற்கோ இதுஇயங்குவதற்கான இயக்கமுறைமையை பயன்படுத்துவதற்கான அனுமதிக்கட்டணம் என்றோ அதிகம் செலவழிக்க வேணடியதில்லை  என்றும் இதன்மூலம் அறிந்துகொள்லமுடிகின்றது நாமும் இவ்வாறே நாமும் நம்முடைய மென்பொருள் தேவையை இந்த திறமூலமென்பொருள் சூழலுக்கு மாறி நிறைவுசெய்யலாமே

மறுமொழி அளிக்கவும் »

ரைட்டர் 2 இபப் (w2ePUB)

  ஆங்கிலத்தில் w2eஎன சுருக்கமாக அழைக்கபடும் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கருவியாகும் இது தற்போது ஒப்பன்ஆஃபிஸின்  சொற்செயலியாக செயல்படுவதற்கான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது

ஆயினும் இது ஒரு ஆவணத்தை உருமாற்றும் பணியை செய்யாது  ஆனால் இது ஒரு கைபேசியில் பயன்படுத்திடகூடிய இபப் ஆவணத்தை கையாளகூடியதாகும்  இதனை http://extensions.services.openoffice.org/en/download/4618 என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.

பிறகு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்திரையின் மேலே கருவிபட்டியிலிருந்து tools=>Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியவுடன் தோன்றிடும்   Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் உள்ள இந்த விரிவாக்க கருவியை  தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நிறுவிக்கொள்க

உடன் மூன்று பச்சைவண்ண குறும்படத்துடன் கூடிய சிறு கருவிபட்டியொன்று படத்தில் உள்ளவாறு ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் சாளரத்தில் மேலே வீற்றிருப்பதை காணலாம்

முதல் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பு ஆவணமானது இபப் ஆவணமாக உருவாக்கபட்டு அதே மடிப்பகத்திற்குள் சேமித்து விடும்

இரண்டாவதாக உள்ள நீலவண்ண குறும்படம் தலைப்பு ஆசிரியர் பெயர் போன்றவைகளை சேர்ப்பதற்கும் பதிப்பிக்கவும் பயன்படுகின்றது

மூன்றாவதான சிவப்புவண்ண குறும்படம்  ஆவணங்களின் அமைப்பை மாறுதல் செய்ய பயன்படுகின்றது இதனை தற்போது பயன்படுத்திடவேண்டாம்

எச்சரிக்கை இதனால் ஏற்படும் தீங்கிற்கும் இழப்பிற்கும்  ஓப்பன் ஆஃபிஸ் பொறுப்பேற்காது நம்முடைய சொந்த பொறுப்பில் வேண்டுமானால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்

மறுமொழி அளிக்கவும் »

உபுண்டு-11.10 -இன் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

எளிதான பாவணை ,உள்ளுணர்வுடைய இடைமுகம்,விரைவாக இயங்க கூடியது, பாதுகாப்பானது , ஆயிரக்கணக்கான பயன்பாட்டு மென் பொருட்களை கொண்டது , புதுமையான அனுபவத்தை வழங்குகூடியது ஆகிய அனைத்து அருங்குணங்களையும் ஒருங்கே கொண்ட உபுண்டு-11.10 இயக்க முறைமையின் சிறப்பியல்புகளை பற்றி இப்போது காண்போம்

   1.இந்த உபுண்டு-11.10 இயக்கமுறைமையுடன் ஆயிரத்திற்கும் அதிகமான பயன் பாட்டு மென்பொருட்கள் மென்பொருள் மையம்(software centre) என்பதன்கீழ்  அவைகளின் தரத்திற்கேற்ப வரிசைபடுத்தி வைத்திருப்பதால்  அவைகளிலிருந்து நம்முடைய தேவைக்கேற்றதை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்ளலாம்

2.இதன் முகப்புத்திரையின் இடதுபுற பலகத்தில் நம்முடைய விருப்ப கருவிகள், பயன்பாடுகள் ஆகியவற்றின் குறும்படங்கள் தயார்நிலையில் பட்டியலாக இருப்பதால் அவைகளிலிருந்து நாம்விரும்பியதை உடனடியாக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

மேலும் இந்த பட்டியில் நாம் மேலும் சேர்க்க விரும்பியவற்றை சேர்த்து கொள்ளமுடியும் தேவையில்லாததை நீக்கிடவும் அல்லது தற்காலிகமாக மறைத்து வைக்கமுடியும்

3துவக்கத்திரையின்  மேலே இடதுபுற மூலையிலிருக்கும் இதனுடைய குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சல்,படங்கள் போன்றபயன்பாடுகளை உடனடியாக துவக்கி   கையாளுவதற்கான குறுக்குவழிகள் ஏராளமாக இதிலிருந்து கிடைக்கின்றன

4.நாம் இதனுடைய ஒரேதிரையில ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை தனித்தனி சாளரமாக தோன்றச்செய்து அவற்றுள் பணிபுரியலாம் மேலும்  அந்நிலையில் Alt + Tab , Alt + Grave ஆகிய விசைகளை சேர்த்து அழுத்து வதன் வாயிலாக அல்லது workspaces எனும் கருவியின் மூலமாக அவைகளுக்கிடையே அவ்வப்போது மாறிக்கொண்டு தடங்களின்றி பணிபுரியலாம்

5.இதில் உள்ள செந்தரமான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஃபயர்வால் ,வைரஸ் பாதுகாப்பு கவசங்கள்  போன்ற கூடுதலான பாதுகாப்பும் கிடைக்கின்றன அதனால் தனிப்பட்ட வங்கிகணக்கை பராமரித்தல் மிகமுக்கியமான தரவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய பணிகளைபயமின்றி செய்யலாம்

6.மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய பயன்பாடுகளின் எந்தவகையான கோப்புகளையும் எளிதாக கையாளுவதற்கான ஒத்திசைவு தன்மை இதில் உள்ளதால் எதைபற்றியும் கவலையில்லாமல் எந்த கோப்பையும் கையாளமுடியும்

7.இது எந்த கணினியிலும் விரைவாக செயல்படக்கூடியது புதியகணினியெனில் மிகவும் விரைவாக செயல்படக்கூடியதாகும்

8இது வட்டாரம் மொழி பால்வேற்றுமை போன்று எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இலவசமாக கிடைக்ககூடியதாகவும் செயல்படுத்த கூடியதாகவும் உள்ளது


 

 

 

 

 

9.இதனை ஆரம்பித்து ஏறத்தாழ ஏழாண்டுகள் , பதினைந்து பதிப்புகளுடன் எந்தவித கவலையிமில்லாமல் வெற்றிநடை போடக்கூடியதாக இந்த உபுண்டு 11.10 விளங்குகின்றது

இதனை இதனுடைய http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

மறுமொழி அளிக்கவும் »

லினக்ஸ் சான்றிதழ் கல்வி

மைக்ரோ சாப்டிற்கு மாற்றாக செலவில்லாத திறமூலபயன்பாடாக லினக்ஸ் ஆனது நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதற்கு ஈடுகட்ட கூடிய அளவிற்கு இந்த திறமூலபயன்பாட்டில் நிரல் தொடர் எழுதி இயக்க கூடிய அளவிற்கு தொழில் நுட்ப வல்லுநர்களின் தேவையும் வளர்ந்து கொண்டே வருகின்றது இந்த தளங்களின் பணிபுரியக்கூடிய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆக வளர்வதற்கு பின்வரும் கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்,

இன்றைய நடைமுறையில் பல்வேறுவகையான லினக்ஸ் சான்றிதழ் படிப்பு கிடைக்கின்றன.  பொதுவாக இந்த லினக்ஸ் சார்ந்த படிப்பை ஆரம்பநிலை, இடைநிலை,உயர்நிலை என மூன்றுவகையாக பிரிக்கலாம்,

சாதாரனமாக  லினக்ஸ் பற்றி ஒன்றுமே தெரியாத பயிற்சி ஏதும் இல்லாதவர்கள் கூட லினக்ஸ் பற்றிய அடிப்படையான அறிவை மட்டும் வளர்த்து கொண்டு இதன் ஆரம்ப நிலை சான்றிதழை பெறமுடியும்.

