தொகுப்புக்காக அறிவுரைகள்(Tips)

,புதியவர்களுக்கு கணினியில் ஆலோசனைகள்

 

1.1விசைப்பலகையை பயன்படுத்தி கணினியின் திரை இயக்கத்தை  நிறுத்தம் செய்ய முடியும்

இதற்காக dekisoft Monitor Off Utilityஎன்ற பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது. இந்த கருவியின் உதவியால் விசைப்பலகையில் ஏதேனுமொரு HotKey ஐ அமைப்பதன் மூலம் விசைப்பலகையை பயன்படுத்தி கணினியின் திரை இயக்கத்தைநிறுத்தம் செய்ய முடியும் அதுமட்டுமல்லாது  கணினியின் திரை இயக்கத்தை Standby ஆகவும் ,screen saver ஆகவும், பாதுகாப்பு கவசமாகவும் இதனை உபயோகபடுத்தி கொள்ளமுடியும் இதனால் நம்முடைய மின்சார பயன்பாட்டின் செலவு மிச்சபடுத்தபடுகின்றது   இதனை http://www.dekisoft.com/download.htm  என்ற இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்

1.2 கம்பியில்லா வலைபின்னலை   Wireless Network Watcher என்ற பயன்பாட்டின் மூலம் பாதுகாத்திடலாம்

 

நம்முடைய கம்பியில்லா வலைபின்னலில் யார்யாரெல்லாம் இணைந்துள்ளனர் எந்தெந்த சாதனங்களெல்லாம்  இதே கம்பியில்லா வலைபின்னலில் இணைக்க பட்டுள்ளன என அறிந்து கொள்வதற்கு Wireless Network Watcher என்ற பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது இது ஒரு கம்பியில்லா வலைபின்னலில்இணைந்துள்ள ஒவ்வொருவரின் IP முகவரி, ஒவ்வொரு சாதனத்தின் பெயர்  மற்றும் அவைகளின் இதர தகவல்களையும்  திரையில் பிரதிபலிக்க செய்கின்றது  அதுமட்டுமல்லாது கம்பியில்லா வலைபின்னலின் பின்புலத்தில் இணைப்பிலுள்ள அனைத்தையும் வருடி ஏதேனும் புதிய சாதனம் இணைக்கபட்டால் அல்லது புதியவர் இணைந்தால் உடன் அந்த தகவலை நம்முடைய கணினியின் திரையில் பிரதிபலிக்க செய்கின்றது  அதனால் நமக்கு தெரியாமல் எந்தவொரு சாதனமும் அல்லது எந்தவொரு நபரும் நம்முடைய கம்பியில்லா வலைபின்னலில் அத்துமீறி இணையமுடியாது அவ்வாறு இணைந்தால் அந்த தகவலை நமக்கு காட்டி கொடுத்துவிடும்      இதனை http://www.nirsoft.net/utils/wireless_network_watcher.html  என்ற இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்

1.3 கூகிள் என்றதேடுபொறியின் privacy policyஎன்பது வசதியாஅல்லது இது spy policy வசதியா

  கூகிள் என்ற தேடுபொறி நிறுவனமானது தம்முடைய தனித்தனியான 64   privacy policy வசதிகளை  நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக இவைகளை தம்முடைய மற்ற தரவுகளின் சேவையோடு சேர்த்து இணைத்துவிட்டு  இந்த privacy policy வசதிகள் தற்போது மிக பாதுகாப்பாக இருக்கின்றன என இந்நிறுவனம் கூறுகின்றது அதுமட்டு மல்லாது பயனாளருக்கு இதனால் புதிய அனுபவம் வளரும் என்ற பொய்யான தகவலையும் தருகின்றது மேலும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஒட்டு மொத்தமாக சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கி அதன்மூலம் தம்முடைய வருவாயை பெருக்கி கொள்வதில்தான் குறியாக உள்ளதேயொழிய தனிநபரின் சுதந்திரம் பறிபோவதைபற்றியோ அத்தகவல்களை கொண்டு விலை பேசுவதை பற்றியோ அந்நிறுவனத்திற்கு கவலையில்லை ஆனால் இவ்வாறான இந்நிறுவனத்தின் செயல் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களால் காண்பதற்கான  இந்தprivacy policy  வசதியானது spy policy  வசதியாக போனதுதான் உண்மை நிலையாகும்

 

1.4       மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விஸ்டா (32-bit பதிப்பில்) என்ற இயக்க முறைமையில் GodMode என்ற மறைக்க பட்ட வசதியை இணைத்திருந்தது இதன்மூலம் பயனாளர் ஒருவர் ஒரு சாளரத்திற்குள் அனைத்து அமைவுகளையும் திரையில் காணவும் தமக்கேற்றவாறு அதனை சரிசெய்து அமைத்துகொள்ளவும் முடியும்  இதே மறைக்க பட்ட வசதி விண்டோ 7 -ல்(32-bit பதிப்பில்) கூட உள்ளது  இதனை செயல்படுத்துவதற்கான குறுக்குவழி செயலை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உருவாக்கி பயன்படுத்தி கொள்க.

கணினியில் எங்கு பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அங்கு புதிய மடிப்பகம் ஒன்றை உருவாக்குக பின்னர் GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என்ற உரையை  தவறில்லாமல் அந்த மடிப்பகத்திற்குள் உள்ளீடு செய்து ஒருகோப்பாக உருமாற்றி கொண்டு அந்த மடிப்பகத்திற்கு  புதியபெயரை அமைத்து கோப்பினை சேமித்திடுக உடன் இதற்கான குறுக்கு வழிவிசையும்  GodMode என்ற சாளரம் ஒன்றும்   திரையில் தோன்றிடும்

1.5 மால்வேர் தாக்குதலிலிருந்து கணினியை பாதுகாத்திட தற்போது உலகில் இலட்சகணக்கான கணினி இந்த மால்வேர் பாதிப்பால் செயலிழந்துள்ளன அதிலிருந்து நம்முடைய கணினியை பாதுகாத்து கொள்வதற்கு http://www.quickheal.com/chkdns.asp  என்ற  இணைப்பை சொடுக்கி நம்முடைய கணினி மால்வேரினால் பாதிக்காமல் பாதுகாப்பாக உள்ளதாவென  சரிபார்த்து கொள்க நானும் என்னுடைய கணினியை சரிபார்த்தேன் பாதுகாப்பாக உள்ளதாக காம்பித்தது

1.6 ஜிமெயில் சேவையில் வெளியில் செல்லும் மின்னஞ்சலில் Star  ,labels ஆகியவற்றை சேர்த்து இணைத்து அனுப்பும் வசதி புதியதாக அறிமுகபடுத்தபட்டுள்ளது இதன்மூலம் பிற்காலங்களில் அம்மின்னஞ்சல் சரியாக போய்சேர்ந்ததா அதற்கு பதிலேதும் கிடைக்கபட்டதா என்பனபோன்ற தகவலை சரிபார்த்திட முடியும்

மறுமொழி அளிக்கவும் »

கணினியின் வித்தியாசமான தகவல்குறிப்புகள்

கணினி  தகவல்குறிப்பு1.பின்வரும் வரியை ஏதேனுமொரு இணைய உலாவியினுடைய காலி முகவரி பட்டையில் தவறில்லாமல் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்து உடன் அந்த இணைய உலாவி சாளரமானது  நாட்டியமாடுவதை போன்று  அசைந்தாடுவதை காணலாம்

javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i–) {for (j = n; j > 0; j–) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)

 கணினி  தகவல்குறிப்பு2 Start=>run =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பிறகு தோன்றிடும் திரையில் regeditஎன தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

 பின்னர் தோன்றிடும் திரையில் HKEY_CURRENT_USER என்பதையும் பின்   control panel என்ற மடிப்பகத்தையும்  அதன்பின் desktopஎன்ற மடிப்பகத்தையும்  மிகச்சரியாக தெரிவுசெய்து சொடுக்குக

