தொகுப்புக்காக செயல்முறை பயிற்சி(Tutorial)

கணினியில் எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும் வோர்க்ரேவ்

மிக நீண்ட நேரம் கணினியின் முன் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு முதுகுவலி, மணிகட்டில்வலி, கண்ணீற்கு அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

என்னதான் எர்கணாமிக்ஸின்படி அமரும் நாற்காலி,, கணினியைவைக்கும் மேஜை ஆகியவற்றின் அமைப்பை சரியாக அமைத்தாலும் கணினியில் நீண்ட நேரம்பணிபுரிவது உள்ளத்திற்கு சோர்வை ஏற்படுத்திவிடுகிறது.     மேலும் இதனால் கணினியில் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்திதிறனும் குறைய ஏதுவாகிவிடுகிறது,

இதனை தவிர்க்க Work rave என்ற பயன்பாடு பேருதவியாக இருக்கிறது,

லினக்ஸ் மற்றும் வின்டோதளத்தில் இயங்ககூடிய இந்த Work rave 1.9.4 என்பதை   <http://www.workrave.org>   என்ற வலை தளத்திலிருந்து இதனை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

இதனை கட்டளைவரிகள் மூலமாகவோ உள்நுழைவு மூலமாகவோ இயக்கமுடியும்.

     படம்-1

இது இடைமுகம் செய்யமுடியாத சாளரமாக மூன்று நேரங்காட்டியுடன் (படம்-1) காட்சியளிக்கும், கைபோன்ற  படத்துடன் உள்ள நேரம்காட்டி சிறுஇடை வேளையாகும், காபிகப்புடன் இருப்பது சிறிது ஒய்வுகொடுக்க வேண்டி குறிப்பிடுவதாகும்.

கதவு போன்றபகுதி தினமும் கணினியில் பணிபுரியவேண்டிய கால அளவை குறிப்பதாகும்.

  படம்-2

       இந்த Work rave ஆனது ஐந்து அளபுருக்களை நம்முடைய பணியில் சுட்டிகாட்டுகிறது.

சிறிய இடைவேளை (Micro break) (படம்-2)ஆனது காலஇடைவெளி மற்றும் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை செய்யப்படவேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

ஒய்வு இடைவேளை (Rest break)  இது காலஇடைவெளி மற்றும் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை செய்யப்படவேண்டும் என வழிகாட்டுகிறது.

Daily limit ஆனது தினமும் எவ்வளவு நேரம் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறது,

இந்த பயன்பாடானது ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை 30நொடி சிறிய இடைவேளையை  விடவேண்டுமா என  மேல்மீட்பு பட்டிமூலம் கேட்கும்.

அவ்வாறே ஒவ்வொரு 45நிமிடத்திற்கு ஒரு முறை 10நிமிட நேரம் ஒய்வு இடைவேளைவிடவா என கேட்டுநிற்கும்.

ஒருநாளின்முடிவில்4மணிநேர பணிக்கு பிறகு இன்று இத்துடன் பணியை முடித்துக்கொள்ளலாமா என கேட்டுநிற்கும்.  இந்த மூன்றுவகையான Timers அமைவுகளில் விவரம் தெரிந்தால் மட்டும் மாறுதல் செய்யலாம், இல்லையெனில் இயல்பு நிலையில் இருப்பதை அப்படியே விட்டுவிடவும்.

இந்த பயன்பாடானது  கணினியின் இயக்கத்தின்போது குறிப்பிட்ட இடைவேளைவரை கண்டிப்பாக விசைப்பலகையும்(keyboard), சுட்டியையும்(mouse) செயல்படாது(Off)முடக்கிவிடும்.  குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானகவே இவைகள் இயங்க அனுமதித்துவிடும்.

இவ்வளவு கடுமையான நடவடிக்கை வேண்டாமெனில் இந்த இடைவேளையில் கணினியானது மாற்று ஏற்பாடாக சிறிய உடற்பயிற்சியை திரையில் பிரதிபலிக்க செய்யும் நாமும் இதனை தொடர்ந்துபயன்படுத்தினால் நம்முடைய உடலும், உள்ளமும், புத்துணர்ச்சிபெற்று சுறுசுறுப்பாக அடுத்த கணினி இயக்கத்திற்கு தயாராகவோம்.

இந்த கால இடைவெளி கணக்கிடானது நாம் கணினியில் பணியை ஆரம்பித்தவுடன் கவுண்டன் ஆகிவிடும், விசைபலகையிலும் சுட்டியையும் பயன்படுத்தும் நேரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் வலை இணைப்பின் மூலமாககூட இந்த Work rave பயன்பாட்டை இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்.

 படம்-3

      சுட்டியின் பொத்தானை 2முறை சொடுக்கி தோன்றும் பட்டியலில்  ”Statistics” என்பதை தெரிவுசெய்க உடன் Statistics என்ற பகுதி திரையில் (படம-3)

தோன்றும் அதில்

1. எவ்வளவு நேரம் சுட்டியை பயன்படுத்தினீர்கள் என Mouse usage பகுதியிலும்

2. எவ்வளவு தூரம் சுட்டி பயனம்செய்தது, (நகர்ந்து சென்றது) என்ற Mouse movement பகுதியிலும்

3. இந்த சுட்டி நகரத்துலில் பயனுள்ள நகர்வு எவ்வளவு தூரம் என Effective mouse movement பகுதியிலும்

4. சுட்டியின் பொத்தானை எத்தனை முறை சொடுக்கினோம் என்பதை  Mouse button click பகுதியிலும்

5¢, விசைப்பலகையில் எத்தனை விசைளை எவ்வளவு முறை தட்டினோம் என்பதை Keystrokes  என்ற பகுதிகளிலும்

அட இவ்வளவு பணி நாம் செய்தோமோ என ஆச்சிரியம்படும்படி தெளிவான புள்ளிவிவரங்கள் கிடைக்கும்

இவ்வாறான இந்த பயன்பாட்டை பயன்படுத்தி கணினி இயக்கத்தின்போது அன்றுமலர்ந்த மலர்போன்று உங்கள் உடலையும், உள்ளத்தையும், சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

விரும்பம் மடிப்பகத்திற்கு My Pictures என பெயர்மாற்றம் செய்யமுடியும்

அவ்வாறு விரும்பும் மடிப்பகத்தின்மீது இடம்சுட்டியை வைத்து வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு விரியும் திரையில் Also apply this template to all subfolders என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொள்க இறுதியாக okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.


பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் Properties என்ற உரையாடல் பெட்டியில்Customizeஎன்ற தாவியினுடைய பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி யபின்  தோன்றிடும் Customize என்ற திரையில்Use this folder type as a template என்பதன் கீழுள்ளPictures(best for many files) என்பதை தெரிவு செய்து சொடுக்குக

மறுமொழி அளிக்கவும் »

ஆண்டிராய்டு சாதணத்திற்கும் தனியாள்கணினிக்குமிடையே கோப்புகளை பரிமாறிக் கொள்ளுதல்

இவையிரண்டிற்குமிடைய தரவுகளை அல்லது கோப்புகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்காக கையோடு யூஎஸ்பி வழியாக கணினியுடன் இணைக்க பயன்படும் கம்பியொன்றை எடுத்துசென்று இணைத்து பயன்படுத்தி கொள்வோம்   வாடிக்கையாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று நாம் பணியாற்றி கொண்டிருக்கும்போது நம்முடைய ஆண்டிராய்டு சாதாணத்திலிருந்து வாடிக்கையாளரின் அலுவலக தனியாள் கணினியிலுள்ள விண்டோவிற்கு மிகமுக்கியமான கோப்பினை பரிமாறிக் கொள்ளவேண்டிய சூழ்நிலையில்  கையோடு நாம் எடுத்து சென்ற யூஎஸ்பி வழியாக கணினியுடன் இணைத்திட பயன்படும் கம்பியை இணைத்தால் அந்த கணினியில் ஆண்டிராய்டு சாதணத்தை ஆதரித்து இயக்க பயன்படும்  மென்பொருள் இல்லாத நிலையில் எவ்வாறு இப்பிரச்சினையை தீர்வுசெய்வது என தெரியாமல் தவித்திடுவோம் ஆயினும் அதற்கான மென்பொருளை இணையத்தில் தேடிபிடித்து பதிவிறக்கம் செய்து நிறுவும்போது விண்டோ அதனை ஏற்குமா ஏற்காதா என்ற நிலையாகிவிடும் இவ்வாறான தர்மசங்கட நிலையை தவிர்ப்பதற்கு இரண்டு சாதணங்களையும்  வொய்ஃபி அனுகும் புள்ளி(Wi Fi Access point) மூலம் இணைக்கலாம்  இது குறிப்பிட்ட (விண்டோ அல்லது லினக்ஸ்) இயக்கமுறைமைதான் இருக்கவேண்டும் இதனை செயல்படுவதற்கான இயக்க மென்பொருளை கணினியில் நிறுவிடவேண்டும் என்ற கட்டுபாடு எதுவுமில்லை

