விண்டோ எக்ஸ்பியை விண்டோ 7 அல்லது விண்டோ 8 ஆக மாற்றிக்கொள்வதற்கு பதிலாக உபுண்டு லினக்ஸிற்கு ஏன் மாறக்கூடாது  

2.1.

2.1

லினக்ஸை தெரியாத அல்லது அறியாத புதியவர்கள்கூட தங்களுடைய விண்டோ எக்ஸிபிஉள்ள கணினியை  இந்த உபுண்டு லினக்ஸிற்கு மாற்றியமைத்து கொள்ளலாம். விண்டோ 7 அல்லது 8 ஐவிட  உபுண்டு லினக்ஸானது எந்த வகையில் சிறப்பானது ஏன் அந்த இயக்கமுறைமைக்கு மாறவேண்டும் என குறுக்கு கேள்வி விதண்டாவாதம் செய்பவர்களுக்கெல்லாம் கூறிக்கொள்ளும்  பதில்ஒன்றமட்டுமே. இந்த  உபுண்டு லினக்ஸிலும் விண்டோ 7 அல்லது 8இலும் அவைகளுக்கேஉரிய சிறப்புகளும் பாதிப்புகளும்  உண்டு ஆயினும் அவைகளைவிட இந்த  உபுண்டு லினக்ஸானது ஒரு திறமூல இயக்கமுறைமையாகவும் கட்டணம் எதுவுமின்றியும் ஆறுமாதத்திற்கொருமுறை பல்வேறு புதிய புதிய வசதிகள் சேர்க்கபட்டு புதியபதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதே இதன் தனித்தன்மையான சிறப்பம்சமாகும். மேலும் மைக்ரோ சாப்ட் எனும் நிறுவனமானது விண்டோ எக்ஸிபியின் பாதுபகாப்பிற்கான தன்னுடைய சேவை ஆதரவை  ஏப்ரல்8,2014 முதல் விலக்கி கொண்டுவிட்டது அதனால் இதுவரை பயனாளர்களின் உற்ற நண்பனாக விளங்கிவந்த நம்முடைய விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையுள்ள கணினையை இணையத்துடன் இணைத்து பயன்படுத்திடும்போது தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள் எப்போதுவேண்டுமானாலும் தாக்குதல் நடத்திட வாய்ப்புள்ளது  அதனை தவிர்த்திட கட்டணமற்ற  உபுண்டு லினக்ஸிற்கு  மாறிக்கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது.

2.1.2

2.1.2

இந்த  உபுண்டு லினக்ஸானது இதுவரையில் எந்தவொரு நச்சுநிரல் கட்டளை தொடராலும் தாக்கபடாமல் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறான நச்சுநிரல் பாதிப்பினால் உபுண்டு இயக்கமுறைமையின் செயல்வேகம் குறைந்து நத்தைபோன்று ஆகிவிட்டதாக இதுவரை எந்த புகாரும்வரவேயில்லை. மேலும் விண்டோ எக்ஸ்பி நிறுவுபட்டுள்ள பழைய கணினியானது மிக மெதுவாக செயல்படுவதை பலர் பார்த்திருக்கலாம் ஏனெனில் இது இயங்குவதற்கு அதிகஅளவு கணினியின் காலிநினைவகத்தையும் ரேமையும் ஆக்கிரமித்து கொள்வதால்இவ்வாறான நிலை ஏற்படுகின்றது அதற்கு பதிலாக அதே பழைய கணினியில் உபுண்டு லினக்ஸை நிறுவுகை செய்தால் அதன்இயக்கம் மிகவிரைவாக இருப்பதை காணலாம் ஏனெனில் இந்த திறமூல இயக்கமுறைமை இயங்குவதற்கு குறைந்த காலிநினைவகமும் ரேமும் போதுமானவையாகும் . விண்டோ இயக்கமுறைமை யெனில் அதனை கட்டணம் கொடுத்துதான் பெற்று இயக்கவேண்டும் புறக்கடை வழியாக அதனை பெற்று நிறுவுகை செய்தால் அதனை செயல்படுத்துவதற்கான திறவுகோள் இல்லாமல் செயல்படாது என்றஒருமுட்டுகட்டை உள்ளது . உபுண்டு லின்க்ஸ் இயக்கமுறைமையை பெறுவதற்கு கட்டணமெதுவும் தேவையில்லை மேலும்   திறவுகோள் இருந்தால் மட்டுமே இதனை செயல்படுத்திடமுடியும் என்ற கட்டுபாடு அல்லது முட்டுகட்டை எதுவுமில்லை. விண்டோ இயக்கமுறைமையைவிட மிக்குறைந்த காலிநினைவகமே இந்த  உபுண்டு லின்க்ஸ் இயக்கமுறைக்கு போதுமானவையாகும்.

2.1.3

2.1.3

அதுமட்டுமல்லாது ஒலி ஒளி படங்கள், இசை ,வரைகலை ,அச்சிடுதல் என்பனபோன்ற செயல்களுக்கான தனித்தனியான இயக்கிகளை தனியாக நிறுவுகை செய்திடதேவையில்லை அவையனைத்தும் இந்த இயக்கமுறைமையுடன் சேர்ந்தே வருகின்றன மேலும் உபுண்டு இயக்கபடுகின்ற நம்முடைய கணினியுடன் எந்தவொரு துனைச்சாதனங்களை இணைத்தாலும் அதற்கான இயக்கிகளை நிறுவகை செய்யத்தேவையில்லை அவையனைத்தும் இயல்புநிலையில் இந்த இயக்கமுறையுடன் சேர்ந்தே வருகின்றன.

2.1.4

2.1.4

 Firefox, Chrome, Libre Office, Open Office என்பன போன்ற ஏராளமான திறமூல பயன்பாட்டு மென்பொருட்களும் உடன் இணைந்தே இந்த உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமை கிடைப்பதால் இவைகளை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்யதேவையில்லை  மேலும் Wine என்ற மென்பொருளின் துனைகொண்டு விண்டோ இயக்கமுறைமையை அடிப்படையாக செயல்படும் அனைத்து பயன்பாடுகளையும் உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்.  மேலும் வாடிக்கையாளர் விரும்பியவாறு திரையின் வண்ணத்தை செயல்பட்டையின் அளவையும் பக்கப்பட்டையின் அளவையும் மாற்றியமைத்துகொள்ளும் வசதிகூட இதில் உள்ளன

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.