வலைபூ ஆசிரியரின் தன்விவரக்குறிப்பு
வலை பூ ஆசிரியரின் தன் விவரகுறிப்பு
நான் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன்.
நான் பள்ளியிறுதி வகுப்புவரை மட்டுமே பயின்ற பின் பணியிலிருந்து கொண்டே வணிகவியல் இளநிலைபட்டமும்(Bcom) ,அடக்கவிலை கணக்கர் மாமன்றம் நடத்தும் இறுதிதேர்வில் வெற்றிபெற்று அதில் முதுநிலை உறுப்பினராகவும்(Ficwa), நிறுமச்செயலர் மாமன்றம் நடத்தும் இறுதிதேர்வில் வெற்றிபெற்று அதில் இளநிலை உறுப்பினராகவும் இருக்கின்றேன்(Acs).
மேலும் நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்ற உந்துதலினால் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தபடும் நிருவாக கணக்கியல் முறை(Management Accounting Practice) பற்றிய முதுமுனைவர் பட்ட ஆய்வை பகுதிநேரமாக மேற்கொண்டு வருகின்றேன்.
2005 ஆம் ஆண்டுமுதல் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமை கணக்கராக பணிபுரிந்துவருகின்றேன் இதற்குமுன்பு இதே சர்க்கரை ஆலையிலும் இதர கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும்1996 ஆம் ஆண்டு முதல் கணக்கு அலுவலராக பணிபுரிந்துவந்தேன்.
விவசாயிகளின் நிலைபற்றியும், மக்களின் ஆரோக்கியமான உடல் நிலை பற்றியும் அவ்வப்போது தினமனி நாளிதழின் நடுபக்க கட்டுரை எழுதி வருகின்றேன்.
கணினியிலும் தமிழிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் கணினியின் பயன்பாடுகள் பற்றி தமிழ் கம்யூட்டர் என்ற திங்கள் இருமுறைவெளியாகும் இதழில் கணினி பற்றிய கட்டுரைகளும், ஓப்பன் ஆஃபிஸ் பற்றிய தொடர்கட்டுரைகளும் தற்போது எழுதிவருகின்றேன்.
இதன் அடிப்படையில் 24.03.2012 அன்று தமிழ் இதழ்கள் பதிப்பாளர் சங்கம் எனக்கு 2012ஆம் ஆண்டிற்கான பயனெழுத்து படைப்பாளி என்ற விருதினை வழங்கியுள்ளது என்ற செய்தியினை மிக மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
மேலும் 1.எளிய தமிழில் டேலிஈஆர்பி 9,
2.வியாபாரத்தில் எக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும்,
என்பன போன்ற பாமரனும் கணினியை பயன் படுத்திகொள்ளும் வகையில் கணினிமென்பொருள் பற்றிய இரு புத்தகங்கள் நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் சென்னை என்ற நிறுவனத்தின் மூலம் அக்டோபர் 2010 ஆம் ஆண்டில் வெளியிடபட்டுள்ளன.
அதுமட்டுமின்றி
1.www.arugsarugu.blogspot.com,என்ற என்னுடைய வலைபூவில் பொதுவான தகவல்களையும் சட்டங்களை பற்றிய எளிய விளக்கமும் இதுவரையில் சுமார் 18 பதிவுகளும்
2.www.vikupficwa.wordpress.com என்ற என்னுடைய மற்றொரு வலைபூவில் எளிய தமிழில் கணினிபற்றிய தகவல்களை இதுவரையில் சுமார் 333 பதிவுகளும்,
3.www.skopenoffice.blogspot.com என்ற என்னுடைய பிரிதொரு வலைபூவில் எளிய தமிழில் ஓப்பன் ஆஃபிஸ் எனும் பயன்பாடு பற்றிய விளக்க கையேடாக இதுவரையில் 63 பதிவுகளும்
ஆகிய என்னுடைய இணைய வலை பூக்களில்(Web Blog), அவ்வப்போது எழுதி வருகின்றேன்
என்னுடைய மின்னஞ்சல் முகவரி ,
1.vikupficwa@yahoo.co.in 2. Kuppansarkarai641@gamil.com 3.vijikup@rediff.com
ச.குப்பன்
5 பதில்கள் இது வரை »
மறுமொழி RSS · வரு தொடுப்பு URI

TamilTally சொன்னார்,
அக்டோபர் 3, 2011 @ 3:21 மு.பகல்
உங்கள் பதிவு பயன் தரும் என்பதில் ஐயமில்லை.
டேலி பற்றிய புதிய வலைப்பூ tamiltally.blogspot.com
அமைத்துள்ளேன்.வருகையும் ,கருத்தையும் எதிர்நோக்கும்.
NRS. Rajkumar சொன்னார்,
நவம்பர் 25, 2011 @ 4:06 பிற்பகல்
தமிழ் கம்ப்யூட்டரில் வெளிவந்த தங்களது கட்டுரைகளைப் படித்து பயனடைந்திருக்கிறேன். நன்றி.
krishnamoorthy.s சொன்னார்,
மார்ச் 10, 2012 @ 8:32 மு.பகல்
தங்களின் முதல் http://www.arugsarugu..blpgspot.com என்பது திறக்க முடியவில்லை
NRS. Rajkumar சொன்னார்,
மார்ச் 25, 2012 @ 6:15 மு.பகல்
பயனெழுத்துப் படைப்பாளி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்
Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) சொன்னார்,
மார்ச் 29, 2012 @ 12:55 மு.பகல்
தங்களுடைய மறுமொழிக்கு மிக்க நன்றி