இந்த நவீனயுகத்தில் கணினியும் அதன் துனைப்பொருட்களும் நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து பல வகைகளில் பயன்படுகின்றன.ஆனாலும் பெரும்பாலானவர்கள் இவைகளை முழுவதுமாக பயன்படுத்திகொள்வதில்லை.அல்லது அவ்வாறெல்லாம் பயன் இருக்கின்றதாவென அறிந்து கொல்ளாமலும், தெரிந்துகொள்ளாமலும் இருக்கின்றனர். தெரிந்துகொண்டிருந்தாலும் அவற்றுள் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் அரைகுறையாகவே பயன்படுத்துகின்றனர்.ஏனெனில் அவைகள் வழக்கொழிந்து போய்விட்டன.மேலும் நம்மில் பெரும்பாலானவர்கள் கணினியினுடைய உபகரணங்களின் பயன்பாடுகளைபற்றி தெரிந்து கொள்ளாமலேயே அவைகளை வீணாக்கி வருகின்றோம்.அவ்வாறு நம்மால் பயன்படுத்தாமல் விடுபட்டசாதனங்களில் ஒருசிலவற்றை மட்டும் எவ்வாறு பயன்படுத்திகொள்ளமுடியும் என இப்போது காண்போம்.
1.நுண்பேசி குழிவு(Microphone socket):தற்போது விற்பனையாகும் ஒவ்வொரு கணினியும் இந்த நுண்பேசிகுழிவுடன்தான் சந்தைக்கு வருகின்றன.ஆயினும் இதனை நம்மில் ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம்.இது நம்முடைய பேச்சொலியை கணினி புரிந்துகொள்வதற்காகவும் செய்தி பரிமாற்றத்திற்காகவும் பயன்படுகின்றது. இதனை செயல்படுத்திட Dragon naturally Speakers8.0என்ற மென்பொருள் பயன்படுகின்றது இது நம்முடைய பேச்சொலியை கணினிபுரிந்து கொள்வதற்கேற்றவாறு உருமாற்றம் செய்கின்றது. ஏதேனுமொரு கணினியில் அகல்கற்றை(Broad band)இணையதொடர்பு ஏற்படுத்த பட்டிருக்கும்போது இதன்வழியாக தொலைபேசிபோன்றும் ஒலிஒளிப்பட விவாதங்களிலும்(Video conference)மிகத்துல்லியமாக மனிதர்களின் பேச்சொலியை புரிந்துகொள்ள இது பயன்படுகின்றது.நம்முடைய கணினியில் இதில் ஒரு நுன்பேசியை இணைத்து இதன்மூலம் இணைய தொலைபேசி ஒலிஒளிப்பட விவாதங்களில் ஆச்சரியபடும் வகையில் மிகச்சிறப்பாக நம்மால் பயன்படுத்தி கொள்ளமுடியும்
2. தொலைக்காட்சி குழிவு(TV Socket)நம்மில் பெரும்பாலானவர்கள் கணினியை பயன்படுத்தும்போது அதனுடன் இணைந்து வரும் கணினித்திரையை(Monitor)மட்டுமே பயன்படுத்து கின்றோம் மினுமினுக்கும் தொலைக்காட்சி பெட்டியின் திரையை கணினித்திரையாக பயன்படுத்துவதில்லை ஏனெனில் மிச்சரியான அளவில் துல்லியமாக எழுத்துகளை படங்களை இந்த தொலைக்காட்சி பெட்டியின் திரையில் காண்பிக்காது என்றே எண்ணி விடுகின்றோம் பொதுவாக நம்முடைய கணினியின் தாய்ப் பலகையில் (MotherBoard)பொருத்தபட்டுள்ள வரைகலை அட்டையானது (GraphicsCard)தொலைக் காட்சி பெட்டியின்திரையையும் ஆதரிக்குமாறு செய்யபட்டுள்ளது என்ற செய்தி நம்மில் பலருக்கு தெரியாததாகும்.தற்போது வெளியாகும் அனைத்து தொலைக்காட்சி பெட்டியின் திரைத் துல்லியம் 800X600என்ற அளவில் காட்சி தெரியுமாறு சந்தையில் கிடைக்கின்றன
பொதுவாக கணினிகள் 1.Composite 2. S-Videoஆகிய இரண்டு வகையான துளையுடன் வெளியிடபடுகின்றன நம்முடைய தொலைக்காட்சி பெட்டியில் FourPinSஎன இருந்தால் கணினியின் S-Videoதுளையுடன் இணைப்பை கொடுக்கவும் வட்டமாக மஞ்சள் நிறத்தில் (roundyellowsocket)தொலைக்காட்சி பெட்டியில் துளையிருந்தால் கணினியில் Compositeவகைதுளையில் மஞ்சள் துளை படத்திற்கும் சிவப்பு அல்லது வெள்ளைதுளை ஒலிக்கும் ஆக இணைப்பு கொடுக்கவும்
