தொகுப்புக்காக இணையம்& இணையதளம்(web or internet)

சொடுக்குதல் செய்யாமலேயே ஒரு இணைப்பு பாதுகாப்பானதாவென கூறமுடியுமா

ஏதேனுமொரு உரைத்தொகுப்பிற்கு இடையில் குறிப்பிட்ட போலியானதொரு இணைய தளத்தினை தொடர்பு கொள்வதற்கான இணைப்பினை வழங்கியிருப்பார்கள் நாமும் அது போலியானதா உண்மையானதா என சரிபார்க்காமல் அதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியை சொடுக்கிடுவோம்  உடன் அவ்விணைப்பானது நம்மை போலியான இணையதளத்திற்கு  அழைத்து செல்லும் இவ்வாறு  அவ்விணைப்பை சொடுக்காமலே அது போலியானதா நம்பகமானதாஎன அறிந்துகொள்வதற்கு URLVoid , (இதற்கான முகவரி http://www.urlvoid.com/ ), MyWOT (இதற்கான முகவரி http://www.mywot.com/)  போன்ற Link Scanner பயன்பாட்டு கருவிகள் பயன்படுகின்றன

 

உரைத்தொகுப்பிற்கு இடையில் உள்ள ஒரு இணைப்பிணை தெரிவுசெய்து சொடுக்கு வதற்குமுன் அதன்மீது  இப்பயன்பாட்டு கருவிகளில் இணைப்பு முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் அதனை வருடி குறிப்பிட்ட இணைப்பு பாதுகாப்பானதா அல்லது பிஷ்ஷிங் தளமாவென காண்பித்துவிடும்

 

 

 

மறுமொழி அளிக்கவும் »

இணைய உலாவலின்போது தேவையற்ற இணையதளங்களை தடைசெய்திட

நம்முடைய கணினியில் தேவையற்ற இணையதளங்களை தோன்றிடாமல் தடைசெய்வதற்கு உதவும்Focal Filter. என்ற(படம்-1) மென்பொருள் மிகபயனுள்ளதாக விளங்குகின்றது

படம்-1

 முதலில் இந்த Focal Filter. என்ற மென்பொருளைwww.focalfilter.com  என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிகொள்க

படம்-2

பிறகு விண்டோவின் start என்ற பட்டியை தோன்றசெய்து அதிலுள்ள Search box -ல் Focal Filter என தட்டச்சு செய்து(படம்-2)  உள்ளீட்டு விசையை அழுத்துக

பின்னர் விரியும் பட்டியில் Focal Filter என்ற(படம்-2)  மென்பொருளை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயற்படுத்துக.

படம்-3

 அதன்பின்னர் விரியும் திரையில் Edit My Site List என்ற (படம்-3) வாய்ப்பிற்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் தவிர்க்கபடவேண்டிய இணையதளங்களின் பட்டியலில் கூடுதலாக தேவையான இணையதளங்களின் முகவரிகளை சேர்த்துகொண்டு saveஎன்ற (படம்-4) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4

 பின்னர் விரியும் திரையில் block for என்பதற்கருகிலிருக்கும் காலஅளவை தேவையானவாறு அமைத்துகொண்டு  Block My Site List  என்ற(படம்-3)  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் நம்முடைய இணையஉலாவியின் செயலை நிறுத்தி மறுதொடக்கம் செய்க.

படம்-5

 இதே Focal Filter  உரையாடல் பெட்டியில் Block again அல்லது close (படம்-5) ஆகிய இரண்டில் ஒரு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் தடைசெய்யபட்ட இணையதளத்தினை மீண்டும் பார்வையிடலாம்

மறுமொழி அளிக்கவும் »

2011 ஆம் ஆண்டில் குறும்பு செய்பவர்(hackers)ஆல் முடக்கபட்ட இணையதளங்கள்

1.Motion Hosting Server என்ற இணையதளத்தை 25.09.2011 -ல் TiGER-M@TE என்ற குறும்பு செய்பவர்(hackers) ஆல்முடக்கபட்டு அதன் சேவைஅனைத்தும் முடங்கிபோனது

2.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் யூட்யூப் இணையபக்கம்  சென்றஆண்டின் கடைசியில் முடங்கிபோனதுடன் அதன் முகப்பு பக்கத்தில் I DID NOTHING WRONG I SIMPLY SIGNED INTO MY ACCOUNT THAT I MADE IN 2006 என்றசெய்தியை பிரதிபலிக்கும்படி செய்துள்ளனர்

