தொகுப்புக்காக கணினிமொழி(computer language)

கோபால் எனும் 53 வயதான மொழி

53 வயதான ஐக்கிய அமெரிக்காவின் பெண்டகனில் உருவான தற்போதைய கணினி மொழிகளுக்கு எல்லாம் தாத்தாவான கோபால் எனும் கணினிமொழியானது இது ஒரு இறந்துபோன மொழி இறக்கும்தருவாயிலிருக்கும் மொழி  பழங்காலத்திய கருப்புவெள்ளை திரையில்மட்டுமே பயன்படுத்தமுடியும்  தற்போதைய வரைகலைதிரையில் பயன்படுத்தமுடியாது என்றவாறெல்லாம் இதனை குறைகூறி ஒதுக்கிதள்ளியுள்ளனர்

கணினிக்கு 0,1 ஆகிய இரண்டு எண்கள்மட்டுமே தெரியும் இதனைகொண்டு கணினிக்கான கட்டளைவரிகளை உருவாக்குவது மிகச்சிரமமான பணியாக இருந்த காலகட்டத்தில் முதன்முதலாக மனிதனுக்கு மட்டும் புரியும் ஆங்கிலமொழியில் கணினிக்கான கட்டளைவரிகளை உருவாக்கிய மொழிதான இந்த கோபால் எனும் கணினிமொழியாகும்

ஆயினும் டாஸ் இயக்கமுறைமையில் துளையிட்ட அட்டை ,காகிதத்தாலான நாடா ,மிகப்பெரிய அளவிலான கணினி ஆகியவற்றில் மட்டுமே இது இயங்ககூடியது என்று  குறைவாக இதனை  மதிப்பிட வேண்டாம்  தற்போதைய புதியதொழில்நுட்பங்களான மேகக்கணினியிலும்(Cloud computer) செல்லிடத்துடத்து பேசியிலும் பயன்படுத்துவதற்கேற்ப தன்னை தகவமைத்து வளர்ந்து வருவதால்  தற்போதும் லட்சகணக்கான மக்கள் இதன் கட்டளைவரிகளை கொண்டு மிகமுக்கியமான செயல்களை செயல்படுத்தி கட்டுபடுத்துவதற்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மையாகும்    தொலைபேசியானது செல்லிடத்து பேசியாகவும் பேரகராதி பேரகராதிஇணையதளமாக மாறியதைபோன்று  கோபால் என்ற மொழியும் தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை தகவமைத்துகொணடு ஒருசராசரி மனிதனின் அன்றாட தேவைகள்  இதன்மூலமே நிறைவுசெய்யுமாறு இது இன்றைக்கும் இருந்துவருகின்றது

இன்றைக்கு நாம் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் நம்முடைய வங்கிகணக்கில் இருக்கும் தொகையில் நமக்க தேவையானஅளவுமட்டும பணத்தை எடுக்க பயன்படுத்துகின்றோமே ஏட்டி எம் எனும் இயந்திரம் செயல்படுவதற்கான கட்டளைவரிகள், நீண்டதூரத்திற்கு பயனம் செய்வதற்கான தொடர்வண்டியை பயன்படுத்துவதற்காக முன்கூட்டியே பயனச்சீட்டு பதிவுசெய்கினறோமே அதற்கான கட்டளைவரிகள் , கப்பல்போக்குவரத்தை கட்டுபடுத்துவதற்கான கட்டளைவரிகள், மருத்துமனையின் நிருவாக்ததை கட்டுபடுத்துவதற்கான கட்டளைவரிகள்,  முக்கிய வியாபார பொருட்களின் விற்பணைமையங்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளைவரிகள், தங்குமிடம் உணவகங்களை  நிருவகிப்பதற்கான கட்டளைவரிகள் என இந்த கோபால் மொழியின் பயன்  இன்றும் எங்கெங்கும் வியாபித்துள்ளது என்பதே  உண்மை நிலையாகும்  தற்போதைய அனைத்து தளங்களிலும் செயல்படக்கூடிய வகையில் ஜாவா  .நெட் ஆகியவை ஒருங்கினைந்ததாக இந்த கோபால் மொழியானது   இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்துவரும் ஒருமொழியாக  வளர்ந்துவருகின்றது

மறுமொழி அளிக்கவும் »

இப்போது கிடைக்கின்றதுC++0x என்ற புதிய நிரல்தொடர்எழுதும் மொழி

இது சி++ என்ற  மொழியின் அடுத்த படிமுறையாக வெளியிடப்படுகின்றது  தற்போது இதனுடைய இறுதிபெயர் சி++11 ஆக இருக்குமென தெரியவருகின்றது இதன் பயன்பின்வருமாறு 1.நிரல்தொடரின் ஆரம்பநிலையிலேயே ஒருமாறியின் வகையெதுவென மொழிமாற்றி நிர்ணயம்செய்துவிடுகின்றது உதாரணமாக

int x = 3;

auto y = x;

என்ற C++0x  மொழியின் குறிமுறையில்   autoஎன்ற திறவுச்சொல்லின் உதவியுடன்   y என்பது  intஎன தீர்மானித்துவிடுகின்றது

2.

vector<int> vec;

vec.push_back( 10 );

vec.push_back( 20 );

for (int &i : vec )

{

cout << i;

}

என்ற C++0x  மொழியின் குறிமுறையில் வீச்சை அடிப்படையாக கொண்ட for எனும் மடக்கியை (range-based for loops )இந்த C++0x  மொழி எளிதாக கையாளுகின்றது

3. nullptr  போன்ற மொழிவெளிப்பாடு(language expressiveness)மேம்படுத்தபட்டுள்ளது

3.இதில் புதிய செயலியின் இலக்கணம்(function syntax) பயன்படுத்தபட்டுள்ளது

4.இதில் Lambda என்ற செயலி் (function)பயன்படுத்தபட்டுள்ளது

5.பல்லிழையை(multithreading) ஆதரிக்கும் புதிய சி++நினைவக மாதிரி இதில் உள்ளது

6.இதில் .hashtables என்பன போன்ற செந்தர நூலகம் (standard library)மேம்படுத்தபட்டுள்ளது

7. Apache போன்ற பல்வேறு மொழிமாற்றிகளும்(cxompiler) இந்த மொழியை ஆதரி்க்கின்றது

மேலும் இதனைபற்றிய விவரம் அறிந்துகொள்ள http://en.wikipedia.org/wiki/C%2B%2B0x என்றஇணையதளத்திற்கு செல்க.

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.