முதலில்  ஆண்டிராய்டு சாதணத்தில் இயங்ககூடியWi-Fi File Transfer  என்ற பயன்பாடு ஏதேனும் கிடைக்கின்றதா என தேடுக அல்லது https://market.android.com/details?id=com.smarterdroid.wififiletransfer&hl=en  என்ற தளத்திற்கு சென்று  தேடி download என்ற பொத்தானை சொடுக்கி பதிவிறக்கம் செய்து ஆண்டிராய்டு சாதணத்தில் நிறுவிக்கொள்க  பின்னர் இதனை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையில் start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


அதன்பின்னர்   தோன்றிடும் திரையில் நம்முடைய வொய்ஃபி வலைபின்னலுக்கான வாயில் எண் http://192.168.1.2:XXXX  என்றவாறு வழங்கபட்டிருக்கும்ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் நம்முடைய கணினியில் இணையஉலாவியை இயக்கி இந்த வொய்ஃபி வலைபின்னல் வாயில் எண்ணை உள்ளீடு செய்க.

 

உடன்  கணினியினுடைய இணைய உலாவியானது நம்முடைய ஆண்டிராய்டு சாதணத்துடன் இணைக்கபட்டுவிடும்  இணையம்வழியாக வழக்கம் போன்று கோப்புகளை பதிவிறக்கம் செய்வது பதிவேற்றம் செய்வது போன்ற பமிகளை செய்வதற்காக  தேவையான கோப்புகளை அல்லது கோப்பகங்களை தெரிவுசெய்து அதன் அருகிலிருக்கும் தேவையான செயலிற்கான  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக   ஆண்டிராய்டு சாதணத்திலிருந்து கணினிக்கு கோப்புகளை  பரிமாறிக்கொள்க.

அவ்வாறே Upload  ,Start Upload என்றவாறு பொத்தான்களை சொடுக்குவதன்மூலம் கணினியிலிருக்கும் கோப்புகளை ஆண்டிராய்டு சாதணத்திற்கு பரிமாற்றம் செய்துகொள்க.

எச்சரிக்கை இந்த வொய்ஃபி வலைபின்னல் வாயில் வழியாக பொதுஇடங்களில் இவ்வாறான கோப்பு பரிமாற்ற பணியை செய்யவேண்டாம்இதன்மூலம் நம்முடைய கணினியிலிருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பிறர் களவாடுவதற்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போன்றாகிவிடும்

மறுமொழி அளிக்கவும் »

இதழ்களை உருவாக்க உதவும் இலவச பயன்பாட்டு மென்பொருள்

கதை ,கட்டுரை மற்றும் துணுக்குகள் போன்றவைகளுடன் படங்களையும் இணைத்து வாசகர்களை கவருந்தன்மையுடன் இதழ்களை(magazine) உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்துவந்தது ,ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கணினியின் மென்பொருளில் ஏற்பட்ட முன்னேற்றங்களினால் இவைகளை  மிகச்சுலபமாக உருவாக்கலாம் என்ற நிலை தற்போதுள்ளது,

Adobe creative suite 3,  Quark Xpress போன்ற பயன்பாட்டு மென்பொருள்களின் வரவால் பத்திரிகை துறை மிகவும் பெரிதும் முன்னேற்ற மடைந்துள்ளது என்பதே  உண்மையாகும் ஆனாலும் இந்த DTP பயன்பாட்டு மென்பொருட்களுக்கு ரூபாய் 35000 முதல் 40000 வரை செலவிட வேண்டியுள்ளது,

2001 ஆம் ஆண்டிற்கு பிறகுமென்பொருள் துறையானது  திறமூலமாக மாறிவரும் சூழலில்Franz Scmid என்பவர் scribus என்ற DTPக்கான இலவச மென்பொருள் நிரல்தொடரை லினக்ஸ் தளத்தில் இயங்குமாறு வெளியிட்டுள்ளார்

இது லினக்ஸ் தளத்தில் மட்டுமல்லாது விண்டோ மற்றும் மேக் தளங்களிலும் நன்கு செயல்படும் தன்மையுடன் விளங்குகிறது

வரைகலை வடிவமைப்பாளர் இதனை தங்களுக்கு பொருத்தமானதாக இல்லை என குறை கூறினாலும் பின்வரும் பல்வேறு வகையான நோக்கங்களுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளலாம்

1, செய்திதாள், பருவ இதழ், சுவர்விளம்பரபடம், அழைப்பிதழ்அட்டை உருவாக்குவதற்காக

2,அச்சிடும் நிறுவனங்களில் பல்வேறு அச்சிடும் பணிகளுக்காக

3, லோகோ மற்றும் மாதிரிகளை அச்சிடுவதற்காக

4,படைப்புகளை பிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்து பயன்படுத்த

டிடிபி ஆனது சிக்கலான  வெவ்வேறு வடிவமைப்புகளை உடைய பலஉறுப்புகளை உள்ளடக்கியதாகும், அதனால் இந்த பணியின்போது ஏராளமான பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன,அச்சுக்குமுன் இவ்வாறு ஏற்படும் பிழைகளை கண்டுபிடிக்க preflight verifier என்ற கருவி பயன்படுகிறது, இவ்வாறான வாய்ப்புகள் scribus லும் உள்ளது.

 

 

படிமுறை-1-பதிவிறக்கும் செய்து நிறுவுதல்: முதலில் இந்த scribus  பயன்பாட்டினை  http://www.scribus.net  என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கும் செய்துகொள்க, இந்த பதிவிறக்கம் பணியை செய்யுமுன் நம்முடைய இயக்கமுறைமைக்கேற்ற (os )பதிப்பாக தெரிவுசெய்க அதற்கேற்றவாறான கட்டளைகளை அடுத்த பக்கத்திலிருந்து படித்து தெரிந்து கொள்க, Adobe postscript , PDF இன் கோப்புகளுக்கு மூலமொழிமாற்றியாக செயல்படும்

முதலில்Ghost script என்பதை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதற்காக திரையில் உள்ள Ghost script8,54என்பதையும் பின்னர் +download link என்பதையும் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் ‘open a new window ‘என்பதை தெரிவு செய்க, அதன்பின்னர் இதில் கூறும் படிமுறைகளை பின்பற்றி ‘download Scribus’ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,உடன்  scribus என்ற மென்பொருள் நம்முடைய  கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்,

இந்த சமயத்தில் ‘The following programs are missing Ghostscript: you cannot use EPS image or postscript print preview’ என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும் இதற்கு   file / preferences என்பதை தெரிவு செய்க,இடதுபுற பலகத்தில் உள்ள ‘External Tools’  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக Postscript interpreter என்பதுgswin32c.exe என்ற கோப்பில் இருக்கும்,இது இருக்குமிடம் C:/program files / gs/gs8.54 / bin /gswin32c.exe என்பதாக உள்ளதா என சரிபார்க்கவும் இவ்வாறு இது சரியாக  அமர்ந்திருந்தால் இவ்வாறான பிழை ஏற்படாது,