3.நம்முடைய இந்திய அரசின் சிபிஐ(Central Bureau of Investigation) இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆனது  பாகிஸ்தானின் Pakistan Cyber Army என்ற குறும்பு செய்பவர்(hackers) குழுவால் முடக்கபட்டு முகப்பு பக்கத்தில் P*k*stanZin*ab**d . என்ற செய்தியை பிரதிபலிக்கும்படி செய்துள்ளனர்

4.பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தின் இணையதளம் கூட Zombie_Ksa என்ற குறும்பு செய்பவர்(hackers)ஆல் முடக்கபட்டு So I am here to request you to go out there and help the poor, needy and hungry  என்ற செய்தியை அதன் முகப்பு பக்கத்தில் தலைமைநீதிபதிக்கு விட்டு சென்றுள்ளனர்

5.உலகநாடுகளின் மாமன்றமான யூனெஸ்கோ வின் இணையதளபக்கத்தையும்  Fatal Error Crew என்ற  குறும்பு செய்பவர்(hackers) குழு முடக்கியுள்ளது

6.நம்முடைய நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன் இணையதளத்தின் முகப்பு பக்கம் பாகிஸ்தானின் KhantastiC haX0r .  என்ற குறும்பு செய்பவர்(hackers)குழுவால் முடக்கபட்டது

மறுமொழி அளிக்கவும் »

ஜினோம் 3 ஐ மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்

நாம் Gnome 2 ல் பயன்படுத்தி வந்த பல வசதிகள் தற்போது Gnome 3-ல்  பயன்படுத்த சிறிது கடினமாகவே இருக்கும். அதில் முக்கியமானவை

1. power off: Gnome -ன்பயனர் கட்டளை பட்டியில் ALT விசையை அழுத்தினால் மட்டுமே  கணினியின் செயலை நிறுத்தம் செய்யமுடியும். அல்லது கணினி தற்காலிக செயலிழப்பு நிலையிலேயே இருக்கும்.
2. Window list: Gnome பலகத்தில் முன்பு பார்த்த தற்போது இயங்கி கொண்டிருக்கும் பயன்பாடுகளின் பட்டியல் Gnome 3 ல் இருக்காது.
3. APP menu: அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் தெரிவு செய்வதற்காக முன்பு இருந்த Gnome APP menu தற்போது இல்லாமல் இருக்கும்.

இவை மட்டுமல்லாமல் இதே போன்று வேறு  பல பயன்பாடுகளும் தற்போதையை புதிய Gnome 3 ல் இல்லாமல் இருக்கும்.

ஆனால் இவற்றை தற்போது தேவை எனில் எளிதில் செயல்படுத்த முடியும். அதற்காகவே Gnome 3 Shell Extensions என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Gnome Shell Extensions தளத்தை நாம் பார்வையிடும் போது Gnome ஐ பயன்படுத்தியவண்ணம் இருக்க வேண்டும். அல்லது அந்த Extension தற்போதைய இயங்குதளத்தில் செயல்படாது என்று கூறிவிடும்.

ஒவ்வொரு Extensions பக்கத்திலும் இடது பக்கம் அப்பயன்பாட்டை Enable/Disable செய்வதற்கு ஏற்ற வகையில் ON/OFF பொத்தான்கள் உள்ளன. இவற்றுள் ON என்பதை செயல்படுத்தினால் பயன்பாட்டை நிறுவ வேண்டுமா என GNOME கேட்கும். அதிலிருந்து நிறுவுக என்பதை தெரிவு செய்தால் உடனடியாக பயன்பாடு நிறுவபட்டுவிடும்.  இதில்

1.Alternative Status Menu:பயனர் கட்டளை பட்டியில் power off எங்கே என்று தேடுபவர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி எளிதாக power off செய்ய முடியும்.  இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/5/alternative-status-menu/ என்பதாகும்

2.Dock:பல விருப்பத்தேர்வு பயன்பாடுகளை  திரையிலேயே  dock bar போன்ற கருவிபட்டை போன்று வைத்திருக்க இப்பயன்பாடு உதவுகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/17/dock/ என்பதாகும்

3.Favorites Menu:நம்முடைய விருப்பத்தேர்வு பயன்பாடுகளை இதனுடைய பலகத்தில் கட்டளை பட்டியாக வைத்திருக்க இப்பயன்பாடு உதகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/115/favorites-menu/ என்பதாகும்

4.Music Integration:பல்வேறுவகையான இசைபயன்பாடுகளை நாம் பயன்படுத்தும் போது அவற்றை எளிதாக கட்டுப்படுத்த இது உதவுகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/30/music-integration/ என்பதாகும்

5.Places Status Indicator: கணினியில் உள்ள drives, directories போன்றவற்றை எளிதாக பட்டியலிட இப்பயன்பாடு உதவுகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/8/places-status-indicator/ என்பதாகும்

