தொகுப்புக்காக அக்சஸ் -2003 -தொடர்

அறிந்து கொள்வோம் அக்சஸ் தொடர்பகுதி-39-இதர பயன்பாடுகளை அக்சஸுடன் ஒருங்கிணைத்தல்

ஒரு வியாபார நிறுவனத்தில் கடிதம் தொடர்பான பயன்பாட்டிற்கு வேர்டையும், மின்னஞ்சலுக்கு அவுட்லுக்கையும், இலாப நட்ட கணக்கிற்கு எக்செல்லையும், தரவுதள நிருவாகத்திற்கு அக்ஸசையும், அறிக்கைகளை காட்சிபடுத்தி சமர்ப்பிக்க பவர்பாயிண்டையும் போன்று பல்வேறு செந்தரமாக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துகின்றது. இந்த மென்பொருட்களை ஒன்றுடன் மற்றொன்றை ஒருங்கிணைத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்தமான ஒரே மென்பொருளாக உருமாற்றம் செய்ய உதவுவதுதான் விபிஏ ஆகும்.

பெரிய நிறுவனங்கள் ஒட்டு மொத்த மென்பொருளுக்காக ERP மற்றும் SAP போன்றவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும் ஆயினும் சின்னஞ்சிறு நிறுவனங்கள் இந்த எம்.எஸ் அலுவலக பயன்பாட்டு மென்பொருளையே ஒருங்கிணைந்து பயன்படுத்த முயலும் அதற்காக இருப்பதுதான் விபிஏ ஆகும். இந்த விபிஏவானது அலுவலக பயன்பாடுகளை தானாக இயங்குமாறு செய்கிறது. அதற்காக மற்ற பயன்பாடுகளை எவ்வாறு ஒருங்கிணைத்து பயன்படுத்துவது என்பதற்கான குறிமுறைகளை உருவாக்க முடியும். இந்த குறிமுறையின் மூலம் மற்ற பயன்பாடுகளை குறிப்பிட்ட மேற்கோள் மூலம் கட்டுப்படுத்தி நடப்பு பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உபயோகித்து கொள்ள முடியும். இவ்வாறு இதன் மூலம் என்னற்ற நடைமுறைகளை அலுவலக பயன்பாடுகளில் ஒருங்கிணைத்து பயன்படுத்த முடியும்.

இந்த அலுவலக பயன்பாடுகள் தானாக இயங்குவதற்கான மேற்கோள் தகவல்களை வழங்குவதற்காக உதவுவதுதான் Object Library ஆகும். இந்த நூலகத்தில் குறிப்பிட்ட பயன்பாட்டின் பண்பியல்புகள் (Properties) வழிமுறைகள் (Methods), இனங்கள் (Classes) ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. ஒரு பயன்பாட்டின் இனமென்பது அதன் உள் கட்டமைப்பிற்கேற்றவாறு வகைப்படுத்தப்படுகிறது. உதாரணமாக படிவங்கள், அறிக்கைகள் போன்றவை தனித்தனி இனங்களாகும். விபிஏ ஆனது நாம் எழுதும் குறிமுறையில் குறிப்பிட்ட இனத்தின் Object மாறிகள் மேற்கோளாக குறிப்பிடுவதை தீர்மானிக்கிறது. இந்த Object மாறிகளை தீர்மானிக்கும் செயலை binding என்பர் இந்த binding ஆனது Early binding, late binding ஆகிய இரண்டு வழிமுறைகளில் உள்ளது.

1Early Binding :அக்சஸில் உள்ள ஓரு விபிஏ சாளரத்தில் மேற்கோள் உரையாடல் பெட்டியை பயன்படுத்தி object libraryயை வெளிப்படையாக மேற்கோள் காட்டமுடியும இவ்வாறு செய்தால் அது early binding எனப்படும். இவ்வாறு செய்தவுடன் பயன்பாடுகள் செயல்பட துவங்கும். இதன் மேற்கோளை உருவாக்குவதற்காக புதியதான moduleஒன்றை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ள moduleஐ தரவுதளத்தின் விபிஏ வடிவமைப்பு திரையில் திறந்து கொள்க. பின்னர் மேலே கட்டளை சட்டத்தில் உள்ள tools என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் tools பட்டியில் reference என்பதை (படம்-1) தெரிவு செய்க. உடன் reference என்னும் உரையாடல் பெட்டி தோன்றும். அதன்பின்னர்Available reference என்ற பகுதியில்

Microsoft DAO 3.6 library

Microsoft Office 11.0 Object Library

Microsoft Word 11.0 Object Library

என்றவாறு பட்டியலிடப்பட்டிருக்கும். இவைகளில் நம் தேவைக்கேற்றவாறு ஏதேனும் ஒன்றை தெரிவு செய் பெட்டியில் (படம்-1)தெரிவு (tick) செய்க. இதன் பிறகு குறிமுறையில் குறிப்பிட்ட மேற்கோள் பயன்பாட்டை உள்ளீடு செய்து இடைவெளி அல்லது புள்ளி வைத்தவுடன் இந்த வகைளில் உள்ள கட்டளைகள் கீழிறங்கு பட்டி (drop down) மூலம் பட்டியலிடும் அவற்றில் ஒன்றை தேவையானவற்றை தெரிவு செய்து உள்ளீடு செய்து கொள்ளலாம்.

 படம்-1

2. Late Binding : இவ்வாறு மேற்கோள் உரையாடல் பெட்டி மூலம் மேற்கோள் செய்யாமல் வேறு வகையிலும் இதே செயலை செய்ய முடியும். குறிமுறையின் ஆரம்பத்தில் மாறியை ஒரு object ஆக முதலில் அறிவிப்பு செய்திட வேண்டும். அதன்பிறகு object-ஐ மேற்கோள் காட்டுவதற்காக கட்டளைகளை அமைத்திட வேண்டும். இதுவே late binding என்பர்.

எம்.எஸ் வேர்டை இந்த வழிமுறையில் மேற்கோள் காட்டுவதற்கு

Dim word obj as object

Set word obj = new word application

என்றவாறு முன்கூட்டியே அறிவிப்பு செய்திட வேண்டும்.

Dim my word as new என உள்ளீடு செய்தவுடன் தானாகவே தோன்றும் கீழிறங்கு பட்டியில் word என தெரிவு செய்து புள்ளி வைத்தவுடன் மீண்டும் தோன்றும் அதன் வகைகளின் கீழிறங்கு பட்டியலில் application என தெரிவு(படம்-2) செய்க.

 படம்-2

குறிப்பிட்ட பயன்பாடுகளில் எந்த பயன்பாடு ஒருங்கிணைக்க வேண்டும் என இவ்வாறு விபிஏவின் குறிமுறையில் குறிப்பிட வேண்டும். உடன் குறிப்பிட்ட பயன்பாடுகள் இயங்க ஆரம்பித்து நம்முடைய பயன்பாட்டில் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு தானியங்கி செயலை ஆதரிப்பதற்கு automation server என அழைப்பர்.

Early binding வழிமுறையே சாதாரணமான சுலபமான வழிமுறையாகும். முன்பு கூறிய வழிமுறையில் புதிய திறவு சொல்லை (new keyword) மேற்கோள் செய்ய வில்லையெனில் பிழைச்செய்தி (Error Message) திரையில் சுட்டும். இவ்வாறு ஒரு சான்றளிக்கப்பட்ட பொருள் நூலகத்தை புதிய திறவு சொல்லை பயன்படுத்தி உருவாக்குவது மட்டுமல்லாமல் பொருள் செயலியை உருவாக்கும் வழிமுறையை பயன்படுத்தியும் இதனை உருவாக்க முடியும். ஆனால் இது புதிய திறவுசொல்லை ஆதரிக்காது. நாம் எந்த வகை பொருளை உருவாக்குகிறோமோ அதனை முதலில் அறிவிப்பு செய்திட வேண்டும். அதற்காக set என்ற கூற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Binder ஆனது புதிய திறவு சொல்லை ஆதரிக்கவில்லை ஆனால் ஒரு object libraryஐ வழங்குகிறது எனில் மேற்கோள் உரையாடல் பெட்டி மூலம் மேற்கோள் செய்வது நல்லது.

Dim Binder Obj As office Binder.Binder

Set Binder Obj = Create Object “Office.Binder

என்றவாறு Create Object என்ற செயலியை early bindlngக்கு பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது

Dim Binder Obj As object

Set Binder Obj = Create Object “Office.Binder

என்றவாறு குறிப்பிட்ட வகை பொருள் மாறியை அறிவிப்பு செய்யாமல் late binding ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் உள்ள இரண்டாவது வரியை

set binder obj = create object (“word.application”) என்றவாறு மாற்றியும் அமைக்கலாம்.

நடப்பில் இருக்கும் சான்றளிக்கப்பட்ட பொருளை பெறுவதற்கு

set object variable = get object (path name) (class) என்றவாறு பெறும் வழியையும் (path) குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக நடப்பில் உள்ள சான்றளிக்கப்பட்ட M.S.Excel-ஐ பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட எக்செல் ஆவணத்தை அன்று என்ற நிலையில்

Dim Excel obj as Excel application

Set Excel Object = Get Object (Excel application)

என்றும்

Dim Excel obj As Excel Application

Set Excel obj = Get object (“DC My Excel.wk3” “Excel.application”)

என்றவாறு குறிமுறை புதிய செயலியை நம்முடைய moduleலில் அறிவிப்பு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலே கண்டவாறு தானியங்கி பணியகத்திற்கு (Automation server) தேவையான சான்றளிக்கப்பட்ட மேற்கோளை குறிப்பிட்ட பிறகு அதனை பயன்படுத்தும்போது அதன் இயக்ககத்தை (Directory) கீழ்காணும் குறிமுறை மூலம் மாற்றியமைக்க முடியும்.

Dim Excel obj as new excel.application

Excel obj change file open directory :C:\My Document \”

சான்றளிக்கப்பட்ட மேற்கோளை தானியங்கி பணியகத்திலிருந்து நீக்குவதற்கு (Delete)

set Excel obj = nothing என்று அமைப்பது மூலமாகவோ அல்லது

Excel obj Quit

Set Excel obj = nothing என்ற இரண்டையும் சேர்த்தோ பயன்படுத்தி நீக்க முடியும்.

பெரும்பாலும் தானியங்கி பணியகத்தில் அக்ஸசுடன் வேர்டையே அதிக அளவிற்கு ஒருங்கிணைத்து பயன்படுத்துவார்கள். ஒரு நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்திற்கான அழைப்பிதழ்களை ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. அனைவருக்கும் அனுப்பும் கடிதத்தின் உள்ளடக்கங்கள் ஒன்றேதான் ஆனால் வெவ்வேறு முகவரிக்கு அனுப்ப வேண்டியிருக்கும். இந்த நிலையில் கடித உள்ளடக்கத்தை வேர்ட்டில் தட்டச்சு செய்து தயார் நிலையில் வைத்து கொண்டு அக்சஸில் உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளை இணைத்து ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்புவதற்கு இந்த தானியங்கி பணியகம் மிகச்சிறப்பாக பயன்படுகிறது.

இவ்வாறு ஒரு வியாபார நிறுவனம் தான் உற்பத்தி செய்த பொருளை பல்வேறு பயனாளருக்கு விற்பனை செய்வதற்காக விற்பனை உத்தரவை பெற்றுள்ளது. இதற்காக ஏற்புகை கடிதங்களை அனைவருக்கும் அனுப்ப விரும்புகிறது. இந்த கடிதத்தில் உள்ளடக்கங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் முகவரி, கடிதம் எண், எவ்வளவு பொருள் தேவை, அதன் மதிப்பு போன்ற விவரங்கள் மட்டுமே ஒவ்வொரு கடிதத்திலும் மாற்றியமைக்க வேண்டும். இதற்காக mergetoword( ) என்ற செயலியையும் thanks.dot என்ற மாதிரி படிவத்தையும் பயன்படுத்தி இதனை செயல்படுத்த முடியும்.

இங்கு Thanks.dot என்ற மாதிரி படிவ விற்பனைக்கான நன்றி கடிதத்தை அச்சிடுமாறு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விவரம், விற்பனை உத்தரவின் தரவுகள் Thanks.dot மாதிரி படிவம் ஆகியவற்றுடன் இவை அனைத்தும் உள்ளடக்கிய வெளியீட்டு கடிதம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதில் Bookmark ஆனது சாம்பல் நிற பெரிய ஒளிக்கற்றை போன்று (உரையை உள்ளிணைக்கும்) பகுதியில்படம்-3காட்டப்பட்டுள்ளது.

 படம்-3

இந்த bookmark சாதாரணமாக கண்ணுக்கு புலப்படாது. இதனை பார்வைக்கு புலப்படும்படி செய்ய கட்டளை சட்டத்தில் உள்ள Tools => Option => என்றவாறு தெரிவு செயதவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் view tab என்பதை தெரிவு செய்தபின் தோன்றிடும் திரையின் மேல் பகுதியில் bookmark என்ற வாய்ப்பை (மூன்றாவதாக) என்றவாறு தெரிவு செய்க. இதில் எந்த பகுதிக்கு எந்தெந்த Bookmark ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கொடுக்கப்பட்டுள்ளது.

 படம்-4

ஒரு பயனாளர் இதில் உள்ள Print Thank you letter என்னும் பொத்தானை படம்-4 சொடுக்கியவுடன் தானாகவே இதற்கான கடிதங்கள் அச்சிடும் இதற்கான merge to word செயலியை பயன்படுத்தி எழுதப்பட்ட குறிமுறை பின்வருமாறு

Program 39-1.

Public Function MergetoWord()

‘ This method creates a new document in MS Word 2002 using Automation.

On Error Resume Next

Dim rsCust As Recordset, iTemp As Integer

Dim WordObj As Word.Application

Set rsCust = DBEngine(0).Databases(0).OpenRecordset(“Customers”, dbOpenTable)

rsCust.Index = “PrimaryKey”

rsCust.Seek “=”, Forms!Orders![CustomerNumber]

If rsCust.NoMatch Then

MsgBox “Invalid customer”, vbOKOnly

Exit Function

End If

DoCmd.Hourglass True

Set WordObj = GetObject(, “Word.Application”)

If Err.Number <> 0 Then

Set WordObj = CreateObject(“Word.Application”)

End If

WordObj.Visible = True

‘ Warning

‘ Specify the correct drive and path to the

‘ file named thanks.dot in the line below.

WordObj.Documents.Add Template:=”g:\access 11 book\thanks.dot”, NewTemplate:=False

‘ The above drive and path must be fixed.

