நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் பயன்படுத்துதல்
ஏதேனுமொரு சமயத்தில் டேலி ஈஆர்ப்பி 9 ஐ பயன்படுத்திடும் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் வெகுதூரத்தில் உள்ள வெளியூருக்கு சென்றுள்ளார் ஆயினும் நேற்று தம்முடைய நிறுனத்தில் உற்பத்தி,விற்பனை ,கொள்முதல், செலவுகள், கடன்வசூல் என்பன போன்ற நிகழ்வுகளில் என்னென்ன நடந்தது என்று அறிந்து கொள்ளவும் அந்நிகழ்வுகளுக்கு ஏற்பவு அவர் இல்லாதபோதும் அவர் நேரில் வந்து உத்திரவு இடுவதாற்காக காத்திருக்காமல் நிறுவனத்தின் இயக்கம் தொய்வில்லாமல் நடைபெறுதற்கு ஏதுவாக இன்று தம்முடைய நிறுவனத்தில் என்னென்ன செய்யவேண்டும் என கட்டளை இடவும் விரும்புகின்றார்
இந்நிலையில் டேலி ஈஆர்ப்பி 9-இல் டேலி.நெட் என்ற வசதியின்மூலம் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் தாம் இருக்கும் இடத்திலிருந்த படியே முந்தைய நிகழ்வுகளை அறிந்து அதற்கேற்ப இன்று என்னென்ன செய்யவேண்டும் என்ற கட்டளையிட்டு நிறுவனத்தின் இயக்கம் சரியாக செயல்படுமாறு வழிநடத்திட முடியும்
மிகமுக்கியமாக தொலைபேசிமூலமாகவோ செல்லிடத்து பேசிமூலாகவோ அவசர பணிகளை கட்டளையிட்டு செயல்படுத்துவதற்கு பதிலாக இந்த டேலி.நெட்டில் பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை உள்ளீடுசெய்து தம்முடைய நிறுவனத்தின் கொள்முதல் உத்திரவு இடுதல் விற்பனை உத்திரவு இடுதல் போன்ற பணிகளை நாமே நேரடியாக செயல்படுத்திடமுடியும்
அதுமட்டுமல்லாது நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் தம்முடைய நிறுவனக்குழுவிலுள்ள எந்தவொரு உறுப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகளையும் இந்த டேலி.நெட்டின் உதவியால் கன்காணிக்கமுடியும்.
தனிநபர் பயன்படுத்துதல்
தனிநபர்ஒருவர் வீட்டிலிருந்த படியே அலுவலகபணிகளையும் அலுவலகத்தில் இருந்தபடியே தம்முடைய சொந்த கணக்குகளையும் இந்த டேலி.நெட்டின் உதவியால் கன்காணிக்கமுடியும்.
நிறுவனபணியாளர்கள் பயன்படுத்துதல்
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவருக்கும் மடிக்கணினியும் இணையத்தில் உலாவருவதற்கான டேட்டாகார்டும் அளித்திருந்தால் டேலி.நெட்டின் உதவியால் . அவர்கள் இதற்கென தனியாக அனுமதிஏதும் பெறாமலேயே தத்தமது பணிகளை இந்த டேலி.நெட்டின் உதவியால் சிரமமின்றி ஆற்றமுடியும்.
குறுஞ்செய்தி (SMS) வசதி
எங்காவது நிறுவனத்தின் தலைவர் இன்பச்சுற்றுலா செல்லும்போது அவர் இருக்கும் இடத்திலிருந்தே இந்த டேலிஈஆர்ப்பி9-இன் வாயிலாக குறுஞ்செய்தி (SMS)யை பெற்று அதன்மூலம் தம்முடைய நிறுவனத்தின் முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும்
நிறுவனத்தின் விற்பனைபிரதிநிதிகள் பயன்படுத்துதல்
ஒரு நிறுவனத்தின் விற்பனைபிரதிநிதிகள் பல்வேறு இடங்களுக்கும் சென்று விற்பனைக்கான உத்திரவை பெறுகின்றனர் அவ்வாறு பெறுகின்ற விற்பனை உத்திரவை அவரவர் இடத்திலிருந்தபடியே இந்த டேலி.நெட்டின் மூலம் விற்பனை உத்திரவை பதிவுசெய்து கொள்ளமுடியும் ஆனால் அவ்வாறு பதிவுசெய்வதற்கு அங்கிருக்கும் கணினிகளில் டேலி மென்பொருள் நிறுவப்படவில்லையென்றாலும் இவ்விற்பனை பிரதிநிதி ஒவ்வொருவருக்கும் சிலநூறுரூபாய்செலவில் யூஎஸ்பி சாதனத்தையும் அதில் டேலியின் கல்விபதிப்பையும் பதிவு செய்து வாடிக்கை யாளருக்கான விற்பனை உத்திரவு தற்போதைய நிலை ஆகிய விவரங்களை எந்தவொரு கணினியிலிருந்தும் பதிவுசெய்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும்முடியும்
மேலும் வாடிக்கையாளர் வசிக்குமிடத்திற்கு சென்று கடனை வசூலிக்கும்போது அங்கிருந்தபடியே அவருடைய தன்கணக்கு பேரேட்டை இந்த டேலி. நெட்டின் உதவியால் அச்சிட்டு வழங்கமுடியும்.