படிமுறை-2-திருத்தமற்ற இடஅமைவுபடம் வரைதல்: ஒரு தாளில் இடஅமைவுபடம் சாதாரண சுற்றெல்லையாக ஆக வரைந்துகொள்க இவ்வாறான இதன் ஒவ்வொரு இடஅமைவுபடத்திலும் உரை,உருவப்படம், காலி இடம் ஆகியவை தங்களுக்குள் முன்பின் சரிசெய்து மிகச்சரியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும்,

இவ்வாறு திருத்தமற்ற சுற்றெல்லை வரையும்போது இதில் அதிகஅளவு இடநெருக்கடியாகவோ அல்லது ஒன்றுமே இல்லாமல் காலியாகவோ இல்லாமல் போதுமான அளவு இடவசதியுடன் மிகப்பொருத்தமாக இருக்குமாறு இதனை உருவாக்குக,

இதன் ஒவ்வொரு பக்கத்தையும் திறுத்தமற்ற விளக்கபடமாக இடஅமைவுபடத்தின் வகைக்கேற்ப வரைந்துகொள்க,இதில் இரண்டு பெட்டிகளை ஒன்றில் தொடர்ச்சியான உரையும் மற்றொன்றில் மிகவும் வலதுபுறமாக இருக்குமாறும்உருவாக்குக, இடையில் ஆங்காங்கு படங்களை உள்ளிணைத்து மிகுதிஇடங்களில் உரைகளையோ உருவபடங்களையோ முன்பின் சரிசெய்து அமைத்துகொள்க,

இவ்வாறு இடஅமைவுபட சுற்றெல்லையை ஒவ்வொரு பக்கத்திற்கும் உருவாக்கி விட்டால் அதன்பிறகு நம்முடைய பணி மிகச்சுலபமாகும் ,உருவபடத்தின் பண்பியல்பை RGM வடிவமைப்பிலிருந்துGMYK உருவபடத்தை(200dpi)அளவுள்ளதாக உருமாற்றுக, Gimp என்ற வரைகலை பயன்பாடு நம்மிடம் இல்லாமலிருந்தால் GYMK ஆதரிக்ககூடியhttp://www.blackfiveservices.co.uk/seperater.shtm1     என்ற வலைதளத்திலிருந்து
இதனை  பதிவிறக்கம் செய்துகொள்க,

scribus இல் வேர்டு ஆவணத்தின் உரையை உருமாற்றும்செயல் பளுஅதிகம் நிறைந்த பணியாகும், படமில்லாத உரைஆவணமெனில் story editorஐகொண்டு  நேரடியாகவடிவமைப்பு செய்துகொள்க

படிமுறை -3-வழிமுறை கோட்டை அமைத்தல்: scribus-ன் குறும்படத்தை  தெரிவுசெய்து சொடுக்கியவுடன் திரையில் தோன்றும் மின்வெட்டிற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் பின்னர் ‘new document’ என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் preset layout and the margin guides என்பது தானாகவே அமைக்கப்பட்டிருக்கும்

options என்பதில் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்க பக்கங்களின் எண்ணிக்கை 2 என்றும் உள்வெளி (inside outside)விளிம்பின் அளவை 8.000mm என்றும் மேல் கீழ் விளிம்பின் அளவை 12.000 mm என்றும் அமைத்திடுக, ஆவண இடஅமைவு படத்தில் ‘double sided என்பதை தெரிவுசெய்து இடதுபுறம் முதல் பக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்க,

தேவையான அளவு precisionஇல் சரிசெய்து கொள்க,இவைகள் உரையையும் உருவபடத்தையும் சரிசெய்ய உதவுகிறது,

பின்னர்page/manage Guides என்பதை தெரிவுசெய்க,உடன் தோன்றும் உரையாடல் பெட்டியின்Rows and Column என்பதில் கீழிறங்கு பட்டியிலிருந்து 3 என நெடுவரிசைக்கு (Column) தெரிவு செய்க,நெடுவரிசை இடைவெளி(Column Gap) என்பதற்கு 5,000mm என தெரிவுசெய்க, Refer to என்பதில் marginesஎன்றவாய்ப்பை தெரிவுசெய்க view show Guides, show Baseline ஆகியவற்றை தெரிவுசெய்து சொடுக்குக இதில் உள்ள அடிப்படைகோடு (baseline) என்பது உரைத்தொடரின் கற்பனை கோடாகும் இது மிகச்சரியாக நெடு வரிசையும் பக்கமும் அமைவதற்கு உதவுகிறது,சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக  உடன் தோன்றும் பட்டியில் sample text என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,இதில் உள்ள கோட்டு இடைவெளியை அப்படியே அடிப்படை கோட்டிற்கும் பின்பற்றுக,

படிமுறை -4-முதன்மை பக்கத்தை உருவாக்குதல்: பக்கங்களின் எண்கள் தலைப்பு முடிவு ஸ்பாக்ஸ் , வேறுவடிவமைப்பு உறுப்புகளை முதன்மை பக்கத்தில் உள்ளடக்கியதாகும், பல்வேறுவகைகளில் முதன்மை பக்கங்களை உருவாக்கி பக்கங்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுத்திகொள்ளலாம், பக்கங்களின் எண்கள் மட்டும் தொடர்ச்சியான எண்களாக இருக்குமாறு மாற்றியமைத்து கொண்டே வரவேண்டும், Edit/Master pagesஎன்பதை தெரிவு செய்க,உடன்விரியும் பட்டியில் New Master pageஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் இதற்கு ஒரு பெயரிடுக,

அதன் பின்னர் கீழ்புறமுள்ள மூலையில் உரைபெட்டியை உள்ளிணைத்து Insert /charcter/page number என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மற்றொரு உரைபெட்டி அல்லது உருவப்படத்தின் பெயரையும் தேர்வுசெய்பெட்டியின் பெயரையும் நடப்பு பக்கத்தில் உள்ளீடு  செய்க தேவையானால் மாறுதல் செய்து கொள்க,பிறகு முதன்மை பக்கத்தை மூடிவிடுக, பின்னர் page / apply Master page என்பதை தெரிவுசெய்து சொடுக்கியபின் புதியதாக உருவாக்கப்பட்ட முதன்மை பக்கத்தை தெரிவு செய்து கொள்க,

படிமுறை -5-உரையை உள்ளிணைத்தலும் பதிப்பித்தலும்: வேர்டு ஆவணத்தை திறந்தவுடன் உரையை தட்டச்சு செய்யலாம் ஆனால் இந்த இதழ்  பயன்பாடுகளில் உரையையும் உருவபடத்தின் சட்டத்தை(frame) உருவாக்கிய பிறகே உரையை தட்டச்சு செய்யமுடியும்

இந்த சட்டங்களில் எங்கெங்கு படம் அல்லது உரை இருக்கவேண்டும் இவை எவ்வாறு இருக்கவேண்டும் என பிரித்தறிகிறது, பெரும்பாலான இடஅமைவுபடங்கள் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே இடஅமைவுபடமாக உள்ளன,

Insert Text box  என்பதை  தெரிவுசெய்து சொடுக்கி உரைபெட்டியை வரைந்திடுக, அதன்பின்னர் இந்த உரையை நகலெடுத்து இருமுறை உரைபெட்டியை இருமுறை சொடுக்கி இதனை ஒட்டி கொள்க, பின்னர் இந்த உரைகளை தெரிவு செய்து கொண்டுstory editor என்ற குறும்படத்தை(icon) தெரிவுசெய்து சொடுக்குக,