ஒரு மேஜைக்கணினியை (desktop)அல்லது பணிநிலையத்தை (work station)  ஒன்றை எவ்வாறு அமைவு செய்வது அல்லது அதில் உள்ள தவறுகளை எவ்வாறு களைவது என்பன போன்ற தெரிந்திருந்தால் இடை நிலை கல்வி சான்றுபெறமுடியும்.

சேவையாளர் (Server)கணினியை எவ்வாறு அமைவு செய்வது அதில்ஏற்படும் குறைகளை எவ்வாறு களைவது, சிறப்பு சேவையாளர்களையும் பயன்பாடுகளையும் எவ்வாறு நிருவகிப்பது எந்த பிரச்சிணைகளையும் எவ்வாறு சமாளிப்பது என்பன போன்ற மிகத்திறன் வாய்ந்த நிலையை உருவாக்க உதவுவது உயர்நிலை  சான்றிதழாகும்,.

லினக்ஸில் உலகளாவிய அளவில்  அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு பல உள்ளன அவைகளை நன்கு கற்று தேர்வு எழுதிவெற்றிபெற்றால் இளைஞர்களின் எதிர்காலம் கண்டிப்பாக மிக பிராகாசமாக அமையும் என்பது திண்ணம்

இந்த சான்றிதழ்கள் கல்வி பற்றிய விவரங்களை இப்போது ஒவ்வொன்றாக காண்போம்

Iஆரம்பநிலை சான்றிதழ் கல்வி தேர்வுகள்,. 

1. நாவல் CLP (Certified Linex Professional) இது லினக்ஸின் ஆரம்பநிலை  சான்றிதழ் கல்வியின் தேர்வாகும், லினக்ஸ் கல்வியில் உங்கள் வாழ்க்கை பாதையை துவங்க இது உதவுகிறது.  ஆயினும் இது CLE(Certfied linex Engineer)யின்ஆரம்பதேர்வன்று என்பதை மனதில் கொள்க.

2,RHCT(Red Hat Certified Technician)  இது ரெட்ஹெட் தளத்தினை பயன்படுத்த உதவும் தொடக்கநிலை  தேர்வாகும்,இதை தெரிவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு  நிரல் தொடரினுடைய கட்டளை வரிகளைபற்றிமுன் கூட்டியே தெரிந்திருக்கவேண்டிய  அவசியம் இல்லை, பிணையம் (networking), கோப்புஅமைவு(file system), ரெட்ஹேட் பற்றியும்,கணினியின் வன்பொருள் பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் மட்டும்போதும், பொதுவாக லினக்ஸை பற்றிய ஆரம்ப அறிவை இந்த சான்றிதழ் வழங்குகிறது.

3,லினக்ஸ் புரோபஷனல்இன்ஸ்டிடியூட்டின் LPIC1,இதிலும் லினக்ஸ் பற்றியும், நிரல் தொடரினுடைய கட்டளை வரிகளைபற்றியும் இவற்றை  எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பது பற்றி முன்கூட்டியே  எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவ்வசியமில்லை,, இந்ததேர்வு பெரிய கணினிஅமைவை எவ்வாறு கையாளுவது, சாதாரனமான பராமரிப்பை எவ்வாறு செய்வது. காப்பு நகல் (Back Up) எவ்வாறுசெய்வது,கோப்புகளை மீளஎவ்வாறுஅழைப்பது,வளாக இணைப்பை(LAN) எவ்வாறு ஏற்படுத்துவது .OS ஐ எவ்வாறு நிறுவுவது என்பன போன்ற அடிப்படை செயல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

II.இடைநிலை சான்றிதழ் கல்வி தேர்வுகள்,.

1,comp TVAலினக்ஸ் : இது திறமூலபயன்பாட்டு தொழில் நுட்பத்தை பற்றிய ஆரம்ப அறிவை அறிந்து கொள்ளவும்,.  எவ்வாறு இதனை நிறுவுவது, அமைவு செய்வது, பிணையத்தை (networking) நிருவகிப்பது, அதில் ஏற்படும் தவறுகளை களைவது ஆகிய செயல்களை லினக்ஸ் அடிப்படையிலான சேவையாளர் கணினியில் செயல்படுத்துவதற்கான அறிவை வளர்த்து கொள்ள இந்த இடைநிலை தேர்வு உதவுகிறது.

2,LPIC2, LPIC1தேர்வை முடிப்பவர்கள் மட்டுமே இதனை எழுத அனுமதிக்கப்படுகிறது. OS ஐ எவ்வாறு பராமரிப்பது, குறைகளை களைவது,சிறிதான மற்றும் இடைநிலை அளவு லினக்ஸ் அல்லது மைக்ரோ சாப்டின் வின்டோ OS களை எவ்வாறு நிருவகிப்பது  எனத் தெளிந்த அறிவை வளர்த்து கொள்ள இந்த தேர்வு உதவுகிறது.

III.உயா¢நிலை சான்றிதழ் கல்விதேர்வுகள்.

1, நாவல் CLE (Certified Linex Engineer) இது நாவல் லினக்ஸில் மிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கான தேர்வாகும்,இந்ததேர்வு லினக்ஸ் OS ஐ நிறுவுதல், அமைவு செய்தல், பழுதுபார்த்தல், நாவல் தொடர்பான பிரச்சினைகளுக்கு  தீர்வுசெய்தல், லினக்ஸை மிக சிறப்பாகவும்  தனித்தன்மையுடனும் இயங்க செய்தல் ஆகியவை பற்றி மிகத்தௌளத்தெளிவாக அறிந்துகொள்ள உதுவுகிறது, இந்த தேர்வின்  சான்று பெற்றஒருவர்மிக உயர்நிலையில் லினக்ஸ் இயக்கமுறைமையை நன்கு நிருவகிக்கும்திறனை பெற்றவர் ஆவார்.

