நகைச்சுவை படக்கதை
படத்துடன் கூடிய நகைச்சுவை (comics ) புத்தகங்கள் அனைத்தும் அச்சிட்டவுடன் மிக விறுவிறுப்பாகவும் அதிகமாகவும் விற்பனை ஆக கூடியவை ஆகும். இவ்வகையான இணைய பக்கங்கள் (web comics ) கூட அனைவரும் மிக விருப்பமாக பார்க்க கூடியவை ஆகும்.
இந்த Web comics முதன் முதலில் 1985ஆம் வருடம் இலக்க (Digital ) முறையில் வெளியிடப்பட்டு இன்று அசைவூட்டம் (animation) த்துடன்கூடிய படக்கதையாக King Blastit ALL (www.comicmation.com) என்பன போன்ற இணைய தளங்களாக வளர்ந்துள்ளது. புதியவர்களுக்கும் இவ்வாறான படக்கதைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டிட www.damonk.com என்பன போன்ற இணைய தளங்கள் உள்ளன.
toon disney போன்ற தொலைகாட்சிகளில் அசைவூட்டு நகைச்சுவை படக்கதைகள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவையாகவும் இருக்கின்றன
இந்த வகை நேரடியான web comicsகளை உங்கள் கணினியில் (DSP) இறக்குமதி செய்து கையில் எடுத்த செல்லக்கூடிய வகையில் இசை, உருவப்படம், விளையாட்டு போன்றவைகளாக உருமாற்றம் செய்து இவைகளை பயன்படுத்தலாம்.
இதனை இறக்குமதி செய்து உங்கள் கணினி நிறுவுவதற்காக
1)HTTrack www.httrack.com
2)Fast stone உருவக்காட்சி www.faststone.com
3)PSP sync பயன்பாடு ,IPSP www.ipsp.kaisakura.com அல்லது PSPwave www.nullriver.com/pspwave ஆகிய மூன்று மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. முதலிரண்டும் இலவசமாக இறக்குமதி செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மூன்றாவது பணம் கொடுத்து வாங்க வேண்டும் ஆயினும் இது இல்லாமலேயே கூட சமாளிக்க முடியும்.
HTTrack என்பது offline ல் உலாவுவதற்கு பயன்படும் கருவியாகும். இதனுடைய இணையதளத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் நகலெடுத்து நம்முடைய இயக்ககத்தில் offline காட்சியாக காண பயன்படுத்தி கொள்ளலாம். இது இணைய பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக உலாவி மூலம் தேடிப்பிடித்து கண்ணாடி போன்று பிரதிபலிக்க செய்கிறது.
மேலும் இது இப்போது பார்த்து கொண்டிருக்கும் பக்கத்துடன் ஏற்கனவே பார்த்த பக்கங்களையும் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்கிறது. இதன் மூலம் MP3, Zip போன்ற கோப்புகளையும் நகலெடுக்க முடியும்.
இரண்டாவதாக உள்ள மென்பொருள் விண்டோ அடிப்படையில் உருவத்தை ACD see போன்று காட்சியளிக்கிறது. உருவம் மற்றும் JPEG வடிவமைப்பையும் மாறுதல் செய்யவும் பயன்படுகிறது.
மூன்றாவதாக உள்ள மென்பொருள் DVD,RSPMP4 வடிவமைப்பாக encode செய்ய பயன்படுகிறது.
பெரும்பாலான நேரடி நகைச்சுவையுடன் படக்கதைகள் உருவங்களின் அடிப்படையான கோப்புகளாகும். முதலில் இவைகளை மொத்தமாக சம்பந்தப்பட்ட இணைய தளத்திலிருந்து நகலெடுத்து பின்னர் JPEG வடிவமைப்பாக மாறுதல் செய்ய வேண்டும். அதன் பிறகு இவைகள் இறக்குமதி செய்ய வேண்டும்.
HTTrackஇடைமுகம் : இதனை இயக்கும்போது இரண்டு பலகங்கள் உள்ளன. இடப்பக்கம் நம்முடைய கணனியின் இயக்ககம் ஆகும். வலப்பக்கம் தேவையான இணையபக்கத்திலிருந்து நகலெடுக்க பயன்படும் வித்தகராகும் (wizard). இதில் உள்ள Next என்ற பொத்தானை சொடுக்குக
படம் – 1
பின்னர் தோன்றும் பெட்டியில் உங்கள் செயல்திட்டத்திற்கு Skpsp என்றவாறு பெயரிடுக. செயல்திட்டத்தின் வகையாக Psp comics என உள்ளீடு செய்க. இதனை நம்முடைய கணினியின் base petty என்ற இயக்ககத்தில் HTTrack நகலெடுக்கும் உருவப்படங்களாக சேமித்திடுக. பின்னர் Next என்ற பொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் பெட்டியில் உள்ள Action என்பதில் Download web site(s) என்றும் நாம் நகலெடுக்கும் இணைய தளத்தின் URL முகவரியையும் உள்ளீடு செய்து Next என்ற பொத்தானை சொடுக்குக.