பட்டயகணக்கர்கள் பயன்படுத்துதல்
நிறுவனங்களை நடத்திடும் அனைவரும் பட்டயகணக்கராக இருக்கமுடியாது ஆயினும் வருமான வரிசெலுத்துதல் அதற்கான படிவங்களை பூர்த்திசெய்து காலத்தே சமர்ப்பித்தல் போன்ற பணிகளை செய்திடவேண்டும் இல்லையெனில் தண்டத்தீர்வை செலுத்துவதுடன் குற்றவியல் வழக்குகளை சந்திக்கவேண்டியிருக்கும்
அவ்வாறான நிலையில் பட்டயகணக்கர்கள் அவ்வப்போது நம்முடைய நிறுவனத்திற்கு வந்து நம்முடைய கணக்குகளைஆய்வுசெய்து தகுந்த செயல்களை செயற்படுத்திடவேண்டும்
சிறுநிறுவனமாக இருந்தால் பட்டயகணக்கர் நம்முடைய அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவதற்கான போதிய இடவசதி இல்லாமல் அவதிபட வேண்டியிருக்கும் இதனை தவிர்த்து பட்டய தணிக்கையாளர் அந்நிறுவனத்திற்கு நேரில் செல்லாமல் தான் இருந்திடத்தில் இருந்தபடியே ஒரு நிறுவனத்தின் கணக்குகளை இந்த டேலி.நெட் உதவியுடன் ஆய்வுசெய்து வருமான வரிசெலுத்துவதற்கு ஏற்பாடுசெய்தல் அதற்கான படிவங்களை பூர்த்திசெய்து காலத்தே சமர்ப்பித்தல் போன்ற பணிகளை செய்திடமுடியும்
கூட்டாண்மை நிறுவனத்தின் அதன்கூட்டாளிகள் பயன்படுத்துதல்
கூட்டாண்மை நிறுவனத்தில் ஒருசில கூட்டாளிகள் தேவையான முதலீட்டைமட்டும் செலுத்திவிட்டு அந்நிறுவனத்தின் அன்றாட நிருவாகத்தில் தலையிடமாட்டார்கள் ஆானால் தாம் இட்டமுதலீடு பத்திரமாக இருக்கின்றதா அதற்கான வருமானம் சரியாக கிடைத்திடுமா என தாம் இருந்தஇடத்திலிருந்தபடியே அறிந்துகொள்ள இந்த டேலிஈஆர்ப்பி9 உதவுகின்றது.