2,RHCE(Read hot certificted Engineer)  பொதுவாக பிணையச் (networking) சேவையை உருவாக்குதல்,பராமரிப்பு செய்தல் அதன் பாதுகாப்பை வளப்படுத்துதல், ஆய்வுசெய்தல், பிரச்சினை ஏதுமிருந்தால் சரிசெய்து பழுது பார்த்தல் போன்றஅறிவை வளப்படுத்தி மேம்படுத்தும் திறனை இது வழங்குகிறது

2,LPIC3: இது ஒரு முது நிலை சான்றிதழ் தேர்வாகும், இது ஒரு சுதந்திரமான லினக்ஸ் அடிப்படையிலான உயர்நிலை அறிவை பெற உதவுகிறது.  மிகபெரிய நிறுவனத்தில் லினக்ஸ் சார்ந்த தளத்தை நிருவகிக்கும் திறனை இது வழங்குகிறது,

இதுவரை பார்த்தவைகளில் ரெட் ஹேட்டை அடிப்படையாக கொண்ட RHCTமற்றும் RHCE ஆகிய இரண்டும் ஏட்டு கல்வியுடன் செய்முறை பயிற்சியையும்  பரிசோதிக்கும் தேர்வாக கட்டமைக்கபட்டுள்ளன.  இந்த தேர்வு  5 மணி நேரம் கொண்டதாகும்,இது பொதுவாக பகுதி 1 ,பகுதி2   என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி1தேர்வு இத்தேர்வை எழுதுவதற்கு 2. 1/2 மணிநேரம் அனுமதிக்கப்படுகிறது.இதில் தேர்வு எழுதுபவரிடம் கணினியினுடைய உதிரிபாகங்களை வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் கணினியை மிகச்சரியாக பொறுத்தி அமைத்துவிட வேண்டும் என கோரப்படுகிறது,

பகுதி2 தேர்வு  இது மூன்று மனிநேர தேர்வாகும் இதில் பகுதி I தேர்வில் பொறுத்தபட்ட  வெற்று கணினியை தேர்வாளரிடம் வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயாஸ் மற்றும் சீமாஸ் அமைவை அமைத்து OS களை நிறுவி அமைவுசெய்து கணினியை இயக்கி காண்பிக்கவேண்டும், மேலும் எவ்வாறு நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சூழலில் இந்த OS கள் செயல்படுகின்றன என்ற ஆழ்ந்த அறிவை பரிசோதிக்கிறது.  மேலும் நிகழ்காலத்தை பற்றி அறிந்து கொள்ள வில்லையெனில் இந்த தேர்வில் வெற்றி பெற இயலாது.

இந்த RHCE யானது RH033, RH133 ஆகிய இரண்டு மாடூல்களை கொண்டது. இவையிரன்டையும் முடித்தால் மட்டுமே RHCT ரெட் ஹேட் தொழில் நுட்ப வல்லுனர் என்ற சான்றிதழ் பெறமுடியும். இதற்கு தேராயமாக ரூபாய் 10000/- பயிற்சி கட்டணமாகவும, ரூபாய் 7500/-தேர்வு கட்டணமாகவும் செலவிடவேண்டும்,

இதன்பிறகு RH 253 என்றமாடூல்ஸை முடித்தால் RHCEஎன்ற தேர்வில் வெற்றிபெற்றததாக சான்றிதழ் பெற முடியும்.

ஒவ்வொரு மாடூல்ஸையும்படிப்பதற்கு.தோராயமாக ரூபாய் 6000/- பயிற்சி கட்டணமாகவும் ரூபாய்7500/- தேர்வு கட்டணமாகவும் செலவிடவேண்டும்.  இந்த ரெட் ஹாட் RHCTசான்றிதழ் பெற்று  ஓரிரு வருட அனுபவம் உடையவர்கள் ஆண்டிற்கு  ரூபாய் ஐந்துஇலட்சம் வரை வருமானம் ஈட்டமுடியும்.  RHCE சான்றிதழ் பெற்றவர்கள்  ஆண்டிற்கு  ரூபாய் எட்டு இலட்சம் வரை பொருளீட்ட முடியும்.  இந்த ரெட்ஹேட் பயற்சி மையம் எங்கெங்கு உள்ளது.எவ்வாறு இதில் பதிவு செய்து பயற்சி பெறுவது என்பன போன்றவிவரங்களை Http: //WWW.redhat.in/training/location.php3 என்ற வலை தளத்திற்கு சென்று விவரங்களை அறிந்துகொண்டு செயல்படுக.

Novel linex Certification

உலகாளவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாக நாவல்   லினக்ஸ் சான்றிதழ் கல்வி உள்ளது.  இது SUSE லினக்ஸ் அடிப்படையாக கொண்டதாகும.

ஆனால் இதனுடைய அடிப்படை கல்வியானது அனைத்து லினக்ஸிற்கும பொதுவானது ஆகும் செய்முறை பயிற்சி மட்டும் SUSE லினக்ஸ் பற்றியதாகும்

இதில் உள்ள CCE,CLP ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும் இந்த தேர்வில்  இரண்டு மணிநேரம் மட்டுமேஅனுமதிக்கப் படுகிறது, இதுவும்ரெட் ஹேட்  போன்று,OSஅமைவை நிறுவுதல், அமைவு செய்தல்,அச்சுப்பொறியை அமைவுசெய்தல், பிணையத்தைநிறுவுதல், போன்ற செயல்களை செய்யுமாறும்  குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படியும் தேர்வாளர் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

ஆயினும் இந்தியாவில் CLP என்ற தேர்வு மட்டுமே செயல் படுத்தபடுகிறது. CLP ஆனது இரண்டுமாடூல்கள் பல்வேறு லினக்ஸ் பதிப்பின் அடிப்படையில் உள்ளது.  முக்கியமான நகரங்களில் மட்டும் இரண்டுமாத்திற்கு ஒருமுறை மட்டும் இதனுடைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

Comp TIA’s லினக்ஸ் இது அடிப்படை கருத்துகளையும்  செய்முறை பயிற்சியையும் சேர்ந்த தொழில் சார்ந்த படிப்பாகும்.  இது பல்வாய்ப்பு (கொள்குறி) வினா விடை அமைப்பை கொண்டது இவைகளை 94 நிமிடங்களில்  முடிக்கவேண்டும். இதில் குறைந்தது ஆறுமாத பயிற்சியாவது பெற்றிருக்க வேண்டும்  இது ஒரு லினக்ஸின் ஆரம்பநிலை தேர்வாகும் இது லினக்ஸை நிறுவுதல், பாராமரித்தல்,அமைவு செய்தல்,குறைகளை களைதல், போன்றவற்றில் அடிப்படை அறிவை பரிசோதிப்பதாகும், செய்முறைபயிற்சி ஏதும் இதில் இருக்காது,.

Linex Professional Institue LPI

இந்த லினக்ஸ் கல்வி நிறுவனம் ஜூனியர், இடைநிலை,சீனியர் ஆகிய  மூன்று நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது,  இவை கடினமான தேர்வுகளன்று, ஆயினும் லினக்ஸ் தளத்தை பற்றிய முழுமையான அறிவை இவை பரிசோதிக்கின்றன.  LPI தேர்வுகளில்  ஜூனியர்  முதல் சீனியர்  வரை அனைத்து நிலைகளிலும் படிப்படியாக ஒரு தேர்வாளர் எவ்வாறு லினக்ஸை பற்றிய தெளிவான அறிவை பெற்றுள்ளார் என பரிசோதிக்கிறது.