பின்னர் கணினித்திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் குறுக்குவழி பட்டியில் பண்பியல்பு என்ற கட்டளைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் பண்பியல்பு என்ற உரையாடல் பெட்டியில் settingஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக பிறகு விரியும் திரையில் கட்டுப்பாட்டு பலகை பண்பியல்பை(displaypropertiescontrolpanel)திறந்து கொண்டு அதில் திரையின் துல்லியத்தை தேவையானவாறு screen resolution 800 by 600 pixels மாற்றியமைத்து கொள்க
3.கைகளில் எடுத்து செல்லும் நினைவகத்தை பயன்படுத்துதல்(Using as aPortable Memory)நம்முடைய கணினியுடன் எண்ணுரு படமாக்கி (DigitalCamera)மாற்று இசைவட்டு (Mp3Player)ஆகிய சாதனங்கள் இணைத்து படங்கள் இசை ஆகியவற்றின் கோப்பினை தெரிவுசெய்து பிடித்து இழுத்து வந்து விடும் (Drag and drop) வழிமுறைகளில் நகலெடுத்து கொள்வோம் அவ்வாறே மற்ற கோப்புகளையும் இந்த சாதணங்களில் தேவையானபோது மட்டும் நகலெடுத்து தற்காலிக பிற்காப்பு நினைவகமாக(Back up memory)பயன்படுத்தி கொள்ளலாம்
4. கணினியின் அச்சுபொறியில் கைகளால் தாட்களை உள்ளீடு செய்தல்(Manual paper feeding)தற்போது வெளியிடபடும் கணினியின் அச்சுபொறிகள் தானாகவே தாட்களை உட்செலுத்தும் தட்டுடன் மட்டுமல்லாது நாம் கைகளால் அத்தாட்களை ஒவ்வொன்றாக உட்செலுத்து வதற்கேதுவான செருகுவாயுடன் சந்தையில் கிடைக்கின்றன அவைகளின் மூலம் பொதுவாக கடிதங்களை அனுப்ப பயன்படும் கடித உறைகள் (Envelope)பரிசு பொருட்கள் வழங்குவதற்கான சிறியமுவரியிடபட்ட தாட்கள்(Gift slip or Address slip)நிறுவனபடத்துடன் கூடிய கடித தாட்கள் (Letterheads)ஆகியவற்றில் அச்சிடுவதற்கு ஏதுவாக இந்த செருகுவாய் அமைக்கபட்டுள்ளன A4அளவு வெள்ளைத்தாட்களை முக்கியதட்டில் வைத்து அச்சிடுவதைவிட அவசிய தேவைக்குமட்டும் இந்தமாற்று வழிமுறைகளை பயன்படுத்தி அச்சிட பயன்படுத்தி கொள்க
5.வருடியை படன்படுத்தி நம்முடைய ஆவணங்களை சேமித்துகொள்ளலாம்(use scanner for saving record)பொதுவாக அனைத்து அலுவலகங்களிலும் கோப்புகளில் கட்டுகட்டாக தாட்களை வைத்து வகைவகையான கோப்புகளை ஆவணகாப்பக அறைகளில் (Record Storage Room) பாதுகாத்து வைத்திருப்போம் ஏதாவது முக்கிய விவரங்கள் தேவையெனில் உடன் இந்த ஆவண காப்பகங்களில் புகுந்து இந்த கோப்புகளை தேடும்போது அதன்மீது படிந்துள்ள தூசுகள் நம்மை பதம் பார்த்துவிடுகின்றன அதுமட்டுமல்லாது நமக்கு இதன்மூலம் ஒவ்வாமை நோய் வருவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன மேலும் இவ்வாறு ஆவணகாப்ப கங்கள் சேமித்து வைத்துள்ள கோப்புகளை நாளடைவில் செல்லரித்து போய்விட வாய்ப்பும் உண்டு இதனை தவிர்ப்பதற்கு கணினியின் துனைச்சாதனமான வருடியை பயன்படுத்த உதவும் Optical Character Recognition(OCR)என்ற மென்பொருளின்மூலம் முக்கிய ஆவணங்களை வருடச்செய்து கணினி கோப்பாக உருமாற்றம் செய்து சின்னஞ்சிறு குறுவட்டுகளில் (C.D)அக்கோப்புகளை பதிவுசேய்து சேமித்து பாதுகாத்திடலாம் ஏதேனும் விவரம் தேவையெனில் விரல் சொடுக்கில் உடனடியாக வெளியீட்டு சாதனங்களின்மூலம் இதிலிருந்து பெற்றுகொள்ளமுடியும்