6.Window Icon List:தற்போது இயங்கி வரும் பயன்பாடுகளின் பட்டியலை icons களாக Gnome panel ல் பட்டியலிட இப்பயன்பாடு உதவுகிறது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/70/window-icon-list/ என்பதாகும்

7.Window List:மேலே குறிப்பிட்டது போன்றே தற்போது இயங்கி வரும் பயன்பாடுகளின் பட்டியலை icons களாக Gnome panel ல் பட்டியலிட இப்பயன்பாடு உதவுகிறது.     இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/25/window-list/ என்பதாகும்

இவை மட்டுமல்லாமல் இதே போன்ற அனைத்து பயன்பாடுகளையும் நாம் விரும்பும் கூடுதல் பயன்பாடுகளையும் இந்த  Gnome 3 Shell Extensions https://extensions.gnome.org/ என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிட்டு தேவைப்படுவனவற்றை மட்டும் நிறுவி கொள்க.

மறுமொழி அளிக்கவும் »

வழிகாட்டிமூலம்தேவையான வசதியை ஒரு இணையதள அல்லது வலைபூவின் பக்கத்தில் இணைக்கும் செயல்ஒரு அறிமுகம்

வழிகாட்டிமூலம் (wizard)தேவையான வசதியை ஐந்தே நிமிடங்களில் ஒரு இணையதள  அல்லது வலைபூவின் பக்கத்தில் இணைக்கமுடியும் அவ்வாறு இணைப்பதன்மூலம் மேலும் ஏராளமான பார்வையாளர்களை நம்முடைய  இணையதளம்  அல்லது வலைபூவிற்கு வருமாறு கவர்ந்திழுக்கமுடியும் இதற்காக http://www.buildmypinnedsite.com/  என்ற தளம் மிகச்சுலபமான வழியை நமக்கு அளிக்கின்றது   பெரும்பாலான பிரபலமான இணையதளங்கள் இதனை ஏற்கனவே செய்து முடித்து விட்டன முதலில்  இந்த தளத்திற்கு சென்று நம்முடைய  இணைப்புமுகவரியை அளித்தால் போதும்  உடன் Pinning Wizard  என்ற வழிகாட்டியானது ஒரேயொரு வரிகுறிமுறையை மட்டும் உருவாக்கி விடுகின்றது பின்னர் நாம் அதனை நகலெடுத்து நம்முடைய இணாயதளத்தின் HTML உடன் ஒட்டிகொள்ளவேண்டும்

இதற்காக முதலில் இந்த இணையதளத்திற்கு சென்று Pinning Wizard  என்ற வழிகாட்டியை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Pinning Wizard  என்ற வழிகாட்டிதிரையில் நம்முடைய இணையதளம் அல்லது வலைபூவின் முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை தெரிவுசெய்து சொடுக்குக

 

பின்னர் உருவாகும் ஒருவரி குறிமுறையை நகலெடுத்து நம்முடைய இணைய தளத்தின் அல்லது வலைபூவின் HTML <body> tag பகுதியில்  ஒட்டிகொள்க பின்னர் ஏராளமான பார்வையாளர்களுடன் இடைமுகம் செய்வதற்கான வசதிகளை நம்முடைய இணைய தளத்தில் அல்லது வலைபூவில் நம்முடைய கற்பனைகேற்றவாறு தெரிவுசெய்து சேர்த்து  கொள்க

மறுமொழி அளிக்கவும் »

இணைய இணைப்பில்லாமலேயே செல்லிடத்து பேசிமூலம் முகநூல் (Facebook)என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளமுடியும்

நம்மிடம் நேக்கியா1100 என்ற பழைய செல்லிடத்து பேசிதான்உள்ளது  அதில் தூரத்திலுள்ளவர்களுடன் மட்டும் பேசமுடியுமே தவிர இணையஉலாவி போன்று பயன்படுத்திட முடியாது நாம் இருக்கும் இடம் GPRS/3G என்பன போன்ற எந்தவொரு இணைப்பு வசதியும் எட்டிபார்க்காத மிகச்சிறிய குக்கிராம் என எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் கவலையே படவேண்டாம் *325# அல்லது*fbk# என்று நம்முடைய செல்லிடத்து பேசியில் தொடர்புகொண்டால் போதும் முகநூல்(facebook)எனும் சமூகவலைதளத்துடன்  இந்தியாவில் மட்டும் நம்முடைய செல்லிடத்து பேசிமூலம் தொடர்புகொள்ளமுடியும்

