அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-19- தரவுதள அனுகு பக்கங்களை உருவாக்குதல் (DAP)(Data Access Page)
தரவுதள அனுகுபக்கங்களைஉருவாக்குதல்(DAP)(Data Access Page) என்ற வசதி முதன்முதலில் அக்சஸ் 2000 பதிப்பில் அறிமுகபடுத்தபட்டது இது ஒருசிறப்பு வகை வலைபக்கமாகவும் நேரடியாக நம்முடைய தரவுதளத்துடன் தொடர்புடையதாகவும் விளங்குகின்றது.இதன்மூலம் உருவாக்கபடும் தரவுகள் அக்சஸில் x.mdb என்றும் SQL ல் x.adp என்றும் சேமிக்கபடும் மேலும் இது ஒரு தரவுதளத்தின் விவரங்களை DAP பக்கங்களாக பிரதிபலிக்கசெய்யும் சில சமயங்களில் மாறுதல்செய்வது போன்ற பணிகளை செய்தும் இதனை பாதுகாக்க முடியும். பயனாளர் ஒருவர் தரவுதளத்தின் ஒட்டுமொத்த விவரங்களை இதன் மூலம் காண்பிக்குமாறு செய்யமுடியும்
ஒற்றையான அட்டவணயிலிருந்து ஒரு DAP பக்கத்தை உருவாக்குதல்
படம்-1
1. முதலில் படம்-1-ல் உள்ளவாறு தரவுதள சாளரத்தில் இடதுபுறம் உள்ள பொருட்களில் (object) பக்கம் (page) என்பதை தெரிவுசெய்க பின்னர் சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள கருவிகளின் பட்டையில் புதியது(new) என்பதை தெரிவு செய்துகொண்டு வலதுபுறம் இரண்டாவதாக உள்ள create data access page by using wizard என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2
2. உடன் படம்-2-ல் உள்ளவாறு New Data Access Page என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றிடும் பின்னர் அதன் வலதுபுறம் உள்ள வாய்ப்புகளில் Auto Page Column என்ற நான்காவது வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு Table/query என்பதன் கீழிறங்கு பட்டியை விரியச்செய்து அதில் table:tblcontacts என்ற நாம் விரும்பும் அட்டவணையை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
3. அதன்பின்னர் படம்-3-ல்உள்ளவாறு தோன்றிடும் திரையில் available fields என்பதில் தேவையான புலங்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைகுறியை அல்லது அனைத்து புலங்களையும் எனில் >>என்றவாறு இரட்டைகுறிகளையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து சொடுக்கிய புலங்கள் selected fields என்ற பகுதியில் சென்று சேர்ந்திருக்கும் அதன்பின்னர் next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக
படம்-4
4. உடன் படம்-4-ல்உள்ளவாறு Do you want to add any grouping levels?எனநாம் தெரிவு செய்திருந்த புலங்களில் ஒன்றை குழுத்தலைப்பாக தெரிவுசெய்யுமாறுகோரிநிற்கும் அதில் chr contact type என்றவாறு அல்லது ஏதனுமொன்றை தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
படம்-5
5. பின்னர் படம்-5-ல்உள்ளவாறு தெரிவுசெய்திருந்த புலங்களை எவ்வாறு நாம் வரிசைபடுத்திட விரும்புகிறோம் What Sort order do you want for your records? என கோரி நிற்கும் அதில் Chr First name, chr last name ஆகிய புலங்களை தெரிவுசெய்துகொண்டு > என்றவாறு Ascending ஏறுவரிசை என்பதை தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
படம்-6
6 அதன்பின்னர் படம்-6-ல்உள்ளவாறு தோன்றிடும் திரையில் tbl contact skஎன்ற தலைப்பு பெயராக உள்ளீடு செய்க பின்னர் இறுதியாக finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-7
7 உடன் படம்-7-ல்உள்ளவாறு tbl contact skஎன்ற தலைப்பில் ஒரு DAP பக்கத்தை திரையில் பக்க வழிகாட்டி(Page wizard) பிரதிபலிக்கசெய்வார் அதில் chr contact type என்பதற்கு இடப்புறம் உள்ள + என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம்-8-ல் உள்ளவாறு DAP பக்கம் ஒன்று திரையில் தோன்றிடும்
படம்-8
இந்த DAP பக்கமானது தற்காலிக நினைவகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிரந்தர நினைவகத்தில் சேமிக்கும் முன்பு இயல்புநிலையின் (default) பண்பை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்தபின்னர் சேமித்தால் நாம் விரும்பிய பண்புகளுடன் ஒரு DAP பக்கம் திரையில் பிரதிபலிக்கும்