LPICI இது ஒரு ஜூனியர் நிலை தேர்வு ஆகும்,இது 101,102 என இரண்டு மாடூல்களைகொண்டது.  இது பல்வாய்ப்பு (கொள்குறி) அடிப்படையில் கேள்வி பதில் கொண்டது.  லினக்ஸின் பணிபுரிந்த  முந்தைய அனுபவம் எதுவும் இதற்கு தேவையில்லை ஆயினும் கணினியை பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருந்தால் மட்டும் போதும்.

LPIC2 இதில் 201,202ஆகிய இரண்டு மாடூல்களால்  தேர்வு நடத்தப்படுகிறது.  இது ஒரு இடைநிலை அளவு தேர்வாகும்

LPIC3 இதில் 301,302 ஆகிய இரண்டு மாடூல்களில் தேர்வு நடத்தப்படுகிறது இது சீனியர்  நிலை தேர்வாகும் .

இவைகளில் நம்முடைய பெருளாதார நிலைக்கு ஏற்ற அளவு தேர்வினை எழுதி வெற்றி பெற பயன்படுத்தி கொள்க. இந்த வாய்ப்பினை நமக்கு சாதகமாக பயன்படுத்தி  தகுதிக்கேற்றபணியினைபெற்று வாழ்வில்  கணிசமான பொருள் ஈட்டிடுக,

மறுமொழிகள் (1) »

.எளிதாக செயல்படுத்தக்கூடிய இயக்கமுறைமை(operating system) எது.?

ஒரேமாதிரியான கட்டமைவை(configuration)கொண்டுள்ள  இரண்டு கணினிகளில் லினக்ஸ் , விண்டோஆகியஇரண்டு வெவ்வேறு இயக்கமுறைமைகளை யார் முதலில்  நிறுவி நன்றாக இயக்குகின்றாரோ அவருக்கு மற்றவர் தன்னுடைய செலவில் அன்று இரவு விருந்து அளிக்கவேண்டும் என்ற போட்டி இன்று எனக்கும் என்னுடைய நண்பருக்கும்   ஏற்பட்டது

நான் லினக்ஸின் மாண்ட்ரிவா2011  என்ற இயக்கமுறைமையையும் என்னுடைய நண்பர் விண்டோ 7 பயன்படுத்துவது என்று முடிவாயிற்று

நிறுவும் பணியை ஒரேசமயத்தில் இருவரும் தொடங்கினோம். “press any key to boot from CD”  என்ற செய்தி தோன்றியவுடன் அதற்கடுத்து செய்ய வேண்டிய செயலுக்கு ஏதுவாக நாங்களிருவரும் தயராக இருந்தோம்

என்னுடைய கணினியில் அதைப்போன்ற செய்தி எதுவும் தோன்றாமல் இந்த இயக்கமுறைமையை நிறுவிடும் பணி மிக சுமுகமாக நடைபெற்றுவந்ததுஆனால் நண்பருடைய கணினியின் திரை நினைவகத்தை பங்கிடும் பணியின்போது  உரைநிலையில்(text mode) தடங்களுடன் நின்றிருந்தது ,உடன் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரை அழைத்து சரிசெய்து தொடக்க இயக்க பணி தொடர்ந்து நடைபெறுமாறு செய்தார்,

இவ்வாறு எந்தவித தொந்தரவும் இல்லாமல் என்னுடைய கணினியில் லினக்ஸ் இயக்கமுறைமையும் நன்பருடையதில்  அவ்வப்போது தடங்கள் எற்பட்டு உடன் தட்டிகொட்டி சரிசெய்து விண்டோ இயக்கமுறைமையும் ஒருவழியாக நிறுவிடும் பணியை முடிவுக்கு கொண்டு வந்தோம்

என்னுடைய கணினியின் துல்லியம் நன்றாக உள்ளது என்றும் தன்னுடையது  அவ்வாறு இல்லையென்றும் அதற்கான காரணம் யாது என நண்பர் தொழில்நுட்ப வல்லுனரிடம் வினவினார் நன்பருடைய கணினியின் திரை விஸ்டாவிற்கு உரியது  என்றும் விண்டோ7க்கு பொருத்தமாக அமைய வேண்டுமெனில் அதற்கான இயக்கியை(driver)  நிறுவிடவேண்டும் என்றும்தெரிந்துகொண்டு  அந்த இயக்கியுள்ள குறுவட்டை நன்பர் தேட ஆரம்பித்தார் கிடைக்கவில்லை சரி இந்த நிறுவனத்தின் இணைய பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்வோம் என்று அகல்கற்றை இணைய இணைப்பு இருக்கின்றதா என சரிபர்த்து இணைய இணைப்பை ஏற்படுத்த முனைந்தார் அந்தோ பரிதாபம் இணைய இணைப்பினை ஏற்படுத்தாமல் நன்பருடைய கணினியானது சன்டித்தனம் செய்தது என்னதான் காரணம் என நண்பர் சரிபார்த்தார் இணைய தொடர்பிற்கான அட்டையை (networking card)இயக்ககூடிய இயக்கி இல்லையென்று தெரியவந்தது .என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்து கையைபிசைந்து கொண்டிருந்தார் போனால் போகிறது என்று என்னுடைய லினக்ஸின் மான்ட்ரிவா2011 இயக்கமுறைமை   தளத்தினை ஃபையர் ஃபாக்ஸ் மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்தி ஒருசில நிமிடங்களில் நன்பருக்குத்தேவையான இயக்கி மென்பொருட்களை அவற்றுக்கான இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம்செய்து  ஒருகுறுவட்டில் நகல்செய்து கொடுத்தேன்

பின்னர் நான் என்னுடைய கணினியில் வெற்றிமீது வெற்றி வந்தால் என்னைச்சேரும் என்ற பழைய திரை இசைப்பாடல்களை இயக்கி கேட்டு கொண்டிருந்தேன் நண்பர் என்ன செய்கின்றார் என்று திரும்பிபார்த்தேன் அவரும் தன்னுடைய கணினியை அமைவு செய்வதில் மிக மும்முரமாக இருந்தார் என்னவென்று விசாரித்தேன் தற்போதுதான் தேவையான இயக்கிகளை நிறுவிடும்பணி நடைபெற்றுவருவதாகவும் முடிந்தவுடன் தன்னுடைய கணினி சரியாக இயங்கிவிடும் என்றும் கூறினார் அதன் பின்னர் இந்த குறுவட்டை பயன்படுத்தி பொருத்தமான இயக்கிகளை  நிறுவி இணையஇனைப்பை தன்னுடைய கணினியில் ஏற்படுத்திகொண்டார் மேலும் கணினியினுடைய திரையின் துல்லியத்தையும் சரிசெய்து அமைத்தகொண்டார்,

ஒருவழியாக இரண்டுபேருடைய கணினிகளிலும் இயக்கமுறைமைகளை நிறுவிடும் பணிமுடிவுக்குவந்து சோதனை இயக்கத்திற்கு தயாரானநிலையில் இருந்தது இந்த சோதனை ஓட்டத்தில் யாருடைய கணினி பிரச்சினைஏதுமின்றி சுமுகமாக இயங்குகின்றதோ அவர் மற்றவருக்கு மதியவிருந்து அளிப்பது என்ற ஒப்பந்தத்துடன் அடுத்த போட்டியை ஆரம்பித்தோம்