 உடன் வலதுபுறம்  registry setting ஐ பார்வைக்கு திரையில் பிரதிபலிக்கும் அதில்  menu show delay என்பதை தெரிவுசெய்துசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

  பின்னர்விரியும் சூழ்நிலைபட்டியில் modify என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரி யும் திரையில் edit string option —–> default value data is 400  என்றிருப்பதை காணலாம்

  இதில் 400 என்பதை 000 என மாற்றி யமைத்தபின் கணினியின் இயக்கத்தை நிறுத்தி  மறு தொடக்கம் செய்திடுக இப்போது கணினியின் தொடக்கம் மிகவிரைவாக இருப்பதை காணலாம்  

கணினி  தகவல்குறிப்பு3 நம்முடைய கணினியில் செயல்படும் எதிர்நச்சுநிரல் பயன்பாடு சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடுவதற்கு நோட்பேடில் X50!P%@AP[4\PZX54(P^)7CC)7}EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* என்ற கட்டளை வரிகளை மிகச்சரியாக உள்ளீடு செய்து eicar.com  என்ற பெயரில் சேமித்திட முயற்சி  செய்திடுக உடன்  நாம் பயன்படுத்திடும் எதிர்நச்சுநிரல் பயன்பாடு சரியாக செயல்படுகின்றதெனில் இந்த செயலை நிறுத்திவிடும் சரியாக செயல்படவில்லையெனில் நம்முடைய செயலை அனுமதித்துவிடும்

கணினி  தகவல்குறிப்புகணினியினுடைய கோப்பகத்தில்(directory) con என்ற பெயரில் மடிப்பகத்தை (folder) உருவாக்கிட முயற்சிசெய்க உங்களுடைய முயற்சி தோல்வியில் தான் முடிவடையும்.ஏன் என உங்களுக்கு காரணம் ஏதேனும் தெரிந்தால் கூறுங்களேன் இதனை படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

கணினி  தகவல்குறிப்பு5 நோட்பேடில் எழுத்துருவின் அளவை 72 என அமைத்து கொண்டு  எழுத்துரு வகையை Windings என்பதாக தெரிவுசெய்து கொண்டு பெரிய எழுத்தில் TAMIL COMPUTER என்றவாறு தட்டச்சு செய்திடுக  உடன் என்ன நடைபெறுகின்றது என அறிந்துகொள்க 

கணினி  தகவல்குறிப்பு6நம்முடைய கணினியினுடைய திரைத்தோற்றத்தைPrtSc என்ற விசையை அழுத்தி  படம்பிடித்தபின் பெயின்ட் என்ற பயன்பாட்டினை திறந்து Ctrl + V என்றவாறு விசைகளை அழுத்துவதன் மூலம் ஒட்டி கொள்க பின்னர் இந்த படத்தை Jpegவடிவமைப்பில் சேமித்து கொண்டு இதனை திரையின் வால்பேப்பராக திறந்து கொள்க அதன்பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் சூழ்நிலைபட்டியில்  arrange icons by => Hide desktop icon =>என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் பணிப்பட்டை(taskbar).இணைப்பை விடுவித்திடுக  இப்போது கணினித்திரை முன்பு போலவே இருக்கும் ஆனால் எதையும் செயல்படுத்திட முடியாது

கணினி தகவல்குறிப்பு7 எம்எஸ் வேர்டை திறந்து கொள்க அதில்  =Rand(200,99)என தவறில்லாமல் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் என்ன நடைபெறுகின்றது என அறிந்துகொள்க 

கணினி  தகவல்குறிப்பு 8. மால்வேர் பாதிப்பெதுவும் நம்முடைய கணினியிலிருந்தால் இணைய உலாவியில் http://www.quickheal.com/chkdns.asp என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் நம்முடைய கணினியை இந்த பயன்பாடு ஆய்வுசெய்து பாதிப்பு இருக்கின்றதா இல்லையா என கூறிவிடும்.

மறுமொழி அளிக்கவும் »

கணினியில் பயன்படுத்த வேண்டிய சில யுக்திகள்(tricks)

1.நீக்கம் செய்யமுடியாத அல்லது படிக்கமுடியாத மடிப்பகத்தை உருவாக்கமுடியும்

அதற்காக விசைப்பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் வரிசையில்லாமல் விருப்ப பட்டவைகளை அழுத்துக உடன் அதற்கான அஸ்கி எழுத்துரு  திரையில் தோன்றிடும் இதனை நம்மால் படிக்கமுடியாது

இவ்வாறான வழியில் மடிப்பகத்தின் பெயரை உருவாக்குவதற்கு டாஸ் திரைக்கு செல்க அதில்  md (alt+1+9+4) என்றவாறு தட்டச்சு செய்து கொள்க இங்கு  mdஎன்பது மடிப்பகத்தை உருவாக்கு என்ற கட்டளையாகும் பின்னர் விண்டோ திரையில் இந்த மடிப்பகத்தை  திறக்க முயன்றால் திறக்கவும் முடியாது இந்த மடிப்பகத்தை கண்ணால் பார்க்கவும் முடியாது

இதன்பின்னர் மீண்டும் டாஸ் திரைக்கு சென்று  ren (alt+1+9+4) என்றவாறு தட்டச்சு செய்து கொள்க இங்கு ren என்பது மடிப்பகத்திற்கு வேறுபெயரிடு என்ற கட்டளையாகும் விசைப்பலகையில் எண்கள் இல்லாத வேறு எழுத்துகளை கொண்டு பெயரினை தட்டச்சு செய்தபின் விண்டோதிரையில் அந்த மடிப்பக்கத்தை கண்ணால் காணமுடியும் திறக்கவும் முடியும்

2.FAT பாகப்பிரிவினையிலிருந்து NTFS க்கு உருமாற்றம் செய்வதற்கான  படிமுறைகள்

விண்டோ 7 எனில் Start=>All programs=>Accessaries=>Command prompt=>  அல்லது விண்டோ எக்ஸ்பி எனில் Start=> run => Cmd =>Ok=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் CONVERT D:/FS:NTFS என்று தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் FAT பாகப்பிரிவினையிலிருந்து NTFS க்கு உருமாற்றம் ஆகிவிடும்

3.விண்டோவில் பெயரில்லாத கோப்பினையும் மடிப்பகத்தையும் உருவாக்குதல்

தேவையான கோப்பினை அல்லது மடிப்பகத்தை தெரிவுசெய்து அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் rename என்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விசைப் பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் 0160 ஆகிய விசைகளை அழுத்தி தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் குறிப்பிட்ட கோப்பு அல்லது மடிப்பகமானது  ஓரெழுத்திற்கான காலியிடமுள்ள  பெயரில்லாததாகிவிடும்  

மேலும் கூடுதலாக மற்றொரு பெயரில்லாத கோப்பினை உருவாக்கிடதேவையான கோப்பினை அல்லது மடிப்பகத்தை தெரிவுசெய்து அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் rename என்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விசைப்பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் 0160 ஆகிய விசைகளை அழுத்தி தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக  சிறிதுநேரம் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்து மீண்டும்

பின்னர்விசைப்பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் 0160 ஆகிய விசைகளை அழுத்தி தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக   உடன்குறிப்பிட்ட கோப்பு அல்லது மடிப்பகமானது  ஈரெழுத்திற்கான காலியிடமுள்ள  பெயரில்லாததாகிவிடும்  இவ்வாறே மூன்றெழுத்து நான்கெழுத்து காலியிடமுள்ள பெயரில்லாத கோப்பிற்கும் செயற்படுத்தி கொள்க

4விண்டோ எக்ஸ்பியில்  Netmeeting ஐ நிறுவதல்   இது ஒரு அதிச செய்தியாக இருக்கலாம் ஆனால் இந்த பயன்பாடு விண்டோ எக்ஸ்பியில் ஏற்கனவே நிறுவப்பட்டே வருகின்றது அதனை செயலுக்கு கொண்டுவருவதே நம்முடைய பணியாகும் அதற்காகStart=> run => Cmd =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் Conf என்று தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் இந்த Netmeeting என்ற  செயல்பட தயாராகிவிடும்