இதற்காக முதலில் நம்முடைய செல்லிடத்து பேசியில் *325# அல்லது*fbk# என்றவாறு தெரிவுசெய்து   அழுத்தியவுடன்  தோன்றிடும் திரையில் நம்முடைய பயனாளரின் பெயர் கடவுச்  சொற்களை உள்ளீடு செய்க. அதன்பின்னர்  முகநூலின் எண்களை அடிப்படையாக கொண்ட கட்டளைகளை செயற்படுத்தி கொள்ளமுடியும் மேலும் நம்முடைய நண்பர்களுடன் அரட்டை அடிக்கமுடியும் புதியநண்பர்களை நம்முடைய நண்பர்களின் பட்டியலில் சேர்த்துகொள்ளமுடியும்

இந்தியாவில் எர்டெல், ஏர்செல், ஐடியா, டோகோமோ ஆகிய நிறுவனத்தின் சேவையை பயன்படுத்திடும்  எவரும் இந்த வசதியை பெறமுடியும்  இந்த இணைய இணைப்பில்லாத முகநூல் தொடர்பு சேவையானது  நாளொன்றிற்கு ரூபாய் 1.00 என்ற கட்டணத்தில் அளிக்கபடுகின்றது  மேலும் விவரம் அறிந்துகொள்ள http://www.labnol.org/india/search-google-on-mobile-via-sms/5459/   என்ற இணையதளத்திற்கு செல்க

மறுமொழி அளிக்கவும் »

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம்

முதலில் இணையதளம் (website) என்பது என்னவென தெரிந்துகொள்வோம் இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை கொண்ட தகவல் களம் ஆகும் . இதில் பொதுவான தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, தயார்செய்யப்படும் பொருட்களின் சந்தையாகவோ அல்லது நம்முடைய கருத்துகளோ ஆகிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தகவல் பரிமாற்றம்தான் இந்த இணையதளத்தின் அடிப்படை பயனாகும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் ஆகும். மேற்கண்ட எல்லா வகைதகவல்களிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் அடிப்படையாக இருக்கின்றது.

களப்பெயர்(domain name),இணைய சேவையாளர்(Web server), கற்றையின் அளவு (bandwidth),html ஆகியவையே இணைய தளத்தின் அதன் அடிப்படையாகும்

நம்மூரில் சாலையோரங்களிலும்  ஒரு வடம் (cable) போன்று அதாவது கண்ணாடி இழையினான கம்பியை(optical fibre cable(OFC)) பதிக்கிறார்களே அந்த வட(cable)இணைப்பு தொலைத்தொடர்பு துறையின்முதுகெலும்பாகும். இந்த வடஇணைப்புகளின் மூலம் தொலைத்தொடர்பு துறையானது இந்தியா முழுதும் உள்ள அனைத்து நகரங்களையும் இணைத்து. அதனடிப்படையில் இந்திய தொலைதொடர்புதுறை இயங்கிவருகிறது. இவ்வாறே இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வெளிநாட்டிற்கும் ஒரு கடல் வழி வடம் உண்டு.

இந்த தொலைதொடர்பு வடங்களை அடிப்படையாக  கொண்டுதான் நாம் தற்போது பயன்படுத்திடும் இணையம் இயங்குகிறது..

இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்கள் பிஎஸ்என்எல்வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் அவ்வாறே அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்களும் At &T வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் . இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக அகல்கற்றை இணையஇணைப்பு பெற்று ஒருநாட்டு மக்கள் மற்றொருநாட்டவருடன் இணையத்தின் வாயிலாக தமக்குள் தொடர்பு கொள்ள அனுமதிக்கபடுகின்றார்கள்.

நாம் microsoft என்று நம்முடைய இணைய உலாவியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் www.microsoft.com என்ற  அக்குறிப்பிட்ட இணைய பக்கத்தை நம்முடைய கணினியினுடைய திரையில் பிரதிபலிக்க செய்கின்றது

இந்த தகவலை நம்முடைய உலாவியில் வழங்குவதற்காக ஈருடல் ஓருயிர் போல ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்றநிலையில் செயல்படும். இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருஅமைப்பு நமக்கு பயன்படுகின்றன..