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”FullName”

WordObj.Selection.TypeText rsCust![ContactName]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”CompanyName”

WordObj.Selection.TypeText rsCust![CompanyName]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”Address1″

WordObj.Selection.TypeText rsCust![Address1]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”Address2″

If IsNull(rsCust![Address2]) Then

WordObj.Selection.TypeText “”

Else

WordObj.Selection.TypeText rsCust![Address2]

End If

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”City”

WordObj.Selection.TypeText rsCust![City]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”State”

WordObj.Selection.TypeText rsCust![State]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”Zipcode”

WordObj.Selection.TypeText rsCust![Zipcode]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”PhoneNumber”

WordObj.Selection.TypeText rsCust![PhoneNumber]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”NumOrdered”

WordObj.Selection.TypeText Forms!Orders![Quantity]

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”ProductOrdered”

If Forms!Orders![Quantity] > 1 Then

WordObj.Selection.TypeText Forms!Orders![Item] & “s”

Else

WordObj.Selection.TypeText Forms!Orders![Item]

End If

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”FName”

iTemp = InStr(rsCust![ContactName], ” “)

If iTemp > 0 Then

WordObj.Selection.TypeText Left$(rsCust![ContactName], iTemp – 1)

End If

WordObj.Selection.GoTo what:=wdGoToBookmark, Name:=”LetterName”

WordObj.Selection.TypeText rsCust![ContactName]

DoEvents

WordObj.Activate

WordObj.Selection.MoveUp wdLine, 6

‘ Set the Word Object to nothing to free resources

Set WordObj = Nothing

DoCmd.Hourglass False

Exit Function

TemplateError:

Set WordObj = Nothing

Exit Function

End Function

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003 தொடர் பகுதி -38-அக்சஸில்எம் எஸ் இன்போ பாத் 2003,ஐ ஒருங்கிணைந்து பயன்படுத்த முடியும்.

அக்சஸை பார்த்து வரும்போது திடீரென அக்சஸ் 37வது பகுதியில் இன்போ பாத் என ஏன் மாறிவிட்டது என்ற ஐயம் வரும். இந்தமைக்ரோ சாப்ட் ஆபிஸ் இன்போ பாத் 2003 என்பது அக்சஸின் திறனை உயர்த்துவதற்கான புதியதாக வெளியிடப்பட்ட XML போன்ற ஒரு   அலுவலக பயன்பாடு ஆகும். இதன்மூலம் விவரங்களை சேகரித்தல் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான தகவல்களை பயன்படுத்தி கொள்ளுதல் இயக்க நேர படிவங்களை சுலபமாக உருவாக்குதல் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மிக எளிதாகவும் விரைவாகவும் முழுமையாகவும் செய்ய முடிகிறது. இவ்வாறு சேகரித்து ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்கள் அந்த நிறுவனம் முழுவதும் அல்லது பல்வேறு வியாபார நிறுவனங் களுக்கிடையில் மறுபடியும் தேவையானபோது பயன்படுத்தி கொள்ள முடியும் ஏனெனில் இந்த விவரங்கள் XML அடிப்படையில் தொகுக்கப்பட்டவை ஆகும்.

இது XML அடிப்படையில் இருப்பதால் வெவ்வேறு ஆவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் பல்வேறு நோக்கங்களுக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி கொள்ள முடியும். உதாரணமாக infopathல் சேகரித்து தொகுக்கப்பட்ட விவரங்களை தரவு தளத்தில் நேரடியாக பாதுகாத்திட, இணைய சேவையில், கோப்பு பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படையில், செய்ய முடியும். இப்பணிக்காக தகவல்களை ஆய்வு செய்தல், மறுபயன்பாடு செய்தல், ஆகியவற்றின் போது மறுபடியும் தகவல்களை தட்டச்சு செய்ய தேவையில்லை.

நடப்பில் இருக்கும் உரை ஆவணங்கள், இணைய படிவம், ஆகியவற்றிற்கு பதிலாக நெகிழ்வு தன்மையுடைய இந்த இன்போ பாத் ஐபயன்படுத்தினால் கால விரையத்தை தவிர்க்க முடியும். இணைய இணைப்பில்லாமல் அத்தகு பணிகளை செய்து முடித்த பின்னர் இணைய இணைப்பில் இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும்.இவ்வாறு பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு விடுபட்டதே என கவலை கொள்ள தேவையில்லை இது படிவங்களை நிரப்பும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் உடனடியாக தவறை சுட்டிகாட்டி சரிசெய்யும்படி கூறுகிறது. மேலும் இதனை பயன்படுத்துபவருக்கு XMLன் குறியீடுகளை எழுததெரிந்திருக்க வேண்டியதில்லை.

இதில் filling out a form மற்றும் design mode ஆகிய இரண்டு வகைகளில் செயல்படுத்த முடியும். வழக்கமாக மாதிரி படிவங்களில் தகவல்களை நிரப்புவது போன்ற சூழலின் பின்புலத்தில் xML அடிப்படையாக இருந்து பணிபுரிவது முதல் வகையாகும்.

இரண்டாவது வகையில்  மாதிரி படிவமங்களில் ஒன்றை எடுத்¢துகொண்டு அதில் தேவையானவாறு மாறுதல் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இரண்டாவது வகையில் Microsoft Script Editor (MSE) என்பவர் மிக முக்கியமாக உங்களுக்கு பதிப்பித்தலில் உதவி புரிவதற்காக இருக்கின்றார். அது மட்டுமல்லாது. object model, editing control ஆகிய பல்வேறு கருவிகள் பயன்படுத்த ஏதுவாக உள்ளன. இவைகளை கொண்டும் இயக்க நேர படிவங்களை, நாம் விரும்பியவாறு வடிவமைத்து ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும்.

இந்த இன்போ பாத் ஐ ஒரு சாளர பகிர்பு புள்ளி சேவை படிவ நூலகத்தில் (window share point services from library) வெளியீடு செய்யவும் முடியும்

பெரும்பாலான நிறுவனங்கள் தனித்து இயங்க முடியாது. அதன் கிளைகள் உறவுகள் என்று ஒன்றுடன் ஒன்று சார்ந்ததே அதன் வியாபார நடவடிக்கைகள் நன்கு  செயல்படுதற்காக செயல்பாடுகளும் தனித்தனி பகுதியாக./ கிளையாக பிரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இவ்வாறான செயல்களின் அடிப்படையில் உட்பிரிவு / கிளை அலுவலகங்கள் சுதந்திரிமாக குறிப்பிட்ட வரன்முறைக்குள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. உதாரணமாக ஒரு மென்பொருள் நிறுவனம் பல்வேறு பகுதி/கிளை அலுவலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விற்பனை பிரிவு எவ்வளவு உதிரிப் பொருட்கள்/ துணைப் பொருட்கள் கொள்முதல் பிரிவில் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனவா என அறிந்து கொள்ள விரும்புகிறது. இவ்வாறான செயலானது உட்பிரிவு / கிளை அலுவலகங்களுக் கிடையே உள்ள தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதுதான் இந்த இன்போபாத் 2003 ஆகும். இது கிளை அலுவலகங்களுக்கிடையே உள்ள தகவல் பரிமாற்றத்தை திறமையாகவும் செம்மையாகவும் செய்கிறது. இது XML தொழில்நுட்ப அடிப்படையில் உடனடியாக  ஆவனத்தை அல்லது இணைப்பை ஏற்படுத்தி இறுதி பயனாளர் இயக்க நேர படிவங்களை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இது XML அடிப்படையில் இருப்பதால் XML அடிப்படையை இறக்குமதி செய்து அல்லது நடப்பில் உள்ள அக்சஸில் அட்டவணையுடன் இணைத்து கொள்கிறது. இது ஒரு தனித்தியங்க கூடிய நடப்பிலிருக்கும் அக்சஸ் அட்டவணையின் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு படிவங்களை உருவாக்குகிறது.

இந்த இன்போ பாத் வழிமுறையில் வடிவமைப்பு சூழலில் படிவங்களை அடிப்படையாக கொண்ட கட்டுப்பாடுகள் மற்ற உரைபதிப்பித்தல் வழிமுறையில் (தரவை ஏற்புடையதாக்குதல் மற்றும் நிபந்தனையின் அடிப்படையில் வடிவமைத்தல்) செயல்படுத்துகிறது.

இவ்வாறு படிவம் உருவாக்கியபிறகு அதனை மாதிரி படிவங்களாக பயனாளர்  விரும்பும் இடத்தில் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு பகிர்ந்து கொள்ளும் இடத்தில் வெளியீடு செய்ய வேண்டும். அதன்பின் பயனாளர் தரவுகளை உள்ளீடு செய்தபிறகு செந்தரப்படுத்தப்பட்ட XML வடிவமைப்பில் பாதுகாத்திட வேண்டும். இதனால் ஒரு நிறுவனத்தில் எந்த பகுதியிலிருந்து/பிரிவிலிருந்தும் தரவுகளை தகவல்களை எடுத்து பயன்படுத்தி கொள்ள முடியும். ஏனெனில் இது மற்ற பயன்பாடுகளாலும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பகிர்ந்து கொள்ளும் வகையில் உள்ளது. இதுவே ஒரு நிறுவனத்தில் எந்த பகுதி தகவல்களையும் சுலபமாக சேகரிப்பதற்கு உதவிடும் வரப்பிரசாதம் ஆகும். ஒரு நிறுவனத்தின் ஒரு பகுதியில் உள்ளவர்கள் XML அல்லது XML குறிமுறையில் எழுததெரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு இயக்க நேர படிவத்தை உருவாக்கு வதற்காக மற்ற பிரிவிலிருக்கும் தகவல்களை உடனடியாக சேகரித்து கொள்ள முடியும். இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட schema அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.

Info path இன் படிவங்களை உருவாக்குவதற்காக இயக்க நேரத்தில் தரவை உள்ளீடு செய்யும் அல்லது வினா எழுப்பும் வழிமுறையில் உருவாக்க முடியும். அதன்பிறகு தரவுகளை / வினாக்களை சமர்ப்பிக்க முடியும் அல்லது இணைய இணைப்பின் மூலம் தகவல்களை பெறுவதற்கு அல்லது அனுப்புவதற்கு முடியும்.

இதில் ஏராளமான மாதிரி படிவங்கள் உடனடியாக தயார்நிலையில் உள்ளன அவைகளை அப்படியே எடுத்தும் பயன்படுத்தலாம் அல்லது அவைகளில் ஒரு சில திருத்தங்களை செய்தும் பயன்படுத்தி கொள்ளலாம். இது ஒரு தயார்நிலையில் உள்ள அட்டவணையாக இருப்பதால் படிமுறைகளில் எங்கு எப்போது வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனை கைகளால் உருவாக்கப்படும் படிவங்களுக்கு மாற்றாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் உள்ள Schema ஆனது படிவங்களில் உள்ளீடு செய்யும் தரவுகளை கட்டுப்படுத்துகிறது. இணைப்புடைய தரவுதளத்தில் அல்லது இணையத்தில் தரவுகளை பாதுகாத்திட உறுதிப்படுத்துகிறது.

அக்சஸ் 37இல் வழிகாட்டி உதவியுடன் இண்போ பாத்2003ஐ உருவாக்குவதை பற்றி பார்த்தோம். இந்த வழிகாட்டி உதவியில்லாமல் எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்.

1.         கட்டளை பட்டையில் உள்ள new என்பதை தெரிவு செய்து info path என்ற காலி படிவத்தை திறந்து கொள்க. இதுவடிவமைப்பு செயல்படுத்துவதின் மூலம் திறந்திருக்கும்.

2.         இந்த வடிவமைப்பு செயல்படிவத்தில் layout என்பதை தெரிவு செய்தவுடன் layout அட்டவணை பகுதி உள்ளிணைப்பை திறந்து கொள்ளும்.

3.         அதில் table with title என்பதை தெரிவு செய்து சொடுக்குக.

4.         உடன் தோன்றும் click to add a title என்பதை சுட்டியை வைத்து தெரிவுசெய்து சொடுக்குக

5.         பின்னர் அதில் Mailing list name என தலைப்பாக தட்டச்சு செய்க

6.         அதன் பின்னர் செயல்பலகத்தில் உள்ள data source என்பதில் சுட்டியை வைத்து சொடுக்குக

7.         முகப்பு பகுதியில் சுட்டியை வைத்து சொடுக்குக. பின்னர் add form continuous என்பதை சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக

8.         உடன் படிவத்தின் இடதுபுற தலைப்பு பகுதியில் சுட்டி இருப்பதை தேவையான இடத்திற்கு நகர் த்திடுக. இதற்கான இடைவெளிப்பட்டை space bar அல்லது உள்ளீட்டு விசை (enter key) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்க.

9.         Address என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக. உடன் இடம்சுட்டி அடுத்தவரிக்கு நகர்ந்து விடும்.

10.       இதில் city: state: pin ஆகிய விவரங்களை அடுத்தடுத்த இடைவெளிவிட்டு உள்ளீடு செய்க.

இப்போது நாம் XML இணைப்புடைய புலங்களில் உருவாக்கு வதற்கும் உள்ளீடு செய்யவும் தயாராக இருக்கிறோம். தரவு மூல செயல்படிவத்தில் புலங்களை நேரடியாக சேர்க்க அல்லது செயல்பலகத்தை கட்டுப்படுத்த முடியும். முதலில் உரைபுலத்தை உருவாக்கி உள்ளீடு செய்க.

11.       அதற்காக data source task panல் உள்ள add எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. My field எனும் அட்டவணையின் வலப்புறம் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. உடன் தோன்றும் மேல்மீட்பு பட்டியில் add என்பதை தெரிவு செய்க. உடன் add field அல்லது group உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் ஆரம்பத்தில் இதில் மதிப்பேதும் இருக்காது.

12.       அதில் உள்ள name எனும் பகுதியில் full name என உள்ளீடு செய்து cannot be blank எனும் தேர்வு செய் பெட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி கொள்க.

13.       பின்னர்  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் info path ஆனது my field எனும் அட்டவணையினுடைய பெயரின் கீழ் full name எனும் உரைப்புலத்தை அமைத்து X என்ற தேதியுடன் it cannot be blank என்பதுடன் இருக்கும்.

14.       இந்த full name என்பதை பிடித்து இழுத்து சென்று நேரடியாக நாம் உருவாக்கும் address எனும் முகப்புபெயரில் விட்டுவிடுக. இப்போது இந்த முகப்பு பெயர்full name என பிரதிபலிக்க தேவையான அளவிற்கு இடைவெளிவிட்டு சரி செய்து கொள்க.

15.       Data source task nameல் உள்ள menu என்பதில் control என்பதை தெரிவு செய்க. உடன் கட்டுப்பாட்டு பலகம் திறந்து செயல்பட ஆரம்பிக்கும்.

16.       படிவத்தின் address, lable என்ற பகுதிக்கு இடம் சுட்டியை நகர்த்தி செல்க.

17.       கட்டுப்பாட்டு பலகத்தில் insert control என்பதை தெரிவு செய்து சொடுக்குக இடவெளியை முன் உரைபெட்டி கட்டுப்பாடு பெட்டிக்கும் சரி செய்க.