5.Ctrl+Alt+Del என்ற கட்டளையை பயன்படுத்தி நிரந்தரமாக நீக்கம் செய்யபட்ட கோப்புகளை திரும்பபெறுதல் ஒருசில நேரங்களில் ஏதேனுமொரு கோப்பினை நீக்கம் செய்தபிறகு அடடா தவறுதலாக நீக்கம் செய்தவிட்டோமே அதனை எவ்வாறு திரும்ப பெறுவதுஎன தவித்திடுவோம் அவ்வாறான நிலையில் Kissass Undelete என்ற பயன்பாடு   தவறுதலாக நீக்கம் செய்யபட்ட கோப்புகளை மீளப்பெறுவதற்கு உதவுகின்றது அவ்வாறு தவறுதலாக நீக்கம் செய்யபட்ட பகுதியில் வேறு புதிய கோப்பு எதுவும் உருவாக்கி அந்த காலி நினைவகத்தை அபகரிக்காமல் இருக்கவேண்டும் என்பதே இந்த பயன்பாட்டினுடைய அடிப்படை நிபந்தனையாகும்

முதலில் இந்த பயன்பாட்டினை http://sourceforge.net/projects/kickassundelete/  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க

பிறகு நீக்கம் செய்யபட்ட கோப்பகத்தை இடதுபுறமுள்ள பலகத்தில் தெரிவுசெய்து Scan என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் ஒருசிலநொடிகளில் நாம் குறிப்பிட்ட கோப்பகம் முழுவதும் வருடபட்டு கோப்புகளின் பெயர் அதன் வகை கடைசியாக மாறுதல் செய்த நாள் ஆகிய விவரங்களுடன வரிசையாக பட்டியல் இடப்படும்  அவற்றுள் தேவையான கோப்புகளை மட்டும் தெரிவுசெய்து recover. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நிரந்தரமாக நீக்கம் செய்யபட்ட கோப்பகள் மீட்கபட்டுவிடும் இந்த பயன்பாடு Windows XP/ Windows Vista/ Windows 7 ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியதாகும்

மறுமொழி அளிக்கவும் »

புதியவர்களுக்கு கணினி பற்றிய ஆலோசனைகள்

1.கணினியில் மிகுதியாக காலி இடம் எவ்வளவு இருக்கிறது என எவ்வாறு தெரிந்து கொள்வது?

திரையில் தெரியும்  My computer எனும் உருவை (Icon) தெரிவு செய்து சொடுக்குக. உடன் அடைவுகளின் (drive) பட்டியல் திரையில் தோன்றும். அவற்றில் “சி:”’ என்ற அடைவை (drive) இடம் சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைய தெரிவுசெய்து  சொடுக்குக. உடன் தோன்றும் Properties என்ற உரையாடல் பெட்டியில் கணினியின் நினைவகத்தில் எவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுதி எவ்வளவு இடம் காலியாக உள்ளது என காண்பிக்கும். மேலும் காலி இடம் தேவையெனில் Start=> All programme => Accessories => System tools => Disk cleanup=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் காலி இடம் அதிகபடுத்த தேவையான அடைவை(drive)  தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன்  தேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்து ஏராளமான நிறைய காலியான நினைவக இடத்தை பெறுமுடியும்,.

2.சாளர காட்சியின் அளவு கணினி திரையின் அளவை விட பெரியதாக இருக்கும்போது முழுவதையும் சரியாக பார்ப்பதற்கு என்ன செய்வது.?         

விசைப்பலகையில் உள்ள விண்டோ என்ற விசையை பிடித்து கொண்டு D என்ற விசையை சேர்ந்தார் போன்று அழுத்துக. உடன் திறந்திருக்கும் அனைத்து சாளரங்களும் திரையின் அளவிற்கு ஏற்ப சுருக்கப்பட்டுவிடும். அல்லது சாளரத்திரையில் இடம்சுட்டியை  வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைய தெரிவுசெய்து  சொடுக்குக. பிறகு தோன்றும் Properties என்ற உரையாடல் பெட்டியில் Setting  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பிறகு திரையின் அளவை தேவையானவாறு சரி செய்து கீழிருக்கும் Apply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் Ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3.Calculator போன்ற பயன்பாடுகள் திரையில் காணாமல் போய்விட்டன எவ்வாறு மீட்பது?

Start => setting => control panel=>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் control panel -ல் window components என்னும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் வாய்ப்புகளில் add/remove program என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொள்க. உடன் திரையில் பயன்பாட்டு மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அவற்றில் Calculator போன்று தேவையானவற்றை தெரிவு செய்து Ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

4.பயன்பாட்டு மென்பொருளை நிறுவியிருந்தும் திரையில் அல்லது Start பட்டியலில் காணவில்லை என்ன செய்வது?

கணினித்திரையில்உள்ள My computer உருவை(icon) தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் திரையில்  ’C’ என்ற அடைவை (Drive)  தெரிவு செய்து இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் program setting என்ற உள் மடிப்பகத்தில்(Folder) நாம் நிறுவிய பயன்பாட்டினுடைய  .exe  என்ற கோப்பு இருக்கிறதா என சரி பார்த்து கொண்டு அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பட்டியில் create shortcut  என்ற கட்டளையை  தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் உருவை(Icon) பிடித்து இழுத்து வந்து Start என்ற பட்டியலில்/திரையில் விடவும்

5.ஒரு பயன்பாட்டு உருவை (icon)தெரிவுசெய்து சுட்டியினுடைய வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கும்போதும் can’t open the file என்ற பிழைச்செய்தியை திரையில் காட்டுகிறதேயொழிய குறுப்பிட்ட பயன்பாடு திறக்க மறுக்கின்றது என்ன செய்வது?.

இவ்வாறான ஏதேனுமொருபயன்பாட்டினுடைய உருவை(Icon தெரிவு செய்துகொண்டு shift என்ற விசையை  அழுத்தி பிடத்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக,உடன் விரியும் சூழ்நிலை பட்டியில். open window from the menu that appears என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியின் பட்டியலில் நாம் விரும்பும் பயன்பாட்டின் நிரல்தொடர் உள்ளதா என சரி பார்த்து கொள்க. இந்த கோப்பு எந்த பயன்பாட்டின் மீது திறக்க வேண்டும் என்று அதிலிருந்து தெரிவு செய்து கொள்க.

6.மின்னஞ்சலுடன் இணைப்பாக வரும் கோப்புகளுடன் நச்சு நிரலும் வைரஸம் இருந்தால் எவ்வாறு அவற்றை தவிர்ப்பது?

திரையின் மேலே கட்டளை பட்டையில் உள்ள tools என்ற கட்டளயை  தெரிவு செய்து சொடுக்கியவுடன் விரியும் tools என்ற கட்டளை பட்டியலில் option என்ற கட்டளையை  தெரிவு செய்து சொடுக்குக, உடன் தோன்றும் option என்ற உரையாடல் பெட்டியில் Security என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் திரையில் . Donot allow attachments to be saved or opened that could potentially be a virus என்றவாறான வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருக்கின்றதாவென சரிபார்க்கவும். பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7.கணினியை ஆரம்பித்தவுடன் இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளவா என கேட்கும் உரையாடல் பெட்டி அடிக்கடி தோன்றி  தொல்லை கொடுக்கிறதே என்ன செய்வது?

. இது ஒரு வகையான நச்சு (virus) நிரல் தொடரால் ஏற்படுகிறது. உடன் Spy bot என்ற பயன்பாட்டு நிரல் தொடரை இயக்கி இந்த நச்சு (virus) நிரலை அறவே நீக்கி ஒழித்து விடுக.

8.இணையதளத்தை தொடர்பு கொள்ளும்போது No domain server was unavailable to valid password. You may not be able to enter to some network resources என்ற செய்தியுடன் உரையாடல் பெட்டி ஒன்று தோன்றுகிறதே தவிர இணைய இணைப்பு கிடைக்கவில்லையே என்ன செய்வது?