1.இந்த DAP பக்கத்தில் உள்ள காட்சி (view)என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கட்டளை கருவிகளின் சட்டத்தில்உள்ள காட்சி(view) என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் Data Base Object என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் விரியும் பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.அதன் பின்னர் இதன் வலப்புறம் உள்ள வடிவமைப்பு காட்சி(Design view) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-9
2.உடன் படம்-9-ல்உள்ளவாறு விரியும் வடிவமைப்பு பக்கத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் குறுக்கு பட்டியில் குழுநிலை பண்பியல்பு(Group level Properties) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
3. உடன் படம்10-ல்உள்ளவாறு தோன்றிடும் குழுநிலைப்பண்பியல்பு(Group level Properties) என்ற உரையாடல் பெட்டியின் இயல்புநிலையின் விரிவாக்கம் (expanded by default) என்பதில் உள்ள true என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
படம்10
4 பின்னர் மாறுதல் செய்யபட்ட இந்தDAP பக்கத்தை ctrlsஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் அல்லது வேறுஏதேனுமொரு வழியில் சேமித்திடுக அவ்வாறு சேமித்திடும்போது இதற்கொரு பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒற்றையான DAP பக்கத்தை வடிவமைப்பு காட்சிமூலம் உருவாக்குதல்Single page created through design view)
1.தரவுதள சாளரத்தின் இடதுபுறம் உள்ள பொருட்களில் பக்கம் page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மேலே கட்டளைகளின் கருவிபட்டையில் design என்ற கருவியை தெரிவு செய்து சொடுக்குக அதன்பின்னர் இதே திரையின் வலபுறம் உள்ள created at a access page by design view என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
படம்11
2.உடன் படம்11-ல்உள்ளவாறு திரையில் பக்க வடிவமைப்பு காட்சியும் வலதுபுறம் புலப்பட்டியும் (Field list) தோன்றிடும் பின்னர் Click here and type title text என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் product info என உள்ளீடு செய்க. அதன் பின்னர் கீழ்பகுதியிலுள்ள Drag field in the field list and drop the page என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்குக உடன் அது கட்டற்ற பகுதி (unbound section) என்று சுட்டிகாட்டும் செய்தியொன்றை திரையில் பிரதிபலிக்கும் இதன் வலதுபுற ஒரத்தில் அட்டவணையின் மடிப்பகம் (table folder)காட்சியளிக்கும் அதில் நாம் விரும்பும் tbl contact என்ற அட்டவணையை தெரிவுசெய்துகொள்க.உடன் அந்த அட்டவணை யிலுள்ள புலங்கள் அனைத்தும் திரை.யில் விரிவாக்கம் (expand) செய்யபட்டு காட்சியளிக்கும் .அவைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து இடம்சுட்டியால் பிடித்து இழுத்து வந்து கீழ்பகுதி.ல் விடுக உடன் படம்11-ல் உள்ளவாறு layout wizardஎன்ற வழிகாட்டி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதிலுள்ள பட்டியில் columner என்ற கட்டளையை தெரிவு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம்உருவாக்கிய பக்கத்திற்கு ஒரு பெயரிட்டு சேமித்திடுக
வினாவை பயன்படுத்தி குழுவானதரவுபக்கத்தை பக்கவழிகாட்டிமூலம் உருவாக்குதல்(Using query to create a group data page with page wizard)
1.முதலில் தரவுதளசாளரத்தில் இடதுபுறமுள்ள பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வலதுபுறமுள்ள create data access page by using wizardஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக.