இவற்றுள் டிஎன்எஸ் வழங்கிதான் மிகப்பெரிய பணியை செய்கின்றது. அதாவது நாம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியானது இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து நம்மை மிகச்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றது

இந்த DNS என்பது Domain Name System என்ற பெயரின் சுருக்கு பெயராகும் இது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைக்கபட்டிருக்கும் கணினிகள், சேவைகள், போன்ற அனைத்து இணைய அமைப்பிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இதில் பங்கேற்கும்  ஒவ்வொரு கண்னிக்கும் ஒதுக்கப்படும் களப்பெயர்களுடன் (Domain) இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுமட்டுமின்றி கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமமாகும் அதனை தவிர்த்து குழப்பம் எதுவுமில்லாமல் ஒரேமாதிரியான ஒழுங்குமுறையுடன் இந்த பெயர்கள் இருந்தால் தொடர்புகொள்வதற்கு எளிதாக இருக்கும் உதாரணமாக பெயரின் பின்னொட்டு ஆனது..com என இருந்தால் வியாரதொடர்புடையன .edu என இருந்தால் கல்வி தொடர்புடையன என சுலபமாக அறிந்து கொள்ள ஏதுவாகின்றது.

அதனடிப்படையில் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் இந்த களப் பெயர்களை,இணைய உலாவியில் உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்க ளாக மொழிபெயர்க்கபடுகின்றது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilcomputer.com என்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.

இணையத்தினை பயன்படுத்தும் அனைவரும் பேண்ட்வித் என்ற சொல்லை பற்றி கேள்விபட்டிருக்கலாம் அல்லது அறிந்திருக்கலாம்.

நம்மால் பயன்படுத்தபடும் இணையத்தளங்கள் அனைத்திற்கும் இந்த பேண்ட்வித் தான் அடிப்படை தேவையாகும்.

நம்மூரில் வசிப்பவர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அகல்கற்றை சேவைஇணைப்பை பெற்றிருந்தார். ஒருசில மாதம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு தீவிர நெஞ்சுவலி வரும்படி ஆகிவிட்டது சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென 5 மடங்கு அதிகமாக வந்துவிட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வினவியபோது ’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்காக எங்களால் அளிக்கபடும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் இந்த கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அதிகமாக பயன்படுத்தியதை பற்றி தமக்கு புரியுமாறு விளக்கிகூறும்படி கோட்டுகொண்டார்

அதாவது நீங்கள் பயன்படுத்திய பேண்ட்வித்தை உறுதியளித்த வரையறையைவிட தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் கட்டணம் வந்துள்ளது என்றார்கள்..

பேண்ட்வித் என்பது நாம் செலவழித்த இணையம். அதாவது ஒரு இணையதளத்தினை துவங்கும்போது அந்த இணைய தளத்தில் உள்ள படங்கள், காணொளிகள், உரைகள் என அனைத்தும் நம்முடைய கணினியில் தோன்றுவதற்காக அவையனைத்தும் நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்யப்படும். அந்த தரவிறக்கம் செய்யப்படும் அளவே பேண்ட்வித் ஆகும் .

உதாரணமாக ஒரு செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்திலுள்ள ஒரு படம் 1 எம்பி இருக்கிறதெனில்,. அதை நம்முடைய கணினியில் ஒரு முறை பார்த்தால் 1 எம்பி பேண்ட்வித் செலவாகிறது என்ற பொருளாகும். இதே படத்தினை 100 முறை பார்த்தால் 100 எம்பி பேண்ட்வித் செலவாகின்றது. ஒரு மாதத்திற்கு 30 X 100 X1 எம்பி = 3000 எம்பி அதாவது 3 ஜிபி ஆகின்றது. மாதம் ஒன்றிற்கு 2 ஜிபி அளவு பயன்படுத்துவதற்கு  ரூபாய்99 என்ற இணையக்கட்டணம் திட்டத்தில் அனுமதி பெற்றிருந்தால் மீதமுள்ள 1 ஜிபிக்கு நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவேண்டும்.

மறுமொழி அளிக்கவும் »

புதியவர்களுக்கு வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (TCP/ IP )

வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP)) என்பது வலைத்தளம் (Internet) தொடர்புடையதாகும். இந்த வலைத்தளமானது கணினியுடன் தொடர்புடையதாகும்  கணினியினுடைய செயலானது  பைனரி எனப்படும் இருமஎண்களின் அடிப்படையில் இயங்ககூடியதாகும்   இந்த பைனரி எனப்படும் இருமஎண்களானது மின்னோட்டம் உள்ள (on)நிலை  மின்னோட்டம் இல்லா( Off  நிலை ஆகிய இருமின்னோட்டநிலைகளை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது  நம்முடைய இரண்டு கைகளிலும் சேர்த்து பத்து விரல்கள் உள்ளதால் தான் நாம் பத்தை அடிப்படையாக கொண்ட தசம எண்முறையை (Decimal)கையாளுகின்றோம்.
அவ்வாறே மின்னோட்டத்திலும் I,(on)O (off) என இரண்டு நிலைகள் உள்ளதால் இரண்டை அடிப்படையாகக் கொண்ட பைனரி முறையை கணினியானது கையாளுகின்றது. இந்த இரண்டே எண்களை வைத்து எவ்வளவு பெரிய எண்களையும் எளிதாகவும் விரைவாகவும் எழுத முடிகிறது.எண்கள், எழுத்துக்கள், படங்கள் ஆகிய அனைத்தும் இந்த இரும எண்களின் அடிப்படையில் அதனைகொணடு  கணக்கிட ,எழுத, வாசிக்க, வரைய, பத்திரப் படுத்த என்பனபோன்ற செயல்கள் கணினியால் பயன் படுத்தப் படுகிறது. இந்த இரும(binary) எண்களைத்தான் டிஜிட்டல் என்கிறோம். தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த டிஜிட்டல் சிக்னல் தான் அடிப்படையாக பயன் படுகிறது. இந்த டிஜிட்டல் சிக்னலானது  கம்பி அல்லது கம்பி இல்லாத முறையில் உலகின் பல இடங்களுக்கும் அலைபரப்பப் படுகிறது. இந்த தகவல் பரிமாற்ற முறையை ஒழுங்கு படுத்துவதுதான் வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP))
தகவல் பரிமாற்றத்தின் ஆரம்ப நிலையில் மார்க்கோனியின் ரேடியோ தந்தியின் மூலம் மோர்ஸின் குறியீட்டு முறையை பயன் படுத்தி தகவல்கள் அனுப்ப பட்டு வந்தது. அதிலும் குறுகிய ஒலி, நீள ஒலி ஆகிய இரண்டு ஒலி நிலைகளை பயன் படுத்தி செய்திகளை வெகுதொலைவுகளுக்கு அனுப்பிவைத்தனர்.
அவ்வாறு அனுப்பும் போது ஒரு சொல் அனுப்பி முடித்தபின் பெற்றுக் கொண்டவர் Roger என்ற சொல்லின் முதலெழுத்தாகிய “R ”என்ற ஆங்கில எழுத்தை அனுப்புவார்கள்.அதாவது. அந்த “Roger” சொல்லின் விளக்கம் “I have received all of the last transmission” என்ற தகவல்ஆகும் அதாவது”நீங்கள் அனுப்பிய கடைசிச் செய்தியை முழுவதுமாக பெற்றுக் கொண்டேன் ” என்று பொருளாகும். பெறுபவரிடமிருந்து இந்த “R ”என்ற குறியீடு கிடைத்தபின் தான் அடுத்த சொல்லை அனுப்பவர் அனுப்புவார். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பியதையே மீண்டும் அனுப்புவார். இதனால் தகவல் பரிமாற்றம் முழு உத்திரவாதத்துடன் நடைபெற்றது.
இதே போன்ற ஒருமுறைதான் இன்றைய இணைய தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுகிறது. நமக்கு வேண்டிய தகவல் எங்கோ ஒரு மூலையில் இருந்தும், பல சேயாளர் கணினிகளில் இருந்தும், பல தளங்களை கடந்து நம்முடைய கணினிக்கு வருவதற்குள் தகவல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏராளமான அளவில் உள்ளன.அதிலும் இந்த பைனரி எண்களுக்கான சிக்னல்கள் எளிதில் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் அனுப்பிய தகவல் இலக்கு நோக்கி சரியாக சென்றடைந்ததா என உறுதி செய்வதற்கான ஏற்பாடுதான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP). ஆகும் இதன் மூலம் தகவல் கண்டிப்பாக அதற்கான இலக்கிற்கு சென்ற சேரும் என்ற நம்மபகத்தண்மை இணையத்தினை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படுகின்றது
நமக்கு வரவேண்டிய தகவல்கள் எழுத்து, எண்கள், படம் ,ஆகியவை இரும எண்களாக மாற்றப் பட்டு தொடர்ச்சியாக நமக்கு அனுப்பப் படுகிறது. அவ்வாறு அனுப்பப்படு முன் இந்த எண்கள் முதலில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அனுப்பப் படுகிறது.குறிப்பிட்ட சிறு கால (மைக்ரோ செகண்டுகளில்) இடைவெளியிலுள்ள பைனரிகளை சேர்த்து சிறு பொட்டலங்களாகவும் அந்த பொட்டலங்களில் உள்ள மொத்த எண்களின் கூட்டுத்தொகையும் கடைசியில் அந்த பொட்டலங்களுடன் அனுப்படுகிறது.
உதாரணமாக Tamil என்ற வார்த்தை அனுப்பப் படுவதாகக் கொள்வோம் .இந்த எழுத்துக்களின் பைனரி வடிவம் முறையே 84,97,109,105,108. ஆகவே 84,97,109,105,108,என்ற எண்கள் அனுப்பப் பட்டு , இவைகளின் கூட்டுத்தொகையான 503 என்ற எண்ணும் அதனுடன் சேர்த்து அனுப்பப் படுகிறது.  அந்த தகவலை பெறும் இடத்தில் அந்த பொட்டலங்களில் உள்ள எண்கள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப் பட்டு பின்னர் அவற்றின் கூட்டுத்தோகையும் கணக்கிடப் பட்டு அந்த பொட்டலங்களுடன் வந்த கூட்டுத்தொகை எண்ணுடன் ஒப்பிடப் பட்டு சரிபார்க்கப் படுகிறது. இவ்வாறு சரிபார்த்தவுடன் ஒப்புதல் சிக்னல் அனுப்பப் பட்டு அடுத்த தகவல் பெறத் தயாராகுகிறது.  இதில் எந்த இடத்தில் தவறு ஏற்பட்டாலும் தவறு என்ற செய்தி வந்துவிடும் நம்பகமான முழுமையான தகவல் பரிமாற்றத்திற்கு உத்திரவாதம் தான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP).ஆகும்