இதனை சரிசெய்ய. Start => setting => control panel =>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் control panel -ல் உள்ள network  என்பதை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் அதில் நிறுவப்பட்ட உறுப்புகளில் உள்ள client on Microsoft network என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் பண்பியல்பு (properties)  என்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு (properties)என்ற உரையாடல் பெட்டியில் Log on to window NT  என்றவாறு தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

9.சில சமயங்களில் கணினியுடன் இணைந்த தொலைபேசி மணி ஒலித்த உடன் கணினி இயக்கம் தானாகவே நின்றுவிடுகிறதே. எவ்வாறு இதனை தடுப்பது?

இது BIOS -ல் ஒரு சில நிகழ்வுகள் ஏற்படுவதால் அதன் மறுமொழியாக (wake) செயல்படும்படி அமைக்கப்பட்ட செயலாகும். அதனால் BIOS என்ற அமைப்பிற்குள் சென்று power என்ற வாய்ப்பை தெரிவு செய்க. பின்னர் தோன்றிடும் திரையில் wake on ring என்ற வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதா (disable) என சரிபார்த்து அதனை முடக்கம்( disable) செய்க. அன்பின்னர் இந்த அமைவை Saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் சேமித்து கொணடு exit என்ற கட்டளை மூலம் வெளியில் வந்து கணினியின் இயக்கத்தை  மீண்டும் ஆரம்பிக்கவும்.

10.Over clocking என்றால் என்ன?

கணினி வேகமாக இயங்குமாறு இயக்க அமைவை மாற்றி அமைப்பதையே Over clocking என்பர். இந்த வசதியானது கணினி தன்னுடைய தன்மையைவிட வேகமாக இயங்க வைக்கிறது. இதனை BIOS அமைப்பில் குறிப்பிட்ட உள்ளுறுப்புகளை வேகமாக செயல்படும்படி அமைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு வேகப்படுத்தும்போது குறிப்பிட்ட உறுப்புகளில் அதிக வெப்பம் உருவாகும் அதனை குறைப்பதற்கேற்றவாறு கணினியில் உள்ள மின்விசிறிகள் வேகமாக இயங்காது மேலும் குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது மட்டுமே அவ்வுறுப்புகளின் வாழ்நாள் இருக்கும். அதனால்  கணினியின் உள்ளுறுப்புகளை அதிகமாக over clocking செய்ய வேண்டாம். அவ்வாறே செய்வதாயின் www.hyperformance.pl.com/overclocking-tag.htm என்ற இணைய தளத்திற்கு சென்று ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுக.

மறுமொழி அளிக்கவும் »

புதியவர்களுக்கான கணினி உதவிகுறிப்புகள்

கணினியில் உருவாக்குகின்ற கோப்புகள், நிரல்தொடர்கள் ஆகியவற்றை வேறு கணினிக்கு மாற்றுவதற்கோ(Move) அல்லது காப்புநகல்செய்யவோ(Backup) எண்ணுவோம் அப்போது நெகிழ் வட்டு, குறுவட்டு ஆகிய வைகளில் ஏதேனுமொன்றில் எழுத (நகலெடுக்க) செய்யும் போது ஏற்படும் தவறுகள் எழுதப்படும் தகவல்களை  பாதிக்கின்றன அதனை எவ்வாறு தவிர்ப்பது என இப்போது காண்போம்.

1.தரவுகளை சரிபார்க்கவும் : எழுதப்படவிருக்கின்ற கோப்புகளின் தரவுகளை முதலில் ஏற்புடையதாக (validation) இருக்கின்றதா என சரிபார்ப்பதற்காக இவ்வாறாக எழுதப்படும் மென்பொருட்களில் automatically verify என்ற வாய்ப்பு  இயல்பு நிலையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றதாவென சரிபார்த்திடுக. தரவுகளை ஏற்புடையதாக சரியாக இருந்தால்தான் எழுதும் பணி சரியாக வெற்றிகரமாக முடிவடையும்.

2.சரியான ஊடகத்தை தெரிவு செய்க : குறைந்த விலையில் கிடைக்கின்றது என தரம் குறைந்த குறுவட்டுகளில் நகலெடுக்கும் (எழுதும்)பணியை செய்தபின் ஆஹா கோப்பு முழுவதையும் சரியாக நகலெடுத்துவிட்டோம் என்று மகிழ்ச்சியோடு வேறு கணினியில் கொண்டு சென்று இயக்கி பார்த்தோமானால் நகலெடுத்த கோப்பிற்கு பதிலாக வேறு ஏதோவொன்று திரையில் தோன்றி நம்மை எரிச்சல்படுத்திவிடும். அதனால் விலை அதிகமானாலும் பரவாயில்லையென தரமான குறுவட்டுகளையே வாங்குவது நல்லது.

3.மிகை வேகத்தை தவிர்க்கவும் : இந்த அவசர உலகில் எவருக்கும் பொறுமையில்லை. அதனால் எப்போதும் ஒரு பணி ஆரம்பித்த ஒருசில நொடிகளிலேயே அந்தபணி முடியவேண்டும் என அலைபாய்ந்தவாறு அவசரபடுத்தி கொண்டே இருப்போம். பொறுமை கடலினும் மானப்பெரிது என்று ஆன்றோர் கூறியது உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை நம்மிடமில்லை,அதனால்  உடனே குறிப்பிட்ட பணி முடிய வேண்டும் என அவசரப்படும்போது அறைகுறையாக அல்லது தவறான தகவல்களை குறுவட்டில் எழுதும் பணி நடைபெற்றிருக்கும் என்பதை நினைவில் கொள்க. குறுவட்டில் எழுதும் வேகமானது 12x, 16x, 20x, 24x என்பவைகளில் நடுத்தரமான வேகத்தைமட்டும் தெரிவு செய்க அப்போதுதான்எழுதும் பணி தவறில்லாமல் நடைபெற்று முடியும்.

4.குறுவட்டுகளில் நகலெடுத்து வரப்பட்ட  கோப்புகளை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து இயக்கி பார்க்கலாம் என்று முனைந்தால் குறிப்பிட்ட பயன்பாடு இயங்காமல்முரண்டுபிடிக்கும், என்னடா இது புதியதாக கொண்டு வந்த இந்த மென்பொருள் இயங்க மறுக்கிறதே என்று நாமும் அதிர்ச்சி அடைந்துவிடுவோம். போட்டி மிகுந்த இந்த உலகில் புதிது புதிதாக மென்பொருட்களை போட்டியாளர்கள் கடைபரப்புவதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தத்தமது மென்பொருட்களை புதிய வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொண்டே இருக்கின்றனர். அதனால் முன்பு இருந்த இயக்கமுறைமையில் (OS)இயங்கிய பயன்பாடானது  இப்போது இருக்கும் இயக்கமுறைமையில் (OS)  அதுவேறு இயக்கமுறைமை(OS)   இதுவேறு இயக்கமுறைமை (OS)  என இயங்க மறுத்து விடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக நம்முடைய கணினியில் firmware அல்லது Softwareகளை மேம்படுத்தி கொண்டே இருந்தால்தான் இவ்வாறான முரண்டுபிடிக்கும்  நிலையை தவிர்க்க முடியும்.

5.நாம் இவ்வாறான அவசர யுகத்தில் வேகமாக ஓடிக்கொண்டே இருப்பதால் உடனடியாக அனைத்து பணிகளும் உடனடியாக  முடிய வேண்டு மென்பதற்காக ஒரே சமயத்தில் பல்வேறு பணிகளை இயக்கி இவையனைத்தும் உடனடியாக செயல்படவேண்டும் என எதிர்பார்ப்போம். அதற்கேற்றவாறே விண்டோ இயக்கமுறைமையில்(OS)  குறுவட்டுகளில் கோப்பினை எழுதும்பணி நடைபெறும்போது wordஐ இயக்கி  தட்டச்சு செய்யும் பணியோ அல்லது அதுபோன்று பல்வேறு பணிகளையோ செய்வோம். இதனால் குறுவட்டில் எழுதும் வேகம் குறைந்துவிடும் இதனை தவிர்க்க குறுவட்டில் எழுதும் பணி நடைபெறும்போது மட்டும் கணினியில் மற்ற பணிகள் ஏதும் செயல்படுத்தாமல் இருப்பது நன்று. என பரிந்துரைக்கபடுகின்றது.