2. உடன் படம்-12-ல் உள்ளவாறு பக்கவழிகாட்டி உரையாடல் பெட்டி(Page wizard box) யொன்று திரையில் தோன்றிடும் அதில் உள்ளகீழிறங்கு பட்டியிலிருந்து qry sales info for buyers என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் அதில் query table என்பதை தெரிவுசெய்துசொடுக்குக
3. உடன் தோன்றிடும் திரையின் Selected field list box என்ற பகுதியிலுள்ள புலங்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து என்ற >ஒற்றைக்குறியை அல்லது அனைத்து புலங்களையுமெனில் >>என்றவாறு இரட்டைகுறிகளையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் அனைத்து புலங்களும் available fieldஎன்ற பகுதியில் போய்சேர்ந்திருக்கும் பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-12
5.உடன் படம்-12-ல் உள்ளவாறு தோன்றிடும் உரையாடல் பெட்டியில் IDScontact.ID என்பதை முதல்குழுவாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மீண்டும் Ids invoice number என்பதை தெரிவுசெய்து கொண்டு > என்ற ஒற்றைக்குறியை மீண்டும் தெரிவுசெய்து சொடுக்குக
6.பின்னர் படம் -5-ல் உள்ளவாறான நடைமுறையை பின்பற்றிnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-13
7உடன் இயல்புநிலைபெயராக qry sales info for buyers என்பதை பிரதிபலிக்கும் இறுதியாக இதனை ஏற்று finish என்ற பொத்தானை சொடுக்குக உடன் படம்-14-ல் உள்ளவாறு DAP பக்கம் ஒன்று திரையில் தோன்றிடும் .
படம்-14
இரட்டைகுழுநிலை தரவுபக்கம்போன்று மூன்று அட்டவணைகளை வழிகாட்டிமூலம் உருவாக்குதல் (Creating a two level group data page in the wizard using three tables)
1.முதலில் தரவுதளசாளரத்தில் இடதுபுறமுள்ள பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வலதுபுறமுள்ளcreate data access page by using wizard என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக.
2. உடன் படம்-15-ல் உள்ளவாறு தோன்றிடும் பக்க வழிகாட்டி என்ற உரையாடல் பெட்டியில் Table/query என்பதன் கீழிறங்கு பட்டியில் Tbl contact என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
3 அதன்பின்னர் >என்ற ஒற்றைக்குறியை பயன்படுத்தி ஒவ்வொரு புலமாகவும் அல்லது >>ஆகிய இரட்டைகுறிகளை பயன்படுத்தி அனைத்துபுலங்களையும் புலப்பட்டியிலிருந்து நகர்த்துக.
4.மீண்டும் Table என்பதன் கீழிறங்கு பட்டியலிருந்து tbl sales என்ற அட்டவணையை தெரிவுசெய்க
5. படிமுறை 3-ல் கூறியவாறு தெரிவுசெய்து இந்த அட்டவணையிலிருக்கும் புலங்களையும் நகர்த்துக
6. மீண்டும் Table என்பதன் கீழிறங்கு பட்டியலிருந்து tbl sales என்ற அட்டவணையை தெரிவுசெய்க.
7. படம்-3-ல் உள்ளவாறு வழிமுறைகளை பின்பற்றி தெரிவுசெய்த அட்டவணையில் இருந்து புலங்களை நகர்த்துக
8. பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் சாளரத்தில் IDS contact.ID என்ற அட்டவணையிலுள்ள புலங்களில் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைகுறிபொத்தானையும் அவ்வாறே IDS invoice number என்பதை தெரிவு செய்து >என்ற ஒற்றைக்குறி பொத்தானையும் தெரிவுசய்து சொடுக்குக
9 இறுதியாக Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் DAP பக்கமானது மூன்று குழுநிலைகளில் உருவாகி விடும் .இதனை பக்க வடிவமைப்பு காட்சி திரைமூலம் திறந்து பார்த்து கொள்க..