18.       மிகுதி உள்ள city, state, pin ஆகிய புலங்களுக்கும் இதே படிமுறை பின்பற்றி செய்க. இறுதியாக இந்த முகவரிக்கு ஒரு தேர்வு செய் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும்.

19.       அதற்காக முகவரியின் கடைசி பகுதிக்கு இடம்சுட்டியை நகர்த்தி சென்று (static கீழே) check box கட்டுப்பாட்டை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் XY என்ற இயல்பு நிலை புலமான இந்த தேர்வு செய் பெட்டி யொன்று தோன்றும்.

20.       இதற்கு is this an user address என்றவாறு மறு பெயரிடுக. இப்போது படிவம் படத்தில் உள்ளவாறு இருக்கும். சரி படிவம் உருவாக்கிவிட்டோம் இதனை வெளியீடு செய்ய வேண்டுமல்லவா அப்போது தானே தரவுகளை உள்ளீடு செய்யவோ சேமிக்கவோ சமர்ப்பிக்கவோ முடியும் அதற்கான படிமுறை

1.         கட்டளை பட்டையில் உள்ள file என்பதை தெரிவு செய்க. விரியும் file எனும் பட்டியில் save to activate MS info path என்பதை தெரிவு செய்க. உடன் தோன்றும் Microsoft Infopath  என்ற உரையாடல் பெட்டியில் publish மற்றும் save என்ற இரண்டு வாய்ப்புகள் இருக்கும்.

2.         Publish எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் publishing வழிகாட்டி செயலுக்கு வருவார்

3.         அதில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் திரையில் எங்கு படிவம் தோன்ற வேண்டுமோ அதனை தெரிவு செய்க

4.         அல்லது இயல்பு நிலையில் தோன்றும் பகுதியை அப்படியே விட்டுவிடுக. பின்னர்  next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எங்கு இந்த படிவம் சேமிக்க வேண்டும் என கேட்கும் தேவையான விவரங்களை உள்ளீடு செய்க.

5.         அதற்காக browse என்னும் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மற்றவர்கள் இதனை சுலபத்தில் அணுகுவதற்கு ஏற்றாற்போன்று இயக்கத்தை தெரிவு செய்வதை உறுதிப்படுத்தி கொள்க.

6.         பின்னர் mailing list என்றும் மாதிரி படிவத்தை தெரிவு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7.         இதில் இந்த படிவத்திற்கு இயல்பு நிலையில் ஒரு பெயரை தெரிவு செய்திருக்கும் தேவையெனில் மாறுதல் செய்க. பின்னா¢ next பொத்தானை சொடுக்குக

8.         இப்போது இறுதி நிலைக்கு வந்துள்ளோம். Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பொதுவான அனைத்து தரப்பாளரும் அணுகும் இயக்கத்தில் உள்ளதா என சரிபார்த்து கொள்க.

9.         இப்போது இந்த மாதிரி படிவம் பாதுகாக்கப்பட்டு எவரும் பயன்படுத்த தயார் நிலையில் இருக்கும். பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியை மட்டும் உள்ளீடு செய்தால் போதும். இந்த செய்தி நாம் குறிப்பிடும் நபருக்கு சென்று சேர்ந்துவிடும்.

10.       பிறகு Close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உங்கள் info path பணிகள் பாதுகாத்து முடிக்கப்பட்டு செயல்படுத்த தாயராகிவிடும். இதற்கு முன் அக்சஸ் 37ல் வழிகாட்டி மூலம் அல்லது இப்போது நாமாக உருவாக்கிய infopath மாதிரி படிவத்தை நம்முடைய நிறுவனத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள இணைய அலுவலகங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003 தொடர் பகுதி – 37-XML ஆவணத்தை அக்சஸ் படிவத்திற்கு பதிவேற்றும்செய்தலும் பதிவிறக்கும் செய்தலும்

அக்சஸின்  படிவத்தை ஒரு XML  ஆவணத்திற்கு பதிவேற்றம் செய்யும் போது இறுதியாக HTML  வகை கோப்பின் தொடர்ச்சி படிவமாகவும் ,ஒவ்வொரு ஆவணத்தையும் பிரதிபலிக்க கூடியதாகவும் உருவாகிறது.இது ஒரு ஒற்றை படிவத்தின் இயல்பு நிலைக் காட்சி பண்பியல்பாக இருந்தாலும் இதுவே உண்மையாகும்.

ஒரு mailing info contacts படிவம் எவ்வாறு பதிவேற்றம் செய்வது எனும் படிமுறையை இப்போது காண்போம்.

1.   Mailing Info contact என்றவாறு உள்ள ஒரு படிவத்தை தரவுதள (Data base) தாங்கியிலிருந்து (container)தெரிவு செய்க.

2.   பின்னர் மேலே கட்டளை பட்டையில்(Command Bar) உள்ள file என்பதை தெரிவு செய்தவுடன் படம் 1 ல் உள்ளவாறு  விரியும் பட்டியில்(Menu) Export என்றவாறு தெரிவு செய்க அல்லது சுட்டியின்(Mouse) வலதுபுறபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக(Click). உடன் தோன்றும் சூழ்நிலை பட்டிய (contest menu) லில் export  என்பதை தெரிவு செய்க. உடன் அக்சஸானது export form என்ற உரையாடல் பெட்டியை(dialog box) படம் 1 ல் உள்ளவாறு  திறந்து பதிவேற்றம் செய்வதற்கு தயாராக திரையில் பிரிதிபலிக்கும்.

3.   அதில் save as  என்பதை தெரிவு செய்க.உடன் விரியும் கீழிறங்கு பட்டியின் மூலம் XML documents வகை கோப்பு என்பதை தெரிவு செய்க. இந்த கோப்பு பாதுகாக்கப்பட வேண்டிய கோப்படைவை( directory )யும்தெரிவு செய்க.

படம் -1

4.   இப்போது என்ன கோப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என இதற்கு ஒரு பெயரிடுக. அல்லது இயல்பு நிலையில் mailing info on contacts என்பதை ஏற்றுக் கொள்க.

5.   பின்னர் Export எனும் பொத்தானை சொடுக்குக. உடன் அக்சஸ் ஆனது Export XML என்ற உரையாடல் பெட்டியை படம் 2 ல் உள்ளவாறு திறந்து கொள்ளும். இதில்  XML தரவை மட்டும் சரிபார்க்கும் வாய்ப்பாக இருக்கும்.

6.   தரவை மட்டும் பதிவேற்றம் செய்ய போகிறோமோ அல்லது schemaவையும் சேர்த்து பதிவேற்றம் செய்யப் போகிறோமோ என சரிபார்த்து அமைத்து கொள்வதற்கான வாய்ப்பில்.

படம் -2

7.   select what information will be exported என்பதன்கீழ் தரவை (data  Xml ) பதிவேற்றம் செய்யப்போகிறோம் என்பதை தெரிவு செய்து advanced எனும் பொத்தானை சொடுக்குக.

படம் -3

8.   உடன் XML பதிவேற்றத்தின் விரிவாக்க உரையாடல் பெட்டி படம் 3 ல் உள்ளவாறு தோன்றும் அதில் presentation என்பதை தெரிவு செய்து சொடுக்குக.

9.   பின்னர் Export presentation (HTML 4.0 sample XSd) என்பதை தெரிவு செய்து கொள்க. அதன்பின்னர் Run from என்பதில் client (HTML) என்பதை தெரிவு செய்து கொள்க. பின்னர் மத்தியில் உள்ள include report images என்பதில் put images என்பதை தெரிவு செய்து இயல்பு நிலையில் images என்னும் இயக்ககம் தெரிவு செய்ய பட்டிருக்கும் தேவையானால் மாற்றிக் கொள்ளலாம்.

10.  முடிவாக ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அக்சஸ் ஆனது ஒரு xML ஆவணத்தையும் ஒரு XSd கோப்பையும்(படம் 4 ல் உள்ளவாறு) இதனுடன் தொடர்புடைய ஒரு HTML ஆவணத்தையும் உருவாக்கியிருக்கும்

படம் -4

சாதாரண அட்டவணை XML ஐ பதிவிறக்கும் செய்தல் :

1.   தரவு தளத்தில் மேலே உள்ள கட்டளை பட்டையில் file என்று தெரிவு செய்தவுடன் விரியும் பட்டியிலில் get external data என்பதையும் உடன் விரியும் சிறுபட்டியில் import என்பதையும் தெரிவு செய்க அல்லது சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் import என்பதை தெரிவு செய்க. உடன்  import என்ற உரையாடல் பெட்டி தோன்றும்.

2.   அதில் XML (XML, XSD) என்ற வகையான கோப்பை கீழிறங்கு பட்டியல் மூலம் தெரிவு செய்க. உடன் அனைத்து XML மற்றும் XSD கோப்புகளையும் பிரதிபலிக்க செய்யும்.

3.   Reading programe XML எனும் கோப்பு உள்ள கோப்படைவிற்கு (Directory)செல்க

4.   பின்னர்  reading program XML என்பதை தெரிவு செய்து import எனும் பொத்தானை சொடுக்குக. உடன் அக்சஸ் ஆனது import XML எனும் உரையாடல் பெட்டியை திரையில் பிரதிபலிக்க செய்யும். கோப்பின் கட்டமைப்பு structure மட்டும் பதிவிறக்கும் செய்தால் போதுமென எண்ணினால் option என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் வாய்ப்பில் structure only என்பதை தெரிவு செய்க. மற்றவையெனில் வேறு வாய்ப்பினை transform file என்பதை தெரிவ செய்து apply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

5.   பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Reading program XML எனும் அட்டவணை பதிவிறக்கும் செய்யும் செயல் ஆரம்பித்துவிடும் அதனுடன் கோப்பு பதிவிறக்கும் செய்யப்படுகிறது எனும் செய்தி பெட்டி படம் 5 ல் உள்ளவாறு தோன்றும்.

6.   உடன் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய அட்டவணைஒன்றும் reading program XML தரவு தளத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக XML கோப்பினை தெரிவு செய்தால் XML மற்றும் XSD கோப்புகள் பதிவிறக்கும் செய்யப்பட்டிருக்கும் ,திறவுகோல் அல்லது சுட்டிகாட்டுவதற்கான தகவல் மட்டும் எனில் XSD கோப்பினை தெரிவு செய்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.

படம் -5

Info patht XML ஆவணத்தை அக்சஸில் பதிவிறக்கும் செய்வது

1.   முதலில் தரவு தளத்தை திறந்து அதில் அட்டவணை table எனும் object தெரிவு செய்யப்பட்டு அதில் உள்ளஅனைத்து அட்டவணைகளும் பிரதிபலிக்க செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.

2.   பின்னர் மேலே கட்டளை பட்டையில் உள்ள file என்பதை தெரிவு செய்க உடன் விரியும்பட்டியலில் get external data என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் சிறு பட்டியில் export என்பதை தெரிவு செய்க.

3.   உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் XML (XML, XSD) என்பதை கோப்பின் வகையாக  தெரிவு செய்க.

4.   பின்னர் சரியான பாதையை(path) தெரிவு செய்து விருப்பப்படும் New student.XML என்றவாறு உள்ள கோப்பினை தெரிவு செய்து import என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அக்சஸானது import XML என்ற  உரையாடல் பெட்டியை பிரதிபலிக்க செய்யும,அதில்  அட்டவணையின் table பெயர் New customer என சுட்டிகாட்டும். அதனை இடம்சுட்டியால் பிடித்து சொடுக்கியவுடன் அதில் உள்ள புலங்களின் பெயர்  தோன்றும் இதுவே நாம் முன்பு உருவாக்கிய மாதிரி படிம அட்டவணையாகும். பின்னர் option என்ற வாய்ப்பு பொத்தானை தெரிவு செய்து சொடுக்கியவுடன் structure only, structure data, append data to existing table என்பதில் ஒன்றை தெரிவு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒற்றை ஆவணமான New student என்பது New customer என்ற அட்டவைணக்குள் படம் -6 ல் உள்ளவாறு பதிவிறக்கும் செய்யப்பட்டுவிடும்.

படம் -6

data source set up wizard ஐ பயன்படுத்தி கொள்ளுதல்

1.   தரவு தளத்தில் மேலே கட்டளை பட்டையிலுள்ள file  என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் design form என்பதை தெரிவு செய்க.

படம் -7

2.   உடன் தோன்றும் செயல்பலகத்தில் (task pane) new என்பதை data source என்பதிலிருந்து தெரிவு செய்க. உடன் data source set up wizard என்பது படம் -7 ல் உள்ளவாறு திறந்து கொள்ளும்.

3.   அதில் Data base(Microsoft SQL Server or Microsoft Office Access only) என்பதை தெரிவு செய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

4.   பின்னர் Select data base என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவு செய்க

5.   பின்னர் open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம் -8

6.   உடன் படம் -8 ல் உள்ளவாறு தோன்றும் select table என்ற உரையாடல் பெட்டியில் customer for info path table என்பதை தெரிவு செய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இரண்டாவது பக்கத்திற்கு சென்று data source structer என்ற திரையில் கீழ்பகுதியில் பிரதிபலிக்க செய்யும்

7.   பின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம் -9

8.   உடன் படம் -9 ல் உள்ளவாறு தோன்றும இறுதி திரையில் submit status  என்பது Enabled என்றும் designing data view first எனும் வாய்ப்பு இயல்பு நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.

9.   Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர் -பகுதி-36-சாதாரண XML ஆவணத்தை உருவாக்குதல்

தரவுகளை அணுகுதலின் பக்கங்கள் (DATA ACCESS PAGES): ஒருஅக்சஸிற்கு வெளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களே இணையப்பக்கம் ஆகும். இது தரவுதளத்துடன் இணைப்பாக இருப்பதால் இதனை இணைய உலாவியின் மூலம் திறக்கவோ அல்லது நிகழ்நிலைப்படுத்தவோ முடியும். அக்சஸின் படிவங்களும் அறிக்கைகளும் XMLன் அடிப்படையாக கொண்ட Report XML கோப்பாக (பாதுகாக்க) தேக்கப்படுகிறது. இதுவே தரவுகளையும் தரவுகளின் மாதிரிகளையும் வைத்து ஒரு DAPயை உருவாக்க உதவுகிறது.

பொதுவாக இணையப்பக்கங்களை நிலையானது(Static) , இயக்க நிலையானது (Dynamic) ஆகிய இருவகையாக பிரிக்கலாம். நாம் முதன் முதலில் உருவாக்கிய இணைய பக்கம் மாறாமல் எப்போதும் அப்படியே  இருப்பது நிலையான  (static) பக்கம் ஆகும். பின்னர் ஏதேனும் மாறுதல் செய்திருந்தால் அவ்வாறு மாற்றப்பட்டவாறு பிரதிபலிக்காது.