நான் என்னுடைய லினக்ஸ் தளத்தில் இருந்த open office.org இன் writerஐ பயன்படுத்தி உறவினருக்கு கடிதத்தை தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன் நண்பரும் என்னை போன்றே கடிதத்தை தட்டச்சு செய்யலாம் என்று MS Office இன் Wordஐதேடினார் கிடைக்கவில்லை விண்டோ தளத்தின்மீது இயங்குவதற்கென்று தனியாக  அலுவலக பயன்பாட்டை நிறுவவேண்டும் எனதெரியவந்ததையடுத்து அதற்கான குறுவட்டு எங்கே இருக்கின்றதுஎன தேடிப்பிடித்து கணினியின்அதற்கான வாயிலில் பொறுத்தி நிறுவுகைசெய்ய ஆரம்பித்தார் உடன் நிறுவுகை வழிகாட்டிஒன்றுதிரையில் தோன்றியது அதில் next ,next,என்றும் இறுதியாக finishஎன்ற பொத்தானையும் அழுத்தி நிறுவிகொண்டிருந்தார் ,பழைய திரைஇசைப்பாடல்களை கேட்டுக்கொண்டே நானும் என்னுடைய கடிதத்தை முடிக்கும் தறுவாயில்தான் நண்பர் தன்னுடைய  கடிதத்தை  தட்டச்சுசெய்ய  ஆரம்பித்தார்

பின்னர் உங்களைபோன்றும் நானும் திரை இசைப்பாடல்களை கேட்டிடபோகின்றேன் என தன்னுடைய கணினியில் இயக்கமுயன்றார் முடியவில்லைஇசைப்பாடல்களை இயக்குவதற்கான இயக்கியை அவர் தன்னுடைய  கணினியில் நிறுவுகை செய்யவில்லை என தெரியவந்தது உடன் அதற்குரிய இசைகளியக்குவதற்கான இயக்கியை இணையத்தில் தேடிப் பிடித்து பதிவிறக்கம் செய்து நிறுவி இசைப்பாடல்களை இயக்கினார்

அதன்பின்னர் நான் என்னுடைய கணினியில் encryption DVD play back என்பதை ஆதரிக்கின்ற Div X ஐ இணையத்தில் ஒருசிலநொடிகளில் பதிவிறக்கம்செய்து  இயக்கி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஸ்பீடு என்ற திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன் நன்பரும் மிகப்பெரிய மெகாபைட் அளவுள்ள இதற்கானமென்பொருளை அதற்கான இணையதளத்திலிருந்து நிறைய நேரம்செலவிட்டு  பதிவிறக்கம்செய்து ஒருவழியாக நிறுவி இந்த திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தார்

அதன்பிறகு நான் இணையத்தில் உலாவிடும்போது  பிடிஎஃப் கோப்பு மற்றும் உருவப்படம்ஆகியவற்றை  பதிவிறக்கம்செய்து Kpdf மூலம் திறந்து படித்தேன் நன்பர் அவ்வாறே பதிவிறக்கம்செய்து பிடிஎஃப் கோப்பினைதிறக்கஆரம்பித்தார் ஆனால் திறக்கமுடியவில்லை இவ்வாறான பிடிஎஃப் கோப்புகளை அடோப் அக்ரோபேட் ரீடர்மூலமாக மட்டுமே விண்டோவில் படித்தறியமுடியும் என அறிந்துகொண்டார் அவ்வாறே படங்களை பார்வையிட பொருத்தமான மென்பொருள் தம் கைவசம்இல்லை என்பதை அறிந்து மேலும் அரைமணி நேரம் செலவிட்டு தேவையான மென்பொருட்களை பதிவிறக்கம்செய்து நிறுவி இயக்கினார்

இவ்வாறாக நான் என்னுடைய கணினியில் லினக்ஸின் மாண்ட்ரிவா2011 என்ற இயக்கமுறைமையையும் அதனுடன் பயன்பாடுகள் இயக்கிகளையும் இயல்புநிலையில் சேர்ந்தார்போன்று அரைமணிநேரத்தில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் சுமுகமாக நிறுவி அழகாக இயக்கஆரம்பித்துவிட்டேன்,

ஆனால் நண்பரோ விண்டோ 7 மட்டுமல்லாது 100 MBமுதல் 1.5GB மற்றும் அதற்குமேலும் உள்ள இயக்கிகள் .வேர்டு போன்ற பயன்பாடுகள் .பிடிஎஃப்ரீடர் மற்றும் இமேஜ்ரீடர் போன்றவற்றை இரண்டுமணிநேரத்திற்கு மேல்செலவிட்டு பதிவிறக்கம்செய்து அவ்வப்போது ஏற்பட்ட தடங்களை சரிசெய்து போராடி ஒருவழியாக நிறுவினார்,

பொதுவாக விண்டோவில் அனைத்து பயன்பாடுகள்  கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் All Program என்பதன்கீழ் குப்பைபோன்று குவித்துவைத்துள்ளது

ஆனால் லினக்ஸில் அவ்வாறில்லாமல் ஒவ்வொரு பயன்பாடும் தனித்தனியாக  வகைப்படுத்தப்பட்டு மிக அழகாக தேடிப்பிடிப்பதற்கு எளிதாக  இருக்குமாறு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது தேவையானதை அதனதன் துனை பட்டியல்களுக்கு சென்று செயல்படுத்துமாறு பராமரிக்கப்பட்டுள்ளது லினக்ஸ் தளத்தில் அனைத்தும் எந்தவித தொந்தரவும் இல்லாமலும் வைரஸ்போன்ற தாக்குதலில்லாமல் மிக பாதுகாப்பாக இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது,

நண்பர் என்னுடைய கணினியில் நிறுவியுள்ள லினக்ஸின் மாண்ட்ரிவா2011 என்ற இயக்கமுறைமையின்மேல் இணையத்தில் உலாவிட Fire Fox பாடலை கேட்டுமகிழ்ந்திட Amark படங்களை பார்வையிட Gimp பிடிஎஃப்கோப்புகளை படித்திடKpdf அலுவலக பயன்பாட்டிற்காக Open Office.org ஆகியவை ஒவ்வொன்றும் இந்த இயக்கமுறைமையுடன் இயல்பு நிலையில் தனித்தனியாகவும் மிகசிறப்பாகவும் அமைக்கப் பட்டுள்ளதை அறிந்துகொண்டார் பயனாளருக்கு அதிக சிரமம் இல்லாமல் மிக எளிதாக இவற்றை இயக்கும் வண்ணம் இவை இருந்ததை கண்டு ஆஹா மிகநன்றாகவும் அழகாகவும் இவைஉள்ளனவே என வியந்தார்

மறுமொழிகள் (1) »

விண்டோலிருந்து லினக்ஸிற்கு ஏன்மாறவேண்டும்

இதற்கான காரணங்களை ஏராளமாக அடுக்கிகொண்டே போகலாம்,அவைகளுல் மிக அடிப்படையானதும்மிகமுக்கியத்துவம் வாய்ந்ததும் ஆன காரணம்