10குழுபகுதியை IDS contact.ID ன் புலத்துடன் சேர்த்து தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் இந்த அட்டவணைகளிலுள்ள அனைத்து புலங்களையும் உள்ளிணைத்து சேர்ப்பதற்கு ஏற்றவாறு பெரியதாக்குக.
11.இதன் உட்பகுதியை தெரிவுசெய்தபின் ctrl+xஆகிய விசைககளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அல்லது Edit=>cut =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் இதிலுள்ள புலங்களை வெட்டிகொள்க.
12.பின்னர் குழுபகுதியில் இடம்சுட்டியைவைத்து ctrl+vஆகிய விசைககளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அல்லது Edit=>paste=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் வெட்டி கொண்டு வந்த புலங்களைஇங்கு ஒட்டிகொள்க
13 பின்னர் மேலும் விடுபட்ட புலங்கள் ஏதேனுமிருந்தால் உட்குழுபகுதியின் மேல்பகுதியில் கொண்டுவந்து சேர்த்திடுக. அதன்பின்னர் தலைப்பு பகுதியை தெரிவுசெய்து தலைப்பு மட்டும் என்பதில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
14. பின்னர் தோன்றிடும் பட்டியில் caption என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் caption என்ற பகுதியில் விடுபட்ட புலங்களின் முகப்புபெயரின் உரைபெட்டியை நகரத்திஅதனை திறந்துகொள்க. இறுதியாக உரைபெட்டி தலைப்பு உட்குழு பகுதி ஆகியவை ஒன்றுக்குள் ஒன்றாக அமையுமாறு சரிசெய்து உறுதிபடுத்திகொள்க
15. காட்சி என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி DAP பக்கத்தை திரையில் பிரதிபலிக்கசெய்க உடன் படம்-15-ல் உள்ளவாறு திரைத்தோற்றம் அமையும்
படம்-15
குழுவான DAP பக்கத்தை வழிகாட்டி உதவியில்லாமல் உருவாக்குதல்
1. தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைகருவிகளின் பட்டையிலுள்ள New என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக
2.உடன் படம்-16-ல்உள்ளவாறு தோன்றும் New Data Access Page என்ற உரையாடல் பெட்டியின் வலதுபுறமுள்ள வாய்ப்புகளில் Design view என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு கீழ்பகுதியிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து tbl contacts என்ற அட்டவணையையும் தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-16
3.உடன் படம்-17-ல்உள்ளவாறு தோன்றும் சாளரத்தில் புலப்பட்டியானது வலதுபுறம் இல்லையெனில்அதனை தெரிவுசெய்து சொடுக்கி திறந்துகொள்க.உடன் புலப்பட்டியானது விரிவாக்கம் செய்யபட்டு நீண்டதாக பிரதிபலிக்கும்.