Scribus  இல் ஒவ்வொரு பத்தியும் தனித்தனி வடிவமைப்பில் உள்ளதால் தனித்தனி எண்களை வெவ்வேறு வகையின் பாவணையி(style) ல் வடிவமைப்பு செய்க புதிய பாவணையை உருவாக்கி no style என்பதை தெரிவுசெய்துகொள்க,பின்னர் edit style என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, இதற்கு Body Text எனப் பெயரிடுக பின்னர் தேவையான பாவணையை அமைத்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் No style என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பாவணையை தெரிவு செய்து கொள்க,update என்ற குறும்படத்தை தெரிவு செய்தால் நாம் செய்த மாறுதல் செயல்படுத்தப்படும் இவ்வாறு தலைப்பு துனைத்தலைப்பு தலைப்பு ஆகியவற்றிற்கு பொருத்தமான பாவணையை அமைத்துகொள்க,

பெரும்பாலும் உரையானது ஒரே பக்கத்தில் அமையாது தொடர்ந்து அடுத்தடுத்த பக்கத்திற்கும் செல்லும் அந்நிலையில்அடுத்த பக்கத்திலும் உரைபெட்டியை வரைந்து மிகுதி இருக்கும் உரையை முந்தைய பக்கத்திலிருந்து தெரிவுசெய்து  link frame என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி காலி உரைபெட்டியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மிகுதி உரை அடுத்த பக்கத்திலும் தொடரும்,

படிமுறை- 6-ஒரு பக்கத்தில் படங்களை அமைத்தல்: உருவப்படத்தை( image) உள்ளிணைப்பதற்கு insert  insert/image frame என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக ,பின்னர் ஒரு உரைபெட்டியை வரைக, அதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Get image என்பதை தெரிவுசெய்க

பின்னர்படங்கள் உள்ள கோப்பினை தெரிவு செய்து திறந்து கொள்க,

படத்தின் அளவை சரிசெய்ய சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியடன் விரியும் சூழ்நிலை பட்டியில் property என்பதை தெரிவு செய்க அல்லது F2 என்ற செயலிவிசையை அழுத்துக,

உடன் தோன்றம் properties என்ற உரையாடல் பெட்டியில் image என்றதாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் திரையில் scale to frame size என்பதில்proportion என்பதை தெரிவு செய்து சரியாக இந்த சட்டத்திற்குள் அமையுமாறு செய்க அல்லது free scalingஎன்பதை தெரிவுசெய்து அமைக்கவும்

உருவபடத்தைimage  சுற்றி உரையானது மடங்கி அமர்வதற்கு  properties என்ற உரையாடல் பெட்டியில் shape என்பதை தெரிவு செய்க  Text flow around frame என்பதையும் using contour line என்பதையும் தெரிவுசெய்க,

பின்னர் edit shape என்பதை தெரிவுசெய்து சொடுக்குக படத்தை சுற்றி increase அல்லது decreaseஆக அமருமாறு செய்து அமைத்துகொள்க,

படத்தின் ஏதேனுமொரு முடிவு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் பட்டியில்  Add node என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உருவபடத்தின் ஒரு பகுதியில் உரை இல்லாமலும் மற்றஇடங்களில் உரை இருக்குமாறும் அமர்ந்துவிடும் அதனால் delete node என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கினால் தேவையற்ற இடங்களில் உள்ள உரை நீங்கிவிடும்

F2 என்ற செயலிவிசையை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் உரையாடல் பெட்டியில் color என்ற தாவியின் பொத்தானை தொரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் fill properties என்பதை தெரிவு செய்துshadeஐ தெரிவு செய்து கொள்க

ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களையும்(Color), நிழல்(shade) களையும் மட்டும் தெரிவுசெய்க, வெவ்வேறு  உருவங்களை(shape) உள்ளிணைத்த (insert) பிறகு இதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் convert to என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக,விரும்பும் குறிமுறையை தெரிவு செய்து உருமாற்றம் செய்க,  Level என்பதை தெரிவுசெய்து எங்கு அமைந்திடவேண்டும் என முடிவுசெய்க,

படிமுறை -7-இறுதிச்சுற்று பணிகள்: இவ்வாறு உருவபடத்தை சுற்றி உரைபெட்டியை உள்ளிணைக்கும் போது அழகாக அமையாது அதனால் இதனை பதிப்பான்(editor) மூலம் சரிசெய்து சரியாக அமையுமாறு செய்க,

Text flows around frame என்பதை உருவப்படபெட்டியை சுற்றி அல்லது ஒன்றுக்கொன்று  overlap ஆகுமாறு  தெரிவுசெய்து கொள்க,grids , guide ஆகியவற்றை மாற்றி பிரிபலிக்கச்செய்து சரியாக அனைத்தும் அமர்ந்திருக்கின்றதாவென சரிபார்த்து உறுதிசெய்து கொள்க

படிமுறை -8-இதழை அச்சிடுதல்:முன்பெல்லாம் Quark Xpress என்ற பயன்பாட்டில் இவ்வாறான பணிமுடிந்ததும் அப்படியே அச்சிற்கு அனுப்பிவிடுவார்கள் ஆனால் இப்போது இவ்வாறு உருவாக்கிய கோப்பினை கையடக்க(PDF) ஆக உருமாற்றிய பிறகுதான் அச்சுக்கு அனுப்புகின்றனர்

அதனால் பயனாளர் DTPபயன்பாட்டு மென்பொருளை வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை ,மேலும் இது நிரந்தர எழுத்துரு ஆகும் அதன் பயனால் ஏதேனும் கைதவறுதலாக பிழை ஏற்பட்டு அமைப்பு மாறிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை

File/Export/save as PDF என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து fonts என்ற தாவித்திரையை தோன்றசெய்து  எழுத்துருவை உள் பொதிந்து அமைத்திடுக,

.sk என்ற பின்னொட்டுடன் செல்லும் கோப்பினை பெறுபவர் collect for output என்பதை பயன்படுத்தி அனைத்தையும் பார்வையிடலாம்,file/ collect for output என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி திறந்து பார்க்கலாம்

Indent font என்ற கட்டளையானது பெறுபவரிடம் இந்த எழுத்துரு இல்லையென்றாலும் பார்வையிட உதவுகிறது,

Scribus மூலம் இவ்வாறான படிமுறையைபின்பற்றி  ஒரு இதழை மிகச்சுலபமாக உருவாக்கலாம்

 

மறுமொழிகள் (1) »

அசைவூட்டல் வழிமூலம் நாமே சுயமாக நிரல்தொடர் எழுதக் கற்றுக் கொள்ளலாம்

அசைவூட்டல் வழிமூலம் நாமே சுயமாக நிரல்தொடர் எழுதக் கற்றுக் கொள்ளலாம்

பொதுவாக  நிரல்தொடர் எழுதுவதற்கு  கற்றுகொள்ள விரும்பும் ஒருவர் நல்ல அனுபவமுள்ள நிரல்தொடர் எழுதுபவரிடம் சென்று  நிரல்தொடர் எழுதி பழகும் காட்சியை காணலாம். ஒரவர் ஆரம்ப நிலையில்  சாதாரண சிறிய நிரல்தொடர்களை எழுதுவதற்குகூட மிக சிரமப் படுவதையும்   நிறைய தவறுகள் ஏற்படுவதையும் பின்னர் அதனை சரிசெய்து ஏதோ சுமாராக இருக்குமாறு நிரல்தொடர்களை  உருவாக்கி இயக்குவதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளாகும்.

நிரல்தொடர்களை எழுதும்போது அதற்கான வரைமுறைகள் கட்டுப்பாடுகள் இலக்கணங்களுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே ஒரு நிரல்தொடரில் நாம் எதிர்பார்த்திடும் விளைவு கிடைக்கும்.  இவ்வாறான கடினமான சூழ்நிலையில் ஆரம்பநிலை நிரல்தொடராலர்கூட மிக எளிதாக நிரல்தொடரை தவறேதும் இல்லாமல்  எழுதி இயக்குவதற்காக உதவிடும்படி Alice என்பது வெளியிடப்பட்டுள்ளது  இது  3D யில் இயங்க கூடிய கல்விக்கான ஒரு கருவியாகும்.