டேலிநிறுவனத்தின் சேவையாளர் பிரிவினை பயன்படுத்திகொள்ளுதல்
இந்த டேலிஈஆர்ப்பி9 ஐ பயன்படுத்துபவர்களுக்கு இதனை பயன்படுத்தி கொண்டி ருக்கும்போது அவ்வப்போது ஏதேனும் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றுகின்றதெனில் அதற்காக அவர் ஒவ்வொருமுறையும் டேலி நிறுவனத்தாரின் சேவையாளரை நேரில் அழைத்து சரிசெய்திடவேண்டிய தேவையில்லை பிரச்சினையைமட்டும் இணையத்தின் மூலம் கூறினால் அதனை டேலிநிறுவனத்தின் சேவையாளர் பிரிவு இணையத்தின் மூலமாகவே தீர்வுசெய்திடுவார்கள் இதனால் காலமும் மனிதஉழைப்பும் மிச்சமா கின்றது
டேலிஈஆர்ப்பி9 -ல் உள்ள TDLs என்ற வசதி
வாடிக்கையாளர் ஒருவர் நம்முடைய நிறுவனத்துடனான தம்முடைய கணக்குகளை அவருடைய இடத்திலிருந்தபடியே டேலிஈஆர்ப்பி9 -ல் உள்ள TDLs என்ற வசதியின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் அவ்வாறே நமக்கு காசுக்கடன் அல்லது ரொக்ககடன் வழங்கும் வங்கியாளர் ஒருநிறுவனத்தினுடைய நடைமுறைமூலதனம் எவ்வளவு உள்ளது கடன்பெறும் அளவு எவ்வளவு என அறிந்து அந்நிறுவனத்திற்கான கடன் வழங்குவேண்டிய அளவை முடிவுசெய்வதற்கு டேலிஈஆர்ப்பி9 -ல் உள்ள TDLs என்ற வசதியின் உதவுகின்றது
டேலிஈஆர்ப்பி9 -ல் உள்ள TallyVault என்ற வசதி
இந்த டேலிஈஆர்ப்பி9 -ல் உள்ள TallyVault என்ற வசதி மிகச்சரியான பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை பயன்படுத்தினால் மட்டுமே உள்நுழைவு செய்யமுடியும் என்ற மிகுந்த பாதுகாப்பை ஒரு நிறுவனத்தின் தரவுகளுக்கு வழங்குகின்றது
டேலிஈஆர்ப்பி9 -ல் வாடிக்கையாளர்களும் பட்டயதணிக்கையாளரும் விற்பனை பிரதிநிதியும் அனுகமுடியும் என குறிப்பிட்டுள்ளதால் யார்வேண்டுமானாலும் யாருடைய கணக்கையும் பார்வையிடமுடியும் என தவறாக எண்ணிடவேண்டாம் அவரவர்களும் அவரவர்களுடைய பகுதியைமட்டுமே அவரவர்களுக்கு அளிக்க பட்ட பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை பயன்படுத்தி அனுகமுடியுமே தவிர இந்த வசதியை பயன்படுத்தி இவர்கள் ஒருநிறுவனத்தின் தரவிற்குள் டேலியின் கல்விநிலையில் அனுகமுடியாது.
ஹேக்கர்களால் களவாடமுடியாதவாறு பாதுகாப்பு
ஒருநிறுவனத்தின் தரவுகள் அந்நிறுவனத்தின் கணினியில் மட்டுமே யிருக்கும் அதனால் வாடிக்கையாளர் அந்நிறுவனத்துடன் தொடர்புகொண்டு தம்முடைய தன்கணக்கினை பார்வையிடும்போது ஹேக்கர்களால் இந்த நிறுவனத்தின் தரவுகளை அபகரிக்கமுடியாது
டேலியின் உதவியை எங்கிருந்தும் எப்போதும் பெறுதல்
நம்முடைய பிரச்சினைக்கு தீர்வுசெய்வதற்கான டேலியின் உதவியை எங்கிருந்தும் எப்போதும் டேலியினுடைய இணையபக்கத்திற்கு சென்ற அதன் மூலம் பெறமுடியும்
டேலிஆதரவுமையம் என்றவசதி
அதுமட்டுமல்லாது டேலிஆதரவுமையம் என்றவசதியின்வாயிலாக டேலி ஈஆர்ப்பி 9 ஐ பயன்படுத்திடும்போது ஏற்படும் பிரச்சினைகளை கூறினால் அதனை தீர்வுசெய்வதற்கான நிரல் தொடர்களை உடனுக்குடன் உருவாக்கி சரிசெய்திடுவார்கள் இந்த டேலிமட்டுமே மென்பொருள்மேம்படுத்துதல் வாடிக்கையாளருக்கு பயன்பாடு ஆதரவு வழங்குதல் ஆகிய மூன்று வழிகளில் பயன்படுகின்றது