அதன் மறுதலையாக எவ்வப்போது மாறுதல் செய்கின்றோமோ அந்த மாறுதலுடன்  தோன்றுவது  இயக்கநிலை(Dynamic) பக்கமாகும். நடப்பு தரவுகள் இதில் பிரதிபலிக்கும்.

உண்மையில் DAP ஆனது ஒரு இயக்க நிலை பக்கமாகும் அதனால் இதில்  உலாவுதல், தேடுதல், வடிகட்டுதல், மாறுதல் செய்தல், சேர்த்தல், நீக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்ய முடியும்.

ஒரு DAP யை உருவாக்குமுன் கீழ்காணும் பொதுவான கருத்துகளை கவனத்தில் கொள்ளவும்.

1.ஒரு DAPயை உருவாக்கியவுடன் இதனை எவரும் இணையத்தில் தேடிபார்த்திட முடியும் என்ற தவறான கருத்தினை கொள்ள வேண்டாம். முறையான படிமுறையில் இணையத்தில் இதனை  வெளியீடு செய்தால் மட்டுமே மற்றவர் களால் இணைய தளத்தில் இதனை  தேடி காண முடியும்.

2.ஒரே நிறுவனத்தில் இருப்பவர்கள்  LAN இணைப்பிருந்தால் மட்டும்Internet explorer மூலம் இயக்க நிலை பக்கமாக இதனை காண முடியும்.

3.இந்த DAP ஆனது அக்சஸை விட்டு வன்தட்டின் வேறு பகுதியில் சேமிக்கப் படுவதால் இதனை Delet என்ற கட்டளை மூலம் நீக்கம் செய்யும்போது அக்ஸஸ் தொடர்பையும்(Link) நீக்கம் செய்திடவா   என கேட்டு நிற்கும். அதனால் நீக்கம் செய்யும் போது கவனமாக செய்யவும்.

4.மற்ற வகை வழிமுறையில்  ஒரு DAPயை உருவாக்குவதை விட தரவு தளத்தில் உள்ள Object ஐ உருமாற்றம் செய்வதன் மூலம் DAPயாக ஆக்குவது நல்லது. இதற்காக VBA குறிமுறைகள் ஏதும் திரையில் காண முடியாது.

5.இயக்க நிலை HTML ஆக இது இருப்பதால் வாடிக்கையாளர்,சேவையாளர் சூழலில் இதனை அணுகுவது மிகத்திறன் வாய்ந்த செயலாகும்.

இந்த DAPயை எவ்வாறு உருவாக்குவது என அக்ஸஸ-2003 தொடர்-பகுதி-19 இல் கண்டோம்.

XML மற்றும் இணையதளத்தில் பயன்படும் ஒரு சில வார்த்தைகளை பற்றி இப்போது காண்போம்.

 1) அடுக்கி வைத்த அழகுத்தாள்கள் (Cascading Style Sheet) (CSS):.

இது ஒரு வலைப்பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும் விதம்,அதன்எழுத்துரு, உருவ அளவு, வண்ணம் போன்றவை வரைமுறைக்குள் நிர்ணயிக்கப்  பட்டு பிரதிபலிக்க செய்யப்படும் அடுக்கி வைக்கப்பட்ட HTML  ஆவண பக்கங்கள் ஆகும்.

 2) ஆவண வகை வரையறை (Document Type Defuilt) (DTP)

உறுப்புகளின் பெயர் மற்றும் பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வரையறைக்குள் எந்த வரிசையில் இவைகள் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு  பயன்படுத்துவதற்கு உதவுகிறது.

 3) உறுப்புகள் (Element): இது XML ஆவணத்தில் உறுப்புகளை வரையறுக்கும் போது ஆரம்பத்தையும் முடிவையும் சுட்டிகாட்டும் அடையாளக் குறி (tag)யாகும்.

4) XSLT: இது ஒரு XML ஆவணத்தின் கட்டமைவை பல்வேறு கோணங்களில் காண்பதற்கு ஏற்றவாறு  மாறுதல் செய்ய பயன்படுகிறது.

5) XML அமைப்பு முறைகள் (schema):  இது தரவுத்தளத்தின் கட்டமைப்பை வரையறுப்பதற்குகான மொழியாகும்.

 6) XSD: ஒரு XML கோப்பில் schema  தகவல்கள் அடங்கியதாகும்.

7) XSL: இது XML ஆவணத்துடன் இணைப்பாக உருவாக்கப்படும் அழகிய அடுக்கு தாள்களாகும,.

ஒரு சாதாரண XML ஆவணத்தை உருவாக்கும் படிமுறை

1)அட்டவணை (table), நூலக அமைப்பு (Library system), பொருள் இருப்பு அமைப்பு  (inventory system) போன்றவற்றில் ஒன்றை உருவாக்குவதாக முடிவு செய்து கொள்க..

2)அதற்கு ஏதேனுமொரு பெயரை சூட்டுக.

3)ஒவ்வொரு ஆவணத்திற்கும் என்னென்ன புலங்கள் எத்தனை உருவாக்குவது எனவும் முடிவு செய்து கொள்க.

4)பொதுவான வகை (படிமுறை 1), அட்டவணையின் பெயர் (படிமுறை 2), புலங்களின் பெயர் (படிமுறை 3) ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு நிலையிலும் அடையாளக் குறியை (tag)  பயன்படுத்துக.

5)XML ஆவணத்தில் புலங்களில் உள்ள பக்கம் என்னவாக இருக்க வேண்டும்   எனவும் குறிப்பிடுக.

6)XML வகையாக அறிவிப்பு செய்யும் வரியுடன் XML  ஆவணஙகளை  < ?XML version “1.1”?> என்றவாறு உருவாக்க  ஆரம்பிக்கவும்.

7)ஆரம்ப அடையாளக்குறி  (start tag),  முடிவு அடையாளக்குறி (end tag),  XML  ஆவணத்தின் மற்ற உள்ளடக்கங்களை படம்-1 உள்ளவாறு உள்ளீடு செய்க.

8)இந்த XML ஆவணத்திற்கு ஒரு பெயரிட்டு  சேமித்திடுக.

 

மாதிரி நிரல் தொடர்-36-1

< ? XML version = “1.0”? >

< Reading Programme >

< School Book >

< Book Title > introduction to access < / Book Title >

< Author > (KUPPAN.S) < / Author>

< Grade > < /Grade >

< Date read ( 2012-04-24) < /Date Read >

< / School Books >

< / Reading programme >

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்- பகுதி- 35 அக்சஸ் கோப்பினை HTML, XML ஆவனமாக உருவாக்குதல்

இன்று www எனும் இணையம் இல்லையேல் வாழ்வே இல்லை என்ற அளவிற்கு இதன் தாக்கம் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது,.இது அனைத்து தகவல்களையும் தாங்கியுள்ள,ஒருவரோடு மற்றொருவர் ஊடாடுவதற்கு உதவுகின்ற ஒரு வாகனம் ஆகும். இந்த இணையத்தில் இருந்து தகவல்களை தேடி பெறுவதற்கும் நம்முடைய தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தவற்கும் தேவையான தரவுகளை நிருவகிக்கும் தளமாக அக்சஸ் ஆனது மிக முக்கிய பங்காற்றுகிறது.

அக்சஸில்  அட்டவணை, படிவம், அறிக்கை போன்றவைகளை உருவாக்கி HTML அடிப்படையில்  சேமித்து வைக்க முடியும். இதனை பின்னர் எந்த ஒரு இணைய பக்கத்தின் மூலமும் தரவுகளாக பயன் படுத்தி கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் Data Access Page என்ற கூடுதலான பயனையும் இதன் மூலம் பெற முடியும். மேலும் இது ஒரு சிறப்பு வகை இணைய பக்கமாகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் Internet Explorer உலாவியின் மூலம் தரவுகளை காட்சியாக காணவும், தரவுகளுடன் பணிபுரியவும் அனுமதிக்கிறது.

மேலும் இணையத்தின் (Internet) மூலம் மற்றும் வளாக பிணையத்தின் (Intranet) மூலம் இயக்க (Dynamic) நிலையான (Static) தரவுகளை(data) அணுகு வதற்கும் பயன்படுகின்றது. இந்த தரவுகளை அக்சஸில் அல்லது SQL பணியகத்தில் தேக்கி வைத்து கொள்ளமுடியும்.

பொதுவாக பெரிய நிறுவனங்களில் உள்ள கணினிகளை இணைத்து தமக்குள் தகவல்களை பரிமாறி கொள்ள Local Area Network ஆக ஏற்படுத்தும் இணைப்பை  Intranet என அழைப்பார்கள்.. இவ்வாறு நிறுவனத்திற்கு உள்ளேயே ஏற்படுத்தி கொள்ளும் பிணைப்பானது தகவல்களை பரிமாறிக்கொள்ளும் செலவை குறைக்கவும், தகவல்களை பரிமாற்றும் வேகத்தை அதிகப்படுத்தவும,தரவுகளை சுலபமாக அணுகுவதற்கும் பயன் படுகிறது. இந்தInternetஉம் www அடிப்படையிலேயே இணைக்கப்படுகிறது.

அக்சஸ் மூலம்

1,தரவு அணுகுதல் பக்கம் Data Access Page,

2,நிகழ்நிலைப்படுத்தப்பட்ட படிக்க மட்டும் உள்ள இயக்கநிலை (dynamic) தரவு படிவம் ,

3, அட்டவணை, வினா அறிக்கை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நிலையான Static தரவுகளின் பக்கம் என பல வகைகளில் இணையத்தில் பக்கங்களை உருவாக்க முடியும்.

1.இணையத்தின் மூலம் தரவுகளை அணுகி மாறுதல் செய்வதற்கு Data Access Page உதவுகிறது.

2.இயக்க நிலையில் மாற்றப்பட்ட ஆனால் படிக்க மட்டும் உள்ள பக்கங்களை Active server pages மூலம் உருவாக்க முடியும்.

3.இவையெல்லாம் தேவையில்லை தரவுகளை மட்டும் பிரதிபலித்தால் போதும் என்ற நிலையில் Staticஆக  HTML ஆவனங்களை உருவாக்க முடியும்.

இங்கு HTML என்பது Hyper Text Markup Language என்பதன்சுருக்க பெயராகும், இது ஒரு செந்தரப்படுத்தப்பட்ட(standard) சிறப்பு மொழியாகும். பெரும்பாலானவர் கள் இணையத்தின் பக்கங்களை HTML ஐ பயன்படுத்தியே உருவாக்குவார் கள். அக்சஸில் உள்ள கருவிகளின் துணை கொண்டும் HTML ஆவனமாக உருமாற்றப்பட்டு இணையத்தில் பிரதிபலிக்க செய்து காண முடியும்.

இந்த HTML ஆனது உரைகள், படங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட்ட வரையறைக்குள் பிரதிபலிப்பு செய்கின்றது. குறிப்பிட்ட வரையறைக்குள் இந்த தரவுகளின் கட்டமைப்பு இருப்பதால் இதனையும் இணையத்திற்கு எடுத்து செல்ல உதவுவதுதான் Extensive Markup Language (XML) ஆகும்,இது செந்தரப்படுத்தப்பட்ட, வடிவமைக்கபபட்ட, சிறப்பு குறியீடாகும். இதன் துணை அமைப்பாக Standard Generating Markup Language (SGML) என்பது குறிப்பாக இணைய ஆவணங்களாக வடிவமைக்கப்பட்டதாகும்.

இங்கு XML ஆனது தரவுகளின் இணையான தரவாக சமமற்ற பரிமாற்றத்தில் வடிவமைப்பை உருவாக்குதல், வழங்குதல், பெறுதல், ஏற்புடைத்தாக்குதல(validation), செயல்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.

இந்த XMLல் தரவு பரிமாற்றம் (data exchange), வெளியிடுதல் (publishing) என்ற இரண்டு இனங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

கண்ணால் காணும் தோற்றத்தில் XMLஉம் HTMLஉம் ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

XML என்பது இணையத்தின் தரவுகளின் கட்டமைப்பை விவரிக்கிறது, ஆனால் HTML என்பதுகுறிப்பிட்ட வரைமுறைக்குள் இணைய பக்கத்தை உருவாக்கவும், பிரதிபலிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு செந்தரப்படுத்தப் பட்ட மொழியாகும்.

, அக்சஸில் XMLஐ தரவாக பதிவேற்றம், பதிவிறக்கம் செய்ய தேவையான கருவிகளை கொண்டுள்ளது.

இவ்வாறு XML ஐ தரவாக பதிவேற்றம் செய்யும் படிமுறை பின்வருமாறு

1.ஒரு அக்சஸின் மடிப்பகத்தில்(folder)¢ உள்ள தரவுதள கோப்பு ஒன்றினை திறந்து கொள்க. பின்னர் திரையில் பிரதிபலிக்கும் அக்சஸ் சாளரத்தின் இடதுபுறத்தில் உள்ள அட்டவணை (Table) என்பதை தெரிவு செய்து வலதுபுறத்தில் உள்ள அட்டவணை வகைகளில் ஒன்றை தெரிவு செய்து சொடுக்குக.

2.பின்னர் சாளரத்தின் மேல் பகுதியில் கட்டளை பட்டையில்(menu bar) உள்ள File என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியலில(menu) Export என்பதை தெரிவு செய்க.

3.பின்னர் இந்த பதிவேற்றம் செய்ய விரும்பும் கோப்பு எந்த பகுதியில் சேமிக்க வேண்டும் என விரும்புகிறோமோ அந்த மடிப்பகத்தை தெரிவு செய்க.அதன்பின் தோன்றிடும் Save as வகை பெட்டியில் உள்ள கீழிறங்கு பட்டி பெட்டியை (drop down box) தெரிவு செய்க. உடன் விரியும் கோப்பின் வகைகளில் XML document என்பதை (படம்-1) நம்முடைய கோப்பின் வகையாக தெரிவு செய்க

  படம்-1

 4.பின்னர் ExportAll என்பதை சொடுக்குக. உடன் படம்-2-ல் உள்ளவாறு Export XML உரையாடல் பெட்டியொன்று தோன்றும். அதில் மூன்று வாய்ப்புகள்

இருக்கும்.

    படம்-2

 5.இந்த வாய்ப்புகள் மூன்றையும் தெரிவு செய்க. (XML, XSL, XSD ஆகிய வகைகளில் கோப்புகள் உருவாக்கப்படும். பின்னர் Advanced என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Export XML என்ற உரையாடல் பெட்டி யொன்று படம்-3-ல் உள்ளவாறு தோன்றும். அதில் Schema என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் பகுதியில் Create a seperatescema document என்பதை தெரிவு செய்து இதற்கு sk. XSD என்றவாறு பெயரை அமைத்திடுக.