மேலும் இது கணினி பற்றிய ஒன்றும் தெரியாதவர்கள் மற்றும் ஓரளவு மட்டும் தெரிந்தவர்களும் மிகசுலபமாக நிரல்தொடர் எழுதுவதற்கு கற்றுக்கொடுக்கின்ற ஒரு கருவியாக இருக்கின்றது.

அதுமட்டுமின்றி பயனாளரின்  படைப்பாற்றல் திறனை உயர்த்தி புதியதான முயற்சியில் ஈடுபடும்படி தயார் செய்கின்றது.

பயனாளர் ஒருவருக்கு பொருள் நோக்கு நிரல் தொடர் (Objected Oriented programm) அடிப்படையில் மிக எளிதாக நிரல் தொடர் எழுதுவதற்கு அறிமுகப்படுத்துகின்றது.

இதன் உதவியுடன் Syntex மற்றும் Logical ஆகிய பிழைகள் எதுவும் நிரல் தொடர்  எழுதும்போது ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு நல்ல நிரல் தொடர்களை உருவாக்கும் திறனை வளர்த்துகொள்ளமுடியும்.  நாம் எழுதிய நிரல் தொடரின் இறுதி விளைவு (out put  ) சாதாரண வழிகளுக்கு பதிலாக இயங்கும் காட்சியாக ( animnation Preview ) காண்பதற்கு இது உதவுகின்றது.  இதனால் நிரல் தொடர்  எழுதும் பணி ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்படி பார்த்து கொள்கின்றது.

இதற்காக அசைவூட்டல் போன்று Alice ஐ பற்றிய அனைத்து தொழில் நுட்பமும் பயனளாருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் இது நிரல் தொடரை எவ்வாறு கட்டமைத்து எழுதுவது என்று மட்டும் தெரிந்து கொள்ள செய்கின்றது.

பழைய வழிமுறைகளின் படி நிரல் தொடர்  எழுதுவதற்கான சட்டதிட்டங்கள், வரைமுறைகள், கட்டுபாடுகள் ஆகியவற்றை வழுவாமல் கடைபிடித்து நிரல் தொடரை  எழுதிய பின்னர் ஏற்படும் Syntex மற்றும் Logical பிழைகளை மிக கடிணமாக பாடுபட்டு சரிசெய்து முடிவாக வெளியீடு எவ்வாறு இருக்கும் என அறிந்து கொள்வதற்குள் ஒருவருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.  இவ்வாறு  சிக்கலான நிரல் தொடர்  எழுதும் பணியே நமக்கு வேண்டாம் என்று பயந்து ஒதுக்கியவர்கள் நம்மில் பலர் உள்ளனர்.

ஆனால் இந்த Alice ஆனது Syntex பிழையை பற்றி கவலைப்படாமல் மிக சுலபமாக நிரல் தொடர்  எழுதும் திறனை ஒருவருக்கு வழங்குகின்றது.

பயனாளர் தாம் முன்பு செய்த செயலையே திரும்ப திரும்ப செய்வது  முன் செயலை நீக்குவது ஆகிய படிமுறைகள் மூலம் தன்னுடைய திறனை வளர்த்து கொள்ள இது உதவுகின்றது.

எவ்வாறு ஒரு நிரல் தொடரை கட்டமைப்பது என மிக எளிதாக அறிந்து கொள்ள உதவுவதே Alice ன் ஒட்டு மொத்த சாராம்சபயனாகும்.

கன்னிகள் (Loop), நிபந்தனை கூற்றுகள் (conditional statements)போன்றவைகளை கொண்டதே OOPஎன சுருக்கமாக அழைக்கபடும் பொருள் நோக்கு நிரல் தொடர் (Objected Oriented programm)ஆகும். நாம் காணும் ஒரு இயற்கை காட்சியை எடுத்து கொள்வோம். பல பொருட்கள் நிறைந்ததே ஒரு இயற்கை காட்சியாகும். இதில்உள்ள பொருட்கள் அனைத்தும் Alice ல் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட இனமாகும்.  இந்த இனங்கள் சில வழிமுறைகளால் பண்பியல்புகளால், செயலிகளால் பொருளை பயன்படுத்தும்  நடந்து கொள்ளும் முறைக்கு ஏற்ப வரையறுக்கப்படுகின்றது, .  வழிமுறையானது (methods)சிறு குறியீட்டு முறையாகும். இது மதிப்பேதும் திருப்பாது.  ஆனால் செயலியானது(function) மதிப்பை திருப்பும். ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்துள்ள பொருட்களின் தன்மையை பண்பியல்புகளை வரையறுக்கின்றது.  ஒவ்வொரு நிரல் தொடரும் ஒரு ஆரம்ப புள்ளியிலிருந்தே செயல்படும். உதாரணமாக Java C/C++ போன்றவை ஒருசிலர் உரையை எழுத ஆரம்பிக்கும் போது முதலில் உ என்ற பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது போன்று  Main ( ) என்ற ஆரம்ப செயலியிலிருந்தே தன்னுடைய பணியை ஆரம்பிக்கும்.   இயல்பு நிலையில் இந்த ஆரம்ப புள்ளியே முதல் வழிமுறையாகும்.

இந்த Aliceஐ இயக்க ஆரம்பித்தவுடன் தோன்றும் திரையில்உள்ள மாதிரிபடிமங்களிலிருந்து World என்பதை தெரிவு செய்க. உடன் தோன்றும் திரையில் இதன் பணியிடத்தின்(work Space) இடதுபுறம் இருப்பது World என்பதில் உள்ள அனைத்து பொருட்களையும்(objects) பட்டியலாக கொண்ட tree ஆகும். இதில் உள்ள வழிமுறை(method), செயலி (function)மற்றும் பண்பியல்புகள் (properties) ஆகியவற்றின் தாவிகள் குறிப்பிட்ட இனத்திலிருக்கின்ற வாய்ப்புகளை திரையில் காண்பிக்க உதவுகின்றது.  உருவாக்கப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் (Events) நிகழ்வு பகுதியில் பிரதிபலிக்கின்றது.

பயனாளர் ஒருவர் தம்முடைய சொந்த நிகழ்வுகளையும் தொடர்புடைய வழிமுறைகளையும் இதில் உருவாக்க முடியும். இந்த திரையின் பதிப்பித்தல் (editing) பகுதியில் அனைத்து குறியீடு(Code)களும் உள்ளன.  நடப்பின் World னுடைய  பொருட்கள்(Objects) அனைத்தையும் World சாளரம் பிரதிபலிக்கின்றது.

இந்த பயன்பாட்டில் அடுத்தபடி முறையாக இந்த World ல் புதிய பொருட்களை(Objects) சேர்க்க வேண்டும் . இதற்காக World சாளரத்தில் உள்ள Add Object என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,அதன்பின்னர் பொருட்கள்(Objects) என்ற இனத்தை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக .  அதற்குபதிலாக இந்த இனத்தை பிடித்து இழுத்து வந்து தேவையான இடத்தில் விடுவதன் மூலம் பொருட்களை(Objects) உருவாக்க முடியும் .  இவ்வாறு Object ஐ உருவாக்கியவுடன் Object tree பகுதியில் இதனை காணலாம் . சில இனங்களை மட்டும் நம்முடைய கணினியில் வரையறுக்கின்றது.  அதற்கு மேலும் தேவையெனில் Alice ன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க. அதற்குபதிலாக உங்களுடைய சொந்த இனத்தை நீங்களாகவே உருவாக்கி கொள்ள முடியும் .

எந்த அளவிற்கு அதிகமான இனங்கள் கிவசம் இருக்கின்றதோ அந்த அளவிற்குஅதிகமான  Alice ன் Object களை உருவாக்க முடியும். இந்த பொருட்கள்(Objects) பல பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு மயில்உருவத்தை உருவாக்குவதாக கொள்வோம்.  அதற்காக இதன் உடல் பகுதி , தலைப்பகுதி , கழுத்துப்பகுதி, கால்பகுதி, வால்பகுதி என அதனை பல்வேறு பாகமாக பிர்க்க முடியும். இவ்வாறு பல்வேறு பாகங்களாக பிரிந்திருக்கும்போது பயனாளர் தன்னுடைய படைப்புத் திறனை பயன்படுத்தி ஒருங்கினைக்கும் திறனை அதிக அளவு வளர்த்து கொள்ள முடியும்.