லினக்ஸ்தளமானது மிகப்பாதுகாப்பானது, விண்டோவைப்போன்று எப்போது எந்த வைரஸ் நம்முடைய கணிப்பொறியை தாக்கி வீணாக்கி நமக்கு பேரிழப்பினை ஏற்படுத்திவிடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை,இவ்வாறு வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக ஆண்டி வைரஸ் புரோகிராம் வாங்குவதற்கு அதிகம் தொகை செலவழிக்கவேண்டுமே என்றும்,அதன்பின்னர் இந்த ஆண்டிவைரஸை அவ்வப்போது செலவழித்து அப்டேட் செய்யவேண்டுமேஎன்றும் அவ்வப்போது வேறு மாற்று நடவடிக்கையாக கணிப்பொறியை ஃபார்மெட்செய்து மீன்டும் புரோகிராம்களை அதிகசெலவழித்து நிறுவவேண்டுமேஎன்றும் கவலைப்பட்டு உங்கள் உடலையும் மனத்தையும் பாதிப்புக்குள்ளாக்க வேண்டாம்,

லினக்ஸை ஒருமுறை கணிப்பொறியில் நிறுவிவிட்டால் அவ்வப்போது பராமரிப்பு செய்யவேண்டுமே என்ற கவலை ஒரு நிறுவனத்தின் ஐ ,ட்டி பிரிவு அலுவலர்களக்கு இல்லை,  மேலும் அவ்வப்போது ஏதேனும் பிரச்சினை வந்து அதனை நேரில் சென்று சரிசெய்து வந்தோம் என்று லினக்ஸ் நிறுவப்பட்ட டெஸ்க்டாப்பை பற்றி கவலைப்படவும்¢ தேவையில்லை,

இதனால் நீங்கள் லினக்ஸிற்கு மாறுமுன் பின்வரும் ஆலோசனைகளை சிறிது செவிமடுத்து கேட்கவும்

அரசுஅலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் 90 சதவீதம் ஒப்பன் சோர்ஸ் தளத்திற்கு மாறிவிட்டன,

1,விண்டோவை பயன்படுத்துபவர்கள் முதலில் விண்டோ பயன்பாட்டிலிருந்து  ஓப்பன் ஆபிஸ் ஆர்ஜ் க்கு மாறி உங்களை பழக்கப்படுத்தி தயார்படுத்தி கொள்ளுங்கள், இதன்மூலம் பின்னாட்களில் லினக்ஸ்தளத்தில் இயங்ககூடிய ஓப்பன் ஆபிஸ் ஆர்ஜை பயன்படுத்தும் போது தடுமாறவேண்டாம்,ஆனாலும் பெரும்பாலானவர்கள் தாங்கள் வழக்கமாக செய்யும் செயலிலிருந்து வேறுஒன்றிற்கு மாறுவதாயின் அதிகஅளவிற்கு தயக்கம் காட்டுவார்கள் இந்த தயக்கத்தை முதலில் அறவே விட்டொழிக்க மேலேகூறிய பயிற்சி பெருதவியாக இருக்கின்றது,

2, விண்டோ பயன்பாட்டில் உள்ள எக்செல்லில் மேக்ரோவும்,அவுட்லுக்கில் ஷார்ட்கட் போன்ற வசதி ஒப்பன் ஆபிஸில் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது,ஓப்பன் ஆபிஸ் ஆர்ஜிலும் எக்செல்லின் மேக்ரோபோன்ற  வசதியுள்ளது அதனால் கவலைப் படவேண்டாம்,

விண்டோ பயன்பாட்டில் உள்ள PDF ஃபைலாக உருமாற்றம் செய்து ஏற்றமதிசெய்யும் வசதி ஓப்பன் ஆபிஸ் ஆர்ஜிலும் ODF என்று உள்ளது,இது மைக்ரோஷாப்ட் நிறுவனத்தின் ஃபார்மெட்டையும் ஆதரிக்ககின்றது,மேலும் மேக்ரோமீடியாஃப்ளாஷ்ஷிற்கு பிரசன்ட்டடேஷனை ஏற்றுமதிசெய்யமுடியும்,இது மட்டுமல்லாது மொஸில்லா ஃபையர் ஃபாக்ஸ் மிகச்சிறந்த பிரவ்ஷராக நெட்டில் உலாவ பேருதவிசெய்கின்றது,இது மிக வேகமாக செயல்படக்கூடியதும் பாதுகாப்பானதுமாகும்,மேலும் தேவையெனில் பலவிரிவாக்கத் தன்மையை உயர்த்துகின்றது, மேலும் எம் எஸ் ஆபிஸின் லைசென்ஸ் புதுப்பிக்க அவ்வப்போது அதிக அளவு தொகை செலவிடவேண்டியுள்ளது,

புதிய கணிப்பொறி வாங்குபவராயிருந்தால் நேரடியாக லினக்ஸைநிறுவி இயக்குவதற்கான சரியான தருனம் இதுவேயாகும்

,ஒரேமாதிரியான செயலை செய்கின்ற pos , டேட்டா என்ட்ரி, கால்சென்டர்ஆகிய பணிகளில் குறைந்த வருமானமே கிடைக்கின்றது,இதில் பெரும்பகுதி எம்எஸ்ஆபிஸ் புதுப்பிக்கும் லைசென்ஸ் கட்டனத்திற்கே செலவழித்துவிட்டால் மிகுதி சொற்ப வருமானமே இருக்கும்,அதனால் இதுபோன்ற பணிசெய்பவர்கள் செலவேயில்லாத ஓப்பன் சோர்ஸ்ஆன லினக்ஸிற்கு மாறிவிடுவது போதுமான வருமானம் கிடைக்கும் செயலாகும்,இந்த லைசென்ஸ் புதுப்பிக்கும் செலவை லினக்ஸ்ஆனது மிச்சப்படுத்துகின்றது,

விண்டோ இயங்கும் கணிப்பொறியில் லினக்ஸையும் நிறுவி டியூயல் பூட்டிங்ஆக எளிதாக இயக்கலாம் கணிப்பொறி இயங்க ஆரம்பிக்கும்போதுஎந்த தளத்தில் இயங்கவேண்டும் என்ற வாய்ப்பை தெரிவு செய்யும்படிஅமைத்திட்டால் நாம்விரும்பிய os-ல் கணிப்பொறியை இயங்க செய்ய எளிதாகும்,கணிப்பொறியின் துனைச்சாதனங்களையும் இவ்வாறே லினக்ஸில் இயங்கும்படி மறுஅமைவு செய்யமுடியும்