மறுமொழி அளிக்கவும் »

எந்த கணினியை வாங்குவது எனத்தயங்கும் புதியவர்களுக்காக

பிரபலமான நிறுவனத்தின் (Branded )கணினியா அல்லது  தொகுப்பு (Assembled) கணினியா எதை வாங்குவது என பலருக்கு குழப்பமாக இருக்கும். தொகுப்பு கணினி மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது பிரபலமான நிறுவனத்தின் கணினியை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியும் எழும். இவ்வாறான சூழ்நிலையில் பின்வரும் கருத்துகளை கவணத்தில் கொள்க,

நிறுவனத்தின் Brand கணினிகளால் என்னென்ன நன்மைகள்கிடைக்கும்?

1.            கணினியில் அனுமதி பெற்ற இயக்க முறைமை( Operating system)கள் நிறுவப்பட்டு கிடைக்கும். இதற்கென தனியாக செலவிடத்தேவையில்லை.

2.            சந்தைக்கு  வருமுன் அனைத்து உள்ளுறுப்புகளும் இயக்க முறைமைகளும் முழுவதும் பரிசோதித்து பார்த்த பின்னரே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

3.            விற்பனைக்கு பிந்தைய சேவைகள் தடங்களில்லாமல் வழங்கப்படுகின்றன.

4.            நச்சுநிரலை எதிர்த்து தடுக்க கூடிய எதிர்நச்சுநிரல் மென்பொருள் (antivirus software) பாதுகாப்பு வளையங்கள்(Firewall) மற்ற ஏதேனும் இழப்பு ஏற்படும்போது மீட்கும் வசதியுடைய நிரல்தொட ர்ஆகியவற்றுடன் கிடைக்கின்றன.

இதன் தீமைகள் :

1.            தொகுப்பு கணினியை விட விலை மிகஅதிகமாக உள்ளன.

2.            இதனுடைய உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட முகவர்கள் மூலமாக மட்டுமே மேம்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் இவ்வாறு செயற்படுத்தபட்டு விட்டால் உத்தரவாதம் ஏதும் கிடைக்காது.

3.            வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட வரன்முறைக்குள் மட்டும் மாற்றி கொள்ள இயலும்.

தொகுப்பு கணினியில் (assemble computer)என்னென்ன நன்மைகள் உள்ளன?

1.            ஒவ்வொரு உள்ளுறுப்பும் வாடிக்கையாளர் விரும்பும் நிறுவனத்தின் உற்பத்தி பொருளாக தெரிவு செய்து சிறந்த கணினியாக உருவாக்க முடியும்.

2.            நிறுவனத்தின் கணினியை விட மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

3.            ஒவ்வொரு உள்ளுறுப்புகளும் தனித்தனியாக மேம்படுத்தி கொள்ள முடியும்.

தொகுப்பு கணினியின்(assemble computer) தீமைகள்

1.            விற்பனைக்கு பிந்தைய சேவை கிடைக்காது.

2.            கணினி இயங்குவதற்கு தேவையான இயக்க முறைமை (மென்பொருள்) தனியாக செலவிட்டு வாங்கிதான் நிறுவி இயக்க வேண்டியுள்ளது.

3.            ஒவ்வொரு உள்ளுறுப்பையும் தலைச்சிறந்ததாக தேடித்தேடி சேகரித்து ஒருங்கிணைத்து உருவாக்கும் தொகுப்பு கணினியின் உள்ளுறுப்புகளின் இயக்கத்தில் இவை ஒன்றுக்கொன்று முரண்பட வாய்ப்புள்ளது.

 

இரண்டிற்கும் உள்ள நன்மை தீமைகளை பற்றி தெரிந்து கொண்டோம். இப்போது ஒவ்வொரு உறுப்பாக எதனை வாங்குவது என காண்போம்.

1. கணித்திரை ( Monitor ) :             மேல் நாடுகளில் கணித்திரையின் முக்கிய பாகமான CRT tubesகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பயன்படுத்தி முடிந்தவுடன் புதியதாக மாற்றி பொருத்திவிடுவார்கள்.கயலான் கடைகளில் போடப்பட்ட  பழைய படக்குழாய்  (CRT Tube)களை நம்மை (இந்தியா)போன்ற ஏமாளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவார்கள். அழகிய வெளிப்புறத் தோற்றத்துடன் இந்த பழைய  படக்குழாய்  (CRT Tube)களை வைத்து புதிய கணினித்திரையென குறைந்த விலைக்கு  நம்முடைய தலையில் கட்டி விற்பனை செய்திடுவார்கள். இவைகள் அதிக கதிர்வீச்சு தன்மையும் உடலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால் பிரபல நிறுவனத்தின் கணினி திரையை மட்டும் கேட்டு வாங்குவது நல்லது. அதனுடன் Energy Star  மற்றும்  MPRIT  ஆகிய சான்றிதழ்களை சேர்த்து பெறுவது நம்முடைய குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை காக்கும் வழியாகும். படக்குழாயின் பின்புறம் உள்ள முகவரி தகட்டில் இந்த சான்றுகள் உள்ளதாவென சரிபாருங்கள்.தற்போது எல்சிடி கணினிதிரை கிடைப்பதால் அதனையே கொள்முதல் செய்திடுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

2. இயக்க முறைமைகள் (Operating System) : கணினியில் இருப்பது அனுமதி பெற்ற மென்பொருள்தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அவ்வாறில்லையெனில் கணினி இயக்கம் தடைபட்டு மீட்கப்படும்போது தரவுகளை மீட்டாக்கம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். விண்டோ இயக்க முறைமை யெனில்  <http://www.microsoft.com/genius/> என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு நாம் பயன்படுத்தும்  மென்பொருள் அனுமதி பெறப்பட்டது என உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. நிலை வட்டு இயக்கி  (Hand disk drive) :பயன்படுத்தப்பட்ட / பழுதுப்பட்ட நிலை வட்டு இயக்ககத்தில்(Hand disk drive)¢ உள்ள தரவுகளை அனைத்தும் அழித்து நீக்கி புதியது போன்று வடிவமைத்து (format)  குறைந்த விலைக்கு தருவதாக நம்மிடம் விலை பேசுவார்கள். எச்சரிக்கையாக இருங்கள். உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட  / பழுதுப்பட்டதை சரி செய்து வெளியிடும் போது  repaired or republished  என்ற சான்றுடன் இருக்கிறதாவென சரிபார்த்து கொள்க.

4. மின் விநியோகம் (power supply): மின்விநியோக அமைபபே ஒரு கணினியின் உயிர் நாடியாகும்.அதனால் தரமற்ற மின்விநியோக அமைப்பை கொள்முதல் செய்ய வேண்டாம். மிக கவனமாக, சிறந்த தரமான , ERLT/EQDL ஆகிய சான்றளிக்கப்பட்டவைகளா என சரிபார்த்துதெரிவு செய்திடுக..

5. நினைவகம் (Memory) :பெயர் தெரியாத நிறுவனத்தின் நினைவகத்தை (Chips) பயன்படுத்தினால் அடிக்கடி கணினி தொங்கலாக நிற்பதற்கும,தரவுகள் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பிரபல நிறுவனமான  Kingstone, Transcard, Corasin, Samsung  போன்றவைகளின்  chipகள் தான் இது என சரிபார்த்து கொள்க.