விலங்குகள் மட்டுமன்று இதிலுள்ள Hebuilder, She builder  ஆகியவற்றை பயன்படுத்தி மனிதர்களையும் உருவாக்க முடியும்.  குறிப்பிட்ட Object களுடன் தொடர்புடைய வழிமுறைகளை, செயலிகளை, பண்பியல்புகளை பெறமுடியும் அல்லது இதன் பாகங்கள் details பகுதியிலிருந்து பெறமுடியும். தொடர்புடைய தாவியை தெரிவு செய்வதன் மூலம் இவற்றை பயன்படுத்தி கொள்ள முடியும் .  Editing பகுதியில் இழுத்து வந்து விடுவதன் மூலம் அசைவூட்டு படங்களை உருவாக்க முடியும்.

இரண்டு பொருட்கள்(Objects) இரண்டு வெவ்வேறான இனங்களிலிருந்து ஒரு சிறிய அசைவூட்டலை உருவாக்குவதாக கொள்வோம் .  இந்த அசைவூட்டம் OOP அடிப்படை கருத்துகளுடன் கன்னிகளில் எவ்வேறு பயன்படுத்தப் படுகின்றது என விளக்கமளிக்கின்றது.  பின்னர் இவற்றிலுள்ள வெவ்வேறு இனங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றது, அதன்பிறகு நிரல்தொடர் கட்டமைப்பின் வரசை கிராமத்தையும் விளக்கி கூறி கற்பிக்கின்றது.

பொருத்தமான செய்திகளை அனுப்புவதன் வாயிலாக பொருட்களை(Objects) நம்முடைய விருப்பப்படி நம்மால் உருவாக்க முடியும்  என காண்பிக்கின்றது .

Editing பகுதிக்கு வழிமுறை, செயலி, பண்பியல்புகள் ஆகியவற்றை தொடர்புடைய தாவலில் இலிருந்து பிடித்து இழுத்து வந்து விட முடியும். ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்க முடியும் அசைவூட்டு படங்களை இவ்வாறு உருவாக்கி நிரல்தொடரின் அடிப்படை கருத்துகளை அறிந்து கொள்ள (புரிந்து) முடியும்.  இந்த செய்திகள் பல்வேறு வாய்ப்புகளில் உள்ளன. நம்முடைய விருப்பப்படி அதன் மதிப்புகளை பெறமுடியும் .  அதன் மூலம் ஒரு முழுமையான குறிமுறைகளை பெறமுடியும் .

File => import => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் மேலும் உருவப்படம், ஒலி  கோப்புகளை இதில் பதிவிறக்கம்  செய்து இணைத்து கொள்ள முடியும்.  Edit=> Preference=> General=> Java Style=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி நாம் உருவாக்கிய நிரல்தொடரின் குறிமுறையை Java வில் பெறமுடியும்.

Alice ஆனது மிக எளிமையான , சுலபமான குறிமுறைகளை உருவாக்கும் கருவியாகும் இது ஒரு பயனாளரின் நண்பனாகவும் எவ்வெப்போதும் ஊடாடும் தன்மையுடனும் மிகச்சிறந்த கடுமையான வரைகலை தன்மையுடன் நிரல்தொடரை உருவாக்க உதவுகின்றது.  இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள www.Alice.org    ,  www.AliceProgramming.net  . என்ற வலைதளத்திற்கு செல்க,

மறுமொழி அளிக்கவும் »

ஆப்பிள் ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள்

உலகம் முழுக்கத் தமிழர்கள் பரவியிருந்தாலும் சில பயன்பாடுகளில் அல்லது செயல்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை இதுவரையில் இருந்துவருகின்றது . அதில் ஒன்று ஐபேட்.ஆகும் இதில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக்  பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
ஆயினும் தற்போது வெளியாகியுள்ள புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையின் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆப்பிள் ஐபேடில் படிக்கவும் அதிலிருந்து  மின்னஞ்சல் அனுப்பவும் முடியும்.
தற்போதைய   இந்தியச் சந்தையின் மதிப்பை உணர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனம், அதை அங்கீகரிக்கும் வகையில் தனது ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் இடம் பெற செய்துள்ளது .
.ஐபேடுகளில் தமிழ் சேவையைப் பெற வேண்டுமானால் புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமைக்கு  நம்முடைய ஐபேடை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக
.முதலில் சாதாரண முறையில் புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையை மேம்படுத்திட  முயலுக (முடியாவிட்டால் அடுத்த படிமுறைக்கு செல்க)
1. ஐடியூன், குயிக்டைம் என்பனபோன்ற ஆப்பிள் தொடர்பான அனைத்து பயன்பாட்டையும்  ஐபாடிலிருந்து நீக்கம் செய்திடுக.
2.பின்னர் மீண்டும் ஐடியூன்களின் புதிய பதிப்பை நிறுவுகை  செய்க.
3.அடுத்து ஃபயர்வால் நிறுவியிருந்தால் அதனையும்  ஐபாடிலிருந்து நீக்குக.
4.இப்போது மீண்டும் புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையை  மேம்படுத்துக.
இந்த இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறவில்லை எனில்  உங்களது இயக்கமுறைமை  பழையதாக இருக்கலாம். எனவே முதலில் அதனை மேம்படுத்துவதற்காக  ஐடியூன் 10.1ஐ ஐபாடில் நிறுவுகை செய்ய  வேண்டும். அதற்காக
1.உங்களது ஐபேடை ஒரு கணினியுடன் பொருத்துக.
2.பின்னர் ஐடியூனை இயக்குக, அதன்பின்னர் சாதனங்கள் (device) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
3.அதன் பின்னர் இயக்கமுறைமையின் மேம்படுத்துதல்(upgrade operating system) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

4.பின்னர் தோன்றிடும் திரையில் கூறப்படும் வழிமுறையை பின்பற்றுக.
இவ்வாறு இந்த இயக்கமுறைமையை ஐபேடில்  மேம்படுத்தபட்டபின்னர்,நம்முடைய தாய் மொழியில்  இணையத்தில் உலாவி மின்னஞ்சலை கையாள முடியும்.

இந்த புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையில்  புதிய அகராதி, விசைப்பலகை என்பனபேன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.  மேலும் இதில் தமிழ்,உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளை நாம் பயன்படுத்த முடியும்.

மறுமொழி அளிக்கவும் »

குறுக்கு பட்டி பட்டியலை நாமே உருவாக்கலாம்

பொதுவாக அனைத்து பயன்பாடுகளிலும் சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியவுடன் தோன்றும்  குறுக்குப்பட்டி பட்டியலை நாமே உருவாக்கலாம்  அதற்கான வழிமுறை பின்வருமாறு

இணையஉலாவியை இயங்கச்செய்து திரையில் தோன்றச்செய்க, இதன் திரையின் மேல்பகுதியில் URL முகவரியாக  http://tinyurl.com2lX555  என்றவாறு தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் தோன்றும் திரையில் Download File menu Tools 5.1.2 என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக, அதன்பின்னர் தோன்றும் பதிவிறக்க உரையாடல்பெட்டியில் சேமிப்பதற்கான இடத்தை தெரிவுசெய்து கொண்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பினை தெரிவு செய்து சொடுக்குக, இவ்வாறு செய்து பதிவிறக்கும்பணி முடிந்த பின்னர்  இந்த கோப்பை இடம்சுட்டியால் தெரிவுசெய்துபிடித்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக,