புதியகணிப்பொறி ,அதன் துனைச்சாதனங்கள்,பயன்பாடுகள்ஆகியவற்றை வாங்கும்போது இவைகளை லினக்ஸிலும் இயங்குமாவென உறுதிசெய்துகொள்க, எதிர்காலத்தில் விண்டோபயன்பாடுகளினால் செலவுஅதிகமாகின்றதுஎன்றும்  செலவேயில்லாத லினக்ஸிற்கு மாறிவிடலாம் எனும்போது எளிதாகவும் பேருதவியாகவும் இருக்கும்,எம்எஸ்வின்டோவை பைரஸியாகவோ டிரையலாகவோ நிறுவிஇயக்க அனுமதித்த பின்னர் குறிப்பிட்ட கெடுநாள் முடிவடைந்தவுடன் ஆன்லைனில் அப்கிரேடுசெய்யும்படி கோரி நிற்கும் சரிதான் என்று நாமும் வழக்கமான அல்லது மேம்படுத்தும்செயலை செய்யும்போது நம்மிடம் உள்ள புரோகிராமானது ஜெனியுனாக பணம்கொடுத்து வாங்ககப்பட்டதாவென சரிபார்க்கின்றது இல்லையெனில் ஓஎஸ் இயங்க மறுத்து தடுத்தவிடுகின்றது நாமும் வேறுவழியின்றி பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதால் திருடனுக்குதேள்கொட்டியதைபோன்று பணத்தை கொடுத்து புதுப்பிக்கும் பணியை செய்துவிடுவாம்,மேலும் அவ்வப்போது மேம்படுத்தவும் செலவழித்துகொண்டே இருப்போம், இதுபோன்ற இக்கட்டான சூழலிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே மாற்றுவழி ஓப்பன் ஷோர்ஸ்ஆன லினக்ஸிற்கு மாறுவதேயாகும்

மறுமொழி அளிக்கவும் »

உபுண்டு 11.04

தற்போது உபுண்டு 11.04  என்ற புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. அதன்  முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

இதனுடைய ஒவ்வொரு பதிப்பிற்கும் பதிப்பு எண்ணுடன் ஒரு பெயரையும் கொடுப்பது வழக்கமாகும்அதனடிப்டையில்11.04 பதிப்பிற்கு natty Narwhal என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய பதிப்புகளெல்லாம் மடிக்கணிக்குத் தனியாகவும் மேசைக்கணினிக்குத் தனியாகவும் எனதனித்தனி பதிப்புகள் வெளியிடபட்டு வந்தன. ஆனால் தற்போதைய natty Narwhal பதிப்பு  இரண்டுவகை கணினியிலும் செயல்படுமாறு  வெளியிடபட்டுள்ளது. அதனால் இரண்டிற்குமென தனித்தனியே தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

  The launcher என்றவசதி  மேலே இடதுபுறமிருக்கும் இதனை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் நமக்குத்தேவையான புதிய பயன்பாடுகளை நிறுவிகொள்ளலாம் தேவையில்லாததை எளிதாக நீக்கம் செய்துகொள்ளலாம்

The dash என்றவசதி மேலேஇடதுபுறமூலையிலிருக்கும் உபுன்டுவின் குறும்படத்தை தெரிவுசெய்து  சொடுக்குவதன்மூலம் தேவையான பயன்பாடுகள் மின்னஞ்சல்கள் இசைகள் படங்கள் ஆகியவற்றிற்க  செல்வதற்கான குறுக்குவழி இதில்கிடைக்கின்ரது

பணியிடம் (Workspaces)உபுன்டு11.04 ஆனது பல்வேறு சாளரங்களையும் பயன்பாடுகளையும் கையாளத்தக்கவகையில் ஏராளமான இடவசதிகளையும் அவற்றிற்கிடையே மாறுவதற்கான  வசதியையும் வழங்குகின்றது

தற்போதையஎம்எஸ்இயக்கமுறைமைக்குள்  file:///download/ubuntu/windows-installer  (Wubi) என்பதன் உதவியுடன் நிறுவுகை செய்து இதனை இயங்குமாறு செய்யமுடியும் தேவையில்லையெனும்போது சாதாரன பயன்பாட்டை நீக்கம் செய்வதைபோன்று நீக்கம் செய்துகொள்ளலாம்

இதனுடைய இடைமுகம்முந்தைய பதிப்புகளில்  Gnome session என்பதன் மூலம் செயல்பட்டது. தற்போது unity desktop session என்பதன்மூலம் செயல்படுமாறு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தUnity ல் docletபோன்று ஐகான்களை பட்டியலிட வசதி இருக்கிறது. ஆனால் முன்பு போல panel வசதி இல்லை. எனவே ஒருசாளரத்திலிருந்து அடுத்த சாளரத்திற்கு தாவிச்செல்ல  முன்பு போல panelல் நாம் எதுவும் செய்ய முடியாது. திரையின் இடது பக்கம் doclet இருப்பதில் அந்தந்த ஐகானை தெரிவுசெய்ய வேண்டும் அல்லது ALT + TAB ஆகிய விசைகளைசேர்த்து அழுத்த வேண்டும்.

இந்த Unity-ல் பொதுவாக நாம் கணினித்திரையில் எதிர்பார்க்கும் start button இல்லை. அதற்குப்பதிலாக உபுண்டு ஐகானில் பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளது. அதில்  நமக்குத்தேவையான மென்பொருளைத்தேட வசதியும் பல மென்பொருட்களை வகைப்படுத்திபட்டியலும் உள்ளது. மேலும் இதில் நம்மால் நிறுவப்படாத மென்பொருட்களையும் பட்டியலிட்டு அதை நிறுவுவதற்கான வசதி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க செயலாகும்.

Logout, restart, system settings என்பன போன்ற வசதிகள் மேல் panel-ல் திரையின் வலது மூலையில் நாம் உள்நுழைவுசெய்யும் பயனர் பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. இதிலேயே நாம் இணையத்தில் அரட்டையில் இருந்தால் “Available, Away, Busy” போன்ற நிலைகள் சேர்க்கப்பட்டுள்ளது இந்த வசதி இணைய பயனாளிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

10
Unity-ஐப்போலவே Gnome3-யிலும் சில வசதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. gnome தேவையென்றால் நாம் தனியாக சேர்த்துக்கொள்ளலாம். இவை தொடுதிரை கணினிகளில் எளிதாக செயல்படத்தேவையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும்  சாளரத்தின் பட்டியல் பட்டையொன்றை(menubar) இப்போது ubuntu panel உடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஒருவேளை இந்த புதிய unity தேவையில்லை எனில் நீங்கள் உள்நுழையும் போது sessionஐ ubuntu classic என்பதைத் தெரிவு செய்தால் போதும்.

உபுண்டு ஒண்வசதி உபுண்டு 11.04ல் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபுண்டு பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கென ஒரு கணக்கை உபுண்டு Cloud கணினியில் உருவாக்கிக்கொள்ள இயலும். தற்சமயம் நாம் தெரிவுசெய்யும் கோப்புகளை அல்லது அடைவுகளை files or folder) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. மேலும் பல்வேறு புதிய  வசதிகளை இனி வருங்காலத்தில் உபுண்டு ஒண்ணில் இணைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Banshee என்பதே உபுண்டுவின் இயல்பான மீடியா பிளேயராக இருக்கின்றது.

11

இது sound மெனுவுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த மென்பொருளை கட்டுப்படுத்தல் எளிதாகவே இருக்கிறது. லிஸ்டன், ரிதம் போலவே பான்ஸீயும் பிரபலமான மென்பொருளாக இருந்தாலும் பான்ஸியில் வீடியோக்களையும் நாம் பயன்படுத்த முடிகிறது.