6. விசைப்பலகை (Keyboard): பொறியியல் விசைப்பலகை (mechanical key board) மறறும் ஜவ்வு விசைப்பலகை(membarance key board) என இரண்டு வகையில் கிடைக்கின்றன. முதலாவாது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான விசையுடைய அதிக வாழ்நாள் உடையது ஆனால் விலை அதிகமானது. இரண்டாவது வகை மிகவும் விலைமலிவானது. பிளாஸ்டிக் உறைகளுக்கு இடையே உலோகத்தகடை வைத்து இயக்கப்படுகிறது. குறைந்த வாழ்நாள் உடையது. விசைப்பலகைகளில் ஒவ்வொன்றும் தனித்தனி விசையாக அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொள்க.

7. விற்பனைக்கு பிந்தைய சேவை  (After sales services): விற்பனைக்கு பிந்தைய சேவையாக மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு குறைந்த கட்டணத்தில் கணினியின் ஆண்டு பராமரிப்பு பணி செய்வதாக வாக்களிப்பார்கள். ஆனால் இவர்கள் நல்ல கல்வியறிவு பெற்ற  திறமை வாய்ந்த தொழில்நுட்ப பொறியாளர்களை வைத்திருக்க மாட்டார்கள். அதனால்  திறமையற்ற அனுபவமற்ற பொறியாளர்கள் பராமரிப்பு பணியின்போது  நம்முடைய தரமான CPU, HDD, Monitor  போன்றவைகளை எடுத்து கொண்டு தரமற்ற உறுப்புகளை மாற்றியமைத்திட வாய்ப்புள்ளது. அதனால் நம்பகமான நல்ல நிறுவனத்தில் மட்டும்  ஆண்டு பராமரிப்பு பணியினை(Annual Maintenance Contract)யை கொடுத்திடுக.

மேலே கூறிய ஒரு சில கருத்துகளை கணினி வாங்கும்போது  கவனத்தில் கொண்டு பண இழப்பை தவிர்த்திடுக.

மறுமொழி அளிக்கவும் »

பழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல்

நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில்  நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம்,இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில்  இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனியாள் கணினிகளை உபயோகித்து கொள்ளலாமே என தெரிய வந்தது.

1.     இசை/ஒளிப்பட இயக்கியாக : பழைய தனியாள் கணினியை மிகச்சிறந்த ஒளி ஒலி இயக்கியாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக ஒலி அட்டை (Sound card ) விண்டோ 98, winamp  அல்லது அதற்கு இணையான ஒத்தியங்கும் (compatible)மென்பொருள் (இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன) ஒலி பெருக்கி (speaker), MP3 அல்லது video கோப்புகள் ஆகியவை மட்டுமே தேவையாகும், winamp  அல்லது VLC  இயக்கியின் தற்போதைய பதிப்பை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவி கொள்க. பின்னர் MP3 அல்லது video ஆகிய வற்றின் கோப்புகளை பழைய கணினியில் நகலெடுத்து கொண்டு இயக்கி  மிக அற்புதமான ஒளி ஒலிகளை கணினியில் பார்த்து, கேட்டு மகிழ்வதற்காக பயன்படுத்தி கொள்க.

2.     தொலைக்காட்சியாக : சிறந்த ஒளி ஒலிகளை பார்த்து கேட்டு மகிழலாம் என்றவுடன் உங்களுக்கு தொலைகாட்சி பெட்டிதான் என்று கண்டிப்பாக ஞாபகம் வரும் ,அதனால் தொலைகாட்சி பெட்டியை வாங்குவதற்கு பதிலாக  பழைய தனியாள் கணினியை தொலைக்காட்சி பெட்டியாக பயன்படுத்தி கொள்ள முடியும்என்ற செய்தியை நினைவில் வைத்து கொள்க . இதற்காக கணினியில் கூடுதலான ஒரு TV tuner card  ஒன்றை மட்டும் வாங்கி பொருத்தி கொண்டால் போதும் (இதனுடைய புதிய அட்டைகள் ரூ.1300 விலையிலும், ஒருமுறை பயன்படுத்தியது எனில் ரூ.500 விலையிலும் கிடைக்கின்றன) இதன்மூலம் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்,அல்லது நிகழ்ச்சிகளை கோப்பாக பதிவுசெய்து பின்னர் தேவையானபோது பார்த்து மகிழலாம். இந்த நிகழ்ச்சிகளை DVD, VCD, VCR ஆகியவைகளில் பதிவு செய்து பின்னர் வேறு இடங்களுக்கு எடுத்து சென்றும் பயன்படுத்தலாம்.

3.     பல் ஊடக பணியகம் : பிணையத்திற்கான அட்டையை (network card)  கணினியில் பொருத்தி அமைத்திடுக.  பின்னர் அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இருக்கும் கணினிகளை வளாகப்பிணையம் (LAN)  அடிப்படையில் இணைத்து இணைய இணைப்பில் உங்கள் கணினியை இணைத்து mp3, video  போன்றவை களின் கோப்புகளை இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க. ஒளி, ஒலி நாடாக்களிருந்து படங்கள், இசைகளை  music match juke  என்ற மென்பொருள் மூலம் உருமாற்றம் செய்து  கணினியை மத்திய பணியகம் போன்று பயன்படுத்துக.

4.     இணையத்தின் வழி செலுத்தியாக (internet router)  பயன்படுத்திட : அகல்கற்றை இணைய இணைப்பு (broad band internet ) அல்லது கம்பி வழி இணைய இணைப்பு பெற்றிருந்தால் கணினியை வழிச்செலுத்தி router  அல்லது பதிலி(proxy )யாக மாற்றி பயன்படுத்த முடியும். இணையத்தில் உலாவுதல்(web surfing)  பதிவிறக்கம் செய்தல் (downloading) , மின்னஞ்சலை கையாளுதல் (e-mail handling) , உரையாடுதல் (chatting)  போன்ற பல இணைய வழி பணிகளின் மத்திய நுழைவு வாயிலாக இந்த பழைய தனியாள் கணினியை மற்றவர்களின் கணினிகளுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இணைய பணியகமாகவும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறான இணைய பணியகத்திற்காக (Server)  புதியதாக கணினி எதையும் வாங்காமல் கையில் இருக்கும் பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும். இதற்காக கூடுதல் வாளாக பிணைய அட்டை(LAN card)யும் அதற்கான மென்பொருட்களுமான wingate, win proxy, analog proxy  போன்றவைகள் மட்டுமே தேவையாகும், இவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது லினக்ஸ் பகிர்ந்தளிப்பானும் அடிப்படை IP  வழிச் செலுத்தியும்  ஆகியவற்றிற்கான இலவசமென்பொருளை நிறுவி இணையத்தின் வழிசெலுத்தி router அல்லது பதிலிproxy யாகபயன்படுத்தி கொள்ளமுடியும்.

5.     தகவல் பணியகமாக (data server) : பிணைய வழியில் அனைத்து கணினிகளையும் பழைய கணினியுடன் இணைத்து, தேவையான அனைத்து தரவுகளையும் சேகரித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளும் பணியகமாக மாற்றி கொள்ள முடியும். இந்த வகையில் சிறிய நிறுவனங்களின் கணக்கு பதிவியில் மென்பொருட்களான TallyERP, Ex  போன்றவைகளின் மத்திய தரவு பணியகம் போன்று பராமரித்து மற்ற கணினிகளின் மூலம் அணுகி தேவையான தரவுகளை கையாளுமாறு பயன்படுத்தி கொள்ள முடியும். அன்றாடம் பணிபுரியும்போது உருவாகும் கோப்புகளை அவ்வப்போது காப்பு நகலகமாக (backup) பாதுகாத்து கொள்ளலாம். இதற்காக backup) மென்பொருளை நிறுவி கொண்டு தானாகவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் காப்பு நகல் செய்து கொள்ளும்படி அமைத்திட முடியும்.