படம்-3

 6பின்னர் மேலே உள்ள Presentation என்பதை தெரிவு செய்து சொடுக்குக(click). உடன் படம்-4-ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் run from என்பதில் client HTML என்பதை தெரிவு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக


படம்-4

 இங்கு run from Server (ASP) என்பதை தெரிவு செய்தால் ASP பின்னொட்டுடன் கோப்பு உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பக்கத்தை பார்த்தறிவதற்கான படிமுறை பின்வருமாறு :

1.திரையில் Internet Explorer என்பதை திறந்து கொள்க. பின்னர் எந்த பகுதியில் தரவுகளின் கோப்பினை சேமித்து வைத்தோமோ அந்த மடிப்பகத்தை(Folder)  (படம்-5)திறந்து கொள்க.

படம்-5

2.பின்னர் Details window எனும் வாய்ப்பு செயலில் இருக்குமாறு பார்த்து கொள்க. HTML-ன்வகையாக sk.html என்ற கோப்பினை தெரிவு செய்து இருமுறை சொடுக்குக

3.உடன் தோன்றும் புலத்தின் தரவுகளை மாறுதல் செய்ய முற்படுக. ஆனால் தரவுகளில் மாறுதல் ஏதும் ஆகாது ஏனெனில் இது படிக்க மட்டுமே செய்யும். அதனால் HTML-ன் வகை கோப்பினை மூடிவிடுக.

4.XML-ன் வகை sk.xsd கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்கி இதனை திறந்து கொள்க. பின்னர் கீழ்காணும் பட்டி வரிகளை ( முதல் ஆவணம் மட்டும்  தோன்றுவதற்காக) உள்ளீடு செய்க,

நிரல் தொடர் -35-1

<?xml version=”1.0″ encoding=”UTF.8″?>

<dataroot xmlns:od=”urn:schemas.microsoft.com:officedata”

xmlns: xsi = “http:/www.w3.org/2007/10/xmlschema.instance”

xsi:noNamespacescemaLocation=”skcustomers.xsd”>

<Customers>

<Customers ID> 707</customer Id>

<SortName>Vasanthan</sortName>

<Customer>Vasanthakumar</customer>

<Address>3,Marutham Illam</Address>

<City> Moongilthuraipattu</city>

<State>TamilNadu</state>

<Zip>605702</zip>

</Customers>

5.இந்த பட்டி sk XSD ஆக Schema வாக திறக்கப்படுகிறது. பின்னர் இந்த கோப்பினையும், சாளரத்தையும் மூடிவிடுக. இவ்வாறு நம்மால் XML-இற்கு பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்பினை திறந்து காண முடியும்.

1.இவ்வாறே HTML ஆவனமாக ஏற்றுமதி செய்வதற்கான படிமுறை அல்லது பதிவேற்றம் செய்ய விரும்பும் அட்டவணையில் இடம்சுட்டியை வைத்து வலப்புறம் சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை(Contest menu) பட்டியலில் export என்பதை தெரிவு செய்க.

2.உடன் தோன்றும் export table உரையாடல் பெட்டியில் Save as type என்ற உரையாடல் பெட்டியில் கீழிறங்கு பட்டியலை தோன்ற செய்து HTML document என்பதை தெரிவு செய்க.

3.இந்த கோப்பிற்கு  sk  என்றவாறு பெயரிடுக.

4.பின்னர் ExportAll என்பதை சொடுக்குக. உடன் நாம் தெரிவு செய்த கோப்பு நாம் உள்ளீடு செய்த பெயரில் HTML என்ற பின்னொட்டுடன் சேமிக்கப்பட்டு விடும். இங்கு HTML வடிவமைப்பின் ஏதாவது குறிப்பிட்ட வகை வடிவமைப்பில் சேமிக்க வேண்டுமெனில் Save format என்ற வாய்ப்பை தெரிவு செய்க. உடன் படம்-6-ல் உள்ளவாறு தோன்றும் பெட்டியில் மாதிரி படிவத்தில் மூன்று வாய்ப்புகளில் (பொதுவாக இயல்பு நிலை defualt encoding என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும்.  தேவையானயொன்றை தெரிவு செய்க.

படம்-6

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்- பகுதி- 35 அக்சஸ் கோப்பினை HTML, XML ஆவனமாக உருவாக்குதல்

றிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்- பகுதி- 35 அக்சஸ் கோப்பினை HTML, XML ஆவனமாக உருவாக்குதல்

இன்று www எனும் இணையம் இல்லையேல் வாழ்வே இல்லை என்ற அளவிற்கு இதன் தாக்கம் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது,.இது அனைத்து தகவல்களையும் தாங்கியுள்ள,ஒருவரோடு மற்றொருவர் ஊடாடுவதற்கு உதவுகின்ற ஒரு வாகனம் ஆகும். இந்த இணையத்தில் இருந்து தகவல்களை தேடி பெறுவதற்கும் நம்முடைய தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தவற்கும் தேவையான தரவுகளை நிருவகிக்கும் தளமாக அக்சஸ் ஆனது மிக முக்கிய பங்காற்றுகிறது.

அக்சஸில்  அட்டவணை, படிவம், அறிக்கை போன்றவைகளை உருவாக்கி HTML அடிப்படையில்  சேமித்து வைக்க முடியும். இதனை பின்னர் எந்த ஒரு இணைய பக்கத்தின் மூலமும் தரவுகளாக பயன் படுத்தி கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் Data Access Page என்ற கூடுதலான பயனையும் இதன் மூலம் பெற முடியும். மேலும் இது ஒரு சிறப்பு வகை இணைய பக்கமாகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் Internet Explorer உலாவியின் மூலம் தரவுகளை காட்சியாக காணவும், தரவுகளுடன் பணிபுரியவும் அனுமதிக்கிறது.

மேலும் இணையத்தின் (Internet) மூலம் மற்றும் வளாக பிணையத்தின் (Intranet) மூலம் இயக்க (Dynamic) நிலையான (Static) தரவுகளை(data) அணுகு வதற்கும் பயன்படுகின்றது. இந்த தரவுகளை அக்சஸில் அல்லது SQL பணியகத்தில் தேக்கி வைத்து கொள்ளமுடியும்.

பொதுவாக பெரிய நிறுவனங்களில் உள்ள கணினிகளை இணைத்து தமக்குள் தகவல்களை பரிமாறி கொள்ள Local Area Network ஆக ஏற்படுத்தும் இணைப்பை  Intranet என அழைப்பார்கள்.. இவ்வாறு நிறுவனத்திற்கு உள்ளேயே ஏற்படுத்தி கொள்ளும் பிணைப்பானது தகவல்களை பரிமாறிக்கொள்ளும் செலவை குறைக்கவும், தகவல்களை பரிமாற்றும் வேகத்தை அதிகப்படுத்தவும,தரவுகளை சுலபமாக அணுகுவதற்கும் பயன் படுகிறது. இந்தInternetஉம் www அடிப்படையிலேயே இணைக்கப்படுகிறது.

அக்சஸ் மூலம்

1,தரவு அணுகுதல் பக்கம் Data Access Page,

2,நிகழ்நிலைப்படுத்தப்பட்ட படிக்க மட்டும் உள்ள இயக்கநிலை (dynamic) தரவு படிவம் ,

3, அட்டவணை, வினா அறிக்கை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நிலையான Static தரவுகளின் பக்கம் என பல வகைகளில் இணையத்தில் பக்கங்களை உருவாக்க முடியும்.

1.இணையத்தின் மூலம் தரவுகளை அணுகி மாறுதல் செய்வதற்கு Data Access Page உதவுகிறது.

2.இயக்க நிலையில் மாற்றப்பட்ட ஆனால் படிக்க மட்டும் உள்ள பக்கங்களை Active server pages மூலம் உருவாக்க முடியும்.

3.இவையெல்லாம் தேவையில்லை தரவுகளை மட்டும் பிரதிபலித்தால் போதும் என்ற நிலையில் Staticஆக  HTML ஆவனங்களை உருவாக்க முடியும்.

இங்கு HTML என்பது Hyper Text Markup Language என்பதன்சுருக்க பெயராகும், இது ஒரு செந்தரப்படுத்தப்பட்ட(standard) சிறப்பு மொழியாகும். பெரும்பாலானவர் கள் இணையத்தின் பக்கங்களை HTML ஐ பயன்படுத்தியே உருவாக்குவார் கள். அக்சஸில் உள்ள கருவிகளின் துணை கொண்டும் HTML ஆவனமாக உருமாற்றப்பட்டு இணையத்தில் பிரதிபலிக்க செய்து காண முடியும்.

இந்த HTML ஆனது உரைகள், படங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட்ட வரையறைக்குள் பிரதிபலிப்பு செய்கின்றது. குறிப்பிட்ட வரையறைக்குள் இந்த தரவுகளின் கட்டமைப்பு இருப்பதால் இதனையும் இணையத்திற்கு எடுத்து செல்ல உதவுவதுதான் Extensive Markup Language (XML) ஆகும்,இது செந்தரப்படுத்தப்பட்ட, வடிவமைக்கபபட்ட, சிறப்பு குறியீடாகும். இதன் துணை அமைப்பாக Standard Generating Markup Language (SGML) என்பது குறிப்பாக இணைய ஆவணங்களாக வடிவமைக்கப்பட்டதாகும்.

இங்கு XML ஆனது தரவுகளின் இணையான தரவாக சமமற்ற பரிமாற்றத்தில் வடிவமைப்பை உருவாக்குதல், வழங்குதல், பெறுதல், ஏற்புடைத்தாக்குதல(validation), செயல்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.

இந்த XMLல் தரவு பரிமாற்றம் (data exchange), வெளியிடுதல் (publishing) என்ற இரண்டு இனங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

கண்ணால் காணும் தோற்றத்தில் XMLஉம் HTMLஉம் ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

.XML என்பது இணையத்தின் தரவுகளின் கட்டமைப்பை விவரிக்கிறது, ஆனால் HTML என்பதுகுறிப்பிட்ட வரைமுறைக்குள் இணைய பக்கத்தை உருவாக்கவும், பிரதிபலிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு செந்தரப்படுத்தப் பட்ட மொழியாகும்.

, அக்சஸில் XMLஐ தரவாக பதிவேற்றம், பதிவிறக்கம் செய்ய தேவையான கருவிகளை கொண்டுள்ளது.

இவ்வாறு XML ஐ தரவாக பதிவேற்றம் செய்யும் படிமுறை பின்வருமாறு

1.ஒரு அக்சஸின் மடிப்பகத்தில்(folder)¢ உள்ள தரவுதள கோப்பு ஒன்றினை திறந்து கொள்க. பின்னர் திரையில் பிரதிபலிக்கும் அக்சஸ் சாளரத்தின் இடதுபுறத்தில் உள்ள அட்டவணை (Table) என்பதை தெரிவு செய்து வலதுபுறத்தில் உள்ள அட்டவணை வகைகளில் ஒன்றை தெரிவு செய்து சொடுக்குக.

2.பின்னர் சாளரத்தின் மேல் பகுதியில் கட்டளை பட்டையில்(menu bar) உள்ள File என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியலில(menu) Export என்பதை தெரிவு செய்க.

3.பின்னர் இந்த பதிவேற்றம் செய்ய விரும்பும் கோப்பு எந்த பகுதியில் சேமிக்க வேண்டும் என விரும்புகிறோமோ அந்த மடிப்பகத்தை தெரிவு செய்க.அதன்பின் தோன்றிடும் Save as வகை பெட்டியில் உள்ள கீழிறங்கு பட்டி பெட்டியை (drop down box) தெரிவு செய்க. உடன் விரியும் கோப்பின் வகைகளில் XML document என்பதை (படம்-1) நம்முடைய கோப்பின் வகையாக தெரிவு செய்க

 

 

  படம்-1

 4.பின்னர் ExportAll என்பதை சொடுக்குக. உடன் படம்-2-ல் உள்ளவாறு Export XML உரையாடல் பெட்டியொன்று தோன்றும். அதில் மூன்று வாய்ப்புகள்

இருக்கும்.

  படம்-2

 5.இந்த வாய்ப்புகள் மூன்றையும் தெரிவு செய்க. (XML, XSL, XSD ஆகிய வகைகளில் கோப்புகள் உருவாக்கப்படும். பின்னர் Advanced என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Export XML என்ற உரையாடல் பெட்டி யொன்று படம்-3-ல் உள்ளவாறு தோன்றும். அதில் Schema என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் பகுதியில் Create a seperatescema document என்பதை தெரிவு செய்து இதற்கு sk. XSD என்றவாறு பெயரை அமைத்திடுக.

படம்-3

 6பின்னர் மேலே உள்ள Presentation என்பதை தெரிவு செய்து சொடுக்குக(click). உடன் படம்-4-ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் run from என்பதில் client HTML என்பதை தெரிவு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக

 

 

படம்-4

 இங்கு run from Server (ASP) என்பதை தெரிவு செய்தால் ASP பின்னொட்டுடன் கோப்பு உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பக்கத்தை பார்த்தறிவதற்கான படிமுறை பின்வருமாறு :

1.திரையில் Internet Explorer என்பதை திறந்து கொள்க. பின்னர் எந்த பகுதியில் தரவுகளின் கோப்பினை சேமித்து வைத்தோமோ அந்த மடிப்பகத்தை(Folder)  (படம்-5)திறந்து கொள்க.

படம்-5

2.பின்னர் Details window எனும் வாய்ப்பு செயலில் இருக்குமாறு பார்த்து கொள்க. HTML-ன்வகையாக sk.html என்ற கோப்பினை தெரிவு செய்து இருமுறை சொடுக்குக

3.உடன் தோன்றும் புலத்தின் தரவுகளை மாறுதல் செய்ய முற்படுக. ஆனால் தரவுகளில் மாறுதல் ஏதும் ஆகாது ஏனெனில் இது படிக்க மட்டுமே செய்யும். அதனால் HTML-ன் வகை கோப்பினை மூடிவிடுக.

4.XML-ன் வகை sk.xsd கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்கி இதனை திறந்து கொள்க. பின்னர் கீழ்காணும் பட்டி வரிகளை ( முதல் ஆவணம் மட்டும்  தோன்றுவதற்காக) உள்ளீடு செய்க,

பட்டி-35-1

<?xml version=”1.0″ encoding=”UTF.8″?>

<dataroot xmlns:od=”urn:schemas.microsoft.com:officedata”

xmlns: xsi = “http:/www.w3.org/2007/10/xmlschema.instance”

xsi:noNamespacescemaLocation=”skcustomers.xsd”>

<Customers>

<Customers ID> 707</customer Id>

<SortName>Vasanthan</sortName>

<Customer>Vasanthakumar</customer>

<Address>3,Marutham Illam</Address>

<City> Moongilthuraipattu</city>

<State>TamilNadu</state>

<Zip>605702</zip>

</Customers>

5.இந்த பட்டி sk XSD ஆக Schema வாக திறக்கப்படுகிறது. பின்னர் இந்த கோப்பினையும், சாளரத்தையும் மூடிவிடுக. இவ்வாறு நம்மால் XML-இற்கு பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்பினை திறந்து காண முடியும்.