4. IDSContact.ID என்ற அட்டவணையை தெரிவுசெய்துசொடுக்கியபின் அதிலுள்ள புலங்களை ஒவ்வொன்றாக இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து புதியஇடத்தில் விடுக.உடன் layout wizardஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் 5.அதில் இயல்புநிலை மதிப்பாக columnerஎன்பதை தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
.6. முன்புகூறியவாறு இழுத்துகொண்டுவிட்ட புலங்களின்பெயரையும் உரைபெட்டியையும் மிகச்சரியாக பொருத்தமாகஅமைத்திடுக
7.பின்னர் மீண்டும் பட்டிபெட்டியில்(list box) உள்ள புலங்களில் மேலும் தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்து இழுத்துவந்து விடுக. இவ்வாறு விடும்போது புதியபகுதி (new section )ஒன்று உருவாக்கபட்டிருக்கும்
8. உடன் layout wizardஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்.அதில் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-18-ல் உள்ளவாறு relationship wizardஎன்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் புதியபகுதிக்கும் (new section ) முன்பு உருவாக்கிய பழையபகுதிக்கும் உள்ள தொடர்பை மாற்றம் செய்யவேண்டுமாஎன கோரிநிற்கும் அதில் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-17
8.பின்னர் இதன் தலைப்புபகுதியில்உள்ள click here and Type Title name என்பதை தெரிவுசெய்து நீக்கம்செய்துவிடுக. அதன்பின்னர சாம்பல்நிறதலைப்புபகுதியில் இடம்சுட்டியை வைத்து மூன்றுமுறை Delete என்ற விசையை அழுத்தி அந்த பகுதியையும் நீக்கம்செய்துவிடுக.
9. பின்னர் tbl. contact என்ற பகுதிக்கு சென்று அதிலுள்ள புலங்களை சரிசெய்து அமைத்திடுக.
10.அதன்பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள காட்சி(view) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக11. மீண்டும் வடிவமைப்பு காட்சிதிரைக்கு திரும்புக. அதில் tbl contact என்ற குழுவின் கீழ்பகுதியில் tbl sales என்பதை உள்ளிணைத்துவிடுக.
12 புலப்பட்டிக்கு சென்ற அதிலுள்ள அட்டவணைகலில் தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்க உடன் அதிலுள்ள புலங்கள் பட்டியலாக காட்சியளிக்கும் tbl sales என்ற அட்டவணையிலுள்ள புலங்களை முன்பு கூறியவாறு இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்துவந்து புதியபகுதியின் இடப்புறம் கடைசியாக விடுக.உடன் இந்த பகுதி எவ்வாறு காட்சியளிக்கவேண்டுமென கோரிநிற்கும் அதில் கிடைவரிசை என்பதை தெரிவுசெய்க பின்னர் தோன்றிடும் குறுக்குவழிபட்டியில் group level property என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் group level property என்ற உரையாடல் பெட்டயில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக . பின்னர் விரியும் குழுநிலை பண்பியல்பு பெட்டியின் expand by default என்பதில் உள்ள True என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-18
இயல்புநிலை ஒற்றை படிவகாட்சியிலிருந்து ஒற்றையான DAP படிவ பக்கத்தை உருவாக்குதல் (Create a DAP form from the default view of single form).
1. படம் -19-ல் உள்ளவாறு தரவுதளசாளரத்தின் வலதுபுறமுள்ள பொருட்களில் படிவும் Form என்பதை தெரிவுசெய்துகொண்டு வலதுபுறமுள்ள கோப்புகளின் பெயர்களில் Frm contacts all என்பதையும் தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை கருவிகளின் பட்டையிலுள்ள Open என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்கி இந்த படிவத்தை திறந்துகொள்க
படம்-19
2.பின்னர் தோன்றிடும் திரையில் மேலேகட்டளைபட்டையிலுள்ள File Save as என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
3. அதன்பின்னர் படம்-20-ல் உல்ளவாறு தோன்றிடும் Save as என்ற உரையாடல் பெட்டியின் Save Form ”Frm contact sal l” To: என்பதன் கீழ் இயல்புநிலை பெயராக Frm contact all என்பது பிரதிபலிக்கும் அதனைஏற்றுகொண்டு As என்ற பகுதி யின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் Data access page என்பதை தெரிவுசெய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக .
படம்-20
இப்போது இந்த படிவத்தின் புலங்களை DAP என்றபக்கமாக மாற்றம் செய்யமுடியவில்லை என்ற எச்சரிக்கை செய்தியை திரையில் காண்பிக்கும் அதனை தவிர்த்து இந்த கோப்பினை வடிவமைப்பு காட்சி திரைமூலம் சரிசெய்து சேமித்துகொள்க