அலுவலகபயனபாட்டிற்காக லிபர்ஆஃபிஸ் என்பது ஒப்பன் ஆஃபிஸுக்கு மாற்றாக இந்த உபுன்டு11.04 பதிப்பு யக்கமுறைமையில் உள்ளது

12
இந்த  புதிய பதிப்பில் GIMP இல்லை. நாமாக நிறுவினால்தான் உண்டு. நாம் உபுண்டுவை பதிப்பு 10-ல் இருந்து 11-க்கு புதுப்பிக்கும் போதும் ஏற்கெனவே GIMP நிறுவி இருந்தால் அதை எடுத்துவிட்டுவிடுகிறது .

  ஏற்கனவே இருக்கும் உபுண்டுவை 11.04பதிப்பிற்கு எவ்வாறு புதுப்பிப்பது ?

உபுண்டுவில் ALT + F2 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. உடன் தோன்றிடும்  update-manager என்ற திரையில் -d எனஉள்ளீடு செய்து Enterவிசையை  அழுத்துக. பின்னர் வரும் சாளரத்திரையில் மேலே உபுண்டு புதிய பதிப்பு இருக்கிறது எனச்செய்தி காட்டும். அதில் upgrade என்பதை தெரிவுசெய்தால்  என்னென்ன நிறுவ வேண்டும் எவற்றை நீக்க வேண்டும் என்பது போன்று விபரங்களை பட்டியலிடும். அதைச்சரிபார்த்து நாம் உறுதிபடுத்தினால்போதும்  தானாகவே தேவையான மென்பொருட்களை தரவிறக்கி நிறுவிவிடும். உபுண்டு 11.04 natty Narwhal பற்றிய மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள http://www.ubuntu.com/ubuntu  என்ற வலைதளத்திற்கு செல்க

மறுமொழி அளிக்கவும் »

லினக்ஸ் மின்ட் 10 இயக்கமுறைமை

வீட்டு உபயோக கணினிக்கு விண்டோஸ் மேக் உபுன்டு அதற்கடுத்து நான்காவதாக 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட லினக்ஸ் மின்ட் 10  இயக்கமுறைமைகள் பயன்படுகின்றன

உபுன்டு லினக்ஸை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு லினக்ஸ் வெளியீடுகள் வெளிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் லினக்ஸ் மின்ட். ஆகும்.

படம்-01

உபுன்டுஇயக்கமுறைமையோ மேலும் மெருகேற்றி லினக்ஸ் மின்டாக வழங்குக்கின்றனர் இதனை பயன்படுத்துவது உபுன்டுவை பயன்படுத்துவது போன்றதுதான்.

படம்-02

லினக்ஸை முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு லினக்ஸை அறிமுகம் செய்வதற்கு, உபுன்டுவுக்கு பதிலா லினக்ஸ் மின்ட் இடக்கமுறைமையோ அறிமுகம் செய்வது நல்லது

உபுன்டு இயக்கமுறைமையை பயன்படுத்தும்போது, “குறிப்பிட்ட plug-in நிறுவப்பட்டால்தான்  இந்த பக்கத்தை முழுசா பார்க்க முடியும் என்று சில இணைய/வலைப்பக்கங்கள் அவ்வப்போது நம்மை வெறுப்பேத்தும். புதியவர்கள் உபுன்டுஇயக்கமுறைமையில் இதையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று தெரியாமல் தலைமுடியை பிய்த்துக்கொண்டு, உபுன்டுவை ஓசியிலே கொடுத்தால் கூட எனக்கு வேண்டாமென்று ஓட்டம் பிடிப்பார்கள்

படம்-03

ஆயினும் இவைகளை எப்படி சேர்ப்பது என்று தெரிந்தால்கூட அதற்கான படிமுறைகளனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொண்டு தேடி உபுன்டுவில் சேர்ப்பதற்கு சில பல மணி நேரம் ஆகும். அந்த அனுபவம் லினக்ஸ் மின்டில் மிகவும் குறைவு. ஏனென்றால் Firefox உலாவியில் நமக்கு தேவைப்படும் Realplayer, divx, quicktime, shockwave flash, என்பன போன்ற அனைத்து add-on-களையும் மின்ட் முதலிலேயே சேர்த்து கொடுத்துவிடுகிறது. அதனால் நமக்குநேரமும் மிச்சமாகின்றது வேறுதொல்லை யெதுவுமில்லை .

படம்-04

டிவிடி, எம்.பி3,போன்றவைகளை எந்தவொரு கணினியிலும் பயன்படுத்த வேண்டியிருந்தாலும்  எந்த இயங்குதளமாக இருந்தாலும் பல்லூடக codec ஆதரவு தேவையாகும் ஒருசில சட்டசிக்கல்களால் உபுன்டுஇயக்கமுறைமையில்  அவற்றை சேர்த்து தருவதில்லை. ஆனால் அதை எல்லாம் சேர்த்து லினக்ஸ் மின்ட் தருகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் இந்த லினக்ஸ் மின்ட் பயன்படுத்துவது சட்ட விரோதமாகும்.
எதைப்போட்டாலும் இயங்கும் எனும் டிவிடி ப்ளேயரின் விளம்பரத்தை தொலைகாட்சியில் அவ்வப்போது பார்த்திருப்போம். அதே அடிப்படையில் இந்த லினக்ஸ் மின்டும் செயல்படுகின்றது இது ஒருநம்பத்தகுந்த பாதுகாப்பான இயங்குதளமாகும் இதன் சிறப்பு தன்மை பின்வருமாறு

படம்-05

புதியதாக நிறுவபட்ட பயன்பாடுகளை இதனுடைய பட்டியலின் திரையில்மேம்படுத்தி தேடிகண்டுபிடிப்பதற்கு சுலபமாக்கும் வகையில் காண்பிக்கின்றது

படம்-06

. சாப்ட்வேர் மேனேஜருக்குள் செல்லாமலேயே என்னென்ன பயன்பாடுகள் இந்த இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றன என்ற தயார்நிலை பட்டியல் இதில் உள்ளது

படம்-07

இந்த பட்டியலில் பயன்பாட்டு மென்பொருள் மட்டுமின்றி இது ஒரு வழக்கமான தேடுபொறி போன்றே நாம் விரும்பும் Wikipedia article ,dictionary , tutorials, software, hardware devices ( online Linux Mint hardware database), ideas என்பன போன்ற எதுவாக இருந்தாலும் தேடிபிடிக்க உதவுகின்றது

படம்-08

ஏதேனும் கோப்பு களை தேடுவதற்கான GTK bookmarks என்றவசதி இதில் உள்ளது மேலும் இந்த திரைதோற்றத்தினை நாம்விரும்பியவாறு மாற்றியமைத்திடும் வசதி இது கொண்டுள்ளது

படம்-09

 

எது எப்படியோ, லினக்ஸ் விரும்பும் புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் ஒரு வரப்பிரசாதம்ஆகும்.

ஆனால் உபுன்டு சிடி நம்முடைய வீடுதேடி வருவது போன்று இந்த லினக்ஸ் மின்ட் வராது.இதனை இதற்கான வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.