1.இவ்வாறே HTML ஆவனமாக ஏற்றுமதி செய்வதற்கான படிமுறை அல்லது பதிவேற்றம் செய்ய விரும்பும் அட்டவணையில் இடம்சுட்டியை வைத்து வலப்புறம் சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை(Contest menu) பட்டியலில் export என்பதை தெரிவு செய்க.

2.உடன் தோன்றும் export table உரையாடல் பெட்டியில் Save as type என்ற உரையாடல் பெட்டியில் கீழிறங்கு பட்டியலை தோன்ற செய்து HTML document என்பதை தெரிவு செய்க.

3.இந்த கோப்பிற்கு  sk  என்றவாறு பெயரிடுக.

4.பின்னர் ExportAll என்பதை சொடுக்குக. உடன் நாம் தெரிவு செய்த கோப்பு நாம் உள்ளீடு செய்த பெயரில் HTML என்ற பின்னொட்டுடன் சேமிக்கப்பட்டு விடும். இங்கு HTML வடிவமைப்பின் ஏதாவது குறிப்பிட்ட வகை வடிவமைப்பில் சேமிக்க வேண்டுமெனில் Save format என்ற வாய்ப்பை தெரிவு செய்க. உடன் படம்-6-ல் உள்ளவாறு தோன்றும் பெட்டியில் மாதிரி படிவத்தில் மூன்று வாய்ப்புகளில் (பொதுவாக இயல்பு நிலை defualt encoding என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும்.  தேவையானயொன்றை தெரிவு செய்க.

 

 படம்-6

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003 தொடர் பகுதி-34-கட்டுண்டபடிவம் மற்றும் கட்டற்ற படிவம் ஆகியவற்றை உருவாக்குதல்

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003 தொடர் பகுதி-34-கட்டுண்டபடிவம்  மற்றும் கட்டற்ற படிவம் ஆகியவற்றை உருவாக்குதல்

ஏதேனுமொரு படிவத்தில் அக்சஸின் ஒருசெயல்திட்டத்தை உருவாக்கிய உடன் அதனுடைய ஆவனத்தின் மூலத்துடன் நேரடியாக ஒரு அட்டவணையை கட்டுண்டபடிவமாக மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

இங்கு கட்டுண்ட படிவம் என்பது ஒரு படிவத்தை நேரடியாக அட்டவணை அல்லது வினாவுடன் கட்டப்பட்டு ஒரு மாறாத திறந்த இணைப்பை அனைத்து தரவுகளுக்கும் வழங்குவது ஆகும். இந்த வழிமுறையானது தரவுகளை சுலபமாகவும் வேகமாகவும் படிவத்தில் நிகழ்நிலை படுத்துவதற்கும் சமர்ப்பிப்பதற்கும்அனுமதித்தாலும் படிவத்தில் வாடிக்கையாளர் பணியகத்திற்கு இது சிறந்த மாற்று வழியன்று.

கட்டுண்ட படிவமானது பணியகத்திற்கும் பணி நிலையத்திற்கும் இடையே ஒரு மாறாத இணைப்பை வழங்கி பராமரிக்கின்றது. பயனாளர் காட்சியாக காணும்போது பணியகம் படிவத்தின் பிரதிபலிப்பை ஒரு பூட்டிய ஆவணமாக பராமரிக்கின்றது. திறந்த இணைப்பும் ஆவன பூட்டும் பணியகத்தின் திறன் அனைத்தையும் வழங்குவதாக உள்ளது.

இந்த கட்டுண்ட படிவத்தில் பல பயனாளிகள் ஒரே படிவத்தை அணுகுவதும், அல்லது பல்லாயிரக்கணக்கான தரவுகளை  பயன்படுத்துவதும் முடியாத நிலையாக உள்ளது. அதற்காக வந்ததுதான் இந்த கட்டற்ற படிவம் என்ற கருத்தமைவு இது மாறாத திறந்த இணைப்பை அட்டவணை அல்லது வினாவுடன் ஒரு படிவத்தில் வழங்காது.

ஒரு நேரத்தில் அட்டவணை அல்லது வினாவுடன் ஒரு ஆவனத்தை மட்டுமே மீளப்பெற முடியும். இதில் திறந்த இணைப்பையோ அல்லது ஆவனப் பூட்டையோ பராமரிக்காததால் பணியகத்தின் வேலைப்பளு அதிக அளவு குறைக்கப்பட்டுள்ளது.

எல்லாம்சரி இந்த கட்டற்ற படிவத்தை எதற்காக கையாள வேண்டும் .

1.    குறைந்த அளவு தரவுகளை மீளப்பெறுவதால் கட்டற்ற படிவத்தை பராமரிக்கும் பணியகத்தின் திறன் கூடுகின்றது.

2.    ஆவணப்பூட்டு என்ற குழப்பம் இல்லாததால் கட்டுப்பாடுகளின் திறன் உயர்கின்றது.

3.    ஆவனத்தில் மாறுதல் செய்யும் போதெல்லாம் தானாகவே சேமிக்க தேவையில்லாததால் தேவைப்பட்டால் மட்டும் சேமிக்கலாம் அல்லது விட்டுவிடலாம்.

4.    தரவு தள பாதுகாப்பில்அதிக கவனம் செலுத்த முடிகிறது.

5.    விபிஏ குறிமுறைகளை பயன்படுத்தி படிவத்தின் 1,தரவுகளை தேடி பிரதிபலிப்பதை  கையாளுவதற்கான செயல்முறை 2,தரவுகளை நிகழ்நிலைபடுத்துவதை கையாளுவதற்கான செயல்முறை ஆகியவற்றை சுலபமாக கையாள முடியும்,

கீழ்காணும் செயல்பாடுகள் கட்டற்ற படிவத்தை கையாளுபவையாகும்.

1.    ஒரு படிவத்தின் தரவுகளை காட்சியாக காண்பதற்காகவும் அல்லது பதிப்பிக்கவும்,மீளப்பெறுதல்

2.    படிவத்தினுடைய கட்டுப்பாடுகளில் தரவுகளை ஏற்றுதல்

3.    வேறு ஒரு ஆவனத்திற்காக தேடுதல்

4.    படிவத்தில் உள்ள தரவுகளை மாறுதல் செய்யப்பட வேண்டுமா என முடிவு செய்தல்

5.    மாறுதல் செய்யப்பட்ட தரவுகளை சேமித்தல்

6.    மாறுதல் செய்யப்பட்ட தரவுகளை முந்தைய நிலைக்கு கொண்டு செல்லுதல்

7.    மற்றொரு ஆவனத்திற்கு நகர்த்துதல்

8.    புதிய ஆவனத்தை உருவாக்குதல்

இவ்வாறான பணிகளுக்கான குறிமுறைகள் எழுதுவது என்பது மிகப்பெரிய பணி என்பதால் ஒரு சிலவற்றை மட்டும் இப்போது காண்போம்.

ஒரு கட்டுண்ட படிவத்தில் உள்ள ஒரு ஆவனத்திலிருந்து மற்றொரு ஆவனத்திற்கு மாறும்போது அல்லது நகர்த்தும்போது குறிப்பிட்ட ஆவணம் தானாகவே சேமிக்கப்படும் ஆனால் கட்டற்ற படிவத்தில் நாம் விரும்பினால் மட்டுமே சேமிக்கப்படும் இல்லையெனில் பழைய நிலை அப்படியே பராமரிக்கப்படும்.

ஒரு கட்டற்ற படிவத்தை உருவாக்குதல்

வடிவமைப்பு காட்சியின் ஒரு காலியான படிவத்தில் நாம் உருவாக்க விரும்பும் கட்டுப்பாடுகள் உள்ள அட்டவணையை திறந்து கொண்டு தேவையான புலங்களை மட்டும் தெரிவு செய்து இடம்சுட்டியால் பிடித்து இழுத்து வந்து தேவையான இடத்தில் விட்டுவிடவும். பின்னர் ஒவ்வொரு கட்டுப்பாட்டிலும் இடம்சுட்டியை வைத்து வலப்புறம் சொடுக்கியவுடன் தோன்றும் சூழ்நிலைபட்டியலின் கீழ் பகுதியில் உள்ள பண்பியல்பு என்பதை தெரிவு செய்க. உடன் தோன்றும் பண்பியல்பு பெட்டியில் All என்பதை தெரிவு செய்க. அதில் Control source என்ற பகுதியில் உள்ளவற்றை நீக்கிவிடுக. உடன் இந்த கட்டுப்பாடு unbound என படம் 1ல் உள்ளவாறு பிரதிபலிக்கும். இதே வழிமுறையை படிவத்தில் மிகுதி உள்ள அனைத்து கட்டுப்பாடுகளிலும் unbound என மாறுதல் செய்க. படிவத்திற்கான ஆவன மூல பண்பியல் record source, property யையும் நீக்கிவிடுக.

பின்னர் மேல் பகுதியின் வலப்புறம் நான்கு அடர்ந்த சாம்பல் நிற கட்டுப்பாடு இருக்கும். இவைகளை படிவத்துடன் தரவுதளத்தை இணைக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.

படம்-1

இந்த கட்டுப்பாடுகளின் காட்சி பண்பியல்பு False என இருப்பதால் இவைகளை நாம் காண முடியாது. அவைகளுக்கான அட்டவணை பின்வருமாறு

அட்டவணை-1

x provider       = “provider = SQLOLEDB”

x data source = “Data source = (local) : integrated security = SSPI : initial catalog SQL”

x record set    = ‘tbl contacts “

x key         = “ids contact ID”

படிவத்தின் கீழ்பகுதியில் மறைந்துள்ளகட்டுப்பாடுகளாவன.

Flag edited =என்பது தரவுகள் நிகழ்நிலை படுத்தப்பட்டுள்ளதா என சரி பார்க்கப்பட்டுள்ளது

Flag find =தேடும் நிபந்தனை தெரிவு செய்யப்பட்டுள்ளதா என சரி பார்க்கப்பட்டுள்ளது

Updator =ஆவணங்கள் மாறுதல் ஆகும் போதெல்லாம் எண்கள் கூடுதலாகும்படி செய்யப்பட்டுள்ளது.

படிவத்தில் தரவுகளை பிரதிபலித்தல்

படம் 2ல் உள்ள நிகழ்வு செயல்முறையை ஏற்றுவதற்கான(Load) குறிமுறையாகும். இது ஒரு படிவத்தில் தரவுகளை ஏற்றுகிறது. இந்த படிவத்தில் தேக்கப்படாத UF_Display record( ) என்ற சார்பு அழைக்கப்படுகிறது.

படம்-2

  இவையும் இவைபோன்ற மற்ற செயல்களுக்கான குறிமுறைகளும் படம் 3ல் உள்ளவாறு ஒரு moduleக்குள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன தேவையானபோது இவைகளை படிவத்தில் அழைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

படம்-3

  படிவத்தினுடைய x provider மற்றும் x data source புலங்களுடன் குறிப்பிட்ட தரவு தளத்தில் இந்த UF_Display record சா£¢பு இணைப்பை ஏற்படுத்துகிறது. பின்னர் வடிகட்டி (filter) அமைக்கப்படாதிருந்தால் சரிபார்க்காது. அவ்வாறிருந்தால் அனைத்து கிடைவரிசை (அட்டவணையில்)  மீளப்பெறுகிறது,. வடிகட்டி அமைக்கப்பட்டிருந்தால் முதல் கிடைவரிசை தரவுகளை மீளாக்கம் செய்து பிரதிபலிப்பதற்காக, where எனும் நிபந்தனை அனுமதிக்கும் சொற்களை மட்டும் மீளாக்கம் செய்கின்றது.,

தரவுகளை நிகழ்நிலை படுத்துதல்

ஒரு பொத்தானை உருவாக்கி அந்த குறிப்பிட்ட பொத்தானை சொடுக்குவதன் மூலம் புதிய ஆவனத்தை உருவாக்குதல், நீக்குதல், மாறுதல் செய்ததை சேமித்தல் ஆகிய பணிகளை செய்யலாம்.

ஒரு படிவத்தில் கருவி பெட்டியில் உள்ள பொத்தான் உருவாக்கும் கருவி மூலம் பொத்தானை உருவாக்குக. அப்பொத்தானில் இடம்சுட்டியை வைத்து வலப்புறம் சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் view code என்பதை தெரிவு செய்க. உடன் படம் 4ல் உள்ளவாறு தோன்றும் சாளரத்தில் btnNew_Click( ) என்பதற்கான குறிமுறையை தவறில்லாமல் உள்ளீடு செய்க.

 படம்-4

கீழ்காணும் குறிமுறை record set ஐ நிகழ்நிலை படுத்த( update) செய்ய பயன்படுகிறது.

நிரல்தொடர்-34-1

Change record

        ‘Iterate through controls on form that match fields in recordset

        For Each ctl In frm

           ‘if error the field is not on the form

           On Error Resume Next

           Err = 0

           vartemp = rst.Fields(ctl.Name).Name

           If Err = 0 Then

               On Error GoTo ErrorHandler

               ‘if control enabled then

               ‘   if it is not an auto increment field

               ‘       if data is not null or an empty string

               If ctl.Enabled Then

                   If Not rst.Fields(ctl.Name).Properties(“IsAutoIncrement”) Then

                       If Not IsNull(ctl.Value) And Not ctl.Value = “” Then

                           vartemp = ctl.Value

                           rst(ctl.Name).Value = vartemp

                       End If

                   End If

               End If

           End If

        Next

        ‘Increment the Update Counter

        rst(“UpdateCtr”) = rst(“UpdateCtr”) + 1

        ‘Update the recordset

        rst.Update

        rst.Close

ஆவணத்தை தேடுதல்

ஒரு படிவத்தில் உள்ள ஆவணங்களில் நாம் குறிப்பிடும் நிபந்தனையுடன் உள்ள ஆவனங்களை மட்டும் தேடி கண்டுபிடிக்க கீழ்காணும் குறிமுறை உதவுகிறது.

நிரல்தொடர்-34-2

‘Iterate through controls on form that match fields in recordset

        strCriteria = “”

        For Each ctl In frm

          ‘if error the field is not on the form

          On Error Resume Next

          Err = 0

          vartemp = rst.Fields(ctl.Name).Name

          If Err = 0 Then

            On Error GoTo ErrorHandler

            If ctl.Enabled Then

              If Not IsNull(ctl.Value) And Not ctl.Value = “” Then

                If Len(strCriteria) > 0 Then strCriteria = strCriteria & ” AND “

                Select Case rst(ctl.Name).Type

                  Case adChar, adVarWChar, adLongVarWChar

                strCriteria = strCriteria & ctl.Name & ” = ” & Chr(39) & ctl.Value & Chr(39)

                  Case adDate

                  strCriteria = strCriteria & ctl.Name & ” = ” & “#” & ctl.Value & “#”

                  Case Else   ‘assume numeric

                    strCriteria = strCriteria & ctl.Name & ” = ” & str(ctl.Value)

                End Select

              End If

            End If

          End If

        Next

        rst.Close

இவ்வாறாக கட்டுண்ட படிவத்துடன் கட்டற்ற படிவம் தரவுதள வாடிக்கையாளர் பணியகத்தின் பயன்பாட்டை உருவாக்குவதற்கு அரும்பணியாற்றுகின்றன.

