மிக நீண்ட நேரம் கணினியின் முன் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு முதுகுவலி, மணிகட்டில்வலி, கண்ணீற்கு அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
என்னதான் எர்கணாமிக்ஸின்படி அமரும் நாற்காலி,, கணினியைவைக்கும் மேஜை ஆகியவற்றின் அமைப்பை சரியாக அமைத்தாலும் கணினியில் நீண்ட நேரம்பணிபுரிவது உள்ளத்திற்கு சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் இதனால் கணினியில் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்திதிறனும் குறைய ஏதுவாகிவிடுகிறது,
இதனை தவிர்க்க Work rave என்ற பயன்பாடு பேருதவியாக இருக்கிறது,
லினக்ஸ் மற்றும் வின்டோதளத்தில் இயங்ககூடிய இந்த Work rave 1.9.4 என்பதை <http://www.workrave.org> என்ற வலை தளத்திலிருந்து இதனை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
இதனை கட்டளைவரிகள் மூலமாகவோ உள்நுழைவு மூலமாகவோ இயக்கமுடியும்.
இது இடைமுகம் செய்யமுடியாத சாளரமாக மூன்று நேரங்காட்டியுடன் (படம்-1) காட்சியளிக்கும், கைபோன்ற படத்துடன் உள்ள நேரம்காட்டி சிறுஇடை வேளையாகும், காபிகப்புடன் இருப்பது சிறிது ஒய்வுகொடுக்க வேண்டி குறிப்பிடுவதாகும்.
கதவு போன்றபகுதி தினமும் கணினியில் பணிபுரியவேண்டிய கால அளவை குறிப்பதாகும்.
இந்த Work rave ஆனது ஐந்து அளபுருக்களை நம்முடைய பணியில் சுட்டிகாட்டுகிறது.
சிறிய இடைவேளை (Micro break) (படம்-2)ஆனது காலஇடைவெளி மற்றும் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை செய்யப்படவேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
ஒய்வு இடைவேளை (Rest break) இது காலஇடைவெளி மற்றும் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை செய்யப்படவேண்டும் என வழிகாட்டுகிறது.
Daily limit ஆனது தினமும் எவ்வளவு நேரம் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறது,
இந்த பயன்பாடானது ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை 30நொடி சிறிய இடைவேளையை விடவேண்டுமா என மேல்மீட்பு பட்டிமூலம் கேட்கும்.
அவ்வாறே ஒவ்வொரு 45நிமிடத்திற்கு ஒரு முறை 10நிமிட நேரம் ஒய்வு இடைவேளைவிடவா என கேட்டுநிற்கும்.
ஒருநாளின்முடிவில்4மணிநேர பணிக்கு பிறகு இன்று இத்துடன் பணியை முடித்துக்கொள்ளலாமா என கேட்டுநிற்கும். இந்த மூன்றுவகையான Timers அமைவுகளில் விவரம் தெரிந்தால் மட்டும் மாறுதல் செய்யலாம், இல்லையெனில் இயல்பு நிலையில் இருப்பதை அப்படியே விட்டுவிடவும்.
இந்த பயன்பாடானது கணினியின் இயக்கத்தின்போது குறிப்பிட்ட இடைவேளைவரை கண்டிப்பாக விசைப்பலகையும்(keyboard), சுட்டியையும்(mouse) செயல்படாது(Off)முடக்கிவிடும். குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானகவே இவைகள் இயங்க அனுமதித்துவிடும்.
இவ்வளவு கடுமையான நடவடிக்கை வேண்டாமெனில் இந்த இடைவேளையில் கணினியானது மாற்று ஏற்பாடாக சிறிய உடற்பயிற்சியை திரையில் பிரதிபலிக்க செய்யும் நாமும் இதனை தொடர்ந்துபயன்படுத்தினால் நம்முடைய உடலும், உள்ளமும், புத்துணர்ச்சிபெற்று சுறுசுறுப்பாக அடுத்த கணினி இயக்கத்திற்கு தயாராகவோம்.
இந்த கால இடைவெளி கணக்கிடானது நாம் கணினியில் பணியை ஆரம்பித்தவுடன் கவுண்டன் ஆகிவிடும், விசைபலகையிலும் சுட்டியையும் பயன்படுத்தும் நேரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் வலை இணைப்பின் மூலமாககூட இந்த Work rave பயன்பாட்டை இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்.
சுட்டியின் பொத்தானை 2முறை சொடுக்கி தோன்றும் பட்டியலில் ”Statistics” என்பதை தெரிவுசெய்க உடன் Statistics என்ற பகுதி திரையில் (படம-3)
தோன்றும் அதில்
1. எவ்வளவு நேரம் சுட்டியை பயன்படுத்தினீர்கள் என Mouse usage பகுதியிலும்
2. எவ்வளவு தூரம் சுட்டி பயனம்செய்தது, (நகர்ந்து சென்றது) என்ற Mouse movement பகுதியிலும்
3. இந்த சுட்டி நகரத்துலில் பயனுள்ள நகர்வு எவ்வளவு தூரம் என Effective mouse movement பகுதியிலும்
4. சுட்டியின் பொத்தானை எத்தனை முறை சொடுக்கினோம் என்பதை Mouse button click பகுதியிலும்
5¢, விசைப்பலகையில் எத்தனை விசைளை எவ்வளவு முறை தட்டினோம் என்பதை Keystrokes என்ற பகுதிகளிலும்
அட இவ்வளவு பணி நாம் செய்தோமோ என ஆச்சிரியம்படும்படி தெளிவான புள்ளிவிவரங்கள் கிடைக்கும்
இவ்வாறான இந்த பயன்பாட்டை பயன்படுத்தி கணினி இயக்கத்தின்போது அன்றுமலர்ந்த மலர்போன்று உங்கள் உடலையும், உள்ளத்தையும், சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.




