இந்த பொருள் முழுவதும் தேடி உலாவியபிறகு தோன்றும் பெட்டியில் Set option என்பதை சொடுக்குக. பின்னர் தோன்றும் பெட்டியில் Scan rules என்ற பட்டி அட்டவணையை தெரிவு செய்க. உடன் தோன்றும் திரையில் gif, bmp, jpg போன்ற கோப்புகளை scan செய்வதற்கான தேர்வு செய் பெட்டியை தெரிவு (tick) செய்க.
பின்னர் தோன்றும் பெட்டியில் உள்ள பட்டி அட்டவணையில் limits என்பதை தெரிவு செய்க உடன் தோன்றும் திரையில் maximum mirroring depth என்பதில் 20 என்றும் maximum external depth என்பதற்கு 3 என்றும் max transfer rate என்பதற்கு 25000 என்றும் max connection/server என்பதற்கு 10 என்றும் உள்ளீடு செய்க. அதன்பிறகு பட்டி அட்டவணையில் link என்பதை தெரிவு செய்க. Get non-Html files related to a link என்ற இரண்டாவது வாய்ப்பை இணைய பக்கத்தில் இருக்கும் அனைத்து உருவங்களையும் நகலெடுக்கும் செயலை உறுதி செய்வதற்காக தெரிவு செய்க.
பின்னர் build என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Html in web/html, image/others in web/images என்றவாறு local structure தட்டச்சு செய்து அமைத்திடுங்கள். உடன் இந்த பகுதியில் அனைத்து உருவப்படங்களும் சேகரித்து வைக்கப்படும்.
அதன் பின்னர் experts only என்ற பொத்தானை சொடுக்குக. தெரியும் திரையில் primary scan rule என்பதில் store all files என்றும் travel mode என்பதில் can both go up & down என்றும் global travel mode என்பதில் stay in the same address என்றும் உள்ளீடு செய்க.
பின்னர் தோன்றும் திரையில் donot connect to providers என்பதை தெரிவு செய்க. இதனால் இந்த HTTrack இயங்க ஆரம்பிக்கும்பின்னர் Finish பொத்தானை சொடுக்குக. உடன் HTTrack மென்பொருளை இணைய தளத்தில் உருவங்களை நகலெடுக்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு URL இணைப்பை மீண்டும் வழங்காது ஆனால் இதிலிருந்து artifact இறக்குமதி செய்கிறது. நமக்கு உருவப்படங்கள் மட்டுமே தேவையென்பதால் அவைகளை மட்டும் தெரிவு செய்து பெரிய கோப்புகளில் உள்ள தேவையற்றவைகளை தவிர்த்துவிடுங்கள். இவைகளையும் சேர்த்து இறக்குமதி செய்யும்போது அதிக நேரத்தை எடுத்து கொள்கிறது. மேலும் இறக்குதி வேகத்தையும் குறைக்கிறது.
அதன் பின்னர் இறக்குமதியான அனைத்து உருவப்படங்களையும் ஒரே கோப்பகத்தில் (Folders ) சேகரித்து கொள்க.
PSP ஆனது jpeg வடிவமைப்பை மட்டுமே ஏற்று கொள்கிறது. ஆனால் நாம் இறக்குமதி செய்த உருவப்படங்கள் gif, png, bmp போன்ற வடிவமைப்பில் இருக்கின்றன. இவைகளை Jpeg யாக உருமாறற்ம் செய்ய fast stone image viewer (Fiv) என்ற இரண்டாவது மென்பொருள் பயன்படுகிறது.
நாம் இறக்குமதி செய்த அனைத்து உருவப்படங்களையும் தெரிவு செய்து F3 விசையை தட்டுக. உடன் Batch image convert/renew wizard தோன்றும். இதில்output format என்பதற்கு Jpeg images (*.jpg)என்பதை தெரிவு செய்க. அடுத்து தோன்றும் திரையில் Use advanced options என்பதை தெரிவு செய்க. பின்னர் advanced option என்பதை சொடுக்குக. பின்னர் resize பொத்தானை சொடுக்குக. Percentage என்பதில் 50% என தெரிவு செய்க.
படம் – 2
பின்னர் start பொத்தானை சொடுக்குக. உடன் கணிப்பொறியின் திரைக்கு ஏற்றவாறு உருவப்படத்தை jpeg கோப்பாக உருமாற்றம் செய்து முடிவாக உருவங்கள் PSP இறக்குமதி செய்ய தயாராக இருக்கின்றன.
IPSP அல்லது PSP wave போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி இவ்வாறு இறக்குமதி செய்த கோப்புகளை sync செய்ய வேண்டும். இந்த வகையான மென்பொருள் இல்லாதிருந்தாலும் கவலையில்லை. /psp/photos/web comics/ என்றவாறு மடிப்பகத்தை உருவாக்கி அதில் இந்த உருவப்படங்களை நகலெடுத்து இந்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்து கொள்க. இறுதியாக இந்த கோப்பினை திறந்து பாருங்கள் web comics உருவப்படங்கள் மிக அழகாக திரையில் காட்சியளிக்கும்.