இந்நிலையில் ஒரு அக்சஸ் தரவு தளத்திற்கும் ஒரு அக்சஸ் செயல்திட்டத்திற்கும் இடையேஉள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்வது நல்லது, அவ்வேறுபாடுகள் பின்வருமாறு

அட்டவணை-2

அக்சஸ் தரவு தளம்        அக்சஸ் செயல்திட்டம

1. Select query                     view

2. Action query                     stored procedure

3. Relationship window      data base diagram

மறுமொழி அளிக்கவும் »

அறிந்துகொள்வோம் அக்சஸ் -2003 தொடர் பகுதி–33.வழிகாட்டியின் செயல் அளவை மாற்றுதல் (Upsizing wizard)

அறிந்துகொள்வோம் அக்சஸ் -2003 தொடர் பகுதி–33.வழிகாட்டியின் செயல் அளவை மாற்றுதல் (Upsizing wizard)

பல நிறுவனங்கள் தத்தமது அன்றாட வியாபார பணிகளுக்காக தரவுதளத்தை அடிப்படையாக கொண்ட பயன்பாடுகளை சார்ந்தே இருக்கின்றன. இந்த பயன்பாடுகள் இன்றைய கால கட்டத்தில் பயன்பாட்டின் அளவிலும் எண்ணிக்கையிலும் கணக்கிட முடியாத அளவிற்கு பெருகி கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் அக்சஸ் ஆனது தரவு தளத்தை கையாள கூடிய ஒரு பயன்பாடுதான். ஆனாலும் சிறிய நிறுவனங்கள் கூட SQL Server ஐ தங்களின் தரவு தள நிருவகதித்தலுக்காக பயன்படுத்தும் நிலையில,இதனுடன் அக்சஸ் எவ்வாறு தொடர்பு கொண்டு தரவு தள நிருவாகத்தை மேம்படுத்துவது என்ற சிக்கலை தீர்ப்பதற்கென்றே upsizing என்ற கருத்தமைவு பயன்படுகிறது. இது அக்சஸின் .mdb கோப்புகளை SQL Server கோப்பாக தானாகவே உருமாற்றம் செய்து வழங்குகிறது. இவ்வாறு செய்யும்போது அக்சஸில் அட்டவணையின வடிவமைப்புகள், தரவுகள்,பண்புக்கூறுகள் ஆகியவற்றை அப்படியே தக்க வைத்து கொள்கிறது.

இவ்வாறு அக்சஸ் பயன்பாட்டை upsizing செய்வதற்கு முன்பு கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றுக :

1.தரவு தள கோப்புகளை காப்பு நகல் செய்து கொள்க.

2.வன்தட்டில் போதுமான அளவு காலி நினைவகம் இருக்கிறதா என சரிபார்த்து கொள்க

3.இந்த upsize பணிமுடிவடையும்போது அறிக்கை ஒன்று தயாராகும். அதனை அச்சிடுவதற்கு ஏற்றவாறு அச்சுப்பொறியை இயல்பு நிலையில் அமைத்திடுக.

4.அக்சஸ் தரவுதளத்தில் இவ்வாறு மாற்றுவதற்கான அனுமதியை பெற்று கொள்க.

5.SQL பணியகத்தின் பணி மேலாளரை (படம்-1)இதற்காக பயன்படுத்தி கொள்க.

படம் 1

 Upsizing பணியை ஆரம்பிப்பதற்கு முதலில் அக்சஸில் .mdb கோப்பு ஒன்றை திறந்து கொள்க.

படம் 2

அதன்பிறகு (படம் 2) அக்சஸ் சாளரத்தின் மேல் பகுதியின் கட்டளை பட்டையில் உள்ள tools என்பதை தெரிவு செய்க. உடன் விரியும பட்டியில் Data Base Utilitiesஎன்பதைதெரிவுசெய்க,உடன் விரியும் சிறு பட்டியில் upsizingWizard என்பதை தெரிவு செய்க. உடன் படம் 3ல் உள்ளவாறு upsizing wizard என்ற ஒரு பெட்டி தோன்றும்.

  படம் 3

அதில் நடப்பில் உள்ள தரவுதள கோப்பின் நகலை பயன்படுத்துவதா அல்லது புதியதாக உருவாக்குவதா என இரண்டு வாய்ப்புகள் தயாராக இருக்கும். create new data base என்ற இரண்டாவது வாய்ப்பை மட்டும் தெரிவு செய்து கொள்க. பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக

உடன் படம் 4ல் உள்ளவாறு upsizing wizard என்ற திரை தோன்றும் அதில் what SQL server would you like to use for this data base? என்பதற்கு local என்று உள்ளீடு செய்க. Use trusted connection என்பதை தெரிவு செய்க. பின்னர் what do you want to name your new SQL server database? என்பதற்கு VasanthanSQL என்றவாறு பெயரிட்டு next என்ற பொத்தானை சொடுக்குக.

 படம் 4

உடன்  படம் 5ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் which table do you want to export to SQL server? என்பதற்கு Available பகுதியில் உள்ள அட்டவணைகளில் தேவைபட்டதை மட்டும்தெரிவு செய்து ஒவ்வொன்றிற்கும் < ஒற்றை குறியையும் அல்லது அனைத்தையும் எனில் << என்ற இரட்டை குறியையும் தெரிவுசெய்து சொடுக்குக. உடன் மாற்றம் செய்ய வேண்டிய கோப்புகள் export to SQL server என்ற பகுதியில் படம் 5ல் உள்ளவாறு வீற்றிருக்கும்.

படம் 5

 பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் படம் 6ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் what table attribute do you want to update? என்பதில் உள்ள indexes என்பதை தெரிவு செய்தால் அக்சஸின் தொடக்க திறவு கோளானது(primary key)  SQLபணியகத்தின் தொடக்க திறவு கோளாக(primary key) மாறிவிடும்.

Validation Rule : இதனை தெரிவு செய்தால் அனைத்து அட்டவணைகள், ஆவனங்கள் புலங்கள் ஆகியவற்றின ஏற்புடையதாக்கல் பகுதி அப்படியே நிகழ்நிலைப்படுத்தப்பட்டு SQL பணியகத்திற்கு ஏற்றவாறு வைத்துவிடும்.

Default இதனை தெரிவு செய்தால் அனைத்து இயல்பு நிலை மதிப்பும் ANSI இயல்பு நிலை மதிப்பாக மாறிவிடும்.

Table relationship : இதனை தெரிவு செய்தால் நாம் ஏற்கனவே அக்சஸில் உருவாக்கியிருந்த அட்டவணைகளுக்கு இடையேயான உறவு அப்படியே தொடரும். உடன் தொடர்ந்து use trigger option என்பதை தெரிவு செய்து கொள்க.

Time setup field : இதனை தெரிவு செய்தால் புலங்களின் மதிப்பை தன்னிகரற்ற தன்மையாக பராமரிக்கின்றது. அதனால் அவ்வப்போது நிகழ்நிலைப் படுத்தும்போது இதன்மூலம் புலங்களின் தன்மை மாறாமல் காக்கப்படுகிறது.

Don’t upsize : இதனை தெரிவு செய்தால் புதிய வடிவமைப்பில் பழைய தரவுதள கோப்புகளின் மதிப்புகள் இருத்தப்படும்

படம் 6

மேலே கண்டவாறு உள்ள வாய்ப்புகளை தெரிவு செய்த பிறகு next  என்ற பொத்தானை சொடுக்குக. உடன் படம் 7ல் உள்ளவாறு  தோன்றும உரையாடல் பெட்டியில் நடப்பில் இருக்கும் அக்சஸின் பயன்பாட்டின் கோப்பினை புதிய SQL பணியக தரவுதளத்தில் பணிபுரிய எடுத்து கொள்ளுமாறு கூற வேண்டும் அல்லது புதிய அக்சஸ் திட்டத்தை உருவாக்கும்படி கூற வேண்டும்.

படம் 7

Create new access client/server application என்பதை தெரிவு செய்திருந்தால் ’Cs’ என்ற பின்னொட்டுடன் கோப்பு பெயராக மாறிவிடும். இந்த upsizing wizard ஆனது அக்சஸின் Forms, reports, acces pages codes ஆகிய அனைத்தையும் புதிய access project ஆக மாற்றம் செய்து புதிய SQL பணியகத்துடன் இணைப்பு ஏற்படுத்திவிடுகின்றது

Link SQL server table to existing application என்பதை தெரிவு செய்திருந்தால் புதிய திட்டமாக உருமாற்றம் செய்யாமல் புதிய SQL பணியகத்தின் இணைப்பை மட்டும் ஏற்படுத்திவிடுகின்றது. பின்னர் local என்ற பின்னொட்டுடன் பெயர் மாற்றுகின்றது.

No application changed என்பதை தெரிவு செய்தால் தரவுதள SQL பணியகத்திற்கு ஏற்ப அளவை மட்டும் மாற்றி விடுகிறது. வேறு எந்த மாற்றமும் செய்யாது.

இவ்வாறான மாறுதல்களை upsizing wizard மூலம் செய்யும்போது module அல்லது macrosகளில் எதுவும் மாறுதல் செய்யாது.

Save password and user ID என்பதை தெரிவு செய்தால் ஒவ்வொரு முறையும் திறக்கும்போது இதனை கேட்காது. பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக. அனைத்து பணிகளையும் செவ்வனே முடித்துவிட்டோம் என திருப்தியுற்றால் படம் 8ல் உள்ளவாறு finish என்ற பொத்தானை சொடுக்குக.

படம் 8

உடன் உருமாற்றம் conversion பணி ஆரம்பித்து நடைபெறும் இந்த பணியின் தற்போதைய நிலையை படம் 9ல் உள்ளவாறு செய்தி பெட்டி மூலம் தெரிவிக்கும்.

  படம் 9

இந்த உருமாற்றம் பணி முடிவடைந்தவுடன் படம் 10ல் உள்ளவாறு upsizing wizard report என்ற அறிக்கை ஒன்று அச்சுக்கு செல்வதற்கு தயாராகி இருக்கும். அதில் data baseன் விவரங்கள், upsizing அமைப்புகள், அட்டவணை பற்றிய தகவல்கள், பிழைகள்¢(error) ஏதும் இருந்தால் அதன் விவரங்கள் இந்த அறிக்கையில் இருக்கும். பின்னர் இதனை மூடிவிடுக. உடன்  local என்ற பின்னொட்டுடன் கோப்புகள் பிரதிபலிக்கும்.

படம் 10

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ் -2003-தொடர்- பகுதி-32 பிழை திருத்துதல்

அக்சஸில் விபிஏ மூலம் எழுதப்பட்ட குறிமுறைகள் சரியாக இயங்குகின்றதா என இறுதி பயனாளரோ குறிமுறைகளை எழுதுபவரோ பரிசோதித்து சரிபார்க்க விரும்புவார்கள். இவ்வாறு பரிசோதிக்கும்போது எதிர்பார்க்கும் பிழைகள் அல்லது எதிர்பாராத பிழைகள் தோன்ற வாய்ப்புள்ளன. அவைகளை எவ்வாறு திருத்தி சரி செய்வது என இப்போது காண்போம்.

குறிமுறைகளை எழுதியவுடன் முதல் படியாக அதன் இறுதி விளைவு நாம் எதிர்பார்த்தவாறு அல்லது வடிவமைத்தவாறு சரியாக இருக்கின்றதா என பரிசோதித்து பார்க்க வேண்டும்.

அப்போது தோன்றும் ஒரு சில பிழைகள் எங்கு, எவ்வாறு தோன்றுகின்றன என அறிந்து கொள்வது பிழை பிடித்தல் (Debugging)  என்பர்.

படம்-32-1

      விபிஏவில் ஒரு வரியின் குறிமுறைகளை எழுதும்போது    நீங்கள் என்ன கட்டளையை உள்ளீடு செய்ய விரும்புகிறீர்களோ அதனை நிரப்புவதற்கு இரண்டு உதவி கரங்கள் தயாராக இருக்கின்றன.

1.Auto quick info  (படம்-32-1): இந்த வகை உதவியானது நாம் உள்ளீடு செய்ய விரும்பும் கட்டளைகளின் வாய்ப்பை தெரிவு செய்யும்படி பிரதிபலிக்க செய்கிறது.

2. Auto list members  (படம்-32-1)இந்த வகை உதவியானது ஒரு கட்டளையின் முதல் எழுத்தை உள்ளீடு (தட்டச்சு) செய்தவுடன் கட்டளை சொற்களின் மிகுதி எழுத்துகள் தானாகவே நிரப்புவதற்கு ஏற்றவாறு கட்டளை பட்டியலை பிரதிபலிக்க செய்கிறது. தேவையானால் அவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இலக்கண பிழைளை(Syntex error)  சரி பார்த்தல் (படம்-32-2):  விபிஏ வில் குறிமுறைகளை ஒரு வரியில் தட்டச்சு செய்து முடித்தவுடன் அடுத்த வரிக்கு செல்வதற்காக உள்ளீட்டு விசையை(Enter) என்ற விசையை அழுத்தியவுடன் அடுத்த வரிக்கு செல்லாமல் நாம் உள்ளீடு செய்த குறிமுறைகளில் ஏதேனும் இலக்கண பிழை இருக்கிறதா என சரிபார்த்து அவ்வாறான பகுதியில் இடம்சுட்டி அசையாமல் நிற்கும் பிழையான கட்டளையின் எழுத்தின் நிறமும் மாறி இருக்கும். அந்த பிழையை சரி செய்த பிறகே அடுத்த வரிக்கு செல்லும்.

படம்-32-2

 இவ்வாறு சரிசெய்த பிறகு கணினிக்கு புரியும் வகையில் இந்த கட்டளைவரிகளை உருமாற்றம் செய்ய வேண்டும். அதற்காக சாளரத்தின் மேல்புறம் கட்டளை பட்டையில் உள்ள Debug =>  என்ற கட்டளையை தெரிவு செய்து இடம்சுட்டியால் சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் compile  என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக. உடன் கணினியானது விபிஏவில் நாம் எழுதிய குறிமுறைகளை உருமாற்றம் செய்யும் பணியை செயல்படுத்தும் ஏதாவது பிழை இருந்தால் compile error என்ற செய்தி பெட்டி பிரதிபலிக்கும். கணினி குறிப்பிடும் வித்தியாச மான சிவப்பு வண்ணத்துடன் தோன்றும் பிழையான சொல்லை குறி முறையில் சரிசெய்து தொடர்ந்து உருமாற்றம்(compile)  செய்ய வேண்டும்.