6.சுட்டியின் செயலை விசைப்பலகையின் மூலம் செயல்படுத்திகொள்க அனைத்து விசைப்பலகைகளும் 100 க்குமேற்பட்ட விசைகளுடனே சந்தையில் கிடைக்கின்றன நம்மில் பெரும்பாலானவர்கள் அவைகளில் ஒருசில விசைகளை மட்டுமே அதிக அளவிற்கு பயன்படுத்திடுவோம் மற்றவைகளை பெரும்பாலும் பயன்படுத்தாமலேயே விட்டுவிடுகின்றோம் இவைகளில் கூடுதலான விசைகள் புதிய பயன்பாட்டின் உருவங்கள் (Icons)ஒட்டபட்டவைகளாக உள்ளன எடுத்துகாட்டாக விண்டோ விசை மின்னஞ்சல் (Email)விசை வலையோடி (Web browser)விசை ஆகியவைகளை நேரடியாக அந்த விசைகளை அழுத்தியவுடன் குறிப்பிட்ட பயன்பாடு செயல்படுமாறு அமைக்கபட்டுள்ளன விசைபலகைகளுடன் இந்த விசைகளை இயக்குவதற்கான மென்பொருட்களும் ஏராளமான அளவில் கிடைக்கின்றன இம்மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து இவ்விசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்யுமாறு இணைத்துகொள்க இதன்பின்னர் சுட்டியில்லாமலேயே இந்த விசைகளை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட செயல்களை செயல்படுத்தமுடியும்
7 .மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்ற பயன்பாட்டினை நாட்குறிப்பானாக பயன்படுத்தி கொள்ளலாம்(use MicrosoftOutlook as a diary)நம்முடைய அன்றாட பணிகளின் நிகழ்ச்சி நிரல்களை தொகுத்திடும் நாட்குறிப்பு போன்று மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் நம்மில் பெருமாபாலனவர்கள் இந்த பயனdபாட்டினை மின்னஞ்சலை கையாளுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம் நாம் அன்றாட கவணிக்க வேண்டிய பணிகளை சிறுநாட்குறிப்பு தாளிலோ அல்லது செல்லிடத்து பேசியிலோ குறித்து வைத்துகொண்டு அவ்வப்போது இதனை பார்த்து செயல்படுவோம் பொதுவாக இவைகள் தொலைந்து போகவோ அழிந்து போகவோ அதிக வாய்ப்புள்ளன அந்நிலையில் அடுத்து எந்த செயலை செய்யவேண்டும் என்று தெரியாமல் தடுமாறும் அல்லது திண்டாடும் நிலை ஏற்படும் இவ்வாறான சமயத்தில் நம்முடைய கணினியில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்ற பயன்பாடு உதவிக்கு தயாராக இருக்க நாம் ஏன் கவலைபடவேண்டும் படம்-2 இல் உள்ளவாறு இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி நம்முடைய அன்றாட நிகழ்ச்சி நிரல்களை தொகுத்து வைத்துகொண்டால் அந்தந்தநேரத்தில் நம்முடைய கணினியானது வெளியீட்டு சாதனங்களின் மூலம் நமக்கு அறிவிப்பினை நம்முடைய கவணத்திற்கு கொண்டுவந்துகொணடேயிருக்கும் அதுமட்டுமல்லாது நம்முடைய நண்பர்களின் தொலைபேசிஎண்கள் அலைபேசிஎண்கள் முகவரிகள் ஆகியவற்றை கூட சாதராண நாட்டகுறிப்பு தாள் போன்று இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்