6.     சொற்செயலி(Word Processor ) : புதிய கணினியில்  பயனுள்ள வேறு ஏதேனும்  பணிகளை செய்து வரும்நேரத்தில் மிக நீண்ட கடிதம் அல்லது கட்டுரை போன்றவைகளை அன்றாடம் தயார் செய்யும் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வழக்குறைஞர்கள் போன்றவர்கள்   இவைகளை உள்ளீடு செய்வதற்கு பழைய கணினியை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக ஓப்பன் ஆஃபிஸ் போன்ற இலவச மென் பொருளை பயன்படுத்தி கொள்ளலாம்.

7.     இணைய உலாவியாக பயன்படுத்துதல்(web browser) : ஓப்ரா அல்லதுஃபயர் ஃபாக்ஸ் போன்ற மென் பொருட்களை பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில்  நிறுவிக்கொண்டு இணையத்தில் உலாவுதல்(browsing) , உரையாடுதல் (chatting)  போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இலவச பதிவிறக்க மேலாளரை (free download manager)  பயன்படுத்தி இசைகள், மென்பொருட்கள்ஆகியவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். Antivirus  தடுப்பானை பயன்படுத்தி இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் கோப்புகளை வடிகட்டி கொள்ளலாம். நேரடி வங்கி பணிகள் (online banking)  நேரடி பொருள் கொள்முதல் (online shopping)  போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு  பழைய தனியாள் கணினியை இணைய இணைப்பிற்கு பயன்படுத்தும்போது நம்முடைய தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் முக்கிய தகவல்களை நமக்கு தெரியாமல் திருடி செல்ல முடியாது என்பதை கவணத்தில் கொள்க.

8.     கணக்கு பதவியில் மேலாளராக (Accounts manager ): பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தும் கணக்கு பதிவிய லுக்கான மென்பொருட்கள் புதியதாக வரும் இயக்க முறைமை யுடன் (operating system) ஒத்தியங்க மறுத்துவிடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கணக்கு பதிவியலுக்கான மென்பொருளை மேம்படுத்த வேண்டுமெனில் செலவு மிக்கதும் அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் செயலாக ஆகின்றது. DOS,  ஆரம்பநிலை விண்டோபதிப்பு ஆகியவற்றில் இயங்கிய கணக்கு பதிவியலுக்கான மென்பொருள் இப்போது வருகின்ற புதிய மேம்பட்ட இயக்கமுறைமைக்கு தகுந்தவாறு இவை ஒத்தியங்க மறுக்கும் நிலையில் இவ்வாறு புதிய இயக்கமுறைமையுடன் எதற்காக போராடுவது என்ற நிலையை தவிர்த்து கணக்கு பதிவியல் செயல்களுக்கு மட்டும் பழைய தனியாள் கணினியையே பயன்படுத்தி கொள்ள முடியும்.

9.     அச்சிடும் மேலாளர் (printer manager) : அதிக அளவு அச்சிடும் பணிக்காக ஏராளமான அச்சுப்பொறிகளை பயன்படுத்தும்போது அன்றாட மற்ற பணிகள் எதுவும் பாதிக்காமல் இருப்பதற்காக பழைய கணினியுடன் அனைத்து அச்சுப்பொறிகளையும் இணைத்து அச்சுப்பணிக்கு மட்டும் தனிபணியகம் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக window 98/xp  அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை இருந்தால் போதும். மேலும் parallel port இணைப்பில் செயல்படும் அச்சுப்பொறிகள் புதிய இயக்க முறைமையில் ஒத்தியங்காமல் தகராறு செய்வதைஇதன்மூலம் தவிர்க்கலாம்.

10.    தகவல் மையம் (knowledge center): Adobe acrobat reader, Encanta Encyclopedia  போன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு இணையத்தில் செய்திகள்,இணையபக்கங்கள், மின்செய்தி தாட்கள், மின் ஆவணங்கள் ஆகியவற்றை படித்தறிவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஏன் நம்முடைய பிள்ளைகளை Encyclopedia  மூலம் தகவல் சேகரிக்கும் செயலுக்கு பயன்படுத்துமாறும் செய்ய முடியும். மேலும் ஆய்வு மாணவர்களுக்கு தகவல்களை, செய்திகளை தேக்கி வைத்து கொள்ளும் களமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

11.    மென்பொருட்களின் பரிசோதனை மையம்(Software test bed ): மென்பொருள் வடிவமைப்பாளர், ஆலோசகர்போன்றவர்கள் உருவாக்கும் புதிய மென்பொருட்களை நடைமுறைப்படுத்தும் முன்பு  வெவ்வேறான அமைவுகளில் இவைகள் எவ்வாறு இயங்குகின்றன.என்றும் அதன் இறுதி விளைவு எவ்வாறு இருக்கும் எனவும் பரிசோதித்து பார்க்கின்ற களமாக நம்முடைய பழைய கணினியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் மென்பொருட்களை நடைமுறைப் படுத்தும்போது என்ன ஆகுமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக இந்த செயலுக்கு உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.

12.    மின்னஞ்சல் பணியகம் : Mail gate, mail daemon  அல்லது  ability main serverபோன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு வளாக பிணையத்தின் மூலம் (LAN) மற்ற கணினிகளை இணைத்து மின்னஞ்சல்களை அனுப்பி வைக்கவும் பெறவுமான  பணியகம் போன்று பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் நேரடியாக இணையத்தில் சென்று மின்னஞ்சல்கள் பெறுவது அனுப்புவது ஆகிய செயல்களின் நெருக்கடிகளை தவிர்த்து கொள்ள முடிகிறது. scanning   செய்தல்,, spyware ஐ  கட்டுப்படுத்துதல் என்பன போன்றபல முன்னெச்சரிக்கை செயல்களை பழைய தனியாள் கணினியில் செயல்படுத்தி அதன்பிறகு மற்ற கணினியில் கோப்புகளை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

13.    இணைய இணைப்பு கட்டுப்பாட்டகம்: நம்முடைய பிள்ளைகள் இணையத்தில் தவறான வழிகளில் உலாவுதலை கட்டுப்படுத்த பழைய கணினியின் வழியாக அனைத்து வகையான வடிகட்டுதலையும், கட்டுப்பாடுகளையும் பயன்படுத்தி இணையத்தில் பாதுகாப்பாக பயமின்றி உலாவும்படி செய்ய முடியும்.

14.    CD/DVD யில் நகலெடுக்கும் பணியகமாக : ஒரே மாதிரியான கோப்புகள் மென்பொருட்களை ஆயிரக்கணக்கான CD/DVD களில் நகலெடுக்கும் பணிக்காக CD/DVD Writer பணியகமாக உங்கள் பழைய கணினியை மாற்றியமைத்து கொள்ளலாம். இதற்காக CD/DVD Writerஐ  மட்டும் வாங்கி கணினியில் பொருத்தி கொண்டால் போதும்.

15.    தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்த : நம்முடைய அலுவலகத்தில் தொலை நகல் இயந்திரம் பழுதுபட்டுவிட்டநிலையில் புதியதாக அதனை கொள்முதல் செய்ய வேண்டாம். நம்முடைய பழைய கணினியையே தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்காக Fax/voice/modem ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் மென்பொருட்களை bitware of super voice  பயன்படுத்தி தொலைபேசி இணைப்பை கணினியுடன் மோடத்தின் மூலம்  ஏற்படுத்தி கொண்டு கணினியை எப்போதும்போல் வைத்து கொண்டால் போதும்.தொலை நகல் இயந்திரம் போன்று இந்த பழைய தனியாள் கணினியே மிகச்சிறப்பாக பணிபுரியும்.

16.    கண்காணிப்பு பாதுகாப்பு சாதனமாக : கடைகளில் அல்லது நம்முடைய  நிறுவனத்தில்  விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவ்வப்போது கண்காணித்து கொண்டே இருக்க வேண்டிய  நிலைஏற்படும் இதற்கான அட்டைகளை பழைய கணினியில் யுஎஸ்பி பொருத்துவாய் மூலம்  பொருத்தி ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து இதனுடன் இணைத்து இந்த அமைப்பை பயன்படுத்தி நம்முடைய விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக இருந்திடுவதற்காக கண்காணிக்கலாம். இதற்காக capturing video spy  என்ற மென்பொருள் பயன்படுகிறது.