மறுமொழி அளிக்கவும் »

சுயமான பயிற்சி பெறுவதற்கான தளங்கள்

Expert Village: இதன் இணையதளமுகவரி http://www.expertvillage.com/ என்பதாகும் இது எந்தவொரு செயலையும் மற்றவர்களின் துனையில்லாமல் நாமே  எவ்வாறு செய்வது என சுயமாக கற்றுக்கொள்வதற்கான மிகப்பெரிய இணையதளமாகும் இந்த தளத்தில் ஏராளமான தலைப்புகளில் ஆயிரக்கணக்கான ஒளிஒலிகாட்சியில் பயிற்சிகள் உள்ளன

  LearnThat.com: இதன் இணையதளமுகவரி http://www.learnthat.com/ என்பதாகும் இந்ததளமானது வியாபாரம், நிதி ,வீட்டு பராமரிப்பு, கணினி, இதர தெழில்நுட்பம் போன்றவைகளுக்கான பயிற்சியை பெறுவதற்கு உதவுகின்றது

Koonji: இதன் இணையதளமுகவரி http://www.koonji.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் எதனையும் மிகசுலபமாக அறிந்துகொள்ளவும் தெரிந்தகொள்ளவும் முடியும்

 SuTree: இதன் இணையதளமுகவரி http://www.sutree.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நமக்குதெரியாததை தெரிந்துகொள்ளவும் நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவும் முடியும் .

 VideoJug: இதன் இணையதளமுகவரி http://www.videojug.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பின்னல்தொடர்பான அனைத்து வகை  பயிற்சிகளையும் காட்சியாக கண்ணால் கண்டு செயல்பயிற்சி பெறமுடியும்

 FindTutorials.com: இதன் இணையதளமுகவரி http://www.findtutorials.com/ என்பதாகும் இந்ததளமானது கல்வி, பொழுதுபோக்கு ,சிறுதிட்டங்களை உருவாக்குதல் என்பன போன்றஅனைத்துவகை பயிற்சிகளையும் பெறஉதவுகின்றது

 TrickLife: இதன் இணையதளமுகவரி என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நம்முடைய வாழ்க்கையை உடல்நலத்தை மனநலத்தை மேம்படுத்திகொள்ள முடியும்

  Instructables: இதன் இணையதளமுகவரி http://www.tricklife.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பயனாளர் விரும்பும் எந்த வகைபயிற்சியையும் இதில் உள்ள ஒலிஒளி காட்சி  மூலம் பெறமுடியும்

 MyTutorials: இதன் இணையதளமுகவரி http://www.mytutorials.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம்  நாம் விரும்பும் பயிற்சியை தேடி பெற்று கற்றுக்கொள்ள முடியும்

 Tutorial Ninjas:இதன் இணையதளமுகவரிhttp://tutorialninjas.net/  என்பதாகும் இந்ததளத்தின் மூலம்  சேமிப்பு தொடர்பான அனைத்து பயிற்சி படிப்புகளும்  பெறமுடியும்

 Hodder Education: இதன் இணையதளமுகவரி http://www.hoddereducation.co.uk/SelfLearning என்பதாகும் இந்ததளத்தின் மூலம் விளையாட்டு உடல்நலம் இசை போன்ற வகைகளில் சுயமாக கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகளை பெறமுடியும்