பின்னர் தோன்றும் installation என்ற திரையில்  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, அதன் பின்னர் இந்த நிறுவும் பணி முடிவடைந்ததும் தோன்றும் திரையில் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் இந்த பயன்பாட்டை இயக்க ஆரம்பிக்கவும் உடன் தோன்றும் திரையின் வலதுபுறபலகத்தில்  தயாராக இருக்கும் 22 வகையான கட்டளைகள் சூழ்நிலை பட்டியில் சேர்ப்பதற்கு ஏதுவாக பிரிதிபலிக்கும்

அவற்றில் copy name என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் இது விண்டோ எக்ஸ்புளோரர் திரையில் தெரிவு செய்யப்பட்டிருக்கும், கோப்புகளின் பெயர்களை இடைநிலைபலகைக்கு(clipboard) நகலெடுத்துவிடும்

அதன் பின்னர் இதனை வேர்டு போன்ற பயன்பாடுகளில் ஒட்டி கொள்ளமுடியும் மேலே கட்டளை பட்டையில் உள்ள file என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் கோப்பு பட்டியில் Apply changes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, அல்லது பச்சை வண்ண டிக் மார்க்கை தெரிவுசெய்க,

அதன்பின்னர் விண்டோ எக்ஸ்புளோரர் என்ற பயன்பாட்டை இயக்க ஆரம்பிக்கவும் பின்னர் இதன் மடிப்பகத்தை தெரிவுசெய்து  சொடுக்குக உடன் விரியும் கோப்புகளின்  பட்டியலில் ஏதேனும் ஒருகோப்பினை தெரிவுசெய்து Ctrl விசையை அழுத்தி பிடித்துகொண்டு இடம்சுட்டியின் இடதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் இடம்சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Copy name என்ற கட்டளையை  தெரிவுசெய்து சொடுக்குக, உடன் இந்த மடிப்பகத்தில் இருக்கும் நாம் தெரிவுசெய்திருந்த கோப்புகளின் பெயர்கள் இடைநிலைபலகைக்கு(clipboard)மாற்றப்பட்டுவிடும்

பின்னர் வேர்டை திறந்து கொள்க அதில் ctrl விசையை அழுத்தி கொண்டு v என்ற விசையை தட்டுக, உடன் நாம் தெரிவுசெய்த கோப்புகளின் பெயர்கள் தேவையான இடத்தில் ஒட்டப்பட்டுவிடும்,

மற்ற பயன்பாடுகளில் தோன்றும் சூழ்நிலைபட்டியலில் உள்ள தேவையற்ற கட்டளைகளை நீக்குவதற்கு commands of other application என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் குழுக்களின் பட்டியலில் இருந்து டிக் மார்க்கை நீக்கிவிடுக, பின்னர் கோப்பு பட்டியில் apply change என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

நோட் பேடு போன்ற பயன்பாடுகளில் கோப்புகளை திறப்பதற்கு file menu Tools என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக,பின்னர் பதிப்பிக்க எனும் பட்டியலை திறக்கவும் அதில்  Add command என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இடதுபுறபலகத்தில் உள்ள Add commandஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன்   New command என்பது பட்டியலில் சேர்க்கப்பட்டு அதன் பண்பியல்பு மட்டும் திரையின் இடது புற பலகத்தில் தோன்றும் அதில் new command என்பதற்கு பதிலாக open in notepad என தட்டச்சு செய்க, இதனுடைய பயன்பாட்டின் பண்பியல்பு பகுதியில் program என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் உலாவு(browse) எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில்  C:\windows\notepad.exe  என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் கோப்பு பட்டியலில் Apply changesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

இதன் பின்னர் விண்டோ எக்ஸ்புளோரர் திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் குறுக்குப்பட்டியில் புதியதாக சேர்த்த கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,

மறுமொழி அளிக்கவும் »

பேட்டரியை புத்தாக்கம் செய்யும் படிமுறை

லேப்டாப் எனும் மடிக்கணினி வாங்கி மிகப்பழையதாக ஆகும்போது அதன் தொடக்க இயக்கம் மெதுவாகவும் மற்றபயன்பாடுகளின் இயக்கமும் நத்தைபோன்று மிகமெதுவாகவே நடைபெறுகின்றது உடன் மின்சாரம் வழங்கும் பேட்டரியை மாற்றினால் சரியாகிவிடும் என ஆயிரகணக்கான பயனாளர்கள் கைவசமிருக்கும் பேட்டரியை தூக்கிஎறிந்துவிட்டு புதிய பேட்டரியை கொள்முதல் செய்து பொருத்திகொள்வார்கள் அவ்வாறு செய்யாமல் இந்த பேட்டரியைபின்வரும் படிமுறைகளை பின்பற்றி புத்தாக்கம் செய்து புதிய பேட்டரியை போன்றே மடிக்கணினியை பயன்படுத்தி கொள்ளமுடியும்


1.மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம்செய்க.
2.பின்னர் மின்தொடர்பை துண்டித்துவிட்டு மடிக்கணினியை பேட்டரியின் மின்சாரமுழுவதுமாக காலியாகும்வரை பயன்படுத்துக பேட்டரியின் மின்சாரம் முழுவதும் காலியாகும் நிலையில் நாம் செய்துவந்த செயல்களை சேமித்துகொண்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்க

3.இதேநிலையில் சுமார் 5 அல்லது ஆறுமணிநேரம் அதிகபட்சம் ஒரு இரவுமுழுவதும் மடிக்கணினியை ியக்காமலேயே வைத்திருந்து மீண்டும் மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம்செய்க.
இப்போது மடிக்கணினியை இயங்கசெய்து வழக்கமா்ன நம்முடைய செயலை செய்துவருக இதன்மூலம் மடிக்கணினியின் பேட்டரியின் திறன் புத்தாக்கம் பெறுகின்றது இவ்வாறான செயலை அவ்வப்போது செய்து பேட்டரியின் வாழ்நாளை கூடுதலாக்கி பயன்படுத்தமுடியும்

மறுமொழி அளிக்கவும் »

இன்ஞ்ஜெக்ட் கார்ட்ரிஜை சுத்தம் செய்து தொடர்ந்து பயன்படுத்துதல்

இன்ஞ்ஜெக்ட் பிரின்ட்டர் பயன்படுத்தவது அதிக செலவு பிடிக்ககூடிய செயலாகும், அதனால் பெரும்பாலானவர்கள் இதனை தவிர்த்துவேறுபிரின்டர்களையே நாடிச்செல்கின்றனர்,ஆயினும் தாட்களில் கருப்பு வௌ¢ளை மற்றும் வண்ணங்களில் எளிதாகவும் விரைவாகவும் அச்சிடுவதற்கு இந்த பிரிண்டர் மட்டுமே பயன்படுகின்றது,வாரம் ஒருமுறையாவது ஏதேனும் ஒரு வேலையை கொடுத்துகொண்டேஇருந்தால்தான் இன்ஞ்ஜெக்ட் பிரின்ட்டர் அச்சிடும் பணியை நன்றாக செய்துகொண்டிருக்கும்,அச்சிடாமல் நீண்டநாட்கள் சும்மா இருக்குமாறு விட்டுவிட்டால் இங்க் ஆனது நாஸிலின்  முனையில் காய்ந்து அச்சிடுவதை தடுத்துவிடும்,மிக முக்கியமாக கோடைகாலத்தில் இவ்வாறானதடங்கள் அடிக்கடி ஏற்படும்,இதனால் வேறுசில பாதிப்புகளும் ஏற்படவாய்ப்புள்ளது,பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி கார்ட்டிஜின் நாஸிலை சுத்தப்படுத்தி பயன்படுத்துங்கள்