டேலிபயன்படுத்துவதற்கான உரிமத்தை பெறுதல்
டேலிபயன்படுத்துவதற்கான உரிமத்தை இரண்டே படிமுறைகளில் பெறமுடியும் முதலில் தமக்கு வழங்கபட்ட மென்பொருளின் தொடர்எண்ணையும் இதனை செயல் படுத்து வதற்கான திறவுகோளையும் உள்ளீடுசெய்தவுடனேயே இதனை பயன் படுத்திடு வதற்கான ஒரு உரிமத்திறவுகோள் மின்னஞ்சல் மூலம் அனுப்பபடும் அதன்மூலம் தன்னுடைய நிறுவனத்திற்கான டேலிமென்பொருளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் ஓரிடத்தில் இவ்வாறு பெறபட்ட உரிமத்தை ஒப்படைப்பு செய்துவிட்டு வேறொருஇடத்தில் அதேஉரிமத்தை பயன்படுத்தி டேலிமென்பொருளை பயன்படுத்தி கொள்ளமுடியும்
நேர்முகத்தேர்விற்கான தேர்வுகளை நடத்திமுடிவுசெய்தல்
ஒருநிறுவனத்தில் பணிபுரிவதற்கான சரியான நபரை தெரிவுசெய்வதற்காக நேர்முகத்தேர்வின்போதே இந்த டேலி ஈஆர்ப்பி 9 -இல் தனியாக தேர்வுநடத்தி உடனடியாக முடிவுஎன்னவென்று தெரிந்து சரியான நபரை தெரிவுசெய்து பணிக்கமர்திடமுடியும்
கலால்துறைக்காக
ஒருநிறுவனத்தில் ஒவ்வொரு உற்பத்திபொருளுக்கும் Basic, Special, Education cess என்பனபோன்ற பல்வேறுவகையான கலால்வரியை கணக்கீடுசெய்தல்
ஒருநிறுவனத்தில் உற்பத்தியாகும் பல்வேறுவகை உற்பத்திபொருட்களுக்கும்Ad valorem, Ad valorem/transaction value, value based on MRP, Ad quantum என்பன போன்ற பல்வேறு வகையில் அப்பொருட்களுக்கான கலால்வரி செலுத்துவதற்காக மதிப்பிடுதல்
சென்வாட் CENVAT வரவை பயன்படுத்திகொள்ளுதல்
விற்பனைபட்டியலின் தொடர்ச்சியான எண்களை பராமரித்தல்
ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு உற்பத்தி பொருட்களுக்கான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிடங்குகளுக்காக வெவ்வேறு ECC எண்களை பராமரித்தல் என்பனபோன்ற ஏராளமான வசதிஇந்த டேலிஈஆர்ப்பி9-ல் உள்ளன
வரிமூலம் பிடித்தம்செய்தல்(TDS) வசதி
எந்தவொருசெலவிற்கும் வருமானவரியைஅதன்மூலத்திலிருந்து TDS என்ற அடிப்படையில் பிடித்தம் செய்வது ஒரே பேரேட்டில் இந்த TDS கணக்குகளை பராமரித்தல் இணையத்தின்மூலம் இதற்கானTDS அறிக்கையை பதிவேற்ருவதற்கு தேவையானவாடிக்கையாளருக்கு இதற்கானTDS சான்றிதழை அளிப்பது ஆகிய அனைத்து பணிகளையும் மிகஎளிதாக டேலிஈஆர்ப்பி9-ல் செயல்படுத்திடமுடியும்
சம்பளபட்டியலில் அத்தியவசிய பிடித்தங்கள்
சம்பளபட்டியலில் வருங்காலவைப்புநிதிக்காக தொழிலாளர் மருத்துவக்காப்பீடு தொழில்வரி வருமானவரி போன்றவைகளுக்காக பிடித்தம் செய்தல் அவைகளுக்கான கணக்குகளை பராமரித்தல் அவைகளை காலத்தில் செலுத்தி அவைகளுக்கான படிவங்களை தொடர்புள்ளவர்களுக்கு வழங்குதல் போன்ற பணிகளையும் மிகஎளிதாக டேலிஈஆர்ப்பி9-ல் செயல்படுத்திடமுடியும்
டேலிஈஆர்ப்பி9 பதிப்புகள்
டேலிஈஆர்ப்பி9 ஆனது Auditors’, Gold or Silver என்பனபோன்ற பல்வேறு பதிப்பாக கிடைக்கின்றது நம்முடைய தேவைக்கேற்ற பதிப்பை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்ளலாம்