 Sofia: இதன் இணையதளமுகவரி http://sofia.fhda.edu/index.htm என்பதாகும் இந்ததளத்தின் மூலம் ஆழ்ந்த அறிவுபூர்வமான கருத்துபரிமாற்றங்கள் இலவசமாக  பெறமுடியும்  நிரல்தொடர் எழுதுவதற்கான பயிற்சி, அச்சுக்கோற்பு பயிற்சி,புவியியல் தொடர்பான படிப்புகள் இத்தளத்தில் அதிக அளவில்  கிடைக்கின்றன

 I Can Learn Anything:இதன் இணையதளமுகவரி http://icanlearnanything.com/ என்பதாகும் இதுஒரு கட்டண தளமாகும் ஆயினும் சமூகம் தொடர்பான ஏராளமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சி சாதனங்கள்  இங்கு கிடைக்கின்றன

 Wikiversity: இதன் இணையதளமுகவரி http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page  என்பதாகும் இந்ததளத்தில் 10,000  அதிகமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சிகள் கட்டளைகள் இலவசமாக கிடைக்கின்றன

மறுமொழி அளிக்கவும் »

நமக்குத்தெரியாத கூகுளின் வசதிகள்

பின்வருபவை பெரும்பாலானவர்களுக்கும் தெரியாத கூகுளில்உள்ள மிகமுக்கிய  வசதிகளாகும்

1.Definitions என்ற வசதிமூலம் நமக்கு தெரியாத நம்மால் புரிந்து கொள்ளமுடியாத எந்தவொரு சொல்லிற்குமான அர்த்தத்தை அல்லது  வரையரையை அறிந்துகொள்ளமுடியும்

2.Local search என்ற வசதியிலுள்ள http://local.google.com/என்றஇணைய பக்கத்தின் மூலம் ஒருகுறிப்பிட்ட இடம் எங்குஉள்ளது எந்த வழியே சென்றால் உடனடியாக அவ்விடத்திற்கு சென்றுசேரமுடியும் அவ்விடத்தின் முகவரி யாது என்பன போன்ற  விவரங்களை நாம் அறியாத நமக்குஅறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும் போது இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளமுடியும்

3.Phone number  lookup என்ற வசதிமூலம் ஒரு தொலைபேசிஎண்ணையும் அதனுடைய பகுதி குறியீட்டெண்ணையும் குறிப்பிட்டால் அந்த தொலைபேசி எண்ணிற்கான முழு முகவரியையும் அறிந்து கொள்ளலாம்

4.Find weather and movies என்ற வசதிமூலம் weather அல்லது  movies  என்பதை தட்டச்சு செய்து குறிப்பிட்ட இடத்தின் தபால்குறியீட்டு எண்ணை உள்ளீடுசெய்தால் உடன் அவ்விடத்தின் நடப்பு வானிலையையும் வரும் நான்கு நாட்களின் வானிலையையும் அல்லது அங்கு திரையிடபட்ட படத்தின் பெயரையும் அறிந்து கொள்ளலாம்

5.Track airline flight and packages  என்ற வசதிமூலம் விமானத்தின் பெயரையும் அதனுடைய குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்தால் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த விமானம் எப்போது வந்துசேரும்  என்பனபோன்ற விவரங்களை அறிந்துகொள்ளமுடியும்

 6.Translate என்ற வசதியிலுள்ள http://www.google.com/language_toolsஎன்ற கருவியின் மூலம் குறிப்பிட்ட உரையை அல்லது ஒரு முழுஇணையபக்கத்திலுள்ள தகவல்களை அது எந்த மொழியிலிருந்தாலும் நாம் விரும்பும் எந்தவொருமொழிக்கும் மொழிமாற்றம் செய்து அறிந்து கொள்ளமுடியும்

7.link என்ற வசதிமூலம் நம்முடைய இணையபக்கத்துடன் அல்லது வலைபூவுடன் எந்த உரல்களெல்லாம் இணைப்பில் உள்ளன என தெரிந்து கொள்ளலாம்  உதாரணமாக link:http://www.vikupficwa.wordpress.com   என்று உள்ளீடு செய்தால் இந்த வலைபூவுடன் இணைக்க பட்ட இணையபக்கங்களின முழுவிவரம் திரையில் தோன்றிடும்

8.Find PDF என்ற வசதிமூலம் “dell xps” filetype:pdf என்றவாறு கோப்பின் வகையாக  தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்தினால்  இணையத்தில் தேடிடும்போது கிடைத்திடுபவைகளில் பிடிஎஃப் கோப்பை மட்டும் திரையில் பிரதிபலிக்கசெய்யும்

9.Calculator என்ற வசதிமூலம் இதே உலாவியை கணக்கீடு செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.