வழிமுறை1: பிரிண்டரின் இயக்கத்தை நிறுத்தம்செய்து கார்ட்டிஜை பிரிண்டரின் ஹெட்டிலிருந்து கழட்டிவிடுக, கார்ட்டிஜை தலைகீழாக சுழற்றி நாஸிலை பார்த்தால் அதில் தூசுகள் அல்லது தூசுகளுடன் இங்க்கும் சேர்ந்து காய்ந்துபோய் இங்க் வரும் வழியை தடுத்து அடைத்து கொண்டிருப்பதை காணலாம், உலர்ந்த இயர் பட்டின் துணையுடன் நாஸிலை சுத்தப்படுத்தவும்,பின்னர் வெந்நீரில் (அல்லது ஐஸோபுரோஃபைல் ஆல்காலின்)ஈரமாக்கப்பட்ட மற்றொரு இயர் பட்டினால் மீண்டும் நன்கு நாஸிலை சுத்தப்படுத்துக,இவ்வாறு சுத்தப்படுத்தும்போது நாஸில் மீது அதிக அழுத்தம் கொடுக்கவேண்டாம் இந்த நிலையில் கார்ட்டிஜை பிரிண்டரின் ஹெட்டில் பொருத்தி டெஸ்ட் பிரிண்ட் செய்து பார்க்கவும் அச்சிடும்பணிசரியாக இல்லையெனில் வழிமுறை 2ஐ தொடர்ந்து பின்பற்றவும்,

வழிமுறை2: கார்ட்டிஜின் நாஸில் பகுதியை மட்டும் பெட்ரி டிஸ் அல்லது வெந்நீர் உள்ள கிண்ணத்தில் ஓரிரு மணித்துளிகள் மூழ்கும்படிவைத்திருக்கவும், கார்ட்டிஜ் முழுவதும் மூழ்கும்படிவைத்திருந்தால் சர்கூயட்டிரி ஸ்டிரிப்பை வீணாக்கி கார்ட்டிரிஜை பயனற்ற தாக்கிவிடும், இந்நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ள நாஸிலை சுற்றி இங்க் பரவும் இது ஒரு நல்ல அறிகுறியாகும் சிறிது நேரம் கழித்து கார்ட்டிரிஜை வெந்நீரிலிருந்து எடுத்து குலுக்கவும் நாஸிலின் இங்க் வரும்வழியில் இங்க்ஆனது காய்ந்திருந்தால் இளக்கி சுலபமாக செல்லும்படி செய்கின்றது, இந்த நிலையில் கார்ட்டிஜை பிரிண்டரின் ஹெட்டில் பொருத்தி டெஸ்ட் பிரிண்ட் செய்து பார்க்கவும் அச்சிடும் பணிசரியாக இல்லையெனில் வழிமுறை 3ஐ தொடர்ந்து பின்பற்றவும்,

வழிமுறை3: கார்ட்டிரிஜினுடைய நாஸிலின்முனையை உலர்ந்த சுத்தமான பருத்திதுணியில் வைத்துஅழுத்தி தேய்க்கவும் மிச்சம் மிகுதியாக காய்ந்தஇங்க்மற்றும் தூசுகள் துணியினால் துடைத்தெறியபட்டுவிடும் சிறிதளவு இங்க் துணியில் பரவும் இது ஒரு நல்ல அறிகுறியாகும்,இதுபோன்று தேய்க்கும் பணியை சுமார் பத்துநிமிடம் செய்யவும்,இந்த நிலையில் கார்ட்டிரிஜை பிரிண்டரின் ஹெட்டில் பொருத்தி டெஸ்ட் பிரிண்ட் செய்து பார்க்கவும் அச்சிடும்பணிசரியாக இல்லையெனில் வழிமுறை4ஐ தொடர்ந்து பின்பற்றவும்,

வழிமுறை4: தண்ணீர் குழாய்வழியாக சிறிதளவிற்கு வெந்நீர் கொட்டும்படிசெய்து கார்ட்டிரிஜின் நாஸில் பகுதியை மட்டும் கொட்டும்வெந்நீரில் வைத்திருக்கவும் முழுவது மன்று, சர்கூயட் ரி ஸ்டிரிப்பும் அன்று,இதனால் இங்க் வரும் வழிகாய்ந்து அடைத்துகொண்டிருந்தால் இளகும்படிச் செய்து இங்க் கசிந்து வெளியேறும்  இந்த நிலையில் கார்ட்டிஜை பிரிண்டரின் ஹெட்டில் பொருத்தி டெஸ்ட் பிரிண்ட் செய்து பார்க்கவும் அச்சிடும்பணிசரியாக இல்லையெனில் வழிமுறை5ஐ தொடர்ந்து பின்பற்றவும்,

வழிமுறை5: சிறிது தட்டையான கிண்ணத்தில் சுத்தமான கலப்படமற்ற ஐஸோபுரோஃபைல் ஆல்கஹாலை நிரப்பி கார்ட்டிரிஜின் நாஸில் மூழ்கும் அளவிற்கு மட்டும் (சர்கூயட்டிரி ஸ்டிரிப்பைஅன்று) வைத்திருக்கவும் இது இங்க் வரும் பாதையை கரைத்து சுத்தமாக்கி விடுகின்றது இந்த நிலையில் கார்ட்டிஜை பிரிண்டரின் ஹெட்டில் பொருத்தி டெஸ்ட் பிரிண்ட் செய்து பார்க்கவும் ,

இந்த ஐஸோபுரோஃபைல் ஆல்கஹாலைஹார்டுவேர் ஸ்டோர் அல்லது மருந்துகடைகளில் இருந்து கலப்படமற்றதாக பார்த்து வாங்கவும் சுத்தமானதா என சரிபார்க்க ஒருதுளிமட்டும் உள்ளங்கையில் விட்டு சிறிது தேய்த்தவுடன் ஆவியாகி கையில் எதுவும் இருக்காது, வழிமுறை3 இல் துணியை இந்த ஆல்லகஹாலில் மூழ்கவைத்து காரட்டிரிஜின் நாஸிலை தேய்க்கவும், மேலே கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி புதிய கார்ட்டிரிஜ்வாங்கும் செலவை மிச்சப்படுத்துங்கள்,இந்த வழிமுறைகள் பிரிண்டர் ஹெடர் மற்றும் இங்க் டேங்க் ஒன்றாகஇணைக்கப்டிருந்தால் மட்டுமே உதவும்,

மறுமொழி அளிக்கவும் »

சி ,சி++ , பிஹெச்பி – களை இனி இணையத்தின் மூலம் இயக்கலாம்.

கணினியின் ஏதேனுமொருமொழியில் நன்றாக புரோகிராம் எழுதுவதற்கு படிக்க வேண்டும் என்ற அவா எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும் ஆனால் அதற்குரிய மென்பொருளை நாம் செல்லும் இடம் எல்லாம் நிறுவி செயல்படுத்தமுடியாத நிலையுள்ளது அதனால் பலர் இன்னும் இந்த துறையை  தொடாமல் இருக்கின்றனர் இனி அவ்வாறானவர்கள் தயங்கி தடுமாறாமல் C , C++ , PHP போன்ற மொழிகளை இணையத்தின் மூலம் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும்  இயக்கி பழகலாம் என்ற வசதி தற்போது வந்துள்ளது

படம் 1

இதற்காக கூடுதலாக எந்தவொரு மென்பொருளையும் நம்முடைய கணினியில் நிறுவத்தேவையில்லை  இதற்கு  உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது. அதன்முகவரி : http://codepad.orgஆகும்

இந்த தளத்திற்கு சென்று நாம் படம் 1 -ல் உள்ளதுபோன்று எந்த மொழி என்பதை தெரிவுசெய்துகொண்டு  அதற்கான நிரல் தொடர்களை தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை அழுத்துக.

படம் 2

அடுத்து வரும் படம் 2-ல் உள்ளவாறான திரையில் நம்முடைய நிரல்தொடரை இயக்கி வரும் Output உம் சேர்ந்து கிடைக்கின்றது
இதன் பின் நாம் இந்த நிரல் தொடரை நாம்விரும்பரியவாறு மாறுதல் செய்து தேவையானால் மறுபடியும் இயக்கிப் பாழகலாம். இன்று முன்னனியில் இருக்கும் C, PHP, Ruby, Python, C++ என்பனபோன்ற கணினிமொழிகளை இந்த இணையதளத்தின் மூலம் இயக்கி பழகமுடியும் இதற்கென தனியாக எந்தவொரு மென்பொருளும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.