இவ்வாறு சரி செய்து உருமாற்றம் செய்யப்பட்ட விபிஏ குறி முறையை நடைமுறையில் செயல்படுத்தி பார்க்கும்போது இயக்க நேரத்தில் ஒரு சில பிழைகள்  run time error  ‘33315’ என்றவாறு செய்தி பெட்டி (படம்-3)தோன்றும். அதில் Debug  என்ற பொத்தானை தெரிவு செய்தால் நடைபெறும் செயலை நிறுத்தி பிழையான கட்டளை சொற்களை சுட்டிகாட்டும். உடன் சரி செய்து மீண்டும் இயங்குவதற்கு continue என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன்மூலம் தொடர்ந்து பிழைகளை கண்டுபிடிக்குமாறு செய்யலாம். End என்ற பொத்தானை தெரிவு செய்தால் இயக்கம் பாதியில் நின்று வெளியில் வந்துவிடும்.

                    படம்-32-3

கட்டளை பட்டையில் உள்ள View  என்ற கட்டளையை தெரிவு செய்க. பின்னர் விரியும் பட்டியில் immediate window  என்பதை தெரிவு செய்க. உடன் இயக்க வழிமுறையுடன் கூடிய immediate window  என்னும் சாளரம் (படம்-4) தோன்றும். இதில் விபிஏவின் ஒற்றை வரி குறிமுறையின் ஒரு வரியில் மாறியின் மதிப்பு, வெளிப்பாடு ஆகியவற்றை சரிபார்க்கலாம். ?some number  என்றவாறு கேள்விக்குறியுடன் உள் கட்டளை வரிகளை தட்டச்சு செய்து அதன் விளைவு என்னவாக இருக்கும் என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய view  என்ற கட்டளை பட்டியில் local  என்பதை தெரிவு செய்தால் உடன் உங்கள் நிரல் தொடரின் இயக்கத்தின் செயல்படும் நினைவகத்தை மரம் போன்று  காட்சி வெளிப்பாடுகள், அதன் மதிப்பு, அதன்வகை ஆகிய விவரங்களுடன் திரையில் காண்பிக்கும் மிக முக்கியமாக நடப்பு ஆவனத்தையும் local window ஆக பிரதிபலிக்க செய்கிறது.

மேற்கூறிய view  கட்டளை பட்டியில் மீண்டும் watch  என்பதை தெரிவு செய்க. உடன் Local window வுடன் கூடுதலாக குறிப்பிட்ட மதிப்பை மட்டும் பிழை சரி செய்யப்பட்டதா என்ற விபரம் இந்த watch window  வில்(படம்-4) பிரதிபலிக்க செய்கிறது.

இது மட்டுமல்லாது கூடுதலான break point  என்ற பிழை சுட்டும் கருவி உள்ளது. நல்ல திறன் வாய்ந்த அனுபவசாலியான நிரலர்களே இதனை பயன்படுத்துவார்கள். இதுவும் watch window  போன்றதுதான். இந்த watch window ல் குறிப்பிட்ட பிழை மதிப்புள்ள பகுதியை மட்டும் சுட்டிகாட்டும். ஆனால் இந்த break point ஆனது பிழை சுட்டும் குறிப்பிட்ட வரிமுழுவதும் சுட்டி காட்டுகிறது. மேலும் அந்த இடத்தில் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.  இந்த வழிமுறை மூலம் அனைத்து மாறிகளை (variable) , நிபந்தனைகளை (condition) , கண்ணிகளை (loop)  மிகச்சரியாக இருக்கின்றதா என சரிபார்க்கின்றது.

F9 என்ற செயலி விசையை தட்டுவதன் மூலம் இந்த break point ஐ செயல்படுத்த முடியும் அல்லது கட்டளை பட்டையில் உள்ள debug  என்ற கட்டளையை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியலில் toggle break point என்பதை தெரிவு செய்க. உடன் நாம் குறிப்பிடும் வரியில்  break point  உருவாகும். பிழையை சரி செய்த பிறகு debug  என்ற கட்டளை பட்டியில் உள்ள clear all break point  என்பதை தெரிவு செய்வதன் மூலம் அல்லது ctrl + shift + F9 ஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழு்ததுவதன் மூலம் break point ஐ நீக்கம் செய்யலாம்.

இந்த debug  கட்டளை பட்டியலில் set next statement  என்பதே இறுதியான மிக முக்கிய திறன் வாய்ந்த வாய்ப்பாகும். விபிஏ குறிமுறைகளின் வரியில் முன்பக்கம் forward அல்லது பின்பக்கம் backward  இடம்சுட்டியை நகர்த்தி சென்று அவ்விடத்தில் தொடர்ந்து பிழை சுட்டும் இயக்கத்தை செயல்படுத்த உதவுகிறது.

ஆனால் கடைசியாக உள்ள show next statement  என்பது சுட்டியின் இடத்தை மட்டும் நகர்த்தி சுட்டி காட்டுகிறது. ஆனால் பிழை சுட்டும் இயக்கம் ஏதும் செய்யாது.

படம்-32-4

மறுமொழி அளிக்கவும் »

அறிந்து கொள்வோம் அக்சஸ் -2003-தொடர்- பகுதி- 31 விபிஏவின் பிழைகளை தவிர்த்தல்

அக்சஸில் விபிஏவின் குறிமுறைகளை எழுதும்போது தவிர்க்க கூடிய பிழைகள் (avoidable errors ) தவிர்க்க முடியாத பிழைகள் (unavoidable errors ) என இரண்டு வகையான பிழைகள் ஏற்படுகின்றன. புதியவர்களுக்கு முதல் வகையான பிழை  அதிகம் ஏற்படும். பல வருடம் அனுபவம் பெற்றவர்கள் இந்த வகையான பிழையை தவிர்த்துவிடுவர். இந்த முதல் வகை பிழை மேலும் மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.     மொழிமாற்ற நேரபிழை (Compile time error ): மூலக்குறிமுறையை கணினிக்கு புரியும் வகையில் மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் ஏற்படும் பிழை.

2.     இயக்க நேர பிழை (Run time error ):நிரல்தொடரில் பொருத்தமில்லாத அமைவால் நாம் எதிர்ப்பார்க்கும் விளைவு ஏதும் ஏற்படாமல் செயல் பாதியில் நின்றுவிடும்.

3.     தருக்க பிழைகள் (Logical error ):: இந்த வகையான பிழை மொழி மாற்றியோ கணினியோ இதனை கண்டுபிடித்து சொல்லாது,அதனால் நாமும் நிரல்தொடர்  சரியாகத்தானே இருக்கிறது என இருமாந்து இயக்கிடுவோம். ஆனால் பிழையான விடைதான் கிடைக்கும்.

இரண்டாவது வகையான தவிர்க்க முடியாத பிழை என்பது நமக்கு தெரிந்த அளவு அனைத்தையும் செய்திருப்பதாக எண்ணுவோம். ஆனால் பிழை ஏற்படும்.

1.     பயனாளர்ஒருவர் அக்சஸின் ஒரு ஆவனத்தின் (record) தொடக்க திறவு கோலை (primary key ) உருவாக்காமல் சேமிக்க முயல்வது.

2.     சேர்க்கை பட்டியில் பட்டியலில் இல்லாத மதிப்பை உள்ளீடு செய்ய முயல்வது

3.     அக்சஸில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் நின்றுபோவது

4.     வன்தட்டின் நினைவகம் முழுவதும் நிரம்பி விடுவது.

5.     இணைய இணைப்பு எதிர்பாராமல் தொடர்பற்று போவது.

6.     தவறான குறுவட்டுகளை அதற்கான வாயில் செருகுவது

போன்ற பிழைகள் தவிர்க்க முடியாதவையாகும். இதனை இருவகையாக பிரிக்கலாம்.

1.     முடிவான பிழை (Fatal error ) அல்லது(Terminal error): Ram  நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் தானாகவே அழிந்து போவது இந்த வகையாகும். இதனை அக்சஸ்-ஆல் கையாளமுடியாது. இதனை சரி செய்ய முடியாமல். பயன்பாட்டை அப்படியே இடையில் நிறுத்திவிடுகிறது.

2.     முடிவற்ற பிழை (Non fatal error ): இந்த வகையான பிழைஏற்படும் போது பிழை செய்தி ஏதும் திரையில் பிரதிபலிக்காது ஆனால் நடைபெற்றுகொண்டிருக்கும் செயல் முடிவுக்கு வராமல் தொக்கி நிற்கும்.

private sub cmd save_click( )

docmd.run command accmd saved record

end sub

இதனை இயக்குவதற்காக புதிய ஆவணம் ஒன்றை உருவாக்கி தொடக்க திறவுகோல் (primary key)  இல்லாமலேயே சேமிக்க முயலும்போது இயக்க நேர செய்தி மட்டும்(படம்-1) பிரதிபலிக்க செய்து ஆவனத்தை சேமிக்காமல் விட்டுவிடுகின்றது.

படம்-31 -1

பிழைக்கான பொறிவைத்தல்(Error Trapping)

வீடுகளில் எலித்தொல்லை அதிகமாகிவிட்டால் அதை பிடிப்பதற்காக தனியாக ஒரு எலிப்பொறி வைத்து பிடித்துவிடுவோம். அவ்வாறே அக்சஸில் விபிஏ குறிமுறை எழுதும்போது ஏற்படும் பிழைகளை சுட்டிகாட்டி இயக்கத்தை நிறுத்துவதை பிழைக்கு பொறிவைத்தல் என அழைப்பர். இது நிரல்தொடரில்முடிவான பிழைகள் ஏதும் வரும்போது இயக்கத்தை நிறுத்தி பிழை செய்தியை சுட்டுவதற்காக பயன்படுகிறது. இதற்கான நிரல்தொடர் பின்வருமாறு.

நிரல்தொடர்- 31-1

Private Sub cmdSave_click()

On Error GoTo err_cmdSave_Click

DoCmd.RunCommand CmdSaveRecord

Exit_cmdSve_Click:

Exit Sub

err_cmdSave_Click:

MsgBox “You must enter a unique Customer Id before saveing” & “the record.”

DoCmd.GoToControl “CustomerID”

Resume Exit_cmdSave_Click

End Sub

பிழைகளை கையாள்வது (Error handling)

சரி இவ்வாறு பிழைகளை பொறி வைத்து கண்டுபிடித்து விட்டோம். இதனை சரிசெய்வதற்காக எவ்வாறு கையாளுவது. அக்சஸில்

1.     தரவுதளஇயந்திரம் மேலாண்மை செய்யும்போது தரவுகளை கையாளும் செயலை நிறைவேற்றாமல் பாதியிலியே நிறுத்திவிடுவது.

2.     மேக்ரோக்களை இயக்கும்போது அக்சஸில் இடைமுகத்தில் ஏற்படும் பிழைகள்.

3.     விபிஏ குறிமுறைகள் இயக்கும்போது ஏற்படும் இயக்க நேர பிழைகள்

ஆகிய மூன்று பகுதியில் பிழை ஏற்படுகிறது. அக்சஸில் படிவங்கள். அறிக்கைகள், விபிஏ குறிமுறைகள் ஆகியவைகளின் ஒவ்வொரு செயலி, மற்றும் செயல்முறை ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளை கையாள ஏராளமான எளிய வகையான வழிமுறைகள் பலஉள்ளன. அவைகளில் பொதுவான துணை செயல்முறை பின் வருமாறு

நிரல்தொடர்- 31-2

Function SampleCode()

‘Dim Stataments here

On Error GoTo ErrorHandler

‘insert functional code here

Exit Function

ErrorHandler:

‘error handler code here

MsgBox Err.Description

‘either enter a resume statement here or

‘nothing and let the function end

End Function

இந்த செயற்கூற்றுகள் நிரல்தொடரில் பிழை ஏதேனும் ஏற்படும்போது அதனை கண்டுபிடித்து இயக்கத்தின் ஆரம்ப நிலைக்குகொண்டுசெல்கிறது. அல்லது இயக்கத்தை பாதியில் நிறுத்தி வெளியில் வந்துவிடுகிறது. அப்போது பிழைச்செய்தியை திரையில் பிரதிபலிக்க செய்கிறது. ,மேலும் இது தொடர்ந்து இயக்கம் நடைபெறுகிறதா எனசரி பார்க்கிறது. பிழை ஏதும் தெரிந்தால்அதற்கான செய்தியை பிரதிபலிக்க செய்து இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

பிழைகளை சேகரித்தல் (Error collection )

பின்வரும் குறிமுறை ADO  இணைப்பில் ஏற்படும் பிழைகளை கையாளு கின்றது.

ஏதேனும் பிழை ஏற்பட்டால் Lable error  இயங்க ஆரம்பித்து இது விபிஏவால் ஏற்படும்  பிழையா அல்லது ADO வால் ஏற்படும் பிழையா என சரிபார்த்து அதற்கேற்றவாறு தகவல்களை சேகரித்து பிழைசுட்டும் செய்தியை திரையில் காண்பிக்கிறது.

நிரல்தொடர்-31-3

Dimm cnn As New ADDODB.Connetion

Dim errX As ADDODB.Error

Dim strMessage As String

On Error GoTo ErrorHandler

GoTo Done

ErrorHandler:

If cnn.Errors.Count > 0 Then

If Err.Number = cnn.Errors.Item(0).Number Then

For Each errX In cnn.Errors

strMessage = strMessage & Err.Description & vbCrLf

Next

MsgBox strMessage.”ADO Error Handler”

End If

Else

MsgBox Err.Description..”VBA Error Handler”

End If

End Function

வாடிக்கையாளர் பிழைச்செய்தி Custom error message  அக்சஸை கையாளும்போது இயல்பு நிலையில் ஏற்படுவதற்காக பின்வரும் பிழைச்செய்திகளை நம்முடைய பயன்பாட்டில் உபயோகப்படுத்தி கொள்ளலாம்,

நிரல்தொடர்-31-4

Index or primary key can’t contain a null value.

Duplicate value in index, primary key or relationship.changes were unsuccessful.

The text you enter must match an entry in the list.

விபிஏவின் பிழை ஒரு செயல்முறையை இயக்கும்போது விபிஏ பிழை ஏற்பட்டஉடன் இயக்கத்தை நிறுத்திவிட்டு பிழை செய்தியைமட்டும் பிரதிபலிக்க செய்கிறது. பின்வரும்நிரல்தொடர் கட்டளை பொத்தானின் பிழை சுட்டுவதற்கானது.

நிரல்தொடர்-31-5

Private Sub cmdClose_Click()

On Error GoTo Err_cmdClose_Click

DoCmd.Close

Exit_cmdClose_Click:

Exit Sub

Err_cmdClose_Click:

MsgBox Err.Description

Resume Exit_cmdClose_Click

End Sub

நன்றி :தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்

மறுமொழி அளிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.