17.    பயிற்சி மையம் (Traning center)  இளைய தலைமுறை மாணவர்கள் கணினியை ஒருங்கிணைத்தல் (assembly)  பிரச்சனையை சரிசெய்தல் (trouble shooting)  போன்ற செயல்களுக்கான பயிற்சியகமாக பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.

இதுவரை எவ்வாறு பழைய கணினியை பயனுள்ளதாக செய்ய முடியும் என எனக்கு தெரிந்த ஒரு சில கருத்துக்களை மட்டும் கூறியுள்ளேன். மேலும்  பயனுள்ள பல பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என நம்புகிறேன். நீங்களும் பழைய கணினியை குப்பையில்தூக்கி எறியாமல் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

பத்துஅங்குல கணினித்திரையை யூஎஸ்பிவாயிலாக இணைத்து பயன்படுத்திட முடியும்

பத்துஅங்குல கணினித்திரையை யூஎஸ்பிவாயிலாக இணைத்து பயன்படுத்திட முடியும்

உலகின் முதன் முதல் யூஎஸ்பிவாயிலாக இணைத்து  தொடுதிரை கணினியை போன்று செயல்படசெய்யும் Mimo Magic Touch என்ற  சாதனத்தை நம்முடைய மகிழ்வுந்தில் அமைத்து அல்லது மடிக்கணைனியுடன்  இணைத்து தொடுதிரை கணினிபோன்று பயன்படுத்தி கொள்ளமுடியும்

இதில்ஒரு ஒற்றையான யூஎஸ்பி கம்பிவாயிலாக இதனை இணைத்து அதனையே மின்சார இணைப்பிற்காகவும் உருவபடங்களை திரைக்கு கடத்துவதற்காகவும் பயன்படுத்தி கொள்ளபடுகின்றது இதனை சிறு தொலைகாட்சி பெட்டியாகவும் கைக்கணியாகவும் பயன்படுத்தி ஒலிஒளிபடங்களை கண்டு மகிழலாம் அல்லது தொடுதிரை தனியாள் கணினியாக பயன்படுத்தி கொள்ள முடியும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தற்போது Mimo Magic Touch , Mimo Magic Touch Deluxe ஆகிய  இரண்டு வகைகளில்  சந்தைகளில்   கிடைக்கின்றன  இதனை நம்முடைய மடிக்கணியில்  கூடுதல் திரையாக பயன்படுத்தி கொள்ளமுடியும் இது 1024 x 600பிக்செல் திரைத்துல்லியம் கொண்டது விண்டோ 7, எக்ஸ்பி ஆகிய இயக்கமுறைமையில் செயல்படக்கூடியது  ஆகும்

 

மறுமொழி அளிக்கவும் »

.மாணவர்களுக்கான ஆகாஷ் டேப்லெட் பிஸி என்ற கைக்கணியை யாரும் கொள்முதல் செய்துகொள்ளமுடியும்

DataWind என்ற கனடா நிறுவனம் ஆகாஷ் என்ற பெயரில் டேப்லெட் பிஸி என்ற கைக்கணியை மாணவர்கள் பயன்படுத்துவதற்காகவே ரூபாய் 2500 -விலையில் வெளியிட்டுள்ளது இதனை  மாணவர்கள் மட்டுமின்றி யார்வேண்டுமானாலும் கொள்முதல் செய்துகொள்வதற்காக பதிவுசெய்து கொள்ளலாம்

இந்த ஆகாஷ் கிடைக்காதவர்கள் இதற்கடுத்த மேம்படுத்தபட்ட உபிஸ்லாட்7 என்ற  பெயரில் ரூபாய் 2999 -விலையில் வெளியிடபட்டுள்ள டேப்லெட் பிஸி என்ற கைக்கணியை கொள்முதல் செய்துகொள்வதற்காக பதிவுசெய்து கொள்ளலாம்

இது ஆண்ட்ராய்டு 2.3 இயக்கமுறைமையில்  கோர்டெக்ஸ் ஏ8 என்ற பெயருடைய 700 மெகாஹெர்ட்ஸ் திறனுள்ள செயலியும், வரைகலையையும் ஒலிஒளிபடங்களை ஆதரிக்ககூடிய செயலியும் ,256 எம்பி திறன்கொண்ட ரேமையும், 2 ஜிபி நினைவகத்திறன் கொண்டதாகவும் உள்ளது  மேலும்    800 x 480 துல்லிய திறன்கொண்ட 7 அங்குல திரையும் தொடுதிரைவசதி தடுப்பானும் ,ஜிபிஆர்எஸ், ஒய்ஃபி ஆகிய வசதியுடனும் செந்தர யூஎஸ்பி வாயிலும் ,3.5மிமீ ஒலிநாடா பொருத்தும்வாயிலும் கொண்டதாக இது உள்ளது வரும் ஜனவரி 2012-ல் இது அனைத்துகடைகளிலு ம் தாராளாமாக கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது

இதனை அரசாங்கம் கூட தன்னுடைய மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தில் ஒருஇலட்சம்  கொள்தல் செய்து வழங்கவிருக்கின்றது இதனை தற்போது http://www.aakashtablet.com/ என்ற இணையதளத்திற்கு சென்று நாம்  கொள்முதல்செய்துகொள்வதற்காக பதிவுசெய்து கொள்ளலாம்

மறுமொழி அளிக்கவும் »

உரைஆவணத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்

தற்போதைய நவீனதகவல்போக்குவரத்திற்கு உரைஆவணம் மிகமுக்கிய பங்காற்றுகின்றது

இந்த தகவல்பரிமாற்றத்தில் மின்னஞ்சல்ஆனது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது தற்போது இந்த மின்னஞ்சலை கைபேசிமூலம் கையாளமுடியும் என்றநிலை உள்ளது இந்த தகவல் பரிமாற்றத்திற்கான உரையை இதுவரை கைபேசியிலுள்ள தொடுதிரைமூலமும் சின்னஞ்சிறு பொத்தானை அழுத்துவதன் வாயிலாகவும் உள்ளீடு செய்துவந்தோம் அதனால் தற்போது இந்த SMSஎன அழைக்கபடும் குறுஞ்செய்தியை அனுப்பவதில் மிகசிரமமான நிலையாக இருந்துவருகின்றது அதனை தவிர்க்க நம்முடைய கைபேசி சேவையாளர்களின் குறுஞ்சய்திசேவையின் நுழைவுவாயிலை(SMS Gateway ) Wikipedia entry என்பதன் மூலம் கண்டுபிடித்து மின்னஞ்சலை எளிதாக அனுப்பலாம்

   அதற்காக மின்னஞ்சல் அனுப்பும் திரையை தோன்றசெய்க அதில் To என்ற பகுதியில் நாம் குறுஞ்செய்தி அனுப்பிட விரும்பும் கைபேசி எண்ணையும் தெடர்ந்து  குறுஞ்செய்தி சேவையின் நுழைவுவாயில்(SMS Gateway ) விவரங்களையும் உள்ளீடு செய்து subject போன்ற மற்ற பகுதிகளில் வழக்கமான மற்ற மின்னஞ்சல் பணிகளை செய்து  முடித்து  send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இந்த செய்தியானது குறிப்பிட்ட எண்ணு டைய கைபேசிக்கு உடன் சென்று சேர்ந்துவிடும் இந்த குறுஞ்செய்தி மட்டுமல்லாது  படங்கள் ஒலிஒளிபடங்கள் கூடMMS எனசுருக்கமாக அழைக்கப்படும்  “Multimedia Messaging Services  என்ற  சேவையின் மூலம் மேற்கண்ட வழமுறை வாயிலாக அனுப்பிடமுடியும்

விக்கிபீடியாவின் குறுஞ்செய்தி சேவைவிவர படம்

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.